February 20, 2009

காக்கிச் சட்டையும் கருப்புக் கோர்ட்டும்






சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற கோரமான மோதல் நடைபெற்றபோது கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த காவல்துறையின் செயல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

அதேபோல், நேற்றைய தினம் காவல்துறைக்கும் - வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதல் அதைவிட பன்மடங்கு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த தாக்குதல் சம்பவம் மிகக் கோரமாக நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என அந்த வளாகத்திற்கு உள்ளே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கி, தங்களது தடியின் வலிமை எப்படிப்பட்டது என்பதை காட்டியுள்ளது காவல்துறை.

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த கடமைப்பட்ட காவல்துறையே வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டால், சட்டமும் - கட்டுப்பாடும் எதற்கு என்ற கேள்வியே எழுகிறது. நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட சூழலில் யார் தவறு செய்தவர்கள், கலவரம் நிகழ்வதற்கு யார் காரணம்? காவல்துறையே திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதா? அல்லது கலவரம் நடைபெற வேண்டும் என்பதற்காக யாராவது மறைமுகமாக தூண்டி விட்டார்களா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. எப்படி இருந்தாலும் விசாரணை முடிவை தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த விசாரணைக்குள் இந்த பதிவு புக விரும்பவில்லை. ஆனால் ஒரு உண்மை அடிபட்டவர்களில் 95 சதவிகிதம் வழக்கறிஞர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அப்பாவிகள் என்பதுதான்.

தமிழக அரசியல் களமே இலங்கைப் பிரச்சனையில் பன்முனைகளில் பிரிந்து நிற்கையில், நமது வழக்கறிஞர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?. அவ்வாறு இருக்கையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ள நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கையால் அயர்வுற்ற பல வழக்கறிஞர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை ஒட்டுமொத்தமாக முடங்கிக்கிடப்பது சரியா? என்ற கேள்வியை தங்களுக்குள்ளேயே எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் என்ன? உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பதுதானே மனித குலம். இதற்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கானவர்களா என்ன? ஆனாலும், இந்த (தமிழ்)உணர்ச்சியையை முதலாக வைத்து வியாபாரம் செய்துக் கொண்டு வருகிற அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வழக்கறிஞர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? தற்போதைய சம்பவத்தின் மூலம் மேலும் சில நாட்கள் நீதிமன்றம் ஓய்வெடுத்துக் கொள்ளலலாம்! ஆனால் நீதிக்காக ஏங்கும் அபலைகளின் கண்ணீர் யாரால் துடைக்கப்படுமோ?

இறுதியாக, காவல்துறையினரின் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தரைத்தளத்திலும், மூன்றாவது மாடியிலும் 60க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் மீது விழுந்த அடியும் காவல்துறையின் கண்ணியக்குறைவை பறை சாற்றுவதாகவே இருக்கிறது.

தடியடித் தாக்குதல் என்றால் முட்டிக்கு கீழேதான் தாக்கவேண்டும் என்பதெல்லாம் மரபாகிப் போய் மரத்துப்போயுள்ளது காவல்துறைக்கு. அதனால்தான் அவர்கள் தலையில் தாக்கியுள்ளனர். மண்டை உடையாதவர் களை பார்ப்பதே அபூர்வம் என்பதுபோல்தான் இருந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கண்ட காட்சிகள்.

ஒரு நடுத்தர வயதுள்ள வழக்கறிஞர் நீதிமன்ற நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். வெளியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாதாம். தாக்குதல் தொடங்கிய சில மணித்துளிகளில் குவிக்கப்பட்டிருந்த 5000 போலீசும் நீதிமன்றத்தில் உள்ள அத்துனை அறைகளுக்கு உள்ளேயும் - வெளியேயும் சென்று கோர நர்த்தணம் ஆடியுள்ளனர். இதில் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவி வழக்கறிஞரும் காவல்துறையின் லத்திகளுக்கு இரையாகி மண்டை உடைந்து காணப்பட்டார். "நாங்கள் அப்பாவிகள்? ஏன் இவ்வாறு போலீஸ் நடந்துக் கொண்டது? நாங்கள் என்ன செய்தோம்? என்று மனம் உருக கேள்வி எழுப்பினார்".

இன்னொரு நீதிமன்ற ஊழியர் அவரது அரைக்குள்ளே இருந்தபோது கலவரத் தடுப்பு காவலர்கள் உள்ள நுழைந்ததும், "அய்யா என்னை விட்டு விடுங்கள் என்று காலில் விழுந்துள்ளார்? காவல்துறைக்கு இதயம் இருந்தால்தானே இந்த அபலையின் குரல் கேட்க! விழுந்ததே போதும் என்று மிதித்து துவைத்துள்ளனர்."

இன்னொரு வழக்கறிஞர் தப்பித்தால் போதும் என்று ஓடி ஒரு ரூமிற்குள் ஒளிவதற்கு சென்றபோது, "உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவோம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று துப்பாக்கி முனையில் மிரட்டி பதம் பார்த்துள்ளனர்.

வேறு சிலர் கும்பலாக நீதிபதிக்கு பக்கத்தில் போய் நிற்கையில், அவர் ஓடாதீர்கள், "இங்கேயே உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் உட்கார வந்த வேகத்தில் அவர்களை துவம்சம் செய்து விட்டார்கள் ரியோட் கண்ட்ரோல் போலீசார்".

இன்னொரு சிவப்பான இளம் வழக்கறிஞரை "தோள்பட்டைகள், முதுகு, கழுத்து என்று மேலும் சிவக்க வைத்துத்துள்ளதோடு, காவல்துறையின் கொடிய பூட்ஸ் கால்களால் மதித்துள்ளனர். இதில் அவரது ஒரு கை செயலிழந்து விட்டதாக கூறினார்"

இப்படித்தான் ஒவ்வொருவரது கதையும்... நீண்டுக் கொண்டே இருக்கும்! காவல்துறை இதற்கு மேல் எல்லை மீற முடியாது என்ற அளவிற்கு தங்களது அனைத்து எல்லைகளையும் தாண்டி கொடூர வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய வன்முறை ஒரு சுதந்திர சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

இன்னொரு புறத்தில் டி.வி.யில் கண்ட காட்சிகள் தற்போதைய வழக்கறிஞர்களின் செயல்பாடுகளைக் கண்டு முகம் சுளிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பேட்டை ரவுடிகளிடம் இருந்தும், சமூக விரோதிகளிடம் இருந்தும் பாதிக்கப்படும் மக்களை சட்டத்தின் முன் நிறுத்தி சமூகத்தை காக்க வேண்டிய வழக்கறிஞர்களே பேட்டை வஸ்தாதுகளைப் போல் கல்லெறிவதும், காவல்துறையை சூறையாடுவதும், அங்கிருந்த ஆவணங்களை கொளுத்துவதும், எந்தவிதமான சமூகப் பொறுப்பும் இன்றி - வெறியாட்டம் ஆடுவதும் சட்டம் படித்து விட்டதாலேயே அதற்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதைப் போன்ற தினமணியின் நியாயமான தலையங்கத்தைத்தான் உணர்த்துகிறது. நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நீதி தவறிய குற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். முட்டை அடிப்பதும் - கல்லெறிவதும் நீதியைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் தங்களது கருப்புச் சட்டைகளை கழற்றி வைத்து விட்டு அதையே தொழிலாகக் கொள்ளலாம். சமூகம் இவர்களது செயலை ஏற்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் தேசத்தின் ஜனநாயகத்தையும் - மக்களின் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தும் மிக முக்கியமான ஜனநாயகத் தூண்களில் ஒன்றுதான் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவர்கள் வழங்கும் நீதிக்காகவே - நியாயத்திற்காகவே தலைவணங்கப்படுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு தலைமை நீதிபதிதான் காரணம் என்று சென்னை மருத்துவமனையில் அடிபட்டவர்களை பார்க்க வந்த நீதிபதிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், முழக்கம் எழுப்பியும், அவர்களை பார்க்க அனுமதிக்காமல் வெளியேற்றிய சம்பவங்களை பார்த்த பொதுமக்களுக்கு நீதிபதிகள் மீதான மரியாயும், வழக்கறிஞர்கள் மீதான மரியாதையும் காற்றில் கரைந்து போனது! வழக்கறிஞர்ளின் இத்தகைய செயலை நாகரீக சமூகம் ஏற்காது!
தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது? அல்லது எதை நோக்கி செல்ல சதி தீட்டப்படுகிறது என்பதை ஆட்சியாளர்களும் - மக்களும் விழிப்பாய் இருந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டிய நேரமிது.

22 comments:

Anonymous said...

//ஆனால் ஒரு உண்மை அடிபட்டவர்களில் 95 சதவிகிதம் வழக்கறிஞர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அப்பாவிகள் என்பதுதான்.//

அந்த 95 சதவீத அப்பாவிகள் யார் என்பதையும் மீதமுள்ள 5 சதவீத பாவிகள் யாரென்பதையும் அவர்களை ஏன் அவ்வாறு வரையறுக்கிறீர்கள் என்பதையும் விளக்கினால் உரையாடுவதற்கு உதவியாயிருக்கும்.

//அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை//

புரியவில்லையே, கம்யூனிஸ்ட்களின் அரசியல், வர்க்க அரசியலென்றால், வர்க்கத்திற்கப்பாற்பட்ட நீதியென்ற ஒன்று இருக்கிறதா என்ன?

//காவல்துறையின் கண்ணியக்குறைவை பறை சாற்றுவதாகவே இருக்கிறது.//

காவல்துறையினரிடம் இவ்வளவு நாள் கண்ணியம் இருந்ததாக நீங்கள் நம்பி கொண்டிருந்தீர்களா?

//முட்டை அடிப்பதும் - கல்லெறிவதும் நீதியைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் தங்களது கருப்புச் சட்டைகளை கழற்றி வைத்து விட்டு அதையே தொழிலாகக் கொள்ளலாம்//

அய்யா சந்திப்பு, போர் குற்றவாளி அமெரிக்க புஷ்சின் மீது ஸெய்தி செருப்பு வீதியதை பாராட்டிய உங்களுக்கு சுப்ரமணியசாமியின் மீது முட்டை வீசியதும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே ஏன்? முட்டையடிப்பதாலும், கல்லெறிவதாலும் நீதி வருமென்று இங்கு யாருமே நம்பவில்லை... சுப்ரமணியசாமி என்ற அமெரிக்க கைக்கூலியின், பார்ப்பன திமிரையும், ஈழமக்களின் துயரங்களை கொச்சைபடுத்தும் விதமாக அவன் தொடர்ந்து பேசி வருவதற்கு எதிர்ப்பை காட்டவே அவன் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது, இது தவறெனில், சப்ரமணிய சாமியை எப்படி கண்டிப்பது, அவனை எப்படி எதிர்கொள்வது என்ற வழிமுறைகளை கூறுங்கள்.. மேலும் புஷ்சின் மீது செருப்பு வீசிய ஸெய்தியின் செயலை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்றும் விளக்கப்படுத்துங்கள்.

ஈழ முத்துக்குமரன்

hariharan said...

காக்கிச்சட்டைகளும் கருப்புக்கோட்டுகளும் மோதிக்கொள்வது முதல்முறையல்ல.

சில மாதங்களுக்கு முன்னர் காக்கிச்சட்டைகள் தங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மாணவர் மோதல்களை கண்டுகொள்ளாமல் குற்றமிழைத்தனர்,இப்பொது நீதிமன்றத்தையே கலவர பூமியாக மாற்றிவிட்டனர். முழுமையாக விசாரனை நடத்தப்பட வேண்டும். நமது காவல்துறை கிரீஸ் நாட்டு போலீசிடம் பயிற்சி பெற வேண்டும்.

சந்திப்பு said...


அந்த 95 சதவீத அப்பாவிகள் யார் என்பதையும் மீதமுள்ள 5 சதவீத பாவிகள் யாரென்பதையும் அவர்களை ஏன் அவ்வாறு வரையறுக்கிறீர்கள் என்பதையும் விளக்கினால் உரையாடுவதற்கு உதவியாயிருக்கும்.


முதலில் 5 சதவிகித பாவிகளைப் பார்ப்போம்! இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் தமிழ் இனவாத உணர்வுகளைத் தூண்டி ஒட்டுமொத்த நீதித்துறையையே முடிக்கி வைத்துள்ளனர். இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மற்ற வக்கீல்களும் - மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மவுனத்தை காத்திட்டனர். அதாவது ஒரு சில அதிதீவிரவாத அமைப்புகள்தான் இந்த பிரச்சனையை தொடர்ந்து ஊதி பெருக்க முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் மக்கள் ஒற்றுமைக்கும் - இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு சீர்குலைவை ஏற்படுத்திட முனைகிறது. ஒரு அரசியல் பிரச்சனையில் மக்களைத் திரட்ட முடியாதவர்கள். உணர்வுகளை கிளப்பி ஆதாயம் அடைய முற்படுவது கோழைத்தனமான அரசியலாகும். மேலும் கோர்ட்டு செயல்படத்துவங்கியதை சீர்குலைக்கும் முகமாகவே - சுப்பிரமணிய சாமி மீது முட்டையை வீசி (இது என்ன ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டமா?) நீதிமன்றத்தையே கேலிக்கூத்தாக்கினர். அவமதித்தனர். இந்த இடத்தில் வக்கீல்கள் மட்டும் இருந்தனரா? அல்லது வக்கீல்கள் என்ற பெயரில் அமைதியைக் குலைக்கும் சீர்குலைவுவாதிகள் இருந்தனரா என்ற சந்தேகம் மக்களிடையே இன்னும் நிலவுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி சுட்டிக் காட்டுவதுபோல் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையின் துவக்கம் என்றே இதனை நான் கருதுகிறேன். அதே சமயம் காவல்துறையின் அத்துமீறிய ஜனநாயக விரோத அராஜக நடவடிக்கையும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அனுமதிக்க முடியாது.


புரியவில்லையே, கம்யூனிஸ்ட்களின் அரசியல், வர்க்க அரசியலென்றால், வர்க்கத்திற்கப்பாற்பட்ட நீதியென்ற ஒன்று இருக்கிறதா என்ன?


இனவாத அரசியல் நடத்துபவர்கள் பின்னால் இருந்து இயக்குபவர்கள். தூண்டி விட்டு விட்டு ஒளிந்துக் கொள்பவர்கள். அப்பாவிகளை அடிவாங்க வைப்பவர்கள் போன்ற இனவாத பேர்வழிகளுக்கு வர்க்க அரசியல் புரியாது.


காவல்துறையினரிடம் இவ்வளவு நாள் கண்ணியம் இருந்ததாக நீங்கள் நம்பி கொண்டிருந்தீர்களா?


காவல்துறைக்கு அறிவும் இல்லாமல் இருப்பது கண்டுதான் வருந்துகிறேன்.


அய்யா சந்திப்பு, போர் குற்றவாளி அமெரிக்க புஷ்சின் மீது ஸெய்தி செருப்பு வீதியதை பாராட்டிய உங்களுக்கு சுப்ரமணியசாமியின் மீது முட்டை வீசியதும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே ஏன்? முட்டையடிப்பதாலும், கல்லெறிவதாலும் நீதி வருமென்று இங்கு யாருமே நம்பவில்லை... சுப்ரமணியசாமி என்ற அமெரிக்க கைக்கூலியின், பார்ப்பன திமிரையும், ஈழமக்களின் துயரங்களை கொச்சைபடுத்தும் விதமாக அவன் தொடர்ந்து பேசி வருவதற்கு எதிர்ப்பை காட்டவே அவன் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது, இது தவறெனில், சப்ரமணிய சாமியை எப்படி கண்டிப்பது, அவனை எப்படி எதிர்கொள்வது என்ற வழிமுறைகளை கூறுங்கள்.. மேலும் புஷ்சின் மீது செருப்பு வீசிய ஸெய்தியின் செயலை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்றும் விளக்கப்படுத்துங்கள்.


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலால் நிர்மூலமாக்கப்பட்ட ஈராக்கில் - மக்களை பல பிரிவுகளாக மோத விட்டுள்ள ஏகாதிபத்திய சதித்தனத்தின் பின்னணியில் போராடுவதற்கே வழியில்லாத அந்த அபலைகளின் குரலாகத்தான் ஸெய்தியின் செருப்பு வீச்சு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அது சரியானது!

ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உங்களுக்கு எதிரான கருத்தை ஒரு நபர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர் மீது முட்டை அடிப்பீர்கள்... அல்லது செருப்பை வீசுவீர்கள் என்றால் உங்களுக்கும் பாசிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? அல்லது இலங்கையில் அங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் குழித்தோண்டி புதைத்த பிரபாகரனின் எல்.டி.டி.யி.ன் செயலைத்தான் நீங்களும் இங்கே செய்கீறீர்கள். குறைந்தபட்சம் சட்ட ரீதியாக அவரது கருத்தை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம்தான் உங்களிடம் வெளிப்படுகிறது. ஒரு வகையில் ஆர்.எஸ்.எஸ்.க்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களும் தங்களுக்கு எதிரானவர்களை இப்படித்தான் ஒழித்துக் கட்ட முனைவார்கள். உசைனின் ஓவியத்தை சிதைப்பார்கள். அது அவர்களுக்கு நியாயம் என்றால் உங்களுக்கு உங்கள் செயல் நியாயம் அவர்களுக்கு இசுலாமிய எதிர்ப்பு என்றால் உங்களுக்கு பார்ப்பனீய எதிர்ப்பு என்ற மோசடியான போர்வை - உள்ளுக்குள் பார்ப்பனர்களைத் தலைமையாக வைத்துக் கொண்டே... முத்துக்குமரனின் அஸ்தியில் பீனிக்ஸ் பறவையாக எழத் துடிக்கிறீர்கள். ஆனால், மக்கள் தெளிவானவர்கள் உங்களது எந்தச் செய்கையும் மக்களை ஈர்க்கவில்லை!

சந்திப்பு said...

நன்றி ஹரிஹரன்

Anonymous said...

அதிருக்கட்டும்னா,,,,
மாமி ஒங்கள கழட்டி விடப் போறா போலருக்கு,,,,,,
அவா பேசினத பத்தி ஒண்ணையும் எழுத மாட்டேளா,,,,,
எதுக்கும் ஒங்க டெம்ப்ளேட்டை பச்சைக்கு மாத்துங்கோ,,,,,,

vimalavidya said...

Balanced article yours-No doubt-The lawyers are not "innocents" in this incident.The whole incidents were a product of left adventurists,Tamil Elam supporters one side and the arrogant police in other side.
Both the sides acted vociferously without mind the outcome of the incidents.What is more dangerous aspect is the over/arrogant actions of the police. The natural quality of the police is to suppress the mass whoever may be.They will not have a patience to hear anything.They always want to show their power and arrogence.
They-Police-are celebrating their 150 th year of people and police relations.Really it is humbug.No police so far respected any individuals and or any people.First the police force have to learn respect the people.Kindly write a separate article insisting police force to learn respecting people and talk with them politely.they have no human approach.we sympathy with the police force and their discipline. We shall have a separate "arguments" abt the role of Lawyers..Anything shall be do first->>>within the available forums.Sir !If it is not possible we shall discuss other ways and means---selvapriyan

Anonymous said...

“வர்க்க அரசியல் புரியாது.”

உங்கள் (?) வர்க்க அரசியல் என்றால் என்ன என்பதையும்
தனியாக ஒரு கட்டுரை போட்டுவிடுங்களேன்....
புரிந்து கொள்ளலாம்...

Anonymous said...

//ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உங்களுக்கு எதிரான கருத்தை ஒரு நபர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர் மீது முட்டை அடிப்பீர்கள்... அல்லது செருப்பை வீசுவீர்கள் என்றால் உங்களுக்கும் பாசிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?//

ஒரு பொறுக்கியின் மீது முட்டை வீசியது, ஒருவேளை தவறாகக் கூட இருக்கலாம்... ஆனால் நந்தி கிராமத்தில் அப்பாவி மக்களை அடித்து நொறுக்கியது, அம்மா கைதுக்கு பிறகு நடந்த கலவரத்தில் 3 பெண்களை உயிரோடு எரித்த அம்மாவின் தொண்டர்கள் இன்னும் தண்டிக்க படாத பொது... அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் உங்களுக்கு பாசிச்டுகளைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை...

Anonymous said...

தோழரே

இந்த சீர்குலைவுவாதிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு கூட்டாஞ்சோறு ஆக்கி விடுவார்கள். எனவே தனித்தனியாக பிரச்சினைகளை பேச உகந்த வழியில் தனிக்கட்டுரைகளை எழுதுங்கள் தோழர். வழக்கறிஞர்கள் பற்றி, சீர்குலைவு செட் பற்றி, காவல்துறை பற்றி .... என எதிர்பார்க்கின்றேன். மற்றபடி சுப்பிரமணிசாமி இன் வாதம் என்ன எனக் கூட கேட்க மறுக்கும் மீடியா பற்றி எல்லாம் நானும் எழுத முயற்சிக்கிறேன். எனது செல் நம்பர் கூட பதிவிடுகின்றேன் தோழர். இன உணர்வு என்ற மூடத்தனத்தை எப்படி புரியவைப்பது எனத்தான் தெரியவில்லை...

PROLETARIAN said...

அது சரிங்க ,

இந்த பாழாய்ப் போன ஜனனாயகத்தை வச்சி "வெண்மனி" கொலைகாரங்களை உங்க CPM என்ன செய்தது. ஒரு மயிறும் புடுங்க முடியலியே !

இதுக்கெல்லாம் காரணமான பார்ப்பான் பசங்களை, ஜெயா மாமிய அமபலப்படுத்த சொன்னாக்க நீ என்ன ரூட்டையே திருப்பி போடுற !

சும்மா ஜனனாயகம் ! ஜனனாயகம்னு கத்தாதே !!

சந்திப்பு said...


இதுக்கெல்லாம் காரணமான பார்ப்பான் பசங்களை, ஜெயா மாமிய அமபலப்படுத்த சொன்னாக்க நீ என்ன ரூட்டையே திருப்பி போடுற !


இந்தியாவில் சமூக மாற்றம் நிகழாததற்கு ஏதோ பார்ப்பனர்கள்தான் காரணம் என்பதுபோல இருக்கிறது உங்களது கூற்று. இதுல வேற ப்ரோலடேரியட்-ன்னு பேர் வச்சிக்கிட்டு எந்த வர்க்கம் எதிரி என்றுக்கூட தெரியாம பாப்பான்... பாப்பான்னுக்கு கத்துறதுனால எல்லாம் நீங்கள் புரட்சிக்காரராக மாறிவிட முடியாது. இந்த பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் மூலம் எது தெரியுமா? உயர்சாதி குட்டி பூர்ஷ்வா அரசியல்தான். அதாவது, பார்ப்பனரல்லாதார் இயக்கம் வழியில் தோன்றிய நீதிக்கட்சி அரசியல்தான் அதன் அடிப்படை வேர். தற்போது நீங்கள் அழிந்துப் போன அதன் சல்லி வேர்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் ம.க.இ.க. புரட்சி செய்யப்போவதாக கூறுவது புல்லைக் கூட பிடுங்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.

சந்திப்பு said...


சும்மா ஜனனாயகம் ! ஜனனாயகம்னு கத்தாதே !!


அமைப்புக்குள்ளேயே சனநாயகம் இல்லாத உங்களிடம் - அதனை வெளியில் தேடுவது வேடிக்கையானது. அதிலும் வேடிக்கை என்னத் தெரியுமா? இரண்டு பார்ப்பனர்களை வல்லபேசன் மற்றும் ரங்கராஜன் பார்ப்பனர்களை வைத்துக் கொண்டு பார்பப்ன எதிர் அரசியல் பேசுவது... நகைப்புக்கிடமானது. (தனிப்பட்ட முறையிலோ அமைப்பு ரீதியிலோ நான் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல) முதலில் உங்களது அமைப்பை ரத்த சுத்தி செய்துக் கொண்டாவது அதனைப் பேசவும்...

சந்திப்பு said...


ஒரு பொறுக்கியின் மீது முட்டை வீசியது, ஒருவேளை தவறாகக் கூட இருக்கலாம்... ஆனால் நந்தி கிராமத்தில் அப்பாவி மக்களை அடித்து நொறுக்கியது, அம்மா கைதுக்கு பிறகு நடந்த கலவரத்தில் 3 பெண்களை உயிரோடு எரித்த அம்மாவின் தொண்டர்கள் இன்னும் தண்டிக்க படாத பொது... அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் உங்களுக்கு பாசிச்டுகளைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை...


அப்படியா? நீங்க ஏன் இல. கணேசனோடு கூட்டணி வச்சிருக்கீங்க! நந்திகிராமத்தில் அத்வானியோடு கூட்டுச் சேரும்போது இதுவெல்லாம் என்ன ஜுஜுபி...

சந்திப்பு said...


அதிருக்கட்டும்னா,,,,
மாமி ஒங்கள கழட்டி விடப் போறா போலருக்கு,,,,,,
அவா பேசினத பத்தி ஒண்ணையும் எழுத மாட்டேளா,,,,,
எதுக்கும் ஒங்க டெம்ப்ளேட்டை பச்சைக்கு மாத்துங்கோ,,,,,,


வினவுல மட்டும் கருத்து சுதந்திரம் இருக்கிறதா பீற்றிக் கொள்ளும் உங்களுக்கு மாமியின் கருத்து சுதந்திரம் மட்டும் வயிற்றெறிச்சலை ஏற்படுத்தியுள்ளது ஏனோ? நாங்களே அதப் பற்றி கவலைப்படாத போது நீங்க எதுக்குப்பா... தேவையில்லாம அலட்டிக்கீறிங்க.

Anonymous said...

//அப்படியா? நீங்க ஏன் இல. கணேசனோடு கூட்டணி வச்சிருக்கீங்க! நந்திகிராமத்தில் அத்வானியோடு கூட்டுச் சேரும்போது இதுவெல்லாம் என்ன ஜுஜுபி...//
நான் எந்த கட்சியையும் சாராதவன்.. உங்களின் கட்சியின் செயலுக்கு , நீங்கள் எழுதிய எழுத்துக்கு முடிந்தால் விளக்கம் கூறவும்... நீங்களே ஒரு கற்ப்பனையில் உளறவேண்டாம்...

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்...!?

Anonymous said...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த உங்கள் பதிவில் ஒரு சமநிலைப் பார்வை இருக்கிறது. பொதுமக்கள் எப்படி நீதித்துறையைப் பார்க்கிறார்கள் என்ற ரீதியில் உங்களது பதிவை ஒரு வழக்குரைஞனாகப் புரிந்து கொள்கின்றேன். நடந்தது எதுவாக இருந்தாலும் போலீஸ் காட்டுமிராண்டித்தனம் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் செயல், பங்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இது விசயத்தில் தொடர்ந்து பார்வையாளராகவே இருந்து வருகிறது. இதை ஒரு அரசியல் நெருக்கடியாகப் பார்க்காமல் தனது கட்சிக்கு வந்துள்ள நெருக்கடியாகப் பார்க்கிறார் முதல்வர் முக. இந்தத் தாக்குதல் ஏதோ சில அரசியல் கட்சிகள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு எதிரானது என்றுதான் அவர் பார்க்கின்றார். அரசியல் சாசனத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒன்றான நீதித்துறையின் மீதான தாக்குதல் என்று அவர் கருதவில்லை. நீதிபதிகளகூட தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பது அசாதாரணமான நிலை. இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்.

Anonymous said...

சென்னை உயர்நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த தங்கள் பதிவில் ஒரு சமநிலைப் பார்வை இருக்கிறது. பொதுமக்கள் எப்படி நீதித்துறையைப் பார்க்கிறார்கள் என்ற ரீதியில் உங்கள் பதிவை ஒரு வழக்குரைஞனாகப் புரிந்து கொள்கிறேன். நடந்தவை எதுவாக இருந்தாலும் போலீஸ் காட்டுமிராண்டித்தனம் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் செயல், பங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இது விசயத்தில் தொடர்ந்து பார்வையாளராகவே இருந்து வருகிறது. இதை ஒரு அரசியல் நெருக்கடியாக, அரசியல் சாசன நெருக்கடியாகப் பார்க்காமல், தனது கட்சிக்கும், ஆட்சிக்கும் வந்துள்ள நெருக்கடியாகப் பார்க்கிறார் முதல்வர் முக. இந்தத் தாக்குதல் ஏதோ சில அரசியல் கட்சிகளைச் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு எதிரானது என்றுதான் அவர் பார்க்கின்றார். அரசியல் சாசனத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒன்றான நீதித்துறை செயல் இழந்து நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். நீதிபதிகளே கூட தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பது அசாதாரண நிலை.
நிலைமையை மவுனம் சாதிப்பதின் மூலமோ, உண்ணாவிரதம் இருப்பேன் என்று வசனம் பேசுவதன் மூலமோ சரி செய்ய முடியாது. உயர் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை துவக்கவில்லை என்றால் நிலைமை மேலும் சீர்கெடும். அதற்கும் அரசே பொறுப்பேற்க வேண்டியதிருக்கும்.

சுப்புராம்.

Anonymous said...

பார்ப்பனர் அல்லது பார்ப்பனர் அல்லாதோரைப் பிரிப்பது என நான் கருதுவது....
உங்க கட்சியில் டி.கே.ரங்கராசன் அப்டினு ஒரு பார்ப்பன அவாள் இருக்காரு ... அப்படி போடு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுவீங்களே... வேற ஒண்ணுமில்ல.. அப்படி அவாள் என்று முரசொலியில் கவிதை வந்தது. அதற்குதான் எத்தனை கண்டன அறிக்கை விட்டீர்கள். அந்த அறிக்கையை எடுத்துப் பாருங்கள். எழுதியவர்களின் மூளையை இயக்கிய பார்ப்பனீயம் தெரியும்... நீதிக்கட்சிக்கு பிறகுதான் இந்த பிரிவினை தோன்றியது என நீங்கள் கருதினால் விடுதலைப் போராட்டம் கூட 1885 க்கு பிறகுதான் தோன்றியது என நினைத்துக் கொள்ளலாம் நீங்கள் மாத்திரம்..சுப்பிரமணிய சாமி மீது முட்டை எறிந்தது மக்களைத் திரட்டி நடத்தப்படவில்லை. நடத்தப்பட முடியாத வடிவம் தங்களது எதிர்பார்ப்பு... இப்போ சட்டசபைல அலம்பல் பண்ணி வெளிய வர்றீங்க அப்டின்னா என்ன அர்த்தம் மக்கள திரட்டி, எக்ஸ்க்யூஸ் மீ நாங்க இன்ன இன்ன காரணத்துக்காக வெளிநடப்பு பண்ணப் போறோம்னு விளக்கி பிரச்சாரம் பண்ணிண்டு அப்பாலயா வெளிய வர்றீங்க அத மாதிரி இதயும் புரிஞ்சுக்கோங்க..
மாமியப் பத்தி பேசுனா எதுக்கு நேர பதில் சொல்லாம நழுவுறீங்க.. ஏம்பா அவ்ளோ பயமா.. என்னப்பா ஜனநாயகம்... சரி விமர்சனம்தான் பண்ண வேணாம்... அவுங்க திருந்திட்டாங்க இனிமேங் காட்டியும் பொதுச்சொத்த தின்ன மாட்டாங்க அரசு ஊழியர்கள போக்குவரத்து தொழிலாளிங்கள வேலய உட்டு கடாச மாட்டங்க அப்டினு ஒரு கேரண்டியாது குடும்மா மக்களுக்கு... அத உட்டுட்டு அது உன்னோட பிரச்சனைன்னு ஜகா வாங்குறியே. என்னாத்த சொல்றது

சந்திப்பு said...

அவாள் - இவாள் என்பதெல்லாம் தேவைக்கேற்ப நடத்தப்படும் அரசியல் விளையாட்டுக்கள். இந்த சாக்கடைக்குள்ளிலிருந்து விலகி பிரச்சனையின் அடிப்படையில் அணுக முயற்சிக்க வேண்டுகிறேன்.

Anonymous said...

நீங்க அப்போ பண்ணின அரசியலை நீங்களே சாக்கடைன்னு சொன்னா அத பப்ளிஸ் பண்ண பத்திரிக்கை காரன என்னன்னு நெனச்சீங்க

Anonymous said...

ARASIAL ORU SAAKADAI YAA... ITHA COMMUNIST KALAE SONNA ENNAA PANRATHU

சந்திப்பு said...

அரசியல் ஒரு சாக்கடை என்று கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் சொல்லவில்லை. சொல்வதும் இல்லை அனானி நன்பரே! அதே சமயத்தில் சாக்கடை போன்ற விஷயங்களை ஒதுக்கி தூக்கி எறிந்து விட்டு முன்னேற வேண்டியுள்ளது.