Guest Column: என்.குணசேகரன்
இலங்கையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஒரு முழுமையான உள்நாட்டுப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.இலங்கையின் வடக்கு, தெற்கு, இரு பகுதிகளில் வாழும் அனைத்து சாதாரண மக்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்.வடபகுதியில் வாழும் தமிழர்களுக்கு வேதனை வாழ்க்கை தொடருகிறது. இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் கண்ணிவெடித்தாக்குதல், வெடிகுண்டுகள், தற்கொலைப் படைத்தாக்குதல் என பல ரகங்களில் மோதிக் கொள்கிறபோது அப்பாவித் தமிழர்கள் பலியாகின்றனர்.
கடந்த நவம்பரில் மகிந்த ராஜபக்சே ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து 815 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல், எதிர்த்தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது.அமைதிப் பேச்சு வார்த்தை நின்றது ஏன்?நார்வே நாட்டின் முன்னிலையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கென, விடுதலைப்புலிகள் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.இதற்கான காரணங்களாக அவர்கள் கூறுவது- 2002ல் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுகிறது.- துணை ராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களை விலக்கிக்கொள்ளாதது.- பிரபாகரனை பிரித்து விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய கருணா குழுவினரின் ஆயுதங்களை இலங்கை அரசு பறிக்காததது.விடுதலைப்புலிகளின் நோக்கம்இவ்வாறு பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான ஒரு உண்மை உண்டு.
விடுதலைப்புலிகள் இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளனர். தனி அரசாங்கமே அவர்கள் நடத்தி வருகின்றனர் என்பது உலகம் அறிந்த ஒன்று இந்தப்பகுதிகளை தக்க வைத்துக் கொண்டு, ஏனைய தமிழர் வாழும் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளையும் சேர்த்து ‘தனி ஈழம்’ என்ற அவர்களது குறிக்கோளை அடைவதுதான் அவர்களது உண்மையான நோக்கம்.பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதற்கான காரணங்களை விவரித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட அவர்களது நோக்கத்தை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
‘தனி ஈழம்’ எனும் வார்த்தை அதில் இல்லையே தவிர, “சுயநிர்ணய உரிமை கொண்ட தன்னாட்சி” போன்ற சொற்றொடர்கள் உண்டு ‘கூட்டாட்சி’ என்ற வார்த்தை அந்த அறிக்கையில் இல்லை.ஆக, எத்தனை பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் விடுதலைப்புலிகள் அவர்களது நிலையை மாற்றிக்கொள்ளாதவரை, போர் அபாயம் இலங்கையில் நீடித்திடும்.‘புனிதர்’ வேடம் ஒருபுறம்விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ராஜீவ்காந்தி படுகொலை ‘ஒரு வரலாற்றுத் துயரம்’ என்று 15 ஆண்டு தாமதமாக கண்ணீர் வடிக்கிறார். மறுபுறம், ராஜீவை கொன்ற அதே பாணியில், (மனித வெடிகுண்டு) இலங்கை துணை ராணுவ தளபதியை விடுதலைப்புலிகள் சமீபத்தில் கொன்றுள்ளனர்.எத்தகைய புனிதர் வேடம் போட்டாலும், மனிதநேய வாதிகளும், ஜனநாயகவாதிகளும் விடுதலைப்புலிகளை நம்பத் தயாராக இல்லை. உலகம் முழுவதும் அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதால்தான், ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. உலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிட பசப்பு வார்த்தைகளை பேசுகின்றனர்.சிங்கள இனவெறிக்கு தூபம்:மதிந்த ராஜபக்சே அரசாங்கம் இலங்கையில் பதவியேற்ற பிறகு, அந்த அரசாங்கத்தோடு சிங்கள இனவெறியர்களும், சிங்களத் தீவிரவாதிகளும் நெருக்கமான உறவு கொண்டுள்ளனர்.
சிங்கள இனவெறியர்கள், நார்வே முன்னிலையில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைத்த முயற்சிக்கின்றனர். அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர்கள் வற்புறுத்துவது, எதற்காக? தமிழர்கள் அமைதி வாழக்கைக்கு திருப்பிடாமல் அடிமைகளாய் வாழவேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறியர்களின் நோக்கம் இலங்கை ராணுவத்தின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி தமிழர் மீதான ஒடுக்குமுறையை தொடர வேண்டுமென்பதுதான் நார்வே மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்வினை சீர்குலைக்க வேண்டுமென்பதும் அவர்களது எண்ணம்.இதனால்தான், பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள சிக்கல் முடிச்சை அவிழ்ப்பதற்கு பதிலாக, ராஜபக்சே, ‘பிரபாகரனோடு நேரடிப் பேச்சுவார்த்தை’ நடத்த நான் தயார் என்று நாடகமாடுகிறார்.
அரசின் இத்தகு போக்குகளும் இன்றைய போர் அபாயத்திற்கு முக்கிய காரணம்தமிழ்நாட்டிலும் தாக்கம்தமிழ்நாட்டிற்கும் இலங்கையில் நிகழும் மோதல்களால் பல வகைகளில் தாக்கம் உண்டு. அதிக அளவில் அகதிகளாக ஈழத்தமிழர்கள் தங்களது வாழக்கையை இழந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டியது நிச்சயமாக மத்திய மாநில அரசுகளின் கடமை - அதனை இந்த அரசுகள் அக்கறையோடு செய்திட வேண்டும்.எனினும் அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகிற நிலையில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு அவர்களை பாதுகாத்து பராமரிக்கும் எனும் கேள்வி உள்ளது.
இப்போதே மண்டபம் முகாமில் உரிய வசதிகள் இல்லையென்ற புகார்கள் எழுகின்றன.மற்றொரு பிரச்னை, தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள். இலங்கைத் கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது.இலங்கைக்குள் மேலும் மேலும் கலவரமும், மோதலும் உருவானால் இங்கு நமது மீனர்வகளின் நிலை மிகவும் மோசமாகிடும்.எப்போதுமே தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது இனப்பாசம் உண்டு.
இது நியாயமானதே இந்த நியாயமான இனப்பாசம் எல்லைமீறி இனவெறியாக அவ்வப்போது சிலரிடம் பரிணமிப்பதுண்டு. ஒட்டுமொத்த சிங்கள மக்களை இன வெறியர்களாக கருதுவதும், விடுதலைப்புலிகளின் வன்முறையை ஆதரிப்பதும் சிலருக்கு இங்குவாடிக்கை.இதனால் கடந்தகாலத்தில் தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகளின் வன்முறை நிகழ்ந்ததுண்டு ராஜீவ் காந்தி படுகொலை விடுதலைப்புலிகளின் பாசிச முகத்தை எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். எத்தகு சூழலிலும் தமிழகம் வெளிநாட்டு, ஜனநாயக விரோத இயக்கங்களின் கனமாக மாறி அரசும், மக்களும் அனுமதிக்கக் கூடாது.இலங்கைத் தமிழர்களின் உரிமைகள்இலங்கையில் பெரும்பான்மை இனம் சிங்களவர் என்பதால் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழர்களுக்கு சமஉரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும். தமிழர் மொழி, பண்பாடு பாதுகாத்திற வளர்கிற பொறுப்பான அரசாக இலங்கையில் ஆட்சி புரியும் அரசு இருந்திட வேண்டும்.
தமிழர் வாழும் பகுதிகளின் சுயாட்சி பெற்ற மகாணங்களாக இயங்கிட வேண்டும். இந்தியாவில் பல மாநில அரசுகள் குறிப்பிட்ட அதிகாரங்களோடு, செயலாற்றிட, மத்தியில் ஒரு அரசு இயங்கிடும் நிலை உள்ளது. எனினும் இந்த மாடலில் கூட மத்தியில் அதிக அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன.இந்திய மாடல் போன்ற கூட்டாட்சி (பெடரல்) அமைப்பு இலங்கைக்கும் தேவை. அதில் வட மாநிலங்களுக்கு - தமிழர் வாழும் பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு - பரிபூரணமாக சுயாட்சி நடத்தும் வகையிலான அதிகாரங்கள் இருக்க வேண்டும்.எந்த வகையிலும் விடுதலைப்புலிகள் தனி ஈழம் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வாகாது.
இது தமிழ மக்களுக்கு மேலும், மேலும் இன்னல்களையே விளைவிக்கும். நவீன இலங்கையை உருவாக்குவதில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு, தமிழக உழைப்பாளி மக்கள் சிங்கள உழைப்பாளி மக்களோடு கரங்கோர்த்து, இனப்பிரச்சனைக்கு ஜனநாயகத் தீர்வினைத் கண்டால், இலங்கை விளங்கொழிக்கும் பூயாக மாறிவிடும்.பிரிவினை, ஏகாதிபத்தியர்களுக்கே உதவிடும்தனி ஈழம் தமிழக மக்களுக்கு பாதமானதாக அமைவது மட்டுமல்ல. இலங்கைக்கும், தென்கிழக்கு ஆசியாவின் நலனுக்குமே உகந்ததல்ல. இலங்கையிலிருந்து பிரிந்தால், ஆதரவற்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாகத்தான் தமிழ் மக்கள் வாழ வேண்டியிருக்கும். ஏற்கெனவே இந்தப்பகுதியின் கேந்திரமான முக்கியத்துவம் கருதி, வலுவான ராணுவத்தளம் அமைக்க வேண்டுமென்பது ஏகாதிபத்தியர்களின் ஆசை. ஏற்கெனவே அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பியகோ கார்சியா போன்ற பல இடங்களில் உள்ளன.
இங்கே வலுவான தளம் இருந்தால் ஆசியாவில் அராஜகம் செய்யலாம். இந்தியா, சீனா நாடுகளை மிரட்டலாம், வளங்களை சுரண்டலாம், இந்த பேரரசுகளின் இந்த விபரீதமான பேய்த்தனங்களுக்கு இலங்கை தமிழர்கள் பலியாவதா? அடிமைச்சேவகம் செய்த பல ஆப்பிரிக்க நாடுகளின் கதி என்ன? ஓட்டிய வயிறும், பாலுக்காக அழுது சாகும் குழந்தைகளின் காட்சிகள் ஏகாதிபத்தியங்களின் கைங்கர்யம் அல்லவா? இனி வரும் தலைமுறைகள் ஏன் இந்த அவலத்திற்கு ஆட்படவேண்டும்?சிங்கள உழைப்பாளர்களை திரட்டிட....சிங்கள இனவெறி தலைதூக்கி இருந்த காலத்தின் போது கூட, தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டுமென்ற ஜனநாயக எண்ணமும் சிங்களர் பலரிடையே இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் 1956-ம் ஆண்டு ஒரு கொடூரமான சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்தது. ‘சிங்களம் மட்டுமே’ ஆட்சிமொழ என்பதுதான் அந்த சட்டம். தமிழர், தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை வரலாற்றில் அது ஒரு கருப்பு அத்தியாயம். சிங்களம், தமிழ் இரு மொழகளுக்கும் சம அந்தஸ்து என்ற ஜனநாயக கோட்பாட்டிற்கு சமாதி கட்டும் வகையில் இலங்கை அரசு இச்சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.இதற்கான ஒட்டெடுப்பின் போது பாராளுமன்றத்தில் 66 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். முக்கிய திருப்பம் என்னவெனில் 29 ஓட்டுக்கள் இச்சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட இதில் கம்யூனிஸ்டுகளும் அடங்குவர்.
தமிழர் பிரச்சனைக்கு நியாயத்திற்கு தீர்வு வேண்டுமென்று சிங்களர்கள் மத்தியிலும் வலுவான கருத்து காலம் காலமாக இருந்து வந்தது, என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்த ஜனநாயக குரல் காலப்போக்கில் பலவீனம் அடைந்தது. சிங்கள இனவெறியோடு சேர்ந்து, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணம்.எனினும், சிங்கள உழைப்பாளி மக்களை திரட்டிடவும், தமிழர் உரிமைக்காக அவர்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும் வாய்ப்புக்கள் உள்ளன.இந்த ஒற்றுமை தான், சிங்கள இனவெறியை முறியடிக்கவும், தமிழர்க்கு உரிமை வழங்காமல் அடக்கிட நினைக்கும் இலங்கை அரசை சரியான வழிக்கு கொண்டு வரவும் உதவிடும்.இனப்பிரச்சனைக்கு ஜனநாயகத்தீர்வுஒன்றுபட்ட இலங்கைக்குள், சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாநிலங்களில், அனைத்து உரிமைகளும் கொண்டவர்களாக தமிழர்கள் வாழ்வதுதான் இலங்கைப் பிரச்சனைக்கு சீரிய தீர்வாக இருக்க இயலும்.இன்றைய நிலையில் சிங்கள இனவெறியர்கள் ஆதரவோடு இயங்கும் இலங்கை அரசு இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளாது என்பது உண்மையே - சிங்கள இனவெறியர்கள் பெடரல் முறையை ஏற்றுக்கொள்ளவில்ல. எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரே மத்திய அரசுதான் (ஹிஸீவீtணீக்ஷீஹ்) என்கின்றனர். மனித நாகரீகம் ஏற்றுக்கொண்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு இது எற்றதல்ல.
பாசிச வெறித்தனம் கொண்டவர்கள்தான் யூனிட்டரி அரசு என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.ஆனால், இது எல்லா சிங்கள இனத்தோரின் கருத்து அல்ல. ஜனநாயக எண்ணம் படைத்தோரும் அங்கு உள்ளனர்.தமிழர்கள் தங்களது உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுகிற போது, நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு பெருகிடும். இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே அவர்களுக்கு ஆதரவு பெருகிடும்.
இந்த உலக கருத்து என்று திரள்கிறபோது இலங்கை அரசு மீது அது வலுவாக நிர்ப்பந்தம் செலுத்திடும். இதற்கு இந்தியாவும் அரசு ரீதியாக உறவுகள் அடிப்படையில் இலங்கைக்கு நிர்ப்பந்தம் அளிக்கும். ஆனால், இவையெல்லாம், நிகழ்வதற்கு விடுதலைப்புலிகளின் செயல்பாட்டு முறை, உதவிடாது. அதன் வன்முறை, அதன் அணுகுமுறை எதுவுமே இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளை தீர்திட உதவிடாது.உடனடியாக செய்ய வேண்டுவது என்ன?இப்போதைக்கு, தற்போதுள்ள சிக்கலிலிருந்து விடுபட, இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை தொடருவதுதான் ஓரே வழி.
நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மக்கள் அமைதியுடன் வாழந்திட, இரண்டு தரப்பாரும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வுகாண முன்வர வேண்டும்.இந்த நிலையில் இந்திய அரசு செய்திட வேண்டியது என்ன?இந்தியாவின், இலங்கை கொள்கையில் முக்கிய அம்சமாக இருந்து வருவது, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நியாயத்தீர்வு காண்பதும், அவர்களது உரிமைகளைப் பெற ஒத்துழைப்பதும்தான்.ஆனால், இந்த ஆதரவு என்பது நேரடித் தலையீடாக இருந்திட கூடாது. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக இருத்தல் வேண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர இந்தியாவும் குரல் கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம், தீர்வுகள் கண்டிட இந்தியா தனது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
3 comments:
நல்ல கட்டுரை...நீங்கள் வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் தரத்துடன் எழுதுகிறீர்...
ஒரு சிறு குறை - சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர் என்று தெரியும்..
சிறிய பத்திகளாக - பிரித்து எழுதினால் வாசிக்க எளிமையாக - இருக்கும்..
LTTE or EELam Tamils dont like to depend on India. they changed their way. I hope this is good idea. India is not a powerful country. even she cant solve its kashmir or pakistan troubles.
India has secret link with colombo.
north india cheat tamilnadu and Ceylon, ceylon Tamils.
First and formost understand the ground reality in Tamil Provinves in Srilanka. It seems that you do not know the fundamental problems in Srilanka.Learn the fundamental
tamil problem first then give your openion.From your article I can come to the understanding that you are ignorant of the basic problem.
Post a Comment