w.அகில உலக அதிமுக தலைவி அம்மா, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகரில் அனல் வேக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நானும் கூட, அம்மாவின் பிரச்சாரத்திற்கு எந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது, என்று அறிந்து கொள்ள விரும்பியிருந்தேன். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு அலுலவகத்தில் பணிகளை முடித்து விட்டு, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன், தி.நகர் - வெங்கட்டநாராயணா சாலையில் உள்ள - திருப்பதி பெருமாள் கோவில் அருகில் உள்ள சந்திப்பு அருகே செல்லும் போது, காவல்துறையினரின் கண்ணியமான கெடுபிடி அதிகமாக இருந்தது. புரிந்து விட்டது. பழம் - நழுவி பாலில் விழுந்ததுபோல் இருந்தது. எல்லாம் அம்மாவின் வருகைக்காக 15 நிமிடத்திற்கு முன்பே டிராபிக்கை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டிருந்தனர்.
அம்மாவை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் சிலர் - சிலர் மட்டுமே (குறிப்பாக பெண்கள்) சாலையோராத்தில் உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். அம்மா வருவதற்கு முன் காவல்துறையினரின் எச்சரிக்கை ஒலியோடு, மிக வேகமாக பல வேன்கள் வந்தது. எல்லோரும் அம்மா எந்த வேனில் இருப்பார்கள் என்று ஆவலோடு பள, பளவென்று ஒளி வெள்ளத்தில் வந்து கொண்டிருந்த வேனையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!விஷயம் இதுதான். அம்மா அதற்கு முன்னால் சென்ற வேனில், லைட்டையெல்லாம் அணைத்து விட்டு, இருட்டில் முகம் தெரியாமல் - போய் விட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாலைகளில் மக்கள் ஆவலோடு இருக்கும் போது, அதுவும் தேர்தல் அனல் தக, தகவென்று வீசிக் கொண்டிருக்கும் போது, இருட்டுக்குள் ஏன் ஒளிந்து கொண்டார் என்று தெரியவில்லை!
மொத்தத்தில் அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள். இது வித்தியாசமாக இருக்கிறது - அம்மாவின் தேய்பிறையைத்தான் இந்த அணுகுமுறை காட்டுகிறது. ஒரு வேளை இதுதான் அம்மாவின் பக்குவமோ! இரண்டாண்டு முதல்வராக இருந்தவர் இரண்டு வருடத்திற்கு பின்தான் பக்குவமடைந்திருக்கிறார்! இதிலும் ஜெயம்மாவுக்கு முதலிடம்தான்.

3 comments:
அட நானும் தெரியாத்தனமா தி.நகர் வந்துட்டேனுங்க,நேத்தக்கி 5 நிமிச வேலைக்கு கிட்டத்தட்ட 50 நிமிசம் போக்குவரத்து நெரிசலிலே இன்ச் பை இன்ச் நகர்ந்தேனுங்க (50 நிமிசமும் வண்டியை ஆப் செய்ய முடியவில்லை பெட்ரோல் வேஸ்ட் :( )
கவலைப்படதீங்கப்பா அம்மா அட்ச்சிக்கு வந்தா அல்லாருக்கும் பெற்றோல் இலவசமா தருவாங்க....
எதுக்கு சார் பெட்ரோல்? இந்த ஆட்சியை மக்கள் பார்த்தது போதும் என்று.... நாட்டுக்கவா...?
காத்து! அசத்திட்டீங்க....
Post a Comment