May 03, 2006

தலைகீழாய் சுற்றப் போகும் பம்பரம்

234 தொகுதிக்கும் நக்கீரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அதிமுக அணி வெற்றிபெறும் என்று கணித்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதேபோல்தான் நக்கீரன் சொல்லியது. ஆனால் அதற்கு நேர் மாறாக மார்க்சி°ட் வேட்பாளர் வெற்றி பெற்றார்.இந்த முறையில் பம்பரம் தலைகீழாக சுற்றப்போவதன் மூலம் நக்கீரன் கணிப்புகள் சரியானதல்ல என்பதை நிரூபிக்கவுள்ளது.

பெரம்பூரில் தற்போது நிலவும் சூழலுக்கும் - நக்கீரனின் கணிப்புக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பூர் தொகுதியில் அனைத்து மக்களின், அனைத்து கட்சிக்காரர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளவர் மகேந்திரன். இன்னும் சொல்ல வேண்டுமானால் அதிமுகவும் - மதிமுகவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதும், வெட்டிக் கொள்வதும்தான் தொகுதியில் நடைபெறுகிறது.

சென்னை மாநகரத்திலேயே மோட்டர் பைக்கில் வலம் வந்த ஒரே எம்.எல்.ஏ. மகேந்திரன் மட்டுமே. ஐந்தாண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த மகேந்திரனுக்கு இன்னும்கூட பெரம்பூரில் சொந்த வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் ஒரு கவுன்சிலராக இருந்தாலே சுமோவில் பறக்கின்றனர்.

மார்க்சி°ட் வேட்பாளரான மகேந்திரன், பெரம்பூர் மக்களின் தாகத்தை தீர்த்திருக்கிறார். அத்துடன் பல இடங்களில் மக்கள் நலன் பணிகள் சீராக நடைபெற்றுள்ளது.
இந்த தொகுதி மார்க்சி°ட்டுகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதில் பலதரப்பினர் கண்ணும், கருத்துமாக தீவிரமாக செயல்பட்டனர். ஆனால், இறுதியில் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டதுதான் மிச்சம். இந்த சூழலில் நக்கீரன் கணிப்பும் சரியானதாக இருக்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கள நிலைமையில் நிற்பதால், இதை எழுதிட வேண்டியுள்ளது
.
இறுதியாக இந்த சர்வவே ரகசியம் ஒன்றையும் கூறிவிடுகிறேன்.

2.50 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் வெறும் 270 பேரிடம் சர்வே செய்து விட்டு, அதாவது 0.3 சதவீதம் பேரிடம் மட்டுமே சர்வே எடுத்துவிட்டு - இதுவே ஒட்டுமொத்த பெரம்பூர் மக்களின் கருத்து என்பது விஞ்ஞானப்பூர்வமானதா? நக்கீரன் விளக்கிட வேண்டும்.

6 comments:

முத்து(தமிழினி) said...

விடுங்க..பதட்டப்படவேண்டாம்..மகேந்திரன் மட்டும்தானா வேட்பாளர்?

நாட்டில் அவனவன் மூச்சு விட மறந்து இருக்கிறான்.பெரம்பூர் மகேந்திரனாமே?

இல்லைங்க..மத்த இடத்தில் பார்த்துக்கலாங்க..

சந்திப்பு said...

என் பதிவின் ஒன்றை விட்டுவிட்டேன். டி.பி.ஏ. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அதற்கு நிச்சயம் வலு சேர்க்கும் பெரம்பூர்.

பாரதி said...

சந்திப்பு,

மகேந்திரன் நிச்சயமாக வெற்றி பெறுவார். ஆனால் டி.பி.எ. பெரும்பான்மை பெறுமா? மதில் மேல் பூனை தான் நிலைமை!

rajkumar said...

செங்கை சிவம் ஒழுங்காக வேலை செய்கிறாரா? பாலம் கட்டப்படுமா?

உங்களுக்கு இதைப் பற்றி ஏதும் தகவல் உண்டா?

ராஜ்குமார்

சந்திப்பு said...

நன்றி ராஜ்குமார்.

செங்கை சிவம் அந்த தொகுதி மக்களின் வில்லன் என்றால் மிகையாகாது. இப்போது திமுக, அந்த தொகுதியை சி.பி.எம்.க்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் செங்கை சிவம் வட்டாரம், எப்படியாவது சி.பி.எம். வேட்பாளர் மகேந்திரனை காலை வார வேண்டும் என்று காத்திருக்கிறது. அடிவெட்டு வேலைகளையும் செய்து வருகிறது. அதே சமயம் திமுகவின் நல்லெண்ணம் கொண்ட தொண்டர்கள் செங்கையின் வலையில் சிக்காமல் - சிக்கென்று வேலை செய்து வருகின்றனர். பெரம்பூர் பாலம் அப்படியேதான் இருக்கிறது. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால், அந்த பாலம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

bonapert said...

சந்திப்பு,

ஒரு சின்ன சந்தேகம். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.

நக்கீரன் CPM ஆதரவு பத்திரிக்கை என்பது எனது புரிதல்.

அசுரன்.