May 29, 2006

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யோகா? வாழ்விக்கும் கலையா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யோகா கலையில் வல்லுனர், இவரது யோகாவுக்கு வாழும் கலை என மிக அழகாக பெயர் சூட்டியுள்ளார். ஆனால் இவரது சிந்தனை மக்களை வாழ்விக்கும் கலையாக இல்லாமல் வீழ்த்தும் கலையாக இருப்பதுதான் வேடிக்கை.

பலருக்கு மூக்கு மேல் வியர்க்கலாம். ச்சீ. ச்சீ என்ன இது... நம்ம ரவிசங்கர் ஜியைப் பற்றி இப்படி யெல்லாம் எழுதுறாங்களேன்னு வருத்தம்கூட இருக்கலாம்.

கீழே படியுங்கள்! நீங்களே முடிவுக்கு வாருங்கள்...

வாழும் கலை அமைப்பின் நிர்வாகி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இருந்து மே 25 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்:
என்ன தெரியுமா?

"உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீடு சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது.குறிப்பிட்ட ஒரு ஜாதியில் பிறந்ததே ஒருவருக்கு சாபமாக அமைந்து விடக்கூடாது. அனைத்து

சமுதாயங்களிலும், எல்லா ஜாதி மற்றும் பிரிவிலும் ஏழைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உரிய அதிகாரமும், உறுதியான பொருளாதார ஆதரவும் வழங்கப்பட வேண்டியது அவசியம். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை களைந்து ஒற்றுமையை உருவாக்கும் நடவடிக்கைகளே இந்தியாவுக்கு இப்போதைய தேவை.
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேற்றுமைகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் சுயகவுரவத்தையும் பாதிக்கும். ஜாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை அரசியல்வாதிகள் பிரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் - மே 26, 2006, சென்னை பதிப்பு.
உலகமயமாக்கல் சமூகத்தில், வேக வேகமாக மாறிவரும் நவீன உலகில் நம் மக்கள் அமைதியிழந்து வருவதோடு, பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இதையே மூலதனமாகக் கொண்டு, அம்மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதாக கூறிக் கொண்டு ஆண்டுக்கு பல நூறு கோடிகளை சம்பாதித்துக் கொண்டு, உலகம் முழுவதும் இதற்காக பல்வேறு ஏஜண்டு களையும், கிளைகளையும் நிறுவிக் கொண்டு செயல்படுவர் அவரது தொழிலை மட்டும் நடத்திக் கொண்டிருந்தால் யாரும் எதுவும் கூறுப் போவதில்லை. இங்கே இடஒதுக்கீடு குறித்து அவரது கூற்று தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டு, உயர்ஜாதியினருக்கு (இவர்கள்தான் இவரது பக்தர்கள்) வக்காலத்து வாங்குவதுதால் நாம் இவருக்கு பதில் கொடுக்கவேண்டிய சூழலில் உள்ளோம்.

"குறிப்பிட்ட ஒரு ஜாதியில் பிறந்ததே ஒருவருக்கு சாபமாக
அமைந்து விடக்கூடாது."

இவ்வாறு கூறியிருப்பது ஏதோ தீர்க்க தரிசனம் என்றெல்லாம் புலங்காங்கிதம் அடைந்து விட வேண்டாம். இதைத்தான் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்து விட்டதாலேயே அவர்கள் பார்க்கக்கூடாதவர்களாகவும், தொடக்கூடாதவர்களாகவும், பொதுக்கிணற்றில், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாதவர்களாகவும், கல்வியே மறுக்கப்பட்டவர்களாகவும் இச்சமூகத்தில் 3000ஆம் ஆண்டுகளாக நிலவுகிறதே இது குறித்து என்றைக்காகவது ரவிசங்கர்ஜி வாய்திறந்தது உண்டா? இப்படி சமூகத்தில் எற்றத்தாழ்வை உருவாக்கிய மனுவுக்கு எதிராக கருத்துச் சொன்னது உண்டா? இன்றைக்கும் கோவில்கள், கல்விக்கூடங்கள், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரங்கள் என அனைத்தையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள உயர்ஜாதியினருக்கு ஏதாவது அறிவுரை சொன்னது உண்டா?

இடஒதுக்கீடு என்று அமலாக்குவதற்கு மத்திய அரசு முனையும் போது, உயர்ஜாதி இந்துக்களுக்கு ஆதரவு இவர் வாய் திறப்பதன் நோக்கம் இப்போதுதான் புரிகிறது!

"சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேற்றுமைகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் சுயகவுரவத்தையும் பாதிக்கும்."

ஆம் ரவிஜீ நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். ஆனால் யாருக்கு இதனைச் சொல்ல வேண்டுமா? அவர்களுக்குச் சொல்வதுதான் இங்கே பிரச்சினை! இடஒதுக்கீடு சுயகவுரவத்தை பாதிக்கும் என்று சொல்கிறீர்கள்! யாருடைய கவுரவும்? 3000ஆம் ஆண்டுகளாக சமூகத்தின் சொத்து முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு கால் மேல், கால் போட்டுக் கொண்டு இருக்கும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னமும் அந்த இடத்தை விடாமல், தக்கவைத்துக் கொள்வதற்காக போராடுகிறார்களே அவர்கள் இப்போது இடஒதுக்கீடு வேண்டாம் என கேட்பதுதான் இழுக்கான செயல்!

மாறாக, மத்திய அரசின் இடஒதுக்கீடு யாசகம் அல்ல. அது உரிமை! 3000 ஆம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமை! இந்த உரிமையையும் தட்டிப்பறித்து விடத் துடிக்கும் உங்கள் சித்தாந்தம் யாரை வாழ்விக்கப் போகிறது? நீங்கள் வாழும் கலை வல்லுனரா? அல்லது பெரும் பகுதி மக்களை வீழ்த்தும் கலையில் வல்லுனரா? ரவிஜீயே பதில் சொல்!

இறுதியாக ஒரு கேள்வி? சமீபத்தில் மரணமடைந்த கோவை - வேதாந்த மகிரிஷி அவர்கள் தன்னுடைய யோகாவை எந்தவிதமான பணத்தையும் எதிர்பார்க்காமல் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் இந்த கலை மிக எளிமையாக சேர வேண்டும் என்பதற்காக இலவச சேவை செய்து வருகிறது அவரது யோகா மையங்கள். இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணடைந்து வருகின்றனர். உங்களைப் போல் டிஜிட்டல் விளம்பரங்கள் எல்லாம் இந்த மையங்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உங்களது வாழும் கலை யாருக்கு பயனளிக்கிறது. காசு உள்ளவர்களை வாழ்விப்பதற்கே உங்களது இதுவரை பயன்பட்டுள்ளது. என்றைக்காவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உங்களது கலையை இலவசமாக பயிற்று வித்தது உண்டா? பெரும் திருமண மண்டபங்களிலும், ஏ.சி. ஹாலிலும் அல்லவா உங்களது யோக வித்தை காட்டப்படுகிறது. இதுதான் உங்களது சமூக நீதி! எனவே உங்களைப் போன்றவர்களுக்கு உண்மையான சமூக நீதி தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதுவும் கருப்பின மக்களின் மண்ணில் இருந்து இந்த அறிக்கையை விட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று!

7 comments:

Samudra said...

//பெரும் திருமண மண்டபங்களிலும், ஏ.சி. ஹாலிலும் அல்லவா உங்களது யோக வித்தை காட்டப்படுகிறது//

அவரது International Association for Human Values (IAHV) மூலம் சுமார் 25,300 கிராமங்கள் சுயசார்பு அடைய 1997ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

johan -paris said...

ஆம்! இதிலென்ன சந்தேகம்!
அவரையும்; அவர் உள்ச்சுற்றுக் கூட்டத்தையும்
வாழ்விக்கும் "கலை "தான்!!!
கொஞ்ச நாளில கையை புடிச்சான்,காலைத் தடவினான் ;கதை வராமல் இருந்தால் சரி!!
யோகன் -பாரிஸ்

neo said...

ரவிசங்கர் மற்றுமொரு ஆர் எஸ் எஸ் ஒற்றர்தான்.

2004-ஆம் ஆண்டு கோல்வால்க்கரைப் போன்று இவர் 'கலிகி'யில் பாஜக-வை ஆதரித்து 2004 தேர்தலில் பாஜக்-வே வெற்றிபெறும்; பெறவேண்டும் என்று பேசியிருந்தார்.

பின், பாஜக-வின் தோல்விக்குப் பின் ஸ்ருதியை மாற்றி 'ஆன்மீக ஞானி' போலச் பேசி வருகிறார்.

இவையெல்லாம் சனாதனப் பாம்புகளே; கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தால் "ஆதர்ச சனாதன" பார்ப்பனீய இந்தியாவை ஏற்படுத்த உதவும் ஒற்றுப்ப்டைகளாகவே இவர்களின் 'மடங்கள்' செயல்படும்.

மேட்டுக்குடி, மேல்சாதியினரே பெரும்பாலும் இவர்களின் சீடர்களாய் இருப்பது - varna consolidation-தான் நடக்கிறது என்பதை உறுதி செய்கிறது.

இந்த லட்சனத்தில் யாழ்ப்பானத்தில் சென்று இவர் பேசியிருக்கிறார்.

ஒரு சில ஈழத் தமிழர்களும் இதுபோன்ற பார்ப்பனீய ஒற்றர்களின் 'மாய' வலையில் வீழ்வது விசனத்துக்குரியது.

Sivabalan said...

எல்லா விசயங்களிலும் நல்லதும் உண்டு கெட்டது உண்டு.

இடஒதுக்கீடு தொலை நோக்கு பார்வையில் அனுகவேண்டும்.

நிச்சயம் இடஒதுக்கீடு உடனடியாக அமல் படுத்தப்படவேண்டிய ஒன்று.

சீனு said...

//சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேற்றுமைகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் சுயகவுரவத்தையும் பாதிக்கும். //
எனக்கென்னவோ அவர் கூறியது உண்மை என்றே நினைக்கிறேன்.
(உடனே என்னை ஒரு குறிப்பிட்ட பிறிவில் சேர்த்துவிடப் போகிறீர்கள். பரவாயில்லை.)

ravi srinivas said...

He thinks that service to public is very important and he inspires people to do so.Art of Living course is offered to all in many places in India.I dont whether he
supports BJP or not.Please dont
judge a person soley on the basis
of his/her stand on the reservation issue. There are many outstanding scholars who are critical of or skeptical of reservation for OBCs.Pls see today's Times of India
edit page.
If you have any problems with
his philosophy or teachings or
yogic practices pls make a meaningful criticism.Pls stop
branding and using cliches and
stereotypes.

neo said...

ரவி,

உங்கள் 'அறிவுரைகள்' சிரிப்பை வரவழைக்கின்றன.

ரவிசங்கர் ஆரெஸெஸ்-இன் ஒற்றர் என்று நம்பு விதமாகவே அவரது செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

இந்தியச் சூழலில் சத்யசாயி பாபா முதல் பாபா ராம்தேவ் வரையிலான பல சாமியார்களுக்கும் இருக்கும் பார்ப்பன, பணக்கார மேட்டுக்குடியினர் ஆதரவு (குறிப்பாக வ்டக்கத்திப் பார்ப்பனீய மேட்டுக்குடியாளர்களின்) சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

IDRF போன்ற அமேரிக்க -மேற்கத்திய அமைப்புக்கள் இவர்களின் உன்னத ஒளிவட்டத்தைப் பெருக்கும் விதமாக எவ்வாறெல்லாம் மேற்குலகிலிருந்து நிதியத் தருகின்றன; அவை எவ்வாறெல்லாம் வர்ண அரசியல், ஆன்மிக நாஜித்தனத்துக்கு உதவ போய்ச்ச்செருகின்றன - என்பதெல்லாம் நான் சொல்லி உங்கட்குத் தெரியவேண்டுவதில்லை! (வேறொரு சூழலில் நீங்களே இதையெல்லாம் எழுதிக் கிழித்துவிடக் கூடிய வாய்ப்பு இப்போது இருப்பதை மறுப்பதற்கில்லை! ;) )

சாமியாருக்கு மேட்டுக்க்குடியினரின், நலன் காக்க மட்டுமே பயன்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு விஷயத்தில் என்ன வேலை? இதிலே Times Now- தொ.காட்சியில் வந்து பேட்டி வேறு கொடுக்கிறார்!

இன்று பாஜக (அதன் தாய் ஆர் எஸ் எஸ்-ன் உத்தரவுப்படி) - OBC இட ஒதுக்கீடு வேண்டும்தான் - ஆனால் - என்று இழுத்துவிட்டு - முற்பட்ட சமூகத்தினருக்கும் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பூனைக்குட்டியை வெளியில் எடுத்துவிடுகிறது!


>> Pls stop
branding and using cliches and
stereotypes. >>

இட ஒதுக்கீடு விஷயத்தில் நீங்கள் எடுத்து விடும் சில Cliches பார்க்கலாமா?

1. OBC-க்கள் உயர்வகுப்பாரைத் தாக்கும் அபாயம் உள்ளது

2. Resrvations for OBCs are against equality of opportunity and so anti-constituitonal

3. கி. வீரமணி ஒரு 'ரேசிஸ்ட்'!

4. இது இந்திய அரசு எங்கள் மீது தொடுத்திருக்கும் போர்!

(ஆவ்வ்வ்! கொட்டாவி வருது! இதுக்கு மேல லிஸ்ட் போட போர் அடிக்குது! ;) )