June 23, 2006

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன?

தமிழக அரசியலில் முக்கிய அஜண்டாக்களில் ஒன்றாக மாறியுள்ளது இலங்கை பிரச்சினை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பற்றியெறியும் இலங்கைப் பிரச்சினை ஒருவழியாக நார்வே நாட்டின் முன்முயற்சியோடு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு நல்ல நிலையை எட்டியது. இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலி - போர்ச் சூழல் ஓய்ந்து இலங்கையில் அமைதி நிலவியது. சந்திரிகா தலைமையிலான அரசும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல ஒத்துழைப்பை நல்கியது. புலிகள் தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய அரசு ஏற்பட்டது முதலே ஈழப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக மாறியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு தரப்பிலும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கண்ணி வெடித்தாக்குதல், குண்டு வீசுதல் போன்ற செயல்களை இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிர்பலியாகினர்.

இலங்கையில் அமைதி திரும்பியது என்று கருதியிருந்த தமிழ் மக்களிடையே இது பதட்டத்தை அதிகரித்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்கள் தரப்பிலும் போர் மூண்டால் தற்போது நிலவி வரும் அமைதி சீர்குலையுமே என்ற அச்சம் நிலவுகிறது.

உலகமயமாக்கல் சூழல் உலகில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனித்தனியாக இருந்து ஐரோப்பிய யூனியன்கூட ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற நிலையை நோக்கி திரும்பியுள்ளது. அதேபோல் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு இரண்டு ஜெர்மன்களும் ஒன்றானதும், சோவியத்தில் இருந்து பிரிந்த வந்த முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல், திணறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்திட விழைவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழப் பிரச்சினைக்கு அமைதியாக தீர்வு கண்டிட ஒத்துழைப்பு நல்குவதோடு, ஈழத் தமிழர்களின் நலனையும், அவர்களது பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் விடுதலைப் புலிகளும் 20 ஆண்டு போரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப்பலியாகி இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழர் அமைப்புகளிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மேலாதிக்க தன்மையோட நடந்து கொள்வதும், இதர தமிழர் அமைப்புத் தலைவர்களை வேட்டையாடுவதும் கடந்த கால வரலாறுகள். தமிழர்களின் பல உன்னதமான தலைவர்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடியதை யாரும் மறக்க முடியாது.

எனவே ஈழப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிட ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்திட இலங்கை அரசும் - புலிகள் தரப்பும் ஒரு அமைதித் திட்டத்தை உருவாக்கி விரைந்து தீர்வு கண்டிட வேண்டும். இந்திய அரசும் இலங்கைப் பிரச்சினையில் வெளியில் இருந்துக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வு காண உறுதுணையாக இருப்பதோடு, ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு உதவிட வேண்டும். இதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. அமைதியை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர்.

37 comments:

Anonymous said...

/எனவே, இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழப் பிரச்சினைக்கு அமைதியாக தீர்வு கண்டிட ஒத்துழைப்பு நல்குவதோடு, ஈழத் தமிழர்களின் நலனையும், அவர்களது பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். /

நீங்கள் இந்தியாவின் பொதுவுடமைக்கட்சிக்காரர் என்பதை அறிவோம். பாலஸ்தீனம் பற்றியும் உங்களதும் ராஜா, பாண்டியன், ராம் போன்றவர்களின் கருத்து ஒன்றுபட்ட இஸ்ரேல் உள்ளே தீர்வு காண்பதுதானோ?

Anonymous said...

dfsdfsf

சந்திப்பு said...

நன்பரே தங்கள் கருத்துக்கு நன்றி.
முதலில் ஒன்றை தெளிவுபடுத்திடுவோம். இலங்கை பிரச்சினையும், பால°தீனம் - இசுரேல் பிரச்சினையும் ஒன்றல்ல; எனவே தயவு செய்து இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கூறவில்லை.

Anonymous said...

எந்த வகையிலே ஒன்றில்லையெனச் சொல்கின்றீர்களா? எம் தீர்வு மிகவும் சுலபமானது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை நிறுவப்படவேண்டும். அவர்களுக்கு ஒரு நாட்டுள்ளே தீர்வு கொள்வதா இல்லையா என சுயநிர்ணய உரிமை கொள்ளும் தமிழர்களே தீர்மானிக்கமுடியும். சிங்கள வலதுசாரி இயக்கமான ஜேவிபியினைச் சகோதர இடதுசாரி இயக்கமென வரவழைத்த இந்திய மார்க்ஸியர்கள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் மேல்மட்டத்தினர் அல்லர்.

சந்திப்பு said...

அனானி நான் யார் என்பது உங்களுக்கு தெரிந்துள்ளது நல்ல விஷயம். இது வெளிப்படையானது. ஆனால், நீங்கள் முதலில் அனானி என்ற ஓட்டை விட்டு முகத்தை வெளியே நீட்டுங்கள்...

முதலில் ஈழத்தின் ஏகபோக பயங்கரவாத அமைப்பாக செயல்படும் எல்.டி.டி.ஈ. மலையக தமிழர்களையும், இசுலாமிய தமிழர்களையும் ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கூறுங்கள்... எந்த தமிழ் அமைப்பினையாவது - தமிழர்களுக்காக போராடும் அமைப்பு என்று எல்.டி.டி.ஈ. ஏற்றுக் கொள்கிறதா?

யார் இனவாதம் பேசினாலும், அல்லது அதை ஆதரித்தாலும் நிச்சயம் எதிர்த்திட வேண்டும். அதற்கு ஜே.வி.பி.யும் விதிவிலக்கல்ல. எனவே, நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பங்கம் ஏற்படுத்திடாமல், சுமூகமாக தீர்வு காண்பதே ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுக்கு நலன் பயப்பதாக அமையும். மாறாக சுயநிர்ணய உரிமை என்று பேசி பிரிந்து போவது என்ற நிலைபாடு, தமிழர்களின் நலனை காத்திட உதவாது. அது எல்.டி.டி.ஈ. என்ற சர்வாதிகாரத்தின் கீழ் தமிழர்களை அடகு வைப்பதற்கே பயன்படும். அதேபோல் சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு, இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கினையும் இலங்கை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை இனக்கலவத்தால் அழியும் நாடாக மாற்றிடாமல் இருப்பதில் அவர்களுக்குத்தான் கணிசமான பங்கு உள்ளது.

Anonymous said...

உமக்கும் சோராமசாமிக்கும் என்ன வித்தியாசம்? அவர் தா.பாண்டியனை அட்டையில் போட்டு பாராட்டிவிட்டால் அவர் உளரல் போலவே நீரும் உளருகிறீர்?

Anonymous said...

முதலில் ஈழத்தின் ஏகபோக பயங்கரவாத அமைப்பாக செயல்படும் எல்.டி.டி.ஈ. மலையக தமிழர்களையும், இசுலாமிய தமிழர்களையும் ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கூறுங்கள்...

என்பதிலே உங்கள் எடுகோள்கள் வெளிச்சமாகின்றன. மலையகத்தமிழர்களையும் இசுலாமியதமிழர்களையும் ஏற்றுக்கொள்கிறதா என்று என்ன அர்த்தத்திலே கேட்கின்றீர்கள்? பயங்கரவாதமென்றால் உங்களுக்கு என்ன அர்த்தமென்பதையும் சொல்லி வையுங்கள். அமெரிக்கா ஈராக்கிலே பண்ணுவதைப் பயங்கரவாதமென்பீர்கள். இந்திய இராணுவம் இலங்கையிலும் இந்தியாவிலும் பண்ணுவதையெல்லாம் அந்த வகைக்குள்ளே போடமாட்டீர்களென்றால், நாம் பேசவரவில்லை.

உங்கள் கருத்துகள் மிகவும் மேலோட்டமாக கருத்து ரீதியிலே ரயாகரன், ஸ்ரீரங்கன் பேசும் தொனியிலே இருக்கின்றன. ஆனால், என்ன? ஒரு வித்தியாசம். அவர்கள் இந்தியாவினையும் அவ்வப்போது போட்டுத்தாக்குவார்கள்.

நீங்கள் சொல்லும் இத்தனை ஆலோசனைகளூம் விளக்கங்களும் இந்த ஐம்பதாண்டுகளாக இலங்கையிலே இருந்து அனுபவித்தவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கிறன? குறைந்த பட்சம் இந்தியாவின் மார்க்சியர்களுக்கு இருக்கின்ற அதே பாரம்பரியம் இலங்கையருக்கும் இருந்திருக்கின்றது. பொப்பிபூ இயக்கம் தொடக்கம் ரொஸ்ட்கிவரைக்கும் வரதராஜன், பாண்டியன், நல்லக்கண்ணு, நரசிம்மன் ராம், ராஜா, பாண்டியன் போன்றோர் தொடுங்காலகட்டத்துக்கு முன்னமே இலங்கையிலே இருந்திருக்கின்றன. விரும்பினால், ட்ரொஸ்கி மருதுவிடம் கேட்டுப்பாருங்கள். இலங்கைப்பொதுவுடமை வரலாறு சொல்வார். அப்படியிருந்தும் தடம் புரண்டு போனதற்கு "யார் இனவாதம் பேசினாலும், அல்லது அதை ஆதரித்தாலும் நிச்சயம் எதிர்த்திட வேண்டும். அதற்கு ஜே.வி.பி.யும் விதிவிலக்கல்ல. எனவே, நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பங்கம் ஏற்படுத்திடாமல், சுமூகமாக தீர்வு காண்பதே ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுக்கு நலன் பயப்பதாக அமையும். மாறாக சுயநிர்ணய உரிமை என்று பேசி பிரிந்து போவது என்ற நிலைபாடு, தமிழர்களின் நலனை காத்திட உதவாது" என்ற புத்தியான தத்துவம் தெரியாததுதான் காரணமென்கிறீர்களா? மயிலே மயிலே என்று இறகு போடக் கேட்ட காலகட்டத்தினையேனும் அறிந்திருக்கின்றீர்களா?

விடுதலைப்புலிகளைத் தலையிலே வைத்துக்கொண்டாடுகின்றவர்களை மன்னிக்கவேண்டாம். ஆனால் நீங்கள் மாற்றுத்தமிழியக்கங்கள் என்கிறீர்களே, அவை எவை? அவற்றின் போக்கும் நிலையும் என்னவென்றேனும் சொல்லமுடியுமா?

Muthu said...

சந்திப்பு.

நல்ல பதிவு.

Anonymous said...

// எந்த தமிழ் அமைப்பினையாவது - தமிழர்களுக்காக போராடும் அமைப்பு என்று எல்.டி.டி.ஈ. ஏற்றுக் கொள்கிறதா?
//
ஆஹா..அப்பிடியா ? தமிழ்நாடு விடுதலைப்படையையும் தமிழ்நாட்டுக்காக போராடும் அமைப்பு என்று தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறதா?

ஆக, யார் உண்மையாகவே போராடுகிறார்கள் யார் போராடவில்லையென தீர்மானித்து முடிவெடுக்கும் பொறுப்பை நாங்கள் புலிகளிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏன் பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஒன்று பட்ட இந்தியாவிற்குள் தீர்வு காணவில்லை?

ஏன் வங்களா தேச பிரச்சனைக்கு ஒன்று பட்ட பாகிஸ்தானில் தீர்வு காணவில்லை.

enRenRum-anbudan.BALA said...

சந்திப்பு,
//மேலும் தமிழர் அமைப்புகளிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மேலாதிக்க தன்மையோட நடந்து கொள்வதும், இதர தமிழர் அமைப்புத் தலைவர்களை வேட்டையாடுவதும் கடந்த கால வரலாறுகள். தமிழர்களின் பல உன்னதமான தலைவர்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடியதை யாரும் மறக்க முடியாது.
//
இது உண்மை தான் என்றாலும், புலிகள் இல்லாவிட்டால், சிங்கள வெறியர்கள் மொத்தத் தமிழரையும் கொன்றூ புதைத்து விட மாட்டார்களா ? ஏதோ அமைதிப் பேச்சு வார்த்தை தொடர்ந்து ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு இலங்கை தமிழ் மக்களுக்கு விடிவு காலம் பிறந்தால் நல்லது. இந்தியா அதற்காக இயன்றதை செய்ய வேண்டும்.

Muthu said...

சந்திப்பு,

அமைதி திரும்ப வேண்டும் என்று நீங்கள் கூறுவது சரி.ஆனால் அதற்கு நீங்கள் கொடுக்கும் தீர்வை ஒருவர் மறுக்கிறார்.

ஏதாச்சும் பதில்?

சந்திப்பு said...

நன்றி பாலா, முத்து

நம்மிடம் இருப்பது நியாயமான ஆதங்கம். அத்துடன் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்னை தீரவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான். ஆனால், இதையே பலர் இன உணர்வை தூண்டும், அரசியல் ஆதாயம் தேடும் உணர்ச்சிபூர்வ நிலைக்குச் செல்கின்றனர். தமிழகத்தில் பிரபாகரனை 1983இல் தெய்வத்தின் நிலைக்கே கொண்டுச் சென்றன நம்முடைய தமிழக அரசியல் கட்சிகள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது தனி ஈழம் என்ற பெயரில் அவர்கள் நடத்திய அரசியல் பழிவாங்கும் பயங்கரவாத இழி செயல்களால் தீவிரமாக ஆதரித்த அதிமுக, திமுக போன்ற பிரதான திராவிட இயக்கங்கள் கூட முகம் சுளிக்க ஆரம்பித்ததும், அதற்போது அவர்களுக்கான நேரடியான ஆதரவு இயக்கம் இல்லையென்றே கூறலாம். தற்போது இருப்பது ஈழத் தமிழர்கள் மீதான பாசத்துடன் கூடிய உணர்வுதான்.

அனானி தெளிவாக வாதிடுவதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு விடுதலைப் படையை தமிழக அரசு ஏன் ஆதரிக்கவில்லை என்று கேட்கிறார்? அவரது அரசியல் அப்பாவித்தனத்தை பார்த்து வருத்தப்படத்தான் முடியும். தமிழக விடுதலைப் படை என்பது ஒரு பிரிவிiவாத அமைப்பு. இன்றைக்கு தமிழகத்தின் தேவை தனிநாடும் அல்ல. விடுதலையும் அல்ல. இன்றைக்குத் தேவை தமிழக மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதுதான். இதனை இந்திய ஜனநாயக அமைப்புக்குள்ளேயே நம்மால் தீர்த்துக் கொள்ள முடியும். எனவே இதில் வேறு குரல் எழுப்புபவர்கள் பிரிவினைவாதிகள்தான்.

பாலாவின் கேள்வியும், எதிர்பார்ப்பும் நியாயமானது. எல்.டி.டி.யின் பயங்கரவாத செயலால் என்ன நடந்தது. ஜனநாயகப்பூர்வமாக தமிழக மக்களின் விடிவுக்காக போராடிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெசோ... இன்னும் பல அமைப்புகள் நசுக்கப்பட்டன. இன்றைக்கு எல்.டி.டி.யை. ஆதரிப்பவர்கள் எல்லாம் அவர்களது கொள்ளையை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமல்ல. வேறு வழியில்லை. மேலும் சின்னப் பசங்களையெல்லாம் பிடித்துக் கொண்டுபோய் இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நம்மைப் பொறுத்தவரை இவர்களது அரசியல் பயங்கரவாத - இனவாத விளையாட்டிற்கு தமிழ் மற்றும் சிங்கள அப்பாவி மக்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் புவியில் ரீதியில் ஒன்றுபட்டு இருக்கவில்லை. வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறது. அவர்களது அரசியல் - கலாச்சாரங்கள் வேறு, வேறானவை. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் தமிழர்களிலேயே மலையகத் தமிழர்களையும், இசுலாமிய தமிழர்களையும் அவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை. எனவே இவர்களது அரசியல் அதிகாரம் என்பது ஒரு குறுகிய பார்வைக் கொண்டது. எனவே, முதலில் எல்.டி.டி.ஈ. ஜனநாயக ரீதியில் செயல்பட கற்றுக் கொள்ள வேண்டும். ஏன் சமீபத்தில் நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து போராடிய மாவோயி°ட்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். ஆனால், அவர்களது ஆயுதப் போராட்டம் தீர்வை கொண்டு வந்ததா? இல்லையே! மாறாக நேபாளத்தில் உள்ள அனைத்து இடதுசாரி - ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட ஜனநாயக ரீதியான எழுச்சிகள்தான் இதற்கு முற்றுப் புள்ளி வைத்தன. தற்போது இந்த மாவோயி°ட்டுகள் கூட ஜனநாய பாதைக்கு திரும்ப ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களை பாதுகாத்திட முதலில் எல்.டி.டி.ஈ. மற்ற அமைப்புகளை மதித்திட வேண்டும்.

எனவே, தற்போது நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதியை ஏற்படுத்திட எடுத்துவரும் முன்முயற்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். அதேபோல் தமிழர் பிரச்சினைக்கு பிரிந்து செல்வது என்பது ஒரு தீர்வே அல்ல. எனவே அதிகமான உரிமைகளுடன் கூடிய சுயாட்சியை பெறுவதுதான் சிறந்த வழி. இதனை சிங்கள பேரினவாதிகளும், தங்களது இனவாதம் இலங்கை மக்களை கரைசேர்ப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்து, உண்மையான - செயல்பூர்வமான முன்முயற்சிகளை எடுத்திட வேண்டும்.

கொழுவி said...

சந்திப்பு,

பிரிந்து போவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுயநிர்யண உரிமை ஈழத்தமிழருக்கு வழங்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அதைத் தீர்மானிப்பது அவர்களாகவே இருக்க வேண்டும். அப்படிப் பிரிவது தவறென்று நீங்களோ நாங்களோ யாரும் சொல்ல முடியாது.
சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இன்றுவரை ஏற்றுக்கொண்டதில்லை. ஏன் அவர்களின் நிலவுரிமையைக்கூட அவ்வப்போது எதிர்த்தே வந்திருக்கிறது. அவர்கள் வந்தேறிகள் என்று அரசதலைவரே வெளிப்படையாகச் சொல்லியதுதான் சிங்களப் பேரினவாதிகளின் வரலாறு.

ஏன் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது? தாம் பிரிந்து செல்வதா இல்லையா என்பதை அவர்கள் தெளிவுபடுத்தட்டும். புலிகளின் கீழ் வாழ்வதா வேண்டாமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்தட்டும். அவர்களை ஏற்றுக்கொள்ளாமலா இவ்வளவு பேர் அவர்களை ஆதரிக்கிறார்கள்?

நீங்கள் சொல்லும் மாற்றுத் தலைமைகள் யாரென்பதைத் தயவு செய்து சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் வழமையாக யாரோ பாடிச்செல்லும் புராணத்தைக் கேட்டுத்தான் நீங்களும் இப்படி மாற்றுத்தலைமை பற்றி எழுதுகிறீர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டிவரும்.

நிற்க, இவ்வளவு கால வரலாற்றில் இன்னும் ஒன்றித்த இலங்கை என்ற புளித்துப் போன கோசத்தைத் தூக்கிப்பிடிப்பது சரியா? கடந்த நாலு வருட சண்டையற்ற காலத்தை எடுத்துக்கொள்வோம். தமிழருக்கு நீங்கள் சொல்வது போல் அதிகபட்ச உரிமைகூட வேண்டாம். குறைந்த பட்ச உரிமையாவது தரத் தயாராக இருந்ததா சிங்களப் பேரினவாதம்?
சுனாமிப் பொதுக்கட்டமைப்புக்கு என்ன நடந்தது? இணக்கப்பாடு கண்ட விசயத்தையை தூக்கிக்கிடப்பில் போடும் அளவுக்குப் புளுத்துக் போயுள்ளது சிங்களப் பேரினவாதம்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தான் இணங்கியவற்றை நடைமுறைப்படுத்தியதா சிங்கள அரசு? அரசபடை விலகவேண்டி ஏராளமான பகுதிகள் இன்னும் ஆக்கிரமிப்புள்தான் உள்ளன. எத்தனை பாடசாலைகள், கோயில்கள், பொதுவிடங்கள் இன்னும் இராணுவம் விலக்கப்படாமலுள்ளது. எத்தனை ஆயிரம் குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இவையெல்லாம் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆக, உலகை நடுநிலையாக வைத்து, தான் செய்வதாக ஒப்புக்கொண்டவற்றில் ஏராளமானவற்றை அரசு நடைமுறைப்படுத்தவேயில்லை.
இதற்குள், அந்த உடன்படிக்கை செல்லாது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசே பகிரங்கமாக அறிவித்தது.
தான் ஏற்றுக்கொண்ட ஓர் உடன்படிக்கையை வெறும் இரண்டு வருடத்துள் மறுதலிக்கிறது அரசு. இவர்களை நம்பி எப்படி இணைந்த நாட்டுள் வாழ்வது.

ஆனாலும் தமிழர்தரப்பு இணைந்த நாட்டுள் தீர்வொன்றைப் பரிசீலிக்கத் தயாராகவே கடந்த நாலுவருடங்களாக இருந்துள்ளது. ஆனால் சிங்களத்தரப்பு செய்தது என்ன? புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை. சுனாமிப் பொதுக்கூட்டமைப்பைக்கூட செயலற்றதாக்கியது. அத்தோடு புலிகளின் தளபதிகளையும் முக்கிய தமிழ்த் தலைவர்களையும் கொன்றது. (இவையெல்லாம் இராணுவத்தின் மீதான தாக்குதல்கள் தொடங்குவதற்கு மிக நீண்டகாலத்தின் முன்பே நடந்தவை) இன்றும் கொன்று வருகிறது.

உண்மையில் இலங்கையில் என்ன நடந்தது, நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?

முதலில் பாலஸ்தீன -இஸ்ரேல், பாகிஸ்தான்-வங்காளதேசம், பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஏன் ஈழத்துக்குச் செல்லுபடியாகாது என்பதைச் சொல்லுங்கள்.
அப்படியே எண்பதுகளில் இந்திய அரசு எதற்காகப் போராளிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுததது என்பதையும் சொல்லுங்கள்.

கொழுவி said...

இன்னுமொரு விசயம்.
அண்மையில் கெப்பிற்றிக்கொலாவ என்ற இடத்தில் கண்ணிவெடித்தாக்குதலில் அறுபது வரையான சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். அன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவ்விடத்துக்கு விரைந்தார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உடனடியாக நிவாரணம் வழங்கினார். ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. அரச தொலைக்காட்சிகளில் செவ்விகள் போயின. எல்லாம் தடல்புடலாக நடந்தன.

இது ஒரேயொரு சம்பவம்.
ஆனால் இவ்வளவுநாளும் மிருகத்தனமான முறையில் தமிழர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் கொலை செய்யப்பட்டனர். (அதுவும் அரசபடையே செய்தது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் நடுநிலைமையாளவர்களாலும் பன்னாட்டு ஊடகங்களாலும்கூட கொண்டு வரப்பட்டன)
ஒன்றுக்குமே அரசதலைவர் செல்லவில்லை. ஏன் ஒரு அரசஅதிகாரி கூட செல்லவில்லை. இரங்கலுரை ஏதும் நடைபெறவில்லை. நிவாரணம் ஏதும் உடனடியாகக் கொடுக்கப்படவில்லை. ஏன் விசாரணைகள்கூட நடத்தப்படவில்லை.

இவை சொல்வது என்ன? சிங்களவர்கள் மட்டுமே இன்றைய அரசாங்கத்தின் மக்கள். தமிழர்கள் இந்நாட்டுக்குரியவர்களல்லர்.

இதுமட்டில் உங்களது கருத்து என்ன?

கொழுவி said...

//இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் புவியில் ரீதியில் ஒன்றுபட்டு இருக்கவில்லை. வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறது. //

நான் நினைத்தேன். இப்படியொரு பதிவு எழுதுபவருக்கு இப்படியொரு புரிதல்தான் இருக்குமென்று.

ஐயா, தமிழீழம் என்று வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் மலையகம் வராது. மேலும் எந்த விதத்தில் அவர்களை மனிதர்களாக மதிப்பதில்லையென்று சொல்கிறீர்கள். இதை சோத்தனமான வாதத்த்திற்கூட சேர்க்க முடியாது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் புவியில் ரீதியில் ஒன்றுபட்டு இருக்கவில்லை. வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறது.
நான் நினைத்தேன். இப்படியொரு பதிவு எழுதுபவருக்கு இப்படியொரு புரிதல்தான் இருக்குமென்று.

ஐயா, தமிழீழம் என்று வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் மலையகம் வராது. மேலும் எந்த விதத்தில் அவர்களை மனிதர்களாக மதிப்பதில்லையென்று சொல்கிறீர்கள். இதை சோத்தனமான வாதத்த்திற்கூட சேர்க்க முடியாது.

மலையகத் தமிழருக்கு தீர்வு என்ன என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்கான ஆதரவு எப்போதுமுண்டு. (முந்திய காலங்களில் ஈழத்தமிழரின் அரசியல் தலைமைகளால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை மறுக்கவில்லை. ஆனால் புலிபுலி என்று புலம்பும் நீங்கள் தான் புலி எப்படி சம்பந்தப்படுகிறது என்று சொல்ல வேண்டும்.) சொல்லுங்கள், மலையகத் தமிழருக்கு எதிராக புலிகள் என்ன செய்தார்கள். எந்த இடத்தில் அவர்களை மதிக்காமல் விட்டார்கள். (யாரோ உங்களுக்கு ஓதியதை வைத்து நீங்கள் எழுதுகிறீர்கள் என்பது விளங்குகிறது.)

Anonymous said...

ம்ஹூம் தேறுவதாகத் தெரியவில்லை. கிளிப்பிள்ளைபோல கட்சியின் கூற்றை அக்கா அக்காவென்று சொல்வதாகத்தான் தெரிகிறது

கொழுவி said...

//மேலும் சின்னப் பசங்களையெல்லாம் பிடித்துக் கொண்டுபோய் இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்//.
இது வழமையான புலியெதிர்ப்புக் கும்பலின் - சிங்கள அரசின் பிரச்சாரத் தொனிதான். நேரில் வாழ்ந்தவர்கள் நாங்கள். நீங்கள் சொல்லும் பிடித்துக்கொண்டு போவது நடைமுறையிலில்லை.(மட்டக்களப்பில் அப்படி நடந்ததாக நான் கேள்விப்பட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர்களை விடுவித்ததுடன் அதற்கான நடவடிக்கையும் எடுக்ப்பட்டதே)
தம்மிடம் சேரும் சிறுவர்களை விடுவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

//எனவே, தற்போது நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதியை ஏற்படுத்திட எடுத்துவரும் முன்முயற்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். அதேபோல் தமிழர் பிரச்சினைக்கு பிரிந்து செல்வது என்பது ஒரு தீர்வே அல்ல//.

இதை யாருக்குச் சொல்கிறீர்கள். உங்கள் பதிவில் புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணமென்ற தொனி தெரிகிறது. இப்போதைய அமைதிப்பேச்சுவார்த்தை முறிவுக்கும் அவர்கள்தான் காரணம் என்ற தொனிதான் எனக்குத் தெரிகிறது. கொஞ்சம் தெளிவுபடுத்துவீர்களாஃ

Anonymous said...

எதிர் கட்சியில் இருக்கும்வரை மக்கள் தங்களுக்காக அக்கட்சி போராடுவதாக நினைப்பர் ஆட்சிக்கு வந்ததும் அவரை எதிர்ப்பது மக்கள் ்வழக்கம். நாம் முசோலியையும் கிட்லரையும் கண்டவர்கள் (கேள்விப்பட்டவர்கள்) அவர்கள் நிலை என்னவானது அப்படித்தான் பதவியில் உட்கார்ந்தால் பிரபாகரனின் நிலையும். இது தான் உண்மையான தத்துவம்

Anonymous said...

/எதிர் கட்சியில் இருக்கும்வரை மக்கள் தங்களுக்காக அக்கட்சி போராடுவதாக நினைப்பர் ஆட்சிக்கு வந்ததும் அவரை எதிர்ப்பது மக்கள் ்வழக்கம். நாம் முசோலியையும் கிட்லரையும் கண்டவர்கள் (கேள்விப்பட்டவர்கள்) அவர்கள் நிலை என்னவானது அப்படித்தான் பதவியில் உட்கார்ந்தால் பிரபாகரனின் நிலையும். இது தான் உண்மையான தத்துவம்/

என்ன தத்துவம்?

முசோலினியும் கிட்லரும் போன பின்னரும் இத்தாலியும்,யேர்மனியும் இருக்கிறது. தன்னுடைய காலத்திற்கு பிறகும் இருக்கப்போகிற தமிழர் தாயகத்திற்காக போராடும் ஒருவருக்கும் கிட்லர் முசோலினிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது கூட உங்கள் கண்ணை மறைக்கிறது.பிரபாகரன் இங்கு காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவி அவ்வளவுதான். ஆடு நனையப்போகிறது என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

/டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெசோ... இன்னும் பல அமைப்புகள் நசுக்கப்பட்டன./

இவர்கள் எல்லாம் யார் என்று பலருக்கும் தெரியும். றோ (RAW) தான் இவர்களை ஆட்டுவித்தது. இவர்களின் தலைமைகள் செய்த தவறுகள் அவர்களுடன் இருந்த சில உண்மையான போராளிகளையும் பலிகொடுத்தன.அவர்களுக்கான மரியாதை அனைவரிடமும் எப்போதும் உண்டு.

65,000 மக்கள் இறந்ததைவிட இவர்களை அடிக்கடி தூக்கிப்பிடிப்பவர்கள் காரணத்துடன்தான் செய்கிறார்கள். றோவின் நம்பிக்கைக்குரியவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தான்(அவர்களைப் பொறுத்தவரை). நீங்களும் அதேபோல் நம்பிக்கொண்டிருப்பது தான் இங்கு பரிதாபம்.

டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் இராணுவத்தலைவராக முன்னர் இருந்தவர். அவரினது அடிப்பொடிகள்தான்(ஈ.பி.டி.பி) அல்லைப்பிட்டி படுகொலைகளுக்கு உடந்தை. இப்படிப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடித்தால் உங்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்து போகும்.(காஷ்மீர் பற்றி நீங்கள்எழுதிய பதிவினைப் படித்தபோது இருந்த நம்பகத்தன்மைகள்)

Anonymous said...

மலையகம் கொழுவி சொன்ன மாதிரி தமிழீழத்திற்குள் வராது.

சில தகவல்கள்்்்
83ம் ஆண்டு கலவரத்திற்கு பின்பு கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் மலையக மக்கள் குடியேறினார்கள். வன்னியின் சனத்தொகையில் ஏறக்குறைய 10% மலையக மக்கள்தான். விடுதலைப்புலிகளில் பல உயர்நிலைகளில் இவர்கள் இருக்கிறார்கள். உடனடியாக எனக்கு நினைவுக்கு வரும் உதாரணங்கள் லெப்ரினன் கேணல் நவா, மணலாறில் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டபோது மரணமடைந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த எனது நண்பரின் சகோதரர் முல்லைத்தீவில் ஒரு முகாமுக்கு பொறுப்பாக இருக்கிறார்.

புலிகள் எங்கே இவர்களை மதிக்காமல் விட்டார்கள்?
கொஞ்சம் தெளிவுபடுத்தவும்

Anonymous said...

/இசுலாமிய தமிழர்களையும் ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கூறுங்கள்/

இசுலாமியத் தமிழர்களை மட்டுமல்ல வடகிழக்கில் காலங்காலமாக வாழ்ந்துவரும் சிங்கள மக்கள் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். புலிகள் எந்த மக்களுக்கும் எதிரிகளல்ல. கிழக்கு மாகாண எம்.பி (தற்போது அமைச்சா?) ஒரு சமயம், ' சிங்களவர்களை நம்புவதைவிட புலிகளை முஸ்லிம்கள் நம்பலாம்' என்று கூறியிருக்கிறார்கள். சிங்கள முஸ்லிம் மக்கள் தமது அன்றாட நீதிப் பிரச்சினைகளுக்கு புலிகளின் நீதிமன்றங்களை நாடுகின்றனர்.(சிங்கள அரசின் மேல் அவ்வளவு 'நம்பிக்கை'.)இதை நான் சொல்லவில்லை, கொழும்பு ஆங்கில நாளிதள் சொல்கிறது. நீங்கள் திரையை விட்டு வெளியில் வந்தால்தான் இவை எல்லாம் புரியவரும். அன்றாடம் நடப்பதை நிறக்கண்ணாடியினை கழற்றி வைத்துவிட்டு அவதானித்தால் உண்மை புரியும்.

Anonymous said...

/ஐரோப்பிய யூனியன்கூட ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற நிலையை நோக்கி திரும்பியுள்ளது. அதேபோல் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு இரண்டு ஜெர்மன்களும் ஒன்றானதும், சோவியத்தில் இருந்து பிரிந்த வந்த முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல், திணறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம்/

திணறுகிறார்கள் என்பதற்காக தங்களது சுயநிர்ணய உரிமையை அவர்கள் விட்டுவிடப்போவதில்லை.அதே ஐரோப்பாவில்தான் தற்போது 55% வாக்குகளால் மொண்டிநிக்ரோ என்ற நாடு உதயமாகியது. 90% ,வீதத்திற்கு மேல் மக்களாதரவுடைய ஈழத்தில் ஒரு நாடு உருவானால் உங்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு விதண்டாவாதங்கள் வேறு.

அனானியாக பின்னூட்டமிடுவதில் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.(அனானி தெரிவு பின்னூட்டத்தில் இருப்பதைக்கொண்டு)

Anonymous said...

"ஜனநாயகப்பூர்வமாக தமிழக மக்களின் விடிவுக்காக போராடிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெசோ... "

இவர்கள் ஜனநாயகவாதிகள்தான் என்று உங்களால் நிரூபிக்கமுடியுமா?

Anonymous said...

No one has any authority to tell Eelam Tamils to live with Sinhalee
in Srilanka. Only Eelam Tamils will
have to decide whether to live with
sinhalee or to libarate Tamil Eelam
and live peacefully in their own
country.USA or India can't decide
this.Only the people of the land should decide that.

கொழுவி said...

உந்த புளிச்சுப்போன கிட்லர், முசோலினி, பிரபாகரன் கதையை என்னார் எண்டு ஒருத்தர் வலைப்பதிவுகளில துப்பிக்கொண்டு திரிஞ்சவர். இந்தப்பதிவாவது பரவாயில்லை, ஏதோ ஒரு விதத்தில பிரபாகரனோட சம்பந்தப்பட்டது. ஆனா ஒரு சம்பந்தமுமில்லாத இடங்களில கூட அந்த நபர் உதே பின்னூட்டத்தைப் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.

Anonymous said...

//எதிர் கட்சியில் இருக்கும்வரை மக்கள் தங்களுக்காக அக்கட்சி போராடுவதாக நினைப்பர் ஆட்சிக்கு வந்ததும் அவரை எதிர்ப்பது மக்கள் ்வழக்கம். நாம் முசோலியையும் கிட்லரையும் கண்டவர்கள் (கேள்விப்பட்டவர்கள்) அவர்கள் நிலை என்னவானது அப்படித்தான் பதவியில் உட்கார்ந்தால் பிரபாகரனின் நிலையும். இது தான் உண்மையான தத்துவம்//

உண்மைதான், அப்படித்தான் மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ போன்றோரும் இருந்தனர். அவர்களின் நிலை என்னவானது? ஆனால் என்ன இத்தாலியும் ஜேர்மனியும் இன்னும் இருக்கிறது. ஆனால் சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லவாக்கியா போன்ற நாடுகளைக் காணவில்லை.

பிடல் காஸ்ரோவின் நிலையும் அப்படி ஆகுமா தோழரே?

சந்திப்பு said...

இலங்கை பிரச்சினை தீரவேண்டும் என்பதில் இங்கே பின்னூட்டமிட்டுள்ள அனைத்து நன்பர்களும் விரும்புகின்றனர். ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது. அதற்கான தீர்வாக அவர்கள் முன்வைப்பது.


1. தனி ஈழம் கான்பது. (தேசிய சுய நிர்ணய உரிமை எனக் கூறிக்கொள்கின்றனர்.)


2. அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தைகள் மூலம் அதிக அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி பிரதேசமாக பெறுவது.


இன்றைய இலங்கை அரசியல் சூழலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இனவாத அரசியல் என்பது இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கடந்த 20 வருடகாலமாக அரசுக்கும் - எல்.டி.டி.ஈ.க்குமான போராக வெடித்து, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


பின்னூட்டமிட்ட அனானியே ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார். அதாவது, அங்கு மலையக தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒற்றுமையில்லை என்பதை. அவர் கூறும்போது, மலையகத் தமிழர்களுக்கான தீர்வினை அவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது உணர்த்துவது என்ன?


எனவே, தனி ஈழம் என்பது இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது இல்லை. அங்கே தமிழினமே மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. இதில் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே தனி ஈழம் கேட்கப்படுகிறது. இலங்கையில் பல்வேறு இனங்கள் உள்ளன. ஒரு சின்னஞ் சிறிய நாட்டில் ஒவ்வொரு இனமும் சுயநிர்ணய உரிமை என்று போர்க்கொடியும், துப்பாக்கியும் தூக்கினால் என்னவாகும்? இது தெற்காசிய நாட்டில் தங்களது இராணுவ தளத்தை அமைத்துக் கொள்ள விரும்பும் அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்குத்தான் இறையாகும். அமெரிக்கா நீண்ட காலமாகவே திரிகோண மலையில் ஒரு இராணுவ தளம் அமைத்திட முயற்சிக்கிறது. எனவேதான், அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையில் அமைதி திரும்புவதை அது விரும்பாது. இன அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.


இதைத்தான் நாம் ஈராக்கில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஈராக்கில் உள்ள ஷியா, ஷன்னி, குர்து என ஈராக் நாட்டின் ஒரு தாய் மக்களை மூன்று பிரிவுகளாக பிரித்து, அதை மூன்று நாடுகளாக மாற்றி தங்களது சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்க அமெரிக்க முயலுவதை நாம் அறிவோம். அதே கதைதான் இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை ஒரு இராணுவ ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசம். அந்த அடிப்படையில் இனவாதம், இனமோதல் ஏகாதிபத்திற்குகே சாதகமாக அமையும்.


அடுத்து, எது ஜனநாயக அமைப்பு என நன்பர் கேட்டிருக்கிறார். நாம் ஏற்கனவே கூறியபடி எல்.டி.டி.ஈ. என்ற பயங்கரவாத அமைப்பின் கீழ் வேறு எந்தவிதமான ஜனநாயக இயக்கங்களும் தோன்ற முடியாது. ஏன் பிரபாகரனுக்கு எதிராக யாராவது முனுமுனுத்தால்கூட அவர்களுக்கு தூரோகி பட்டம் சூட்டப்பட்டு கொல்லப்படுவார்கள். இதுதான் கருணா விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கருணா எல்.டி.டி.ஈ.யில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போது அவர் கூறிய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமல் இல்லை.


இறுதியாக, தற்போது இலங்கை அரசும் நார்வே தூதுக்குழுவிடம் ஒப்புக் கொண்ட அடிப்படையில் தமிழர் பகுதிகளில் இருந்து தங்களது இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். புலிகளும் தானடித்த மூப்பாக செயல்படுவதை விட்டு விட்டு, 20 ஆண்டுகால அனுபவத்தில் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. சொல்லப்போனால் இலங்கை தமிழர்களுக்கு துன்பத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். தற்போது உள்ள சூழலில் எல்.டி.டி.ஈ.யை ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத பட்டியலில் கொண்டு வந்து, தடை செய்யப்போவதாக கூறி வருகின்றன. இதுவெல்லாம் இன்றைக்கு புலிகள் தனிமைப்பட்டு வருவதை காட்டுகிறது.


எனவே ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட இலங்கையில் அதிக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி அரசு அமைத்திட முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜனநாயக ரீதியாக செயல்படும் அமைப்புகளை எதிரி அமைப்புகள் போல் கருதும் புலிகளின் போக்கு கைவிடப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் அபிலாசையில் இருந்து ஒரு ஜனநாயக இயக்கம் வளரும்.

Anonymous said...

அமெரிக்கா போவதற்க்கு முன்னர் ஈரக்கில் இனங்ககுக்கிடையில் மோதல்கள் நடைபெறவில்லையா? சதாம் சியா முசிலீம்களை ஆயிரக்கணக்கில் நச்சுவாயு அடித்து கொலை செய்ததை எந்தக்கணக்கில் போடுவீர்கள்?

கருணா இந்திய உளவுப்படையிடம் விலை போய்(மாத்தய்யாவைப்போன்று) ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படப்போகிறது என தெரிந்தவுடன், பிரதேசவாதத்தை தூக்கினார். ஏன் இபோது தெரிந்ததாக நீங்கள் சொல்லும் நியாயம் அவருக்கு 20 வருடமாக தெரியவில்லை.

ஏன் பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிய நேரிட்ட போது இந்தியா ஒரே பாகிஸ்தானுக்குள் தீர்வை பிரேரிக்கவில்லை?

சந்திப்பு said...

அண்ணா

இந்தியாவில் இருந்து பாகிசுதான் பிரிவதற்கு காரணம் மதவாதம், இதற்கு இந்துத்துவாதிகள்தான் முதல் காரணம். இந்த மதவாத விஷத்தை தூவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியம் இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு வலுவான நாடாக உருவாவதை விரும்பவில்லை. அதனால் அதனை பிரித்தது.

அடுத்து புவியில் ரீதியாக பிரிந்து கிடந்த வங்க தேசம் இயல்பாகவே பாகிசுதானில் இருந்து பிரிந்தது. இதைத்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். இலங்கையில் தமிழர்கள் புவியல் ரீதியாக ஒன்றுபட்டு இருக்கவில்லை. எனவே உங்களது கோரிக்கையும், எண்ணமும் நிறைவேறாது. இது சிறப்பான ஒன்றாகவும் இருக்காது என்று.

இறுதியாக, இந்தியா, பாகிசுதான், வங்கதேசம் என பிரிந்து விட்டதலலேயே இங்கெல்லாம் சொர்க்கம் வந்து விடவில்லை. இன்னமும் ஏழரை நாட்டு சனியன்தான் தாண்டவமாடுகிறது. எனவேதான் பிரிவினை என்பது சொர்க்கத்தை கொண்டு வராது. அங்கே மற்றுமொரு ஹிட்லரைதான் கொண்டு வரும்!

Anonymous said...

சந்திப்பு
நீங்கள் ஏன் இலங்கையின் புவியியல், சமூகம், வரலாற்றினை பற்றிக் கொஞ்சமேனும் அடிப்படை அறிவைப் பெற்றபின்னால், இலங்கைப்பிரச்சனை பற்றிப் பேசக்கூடாது?

மடைத்தனமாகப் பேசுவது மார்க்ஸிய சிந்தனையோடு பேசுவதாகாது :-(

//

/அதாவது, அங்கு மலையக தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒற்றுமையில்லை என்பதை/

/இலங்கையில் தமிழர்கள் புவியல் ரீதியாக ஒன்றுபட்டு இருக்கவில்லை./

/ஏன் பிரபாகரனுக்கு எதிராக யாராவது முனுமுனுத்தால்கூட அவர்களுக்கு தூரோகி பட்டம் சூட்டப்பட்டு கொல்லப்படுவார்கள். இதுதான் கருணா விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கருணா எல்.டி.டி.ஈ.யில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போது அவர் கூறிய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமல் இல்லை./

/ஒரு சின்னஞ் சிறிய நாட்டில் ஒவ்வொரு இனமும் சுயநிர்ணய உரிமை என்று போர்க்கொடியும், துப்பாக்கியும் தூக்கினால் என்னவாகும்?/

/20 ஆண்டுகால அனுபவத்தில் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. சொல்லப்போனால் இலங்கை தமிழர்களுக்கு துன்பத்தைத்தான் கொடுத்துள்ளார்கள்./

உளறுவதுக்கும் ஓர் எல்லையிருக்க வேண்டாமா?

/தற்போது உள்ள சூழலில் எல்.டி.டி.ஈ.யை ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத பட்டியலில் கொண்டு வந்து, தடை செய்யப்போவதாக கூறி வருகின்றன/

ஏற்கனவே தடைசெய்திருக்கின்றனவென்பதைச் சுட்டவேண்டும். ஆனால், இங்கே ஐரோப்பிய யூனியனை நீங்கள் முதலாளித்துவமேற்குநாடுகளின்கூட்டு என்று வழமையான கண்ணோட்டத்திலே பாராமல், யூரோப்பியன்யூனியனுக்கு மதிப்பளித்து எழுதியிருப்பது அறியாமையா? தற்செயலா? அல்லது இந்தியமார்க்ஸியகட்சியின் விளைவான மந்தைத்தனமா?

சந்திப்பு said...

அனானி தங்களிடம் கம்யூனிச எதிர்ப்பு மட்டுமே காணப்படுகிறது. என்னுடைய கேள்விகளுக்கு மாற்றோ, அல்லது தற்போதைய சூழல் குறித்த விரிவான பதிலோ தங்களிடம் இல்லை. வெறும் பெருங்காய டப்பாவாக காட்சியளிக்கிறீர்கள். சரி! தாங்கள் அனானியாக பேசுவதை தவிர்த்தால் உங்களது முகமூடியை மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். அனானியாக வருவதன் நோக்கமென்ன?

-/பெயரிலி. said...

சந்திப்பு
/அனானி தங்களிடம் கம்யூனிச எதிர்ப்பு மட்டுமே காணப்படுகிறது./

போச்சுடா. இது திருமலைக்கு வந்த மிகப்பெரும் அப்பழுக்கு :-)
மார்க்ஸியம் என்பதும் உங்களுடையதும் உங்களின் மரபுவாத பதிவுசெய்த இந்திய பொதுவுடமைவாலிகளினதும் 'சொத்துடமை' என்பதாகக் கருதிக்கொண்டிருக்கின்றீர்கள் போல உள்ளது. கம்யூனிசத்துக்கு எதிர் என்பது வேறு; உங்களைமாதிரி 'உங்களின் நலன்பேணும் கம்யூனலிசத்துக்கு' எதிர் என்பதுவேறு. ஒரு புறம் நேபாள மாவோயிஸ்டுகளுக்காகவும் இந்திய நவநக்ஸலைட்டுகளுக்காவும் ரோச் பிடித்து இந்தியதேசியவாலிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப்பக்கமென்னவென்றால், நீங்கள்.

/என்னுடைய கேள்விகளுக்கு மாற்றோ, அல்லது தற்போதைய சூழல் குறித்த விரிவான பதிலோ தங்களிடம் இல்லை. வெறும் பெருங்காய டப்பாவாக காட்சியளிக்கிறீர்கள்./

ம்ம்ம்ம். அப்படியென்கிறீர்கள்? ஈரோஸ், புளொட்டின் சார்பாகவிருந்த காலம்தொட்டு எத்தனையோ பேருக்கு நீங்கள் மேலே சொல்லியிருக்கும் பெருங்காய டப்பா பதிலைச் சொல்லியிருப்பதால், நீங்கள் எனக்குச் சொல்லிக்காட்டும்போது, உறைக்கவில்லை. உண்மையைச் சொன்னால், ஆண்டாண்டுகாலமாக ஒரே வாழைப்பழத்தை உரித்து உரித்து ஊட்டி அலுத்துப்போனதும் நேரம் மிகைக்கெட்டதுமே பலன். அதனாலே, இதற்கென்றொரு பதிவு போட்டு எழுத விரும்பவில்லை. எழுதினால், ஒழுங்காக எழுதவேண்டும்; இல்லையென்றால், இதற்கென்றொரு பதிவு போட்டு எழுதக்கூடாதென்பது என்னுடைய இன்றைய நினைப்பு :-) ஆனால், உங்களுடைய பதிவிலும் பின்னூட்டங்களிலும் இருக்கும் தர்க்க, புவியியல், சமூகநிலை, வரலாற்றுத்தளர்வுகளுக்கும் பிறழ்வுகளும் சிரிப்பினையும் ஆத்திரத்தினையும் ஒருங்கே தந்ததாலேயே உங்களின் ஏரணமுரண் கருத்துகளை இருகோடுகளிட்டுக் காட்டினேன்.

ஐந்தாறு அநாநிகள் பேசியிருப்பதை வைத்துக்கொண்டு, அத்தனையும் நானே என்று குழம்பிவிட்டீர்களோ தெரியவில்லை.

நான் யாரென்பது முக்கியமில்லை. இதை வாசிக்கும் சிலருக்கு நிச்சயமாக எழுத்துநடையையும் எண்ணவோட்டத்தையும் வைத்து ஏற்கனவே தெரிந்திருக்குமென்றபோதுங்கூட. ஆராவது சங்கர்லால், சர்வதேசப்பொலீஸ் கீழே இவர்தானென்று அடுத்துவரும் பின்னூட்டத்திலே போடுவார்கள். அதனால், கவலையைவிடுங்கள். என்ன சிக்கலென்றால், இன்னார்தான் என்று பெயரைப் போட்டு எழுதினால், இன்னும் ஏழெட்டு அநாநிகள் என்னைப் போட்டுச் சாத்தவென்றே இங்கே பின்னூட்டம் போடுவார்கள். பிறகு சந்திப்பு இல்லை; சண்டைமட்டுமேதான் மிஞ்சும்.

எதற்கும் நீங்கள் முகமிலியாக எழுதியிருக்கின்றேன் என்பதை வைத்தே களத்திலே ஆறு எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்க முற்பட்டாலும் என்பதால், என் வலைப்பெயர் -/பெயரிலி. என் பதிவு இங்குள்ளது.; 2003 மே தொடக்கம் 2004 ஆண்டுவரை வைத்திருந்த பதிவு இங்குள்ளது.

நேர அவகாசம் கிடைப்பின், ஒழுங்காக பெருங்காய டப்பாவாக இல்லாமல், ஹெகல், காண்ட் தொட்டு லெவி, ஸோம்ஸ்கிவரை மேற்கோள்காட்டி ஒரு பதிவிடுகிறேன்.

அதற்கிடையிலே என்னை ஒருமுறை கவலையை மறந்து சிரிக்கவிடுங்கள்.

//இலங்கையில் தமிழர்கள் புவியல் ரீதியாக ஒன்றுபட்டு இருக்கவில்லை./

ஹா ஹாஹாஹாஹாஹா!!

Anonymous said...

எனது பின்னூட்டங்களை மட்டுறுத்தியது உங்களின் போலிவாதங்களை பிடித்து நிறுத்துவதற்காக என்று அறிந்து கொண்டேன் இனிமேல் என்னிடமிருந்து எந்த பின்னூட்டமும் தங்களின் பதிவுக்க வராது என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி.

-/சுடலை மாடன்/- said...

சந்திப்பு செல்வபெருமாள் அவர்களே,

சில பிரச்னைகளுக்கு, குறிப்பாக உயிர்கள் போகும் பிரச்னைகளுக்கு (வெறும் வார்த்தையாக இப்படிச் சொல்லவில்லை), முட்டாள்தனத்தைத் தொடும்படியான அப்பாவித்தனமான தீர்வைச் சொல்லுவது கூட கயமைத்தனமாகத் தோன்றும் - ஏனெனில் அதைச் சொல்லுவதற்கு எளிதானது என்பதைத் தவிர வேறு எந்த பயனும் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள் - அந்தச் செயலை ஒன்றும் அறியா ஆரம்ப அரிச்சுவடிகள் சொன்னால் விவாதிக்கலாம். ஆனால் உலகப் பிரச்னைகளை நாறு நாறாகக் கிழித்து ஆராயும் வோட்டுக்-கட்சி-மார்க்ஸிய-வாதிகள் இப்படிச் சொல்லித்திரிவது எளிமையால் அல்ல, கயமைத்தனத்தால் அல்லது கையாலாகாத்தனத்தால் என்கிறேன்.


வோட்டுக்-கட்சி-மார்க்ஸிய-வாதிகள் இப்படி பல்லவி பாடிக்கொண்டேயிருக்கிறார்களே, இம்மாதிரிப் பிரச்னைகளில் ஏதாவது சாதித்திருக்கிறார்களா என்றால் இல்லை. எதற்கு இலங்கைக்குப் போக வேண்டும், நம்ம காவிரிப் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். வோட்டுக்-கட்சி-மார்க்ஸிய-வாதிகள் கர்னாடகாவிலும் இருக்கிறார்கள், தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். இன்று வரைக்கும் தங்களளவில் சந்தித்து காவிரிப் பிரச்னையை விவாதித்து, பலவிதமான தீர்வுகளை ஆராய்ந்து, நாங்கள் முன்வைக்கும் தீர்வு இதுதான் என்று சொல்லியிருக்கிறார்களா? கூரை ஏறி கோழி பிடிக்காத இவர்கள் வானம் ஏறச் சொல்லும் வழியை இலங்கை தமிழர்கள் கேட்க வேண்டும் என்று அடம் பிடிக்கலாமா?

நான் சொல்லுவதை நம்மிருவருக்கும் பரிச்சயமான இன்னொரு உதாரணம் கொண்டும் விளக்கலாம் - இப்பொழுதான் இட ஒதுக்கீடு பற்றி விவாதம் ஓய்ந்திருக்கிறது. அதில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களால் அடிக்கடி சொல்லப் பட்ட தீர்வு - "பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது சாதி ரீதியில் பிரிவினையை உண்டாக்கும், அதனால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து எல்லோரும் சமமாகப் போட்டியிட வைப்பது". நீங்கள் இலங்கைப் பிரச்னைக்குச் சொல்வது போல் இதுவும் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது, பின் ஏன் அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தீர்கள்? அது கயமைத்தனமானமாகத் தோன்றவில்லை?

சரி அதையும் விடுங்கள், இன்னும் எளிதான ஒன்று - வோட்டுக்-கட்சி-மார்க்ஸிய-வாதிகள் எளிமையாகச் செய்ய முடியும் - கொஞ்சம் மொன்னைத்தனமான கேள்விதான் இருந்தாலும் கேட்கிறேன். - எல்லாவித பிரச்னைகளிலும் கடந்த பல ஆண்டுகளாக ஒரே அணுகுமுறையையும், நிலைப்பாட்டையும், தீர்வையும், செயல்பாட்டையும் கொண்டிருக்கும் CPI, CPI(M) கட்சிகள் ஏன் இன்னும் இரண்டாக இருக்கிறார்கள். பிரிவுக்கு ஒரு முக்கிய காரணமாயிருந்த சோவியத் ரஷ்யாவும் காணாமல் போயாச்சு. இனி ஒரே கட்சியாக இணைந்து செயல் பட முடியுமே? அதனால் கட்சியை இன்னும் வளர்த்து பாட்டாளி வர்க்க ஆட்சியைக் கொண்டு வர முயற்சி செய்யலாமே?

போங்க சார் இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப விவாதிப்பது கூட அலுப்பாய் இருக்கு.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தபோது இனித்த உங்களுக்கு, காஸ்மீரமும்,தமிழீழமும் பிரிய எண்ணும்போது கசப்பதேன்?

சந்திப்பு said...

ஐயா அனானி அன்பரே! பாகிஸ்தானில் இருந்த வங்கதேசப் பிரச்சனையும் - இலங்கைப் பிரச்சனையும் வேறு வேறானது. வங்கதேச மக்கள் வரலாற்று மொழி ரீதியாகவே வங்காளி மொழிபேசும் பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும் புவியியல் ரீதியாகவும் பிரிந்துள்ளனர். இந்த நிலையில் வங்கதேச மக்களின் பாகிஸ்தானுக்கு எதிரான எழுச்சிதான் வங்கதேசம் உருவாக காரணமாக அமைந்தது. எந்தவொரு தேசத்தையும் உருவாக்குவதையும் - அழிப்பதையும் வெளியிலிருந்து யாரும் செய்ய முடியாது. அது அந்தந்த பகுதி மக்கள் தீர்மானிக்க வேண்டிய விசயம்.