நான் எழுதிய ‘மே தினம்’ என்ற நூல் 2005ஆம் ஆண்டு சென்னை, பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நூலை தற்போது நம்முடைய தமிழ் வாசகர்களுக்கு படிப்பதற்காக வெளியிட வேண்டும் என்று விரும்பி, இதனை பி.டி.எப். வடிவில் தயாரித்துள்ளேன்.இதனை பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.இது குறித்த தங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
கே. செல்வப்பெருமாள்
16 comments:
Dear All: Note
Right Click the link. Then, Click 'Save Target As'.
Thankingyou,
K. Selvaperumal
வாழ்த்துகள் தோழரே...
இன்னும் பல நூல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
மிக்க நன்றி!!
சந்திப்பு, மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். உலக தொழிலாளர் போராட்டங்களிலிருந்து இன்றைய நாட்டின் நிலை வரை பலவேறு குறிப்பு புத்தகங்கள், வலைத்தளங்களை ஆய்ந்து எழுதப் பட்டிருக்கும் இந்நூல் மேதினம் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் மிக பயனானது.
மற்றநாடுகள் முன்னேறிவரும்போது,நாம் மட்டும் பிந்தங்கியிருக்க முடியாது என்று ஒரு தளத்தில் உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் நான் ஆதரித்தாலும் கம்யூனிச எண்ணங்கள் மனசாட்சியை குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
சந்திப்பு...சும்மா ஸ்கிம் பண்ணினேன் நல்ல்லா உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க..
வாழ்த்துக்கள்.
கோப்பை திறக்கும் போது File has been damaged - என்னும் பிழை காட்டி, திறக்க மறுக்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? மற்றவர்களால் பிடிஎஃப் கோப்பை படிக்க முடிகிறதா...
நன்றி முத்துக்குமரன். இன்னும் பல நூல்களை கொண்டுவர விருப்பம் உள்ளது. தங்களது ஆதரவுக்கு மிகுந்த நன்றிகள்...
-----------------------------------
நன்றி சிவபாலன், தங்களது முதல் கமெண்ட்டை வெளியிட முடியவில்லை. எர்ரர் காட்டுகிறது. அதனை கீழே கொடுத்துள்ளேன்.
-----------------------------------
நட்சத்திரம் மணியன் தங்களது ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உலகமயமாக்கலால் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. அது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் பெருக்க வைக்குமே தவிர, உள்நாட்டு சந்தைகளையும், தொழில்நுட்கங்களையும் சீரழித்து விடும். இதில் ஒரு சமத்தன்மையான போட்டி நடைபெறுவதில்லை. மேலும் கம்யூனிசம் என்பது யாரே சிலபேர் பயனடைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தத்துவம் அல்ல. உலக மக்கள் அனைவருமே இருப்பதை வைத்து சமசமாக, நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக, சமூகத்தின் அனுபவத்தில் இருந்து எழுந்த தத்துவம். எனவே இதனை யார் தற்போது மறுத்தாலும் உலக மக்களின் விடுதலைக்கு இதுவே தீர்வாக இருக்கும்.
-----------------------------------
சிரில் அலக்ஸ் தங்களது கருத்துக்கு மிகுந்த நன்றிகள்.
-----------------------------------
பூஸ்டன் பாலா. இதனை நேரடியாக ஓப்பன் செய்தால் இந்தப் பிரச்சினை வருகிறது. எனவேதான் அதனை ரைட் கிளிக் செய்து - சேவ் செய்திட்டால் சிறப்பாக வருகிறது. அப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்கள். இருப்பினும் தங்களது மெயிலுக்கு நான் இதனை அனுப்பி வைக்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே சந்திப்பு.
உங்கள் நூலை இதோ பதிவிறக்கம் செய்து கொள்கிரேன்.,நூலின் சில பகுதிகளை கட்டுரையில் எழுத (உங்கள் பெயரை சுட்டி) அனுமதி உண்டா?
ப்ரியன் --
தரவிறக்கம் செய்துவிட்டேன்...நன்றி சந்திப்பு படித்து கருத்துச் சொல்கிறேன்
----------------------------------
யெஸ்.பாலபாரதி ---
நன்றி தோழர்..
ஏற்கனவே வாங்கிவிட்ட நூல் என்ற போதும்..
வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு அனுப்ப ஏதுவாக இருந்தது.
பதிவிறக்கம் செய்து கொண்டேன்.
---------------------------------
Sivabalan --
திரு செல்வபெருமாள் (சந்திப்பு),
மிக்க நன்றி!!
நிச்சயம் படித்து பார்த்து கருத்தை சொல்கிறேன்.
-----------------------------------
ப்ரியன், பாலபாரதி, சிவபாலன் ஆகிய மூவரின் கமண்ட்டுகளை வெளியிட முடியவில்லை. என்ன காரணம் என்றுத் தெரியவில்லை. அதனால் இங்கே வெளியிடுகிறேன்.
மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வன் இது சமூகத்தின் சொத்து. நம்முடைய தொழிலாளி வர்க்கம் படைத்த வரலாறு. எனவே இதில் எந்த பகுதியை வேண்டுமானாலும் நீங்கள் தாராளமாக உங்கள் பாணியில் எழுதுங்கள். வாழ்த்துக்கள். நன்றி செல்வன்.
நண்பரே
உங்கள் நூலை டவுன்லோட் செய்ய முடியவில்லை.அந்த இணைப்பை கிளிக்கினால் கீழ்க்கண்ட பதிலே வருகிறது
HTTP1.1 STATUS 403 Remote Access to this object forbidden This file cannot be directly accessed from a remote site, but must be linked through the Brinkster Member's site.
அன்புடன்
செல்வன்
செல்வன்
நேரடியாக இதனை கிளிக் செய்தால் நீங்கள் கூறியிருப்பதுபோல்தான் வருகிறது. அதனால்தான் அந்த லிங்கின் மீது ரைட் கிளிக் செய்து, சேவ் செய்தால் நல்ல முறையில் டவுன்லோட் ஆகிறது. எனவே தயவு செய்து அவ்வாறு செய்துப் பாருங்கள். இல்லையென்றால் மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி செல்வன்
வாழ்த்துக்கள் சந்திப்பு:)
சார்
உங்கள் "மே தினம்" படித்தேன். மிக அருமை.
மிக்க நன்றி.
மேலும் பல நூல்கள் எழுத வாழ்த்துக்கள்.
சார்
உங்கள் "மே தினம்" படித்தேன். மிக அருமை.
மிக்க நன்றி.
மேலும் பல நூல்கள் எழுத வாழ்த்துக்கள்.
சிவபாலன் என்னுடை நூலை படித்தற்காக மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்து விமர்சனப்பூர்வமான அணுகினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
Post a Comment