May 30, 2006

அமெரிக்காவிலும் இடஒதுக்கீடு

மண்டல் 2-வை எதிர்த்து ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் - இயக்கங்கள் நடத்தி வருகின்றனர். திறமைக்கு மதிப்பு இருக்காது என்றும், தரம் போய் விடும் என்றும் அலறி வருகின்றனர். தங்களுக்கு ஜாதி தேவையில்லை என்று பேசி வருகின்றனர். சமத்துவத்தை இந்த அரசு சாகடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு இன்போசிசு நாராயணமூர்த்தி உட்பட பல்வேறு பெரும் வர்த்தக நிறுவனங்களும், மீடியாக்களும் ஒத்தூதி வருகின்றது. நமது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இத்தகைய உயர்ஜாதி மாணவர்கள் பெரும் பகுதியினர், தங்களது படிப்பை முடிப்பதற்கு முன்பே அமெரிக்க மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதற்கு தயாராகி விடுகின்றனர்.

இன்றைக்கும் நமது மக்களின் வரிப்பணத்தில் பயின்றி நூற்றுக்கணக்கான உயர் கல்வி மாணவர்கள் அமெரிக்காவில்தான் தங்களது பிழைப்பை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஏன் பலரும் அமெரிக்க பிரஜையாகவே மாறிவிட்டனர். கிரீன் கார்ட் சிட்டிசனாகி விட்டனர்.

எனவே, இத்தகைய அறிவாளிகளுக்கு அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவர்களுக்கு இப்போது இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாது? உலகமயமாக்கல், ஓருலகதத்துவம் என எக்கச்சக்கத்திற்கு பேசித் தெரியும் அமெரிக்கா உலக சாம்ராஜ்ஜியத்தின் மூடி சூடா மன்னாக திகழ்கிறது. இத்தகைய அமெரிக்காவிலே கூட இன்றைக்கும் அங்கிருக்கும் கருப்பின மக்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு கிட்டத் தட்ட 40 வருடங்களாக அமலாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து விதத்திலும் முன்னேறிய ஒரு நாட்டில், உலக பொருளாதாரத்தையே தன்னுள் வைத்துக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்து வரும் அமெரிக்காவில் கூட கறுப்பின மக்களுக்கும், செவ்விந்திய மக்களுக்கும் முழுமையான விடுதலை (வெள்ளையர்களுக்கு நிகராக) கிடைக்கவில்லை. இதற்காகத்தான் இந்த மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என பல துறைகளிலும் அபர்மேட்டிவ் ஆக்ஷன் (Affirmative Action) என்ற பெயரில் அங்கே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களாக இருக்கும் மிக்சிகன் பல்கலைக் கழகம், மாசாசூட்சு பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு மருத்துவ பல்கலைக் கழகங்களில் 16 சதவீதம் இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல; ஆப்பிரிக்காவிலும் இதுபோன்ற திட்டம் செயல்படுகிறது.

இங்கே போராடும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் ஏதோ இந்தியாவில் மட்டும் திட்டமிட்டு இவ்வாறு புகுத்தப்படுவதாகவும், திறமைக்கு வேட்டு வைப்பதாகவும், திறமை கொலை செய்யப்படுவதாகவும் கூக்குரலிடுவது வேடிக்கையானது. தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்குத்தான் இது பயன்படுமே தவிர நமது நாட்டில் சமூக நீதி தழைத்திட, கிட்டத்தட்ட 3000 வருடங்களாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்விழந்து இருக்கும் மக்கள் சமூகத்தில் கல்வியிலும், வேலைவாய்பிலும், அதிகாரத்திலும் ஒரு சமத்தன்மையை எட்டிட இத்தகைய இடஒதுக்கீடு அவசியமானது. எனவே இதனை குருட்டுத்தனமாக எதிர்க்கும் மனோபாவத்தை விட்டு, இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தின் பக்கம் இருப்பதே ஈக்குவாலிட்டி என்று அவர்கள் முழங்குவதற்கு உண்மையான அர்த்தமாக அமையும்.

தங்களை அறிவாளிகாளக, திறமை சாலிகளாக பறைசாற்றிக் கொள்ளும் உயர்ஜாதி மாணவர்கள், மருத்துவர்கள் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நடைமுறைகளையும், நம்முடைய நாட்டில் நிலவும் தீண்டாமை போன்ற ஜாதிய ஏற்றத் தாழ்வுகளையும், சமூக - பொருளாதார - கல்வி ரீதியான ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் போராடுவதைப் பார்க்கும் போது, அவர்களது திறமை மிக குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறதோ என்ற சந்தேசத்தை தோற்றுவிக்கிறது.

15 comments:

Anonymous said...

இங்கு ஐ.ஐ.டியில் நம் வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு சமத்துவம் பேசும் பிராமண குஞ்சுகள் ஒவ்வொருவரும் பத்து தலித் மாணவர்களை தத்து எடுத்து வளர்ப்பார்களா?

சந்திப்பு said...

அனானி உங்களது எதிர்பார்ப்பு நியாயமாக இருக்கலாம். ஆனால், தலித் மக்களோ, பிற்படுத்தப்பட்ட மக்களோ அவர்களிடம் யாசகம் வேண்டி நிற்கவில்லை. நம் அரசு மக்களிடையே ஒரு சமத்தன்மையை ஏற்படுத்திட முனையும் முதல் படிக்கட்டுக்கு அவர்கள் முட்டுக் கட்டை போடாமல் இருந்தால் சரி!

ravi srinivas said...

Affirmative Action is not quota based.No body allots this much % goes to women or this much %
goes to african americans. In USA
affirmative action, diversity are
linked to non-discrimination and
equal opprtunity.The indian reservation system is discriminatory and denies equal
opportunity.The system in USA
takes into account not just race but also ethnicity,gender etc.It is very different from your caste based system.So please understand the facts before saying that USA also has reservation system.
Just because you all, including Veeramani repeat a lie, it does not
become truth.

Anonymous said...

Hi,
The only solution to this problem is quotas based on economic conditions,
1.defining economic criterias
2. if somebody claims falsly about their economic status,their entire wealth including their nearst relations (father, mother, son, daughther) should be seized and they should be given death sentence.

SK said...

நேர்மையான நோக்கத்துடன் எழுத ஆரம்பிக்கப்பட்ட இப்பதிவு, தேவையின்றி, வழக்கம்போல ஒரு சாராரை மட்டுமே குறி வைத்துத் தாக்கும் 'பத்தோடு பதினொன்றாவது' பதிவாக மாறியது குறித்து வருந்துகிறேன்!

என்னமோ, இந்த சாரார் மட்டுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்று மகிழ்வது போன்ற ஒரு மாயபிம்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.

பார்ப்பனக் குஞ்சுகள் முதல் தலித் பிஞ்சுகள் வரை யாருமே இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது, இங்கிருப்பவரானால், உங்களுக்குப் புரியும்.

மேலும் சிறப்பான, நேர்மையான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

Boston Bala said...

Based on my personal experiences in US, I have logged my thoughts here: Snap Judgement

---மாசாசூட்சு பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு மருத்துவ பல்கலைக் கழகங்களில் 16 சதவீதம் இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது---

Can you please point me to the source of this statistic?

சீனு said...

//இதற்கு இன்போசிசு நாராயணமூர்த்தி உட்பட பல்வேறு பெரும் வர்த்தக நிறுவனங்களும், மீடியாக்களும் ஒத்தூதி வருகின்றது.//
நான் அறிந்த வரையில், IT-ல் இது தோதுப்படாது என்றே நினைக்கிறேன்.

நற்கீரன் said...

Ravi Srinivas, one clear cut way Affirmative policies are implemented is through quotas. It may not be universal as the Indian system proposes to be, but quota based system for African Americans exist in various universities.

In Canada, every university gives special considerations to abroginal studens, students with disability etc.

You are right that diversity policies are mor aligned with non-discrimination. But, more and more universities are taking an active diversity programs, where they are seeking to be diverse.

சந்திப்பு said...

எ°.கே. தங்களது கூற்றுக்கு நன்றி. தனிப்பட்ட பிரிவினை தாக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. கொள்கை அடிப்படையில்தான் இதனை முன்வைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட பிரிவினை தாக்கும் எண்ணம் இல்லை. இந்திய சமூகத்தில் உள்ள ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், முரண்பாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் தீர்க்கப்படாததன் விளைவே இன்றைய இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. மத்திய அரசு தற்போது வழங்க முன்வந்திருக்கும் இடஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இது எந்த பிரிவினருக்கும் எதிரானதல்ல. நமக்குப் பின்னால், தொலை தூரத்தில் இருப்பவர்களை நம்மோடு சேர்ந்து முன்னேறுவதற்கு கொடுக்கப்படும் வாய்ப்பே இது.

bonapert said...

This is one of my article on Reservation:
http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html

I have no illusion that reservation will do magic in Indian society.

But still I oppose those who are anti reservation. Because majority of the opposition has its inclination towards uppercaste affinity and the afraid of loosing opportunities to other caste.

These groups we can easily identify.

They will oppose Resevation and even suggest some solutions but never do anything worth for the solutions. They will just raise their voice or take themself to street only when reservation debate arouses. other time they won't bother about the problems that require their suggested solutions.


And apart from this:

There was a debate about Hindhu religion's people friendliness in Vajra-sankar' blog. I have published an posting of the argument.

I would like to hear your comment on that. That will enrich my future such endevors.

http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html

Anonymous said...

when they removed affirmative action in berkley the african american student population came down immdly. affirmative action is indirect form of quota.

whites are about "50%" in US. they are not 3-5% group occupying 90% of the seats. 'Yet' they have all these programs to uplift the remaining 50%.

In India the top 5% hardly cares about the remaining 95% of the population.

Anonymous said...

This article gives a good overview.

http://www.hindu.com/op/2006/06/04/stories/2006060400781600.htm
U.S. affirmative action & our reservation

VARAHASIMHAN SRINIVASAN

In that country, fixing quotas or awarding preferential extra points is not allowed

IN THE recent debate on reservation, many writers have cited the case of the affirmative action programme being followed in the United States. There is a prevailing perception in India that the U.S. programme is similar to the reservation programme in India.

The two programmes have altruistic motives of uplifting the discriminated people. But the way the U.S. implements its programme is different from the way India does its.

Fundamental differences


There are at least five fundamental differences:

1. The affirmative action programme and the ensuing preferential treatment in the U.S. is applicable to women too, in addition to disadvantaged races and ethnicities. In India, reservation is based only on castes.

2. In the U.S., fixing quotas or awarding preferential extra points is not allowed. This is a crucial difference from the Indian scenario where quotas are fixed. The U.S. Supreme Court in two historical judgments upheld the concept of considering race a factor in choosing candidates but unequivocally deemed unlawful fixing quotas or granting extra points for the disadvantaged groups.

In 1978, in Regents of the University of California v. Bakke, 438 U.S. 912 (1978), the Supreme Court ruled in favour of racial preference for disadvantaged groups but struck down as unlawful the University Medical School's policy of reserving 18 per cent of the seats.

In 2003, as cited by V.K. Natraj ("The reservation debate: missing components," The Hindu, May 27), the Supreme Court upheld as lawful the University of Michigan's policy of racial preference in law school admissions (Grutter v. Bollinger, 539 U.S.(2003)) because the programme furthered a compelling interest in obtaining "an educational benefit that flows from student body diversity." But it struck down as unlawful the university's policy of granting points based on race and ethnicity.

Further, in the Presidential Directive issued to executive departments and agencies on July 19, 1995, the White House asked for elimination/reformation of any policy that (a) creates a quota; (b) creates preferences for unqualified individuals; (c) creates reverse discrimination; or (d) continues even after its equal opportunity purposes have been achieved.

3. In India, all political parties have been in favour of caste-based reservation. And constitutional amendments that are in contrast to judicial decisions have been made. In the U.S., judicial decisions serve as framework for implementing affirmative action policies.

Further, in the U.S., individual states and university boards are free to legislate their own laws with respect to affirmative action in institutions that are within their scope. In 1995, Regents of the University of California voted to end affirmative action programmes on all its campuses.

In 1996, California's Proposition 209 ended all public-sector affirmative action programmes in the state in employment, education and contracting though it permitted gender discrimination. In 2000, Florida banned affirmative action.

4. Another important difference is the requirement of institutions to "establish a process to review the effectiveness and fairness of affirmative action programmes on a continuing basis" — this requirement was communicated in the Presidential Directive dated July 19, 1995 as per the "decision in (1994) Adarand Constructors v. Pena (that) requires strict scrutiny of the justifications for, and provisions of, a broad range of existing race-based affirmative action programmes."

5. In the U.S., universities have taken upon themselves the onus of increasing the representation of disadvantaged groups (unlike universities in India where there is resistance).

But even in the pre-2003 era when awarding preferential points was legal, U.S. universities usually awarded points only to as many individuals from disadvantaged groups as would be needed to beef up their population to their demographic proportion.

For example, members from ethnic group A would be selected even if they scored lower SAT points but only if their open competition selection resulted in numbers lower than their population percentage. So if ethnic group A formed 9 per cent of the general population but formed only 4 per cent of the selected students, then SAT points for members of A were added in such a way that 5 per cent more students from A were selected.


But in India, due to fixed quotas, people who belong to a reserved caste will get their reserved slots and also slots available in open competition.

தமிழ் சமத்துவம் said...

TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAMIL BRAHMINS/FORWARDS ARE DRIVEN OUT
KARUNANIDHI FAVOURING HINDI-SPEAKERS WHILE HATING A SECTION OF TAMILS


Sir

I wish to bring to your attention that many backward castes, most backward caste listed in Tamil Nadu's reserved caste category speak language other than Tamil. The list is seen Tamil Nadu website http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

These includes countless communities where Telugu is spoken at home, also several Kannada speaking caste and Urdu Muslim communities who essentially speak Hindi.

The chairman of Tamil Nadu's minority commision is Pyarelal Jain appointed by Karunanidhi, a Hindi-speaking Jain.

Tamil Brahmins despite being the "biggest scoundrels" according to Karunanidhi are still Tamils. How is that Karunanidhi is reaching out even to North Indians for votes by printing Hindi pamphlets in last election. Why is DMK hating Tamil Brahmins but at the sametime reaching out for North Indians residing in TN.

Many CBSE schools in Tamil Nadu continue to impose Hindi (as compulsory subject), while Tamil can be conveniently skipped. This is sharp contrast to Karnataka where all schools including CBSE school which dont teach Kannada as compulsory subject will be de-recognized. Karunanidhi has come to power the 4th time now. Still the Hindi impositition in CBSE flourishes.

Why are Tamil Nadu's ports of entry i.e airports and ports staffed by people who speak Hindi and dont know Tamil?

Why has Karunidhi failed on his promise to have mandatory Tamil annoucements on all Tamil Nadu flights.

Recently there was court case against use of Tamil as official language in TN and also opposition. Many people who oppose this are also covered under Tamil Nadu reservation.

Why are evils such as 2-tumbler system and seperate well system so prevelent in Southern TN where there is virtually no 'scoundrel' Brahmins left. It seems that amoung BC caste there is lot of descrimination and Dalits are still suffering while the bloody TN govt, Karunidhi etc are wantonly ignoring and supporting this.

It all looks like that the reservation policy is the most convenient means by "Tamil" politicians to destroy Tamil, Tamil society for their personal gains.

Tamil patriots would have done something great if they had reservation for one Tamil caste in TN rather than commercial certificates which many non-Tamil speaker can purchase.

Nandri Vanakkam
தமிழ் சமத்துவம்
http://i.am/tamil


அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Anonymous said...

Hi There I'd like to congratulate you for such a great quality site!
I was sure this is a perfect way to make my first post!

Sincerely,
Robin Toby
if you're ever bored check out my site!
[url=http://www.partyopedia.com/articles/veggie-tales-party-supplies.html]veggie tales Party Supplies[/url].

Anonymous said...

[url=http://kfarbair.com][img]http://www.kfarbair.com/_images/_photos/photo_big7.jpg[/img][/url]

בית מלון [url=http://www.kfarbair.com]כפר בעיר[/url] - שירות חדרים אנו מספקים שירותי אירוח מגוונים כמו כן ישנו במקום שירות חדרים המכיל [url=http://www.kfarbair.com/eng/index.html]אחרוחות רומנטיות[/url] במחירים מפתיעים אשר מוגשות ישירות לחדרכם!

לפרטים אנא לפנות לעמוד המלון - [url=http://kfarbair.com]כפר בעיר[/url] [url=http://www.kfarbair.com/contact.html][img]http://www.kfarbair.com/_images/apixel.gif[/img][/url]