September 24, 2007

பா.ஜ.க. விரும்பும் ஜனநாயகம்!


இந்திய அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மூன்று முக்கிய விசயங்கள் தற்போது மையம் கொண்டுள்ளது.

1. இந்திய இறையாண்மை தொடர்பான இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு.

2. உலகமய பொருளாதார கொள்கைகளால் நாசமாகும் மக்கள் வாழ்வு.

3. சேது சமுத்திர திட்டம் - பா.ஜ.க. எதிர்ப்பு.

பா.ஜ.க. பாதையை பின்பற்றும் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாகவும் - நடுத்தர மக்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டும் - செல்வந்தர்களின் நிலை உயர்த்திற்கு செல்வதாயும் உள்ளது. விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளனர். பல மாநிலங்களில் கிரிக்கெட் ஸ்கோரை விட வேகமாக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. வேலையிண்மை ஒரு பக்கம். இப்படி பல்வேறு சிக்கலான பொருளாதார நிலைமைகளில் பொறுப்புள்ள எதிர் கட்சியான மதவாத பா.ஜ.க. இதற்கு எதிராக எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அல்லது மக்கள் இயக்கங்களோ நடத்துவதில்லை என்பதோடு இது சார்நத் விசயங்கள் முன்னுக்கு வருவதைக் கூட விரும்பாமல் ராமர் என்கினற் திரையைப் போட்டு மூடி மறைத்து இந்திய பெரும் முதலாளிகளுக்கு கூஜா தூக்கி குளிர் காய்ந்து வருகிறது.

அடுத்து அணு சக்தி உடன்பாடு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலை இதுதான் என்று அந்தக் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களால் கூட சொல்ல முடியில்லை. நாளுக்கு நாள் வேறு வேறு அறிக்கைகளைக் கொடுத்து மக்களை குழப்பி வருகிறது. இந்த உடன்பாட்டிற்கான துவக்கமே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய போபார் தீர்மானத்தின் ஒரு பகுதியாக அத்வானி பேச்சில் கூட அமெரிக்காவை நேச சக்தி என்று அழைத்துள்ளார். எனவே இந்திய இறையாண்மை - சுயச்சார்பு - தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விசயங்களில் எல்லாம் மதவாத பா.ஜ.க.கவுக்கு உண்மையான அக்கறை இல்லையென்பதையே காட்டுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் அணு சக்தி தொடர்பான விவாதத்தை முறையாக நடத்துவதற்கு மாறாக - காட்டுமிராண்டிகளின் கூச்சல் மற்றும் சீர்குலைவு நடவடிக்கையால் பாராளுமன்ற நடவடிக்கையே முடங்கியுள்ளது. இந்த விசயத்தில் கடுமையாக அம்பலப்பட்டுப் போன பா.ஜ.க. ராமரையே மீண்டும் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது.

சேது சமுத்திர திட்டம் என்பது இன்றைக்கு வகுக்கப்பட்டதல்ல 150 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் கடற்படை தளபதியால் வகுக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு. இந்த திட்டம் தமிழக மக்களின் வெகுநாள் கனவு. இதற்காக குரல் கொடுக்காத அரசியல் கட்சியே தமிழகத்தில் இல்லை. ஏன் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் அறிக்கைகளில் கூட இது வெகுவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2001 சட்டமன்ற பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் கிழக்கிலிருந்து மேற்கும். மேற்கிலிருந்து கிழக்கும் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து இலங்கையை சுற்றி வர வேண்டியிருக்கிறது. இதை தவிர்க்கும் வகையிலும் கப்பல் பயணத்தின் தூரத்தை குறைத்திடும் வகையிலும் மற்றும் பயணிகள். சரக்கு கட்டணங்கள் குறைத்திடும் வகையிலும் பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் அமைக்கும் பணியினை துரிதப்படுத்தப்படும்.

2001 தேர்தலின் போதெல்லாம் ராமர் பாலத்தை - ராமர் கட்டியதாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு ஞானோதையம் ஏற்படவில்லை. அப்போது அவர்களுக்கு அயோத்தி ராமர் துணையாக இருந்தார். தற்போது உத்திரபிரதேசத்தில் 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசுதியை குடித்து தரைமட்டமாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களை படுகொலைக்கு உள்ளாக்கி ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையை மேற்கொட் சங்பரிவாரத்தின் ஜனநாயக நடவடிக்கை இதுதான். தற்போது அதே உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க.வை மக்கள் கை கழுவி விட்டதோடு - அவர்களை நான்காவது இடத்திற்கு தள்ளி விட்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன இருக்கவே இருக்கிறார் தென்னக இராமர்!


தற்போது சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையான நடவடிக்கையில் பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இது விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால். ஏன் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் பெரு:ம பகுதியினர் கிட்டதட்ட 99.9 சதவீதம் பேர் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றனர். அணு சக்தி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரும் பா.ஜ.க. தமிழக மக்களின் உணர்வுகளை - ஜனநாயகத்தை மதிப்பதேயில்லை. மேலும் பா.ஜ.க.வின் ஜனநாயகம் என்பது உணர்வு பூர்வமான விசயத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி - கலவரத்தை தூண்டி ஜனநாயகத்தை சீர்குலைத்து மோடியிச பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதுதான். இட்லர் இந்த பாணியை பின்பற்றிதான் அப்போது ஜர்மனியில் ஆட்சிக்கு வந்தான். தற்போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. தென்னக ராமரை முன்னிருத்துகிறது. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் ஏமாற மாட்டார்கள்.

சங்பரிவாரத்தின் வால் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி என்ற காட்டுமிராண்டி கலைஞரின் தலையை வெட்ட வேண்டும். நாக்கை அறுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். அதற்கு பகவத் கீதையையும் துணைக்கு அழைக்கிறான். அதாவது தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.
இந்த விசயத்தில் மாற்றுக் கருத்தை வெளியிட்ட முதல் கருணாநிதியின் மகள் வீடு மீது தாக்குதல். பேருந்து ஒன்றிற்கு தீ வைத்து - இரண்டு பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது சங்பரிவாரத்தால். இறந்தவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. ராமர் வன்முறையை கையிலெடுக்கும் ராமர் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர்.

ராமர் என்கின்றன விஷ விதையை சமூகத்தில் விரைதத்து வன்முறையை தூண்டி - கலவரத்தை ஏற்படுத்து முனையும் பா.ஜ.க. தன்னுடைய அலுவலகம் தாக்கப்பட்டதாக ஜனநாயகம் பேசுவது கேலிக் கூத்தானது. ஜனநாயகம் - மற்றவர்களின் உணர்வை மதிப்பது என்ற சித்தாந்தம் சங்பவரிவாரங்களிடம் துளியையும் எதிர்பார்க்க முடியாது. ராம பக்தரான மகாத்மாவையே கொன்றவர்கள் அல்லவா இவர்கள். இவர்களது ராமர் கோட்சேயிஸ ராமர். இவர்களின் ஜனநாயகம் என்பது மோடித்துவ ஜனநாயகமே! பா.ஜ.க. இதைத்தான் விரும்புகிறது.

குஜராத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்த பாசிச கும்பலல்லவா இந்த இந்துத்துவ கும்பல். இவர்களுக்கும் உண்மையான இந்து மத பக்தர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அவர்கள் வள்ளலார் வழியில் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற நம்பிக்கை வழி வந்தவர்கள். இவர்களோ வாடிய பயிரை தீக்கிரையாக்கி இன்பம் காணும் மோடியிஸ்ட்டுகள்.

September 22, 2007

பா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்!


அயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன?
தென்னக இராமர் இருக்கிறால் அல்லவா? அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.
தற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மேலும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.
எனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.
மகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா? இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது? அடிப்படை கோட்பாடு எது? இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.
மதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே!

September 21, 2007

பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனமும்! கலாச்சார பாசிசமும்!!


பா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே!
இந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ! போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
அடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம்! இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்!
இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது! அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம்? ஐயா படித்தவர்களே இது உண்மையா? தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே! எதற்காக? இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் விளக்குவார்களா? இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை! அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம்! ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்!
விவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்!
ஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா? இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா? இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா? ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது! இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்!
இந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா? அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது! குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
இராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா? எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா? அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா? அதனாலா? அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே! உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா?
அவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார்! பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா? உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள்! இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள்? என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது! ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம்! இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை! மக்களும்தான்....
இறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம்! ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம்! அது அவமானச் சின்னமாம்...! இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது! உஷ்.... உஷ்.... உஷ்....
இறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம்! எப்பா என்ன கருணை! என்ன கருணை!! ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம்! ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா! அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா? முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை! தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே!

September 20, 2007

போலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்!


போலி என்கவுன்டர். போலி பத்திரம். போலி ரூபாய் நோட்டு என போலிகள் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது போலி மெடல்.

என்ன ஆசிரியமாக இருக்கிறதா? ஆமாங்க! இந்த போலி மெடலை வழங்கியது வேற யாரும் இல்ல. சாட்சாத் நம்ம மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுதான்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா என்றாலே விவசாயிகள் தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும். அதாவது நம்ம ஐயா நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் சிங் வகையறாவின் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவர்கள் முடிவை அவர்களே தேடிக்கொள்வது என்ற தற்கொலை வடிவம்.

விவசாயிகளின் பாரம்பரிய விவசாயத்திற்கு மூட்டை கட்டி விட்டு. அந்த இடத்தில் பணப் பயிரான பருத்தியை விளைவிக்கச் சொல்லி - விவசாயிகளுக்கு ஆசை காட்டி ஒரே வருடத்தில் நீங்கள் மில்லினியராக ஆகிவிடலாம் என்று கதைக்கட்டி கடைசியில் இருக்கின்ற கோவணத்தையும் விட்ட கதையாக அந்த விவசாயிகள் கடன் தொல்லை தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிசச் சாதாரண விசயமாக மாறி விட்டது மகாராஷ்டிராவில். 2002 முதல் இதுவரை 5000 விவசாயிகள் இதுபோன்று தற்கொலை செய்துக் கொண்டதாக இந்து பத்திரிகை கூறுகிறது.

அப்படிப்பட்ட இடத்தில் ஒரு விவசாயி தாதாஜி என்பவர் அரும்பாடு பட்டு விவசாயத்தில் சாதனை படைத்து விட்டார். அதுவும் புது ரக நெல் விளைச்சலில் சாதனை படைத்து விட்டார். இந்த விவசாயியின் அரிய சாதனையை கெளரவிக்க கிரிசி பூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருது 14 கராட் தங்கத்தால் 50 கிராம் எடையுடன் கூடியது என அறிவித்தது. இதன் விலை ரூ 32,250. விருது வழங்கும் விழா மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இது போன்ற விருதினை பலருக்கும் வழங்கியது. நம்ம விவசாயி தாதாஜி தற்போது விவசாயத்தில் நட்டம் அடந்து விட்டதால் அந்த விருதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து. அதை விற்பதற்காக ஒரு ஜிவல்லரிக்கு சென்றபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த மெடல் வெறும் விலை குறைந்த வெள்ளியால் செய்யப்பட்டதாம். அதன் மேல் வெறும் கோல்டு எனாமல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் அதன் விலை ரூ. 500 க்கு மேல் போகாது என கூறிவிட்டார்.

ஆஹா இவர்கள் அல்லவா விவசாயிகளை காக்க வந்த மகா உத்தமர்கள்! காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் முழி பிதுங்கி நிற்கிறார்!

September 17, 2007

மணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.


சேது சமூத்திர திட்டம் தமிழக மக்களின் 150 ஆண்டு கனவு. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டி அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.
பா.ஜ.க.வின் விரக்தி அரசியலுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் ராமர் பாலம் விவகாரம். ஆதம் பாலம் என அழைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் திட்டுப் போன்ற பகுதி ராமரால் கட்டப்பட்டது என்று மணலை கயிராக திரித்து தங்களது மதவாத அரசியலுக்கு மெருகூட்ட முனைந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு. இந்திய அகழ்வாய்வுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு - ஆதம்பாலம் என்பது இயற்கையாக உருவானது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கான எந்த ஆதாரம் அங்கு இல்லை என்று நிறுவியுள்ளது.
வரலாற்று ரீதியாகவும். இலக்கிய ஆதாரங்களின்படியும் கூட ராமர் பாலத்திற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜ.க. இந்த விசத்தை மக்கள் நம்பிக்கை என கயிராக திரித்து - மத உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.
இராமாயணம் - மகாபாரதம் போன்றவைகள் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதிதானே ஒழிய அதற்கும் வரலாற்றறிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை பெரியார் இது குறித்து கூறும் போது இவைகள் எல்லாம் வரலாற்று புரட்டும் - குப்பையும்தான் என கூறியதே இந்நேரத்தில் நிள னைவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாடு சுடான விவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கையில். அந்த விசயத்தில் அம்பலப்பட்டுப் போயுள்ள பா.ஜ.க. ராமர் பாலம் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திசை திருப்ப முனைகிறது.
தேசத்தின் மீதான இவர்களது அக்கறை போலித்தனமானது என்பது வெளிப்பபடையானது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இதனை சங்பரிவாரம் மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.

September 12, 2007

ஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு!


ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு (அதாங்க அம்மா கூட்டணி) பிள்ளையார் சுழி போட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அணி ஆரம்பிக்கும் போதே ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சந்திப்பில் போட்டிருந்தேன். இந்த கொள்கையற்றவர்களின் கூட்டணியின் அந்திமக் காலம் துவங்கி விட்டதைதான் அம்மாவின் அறிக்கை காட்டுகிறது.
அம்மாவின் அரசியலை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. அம்மாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறினால் அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொள்ளும் பேராதிக்க குணம் படைத்தவர். அது மட்டுமா? தோழமை கட்சியினராக இருந்தால் கூட தான் சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அரசியல் சுபாவம் சந்திரபாபுவுக்கோ அல்லது முலாயமுக்கு தெரிந்திரிக்க நியாயம் இல்லை. அந்த ரகசியத்தை நன்கு உணர்ந்து அரசியல் நெருக்கம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விசயத்தில் இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் முலாயமும். சந்திரபாபும் கலந்து கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை இவர்களது விரிசலுக்கு. அம்மாவுக்கு யாரும் தகவல் சொல்லவில்லையாம்! இவரும் கூட அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏன் இவர் இடதுசாரிகளோடு ஒத்துழைக்கவில்லை. இவரது எதிர்ப்பு என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பைபோலத்தான் இரட்டை தன்மை கொண்டது. அது இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நோக்கத்தை கொண்டதே தவிர உண்மையான தேச நலன் சார்ந்தது இல்லை.
அம்மா எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பவராம்! அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது! இல்லையே! இவர் என்ன செய்தார்? திடுதிப்பென்று இவருக்கே தெரியாமல் அவர்களது சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களாம்! மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம்! பாவம் முலாயமும். சந்திரபாபுவும் யாருக்கும் ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர். (நடுநிலை என்ற ஒரு கொள்கையே இல்லை). அப்போதுதான் புரிந்தது அம்மாவின் அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் சங்பரிவார - பா.ஜ.க.வின் குரல்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க. பொறுப்பாளர் ரவி சங்கர் வர்மா அம்மாவை சந்தித்து ஒரு மணி நேரம் அரசியல் ஆலோசனை செய்துள்ளார். அதற்கு பின்தான் அம்மாவின் அறிக்கை வந்துள்ளது! தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க! இவரது மூன்றாவது அணி யாருடைய நலனை காப்பதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விழித்துக் கொண்ட முலாயமும். சந்திரபாபுவும் அம்மா விரித்த வலையில் சிக்காமல் மீண்டால் சரி!
இடதுசாரிகளைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது குறைந்தபட்ச கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள். உறுதியான மதச்சார்பின்மை - மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு - சுயேச்சையான அயலுறவு கொள்கை போன்ற அடிப்படை விசயங்களிலாவது சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவுக்கு ஆட்சி கனவைத் தவிர வேறு என்ன கொள்கை இருக்க முடியும்!
நான் மதவாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். என்று அம்மா மெரீனா கடற்கரையில் முழங்கினார். அவரது தொண்டர்கள் அதனை மறந்திருப்பார்கள் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் மதவாதிகளோடு கள்ளத்தனமாக உறவு கொள்ள துடிக்கிறார் என கேட்கத் துவங்கி விட்டனர். எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா?

September 11, 2007

மாநகர பேருந்து மாசற்ற பேருந்தா?

சென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’ தான் வெளிச்சம்.

இன்று (செப்டம்பர் 11, 2007) 18A பிராட்வே - தாம்பரம், அடுக்கு மாடி பேருந்தில் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். காலை 11.05 க்கு பிராட்வேயில் இருந்து மேற்குறிப்பிட்ட பேருந்தில் ஏறினேன். அது அடுக்குமாடி பேருந்தாக இருந்ததால், மேலே சென்று பயணிப்பதில் ஒரு சுகம்தான். மேலே சென்று முன்னிருக்கையில் அமர்ந்தவுடன் கீழே இருபுறமும் ‘சென்னை மாநகரத்தில் அகற்றப்படாத குப்பைகள்’ போல் குவிந்து கிடந்தது.

என்னுடன் பேருந்தில் ஏறிய சகபயணிக்கு இதைப் பார்த்தவுடன் கடும் கோபமாகி விட்டார். அவர் என்னிடம், ‘என்னங்க இது அநியாயமாக இருக்கிறது’ மாசற்ற பேருந்துன்னு சொல்றாங்க இப்படியிருக்கே! என்று வருத்தப்பட்டதோடு நிற்காமல், நடத்துனரிடம் (கண்டக்டர்) சென்று என்னங்க இப்படி ஒரே குப்பையா இருக்கே என்று அவரிடம் கேட்க, அவரோ, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்றைக்கு கிளீன் பன்னாமல் விட்டுட்டு இருப்பாங்கன்னு ஒரு சமாதானம் சொன்னார்.

அந்த உயரமான, வாட்ட சாட்டமான, தாடி வைத்த பயணி மீண்டும் என்னிடம் வந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். நானும், ஆமாங்க இவங்களுக்கு ஒரு சமூக பொறுப்பே இருப்பதில்லை. மக்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதில்லை என்று கூறி அவரோடு இணைந்து கொண்டேன். அந்த சக பயணி தன்னுடைய செல்போனை எடுத்து நேராக மாநகர போக்குவரத்து கண்ட்ரோல் ரூமூக்கு போன் செய்து, (வழித்தட எண் 18A, TAD 401, TN-01-N-3134) வண்டி எண் உட்பட அனைத்தையும் சொல்லி வண்டியில் மேல் மாடியில் ஒரே குப்பையாக இருக்கிறது. நானும் இதை ஒருவாரமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன், இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பயணம் செய்வது, நீங்கள் வேண்டும் என்றால் சைதாப்பேட்டையில் - விஜிலன்சை அனுப்பி செக்-அப் செய்யுங்கள் என்று கூறினார்.

அதே சமயம் கண்டக்டரையும் மாட்டி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்குள் இருந்தது. ஐயா கண்டக்டர் சார் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே! என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா? என்று அவரது நியாயமான கோபத்தையும், கேள்வியையும் எழுப்பினார் அந்த பயணி. நானும் படிக்க வேண்டிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவரது நியாயத்திற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.

அந்த பயணி நீங்கள் எங்கே இறங்க வேண்டும் என்று என்னை கேட்டார். நான் எ°.ஐ.இ.டி. என்று கூற, அவரும் அங்கேதான் இறங்க வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம்! நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா? அல்லது குப்பை அள்ளும் வண்டியா?” என அவர் வினவியது மிகப் பொருத்தமாக இருந்தது.

உண்மையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கீழ்ப்புறத்திலும் குப்பைகள் மண்டிக் கிடந்ததோடு, நாறிக் கொண்டும் இருந்தது. கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு அந்த பேருந்து பயணம் ஒரு சுகமாகவே இருக்கும்! இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா? அல்லது தன்னுடைய ‘மாநகர பேருந்து மாசற்ற பேருந்து’ என்ற வாசகத்தையாவது மாற்றிக் கொள்ளுமா?

சென்னை மாநகர பேருந்துகளில் திருவள்ளுவரின் திறக்குறளை சிறிய எழுத்தில் போட்டு விட்டு, ஐயன் வள்ளுவரின் (அதாங்க முதல்வர் கலைஞரின்) குறளை பெரிய படமாக போடுவதில் காட்டும் அக்கறையை குப்பையை அகற்றுவதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

பேருந்தை சுற்றிலும், ஷாம்பு கம்பெனிக்கும், சோப்பு கம்பெனிக்கும் டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து பேருந்தையே மொத்த விளம்பரத்திற்கு குத்தகை கொடுத்து அதன் அழகை கூட்டிக் கொள்ளும் பேருந்திற்குள் நாறிக் கொண்டிருப்பது மட்டும் ஏனோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு! ஷாம்பு வாசனை அதை மறைத்து விடும் என்ற நம்பிக்கையோ!
மறுபுறத்தில் கலர் கலராய் சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - மாநகர பேருந்தும் தங்களது சேவை குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாதது அவர்களது பொறுப்பற்றத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.


சமூக பொறுப்புணர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்திய அந்த சக பயணிக்கு ஜே!

September 07, 2007

மார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை!

சிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல உலகமயத்தின் விளைவையும் விளக்குவதாக உள்ளது.

சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சபதமேற்று அதிமுக - திமுக இந்த இருவரும் குப்பையை அள்ளுவதற்கு ஓனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு காண்ட்டிராக்ட் விட்டதும். தற்போது ஓனிக்சின் காண்ட்டிராக்ட் முடிவுக்கு வந்து. அந்த இடத்தில் நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அந்நிறுவனத்தின் துவக்கமே அலங்கோலமாக இருந்தது. மலை மலையாய் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்களோ - ஊழியர்களோ அல்லது உரிய திட்டமிட்ட ஏற்பாடோ இல்லாததால் சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற கனவை கடந்த சட்டமன்ற தேர்தல் அசைத்து விட்ட காரணத்தால் தற்போதைய குப்பை அரசியல் திமுகவை எங்கே ஓரம் கட்டி விடுமோ என்ற பயத்தில் மாநகராட்சி அவசரம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு துரிதமாக குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. எஜமான விசுவாசத்தால் பழைய ஓனிக்ஸ் நிறுவனமும் சற்று உதவி செய்தது. இது அடுத்த காண்ட்டிராக்ட்டிற்கு திட்டம் போட்டுதான்.
சிங்கப்பூராக்குவேன் என்றவர்கள் சென்னையை குப்பைக்காடாக்கியதுதான் மிச்சம். சரி. தனியாமயம் குப்பை அகற்றும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களை நிரந்தர பணியில் இருந்து முதலில் அகற்றியது. பின்னர் அவர்களது வாரிசுகள் ஓனிக்சின் கரங்களில் சிக்கி சின்னபின்னமாகிப் போனதும் தற்போது ஓனிக்சின் ஆயுள் காலம் முடிந்த கையோடு அந்த ஊழியர்களின் வாழ்க்கையும் அமிழ்ந்த போனது. குறைந்த சம்பளம் - நிறைவான உழைப்பு... இருப்பினும் என்ன கிடைத்தது இளமையை இழந்து - நோயோடு பேயாக வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு மிச்சம்.

தற்போதைய புதிய எஜமான் நீல் மெட்டல் பனால்கா அதே ஊழியர்களை மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த திட்டம் போட்டு வருகிறது. சரி இருக்கட்டும்... தனியார்மயம் ஊழியர்களை மட்டுமா குப்பையாக்கியது சென்னை நகரையும் தானே! மெத்தப் படித்தவர்கள் அனைத்தையும் தனியார்மயமாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள் கூட முகம் சுளிப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? தற்போதைய நீல் மெட்ட்டல் பனால்கா குப்பைகளை அகற்றுவதற்கான குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கு பாங்காக்கிற்கும் - சிங்கப்பூருக்கும் காண்ட்டிராக்ட் விட்டிருக்கிறது. அதன் முலம் தற்போது 1800 குப்பைத் தொட்டிகள் இன்னும் சில நாட்களில் இறக்குமதியாகி விடுமாம். இதில் 1100 குப்பைத் தொட்டிகள் சிங்கப்பூரில் இருந்தும். 700 பாங்காக்கில் இருந்தும் வாங்கப்படுகிறதாம்.

வேடிக்கை என்னத் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த குப்பைத் தொட்டிகளை இறக்குவதற்கு இடம் இல்லையாம். அதனால் அவைகள் மகாராஷ்டிரத்திற்கு திருப்பி விடப்பட்டு - அங்கிருந்து வாகனங்கள் மூலம் தரைவழியாக சென்னை வருகிறதாம். தலையை சுற்றி உங்களால் சாப்பிட முடியுமா? சென்னை மாநகராட்சியும் - உலகமயமும் அதை செய்து காட்டுகிறது!

உலகமயம் என்றால் உலகத்தையே சுற்ற வேண்டும் என்னவா? சென்னை நகரில் குப்பை அள்ளுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை கூட உருவாக்க லாயக்கற்றவர்களாகி விட்டனர் தமிழக மக்களும் - இந்திய மக்களும்!

ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களோ இல்லையோ? சிங்கப்பூரை உலகமயத்தின் மூலம் வாசிங்டன்னாக மாற்றுவார்கள் போலும்.
தனியார்மயத்தின் பல்ளிக்கும் சாட்சியாக சென்னை நகர குப்பை காட்சிகள் உள்ளது. சென்னை நகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்க்கு தார்மீக ரீதியாக சென்னை மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நோயால் பாதிக்கப்படப் போவது கூலி ஜனங்கள்தானே பரவாயில்லை... இது உலகமயத்தின் பரிசு! என்று சொன்னாலும்a சொல்லுவார்கள் இந்த ஊழல் குபேரபுரிகள்.

நோயின் அறிகுறி குப்பை அரசியலில் தெரிந்து விட்டது இப்போதே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவில்லையென்றால்... அப்புறம் இருக்கவே இருக்கிறது... மார்ச்சுவரி...! உலகமயம் என்ற நோயை இப்போதே விரட்டியடிக்கவில்லையென்றால்.... ஆட்கொல்லிக்கு இறையாவதை தவிர்க்க முடியாது!

September 03, 2007

அணு சக்தி உடன்பாடு: பிரதமருக்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கடிதம்

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி உடன்பாட்டின் ஆபத்துக்கள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.
காந்திஜிக்கு இருந்த உலகளாவிய கண் ணோட்டத்தையோ, நேருவின் அணிசேராக் கொள்கையையோ வழிகாட்டியாகக் கொண்டு பார்க்கும் போது சர்வதேச விஷயங்களில் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைபாடுகளை மேற்கொள்கிறீர்கள். மற்ற நாடுகளின் இறையாண்மைக்குச் சற்றும் மதிப்பளிக்காத, ஹிரோசிமாவிலும் காபூலிலும் பாக்தாதிலும் ஏகாதிபத்திய ஊடுருவல், தாக்குதல், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எதேச்சதிகார வல்லரசுடன், நம்முடையது போன்ற அணி சேராத்தன்மையும் இறையாண்மையும் உள்ள ஒரு நாடு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது என்பதுதான் சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.
சர்ச்சைக்கிடமாகியுள்ள வாஷிங்டன் உடன்பாடு (இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு) விஷயத்தில் இனி பின்வாங்குவதற்கு இல்லை என்பது தங்களின் நிலைபாடாக இருக்கிறது. உடன்பாட்டில் கையெழுத்திட தங்களுக்குத் தூண்டுதலாக இருந்த விஷயம் இந்திய மக்களின் நலன்களைப் பாது காக்க வேண்டும் என்ற உணர்வுதான் என்று தாங்கள் முன்பு எனக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறீர்கள், எது எப்படியோ, தேசிய ரீதியில் சர்ச்சையைக் கிளறியுள்ள இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க இருக்கிறது.
உடன்பாட்டை ஆட்சேபித்து இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைபாடு முக்கியத்துவம் அற்றது என்று நான் கருதவில்லை. காரணம் அரசு நீடிப்பதற் கான ஆதரவை அளிப்பது அவர்கள்தான்.அளவில் குறைவாகவும், தரத்தில் மோசமானதாகவும் உள்ள நமது படிம எரிபொருட் களையோ சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எழுப் பும் நீர்மின்சாரத் திட்டங்களையோ வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான எரிசக்தி விஷயத்தில் நாம் சார்ந்திருக்க முடியாது என்று 2007 ஜூன் 23ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள். “இந்நிலையை சமாளிப்பதற் கான நமது தரப்பிலிருந்து, மேற்கொள்ளத்தக்க நடைமுறை சாத்தியமான நடவடிக்கையாக” அணுசக்தியையும் அமெரிக்காவுட னான அணுசக்தி ஒத்துழைப்பையும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தச் சூழ் நிலைமையில் காற்றில் இருந் தும் கடல் அலைகளில் இருந்தும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்ற, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தாத வழிமுறைகளை நமது நாட்டில் சிறிய அள வுக்குக் கூட பயன்படுத்துவது இல்லை என்ற உண்மையை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நம்மிடம் நீர்மின்சாரத் திற்கான வளங்கள் நிறைய உள்ளன. நான் கேரளத்தில் நீர்ப்பாசன மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் நீர்வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விரிவான திட்டம் ஒன்றை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தேன்.
சோவியத் நாட்டில் உள்ளது போன்ற சிறிய நீர்மின்திட்டங்களை கேரளம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும் நதிநீரைப் பயன்படுத்தி சிறிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் ஆலோசனை கூறினார். இத்தகைய திட்டங்கள் உற்பத்திச் செலவையும் வினியோக இழப்பையும் குறைக்கும். ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடிய நமது பொறுப்பாளர்களாலும் அரசியல் தலைமையாலும் பெருமளவில் குவிந்து கிடக்கும் இந்த எரிசக்தி வளத்தை பயன்படுத்தவும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் தூரத்தில் உள்ள வெளிநாடுகளுக்கும் கூட மின்சாரம் கொண்டு செல்லவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
நமது நீர்மின் வளங்கள் குறித்தும் அவற்றின் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்தும் தேசிய அடிப்படையில் இதுவரை புள்ளி விபரம் சேகரிக்கப்பட வில்லை.மின்சார உற்பத்தியை அதிகரிக்க அமெ ரிக்காவுடன் உடன்பாடு செய்துகொள்வது தான் ஒரே வழி என்று அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
அதுபற்றி சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். மின் உற்பத்திக்கு மற்ற துறைகளில் ஆகும் செலவைவிட அணுசக்தி மூலமான மின் உற்பத்திக்கு செலவு மிக அதிகமாகும். புற்று நோய்போன்ற பல கொடிய நோய்களை அணுக் கதிர் வீச்சுக்கள் ஏற்படுத்துகின்றன. நமது எரிசக்தியை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து கச்சாப்பொருட்களைக் கடன் வாங்கு வதற்கான கொள்கையை வகுக்கும் முன்பு அணுக்கதிர்வீச்சு மக்களிடம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும்.
தற்போதைய சர்ச்சைக்குரிய அணுசக்தி உடன்பாட்டின் நாசகர விளைவுகள் குறித்து அறிஞர்கள் பலரும், பொதுநலனில் அக்கறை உள்ளவர்களும் என்னிடம் கூறியுள்ளனர்.
ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளும் தேசிய உணர்வு உள்ள ஒரு சாதாரண பொதுநலச்சேவகன் என்ற முறையில், அமெரிக்கா விடமிருந்தான அணுசக்தி எரிபொருள் விநியோகம் குறித்து நான் வெளிப்படுத்தும் கவலைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் இறையாண்மையை ஒரு போலியான தாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அமெரிக்கா இங்கு பெருமளவில் முதலீடு செய்கிறது. பல்வேறு ஐயப்பாடுகள் நிறைந்த அணுசக்தி உடன்பாட்டில் பல ஆபத் துக்கள் உள்ளன. இந்த உடன்பாட்டைக் காரணம் காட்டி நமது அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அமெரிக்க ஆய்வாளர்கள் வருவார்கள். சுயாதிபத்திய உரிமையுள்ள நமது நாட்டின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை, நமது விருப்பப்படி செயல்படுவதற்கான உரிமை ஆகியவையெல்லாம் இதனால் தகர்ந்து போகும்.
வல்லரசுகளின் சூழ்ச்சிகளை அறிந்தவர்களால் இத்தகைய ஆய்வாளர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.எப்போதும் ஆக்கிரமிப்பு முஸ்தீபுடன் உள்ள ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் ஆளும் அமெரிக் காவின் தலைமையிலான ஒரு துருவ உலகில் நாம் வாழ்கிறோம். மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்பதில் தங்களுக்கு எந்தள வுக்கு அக்கறையும் விழிப்புணர்வும் இருந்தா லும் ஆசியாவில் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நாட்டில் பல்வேறு சூழ்ச்சிகளையும் அதற்கான வெளிநாட்டுக் கொள்கையையும் வாஷிங்டன் வகுக்கும்.ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா நீசத்தனமான வழி முறைகளைப் பிரயோகிக்கும் என்பதை அன் பிற்குரிய பிரதமரான தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கொரியாவும் வியட் நாமும் வலியுறுத்துகின்றன. கேடுகெட்ட மனங்களையும் டாலர்களை உற்பத்தி செய்யும் ஆத்மாக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் பிரச்சாரத்தில் அமெரிக்காவுக்கான நமது தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட நிர்பந்தத்திற்கு பணி யும் வாய்ப்பு உண்டு.
ஏகாதிபத்திய நலன்களுக்காக உண்மையைக் காவுகொடுக்க உதவுகின்ற வகையில்தான் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மகத்தான சுதந்திரப்பிரகடனமும் அரசியல் கொலைபாதகங்களுக்கு இரையான ஆப்ரஹாம்லிங்கன், ஜான் கென்னடி, மார்ட் டின் லூதல் கிங் (இளையவர்) ஆகியோர் பற்றிய நினைவுகளும் அமெரிக்கா குறித்து என் மனதில் மதிப்பை உருவாக்குகிறது. நீதித் துறையில் புகழ்பெற்ற தலைமை நீதிபதிகளான மார்ஷல், எல்வாரன் ஆகியோர் உள்ளிட்ட போற்றத்தக்க நீதிபதிகளும் அந்த நாட்டின் மீது நான் கொண்டுள்ள மதிப்பை உயர்த்துகிறார்கள்.
தோரியூ, மெர்ஸன், வால்ட் விட்மன், விவேகானந்தரின் சிக்காக்கோ சொற் பொழிவு இவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும்.ஹார்வார்ட், ஸ்டார் போர்ட் ‘யேல்’ (பல் கலைக்கழகங்கள்) ஆகியவை கல்வியில் அதிசயங்களாகும். மிகப்பெரிய சாதனைகள் புரிந்த மற்ற பல நிறுவனங்களும் உண்டு, நிச்சயமாக, அமெரிக்காவில் மிகப்பெரும்பான் மையான மக்களும் ஜார்ஜ் புஷ்சுக்கு ஆதரவாக இல்லை.
இவ்வளவும் கூறக்காரணம், ஐய்யப்பாடுகள் நிறைந்த உடன்பாடு குறித்த எனது கருத்து அமெரிக்க எதிர்ப்பிலிருந்து பிறந்தது அல்ல என்பதைத் தெளிவாக்குவதற் காகத்தான். ஆனால், உண்மை உணர்வோடு, சிந்திக்கும் பட்சத்தில், ஆயுதத்திற்காக பிச்சை எடுக்க நாங்கள் சர்வதேசப் பிச்சைக்காரர்கள் அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவருக்கு நேரு நாடாளுமன்றத்தில் நினை வூட்டியதை தாங்கள் மறந்துவிடக்கூடாது.
மோதல் ஏற்படும்பட்சத்தில் பாகிஸ்தான் பக்கம்தான் அமெரிக்கா நிற்கும் என்றுதான் பொதுவாக கருதப்படுகிறது. இரண்டு நாடு களுக்கும் இடையேயான துருதிருஷ்டவசமான கருத்து வேறுபாடுகளைத்தான் அமெரிக்கா தனது ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பாகிஸ்தான் பக்கம் உறுதியாக நிலை கொண்டது. ஆனால், சோவியத் படையின் தலையீடு நமக்கு எதிரான அச்சுறுத்தலைத் தவிர்த்தது.
இப்போது ஏக வல்லரசு என்ற நிலையில் தங்களின் கொள்கைகளுக்குப் பணிந்து நடக்கும்படி அமெரிக்கா நம்மை நிர்பந்திக்க முடியும். நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச ஆதரவு கண்ணோட்டங்களுக்கும் கோட்பாடுகளுக் கும் எதிரான மிரட்டலாகும் இது.
விரிந்த இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று “21ம் நூற்றாண் டில் உலக சூழ்நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை” மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசியல் விவகார துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் குறிப்பிட்டிருப்பது நமக்கு கவலையை ஏற்படுத்த வில்லையா? நமது அறிவிப்புகள் என்னவாக இருப்பினும் ஹைடு சட்டம் முடிந்த முடிவாக அமெரிக்காவின் விருப்பப்படி உடன்பாட்டின் அர்த்தத்தையோ மாற்றிவிடக் கூடியதாகும். முற்போக்கான எனது நண்பர் (அவர் கம்யூனிஸ்ட் அல்ல) அண்மையில் எனக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். இன்றைய சர்வதேச சூழ்நிலைமையில் ஜார்ஜ்புஷ் விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளத்தக்க சிறந்த மார்க்கம்.
அவரது கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவுக்கு உள்ளேயே பேராதரவைப் பெற்றுவிட்ட சர்வதேசிய இயக்கத்தின் முன்வரிசையில் நிற்பதுதான். சுதந்திரமான கண்ணோட்டத்தை நான் கொண்டிருந்தாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான இயக் கத்தின் பிரச்சாரகன் அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கடும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமையில் தங்களுக்கும் சோனியா காந்திக்கும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கும் எனது நிலைபாட்டை தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். தேசபக்தனும் இந்திய மக்களின் சுதந்திரத்தை மதித்துப் போற்றக் கூடியவனுமாகிய எனது கருத்துக்களை தயவு கூர்ந்து ஏற்க வேண்டுகிறேன். நாடு கடும் நெருக் கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிற வேளை யில் மவுனம் சாதிப்பது குற்றமாகும். அதனால் எனது கடமையைச் செய்கிறேன்
தமிழாக்கம்: வீரா

இந்திய நலன் காத்திடு: இந்திய-அமெரிக்க அணுசக்தி பேரத்தைத் தொடராதே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்திய - அமெரிக்க அணுசக்தி பேரத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திடம் இதனை மேலும் தொடராதே என்று வலியுறுத்தி வருகின்றன. நம் நாட்டின் பிரதமர் ஜார்ஜ் புஷ் இந்தியாவின் சிறந்த நண்பன் என்றும் அவர் இந்த பேரத்தில் இந்தியாவுக்கு உதவியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
தன் சொந்த நாட்டிலேயே மிகவும் செல்வாக்கிழந்த ஜனாதிபதி என்று பெயர் வாங்கிய நபராக, மக்கள் மத்தியில் மிகவும் அற்பமாக மதிக்கப்படும் நபராக, ஜார்ஜ் புஷ் கருதப்படுகிறார். தன் சொந்த நாட்டு மக்களுடனேயே நட்புரீதியில் இல்லாத ஒரு நபர், திடீரென்று இந்தியாவின் சிறந்த நண்பனாக எப்படி மாற முடியும்? உண்மை இதற்கு நேரெதிராகவே இருக்கிறது. இந்திய - அமெரிக்க அணுசக்தி பேரம் இந்தியாவின் நலன்களுக்கோ அல்லது இந்திய மக்களின் நலன்களுக்கோ எதுவும் செய்திடாது. தேவையில்லையென்றால் கழட்டிவிடக்கூடிய அளவிற்கு ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தனியே நிற்கும் ஒரு ரயில்வண்டி போன்றதல்ல இந்த ஒப்பந்தம். மாறாக, இந்தியாவைப் பலவிதங்களிலும் அமெரிக்காவின் போர்த்தந்திர கூட்டணிக்குள் இழுத்துக் கொள்வதன் ஒரு பகுதியேயாகும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆசியாவில் திறக்கப்படும் ஒரு கிளை அலுவலகம் போன்றதேயாகும்.இந்திய அரசின் சார்பில் இந்திய மக்களின் வாழ்க்கையில் கடுமையான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ராணுவம், விவசாயம், தொழில்கள் முதலான துறைகளிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியின் காரணமாக, நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையே கடும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.குறைந்தபட்ச பொது செயல் திட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்த சமயத்தில், ஒன்றை மிகவும் தெளிவாக்கியிருந்தோம். எங்கள் ஆதரவு என்பது, அரசின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலானதாகும் என்று மிகவும் தெளிவாக்கியிருந்தோம். அந்த குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், இப்போது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அணுசக்தி பேரம் குறித்து, எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில், ‘‘ஒரு சுயேட்சையான அயல்துறைக் கொள்கை’’ பின்பற்றப்படும் என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது, ஐமுகூ அரசாங்கமானது, பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அமெரிக்க ஆதவு கொள்கையை அமல்படுத்திட, இடதுசாரிகளும் உதவிட வேண்டும் என்று கோருகிறது. இது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திலிருந்து மிகத் தெளிவாகவே விலகிச்செல்லும் போக்காகும்.
இதனை நிச்சயமாக ஏற்க முடியாது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைஇந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆயினும், இந்த அணுசக்தி பேரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்த பேரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால் இதே பிரச்சனை மீது ஒவ்வொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் கருத்துக்களைக் கூறி இந்தப் பேரத்தின் மீது வாக்களித்திருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் இந்த பேரத்திற்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால் இதனை இந்திய அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பேரம் குறித்து விவாதித்ததோடு மட்டுமல்லாமல், ‘ஹைடு சட்டம்’ என்று புதியதோர் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகள் குறித்து ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பதில்கூறக் கடமைப்பட்டவராவார். இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்க மறுப்பதோடு, இந்திய ஜனநாயகத்திற்குத் தீங்கி விளைவிக்கக் கூடிய மிக மோசமான நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் இறங்கியிருக்கிறது.ஹைடு சட்டம்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அரசாங்கமானது, மற்றொரு நாட்டின் சட்டத்திற்கு - ஹைடு சட்டத்திற்குக் - கீழ்ப்பட்டு நடப்பதான ஒரு பேரத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
2006 செப்டம்பரில் இடதுசாரிக் கட்சிகள் இந்த பேரத்தில் எழுப்பப்பட்டிருந்த ஒன்பது விதமான பிரச்சனைகளின்கீழ் பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், 2006 டிசம்பரில்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய ஹைடு சட்டம் என்னும் இந்தப் புதியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியப் பிரதமர் இந்திய நாடாளுமன்றத்தில் அளித்திட்ட உறுதிமொழிகள் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டுவிட்டன. ஒரு மாணவன் தேர்வில் தேர்ச்சியடைந்துவிட்டானா அல்லது தவறிவிட்டானா என்று ஓர் ஆசிரியர் அறிக்கை தாக்கல் செய்வதைப் போல, இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து, அமெரிக்க ஜனாதிபதியால் ஒவ்வோராண்டும் மதிப்பீடு செய்யப்படும். அதன் மீது இந்திய அரசாங்கமானது, அமெரிக்க நாட்டிற்கு ஒரு நல்ல நண்பனாக நடந்து கொண்டதா என்கிற பரீட்சையில் தேர்ச்சியடைந்து விட்டதா என்பது குறித்து ஓர் இறுதி அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உதாரணமாக இந்தியா ஈராக் யுத்தத்தை அல்லது ஈரானுக்கு அமெரிக்கா விடுத்து வரும் அச்சுறுத்தல்களை அல்லது உலகில் எங்காவது நடைபெறும் அச்சுறுத்தல்களை எதிர்த்தால், அது இந்தியா குறித்து கரும்புள்ளி வைத்திடும். இத்தகையதோர் மோசமான நிபந்தனையை குறைந்தபட்சம் சுயமரியாதையுடன் உள்ள எந்த இறையாண்மை கொண்ட நாடாவது ஏற்றுக்கொள்ள முடியுமா?அமெரிக்கச் சட்டம், அணுசக்தி பேரம் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் பல நிபந்தனைகளை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது.
1. இந்தியாவுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அமெரிக்கா கொடுக்காது.எ அமெரிக்கா நிரந்தரமாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எந்தவித உத்தரவாதமும் வழங்காது.
2. அமெரிக்கா எந்த நிமிடம் விரும்பினாலும் ஏதேனும் காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும்.
3. அவ்வாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், அமெரிக்கா தான் அளித்திட்ட அனைத்து ஈனுலைகளையும் (சநயஉவடிசள) மற்றும் எரிபொருள்களையும் (கரநடள) திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
4. அதுமட்டுமல்ல, மற்ற நாடுகளும் இந்தியாவிற்கு அவற்றை வழங்காது அமெரிக்கா தடுத்திடும். மின்சக்தித் தேவைகள்பிரதமர் மன்மோகன்சிங், இந்த அணுசக்தி பேரமானது, ஒவ்வொரு இந்தியனுக்கும் மின்சாரம் பயன்படுத்தும் வாய்ப்பை, ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.
நாட்டின் கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு இன்னமும் இருளில் மூழ்கிக்கிடக்கிறதென்றால் அதற்குக் காரணம், மின்சக்தித் துறையில் (யீடிறநச ளநஉவடிச) போதுமான பணத்தை அரசு செலவிடத் தவறியதும், இத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்ததுமே காரணங்களாகும். மின்சாரக் கட்டணம் பல மாநிலங்களில் விஷம்போல் உயர்ந்துள்ளன. விவசாயிகள் பெருவாரியாகத் தற்கொலை செய்து கொள்வதற்கு, அவர்களின் மின்கட்டணங்கள் அதிகரித்ததும் ஒரு காரணமாகும்.
அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவினம் அதிகமாகும். இன்று, நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.50 செலவாகிறது. ஆனால் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அது யூனிட் ஒன்றுக்கு ரூ.5.10 முதல் 5.50 வரை செலவாகும். இது நுகர்வோரைச் சென்றடையும்போது மேலும் அதிகமாகும். ஒரு விவசாயி அல்லது ஒரு நடுத்தர ஊழியர் இவ்வளவு கூடுதலாக மின்கட்டணத்தைக் கொடுக்க முடியுமா? இதனால் பயனடையப் போவது யார்? அமெரிக்காவில் உள்ள அணுசக்தி ஈனுலைத் தொழில் நிறுவனங்கள் (சநயஉவடிச iனேரளவசல) தற்சமயம் மிகவும் ஆழமான நெருக்கடியில் சிக்கி வெளிவரமுடியாமல் விழிபிதுங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் ஈனுலைகளை ஒருசில நாடுகள்தான் வாங்கிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலேயேகூட 1996க்குப்பின் ஒரு ஈனுலை கூட நிறுவப்படவில்லை.
தங்கள் நாட்டில் மின்சாரத்துறையை விரிவுபடுத்திட தங்களிடம் பணம் இல்லை என்று அந்த நாட்டு அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதே ஈனுலைகளை பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு இந்தியாவின் தலையில் கட்ட அமெரிக்க அணுசக்தி தொழில்நிறுவனங்கள் தற்போது தயாராகிவருகின்றன. அணு எரிசக்தி வாணிகத்தின் மூலம் பயனடையப்போவது அமெரிக்க நிறுவனங்களே.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் என்ரான் பேரம் நாட்டை எந்த அளவிற்கு சீரழித்தது என்பதை நன்கறிவர். இந்த என்ரான் அமெரிக்க கம்பெனி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 7 ரூபாய்க்கும் மேல் விலை நிர்ணயம் செய்தது. அதுநாள்வரை மிகவும் இலாபகரமாக இயங்கி வந்த மகாராஷ்ட்ரா மின்வாரியம், என்ரான் புகுந்தபின் திவாலாகிப் போனது.
அணுமின் சக்தி விஷயத்தில் இது இன்னும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும். தற்சமயம், நாட்டின் மொத்த மின்உற்பத்தியில், அணுமின்சக்தி 3 சதவீத அளவிற்கே இருக்கும். மற்ற 97 சதவீதம் அனல் மின்சாரம் மற்றும் புனல் அல்லது நீர் மின்சாரம் மூலமே இருந்துவருகிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் கணக்குப்படியே அடுத்த 20 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் மின்சாரத் தேவையில் 7 சதவீத அளவிற்கே இருந்திடும். இவ்வளவு அற்ப அளவிற்காக, நாட்டின் இறையாண்மையையே அமெரிக்காவின் காலடிகளில் அடகு வைக்க வேண்டுமா?மாற்று வழிமுறைகள்இந்தியா, தன் அணுசக்தித் துறையை வளர்த்துக்கொள்ள வேண்டியது, அவசியமா? நிச்சயம் அவசியம்தான். ஆனால் அதேசமயத்தில், தன் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு, அதே அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு (டிடை யனே பயள) வழிமுறைகளைப் பயன்படுத்துவதும் அவசியம். நாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை வெளிக்கொணர, மேலும் முதலீடு செய்யப்பட வேண்டியது இன்றைய தேவையாகும். அதேசமயத்தில், மேற்று மற்றும் மத்திய ஆசிய நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் பிரதான மையங்களாகும். இந்நாடுகளுடன் இந்தியா தன்னுடைய பாரம்பர்ய உறவைகளை வலுப்படுத்திக்கொண்டு, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அவசியம்.
ஆனால், இதனை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா, ஈராக் மீது வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுப்பதையும், ஈரானை அச்சுறுத்துவதையும், நாம் ஆதரிக்க வேண்டுமென்று விரும்புகிறது. இது எந்த விதத்தில் நாட்டின் நலன்களைக் காத்திடும்? அயல்துறைக் கொள்கையின் தாக்கம்அணுசக்தி பேரத்தின் காரணமாக, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, சர்வதேச அணுசக்தி கழகத்தில் மிகவும் வெட்கக்கேடான வழியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் நின்று - அணிசேரா இயக்கத்தில் உள்ள மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலல்லாமல் - இந்தியா, ஒருமுறை அல்ல இருமுறை வாக்களித்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இப்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்து அமெரிக்காவின் ஈனுலைகளை வாங்கினால், அதன்பின் தன்னுடைய அணுஎரிசக்தித் தேவைகளுக்கு முற்றிலுமாக அமெரிக்காவைச் சார்ந்து நின்றால், மேலும் அதிகமான அளவில் அமெரிக்கா நம்மை பிளாக்மெயில் செய்வதற்கும் நிர்ப்பந்திப்பதற்கும் வகைசெய்யும். அமெரிக்காவின் புதிய ராணுவக் கூட்டாளிஇந்தியா, 2005 ஜூனில் கையெழுத்திட்டுள்ள ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலமாக, அமெரிக்காவுடன் ஒரு ராணுவக் கூட்டணிக்குள்ளும் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
* இந்த ஒப்பந்தம் முதன்முதலாக மூன்றாம் நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொள்கிறது. இதுநாள்வரை, மற்ற நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைகள் என்பது ஐ.நா. அமைப்பின் கட்டளைக்கிணங்கவே இருந்தது.
* இரு நாட்டின் ராணுவம், கப்பல்படை, விமானப்படை வீரர்களின் கூட்டுப் பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* அமெரிக்க ஆயுதங்கள் வாங்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்படும். அதன் மூலமாக அமெரிக்க ஆயுதத் தொழிற்சாலைக்கு உதவிட இந்தியாவில் இணைந்து உற்பத்தி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பல கோடி டாலர்கள் அமெரிக்காவின் ஆயுதத் தொழிற்சாலைகளுக்கு இந்தியா அளித்திடும்.எ புதிதாக செய்துகொள்ளப்பட்டுள்ள கப்பல்படை கூட்டுப் பயிற்சி ஒப்பந்தங்கள் மூலமாக, இந்தியாவின் கப்பல் மற்றும் விமானத்தளங்கள், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
அவை இந்தியாவில் உள்ள இத்தளங்களுக்கு வந்து, எரிபொருள்களை நிரப்பிக்கொள்ளலாம் மற்றும் மராமத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, அமெரிக்க விமானங்கள் ஈராக் மீது குண்டுமாரி பொழிந்து, நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்துவிட்டு, இந்தியாவின் தளங்களில் வந்து இளைப்பாறிக்கொள்ளலாம்.
பின்னர் மீண்டும் ஈராக் சென்று மக்களைக் கொன்று குவிக்கலாம். இவை அனைத்திற்கும் இந்தியா ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்.அமெரிக்காவுடன் மட்டும் கூட்டுப்பயிற்சி என்பதல்ல. தற்போது அமெரிக்காவின் மற்ற பங்காளி நாடுகளுடனும் சேர்ந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நாம், அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனும் நெருங்கிய அளவில் ராணுவக் கூட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால்தான் வங்காள விரிகுடாவில் இந்நாடுகளின் கப்பல்படைகள் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. இந்திய அரசின் இந்த ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.விவசாயிகளின் நலன்களைக் காவு கொடுத்து ...2005இல் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்காவுடன் மற்றுமோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அது நம் நாட்டின் விவசாயிகளுக்கு மிகவும் தீங்கு பயப்பதாகும். அந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாட்டிற்கும் இடையே ஓர் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் சார்பாக உலகையே கொள்ளையடித்து வரும் மான்சாண்டோ மற்றும் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
இந்த நிறுவனங்கள் நம் நாட்டின் விதைச் சந்தை மற்றும் வேளாண்வணிகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.வால்மார்ட் நிறுவனத்தின் பேராசை பிடித்த வர்த்தக நடைமுறைகள் குறித்து உலகம் முழுவதற்கும் நன்கு தெரியும். இது உலகில் உள்ள கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்களை அழித்து ஒழித்துவிட்டது. இந்தியாவில், ஐந்து கோடி குடும்பங்களுக்கும் மேல் சில்லரை வர்த்தகத்தைச் சார்ந்து ஜீவித்து வருகின்றன.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடித் தலையீட்டை நாம் எதிர்த்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு அமெரிக்காவுடன் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உலகையே அழித்துவரும் இந்த பகாசுரக் கம்பெனிகள் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மான்சான்டோ பன்னாட்டு நிறுவனமானது, விவசாயிகளிடமிருந்து விதை உரிமைகளைப் பறித்ததன் மூலமாக, பல கோடி டாலர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இந்த நிறுவனம் தன்னுடைய அதீத விலையுள்ள பூச்சி மருந்துகளின் மூலமாக உலகச் சந்தையையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது. அவ்வாறு இந்திய விவசாயிகளையும் கொள்ளையடிக்க இப்போது அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் வழியாக, இந்திய விவசாயிகளுக்கு எதிராக ஒரு யுத்தத்தையே நடத்தி வருகிறது.
உதாரணமாக, அமெரிக்க அரசாங்கத்தின் மிகவும் மான்யவிலையில் உற்பத்தி செய்யப்பட்ட மிகவும் மலிவான விலையுள்ள பருத்தி, இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மேலும் விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுப்பது அதிகமாகும்.
மக்கள் விரோத உலகமயக் கொள்கைகளை உந்தித்தள்ள ...இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கிடையேயும் ஒரு போர்த்தந்திர பொருளாதாரக் கூட்டினை வளர்த்திட (வடி னநஎநடடியீ ய ளவசநவநபiஉ நஉடிnடிஅiஉ யீயசவநேசளாiயீ), இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதற்காக இந்தக் கூட்டு? ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட முடியாது தத்தளிக்கும் நாட்டில் உள்ள 77 சதவீத உழைக்கும் மக்களுக்கு உதவுவதற்காகவா? நிச்சயமாக அல்ல. இந்தக் கூட்டமைப்பானது முதல் கட்டமாக ஏற்கனவே தன்னுடைய 30 பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில் 21, அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவதற்கான அனுமதி கோரியவையாகும். அவற்றின் கோரிக்கைகள்:எ சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுஎ கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீடுஎ இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடுஎ நிதித்துறையை திறந்து கொள்ள அனுமதிஇந்த அமைப்பிற்கு சட்ட அங்கீகாரம் இந்திய அரசால் கொடுக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடாகும்.இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டபின், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தங்கள் கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.மனிதாபிமானமற்ற நவீன-தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து கடுமையாகப் போராடிவரும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை, இந்த ஒப்பந்தமான மேலும் கடுமையான முறையில் பாதிக்கும்.அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாதேமேற்கண்ட காரணங்களுக்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டாம் என்று கோரி வருகின்றன. இந்த பேரமானது, அணுஎரிசக்தி பேரத்தோடு நின்றுவிடாது. நம் நாட்டு மக்களின் அனைத்து அம்சங்களிலும் அமெரிக்கா தலையிடுவதற்கு வகை செய்யும் ஒரு ஆரம்பமேயாகும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் தொழிலாளர் - விவசாயி - ஊழியர்களின் நலன்கள் அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாவதற்குக் கொண்டு செல்லும்.
இந்த பேரத்தை நாம் கடுமையாக எதிர்ப்பதனால், மார்க்சிஸ்ட் கட்சி மீதும் இடதுசாரிக் கட்சிகள் மீதும் இழிவான முறையில் துஷ்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொய்களைப் பரப்பிடுவதில் சாமர்த்தியசாலிகளாக உள்ள பலரை அமெரிக்கா தன் நண்பர்களாகக் கொண்டுள்ளது என்பதை நாமறிவோம். ஏழை எளிய மக்களின் உரிமைகளை, நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் ஒளிமயமான பாரம்பர்யத்தைப் பெற்றவர்கள் நம் நாட்டு மக்கள்.
இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு தினத்தைக் கொண்டாடும் இந்த சமயத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று, இந்த அரசாங்கத்தைக் கோருவோம்:நாட்டு மக்களுக்குக் கேடுபயக்கும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடராதே!குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அமல்படுத்து!நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரின் குரலுக்கு செவிசாய்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் தமிழாக்கம். தமிழில்: ச. வீரமணி