June 02, 2006

இடஒதுக்கீடும் - காந்தியடிகளும்

பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை நம்பர் 21, 1947இல் காங்கிரசு ஆட்சி அமல்படுத்தியது.


பார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர். காந்தியாரை நேரில் அணுகி,

"எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி. இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார். கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்."




காந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித்துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம் இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.


காலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்குத் தனிச் சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.


இது ‘பிராமண துவேஷ’ காரியமன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்சகாலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியர் தந்த முதல் சூடு இதுதான்.
ஜூன் 1, 2006

9 comments:

Muthu said...

மகாத்மா காந்தி அந்த காலத்திலேயே ரொம்ப கடுமையாக பேசி இருக்கிறார்.

(தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயமா வேற இருக்கே)

சந்திப்பு said...

நன்றி முத்து. ஜெயக்குமார் அரசியல் நாகரீகம் கருதி தங்களது கமெண்ட் இங்கே தடை செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் நாகரீகம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

சந்திப்பு,
இது காந்தியின் வார்ததைகளாகவே இருக்கட்டும். பிராமணர்கள் உஞ்சவ்ருத்தி செய்வதற்கும், மணி அடிப்பதற்கும் கூட ஏன் போட்டி? வருமானம் கூடக் கிடையாதே? மேலும் பிராமணர் என்று நீங்கள் கூறும் எல்லாரும் உஞ்சவ்ருத்தி செய்வதும், மணி அடிப்பதும் கோவில் கர்ப்பக்கிருஹத்திற்குள் போவதும் முடியாது.முதலில் அதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து. உங்களுக்குப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் தான் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

இரா.சுகுமாரன் said...

இது காந்தியின் வார்ததைகளாகவே இருக்கட்டும். பிராமணர்கள் உஞ்சவ்ருத்தி செய்வதற்கும்,

மணி அடிப்பதற்கும் கூட ஏன் போட்டி? வருமானம் கூடக் கிடையாதே?

அப்பரமா ஏங்க அந்த கோயில்ல இரூக்கிறாங்க?.
அர்ச்சனைசீட்டு ரூ10/-
சிறப்பு அபிசேகம் ரூ1000/-
பெளர்ணமி அபிசேகம் ரூ750/-
அப்படி இப்படின்னு வரகாசெல்லாம் என்னதான் பன்றேள்.
சூடம் காட்டும் போது 2,5,10 எனவருமானம் என்கே போகிறது.

இது எல்லாம் இல்லைன்னா? எனய்யா? கோயில்ல இருக்கிறீங்க உடனே அவாள் எல்லாம் கோயில காலி பண்ணுங்க.

Anonymous said...

Sir, all that goes to the government, not to the priests.
The govt. collects the money
and priests get a meagre salary.

Anonymous said...

அர்ச்சனைசீட்டு ரூ10/-
சிறப்பு அபிசேகம் ரூ1000/-
பெளர்ணமி அபிசேகம் ரூ750/-
I meant this.

Geetha Sambasivam said...

சுகுமாரன்,
இவ்வளவு தெரியும் உங்களுக்கு அந்த அர்ச்சனைச் சீட்டு விவகாரம் அறநிலையத் துறையின் ஏற்பாடு என்றும் அர்ச்ச்கர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதும் தெரியாமல் போனது வேடிக்கைதான். இன்றைய செய்திப் பத்திரிகையில் கூட அறநிலையத் துறை ஊழியர் ஒருவர் கடவுள் தரிசனத்திற்கு அரசு வசூலிக்கும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் குறைக்கும்படியும் கேட்டிருக்கிறார்கள். கேட்டு இருப்பது அர்ச்ச்கர் யாரும் மில்லை. கோயில் நிர்வாகிகளில் ஒருவர்தான்.தட்டில் போடும் வருமானமும் கோவில் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படும். இதற்காகவ்வவது ஒரு முறை எல்லாக் கோயில்களுக்கும் சென்று தீர விசாரித்து விட்டுப் பின் எழுதுங்கள். அர்ச்ச்கர்கள் எல்லாம் அரசு ஊழியர்களும் இல்லை. அவர்களுக்குக் கோவில் மூலம் கிடைப்பது மிகவும் குறைவான வரு்மானம் தான்.அர்ச்ச்கர்களுக்குக் கோவிலின் நிர்வாகத்தில் எந்த அதிகாரமும் கிடையாது. எந்தக் கோவிலில் போய் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்.

Geetha Sambasivam said...

சும்மா ஒரு சமூகத்தைப் பிடிக்கவில்லை என்பதால் உண்மைக்குப் புறம்பான வார்ததைகளைக் கூறக்கூடாது.

Anonymous said...

Geetha do you expect that these left and dravida movement fanatics
will understand.The left will come to street to protect interests of
labor in organised sector including
officers.The dravida movement will
protect interests of rich and super
rich like the marans and ramadosses.When it comes to abusing
brahmins they will come together.when it comes to doing anything against the interests
of 'forward' castes they will act
together.