இலங்கையில் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்கள் வாழ்விலும், அமைதியை இழந்து தவிக்கும் இலங்கை இனவாத நோய்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்று இலங்கை மக்களும் - தமிழக மக்களும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடி அலசிக் கொண்டிருப்பது இப்பதிவின் நோக்கமல்ல; இருப்பினும், சில விசயங்களை தொட்டுக் காட்டி தீர்வை தேடுவது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.
தனது காலனியாதிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய ஏகாதிபத்தியம் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மதத்தின் பெயராலும், சாதியத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் விஷ விதைகளை புதைத்து விட்டுத்தான் சென்றன. சீனாவில் மாவோ தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி வெற்றியடைந்ததால் அங்குள்ள தேசிய இன முரண்பாடுகள் உட்பட பலவற்றிற்கு மார்க்சிய அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
ஒன்றுபட்ட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வற்றாத செல்வங்களை ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த நாடுகளில் இருந்த உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய சாதியத்தை பாதுகாத்ததோடு, அதனால் எழுந்த எந்தவிமான முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முற்படாமல் - தனது சுரண்டல் கொள்கைகளுக்கு பாதிப்பு வராமல் மட்டும் பார்த்துக் கொண்டது. இறுதியில் இந்த நாடுகளின் தீராத நோயாக மாறுவதற்கு பதியம் போட்டவர்கள் இவர்களே!
அடுத்து இலங்கையில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கம். தன்னாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் அற்ற நிலப்பிரபுத்துவ மரபுவதிகளாக இருந்ததோடு, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் சுரண்டப்படும் மலையகத் தமிழர்களின் எழுச்சி பெற்று வந்த போராட்ட பேரலைகளை சந்திப்பதற்கு திராணியற்றதாக இருந்ததோடு. இதனை திசை திருப்பும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள அடையாளத்தை முன்னிறுத்தி இனவாதத்திற்கு வித்திட்டன.
முதன் முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான அம்மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்க முடியாது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதற்கடுத்து உயர் கல்வியில் தமிழர்கள் போட்டியிட முடியாதபடி திட்டமிட்டு முடக்கியது என்று அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுத்தது. இலங்கைத் தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அன்றைக்கு குரல் கொடுத்தது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களை பெருவாரியாக அணிதிரட்டுவதில் ஏற்பட்ட தொய்வும், தமிழர் பகுதியில் இதற்கு எதிரான உணர்வு ரீதியான எதிர்வினைகள் - சிங்கள இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் என்று புறப்பட்டு அங்குள்ள உழைக்கும் மக்கள் இனவாதத்தின் பிடிக்கு இறையானார்கள
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களுக்கான பிரதேச உரிமைகள் குறித்த முழக்கங்கள் எழுந்த போது அவற்றுக்கு தீர்வு காணாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது இந்தப் பிரச்சனைகளையும் விட்டுச் சென்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற அளவிற்கு ஒரு வெகுஜன இயக்கமாக மலரவில்லை என்ற விமர்சனமும் உண்டு. இப்படியொரு வெகுஜன இயக்கம் அங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் என்றால் அந்த மக்களுக்கு இடையிலான இனவேறுபாடுகள் பெரிய அளவிற்கு மோதலுக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும்.
மேற்கண்ட சூழலில் தமிழர்களுக்காக டி.யூ.எல்.எப்., டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., எல்.டி.டி.இ., ஈராஸ் என்று விதவிதமான இயக்கங்கள் முளைத்தெழுந்தன. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடுகளாய் வெளிக்காட்டியது. இருப்பினும் சுதந்திர ஆட்சியாளர்கள் இவற்றுக்கு தீர்வு காணாமல் - இனவெறிக்கு தலைமை தாங்கியது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் இதற்கான ஒரே தீர்வாக தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கே முளைத்தெழுந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டு முழக்கம் பிரிவினை கோஷமாகவும் ஓங்காரம் பெற்றது. அதே சமயம் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களான ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் மீதான அரசின் தாக்குதல் தொடங்கியபோது அவர்களுக்காக முதலில் குரல் கொடுக்கத் தயங்கினர். இதில் தந்தை செல்வா விழிப்புடன் இருந்து அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தார். மொத்தத்தில் ஈழம் என்ற முழக்கம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கான முழக்கமாக அமையவில்லை என்ற விமர்சனம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது.
இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 74 சதவிகிதம் பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். 18 சதவிகிதம் பேர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். சோனகர் மற்றும் பரங்கியர்கள் 8 சதவிகிதம். மேலும் தமிழர்களிலேயே பாரம்பரியத் தமிழர்கள் 11 சதவிகிதமாகவும், மலையகத் தமிழர்கள் 7 சதவிகிதமாகவும், சோனகர் என்ற பிரிவினரும் தமிழ் பேசக்கூடியவர்கள்தான். பிரிந்துக் கிடந்தனர். இதற்குள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கணிசமான தொகையினர். அதாவது, தமிழர்களிலேயே பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சனை தீவிரமானது. மேலும் ஈழம் உட்பட மற்ற பகுதியில் உள்ள தமிழர்களின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தலித் (தாழ்த்தப்பட்ட) தமிழர்கள் பிரச்சனை தனியானது. மேற்கண்ட முரண்பாடுகளின் ஊடாகத்தான் இனவாதம் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கலக்கி தனி ஈழம் என்ற முழக்கமாக முன்னுக்கு வந்தது.
இதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது என்பது உண்மையே! இருப்பினும் அது துரோகிகளை அழித்தொழிப்பது என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு சக போராளி அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களை வேட்டையாட ஆரம்பித்ததோடு, புலிகள் செயல்பட்ட இடங்களில் மற்ற அமைப்புகள் செயல்படுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்கம் அமிர்தலிங்கம், சபாரத்தினம், உமா மகேஸ்ரன், மாத்தையா, உட்பட பலரையும் வேட்டையாடியது. அத்துடன் பத்மநாபா உட்பட 14 பேர் சென்னையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் புலிகளால். இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புகளுக்கும் - தலைவர்களுக்கும் சிங்களா இனவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமான பாதிப்பு புலிகளால்தான் ஏற்பட்டது. புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கும், தற்போது இலங்கையில் நிலவும் நிலை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஷேபாசக்தியின் வாக்குமூலங்கள் நமக்கு சாட்சியங்களாய் முன்னிற்கிறது.
தீராநதியில் அவரது பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதானாலும், எழுதுவதானாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்."
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். 80களிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்ள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மெளனமாக்கப்பட்டன.", "இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது". என்று உரைத்திருக்கிறார்.
இலங்கையில் உள்ள நிலையை நாம் இங்கிருந்து விளக்குவதை விட, அங்கிருந்தவர் விளக்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே சோஷபா சக்தியின் அனுபவம் மேலே பதியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது திசை திரும்பி, சிங்கள இனவாதத்திற்கு எதிராக எழுந்த இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தையே அழிக்கும் பயங்கரவாதமாக புலிகளால் மாற்றப்பட்டது. அத்துடன் தமிழ் பேசும் இசுலாமியர்களை 48 மணி நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டியடித்த அமைப்புதான் புலிகள். அத்துடன் புலிகள் அமைப்பின் பேச்சாளர் மறைந்த தமிழ்ச்செல்வன் கூறும்போது ஈழம் விடுதலையடைந்த பிறகுதான் இசுலாமியர்கள் தங்களது உரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இலங்கை பேரினவாதம் குறித்து வாய் திறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இனவாதிகள் புலிகளின் இத்தகைய இசுலாமிய மற்றும் மலையகத் தமிழகர்களுக்கு எதிரான போக்கை கண்டும் காணமல் போவதேனோ? மேலும் அந்த அமைப்பிலேயே ஜனநாயகம் நிலவுவதற்கான சூழல் இல்லாததைத்தான் பல்வேறு தலைவர்கள் வெளியேறியதுக் கூட காட்டுகிறது.
மேற்கண்ட பின்னணியில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு. மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது.
இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்யைப்படையை வெளியேற்றினர். அதாவது புலிகளின் இனவாதம் என்பது அதிகார வெறியுடன் கட்டமைக்கப்பட்டதாக உருவெடுத்தது.
இப்படியான குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோண மலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. தற்போதுகூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது.
புலிகளும் சந்திரிகா மற்றும் நார்வே நாட்டு குழுக்கள் எடுத்து முயற்சிகளை எல்லாம் பலமுறை தூக்கி எறிந்து விட்டு அங்கு தமிழர் பகுதியில் அபலைகளாகவும், அகதிகளாகவும், புலம் பெயர்ந்தவர்களாகவும் மாறிப்போன இலங்கைத் தமிழர்களின் உயிர் மற்றும் வாழ்வைவிட தனது அதிகார வெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது இலங்கை இராணுவத்தின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிகள் தங்களது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜீயத்தை இழந்து தற்போது முல்லைத் தீவோடு சுருங்கிப் போயுள்ளதும். அங்கு ஒரு லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக - பணயமாக முன்வைத்து தாக்குதல் நடத்தி வருவதையும் சர்வதேச அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல் - ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு - வடக்கு பகுதிகளுக்கான மாநில சுயாட்சியை வழங்கிடவும் இதில் அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுஒன்றுதான் அந்த நாட்டின் அமைதியான வாழ்விற்கு வித்திடும் மாமருந்தாக அமையும். இந்திய அரசு இவ்விசயத்தில் இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில் சமூகமான தீர்வினை காண்பதற்கு அணுக வேண்டும்.
இப்படிக்கூறும்போதுதான் தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கு லெனின் உட்பட மார்க்சிய ஆசான்களையெல்லாம் அழைக்கின்றனர். எனவே, அவர்களுக்காக நாமும் அந்த ஆசான்களிடம் இருந்தே தீர்வை நோக்கி அலசுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மக்கட் தொகை அதில் உள்ள பிரிவினை மற்றும் புவியில் ரீதியாக தமிழர்களின் வாழ்விட அமைப்பு போன்றவற்றையும் - இலங்கையே ஒரு குட்டி நாடு என்பதை மனதில் வைத்து எதிர்காலத்தில் ஒரு குட்டி சாம்ராஜ்யம் அமைந்தால் அதனுடைய பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பன போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர். இத்தகைய கோரிக்கை குறித்து மார்க்சிய ஆசான் லெனின் கூறுவதை இனி பார்ப்போம்!
பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
மேற்கண்ட லெனின் நிர்ணயிப்பு இலங்கைப் பிரச்சனைக்கு மிகப் பொருத்தமானது. நமது மார்க்சிய மனப்பாடவாதிகள் பாராளுமன்றம் எப்போதும் பன்றித் தொழுவம் என்று அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவது போலவே இவ்விசயத்திலும் சுயநிர்ணய உரிமை என்று பிதற்றுவது வேதனையானது. இதனால் இலங்கை மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக தள்ளிப் போடுவதற்குதான் அது உதவிடும். போகாத ஊருக்கு வழிகாட்டுவது என்று சொல்வார்களே அதுபோல...
மேலும் லெனின் கூறுவதைக் பார்ப்போம்:
தேசிய வாதத்தைப் புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது; இதற்கு மாறாக, தேசிய வேறுபாடுகளைத் துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசியத் தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது....
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
தமிழ் இன தேசியவாதத்தை கழுவி புனிதப்படுத்தி, முத்துக்குமரனின் மரணத்தின் விளைவால் ஏற்பட்ட அனுதாபங்களை அறுவடை செய்யும் பிணவாத அரசியலுக்கும் சொந்தக்காரர்களாக மாறிட துடிக்கிறார்கள் திரிபுவாத - சந்தர்ப்பவாத தமிழ் இனவாத அரசியல் நடத்துகின்றனர். இதற்கு அடிக்கடி அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது விந்தையிலும் விந்தைதான்.
மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் மிக அற்புதமாக கூறுகிறார். இத்தகைய சுயநிர்ணய உரிமை - அதாவது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் பிரிகிறார்கள் என்றால் அது ஒன்றுபடுவதற்காக - இணைதற்காக என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இது குறித்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம் அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல் ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
இவைகள் எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள் இனவாதிகள்... இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம்தான் தெற்காசிய மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல்... ஏகாதிபத்திய அரசியலுக்கு இரையாகும் இனவாதப்போக்கு இயலாமைத்தான் காட்டுகிறது.
இறுதியாக லெனின் கூறுகிறார் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட தீர்வினை முன்னெடுப்பது என்று:
பரந்த பிரதேசத் தன்னாட்சியும் முழுமையான ஜனநாயக சுய நிர்வாகமும் ஆகும். தன்னைத்தானே ஆள்கிற தன்னாட்சிப் பிரதேசங்களின் எல்லைகள் பொருளாதார சமூக நிலைமைகள், மக்கள் தொகையின் தேசிய இயல்பு முதலியவற்றைக் கொண்டு அவ்வட்டார மக்களால் தீர்மானிக்கப்படும்.
பக்கம் 82-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் சுட்டிக்காட்டுவது போல இப்பிரச்சனைக்கு இரு எதிர் எதிரான தீர்வுகள் உள்ளன: பண்பாட்டு - தேசியத் தன்னாட்சி என முதலாளி வர்க்கம் சொல்லும் தீர்வு ஒன்று; பிரதேச மற்றும் வட்டாரத் தன்னாட்சி என்ற பாட்டாளி வர்க்கத் தீர்வு மற்றொன்று.
பண்பாட்டு-தேசியத் தன்னாட்சி என்ற கோட்பாட்டின்படி ஒவ்வொரு தேசிய இனத்தின் உறுப்பினர்களும் ஒரு `தேசியக் கழகத்தை` உருவாக்கிக் கொள்வர். இது கல்வி உள்ளிட்ட அவர்களது சமுக, பண்பாட்டு வாழ்வைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் பள்ளிகள் தேசிய இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது. இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை திரட்டிட வேண்டும். இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான் அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும். இத்தகைய நிலை இலங்கையில் எழ வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கக் கோரிக்கைகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் பயங்கரவாதப் புலிகள் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமும் இலங்கைத் தமிழர்களுக்கான மாநில சுயாட்சி உரிமையை வழங்குவதற்கு - அரசியல் தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும். இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும். அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்.
புத்தகத்தின் வாயிலாக மார்க்சியம் கற்க முயலும் நமது நண்பர்கள் இனியாவது பூமியில் கால் வைத்து நடப்பார்கள் என்று நம்புவோம்!
கே. செல்வப்பெருமாள்
இலங்கை பிரச்சனை தொடர்பான சந்திப்பின் நிலைபாடு
அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம...
இலங்கைப் பிரச்னை:அர்த்தமுள்ள அமைதிக்காக..
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம...
இலங்கைப் பிரச்னை:அர்த்தமுள்ள அமைதிக்காக..
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன?
17 comments:
சந்திப்பு,
உங்களது கட்டு உரையிலுள்ள முரண்களை எளிதாக உடைக்க முடியும். உதாரணமாக,
//மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.//
ரஷ்யப் புரட்சிக்கும் இந்திய, இலங்கை, பாகிஸ்தான் விடுதலைக்கும் என்ன தொடர்பு? இலங்கையில் சுதந்திர போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறிஅய் பின்னர் பிரித்தானியர்களுக்கு இலங்கை மீது ஆர்வம் இழந்து போகவே, போனால் போகுது என்று விட்டுப்போனார்கள்.
இந்தியாவில் மார்க்சிய கம்யூனிஸ்டுகள் தேசிய இனங்களின் சுதந்திர உரிமை பற்றி வைத்திருக்கும் கருத்தும், ஆர்.எஸ்.எஸ் சுதர்சனன் கருத்துக்கும் பெரிய வேறுபாடில்லை. அவர்கள் அகண்ட பாரதத்தில் அனைவரையும் அடைக்க/அடக்க முனைகிறார்கள். நீங்கள் இந்திய தேசிய டப்பாவில் அடைக்கிறீர்கள். இந்திய தேசிய கண்ணாடி அணிந்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், உரிமையையும் பார்க்க பழகிய உங்களால் லெனின் சொன்னவற்றை வசதிக்கு ஏற்ப வளைப்பதும் எளிது. மவுண்ரோடு மகாவிஷ்ணு இந்து ராமிடமிருந்து ஈழப்போராட்டத்தை கற்கும் வரையில் மார்க்சிஸ்டுகள் இந்த 'வரலாற்று தவறுகளை' செய்து கொண்டிருப்பீர்கள். எங்களைப் போன்ற ஆதரவாளர்களையும் இழந்து, பாட்டாளி வர்க்க புரட்சியை காகிதத்தில் செய்ய வேண்டியது தான்.
தேசிய இனங்களுக்கு அவர்களுக்கு அவசியமான முடிவுகளை தீர்மானிக்கும் உரிமையில் நீங்களோ, நானோ தலையிடும் அதிகாரம் இல்லையென்று கருதுகிறேன்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இலங்கை பிரச்சினை குறித்து நீங்கள் பதிவிட்டு வருகிறீர்கள்,
“பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது”
சிபிஎம்-ன் மேற்கூறிய நிலைப்பாடு குறித்து தமிழக/ இந்திய அரசியல் கட்சிகளுக்கு வேறுபட்ட கருத்து நிலவுகிறது. முதலில் தமிழகத்தில் அனைத்துக்கட்சியினரின் சார்பில் ஒருமித்த கருத்து / தீர்வுக்காண திட்டம் எட்டப்படவேண்டும்,அப்போது தான் இந்திய அரசும் இலங்கையிடம் வலியுறுத்தமுடுயும்.
தமிழகத்தில் தினசரி நிலவுகிற தனிக்கட்சிகளின் இனவாத போக்குகள் ஒருபோதும் தீர்வுக்காண போராட்டமாக அமையாது.
உங்களது கட்டு உரையிலுள்ள முரண்களை எளிதாக உடைக்க முடியும்
-------------
ரஷ்யப் புரட்சிக்கும் இந்திய, இலங்கை, பாகிஸ்தான் விடுதலைக்கும் என்ன தொடர்பு?
நேற்றைய வரலாறு தெரியவில்லை என்றால் இன்றைய வரலாறு புரியாது. இன்றைய வரலாறு புரியவில்லை என்றால் நாளை என்பதே கிடையாது. அதாவது எல்லா விசயத்திலும் என்னை மறுக்க வேண்டும் என்ற சிந்தனைதான் தங்களிடம் குடிகொண்டுள்ளதே தவிர உண்மையை தேடும் மனநிலையில் இல்லாததுதான் வெளிக்காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். சுதர்சனத்தை காட்டி என்னை மறுக்கத் துடிக்கம் தங்கள் மனநிலை லெனின் என்ன சொல்லியிருக்கிறார் என்று அலசும் மன நிலையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
நன்றி சோமசுந்தரம், பாபு...
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
மகஇக அடிமுட்டாள்கள நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
அந்த நாய்கள் செய்யும் பித்துக்குளி வேலைகளுக்கு அப்பாவி தமிழ் உணர்வாளர்களை பலிகொடுக்க வாழ்த்துபா எழும் நாய்கள் முதலில் போய் தீ குளிங்க்கட்டும். இலங்கை சிங்கள வெறிநாய்களோடு சன்டை போட படகில் சென்று செத்துப்போங்கட்டும்.
ஆனால் பகுத்தறிவும், தன்மானம் கொண்ட தமிழன் யாரும் இப்படிப்பட்ட அராஜக நாடகத்தையோ, முட்டாள்தனமான முடிவுகளையோ எடுக்கமாட்டார்கள்.
முதலில் நந்திக்ராம பிரச்சனைக்கு பாட்டாளி வர்க்க தீர்வை எட்டுங்கள். அதற்கே வழியில்லை.
அங்கு உங்கள் பாட்டாளி வர்க்க பிம்பம் அடியோடு கட்டவிழ்ந்து விட்டது.
முதலில் நந்திக்ராம பிரச்சனைக்கு பாட்டாளி வர்க்க தீர்வை எட்டுங்கள். அதற்கே வழியில்லை.
அனானி ஆசாமி போகாத ஊருக்கு நாங்கள் வழி தேடுவது இருக்கட்டும்? நீங்களும் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்குதானே ஆசைப்படுகிறீர்கள். இந்த விசயத்தில் உங்க ஆளுங்களுக்குள்ளேயே அடிச்சிக்கிறாங்களே முதல்ல அது என்னான்னு அலசுங்க. ஒருத்தர் சொல்றார் இலங்கைக்கு சுய நிர்ணய உரிமை வேணும்னு, இன்னொருத்தர் சொல்றார் அது நம்ம நிலையில்லை என்று... என்னங்கய்யா அரசியல் பண்றீங்கோ... அது கிடக்கட்டும் நந்திகிராமில் பாட்டாளி வர்க்க நோக்கத்தின் அடிப்படையில்தான் அங்கே தொழில் வளர்ச்சிக்காக நிலம் கைப்பற்றப்பட்டது. அதனை அமலாக்குவதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு விட்டது. இது ஒரு அனுபவம் எங்களுக்கு. மேலும் நந்திகிராமத்தை அகதிகள் முகாமாக மாற்றியதில் மமதா - அத்வானி - நக்சலிச கும்பலுக்கு பெரும் பங்குண்டு என்பது வரலாறு.
Good article you have written.No doubt.U narrated the simple history of the srilanka.But the quotations are too length.yes Sir !
you rightly said that the left parties mouths were shut by the LTTE extremism.The rise of ''Sekuvera movement''in the 70's were suppressed by the rulers.At the beginning stage the LTTE was not more popular and powerful.So many other movements were also there. Sree Sabarathinam and PLOT >>Mugunthan were good people.They had respect in democratic way of political thinking.All they were ''ANNIHILATED '' by the LTTE.IN THAT MOVE THEY WON THE inner fights.In issues like >>>army employment.jobs,equal rights in cultures,languages and factories employments are very important issues which can be settled by mutual discussions.But all peace talks were destroyed by the LTTE.They always used the ceasefires only to re equip/prepare themselves for another fights.your article is a eye opener to ordinary readers who need not go to LENIN COLLECTED WORKS VOLUMES.
you SEND YOUR ARTICLE TO MAJOR NEWS PAPERS AND MAGAZINES Sir.. Selvapriyan
ஈழம்,இந்திய மேலாதிக்கம்,இன்ன பிற பற்றி பொந்திப்பு மற்றும் தறுதலை உரையாடிய உண்மைக்கு சற்றே அருகில் கொண்டு நிறுத்தும் விவாதங்கள பார்ட்-2
பொந்திப்பு
என்ன டவுட் காம்ரேட் சொல்லுங்க?
தறுதலை
ஒன்னுமில்ல காம்ரேட், நம்ம மூத்த தோலர்கள் N.வ, காரத், எல்லாம் கூட்டனிக்காக அம்மாவைப் பாக்கப்போனாங்க இல்ல அப்ப இளம் பச்சை கலந்த வெள்ளை சட்டை போட்டுட்டு போனாங்கன்னு அவனுங்க பத்திரிகையில எழுதியிருக்கானுங்களே அது அவதூறு தானே?
பொந்திப்பு
நீங்களே ஏன் தோலர் அதை தப்பா பார்க்கிறீங்க.அப்படி போயிருந்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு? இப்ப கருணாநிதியையே எடுத்துக்கங்களேன் எத்தனை தடவை நம்ம ஆதரவு வேணுங்கிறதுக்காக்க வடிவேலு மாதிரி நானும் கம்யூனி்ஸ்டு தான்,நானும் கம்யூனிஸ்டு தான்னு சொல்லியிருக்காரு,அதுக்காக அவரை நாம்ம கம்யூனிஸ்ட்ன்னு ஏத்துக்கிட்டமா என்ன?
அதே மாதிரி நேபாள மாவோயிஸ்டுகளை
எடுத்துக்கங்க அவங்க மக்களை வென்றெடுக்க
மக்கள் போடுற மாலையை போட்டுக்கலையா,
குங்குமப்பொட்டை வச்சுக்கலையா
அது மாதிரி தான் இதுவும்.
இவனுங்க தான் எல்லாத்தையும் வறட்டுத்தனமா பாக்குறானுங்க.
தறுதலை
சர்ர்ரிரியானா விளக்கம் தோலர், நல்லா புரிஞ்சிருச்சு.
அப்புறம் தோலர் இந்த ஈழப்பிரச்சனையில..
என்று முடிப்பதற்குள் பொந்திப்பு குறுக்கிட்டு ஈழப் பிரச்சனை இல்ல,இலங்கை பிரச்சனைன்னு சொல்லுங்க என்க.
தறுதலை
சரி தோலர்,இந்த இலங்கை பிரச்சனையில
நம்ம முடிவு நமக்கே கொஞ்சம் வித்தியாசமா இல்ல?
பொந்திப்பு
என்ன சொல்றீங்க,புரியலையே ?
தறுதலை
இல்ல தோலர் அவனுங்க எல்லாம் இந்தியா
ஆக்கிரமிக்கப்பாக்குது அது இதுன்னு என்னனென்னமோ
சொல்றானுங்க,
நாம தானே எப்பவும் ஆக்கிரமிப்பு பத்தியெல்லாம் பேசுவோம்,
ஆனா இதுல நம்ம முடிவு மட்டும் வேற மாதிரி இருக்கு,
அவனுங்கெல்லாம் ஒரே கூட்டமா இருக்கானுங்க நம்ம மட்டும் ஓரமா தனியா நிக்கிற மாதிரி இருக்கே அதான் கேட்டேன்.
பொந்திப்பு
நாம மட்டும் தனியா இல்ல தோலர்,
அது மாதிரி ஒரு தோற்றம் இருக்கலாம்,
ஆனா நம்ம பக்கமும் வெயிட்டான ஆளுங்க எல்லாம் இருக்காங்க,
ஆனா அவங்க இதைப்பத்தியெல்லாம் அதிகம் பேசுறதில்ல.
ஹிந்து ஆசிரியர் ராம் நம்ம பக்கம் தான்,
துக்ளக் ஆசிரியர் ராமசாமி நம்ம பக்கம் தான்,
எல்லாத்துக்கும் மேல நம்ம கூட்டணி கட்சி
தலைவர் அம்மாவே நம்ம பக்கம் தான்.
தறுதலை
அப்புறம் இன்னொருத்தர் இருக்காரே தோலர்
அவர விட்டுட்டிங்களே..
பொந்திப்பு
யாரச்சொல்லுறீங்க?
தறுதலை
பாரதிய ஜனதா கட்சி மாதிரி எதோ ஒரு கட்சி கூட
வச்சிருக்காரே தோலர்,
பேரு தான் ஞாபகத்துக்கு வரமாட்டேங்கிதே.
பொந்திப்பு
ஓஹோ.. சுப்ரமணியசாமி சாரை சொல்றீங்களா?
தறுதலை
அச்சா அவரே தான் தோலர்.
பொந்திப்பு
அவருங்கூட இதுல நம்ம பக்கம் தான்,
ஆனா என்ன அவங்களுக்கும் நமக்கும்
இந்த விக்ஷயத்தில் கருத்து ரீதியில் ஒற்றுமை
இருந்தாலும் அடிப்படை கண்ணோட்டத்துல மட்டும்
ஒரு பெரிய கேப் இருக்கு.
தறுதலை
அது என்ன தோலர்?
பொந்திப்பு
அதாவது நம்முடைய முடிவுகள்,வரையரைகள்
எல்லாம் முழுக்க முழுக்க மார்க்சிய
வர்க்க கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டது
அவர்களுடையது அப்படி அல்ல.
தறுதலை
அப்படின்னா இந்த இலங்கை பிரச்சனையில்
நாம் எடுத்திருக்கும் முடிவுகள்
முழுக்க முழுக்க வர்க்கக்கண்ணோட்டத்துடன்
எடுக்கப்பட்ட முடிவா தோலர்?
பொந்திப்பு
ஆமாந் தோலர் இது முழுக்க முழுக்க
வர்க்கக்கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட முடிவு,
சொல்லப்போனால் நம்ம கட்சி இதுவரைக்கும்
எந்த விக்ஷயத்துக்கும் பயன்படுத்தாத அளவுக்கு அதிகமா
வர்க்கக்கண்ணோட்டத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து
எடுத்த முடிவுகள் இது.
தறுதலை
அப்படின்னா அதை கொஞ்சம் சித்தாந்த ரீதியா
விளக்குங்க தோலர்
அப்படியே போன்லயே குறிப்பெடுத்துக்கிறேன்.
பொந்திப்பு
ஒரு நிமிக்ஷம் தோலர்.
இன்னொரு லைனில் தோலர் வர்ராரு
முக்கியமான விசயமா தான் கூப்பிடுறார்ன்னு
நினைக்கிறேன் பேசிட்டு
மறுபடியும் உங்களுக்கு கால் பன்றேன்
என்று இணைப்பை துன்டிக்கிறார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் தறுதலையின் செல் அலறுகிறது
;;;;; ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதேவாழ்வென்றால் போராடும்;;;;;
மறுமுனையில்
பொந்திப்பு
தறுதலை
ங்.. சொல்லுங்க தோலர்
பொந்திப்பு
முக்கியமான விசயம் தான்,
இருக்கட்டும் அப்புறம் சொல்றேன்.
நம்ம விட்ட இடத்திலிருந்து விசயத்துக்கு வருவோம்.
அதாவது இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க
முயலுதுன்னு இவனுங்க சொல்றது
மார்க்ஸியத்துக்கு எப்படி எதிரா இருக்குன்னு
பார்த்தீங்கன்னா
பொதுவா ஏகாதிபத்திய நாடுகள் தான்
மற்ற சிறிய நாடுகளை ஆக்கிரமிக்க முயலும்,
ஆப்கனையும்,ஈராக்கையும் ஆக்கிரமிக்க முயலும்
அமெரிக்கா இதற்கு நல்ல உதாரணம்.
ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்ட முதலாளித்துவம் தான்
பிற மூன்றாம் உலக நாடுகளை அடிமையாக்க முயலும்.
இந்தியா எப்போ ஏகாதிபத்தியமா வளர்ந்தது?
தறுதலை
ஆமா வளரல.
பொந்திப்பு
அப்புறம் எப்படி இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கும்?
அப்புறம் எப்படி இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்த முடியும்?
அப்படி சொன்னால் அது இலங்கையின்
சுதந்திரத்தையும்-மக்களையும்
கொச்சைப்படுத்துவதாக தானே அர்த்தம்.
நாம் தான் தெளிவாக இந்த விக்ஷயத்தில்
பாட்டாளி வர்க்கத்தீர்வை முன் வைக்கிறோம்.
ஆனால் காட்டில் வாழும் அந்த கோமுட்டி மடையர்கள்
இனவாதம் பேசிக்கொண்டு அதற்கு
மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது தான்
விந்தையிலும் விந்தைதான்.
தறுதலை
நல்லா புரியுது தோலர்.
அதே மாதிரி தேசிய இனப்பிரச்சனையை பற்றியும்
கொஞ்சம் சொல்லுங்க தோலர்.
பொந்திப்பு
தோலர் இவனுங்க சும்மா சுயநிர்னய உரிமை,
சுயநிர்னய உரிமைன்னு ஏதோ புரியாம
கத்திக்கிட்ட்ருக்கானுங்க.
மார்க்ஸ் முதல் மா சேதுங் வரைங்கிற
புத்தகத்துல 76 ம் பக்கத்தை புரட்டிப்பாருங்க
அதில் சுயநிர்ணய உரிமை பற்றி லெனின்
மிக அற்புதமாக கூறுகிறார்.
அதாவது
நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம்
அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை
அங்கீகரிக்க வேண்டும்.
பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல்
ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது
என்று சொல்ல முடியாது.
அதே போல பக்கம் 80 லும் அற்புதமாக சொல்கிறார்.
பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும்
ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு
என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது
எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும்
இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும்
என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது
என்ற பொருளில் அவர் சொல்லவில்லை.
மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது
தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
தறுதலை
சரி தோலர் அப்படின்ன இந்த சித்தாந்த மேற்கோளை
பிரயோகித்து அங்கே என்ன மாதிரியான தீர்வை
நாம் சொல்றோம்.
பொந்திப்பு
அதுக்குத்தான் அடுத்து வர்ரேன்.
அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும்
அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும்
- அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று
மாமாயிஸ்ட்-மாமியிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது.
இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை
அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை
திரட்டிட வேண்டும்.
இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான்
அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும்.
இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும்.
அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவாதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் "முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்".
சூப்பர் தோலர், போன்ல ஒரு சித்தாந்த வகுப்பையே நடத்திட்டிங்க.
இதை அப்படியே ஒரு பதிவா போட்டுவிடுங்க தோலர்,
அப்பிடியாவது அவனுங்களுக்கு புத்தி கித்தி வருதான்னு பார்ப்போம்
பொந்திப்பு
சொன்னா ஆச்சர்யப்படாதீங்க தோலர்,
உங்ககிட்ட பேசிக்கிட்டே பதிவை போட்டுட்டேன்.
"இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு"
இது தான் பதிவின் தலைப்பு பாருங்க.
தறுதலை
தோலர் நீங்க தான் தோலர் உண்மையான அசுரன்
அவனுங்கல்லாம் சும்மா மசுறானுங்கங்கிறத நிரூபிச்சிட்டீங்க.
பொந்திப்பு
சரி தோலர் பதிவை படிச்சிட்டு சொல்லுங்க நான் அப்புறமா பேசுறேன்.
தறுதலை
சரி தோலர்,அப்புறம் அந்த விக்ஷயம் கேட்டீங்களா தோலர்.
நம்ம கட்சி கிளைகளில் பிளாக் துவங்குறதை பற்றி.
பொந்திப்பு
மறந்தே போயிட்டேன் பாருங்க,கடைசில சொல்லனும்ன்னு நினைச்சிட்டேயிருந்தேன் அப்பிடியே மறந்துட்டேன்.கட்சில சொன்னேன் தோலர் கட்சிலையும் ஒக்கே சொல்லிட்டாங்க,மூத்த தோலர்களும் ஓக்கேன்னு சொல்லீட்டாங்க.ஆனா என்னன்னா எல்லா கிளைக்கும் ஒரு பிளாக்ன்னு ஓபன் பன்ன முடியாது,அதனால மொத்த மாநிலத்துக்கும் சேர்த்து மொத்தம் ஐம்பது பிளாக் மட்டும் போதும்ன்னு முடிவாயிருக்கு.
தறுதலை
அருமையான தகவல் தோலர்,காதுல தேன் பாயுது.
ஐம்பது பிளாக்கா ?
நான் நினைச்சுக்கூட பார்க்கல தோலர்.
பொந்திப்பு
முதல்ல அவரு இருபத்தியஞ்சு சிஸ்ட்டம் தான் தர்ரேன்னு சொல்லியிருக்காரு அப்புறம் நம்ம தோலர்கள் கொஞ்சம் வலியுறுத்தி கேட்டதால சரி நம்ம கட்சிக்குத்தானே ஐம்பதே தர்ரேன்ன்னு சொல்லிட்டாறாம்.
தறுதலை
யார் தோலர் சிஸ்ட்டம் ஸ்பான்சர்?
பொந்திப்பு
வேறு யாரு நம்ம கட்சியோட ஆதரவாளர் கல்வி வள்ளல் ஜே.பி.யார் தான்
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2146:2008-07-15-20-22-14&catid=67:2008&Itemid=59
தறுதலை
இனிமே அவர் கல்வி வள்ளல் மட்டுமில்ல தோலர் கனிணி வள்ளலும்கூடதான்.
பொந்திப்பு
ஆமாம் தோழர்.
தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது.
''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)
தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50)
ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''
So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.
''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
-----------------------------
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)
அன்புள்ள உண்மையைத் தேடும் அனானி. தங்களது சிறப்பான விவாதத்திற்கு வாழ்த்துக்கள்.
முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம். லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற பெயரில் ஸ்டாலின் எழுதிய நூலில் தேசிய இனப் பிரச்சனை குறித்து ஒரு பிரிவு உள்ளது. அதன் முதல் பாராவிலேயே அவர் கூறுவது என்னவென்றால், காரல் மார்க்ஸ் காலத்தில் - அதாவது அகிலம் செயல்பட்ட காலத்தில் இருந்த தேசிய இனப் பிரச்சனைக்கும் - லெனின் உயிரோடு இருந்த காலத்தில் உள்ள தேசிய இனப் பிரச்சனைக்கும் கிட்டத்தட்ட 20 வருட காலத்தில் மிகப் பெரிய வித்தியாசங்களும், மாற்றங்களும் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல என்று விளக்கியிருப்பார். இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரையிலுமான பிரச்சனையை நாம் பார்த்தால் கிட்டதட்ட 80 வருட கால வித்தியாசம் உள்ளது. இப்போது எப்படியான மாற்றங்கள் உருவாகியிருக்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. அதாவது, தனித்தனி நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகள் தற்போது ஒரே யூனியனாக மாறிச் செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல் லத்தீன் அமெரிக்காவில் உள்ள தனித் தனி நாடுகள் எல்லாம் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு விரிந்த கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலே உள்ள ஐரோப்பிய யூனியனும் கூட அமெரிக்க டாலர் பகவானுக்கு எதிரானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்படி முதலாளித்து அல்லது ஆரம்ப நிலை ஜனநாயக நாடுகள் எல்லாம் தங்களது வித்தியாசங்களை மறந்து ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைய முன்வந்துள்ள காலகட்டம். அத்துடன் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று அழைக்கப்படும் சீனாவில் 60 வருட காலமாக பெரிய அளவிற்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. இதற்கு அந்நாடு கடைப்பிடிக்கும் ஆரம்ப கட்ட ஜனநாயக சோசலிச அமைப்பு முறைதான் காரணம். சரி விசத்திற்கு வருவோம்.
எனவே, தங்களது வசதிக்கு ஏற்ப லெனினின் கூற்றுகளை வசதியாக மாற்றிக் கொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் தங்களிடம் மேலிடுவதை பார்க்க முடிகிறது. உண்மையை அதன் போக்கில் தேடினால் பலன் கிடைக்கும். மேலும் மார்க்சிய மேற்கோள்களை அப்படியே எந்தவிதமான பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்வதும் தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.
நீங்களே பாருங்கள் - லெனின் கீழ்க்கண்ட குறிப்பில் என்ன உள்ளது?
எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும்
உழைக்கும் வர்க்க ஜனநாயக கோட்பாடுகளாக அவர் எந்த மொழிக்கும் தேசத்துக்கும் சிறப்பு சலுகை இல்லை என்று கூறுகிறார். அதேபோல் தேசிய சிறுபான்மையினருக்கு எந்தவிதமான ஒடுக்குமுறையும் கூடாது என்று வலியுறுத்துகிறார். அதாவது எந்த தேசத்தில் உழைக்கும் வர்க்க ஜனநாயக ஆட்சி முறையில். ஆனால் நீங்கள் நிலப்பிரத்துவ - முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஆதரவு வர்க்க ஆட்சி நடத்தும் இலங்கைக்கு இதனை பொருத்துவது இயந்திரகதியாக உள்ளது தோழரே! அதாவது முதலாளித்துவம் வளர்ந்து வரும் மக்கள் கோரிக்கைகளை பின்னுக்கு இழுக்க இப்படித்தான் இனவாதம் - சாதியவாதம்... போன்ற உணர்ச்சியூட்டும் வாதங்களை முன்வைத்து மக்களை வேட்டையாடும். அதனுடைய சூது வாதுகளை அறிந்து கொண்டுள்ள இடதுசாரிகளும் - ஜனநாயக சக்திகளும்தான் மக்களை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும். மாறாக முத்துக்குமாரின் மரணத்திற்கு பின்னால்... ஏற்படும் அனுதாபத்தின் பின்னால் வால் பிடித்துக் கொண்டு ஓடக் கூடாது.
அடுத்து நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள இரண்டாவது கூற்றையும் சற்று பரிசீலிப்போம்.
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)
அதாவது லெனின் மிகத் தீர்க்கமாக சுட்டிக் காட்டுகிறார் வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள நாடுகளளின் போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று. அதாவது இது காலனியாதிக் காலத்தில் அடிமைப்பட்டிருந்த ஆசிய - ஆப்ரிக்க போன்ற நாடுகளுக்காக சொல்லப்பட்டது. இதனை நீங்கள் மிக வசதியாக இலங்கைக்கு பொருத்துவது சரியா தோழரே! மேலும், இத்தகைய போராட்டம் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
அப்படியிருக்கையில் விடுதலைப் புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகிறார்கள்? அல்லது அவர்கள் அமைக்க விருப்பது என்ன சோசலிச ஆட்சி முறையா? இதை சற்று பரிசீலியுங்கள். மேலும், தற்போதைய இனவாதத்தால் பெரும்பான்மை இலங்கை உழைக்கும் வர்க்கம் பசியாலும், பட்டினியாலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை கவணிக்கத் தவறாதீர்கள். அடுத்து ரஷ்யாவில் கூட - ருஷ்ய மொழியைப் பேசக் கூடிய பெரும்பான்மை மக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் புரட்சி நடந்ததால்தான் - ருஷ்ய ஏகாதிபத்தியம் ஆதிக்கம் செலுத்திய அடிமைப்பட்ட நாடுகளுக்கும் - சிறிய இன நாடுகளுக்கும் நம்பிக்கையுட்டும் முகமாக அவர்கள் லெனினுக்கு பின்னால் அணித்திரண்டனர். இதுவே ஒரு சிறுபான்மை இன மக்கள் உள்ள நாட்டில் சோசலிசம் வெற்றி பெற்றிருந்தால் இன்றைக்கு என்ன நடந்திருக்கும்? சோசலிச பெரும்பான்மை இனவாதத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம். அதேபோல்தான் இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்கள் தற்போதுகூட பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு எந்தவிதமான துன்புறுத்தலிலும் ஈடுபடவில்லை. தற்போது நடைபெறுவது இலங்கை அரசுக்கும் - புலிகளுக்குமான மோதல் மட்டுமே. அதுவும் மிகச் சிறிய பகுதியில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்கள் மீது அல்ல; இந்த உண்மையை தமிழகத்தில் மூடி மறைத்து இனவாத வியாபாரம் செய்பவர்கள் பின்னால்தான் வால்பிடித்துத் செல்கின்றனர் அதிதீவிர புரட்சியாளர்கள். அவர்களது நோக்கமும் தமிழ் இனவாதத்தை அடிப்படையாக கொண்டது என்பதால்தான் அப்படி செயல்படுகிறார்கள் என்றே புரிய முடிகிறது.
மற்ற இரண்டு கூற்றுக்களையும் நீங்களே பரிசீலித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு சந்திப்போம். வாழ்த்துக்கள் ஆரோக்கியமான விவாதத்திற்கு.
சந்திப்பு அவர்களே
1. காரல் மார்க்ஸ் காலத்தில் மாத்திரமல்ல லெனின் கால்த்திலும் அகிலம் இருந்தது.
2. தேசிய இனப்பிரச்சினை காலம்தோறும் தன்மை ரீதியாக மாறும் என ஸடாலின் சொல்லவில்லை.
3. நீங்கள் சொல்லும் அணிசேர்க்கையால் ஐரோப்பிய நாடுகளில் தேசிய சார்புகள் மறைந்து விடவில்லை. ஒரு யூரோ என்ற பொருளாதார நலனுக்காக முதலாளிகள் சேர்ந்து இருக்கின்றார்கள். அங்கு சோசலிசம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் லெனினால் சுட்டிக்காட்டப் பட்டு விடடது.
4. ஐரோப்பிய யூனியனோ அல்லது முன்னாள் சோவியத் யூனியனோ இருந்ததார் ஏகாதிபத்தியம் என்ற லெனினிய காலகட்டத்தில் என்ன மாற்றம் வந்து விட்டது. மாற்றத்தை ஏகாதிபத்திய கூட்டணி கொண்டு வரும் என நீங்கள் கருதினால் காவுட்சிய வாதம் போல உள்ளதே உங்களது வாதம்.
5. என்னுடைய வசதிக்காக இம்மேற்கோள்களைப் பயன்படுத்தவில்லை. ஜார்ஜ் தாம்சன் மேற்கோளிட்ட லெனின் மேற்கோள்களே அவை. கால தாமதம் கருதி அவரது விளக்க உரைகளை தவிர்த்தேன். ப.65ல் உள்ள விளக்க உரை உங்களுக்காகவே அவர் எழுதியது.
6./அதேபோல் தேசிய சிறுபான்மையினருக்கு எந்தவிதமான ஒடுக்குமுறையும் கூடாது என்று வலியுறுத்துகிறார். அதாவது எந்த தேசத்தில் உழைக்கும் வர்க்க ஜனநாயக ஆட்சி முறையில். ஆனால் நீங்கள் நிலப்பிரத்துவ - முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஆதரவு வர்க்க ஆட்சி நடத்தும் இலங்கைக்கு இதனை பொருத்துவது இயந்திரகதியாக உள்ளது தோழரே!/
மன்னிக்கவும் இந்த தொடரை படித்தால் உங்களது இயக்க மறுப்பு பார்வை பாமரனுக்கும் புரிய வரும். தோழர் ஜார்ஜ் தாம்சன் சொல்வது போல முதலாளிய வர்க்கம் தனக்கு முன் உள்ள பாட்டாளிவர்க்க இயல்பு பற்றிய புரட்சி பற்றிய பயத்தால் சரணடையும் போது தேசியவிடுதலைப் போராட்டத்தை அதுகாறும் ஆதரித்த பா. வர்க்கம் இவவிடுதலைப் போராட்டத்திற்கு தலைமை ஏற்கும்.
நண்பரே இரண்டாவது இலங்கையை ஆசிய நாடாக சிபிஎம் கருதவில்லையா ? லெனின் எங்கேயும் காலத்தை இத்தனை ஆண்டுகளுக்கு என வரையறுத்து சொல்லவில்லை. இன்றைக்கு காலனிய வடிவம் மாறியுளள்ளது பற்றிய புரிதல் இன்மையால் காலனியாக்கமே உலகத்திலிருந்து மறைந்து விட்டது எனக் கருதுவதை என்ன சொல்லி திட்டுவது...முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தயத்திற்கும் எதிராக புலிகள் போராட மாட்டார்கள். அதனை சாதிக்க அங்கு பா.வர்க்கம் கட்ட வேண்டுமென்றால் அது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களது மனநிலையை லெனினது கூற்றுப்படி பரிசீலித்தால் அது தவறா?
சிறுபான்மை ரஷயா பற்றிய தங்களது அவதானிப்பு ஜனநாயக மறுப்பை புரட்சியை யார்தான் நடத்தமுடியும் என அவதானிக்கிறது புரியவில்லையா. பசி பட்டினியால் உலகம் முழுவதும்தான் பாதிக்கப்பட்டுள்ளது அதை தீர்த்தபிறகுதான தேசிய ஒடுக்குமுறையைத் தீர்ப்போம் என சீனப்புரட்சியில் சொல்லியிருந்தால் ஜப்பானின் அடிமையாகத்தான் சீன இருந்திருக்கும். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல இப்படி தெளிவாகப் பார்த்து லாஜிக் உடன் விவாதிக்க வேண்டும். லெனினை மற்ற சிறுபான்மையினர் பாசிட்டுவ் ஆட்டிடுயூடு உடன் பார்த்ததாக முதலாளிய பார்வையுடன் எழுதியது சரியா?
இதற்கே உங்களது அரசியல் அறிவு வெட்டவெளிச்சமாகி விட்டபடியால் மற்ற மேற்கோள்களுக்கும் பொழுப்புரை எதிர்பார்க்கிறேன்
தோழர் சந்திப்பு!
மிகசிறந்த கட்டுரை. இலங்கை பிரச்சனைக்கு தர்போதைய தேவை புலிகளும் அரசும் போர்நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையை தொடங்குவது தான். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை காணவேண்டும். உழைப்பாளிமக்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட ஜனநாயக இயக்கத்தை ஏர்படுத்தி சிங்கள,தமிழ் மக்களின் யதார்த்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண புலிகளும்,அரசும்,மற்ற அமைப்புகளும் முன்வர வேண்டும்.
அதர்கான குரல் தமிழகத்திலிருந்தும் ஒலிக்க வேண்டும். அதன் மூலமே இந்திய அரசின் நியாயமான ராஜதந்திர ரீதியிலான தலையீட்டை ஏர்படுத்த முடியும் .
ந்ண்பர் பாப்பு
உங்களிடம் சில சந்தேகங்களுக்கு விடை தேவைப்படுகிறது.
1. ஒன்றுபட்ட இலங்கைக்குள என்பதை யார் தீர்மானித்தது அல்லது யார் தீர்மானிக்க வேண்டும்.
2. ஒருவேளை ஒன்றுபட்டு விட்டால் அங்கு தீர்க்கப்பட வேண்டிய அரசியல் பிரச்சினை என்ன
3. உழைப்பாளி ம்க்களையும் உள்ளடக்கிய ஜனநாயக இயக்கத்தை எப்படி யார் தோற்றுவிப்பது. யுத்தம் தொடர்ந்து நடந்தால் இதனைப் பற்றி பேசி என்ன பயன்
4. உங்களுடைய தீர்வு பற்றிய ஆதரவு குரல் தமிழகத்திலுருந்தும் வர வேண்டும் என்று குரல் கொடுக்கும் தாங்களது இயக்கம் வலுவாக இருக்கும் கேரளா, மே. வங்கம் போன்றவற்றில் அரசு அதிகாரத்தில் நீங்களே இருந்தும ஒரு பந்த் கூட நடத்தப்படவில்லையே. ஜனநாயகம் பற்றிய உங்களது மதிப்பீடு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. அதனை நீங்கள் இலங்கை அரசுக்கோ வி.புலிகளுக்கோ எந்த அருகதையுடன் பரிந்துரை செய்கின்றீர்கள்.
5. இந்திய அரசை ஒரு எதிர் வர்க்க ஆளுகைக்கான அரசாகப் பார்க்கும் தாங்கள் நியாயமான மற்றும் ராஜதந்திர ரீதியிலான தலையீட்டுக்கு இந்திய அரசு வரவேண்டும் என விரும்புகினறீர்கள். இந்த ராஜதந்திரம் என்பது முதலாளிகளின் வர்க்கம் ஆட்சி செய்யும் இந்தியாவில் முதலாளிகளின் தந்திரமாகத்தானே இருக்கும். இதற்காகவா போராடுகின்றீர்கள்.
நன்றி பாபு. தங்களது அரசியல் ரீதியான கருத்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டிய ஒன்றே.
Post a Comment