May 31, 2006

கலைஞரின் மிக நல்ல முடிவு

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள், தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வாக்குறுதிகள் அனைத்துமே தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமிருக்காது.

அந்த வகையில், இன்று சட்டமன்றத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்திருக்கிறார்.

1. அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீதம் இடஒதுக்கீடு.

2. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடாமாக இந்த கல்வியாண்டு முதலே அமலாக்கியுள்ளார்.

இந்த இரண்டு முடிவுகளும் தமிழகத்தில் கல்வியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திடும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

இடஒதுக்கீடு என்பது தற்போது அரசு கல்லூரிகளில் மட்டுமே அமலாகி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் அரசு கல்லூரிகளைத் தவிர்த்துப் பார்த்தால் அதிக எண்ணிக்கையில் தனியார் கல்லூரிகள்தான் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய கல்லூரிகளில் பணம் உள்ளவர்களுக்கே முதலிடம் என்பது தாரக மந்திரமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 69 சதவீத இடஒதுக்கீடு இத்தயை கல்லூரிகளில் அமலாக்கியுள்ளதன் மூலம் பெரும் மாற்றங்கள் ஏற்படும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது.

அதே போல் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் மிக நீண்ட நெடுங்காலத்து கோரிக்கையான தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேறியுள்ளது மிக சிறப்பான முடிவு. தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நல்லாதரவு நடவடிக்கைகள் தொடர்ந்து வாழ்த்துகிறன்.

முந்தைய அரசின் அடாவடித்தனங்களோ, ஆடம்பரமோ இல்லாமல், மக்களை வஞ்சிக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை அமலாக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஐந்தாண்டுகாலம் தொடர்ந்திட வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

12 comments:

Radha N said...

கலைஞருக்கு என் பாராட்டுகள்

Chellamuthu Kuppusamy said...

//முந்தைய அரசின் அடாவடித்தனங்களோ, ஆடம்பரமோ இல்லாமல், மக்களை வஞ்சிக்காமல்// அது தானே அனைவரும் கேட்பது??

siva gnanamji(#18100882083107547329) said...

பாராட்டப்பட வேண்டிய ஆணைகள்;
அறிவிப்புகள்
நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை

Anonymous said...

ஏழை மாணவர்களினது ;தமிழ் மொழியின் எதிர்காலதையும்; மனதில் கொண்டு இதில் எவரும் அரசியல் செய்யாதிருந்து, நடைமுறைப்படுத்த ஆதரவழிக்கவேண்டும்.
யோகன் பாரிஸ்

சந்திப்பு said...

நாகு, ஜெயக்குமார், ஜான், சிவஞானமணி, குப்புசாமி ஆகிய அனைவருக்கும் நன்றிகள் பல...

Anonymous said...

By exempting institutions run by minorities about 33% of seats have been exempted from reservation.In other words all reservation is applicable to institutions run by Hindus.Is this fair.

இரா.சுகுமாரன் said...

நாங்க எப்பவுமே கருணாநிதிய அவர் ஆட்சிய குறை மட்டுமே சொல்வோம்.

நாங்க கருணாநிதி செய்யிறதுக்கு எல்லாமே ஏட்டிக்கு போட்டியா பேசுவோம்.

ஏதாவது ஒன்னு சொன்னா அதை திரிச்சி செயா தொலைக்காட்சியில புளுகுவோம்.

இதுதான் எங்க கொள்கை.

நாய்வால நிமிர்த்த முடியாது.
எங்களையும் மாத்த முடியாது.
இப்படி பேசிப் பேசித்தான் ஆட்சியில இல்லாத போதும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறேம்.

வாழ்க புரட்சித் "தலைவலி"

வஜ்ரா said...

//
1. அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீதம் இடஒதுக்கீடு.

2. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடாமாக இந்த கல்வியாண்டு முதலே அமலாக்கியுள்ளார்.
//

நல்லது சந்திப்பு,

ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்கு இந்தச்சட்டம் செல்லாது என்றும் உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன...?

சிறுபான்மையினருக்கு இந்த Social responsibility இல்லையா?

Anonymous said...

செல்வப் பெருமாள் அவர்களுக்கு, உங்களுடைய இணையதளத்தில் கலைஞரின் நல்ல முடிவு கட்டுரையைப் படித்தேன். அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் 67 சதவீத இடஒதுக்கீடு, 1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக தமிழ்ப்பாடம் என்கிற இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கததுதான். சென்ற ஆட்சியில் மக்கள் விரோத சட்டங்கள் இயற்றப்பட்டது என்றும் மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் புகுத்தப்பட்டதும் என்றும் சொல்லி அத்தகைய மக்கள் விரோத சட்டத் திட்டங்களை இந்த திமுக ஆட்சி அப்புறப்படுத்தும் என்கிற தோணியில் கல்வித்துறையில் இத்தகைய மேலோட்டமான அறிவிப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் உண்மையில் சென்ற அதிமுக ஆட்சியில் அரசுக் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை உயர்த்தியும், புதிய அரசுக் கல்லூரிகளை தொடங்காமலும், பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை உயர்த்தியும் ஏழை மக்களுடைய கல்வியின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணங்களை குறைப்பதும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசக் கல்வி கொடுக்கும் அரசுக் கல்வி நிலையங்களை தொடங்குவதும் தான் இன்றைய தேவை. இவைகள் நிறைவேறாத வகையில் கலைஞரின் இத்தகைய அறிவிப்பு கேலிக்கூத்தானாது.

தமிழ் அகராதி said...

TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAMIL BRAHMINS/FORWARDS ARE DRIVEN OUT

KARUNANIDHI PREFERS HINDI-SPEAKERS WHILE HATING A SECTION OF TAMILS


Sir

I wish to bring to your attention that many backward castes, most backward caste listed in Tamil Nadu's reserved caste category speak language other than Tamil. The list is seen Tamil Nadu website http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

These includes countless communities where Telugu is spoken at home, also several Kannada speaking caste and Urdu Muslim communities who essentially speak Hindi.

The chairman of Tamil Nadu's minority commision is Pyarelal Jain appointed by Karunanidhi, a Hindi-speaking Jain.

Tamil Brahmins despite being the "biggest scoundrels" according to Karunanidhi are still Tamils. How is that Karunanidhi is reaching out even to North Indians for votes by printing Hindi pamphlets in last election. Why is DMK hating Tamil Brahmins but at the sametime reaching out for North Indians residing in TN.

Many CBSE schools in Tamil Nadu continue to impose Hindi (as compulsory subject), while Tamil can be conveniently skipped. This is sharp contrast to Karnataka where all schools including CBSE school which dont teach Kannada as compulsory subject will be de-recognized. Karunanidhi has come to power the 4th time now. Still the Hindi impositition in CBSE flourishes.

Why are Tamil Nadu's ports of entry i.e airports and ports staffed by people who speak Hindi and dont know Tamil?

Why has Karunidhi failed on his promise to have mandatory Tamil annoucements on all Tamil Nadu flights.

Recently there was court case against use of Tamil as official language in TN and also opposition. Many people who oppose this are also covered under Tamil Nadu reservation.

Why are evils such as 2-tumbler system and seperate well system so prevelent in Southern TN where there is virtually no 'scoundrel' Brahmins left. It seems that amoung BC caste there is lot of descrimination and Dalits are still suffering while the bloody TN govt, Karunidhi etc are wantonly ignoring and supporting this.

It all looks like that the reservation policy is the most convenient means by "Tamil" politicians to destroy Tamil, Tamil society for their personal gains.

Tamil patriots would have done something great if they had reservation for one Tamil caste in TN rather than commercial certificates which many non-Tamil speaker can purchase.

Nandri Vanakkam
தமிழ் சமத்துவம்
http://i.am/tamil


அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Anonymous said...

we support JJ ONLY. SHE IS DR AMMA.
LONG LIVE SASIKALA AND JJ.

Anonymous said...

we support JJ ONLY. SHE IS DR AMMA.
LONG LIVE SASIKALA AND JJ.