February 12, 2009

துயரத்தை வெளிப்படுத்தும் சிறை அறைகள்!

முதல் வகுப்பு சிறை அறைகளை தாண்டியவுடன் கல்லூரி வளாகத்தைப்போன்ற சூழல் நம்மை வரவேற்கிறது. பரந்து விரிந்த விளையாட்டுத் திடல் போன்ற மைதானம், சிறையின் வயதிற்கு ஏற்ப ஓங்காரமாய் வளர்ந்திருந்த அரச மரங்களும், வேப்பம் மரங்களும், பாதாம் மரங்களும்... என்று தங்களது இலைகளால் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது.

இதன் இருபுறங்களிலும் சிறு குற்றங்களுக்காக மொத்தமாய் அடைக்கப்படும் செல்கள் பாடசாலையைப் போல் காட்சியளித்தது. அதற்கு முன்னாள் வெளிநாட்டு கைதிகளுக்கான சிறை அறைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்த செல்கள் அனைத்தும் தனிமைச் சிறை அறைகள்தான். வெறும் 8 அடிக்கு 6 அடி இருக்கும். அதற்குள்ளேயே கழிவறையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு 172 ஆண்டுகளுக்கு தாங்கும் அளவிற்கு அதன் சிறை கதவுகள் கனமானதாகவும், வலுவானதாகவும் காட்சியளித்தது. இதுபோன்ற வலுவான சிறை அறையில் இருந்துதான் எல்.டி.டி.ஈ. அமைப்பினர் எட்டு பேர் தப்பியிருக்கின்றனர் என்றால் எப்படி முடிந்தது என்ற கேள்விதான் எழுகிறது? இவர்கள் மட்டுமா? ஆட்டோ சங்கர் கூட இப்படித்தான் தப்பினானாம்! இப்படி எண்ணற்ற கதைகளை சுமந்துக் கொண்டு கம்பீரமாய் நிற்கிறது சென்னை மத்திய சிறைச்சாலை. இதன் சுவர்களுக்கு மட்டும் பேசும் திறனிருந்தால் இலக்கியத்திற்கான அத்தனை நோபல் பரிசுகளும் இதற்கே கிடைத்திருக்கும்.
ஒவ்வொரு செல்லும் ஒரு கதையை சொல்லும். ஒரு செல்லில் தனது வாக்குமூலமாக ஒரு கைதி இப்படி எழுதி வைத்து விட்டுச் சென்றான். “எனது வாழ்க்கையில் பாதி இங்கேதான் கழிந்தது” என்று! அவனது மீதிப் பயணம் தற்போது எப்படியிருக்குமே?

சாதி, மத, இன மோதல்கள் எல்லாம் வெளியில் உள்ள சுயநலவாதிகளால் தான் தூண்டி விடப்படுகிறது. ஆனால் சிறைக்குள் எத்தனை கைதிகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தரும் அருமருந்தாக மாறி விடுகின்றனர்.உணர்ச்சி வசப்பட்டு குற்றம் இழைத்து விட்டு கொடூரங்களை அனுபவிக்கும் கைதிகளுக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளொளி வழங்கியிருந்தது அவரவர் சார்ந்த கடவுகளே! எல்லாச் சிறை அறைகளிலும் இந்து - மு°லீம் - கிறித்துவர் என்று பாகுபாடின்றி கடவுகள் படம் சங்கமமாயிருந்தன.

ஒரு சிறையில் இசுலாமியர் ஒருவர் தொழுகைக்கு செல்லும் போது சுத்தமாக கால் கழுவிவிட்டு செல்லவும் என்று அழகான தமிழிலும் - உருதுவிலும் எழுதியிருந்தார். அதுவே மசூதியின் மறுவடிவமாக அங்கே காட்சியளித்துக் கொண்டிருந்தது என்றால் வியப்பில்லை!

உலகமயமாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஓவியர்களின் தூரிகைகளை முறித்திருக்கலாம். ஆனால் இதன் எந்தத் தாக்கமும் சிறை கம்பிகளுக்குள் நடக்கவில்லை என்பதைத்தான் அங்கே ஒவ்வொரு சுவரிலும் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சாட்சியாய் உயிரூட்டிக் கொண்டிருந்தன. வரைந்த கைதி உயிரோடு இருப்பாரோ? இல்லையோ? அவரது ஓவியம்.... மவுனமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோ°, ஜவஹர்லால் நேரு போன்ற சமூக போராளிகளின் வாழ்கையை சுவரோவியமாய் தீட்டியுள்ளான் அந்த ஓவிய சிறைப்பறவை. வெறும் படங்கள் மட்டுமல்ல! அவர்களது பொன் மொழிகளையும் மறக்காமல் பதித்திருந்தான் அந்த அழகான தூரிகையால்.

இன்னொரு சிறை அறைக்குச் சென்றபோது, “காதலுக்காக இவள் இங்கே சிறைபட்டாள் என்று எழுதப்பட்டிருந்தது.” சுவர் முழுக்க ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி... என்று விதவிதமான அளவுகளில் எழுதப்பட்டிருந்தது. இங்கே சிறைபட்டவர் ஆணா - பெண்ணா என்ற குழப்பம் நீடிக்கத்தான் செய்தது; இருந்தாலும் என்ன உருக்குக்கு நிகரான சிறைச் சுவர்களால்கூட அவனது / அவளது உள்ளத்தில் இருந்த காதலை பிரிக்க முடியவில்லை. சிறைக்குள்ளே அவன் / அவள் இருந்தாலும் காதல் நிச்சயமாக சுகப்படுத்தியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

4 ஆம் எண் கொண்ட அகன்ற சிறைக்குச் சென்றபோது 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 25 பைசா பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது நினைவுக்கு வந்தது. இந்த அநியாய ப° கட்டண உயர்வை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் (டி.ஒய்.எப்.ஐ.) மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 50 ஆயிரம் பேர் கைதாகியிருந்தனர். வடசென்னையில் குறளகம் எதிரிலும், தென்சென்னையில் அண்ணா சாலையிலும் நடைபெற்ற மறியல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். நான் உட்பட...
அப்போது அண்ணா சாலையில் நடைபெற்ற மறியலின் போது போலீசாரின் கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலில் பலரின் மண்டை உடைந்தது. எங்களை எல்லாம் சென்னை சென்டிரலில் உள்ள நேரு °டேடியத்தில் கொண்டு போய் வைத்தனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அண்ணா சாலையில் அடிபட்டவர்களை ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லாமல் கைது செய்து நேரு °டேடியத்திற்கு கொண்டு வந்திருந்தனர் இரக்கமற்ற காவல்துறையினர். முதல் முறையாக தடியடியில் ரத்தத்தை பார்த்த எங்களுக்கு ரத்தம் பொங்கும் வகையில் கோபம் கொப்பளித்து. ஒருபுறம் தோழர்கள் பட்ட அடி எங்கள் மீது பட்ட அடியாக துடித்தோம் - நெஞ்சம் வெடித்தது. பின்பு ஒருவழியாக அடிபட்ட தோழர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நானும் என்னுடன் 11 பேர் இந்த மறியலில் கலந்து கொண்டோம். எல்லோரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். அன்றைய தினம் காலையில் மறியலுக்கு செல்லும் வேகத்தில் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட எங்களது நண்பர்கள் சிலர் வரும் போது கண்ணில் பட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டோம். இந்த தடியடி களோபரத்தில் அந்த புதிய தோழர்கள் கலங்கித்தான் போனார்கள். எப்படியும் மாலையில் விட்டுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சூரியன் மறைந்த பின் வீனான கற்பனையானது. நாங்கள் எங்கே சென்றோம் என்று எங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது! இதுபற்றிய அச்சம் ஒருபக்கம். வீட்டில் உள்ளவர்கள் தேடுவார்களே... என்ற ஏக்கம் மறுபுறம்.

பின்னர் எங்களை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டுச் சென்று நீதிபதிகள் முன்னாள் ஆஜர் படுத்தியபின்னர் இரவு 8 மணிக்கு மேல் சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டுச் சென்றனர்.

அந்த இரவிலும் காவல்துறையினர் கண்ணியமாக கடமையை செய்தனர். பெயர், சாதி, மச்சம் என்று அனைத்தையும் குறித்துக் கொண்டு போர்த்திக் கொள்வதற்கு தூசியும் - அழுக்கும் படிந்த ஒரு போர்வையும், நொறுங்கிப் போன அலுமினியத் தட்டும், ஒரு தம்ளரும் கொடுத்தார்கள். வீட்டில் எங்களுக்காக சாப்பாடு சூடாக தயாரிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அலுமினியத் தட்டுடன் வீர நடைபோட்டுக் கொண்டிருந்தோம்.

இரவு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஒருவழியாக தூக்கம் வந்தது. காலையில் சீக்கிரம் எழுந்து என்னப் பன்னப்போறோம் என்ற சோம்பேறித்தனம் அந்த இடத்தையும் விடவில்லை. இருப்பினும் என்ன? சிறையல்லவா? அங்கே ஒரு சி°டம் இருக்கிறது. காலை 06.00 மணிக்குள் சிறையில் அட்டென்டென்° எடுப்பார்கள். ஐந்து ஐந்த பேராக வரிசையாக குத்துக்காலிட்டு உட்கார வேண்டும். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அப்புறம் செல்லில் இருந்து வெளியில் திறந்த விட்டார்கள். காலை பத்திகை எல்லாம் கிடைக்காது. எங்களைப் பற்றிய செய்தி வந்திருக்குதா என்றுக் கூட பார்க்க முடியாது. அந்த நேரத்தில் செல்போன் எல்லாம் கிடையாது.கிராமப்புற °டைலில் வேப்பம் குச்சியில் பல் துலக்கினோம். பின்னர் எல்லோருக்கும் காலை டிபன் அச்சு சோறுதான். அது என்னமோ பாடையில் கட்டி தூக்கி வருவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அதன் மேல் போர்த்தப்பட்ட துணி எங்களுக்கு கொடுக்கப்பட்ட போர்வையை விட படு மோசமாக இருந்தது. இருந்தாலும் என்ன? சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

இதில் எங்கள் கூட அப்பத்தான் டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததிருந்த நரசிம்மன் என்ற புதிய தோழரும் வந்திருந்தார். அவருக்கு இந்த அச்சு சோற்றை பார்த்ததும் ஒரே எரிச்சல் அதை கையில் வாங்கிய உடன் அப்படியோ தூக்கி அடித்தார் சுவற்றில் அதே அச்சுப்போல சுவரில் ஒட்டிக் கொள்ள, இதைப் பார்த்த பழைய தாதாக்கள் (கைதிகள்) சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இன்னைக்கு வருவீங்க - நாளைக்கு போயிடுவீங்க எங்களத்தானே இதையெல்லாம் சுத்தம் செய்யச் சொல்லுவானுங்க என்று சொல்லும் போது அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.

அப்புறம் என்ன? பல குழுக்களாக பிரிந்தோம் சிறைச்சாலை அரசியல் பயிற்சி கூடமாக மாறியது. அத்துடன் சுதந்திரப் போராட்டக் காலத்திலும், பல கம்யூனி°ட்டுகளும் அனுபவித்த சிறைக் கொடுமைகள் பற்றியெல்லாம் படித்த தோழர்கள் சொல்ல எல்லாத்தையும் உள் வாங்கிக் கொண்டோம்.

அப்புறம் என்ன அந்த வேப்ப மரநிழலில் நான் உறங்கி விட அந்த நரசிம்மன் தோழர் அய்யோ எனக்கு வேலையே போய் விடும்; இவன் என்னான்னா கவலையே இல்லாமே தூங்குறானே என்று கொட்டித் தீர்த்தார். புதியவரை நாம் இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டோமே என்ற கவலை என்னை வாட்டியது... இப்போதும்தான்...அந்த நேரத்தில் எங்க ஊரில் இருந்த பிரபல தாதாக்கள் எல்லாம் சிறையில் அடைபட்டிருந்தனர். அவர்கள் அங்கே உலா வந்ததைப் பார்த்தபோதுதான் சிறை அவர்களுக்கு சுகமானது என்று புரிந்தது. சமையல் கூட அவர்களுக்கு தனிதானாம். அவர்களே சமைத்துக் கொள்வார்களாம்! மீன், கறி என எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும். சிறைக்குள் சிகரெட், பீடி மட்டுமல்ல கஞ்சா கூட கிடைக்குமாம்! சிறையின் கொடுமை சமூக விரோதிகளை எப்போதும் அண்டியதே இல்லை; சமூகப் போராளிகளைத்தான் அது கொடுமையாக தண்டித்திருக்கிறது.

இறுதி பதிவு நாளை வெளி வரும்...

5 comments:

somasundaram said...

சிறைகளைப் பற்றி நல்ல பதிவிட்டுள்ளீர்கள். என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்தினருக்கு சிறையைப் பார்த்த அனுபவமில்லை. காவல் நிலையம்/சிறைச்சாலை என்றாலே ஒரு அசூயை / பயம். பல தமிழ்த்திரைப்படங்கள் மூலம் தான் சிறையைப்பார்க்க முடிந்தது.

விடுதலைப்போராட்ட காலத்தில் சிறைச்சாலைகளை பிரச்சார தளமாக மாற்றிய தலைவர்கள் இருந்துள்ளனர்.

பெரியாரின் ரஷ்ய பயண அனுபவத்தில் அங்குள்ள சிறைகளைப் பற்றி குறிப்பிடும்போது அவைகள் தொழிற்கூடமாக இருந்தன என கூறுகிறார், இந்திய சிறைகளை சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்.

இந்தியாவில் வசதிபடைத்தோருக்கும் வலியோருக்கும் சிறையில் சகல வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் சிறிய குற்றங்களுக்காக சிறை செல்ல நேரும் சாமனிய மக்களை திருத்தும் கூடமாக இல்லாமல் மீண்டும் குற்றவாளிகளாக சிறை அனுபவம் மாற்றிவிடுகிறது.

சிறைகள் தொழிற்சாலைகளாகவும்/தொழிற்கல்விக்கூடங்களாகவும் மாற்றப்படவேண்டும்.

விடுதலை said...

வாலிபர் சங்க தோழர்களுடன் நீங்கள் கைது ஆனாதோடு உங்களது நன்பர்களையும் அழைத்து சென்று கைதாகி அவர்களின் சாபத்தை பெற்றது .

பிறகு என்ன ஆனார் நரசிம்மன் ?

எனக்கு இதுபோன்ற அனுவம் உண்டு . போலிஸ்டம் தர்ம அடிவாங்கியதும் உண்டு .நன்பர்களின் அப்பா, அம்மாக்களின் சாபத்தையும் பரிசாக பெற்ற நினைவுகள் உங்கள் பதிவை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.

vimalavidya said...

sir ! really the ''Jail'' visit touched the heart.But one thing,there is a very broader different mentalities prevailing today.Those who went and sacrifices their life in jail were considered as a past heroes.Today mentalities of the present generation is different. The new life style and consumerism changed the mindset of youths.It must be understand in right perspective and do the needful to change the things.
Sir , Your article is heart touched one.It revealed many many thoughts...Selvapriyan

சந்திப்பு said...

நன்றி திரு. சோமசுந்தரம். மக்கள் திரள் திரளாக சென்னை சிறைச்சாலைக்கு வந்துப் போவதைப் பார்த்தால் சிறையின் மீது அவர்களுக்கு உள்ள ஆவல் எத்தகையது என்பதை உணர முடிகிறது. நீங்கள் கூறியிருப்பது போல சிறை சீர்திருத்தம் மிக அத்தியாவசியமானது. ஏ கிளாஸ் கைதிகளுக்கு மட்டுமே சுத்தமும் - சுகாதாரமும் - காற்றோட்டமும் கிடைக்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு ?.... அன்புள்ள தோழரே தங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல். வாய்ப்பிருப்பின் மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். ksperumal@gmail.com

சந்திப்பு said...

விடுதலை அதுவொரு பெரிய கதை... இங்கு அது புலம்பலாக மாறிவிடக் கூடாதே என்பதற்காக மிக எச்சரிக்கையாக பதிவிட்டுள்ளேன். தலை காட்ட முடியவில்லை அன்றைய தினம் எங்கள் தெருவில். அது மட்டுமா? அங்குள்ள வீட்டுப் பெண்கள் யார் கூட வேணும்னாலும் சேருங்க இந்த செல்வத்துக்கூட சேராதீங்கன்னு சொல்லுவாங்க! ஏன்னா வேலை கிடைக்காது என்று பயம்... ஆனால் உண்மையில் மக்கள் அப்படியில்லை மிகவும் அன்பு கொண்டவர்கள். சில நேரங்களில் மனிதர்கள் இவ்வாறு நினைப்பது இயல்புதானே! அப்புறம் அந்த நரசிம்மன் கதை பெரியது. அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் தனிப்பதிவே போடலாம். ஒரே பையன் சிறிது மூளை வளர்ச்சி குறைவு... வாயில் ஜொல்லு ஊத்தும்... அப்படிப்பட்ட ஆள் பின்னர் மனிதனாக மாறுவதற்கும் - சமூகத்தில் ஒரு ஈடுபாட்டையும் உருவாக்குவதற்கு வாலிபர் சங்கம் பயன்பட்டது. தற்போத குடும்பத்துடன் நல்ல நிலையில் உள்ளார். இயக்கத்தின் ஆதரவாளர்...