May 27, 2006

அம்மாவின் தைரியம்!

அம்மா ஜெயலலிதா இன்று தனியாக சட்டமன்றத்திற்குச் சென்று கிளிப் பிள்ளைப்போல் போராடி 30 நிமிடம் அனுமதி பெற்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்ப்பது மிக முக்கியமான கடமை. எனவே, பிரதான எதிர்க்கட்சியக இருக்கிற அதிமுக தொடர்ந்து ஜனநாயகப்பூர்வமாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்திட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம்: அம்மாவின் சட்டமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை சுதந்திரமாக பேச அனுமதித்தது உண்டா? அல்லது சட்டமன்ற கூட்டத் தொடரைத்தான் மரபு படி நடத்தியது உண்டா? இதையெல்லாம் செய்யாத ஜெயலலிதா இன்றைக்கு ஜனநாயக வேடம் போடுவது பூணை புலியானதுபோல் உள்ளது.

சட்டமன்றதில் ஜெயலலிதா இரண்டு அடிப்படை விஷயங்கள் மீது பேசியிருக்கிறார்.

1. தரிசு நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக. இவருக்கு இருக்கும் சந்தேகத்தை சட்டமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். அதாவது 86 லட்சம் நிலமற்ற விவசாயிகள் இருக்கும் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தை எப்படி பிரித்துக் கொடுப்பீர்கள் என்பதும், மேலும் அரசின் தரிசு நிலம் வெறும் 3 லட்சம் மட்டுமே என்றும், மீதியுள்ளது அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் இதை எப்படி பிரிக்கப் போகிறீர்கள் எனறு கூறியிருக்கிறார். கேள்விகளைப் பார்த்தால் மிக நியாயமாகத் தெரியும்.

இதே விஷயத்தில் அம்மா தனது ஆட்சியில் செய்தது என்ன? இதே 50 லட்சம் ஏக்கர் நிலத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு - பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து பண்ணைகளை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்தார். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இதன் மூலம் சாதித்தது என்ன?

2. கூட்டுறவு கடன் விஷயத்தில் ஜெயலலிதா சண்ட பிரண்டமே செய்துள்ளார். ஒரு இடத்தில் அவர் கூறும் போது ‘நாணயமாக கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு, அந்த தொi திருப்பிக் கொடுக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் யாரைக் கேவலப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் நாணயமானவர்கள் என்றால், செலுத்தாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அம்மாவின் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு உருப்படியான விலையோ, விவசாயமோ செழிக்கவில்லை. இதற்கான தீர்வினை இந்த அம்மாதான் கண்டிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டவர் இப்போது நியாயம் பேசுகிறார்!

சாதாரண உழைக்கும் மக்களை, அவர்களது இல்லாமையை - திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களை வஞ்சிக்கும் வகையில் பேசுவது ஒரு முன்னாள் முதல்வருக்கு அழகா?

ஜெயலலிதாவின் தைரியம் எல்லாம் தனியாக சட்டமன்றத்தில் பேசுவதில் மட்டும்தான் இருக்கும். ஆனால், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இவரது தைரியம் எங்கே போனது! என்பதுதான் இன்றைய கேள்வி!

20 comments:

துபாய் ராஜா said...

தனியாக சென்றதால் வெறும்பேச்சோடு
வந்துவிட்டார்.கூட்டத்துடன் சென்று
இருந்தால் 'குத்துடா','கொல்லுடா'
என்று ஏதாவது 'கலகம்' செய்து
வந்திருப்பார்.

நியோ / neo said...

நேற்றைய சட்டமன்ற நிகழ்வுகள், கலைஞர் மீதான் தாக்குதல்கள் - குறித்து நீங்கள் கருத்து எதுவும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது

சந்திப்பு said...

நியோ உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நேற்றைய தினம் அதிமுக நடந்து கொண்ட முறை சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது. மேலும் சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்கிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்படுவது இன்றைய தினம் அம்பலப்பட்டுள்ளது. வாக்களித்த மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக இதன் மூலம் குறையலாம். நன்றி நியோ.

நன்றி ராஜா, பழைய சூழல் நினைவுக்கு வருகிறது.

நாகை சிவா said...

ஜெ. தாக்கி ஏதாவது சொல்ல வேண்டும் என்ற கருத்து தான் இந்த பதிவில் மேலூங்கி உள்ளது.

ஜீன் said...

சட்டசபையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் போகமாட்டேன் என்றவர் இப்போது அதிமுக-வினர் இல்லாத போது தனியாக போயிருக்கிறார் என்றால் காட்டுமிராண்டிகள் என்று இவர் உண்மையில் யாரை சொல்லி இருக்கிறார். அதிமுக-வினரையா?

சிவா உங்களது எதிர்பார்ப்பு நன்றாக இருக்கலாம். ஆனால், ஜெவைப் பாராட்ட என்ன இருக்கிறது? சொல்லுங்களேன்.

ஜீன் இப்படி போட்டுட்டீங்களே! அட்ரா சக்கை...

குழலி / Kuzhali said...

//சட்டசபையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் போகமாட்டேன் என்றவர் இப்போது அதிமுக-வினர் இல்லாத போது தனியாக போயிருக்கிறார் என்றால் காட்டுமிராண்டிகள் என்று இவர் உண்மையில் யாரை சொல்லி இருக்கிறார். அதிமுக-வினரையா?
//
ஹி ஹி

ஜெயக்குமார் said...

இந்த தைரியம் கூட கருணாநிதியிடம் இல்லையே!.

சென்ற ஆட்சியில், இதுபோல கருணாநிதி சட்டமன்றம் சென்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு வேளை அதிமுக வினர் தாக்கி விடுவார்கள் என்கிற எண்ணமாக இருக்கும்.

அப்படியானால் உயிருக்கு பயந்து பதுங்கிய முன்னோடி தலைவராகி இருப்பார். இவர் தான் சிறந்த தலைவருக்கும், தலைமை பண்புக்கும் முன்னுதாரனம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சரியான காரணம் இல்லாமல், சட்டமன்றம் செல்லாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்படவேண்டும்.

Unknown said...

தோற்று விடுவோம் எனத் தெரிந்தததும் மாவட்ட திட்ட அலுவளர்களின் துணைகொண்டு பணத்தை வாரியிறைத்து 60 இடங்களை கைப்பற்றியது அதிமுக. (முன்பே 'தோற்று விடுவாய்' என உளவு கூறியிருந்தால்., அனைத்து இடங்களிலும் அதிமுக வந்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை). இப்படி 60 ------- தயார் பண்ணி அனுப்பி வைத்தது சும்மா இருக்கவா?., குழப்பம் பண்ணத்தானே?.

ஜெயலலிதாவின் அசட்டு தைரியத்தைதான் ஊடகங்கள் துணிவு என போற்றுகின்றன. விவசாயிகள் எலிக்கறி சாப்பிட பார்த்து களிப்படைந்து கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு திமுக ஆட்சி வந்தவுடன் வாழ்வு வருகிறதே எனத் தாழ முடியவில்லை. அதுதான் மட அம்மா., ஆரம்பிக்கும்போதே கலைக்கத்துடிக்கிறது., காட்டுமிராண்டிகளை விட்டு.
அலுங்காமல்., மக்கள்
தேர்ந்தெடுத்தவர்களை காட்டுமிராண்டிகள் என பேட்டி கொடுத்து விட்டு., நண்பர் இங்கு சொன்னதுபோல் காட்டுமிரண்டிகள் வெளியேற்றப் பட்டவுடன் உள்ளே சென்றிருக்கிறது.

தினமலர் நாளிதழ்., சட்ட மன்றத்தில் நடந்த ரகளை பற்றிய செய்தியில்., ஆளுங்கட்சியினரின் கேள்விக்கு முன்னால் அமைச்சர் அன்பழகன் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது, அது சம்பந்திமில்லாதென கூறி ஆளுங்கட்சியினர் ரகளை செய்ததாக எழுதியுள்ளது.

கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை செயல் படுத்த வில்லை யென ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்ட., அன்பழகன் எழுந்து வீராணத்தை நிறைவேற்றினோம் என பேசியிருக்கிறார். கடல் நீர் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் அப்போதைய மாநில அரசு திட்டம் ஏன் அனுப்பவில்லை என்பதே கேள்வி. அதையும் ஆளுங்கட்சியினர் கேள்வியாக எழுப்பவில்லை., உரையாக படிக்கும் போது., அதிமுகவினர் கலகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பீட்டர் அல்போன்ஸ் சொன்னதை அப்படியே போட்ட தினமலர்., ஜெயகுமார் உட்கார்ந்து கொண்டே எகத்தாளமாக பேசியதை எழுதவில்லை. ஆட்சி பதவியேற்ற நாளில் இருந்து அமைச்சவரவையில் பங்கு தருவார்கள் என எழுதிக் கொண்டிருக்கிறது., (காங்கிரஸ் மேல அம்புட்டு கரிசனையப்பா...)., 60 பேர் இருப்பதால் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாம். எரிச்சலை இப்படியெல்லாம் எழுதி குளிரவைத்துக் கொள்ள முடியும் போலிருக்கிறது.

//அரசின் தரிசு நிலம் வெறும் 3 லட்சம் மட்டுமே என்றும், மீதியுள்ளது அனைத்தும் தனியார் வசம் //

ஜெ, சின்னக்கா நிலங்களை பகிர்ந்து கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தால் வந்த கேள்வியோ?.

Anonymous said...

ya
wen DMK period, they developed alot public living standard.....

then ADMK came and ruin the public std...

wat r u talking if u have any details that DMK developed standard post it here....

i am not supporting any political party and the same time i can't bear that blaming only a particular party

Bala said...

http://balablooms.blogspot.com/2006/05/blog-post_27.html

சந்தர் said...

>>ஜெயலலிதாவின் தைரியம் எல்லாம் தனியாக சட்டமன்றத்தில் பேசுவதில் மட்டும்தான் இருக்கும். <<

தனியாக சட்டமன்றத்துக்கு போவது என்பது என்னமோ அச்சமூட்டும் காரியம் போல சித்தரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

//சட்டசபையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் போகமாட்டேன் என்றவர் இப்போது அதிமுக-வினர் இல்லாத போது தனியாக போயிருக்கிறார் என்றால் காட்டுமிராண்டிகள் என்று இவர் உண்மையில் யாரை சொல்லி இருக்கிறார். அதிமுக-வினரையா?//

ஜெ.வின் பேட்டியை நீங்கள் சரியாக படிக்கவில்லை.சட்டசபையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் போகமாட்டேன் என்று சொன்னார். ஆனால் தேவை பட்டால் போவேன் என்றும் சொன்னார். ஓரு வேளை அதிமுக-வினர் யாரும் அவையில் இல்லாத தானோ திமுக வினரால் கலாட்ட செய்ய முடியவில்லையோ.

Anonymous said...

80 வயதான ஆள் தனியாக சட்டசபை போகலியாம்.ஒரு ஓநாய் ஊளையிடுகிறது.

ஏன் போனா ரவுடிகளை வைத்து ஒரேயடியாக முடிக்கவா?

அம்மாவை பத்தி எது சொன்னாலும் அய்யோ.என்னை துகிலுரிஞ்சட்டான்னு கத்தலாம்.கலாட்டா செய்யலாம்.

கூலி பட்டாளங்கள் வலைப்பதிவு முதற்கொண்டு ( ஜெயகுமார் மற்றும் செந்தழல் ரவி) தினமலர் வரை எழுதலாம்.

ஆசைப்பா உங்களுக்கு.

அருண்மொழி said...

சந்திப்பு அவர்களே இதற்கு "அம்மாவின் தைரியம்" என்ற தலைப்பு தேவைதானா?

ஒரு பெண் MLA சட்டசபைக்குள்ளே பட்டப்பகலில் ஏராளமான MLAக்களும், பார்வையாளர்களும், காவலர்களும் இருக்கும்பொழுது சென்றிருக்கிறார். இதில் என்ன தைரியம் வேண்டியிருக்கிறது? அப்படி அவர் சென்றதே ஒரு பெரிய விஷயம் என்றால், நம் நாடு அவ்வளவு கெட்ட நிலையிலா இருக்கிறது?

Unknown said...

இத பத்தி நான் ஒரு பதிவு போட்டுருக்கன் வந்து பாருங்க
http://kilumathur.blogspot.com/2006/05/blog-post_27.html

Anonymous said...

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்திர குமாரி வாழ்க
சேடப்பட்டி முத்தையா வாழ்க

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

ஆட்சியில் பங்கு வேண்டும் அல்லது வேட்டி உருவப்படும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

எல்லோரும் மனைவி - துணைவி வைத்து தமிழர் பண்பாடு காக்க வேண்டும். இரு பெண்டாட்டி இல்லாதவன் தமிழன் அல்ல.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரிந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் தயாநிதி

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரியாமல் இருந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் ஸ்டாலின்

கோ சி மணி கோவிலுக்கு போனதற்கு விளக்கம் சொல்லவேண்டும். தலைவர் குடும்பமே கோவிலுக்கு போனதற்கு எல்லோரும் வாய மூடி கொள்ளவேண்டும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!