February 23, 2009

என்னைக் கவர்ந்த விபச்சாரிகள்!


ரெட் லைட் ஏரியா, சிவப்பு விளக்கு பகுதி, பாங்காக் முதல் பாம்பே வரை வியாபித்து விரவிக் கிடக்கிறது. சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எங்கெங்கும் வியாபித்திருக்கும் விபச்சாரம். இது யாரால் உருவானது? எப்படி உருவானது என்பதற்கு சுலபமான விடை இது சமூகத்தால் உருவாக்கப்பட்டது.


ஒரு காலத்தில் மன்னர்களின் அந்தப்புரத்தை அலங்கரித்தவர்கள். நூற்றுக்கணக்கான அந்தப்புர அழகிகளின் மயக்கத்திலேயே காலத்தை கழித்தவர்கள் மகா சக்கரவர்த்திகள். மன்னர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!


இதுவே நிலப்பிரபுக்களின் காலத்தில் "கோவிலுக்கு பொட்டுக் கட்டி" ஆடவிட்டு ஆசை நாயகியாக்கியவர்கள் ஏராளம்... ஏராளம்...


காலத்தின் கோலத்தால் தகுதிக்கேற்றபடி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் கடைத்தெரு வரையிலும் தகுதிக்கேற்றபடி விபச்சாரம் நடக்காமலா இருக்கிறது! இவர்களையெல்லாம் உருவாக்கியது இந்த சமூகம்தான். விபச்சாரத்தை கண்டு ஆசாரமாக முகம் சுளிப்பவர்கள், ஏளனமாய் பார்ப்பவர்கள், இருட்டிலே வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் உண்மைக் கதைகளை அறியாதவர்கள். சமூகம் இவர்களை ஒதுக்கினாலும், சமூகத்தை இவர்கள் ஒதுக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களின் சிலர் குறித்து எழுதுவதே இப்பதிவின் நோக்கம்.


சென்னை பூக்கடை - பிராட்வே பகுதியில் உள்ள ஆறுமுகம் தெருவை தேவடியாள் (தேவர்களின் அடியாள்) தெருவென்றே அழைப்பார்கள். மாலை நேரங்களில் மங்கும் ஒளியில்தான் இவர்களது வாழ்க்கைக்கான பயணம் ஆரம்பிக்கும்.


அடிமைப்பட்டிருந்த இந்தியாவை பிரிட்டிஷ் கழுகுகளிடம் இருந்து மீட்பதற்காக நாடு முழுவதும் மக்கள் எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. மகாத்மாவின் அந்நிய துணி எரிப்பு போராட்டம், தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம்.


பிரிட்டிஷ் ஏவலாளிகளான போலீசாரின் லத்திக் கம்புகள் நாள்தோறும் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. அடக்குமுறை அந்த அளவிற்கு இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், 1930களில் ஜமதக்கனி என்ற காங்கிரஸ் தொண்டர் தனிநபர் துணிக்கடை மறியலை பிராட்வேயில் நடத்தினார். சும்மா விடுமா காக்கிச் சட்டை! அதுவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காக்கிச் சட்டையாச்சே! அன்றைய தினம் நாள்தோறும் ரத்தத்தை சுவைத்த லத்திக் கம்புகளுக்கு ஓய்வு கொடுத்தது காவல்துறை. அதற்கு பதிலாக வேறு ஒரு உத்தியை கடைப்பிடித்தது. எப்போதும் காவலர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஒரு பேட்டை ரவுடியை ஜமதக்கனி மீது ஏவி விட்டது.


1980க்கு முன்னால் இப்போது இருப்பது போல் வீச்சரிவாள் எல்லாம் கிடையாது. பட்டன் கத்திதான் ரொம்ப பேமஸ். போலீஸ் ஏவிய அந்த சமூக விரோத தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த ஜமதக்கனியின் மண்டையில் ஒரு பேனக் கத்தியை இறக்கி விட்டான். அவ்வளவுதான் துடி துடித்துப் போனார் ஜமதக்கனி. இரத்தம் பீறித்து அடிக்க அவர் துடித்துக் கொண்டிருந்தால்தான் என்ன, செத்துப் போனால்தான் என்ன? அவரை காப்பாற்றுவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வதற்கோ மக்கள் முன்வர பயந்தனர். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் கொடுமை மிகுந்திருந்த காலம். என்று


அது மட்டுமா? இப்படிப்பட்ட சுதந்திரப் பித்தர்களுக்கு யாராவது மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தால் அவர்களது பிழைப்பும் போய்விடும். அந்த அளவுக்கு கெடுபிடி. எப்படியோ ஜமதக்கனியின் நண்பர் ஒருவர் அவரை ரத்தம் துடி துடிக்க தூக்கிச் சென்றார் மருத்துவமனைக்கு அல்ல. தேவடியாள் தெருவிக்கு, அதான் ஆறுமுகம் தெருவுக்கு! அங்கே ஒரு வீட்டில் அவர் கதவை தட்டி உள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு பெண் பதறிப் போய் என்ன ஏது என்று கேட்காமல் அப்படியே அவர்களை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாழிட்டால். தன்னுடைய படுக்கையில் ஜமதக்கனியை அப்படியே படுக்க வைத்து விட்டு, அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரை அழைத்து வந்தார். அந்த மருத்துவரும் மிகுந்த பயத்தோடு ஜமதக்கனியின் தலையில் சொருகப்பட்ட கத்தியை பக்குவமாக எடுத்து, மருந்திட்டு வைத்தியம் பார்த்தார். இந்த தகவல் யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட இரண்டு மாதக்காலம் ஜமதக்கனியை அந்த வீட்டிற்கு உள்ளே வைத்திருந்து வைத்தியம் பார்த்தார். அதுவரை அந்த பெண்ணின் முன் வாசல் கதவு யாருக்கும் திறக்கப்படவேயில்லை. வாடிக்கையாளர்கள் வருந்தினர்! என்ன ஏது என்று தெரியாமல் விழித்தனர். இருந்தாலும் கதவு திறக்கப்படவில்லை.


இரண்டு மாதம் கழித்து சுதந்திரப் பித்தர் ஜமதக்கனியின் உடல் நலம் தேறியவுடன் அந்த இதயம் உள்ள பெண்ணிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யத் துவங்கினார். அந்த பெண் இவரிடம், "என்னை இப்படியே விட்டு விட்டுச் சென்றால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூற, இவரோ, நான் ஏற்கனவே தேச சுதந்திரத்தை திருமணம் செய்து விட்டேன் எனவே உங்களை மறுமணம் செய்ய முடியாது என்று கூறிவிட, "நான் என்ன செய்வது? எனக்கு ஒரு வழியைச் சொல்லுங்கள்" என்று வற்புறுத்த... ஜமதக்கனியும், நீங்களும் தேசத்திற்காக மகாத்மா கூறிய வழியில் நூல் நூற்றுக்கொண்டே வாழ்ந்து விடுங்கள் என்று கூற அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அந்த பெண் தனது இறுதிக்காலம் வரை மேற்கொண்டிருக்கிறார். இவரது மிக நெருங்கிய உறவினர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்வாசலை மூடியவர் சுதந்திர வாசலை திறப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் இந்த உத்தமமான பெண்ணை யாரால் மறக்க முடியும்!


ஏறக்குறைய இதே காலகட்டம் "கீழ வெண்மணி" கதாநாயகன் என்று இன்றும் போற்றப்படுபவர் பி.எஸ்.ஆர். (பி. சீனிவாசராவ்) கர்நாடகத்திலிருந்து தாய், தந்தை, சொந்தம், பந்தம் என்று அனைத்தையும் துறந்து, கல்விச் சாலையில் படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திர தாகம் பெற்று அனைத்தையும் தூக்கி்யெறிந்து விட்டு அரைக்கால் சட்டையோடு - தனது ரோஜசாப் பூ நிற வண்ணத்துடன் தான் பிறந்த பிராமண குல ஆசாராங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு சுதந்திர நீரோட்டத்தில் இணைந்தார்.


ஜமதக்கனியைப் போலவே இவரும், காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திர ஜோதியில் கலந்தவர். இவரும் 1930களில் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டார். போலீசாருக்கு மிகுந்த பரிச்சயமானவர் பி. சீனிவாசராவ். முதல் நாள் போலீசாரிடம் பழுக்க அடி வாங்கி விட்டு, மறுநாள் அதே இடத்தில் மீண்டும் மறியலில் ஈடுபட்டு மறுநாளும் லத்திக் கம்புகள் முறியம் வரை அடி வாங்குவார்... சிறை செல்வார்... இதுதான் இவரது வாடிக்கை, வழக்கம். கிட்டத்தட்ட 8 முறை இதுபோல் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டு அடி வாங்கி சிறை சென்றுள்ளார். பிராட்வே துணிக்கடையில் வியாபாரம் சூடு பிடிக்கிறது என்றால் பி.எஸ்.ஆர். அடி வாங்குகிறார் என்று அர்த்தம்.


இப்படி ஒரு நாள் மறியல் செய்து கொண்டிருக்கும் போது நாள்தோறும் தண்ணிக்காட்டும் இவனை இல்லாமல் செய்து விட்டால்தான் நமக்கு தூக்கம் பிடிக்கும் என்று தீர்மானித்து போலீஸ் புடை சூழ வருகை தந்து நொய்யப் புடைத்து விட்டனர். பி.எஸ்.ஆர். அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலை உயிருமாக, ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார். பிரிட்டிஷ் நாய்கள் அத்துடன் விட்டதா? இவன் செத்துப் போய்விட்டான் என்று கருதி கூவம் சாக்கடையில் வீசிவிட்டுச் சென்று விட்டனர்.


மாலை நேரம் பொழுது இருள் கவ்வத் தொடங்கியது நட்சத்திரங்கள் தலைகாட்டத் தொடங்கின. யார் கண்ணிலும் படாமல் ஒரு தாய் ஓடி வந்தார், கூவத்தின் சாக்கடையோடு - ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பி.எஸ்.ஆர்.ன் இதயத்தில் கை வைத்துப் பார்த்தார் அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அவரை தூக்கிச் சென்று தனது வீட்டில் வைத்து அவரை சுத்தம் செய்து, வைத்தியம் பார்த்தார். தாயின் அன்பை நினைவூட்டும் அந்த அம்மையாரின் செயலை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று பி.எஸ்.ஆர். கூறியிருக்கிறார். அவரும் ஒரு விலைமாதர் என்பதுதான் விதி! இருந்தாலும் என்ன? செவ்வாழை சிறு கதை எழுதி நிலப்பிரபுவின் சுரண்டல் மனப்பான்மையை படம் பிடித்த அண்ணா அவர்களின் கதையில் வரும் பெரும் நிலப்பிரபுவின் கோட்டையாக இருந்த தஞசை மண்ணை சிவப்பாக்கியவர். "அடித்தால் திருப்பி அடி", "இடுப்பில் இருக்கும் துண்டை தோளில் போடு" என்று அடிமைகளாய் இருந்த கூலி விவசாயிகளுக்கு போர்ப்பரணி கற்றுதந்த... விடுவித்த வீரனுக்கு மறுவாழ்வளித்தவர் அந்த தாய். இந்த விபச்சாரியை வரலாறுதான் மறக்குமா? பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட கைத்தடிகள் இன்றைக்கு மண்ணோடு மண்ணாய் புதைந்து போய்விட்டார்கள் ஆனால், அந்த விபச்சாரி!


அடுத்து இந்த வரிசையில் உலக இலக்கியத்தில் மங்காத இடம் பெற்றிருப்பது "யாமா". இது ஒரு ரஷ்ய விபச்சாரி குறித்த கதை. அலக்சாண்டர் குப்ரினின் புரட்சிக் கதாநாயகி. யாமா ரஷ்யாவின் புகழ்பெற்ற ரெட் லைட் ஏரியா. ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த யாமாவுக்குள் அடக்கம். சொல்லப்போனால் பல ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் மையமாக யாமா செயலாற்றியது.


இப்படியான ஒரு விபச்சார விடுதிக்கு வருகிறாள் ஒரு ரஷ்யப் பெண் (பெயர் நினைவில் இல்லை.) இவளது அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு உடல் அமைப்பும், முக அழகும் ஒருங்கே பெற்றவள். புதிதாக விபச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக இந்த விடுதி உரிமையாளரிடம் கூறுகிறாள். அவளும் பல கேள்விகளை கேட்கிறாள்? எதற்காக நீ விபச்சாரத்தில் ஈடுபடுகிறாய்? குடும்பத்தில் சண்டையா? அல்லது வறுமையா? அல்லது வேறு நீ ஏதாவது போலீஸ் உளவாளியா? என்றெல்லாம் கேட்கிறாள். அனணத்துக்கும் இல்லை என்று பதில் கூறும் அந்த நாயகி, "ஆண்கள் மீது மோகம்; எனவே, அதிகமான ஆண்களை அனுபவிக்க வேண்டும்" என்ற தனியாத ஆசையே காரணம் என்று கூறுகிறாள்.
இருப்பினும் இது விபச்சாரம் என்பதால் நீ இங்கே கூச்சப்படக் கூடாது என்று அறிவுரை கூறி விபச்சாரத்திற்கு பொருத்தமானவளா என்று சோதனை செய்கிறாள். அதாவது அவளது உடலில் உள்ள அனணத்து துணிகளையும் நீக்கச் சொல்கிறாள், கதாநாயகியும் எந்தவிதமான கூச்சமும் இல்லமல் அனணத்து துணிகளையும் அப்படியே அவிழ்த்துப் போடுகிறாள். பின்னர் அவளது வாழைத் தண்டு போன்ற வளவளப்பான தொடைகளையும், மார்பகத்தையும் வேறு சில இடங்களையும் கையை வைத்து அழுத்திப் பார்த்து சோதனை செய்கிறாள். பின்னர் அவள் நீ ஒரு முதல்தரமான ஆள்தான் என்று கூறி. விடுதியின் சட்ட - திட்டங்களை எல்லாம் கூறுகிறாள். இங்கே பல அசிங்கமானவர்கள் கூட வருவார்கள். ஆனால், நீ அதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுகிறாள்... அவள் அனைத்திற்கும் சம்மதிக்கிறாள். மறுநாளிலிருந்து அன்னா மார்க்கோவா விபச்சார விடுதி புதிய களை கட்டுகிறது. வருகிற அத்துனை கஸ்டமர்களும் புதியதாக வந்தவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். தொடர்ந்து சில மாதங்கள் நகர்கின்றன. இருந்தாலும் அந்த விடுதியை நடத்தும் அன்னாவிற்கு ஒரே குழப்பம். வருகிறவன் எல்லாம் அவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஒரு முறை வந்த பிறகு பின்பு வரவே மாட்டேங்கிறார்களே அது ஏன் என்று சக விபச்சாரிகளிடம் கேட்கிறாள். அதற்கு அவர்கள், அவள் படுக்கையில் சிணுங்க மாட்டேங்கிறாள்... சரியான ஒத்துழைப்பு தர மாட்டேங்கிறாள் என்று கூறுகிறார்கள். விடுதி உரிமையாளர் அந்த நாயகியை அழைத்து விசாரிக்கிறாள். நீ போலியாக சினுங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவள் அதற்கு நான் அப்படி செய்ய முடியாது, அப்படியெல்லாம் போலியாக நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாள். உடனே இருவருக்கும் வாய்த்தகராறு முற்றுகிறது. இறுதியில் விடுதி உரிமையாளரை போலீசில் மாட்டி விடுவேன் என்று கூறுகிறாள் கதாநாயகி.


"இருந்தாலும் என்ன அவள் பழம் பெருச்சாளி அல்லவா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது பாப்பா இங்க இருக்கிற ஜீல்லா இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு அய்யா வரை நம்ம கஸ்டமர். என்னை மீறி ஒரு பயலும் எதுவும் செய்ய முடியாது" என்று ஆணவமாக கொக்கரிப்பதோடு, இனிமேல் உனக்கு பாதுகாப்பு போட வேண்டியதுதான் என்று சத்தமிட்டாள்.


இந்நிலையில், சில நாட்கள் கழித்து அந்த கிழப்பெருச்சாளி கூறிய அதே இன்ஸ்பெக்டர் பூனையைப் போல் பம்மிப் பம்மி ஒரு உயர்தர அதிகாரியுடன் வேகவேகமாக அந்த விபச்சார விடுதிக்குள் நுழைகிறார். அந்த கிழட்டு சனியனை - விடுதி உரிமையாளரை கூப்பிட்டு, அந்த கதாநாயகியின் பெயரைச் சொல்லி இந்த அம்மா இங்கே இருக்கிறாரா என்று மிகுந்த பயம் கலந்த மரியாதையோடு கேட்கிறார். அவளும் பதறிப்போய் ஆமாம் என்றுச் சொல்ல! உடனே அந்த அம்மாவை கிளம்பி வரச்சொல் என்று மிரட்டுகிறாள். அந்த விடுதி உரிமையாளரோ அவரிடம் எனக்கு சில பாக்கிகள் இருக்கிறது என்று சொல்ல! கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் ஏ கிழட்டு சனியனே அவர் யார் தெரியுமா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்த... உடனே பதறிப்போய் அந்த நாயகியை அழைத்து... உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி கிளம்பச் சொல்கிறாள்.


உதவிக்கு போன பெண் அந்த நாயகியிடம் கேட்கிறாள், இப்போது புரிந்து விட்டது நீங்கள் பெரிய இடத்திலிருந்து வருகிறீர்கள். வந்திருப்பவர் உங்கள் வீட்டுக்காரரா? என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்? சகோதரரா என்று கேட்க அதற்கும் இல்லை என்கிறாள்? பின்னர் அவர் என்னுடைய நண்பர் என்று மட்டும் உரைக்கிறார். அது சரி எதற்காக நீங்கள் இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு நாயகி, நான் ஒரு எழுத்தாளர் விபச்சாரம் குறித்து ஒரு புத்தகம் எழுத உள்ளேன் அதற்காக வந்தேன் என்று கூறுகிறாள். பின்னர் தயாரான நிலையில் வாசலை நோக்கி வந்தவுடன் அந்த இன்ஸ்பெக்டர் காலில் விழாத குறையாக நாயகியிடம் மிகப் பணிவாக நடந்துக் கொள்கிறார்.


சில வருடங்கள் கழிகிறது. மீண்டும் வேறு ஏதோ ஒரு வேளையாக அதே விபச்சார விடுதிக்கு வருகிறார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது அந்த விடுதி உரிமையாளர் - கிழட்டு சனியன் அந்த பெண் குறித்து கேட்க, "முகம் மாறிப்போன அந்த இன்ஸ்பெக்டர், அந்த தேவடியாள் நம்மை ஏமாற்றி விட்டாள். அவளை கூப்பிட வந்தவனும் மகாராணியின் உயர் அதிகாரியில்லை. இரண்டு பேருமே புரட்சிக்காரர்களாம்? அவள் இங்கே விபச்சாரம் என்ற போர்வையில் புரட்சிக்கு ஆள் பிடித்திருக்கிறாள்" என்று மூச்சு இறைக்க கூறுகிறான். அது சரி இப்போது அவள் என்ன ஆனால்? என்று கண்களை அகல விரித்துக் கேட்க, "அவள் மன்னர் மீது குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்குப் போய்விட்டாள், அவன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று" முடித்தான்....

l
இந்த விபச்சாரியை உங்களுக்கும் பிடித்திருக்கும்... படியுங்கள் நக்கீரன் வெளியீட்டில் வந்திருக்கும் "யாமா" என்ற புத்தகத்தை... அதன் முழுமையான இலக்கிய மற்றும் கருத்தை சுவைத்திட.
இவர்களே எனக்குப் பிடித்த விபச்சாரிகள்! இதுபோல் இன்னும் ஏராளம், ஏராளம்... விபச்சாரம் எப்படி இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறது என்பதையும் "ஏழை படும் பாட்டையும்" படிக்கலாம்!



9 comments:

Anonymous said...

அந்த ஜமதக்கினிதான் பின்னர் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தை தமிழில்
முதலில் முழுமையாக மொழிபெயர்த்தார்.

vimalavidya said...

A brave,bold and beautiful post.A negative images has been utilized for positive matters.A good book has been introduced thrillingly.
Such incident had occurred in Kerala chief minister late Mr.E.K.Nayanar life also.Once he was in underground life to escape from police he had to spend the day in one "prostitute"s house.After many year Mr.E.K.Nayanar remembered that incident in one article.
Santhippu Sir ! after many tension articles you have given a relaxed one.good sir- Selvapriyan

Anonymous said...

////என்னைக் கவர்ந்த விபச்சாரிகள்!////

சந்திப்பு அவர்களே!

இந்த தலைப்பைப் பார்த்தவுடன் கருணாநிதியுடனும், ஜெயாமாமியுடனும் தேர்தலுக்குத் தேர்தல் புரட்ச்ச்ச்ச்ச்சிகர அணி மாற்றம் செய்து அரசியல் விபச்சாரம் செய்யும் உங்க கட்சியின் பொலிட்பீரோ மாமாக்களைப்பற்றித்தான் சொல்லியிருப்பீர்கள் என்று நினைத்தேன்.

அதுசரி, எங்கெங்கோ பாம்பே, அங்கே இங்கேன்னு விபச்சாரம் நடப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள், உங்கள் முப்பதாண்டுகால ஆட்சியின் சின்னமாகத்திகழும் கல்கத்தா ரெட்லைட் ஏரியாவைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டீர்களா!?

Anonymous said...

விபச்சாரிகள் பற்றிய இந்தப் பதிவு சற்று யோசித்து வடிவம் மாற்றி எழுதுங்கள். மறுபடியும் எழுதுங்கள்.நல்ல சிறுகதையாக இருக்கும்.

சந்திப்பு said...

அன்புள்ள செல்வப்பிரியன் தங்களது சீறிய பதிலுக்கு மிக்க நன்றிகள். குறிப்பாக கேரள மாநில முன்னாள் முதல்வர் இ.கே. நயினார் அவர்களின் வாழ்க்கையிலும் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்.

சந்திப்பு said...


தேர்தல் புரட்ச்ச்ச்ச்ச்சிகர அணி மாற்றம் செய்து அரசியல் விபச்சாரம் செய்யும் உங்க கட்சியின் பொலிட்பீரோ மாமாக்களைப்பற்றித்தான் சொல்லியிருப்பீர்கள் என்று நினைத்தேன்.


மக்களுக்கு சேவை செய்வதற்காக மாமா வேலை பார்ப்பது ஒன்றும் தவறில்லை. உங்களைப் போல் எட்டப்பன் வேலைதான் பார்க்கக்கூடாது! தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் குத்தும் ஈன வேலைதான் பார்க்கக்கூடாது.

சந்திப்பு said...


விபச்சாரிகள் பற்றிய இந்தப் பதிவு சற்று யோசித்து வடிவம் மாற்றி எழுதுங்கள். மறுபடியும் எழுதுங்கள்.நல்ல சிறுகதையாக இருக்கும்.


தங்களது கருத்து சிந்திக்கத்தக்கது. நன்றி... முயற்சிக்கிறேன்.

Anonymous said...

சந்திப்பு அவர்களே, உங்கள் பதிவுகளுக்கு வரும் மறுமொழிகளில் பிரசுரத்திற்கு லாயக்கற்றவைகளும் உள்ளன.ஏக வசனங்களும்,அரசியலில் மாறுபடுபவர்களை கேவலமாக சித்தரிப்பதும், மாமாக்கள் என்று எழுதுவதும் என வருகின்றன. அவற்றை சாதாரணமான என்போன்றவர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே பிரசுரத்திற்கு லாயக்கற்ற மறுமொழிகளை வெளியிடாதீர்கள்.

baappu said...

தோழர் சந்திப்பு அவர்களுக்கு வணக்கம்,

சிற‌ந்ததொரு பதிவு. சமூகத்தில் கீழ்நிலை தொழில் செய்ய நிர்பந்திக்கபட்டவர்களுக்குள் இருக்கும் மனிதத்தன்மையை படம் பிடித்துகாட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

அனாமி பின்னூட்டமிட்ட நண்பரின் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன். நல்ல சிறுகதையாக எழுத முயர்சிக்கலாமே.