May 19, 2006

ஆரியருக்கும் - தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.


இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.


அத்தகைய மூத்த ஆய்வாளரான சாமி சிதம்பரனார் அவர்கள் திராவிட கொள்கை குறித்து எழுதியவற்றை, அதாவது -தொல்காப்பிய தமிழன்- நூல் அறிமுகம் ஒன்றை விசுவாமித்திரர் எழுதி - திண்ணையில் வெளி வந்துள்ளது. திராவிடம் குறித்து சூடு பறக்கும் இணையதளத்தில் உலா வருவதால் இதனை மறு பதிப்பாக இங்கே வெளியிடுகிறேன். நன்றி திண்ணை, விசுவாமித்திரர்.

சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.

இது தமிழ்வளர்ச்சியா ?
இலக்கிய வளர்ச்சியா ?

தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

  • நூல் வெளியீடு:

  • தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
    நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
    41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
    அம்பத்தூர், சென்னை - 600 098.

20 comments:

வால்டர் said...

பார்ப்பன ஆரிய ராஸ்கல்கள் படிக்க வேண்டிய பதிவு!

Amar said...

எல்லோரும் படிகக் வேண்டிய பதிவு.

//ஆரியருக்கும் - தமிழருக்கும் ஒத்த நாகரிகம் //

இதை நிருபிக்க உங்களின் டி.என்.ஏவை கொடுத்து சோதனை செய்து பாருங்கள்! :)

நாம் ஆரியன் என்று எவனை அழைக்கிறோமோ அவனது டி.என்.ஏவும் நமது டி.என்.ஏவும் ஒத்துபோகும் - இருவருக்கும் ஒரே தாயகம் தான் இந்த இந்திய நாடு என்று அறிவியல் நிருபிக்கட்டும்.

எத்தனை அறிவியல் ரீதியிலாக விளக்கம் கொடுத்தாலும் "பூச்சாண்டி காட்டுகிறாய்" என்கிறார்கள்.

இந்தியனை திட்டும் விட்சலை தெய்வமாக வனங்குகிறார்கள்!

கோவி.கண்ணன் said...

தொல்காப்பியம் ஒன்றை மட்டும் அளவு கோலாக கொண்டு தமிழர் வாழ்வை கணித்துவிட முடியாது என்று பாவாணர் சொல்கிறார். தமிழ் வரலாறு என்ற பாவாணரின் புத்தகத்தில் தமிழர் வாழ்வு முறைகள் பற்றிய ஆரய்சிகள் உள்ளது முடிந்தால் படித்து பாருங்கள்

சந்திப்பு said...

நன்றி கோவி கண்ணன்.

நான் தொல்காப்பிய தமிழன் படித்துள்ளேன். அதே போல் சாமி சிதம்பரனாரின் கம்ப இராமாயணத்தையும் படித்துள்ளேன். மிக அற்புதமானது. இது தமிழரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது. அதாவது தமிழரின் நாகரீகத்தை மேலும் முன்னேற்றும் நோக்கத்தோடு எழுதப்பட்டது. இலக்கியம் அப்படித்தானே இருக்க வேண்டும். தாங்கள் கூறியிருப்பதையும் படிக்கிறேன். அதே போல் வரலாற்று ஆசிரியர்கள் ரொமிலா தாப்பர் உட்பட இந்த ஆரிய - திராவிட வரலாற்றை மறுக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இனவாதம் இந்திய சூழலுக்கு ஒவ்வாதது. இங்கே நாம் பார்க்க வேண்டியது வர்க்க வாதம்தான். இதை வலுப்படுத்துவதுதான் இந்திய மண்ணில் ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கத்தினரும், ஜாதியினரும் மேம்பாடு அடைய உதவிடும்.

சந்திப்பு said...

சமுத்ரா தங்களது கருத்து சரியானது. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தங்களிடம் இந்துத்துவா சிந்தனை ஊறியிருக்கிறது. இதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். இந்துத்துவா சித்தாந்தம் மனு தர்மத்தை (அதர்மம்) அடிப்படையாக வைத்து உள்ளது. இந்துத்துவா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறுக்க கூடியது. அது இந்திய பண்பாட்டை முற்றிலும் திரித்துக் கூறும் தத்துவம். எனவே தங்களது ஆதரவு எந்த அடிப்படையில் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுத்திட வேண்டும்!

Amar said...

//இந்துத்துவா சித்தாந்தம் மனு தர்மத்தை (அதர்மம்) அடிப்படையாக வைத்து உள்ளது//

எனக்கும் இந்த "துவா"களுக்கும் மனுக்களுக்கும் என்ன கிடக்கிறது?

என்றோ எவனோ எழுதிவைத்த புத்தகங்களை பிரபஞ்ச உன்மையாக கருத வேண்டும் என்று எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை.அது மனுவாக இருந்தாலும் சரி மார்க்ஸாக இருந்தாலும் சரி.


//அது இந்திய பண்பாட்டை முற்றிலும் திரித்துக் கூறும் தத்துவம்//

இந்த பன்பாடு கலாச்சாரம் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. அது 'இந்திய' கலாச்சாரமாக இருந்தாலும் சரி 'தமிழ்' கலாச்சாரமாக இருந்தாலும் சரி.'ஹிந்து' கலாச்சாரமாக இருந்தாலும் அதை கண்டுகொள்ளபோவதில்லை.

இவைகளை எப்போதும் define செய்யமுடியாது - மாறிகொண்டே இருக்கும்.அதனை அதன் போக்கில் விட்டுவிட்டு எதாவது நல்ல வேலையை செய்யலாம்.

//எனவே தங்களது ஆதரவு எந்த அடிப்படையில் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுத்திட வேண்டும்//

இனத்தை அடிப்படையாக கொண்ட எந்த இயக்கமும்,கூட்டமும்,நாடும் நாஜியிஸத்தை போன்ற கொள்கைகளை நோக்கி தான் செல்லும் - சென்றுள்ளது.

ஜப்பான் இரண்டாம் உலக போரில் செய்த கொடுமைகளுக்கு அவர்களின் இன-அடிப்படையிலான கர்வமும் ஒரு காரனம் என்று கேள்விபட்டுள்ளேன்.

சிலோனில் சிங்கள் இனவாதம், சீனாவில் ஹான்கள், Darfurஇல அரேபிய இனவாதம்,பாகிஸ்தானின் பஞ்சாபிய இனவாதம்...இப்படி போதுமான அளவுக்கு இனத்தின் பெயரால் கொடுமைகள் நடந்துவிட்டன.

Anonymous said...

இன்னும் சரியாக சொல்லப்போனால் கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடு தான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்...

நூறு சதவீதம் உண்மை.

பார்ப்பனர் தமிழராக இருக்கட்டும் அல்லது வேறு எவராகவேணும் இருக்கட்டும்.

நேற்று நான் கூறியது...

வழிப்போக்கன் said...

சந்திப்பு,

தவராக நினைக்கவேண்டாம்,நீங்கள் இடதுசாரித் தத்துவதையே சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள் என அஞ்சுகிறேன்.

பார்ப்பனர்கள் யார்?

இந்தியாவில் பார்ப்பனர்கள் என்பவர் Status Group Capitalists என்று Max Weber என்பவர் தெளிவாக எழுதியிருக்கிறார்.(இதைத்தொட்டால் எங்கோ போகும். நேரமும் பொறுமையும் இல்லை ஐயா, மன்னிக்கவும்)

பார்ப்பனீய எதிர்ப்பை நீங்கள் ஆதரிக்காமல் இருப்பது என்பது உங்கள் விருப்பம். ஆனால் அந்த முயற்ச்சியைக் கைவிட வேண்டுவது, மிகப்பெரிய (கண்டிக்கப்பட வேண்டிய)முரண்பாடு என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


இதை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கவே இல்லை.

நீங்கள் எல்லாம் எப்படி உங்களை இடதுசாரி என்று பிதற்றித் திரிகிறீர்கள் என்று தெரியவில்லை.

Anonymous said...

ithu over there is no realation between Tamil and sanskrit
u people only change the history
iam true tamil people

சந்திப்பு said...


பார்ப்பனீய எதிர்ப்பை நீங்கள் ஆதரிக்காமல் இருப்பது என்பது உங்கள் விருப்பம்

நன்பரே இங்கு பார்ப்பனீம் குறித்து எங்குமே விவாதிக்கவில்லை. பார்ப்பனீம் என்பது வேறு. பார்ப்பனர் என்பது வேறு. பொதுவாக பார்ப்பனீத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனரை எதிர்ப்பதுதான் இங்கே நடக்கிறது. சமுத்திராவின் கேள்விக்கு நான் மறுமொழியிட்டிருக்கிறேனே அதனை தாங்கள் பார்க்கவில்லையா? அதிலே மனுநீதியை (அநீதி) கட்டமைக்க முயற்சிக்கும் இந்துத்துவா என்று சாடியிருக்கிறேனே இது உங்கள் கண்ணில் படவில்லையா? பரவாயில்லை. அதற்காக நான் உங்களை பார்ப்பன எதிர்ப்புவாதியல்ல என்று சர்ட்டிபிகேட் தரமாட்டேன்.

வஜ்ரா said...

நல்லாவே உறக்கச் சொல்லுங்கள்...

இனவாதம் பெசி "விடாது வெறுப்பை" உமிழ்ந்துகொண்டுஇருப்பவர்களுக்கு விளங்கும் படிச் சொல்லுங்கள். இந்தியன் ஒருவன் தான், அவனை ஆரியன் திராவிடன் என்று சண்டைமூட்டுவதற்காகவே பிரித்தனர் வெள்ளையர்கள்.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

சந்திப்பு said...


இந்தியன் ஒருவன் தான், அவனை ஆரியன் திராவிடன் என்று சண்டைமூட்டுவதற்காகவே பிரித்தனர் வெள்ளையர்கள்.


ஷங்கர் பிரிட்டிஷார் இந்தியர்களை பிரிப்பதற்கு முன்னாலேயே இந்திய சமூகம் ஜாதிய அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது என்பதை மறந்து விட வேண்டாம். இன்றைக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் மிகப் கொடுமையான அளவிற்கு நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் விலங்குகளை விட கீழாக மதிக்கும் போக்குத்தான் நீடித்து வருகிறது. இத்தகைய ஜாதிய அடித்தளம் கொண்ட சமூகத்தில் இனவாதம் பேசுவதன் மூலம் இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு காண முடியாது என்பதுதான் என்வாதம்.

Anonymous said...

//பார்ப்பனீம் என்பது வேறு. பார்ப்பனர் என்பது வேறு. பொதுவாக பார்ப்பனீத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனரை எதிர்ப்பதுதான் இங்கே நடக்கிறது. //

சந்திப்பு ஐயா,

உங்களிடமிருந்து இப்படி ஒரு பொறுப்பற்ற வாதத்தை எதிர்பார்க்கவில்ல. நன்றி.

("பார்ப்பனர்" -க்கு பதிலாக "முதலாளிகள்", "பார்ப்பனீயத்திற்கு" பதிலாக "முதலாளித்துவம்" என்று மாற்றினால் உங்கள் பதில் எதுவோ அதுதான் என் பதிலும்)

வஜ்ரா said...

//
இத்தகைய ஜாதிய அடித்தளம் கொண்ட சமூகத்தில் இனவாதம் பேசுவதன் மூலம் இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு காண முடியாது என்பதுதான் என்வாதம்.
//

சந்திப்பு,

மிக்க நன்றி, நான் இதை முழுவதுமாக ஆமோதிக்கிறேன்.

இன்றும் நீங்கள் வட நாட்டிற்குச் சென்றால் உங்களை மதராசி என்றழைப்பதும், அதற்கு கமல் தனது "மும்பை எக்ஸ்பிரஸ்" படத்தில், ஒரு வசனம் வைத்திருப்பார். "மும்பைக்கு இந்தப்பக்கம் இருப்பவர்களெல்லாம் மதராஸிதானே" (ஹிந்தியில் பார்த்தேன்..) இதெல்லாம் ஆரிய-திராவிட இனவாதத்தின் இன்றய பரிணாம வளர்ச்சி.

இதை முதல் வகுப்பிலிருந்தே மூளையில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு கேவலமான விஷயம், வட நாட்டுக்காரர்களைப் பார்த்தால் ஒரு வித வெறுப்பு இங்கே, தென்னாட்டவர்களைப் பார்த்தால் ஒருவித வெறுப்பு அங்கே..!! இது நம் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்றாக மாறிவருகிறது வருத்ததிற்குறியது.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

வஜ்ரா said...

சந்திப்பு,

வெகு விரைவில் சாமி சிதம்பரனார் அவர்களை இந்துத்வாவாதி, ஆரிய அடிவருடி என்ற்றெல்லாம் பின்னூட்டங்களையும் எதிர் பாருங்கள்.

வஜ்ரா ஷங்கர்.

Anonymous said...

//2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)//

இதற்கும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்கும் முரண்பாடு இருப்பது போலத் தோன்றுகிறதே.

Anonymous said...

தம்பி வழிப்போக்கா!
என்ன வாதமப்பா இது!
பிராமணர்கள் எல்லாம் முதலாளிகளா?
தமிழ்நாட்டில் பொருளாதாரரீதியாய் மிகவும் பின்தங்கிய சமூகங்களில் ஒன்றப்பா அது. அவர்களுக்கு எந்த தனிச்சலுகையும் கொடுக்க வேண்டாம். இப்படி வெறுப்பை உமிழாமலாவது இருங்களப்பா!

குமரன் (Kumaran) said...

சந்திப்பு, இந்தப் பதிவின் கருத்தே என் கருத்தும். தற்போது பழந்தமிழர் வரலாறுக் கருத்துகள் பல வடமொழி நூற்களை வெளிநாட்டவர் ஆராய்ந்து சொன்னவற்றின் அடிப்படையிலேயே இருக்கிறது. அது வெறும் வெறுப்பை நல்குவதாக இருப்பதையும் காண்கிறோம். அவ்வாறின்றி பழந்தமிழ் இலக்கியங்களையும் மற்ற ஆதாரங்களையும் (கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி) கொண்டு அதன் மூலம் தமிழர் வரலாற்றுக் கூறுகள் எடுத்துக் காட்டப்படுமாயின் மிக நன்றாக இருக்கும். தொல்காப்பியமே தற்காலத்தில் கிடைத்த தமிழ்நூற்களில் பழமையானது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அதனால் அந்த நூலில் இருந்து ஆராய்ச்சியைத் தொடங்குவது மிகப் பொருத்தமே.

இந்த நூல் எங்கு கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா? சுட்டியிருந்தால் தாருங்கள்.

வஜ்ரா said...

குமரன்,

Project madurai யில் தொல்காப்பியம் PDF வடிவில் இருக்கிறது.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

வவ்வால் said...

வணக்கம் சந்திப்பு

உங்கள பதிவில் பல தெளிவற்றதாக உள்ளது.இந்த பதிவு கொண்டு நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன?வட மொழி தென்னிந்தியாவில் தோன்றிய மொழி என்கிறீர்களா? இல்லை ஆரியர்கள் என்று யாரும் ஊடுருவில்லை என்கிறீர்களா? தெளிவற்று இருக்கிறது.எதன் அடிப்படையல் ஒத்த நாகரீகம் என்கிறீர்கள் ஆனால் வட மொழி ஊடுவல்,மற்றும் ஆரிய ஊடுவல் தென்னிந்தியாவில் முதலாம் நூற்றாண்டு முதலே உண்டு. இடையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இருண்ட காலம் உள்ளது 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை இடைப்பட்ட காலத்தை சேர்ந்த இலக்கிய நூல்கள் என எதுவுமே இல்லை.மேலும் அந்த காலத்திய கல்வெட்டுகளும் இல்லை.அந்த 300 ஆண்டுகள் தமிழகத்தில் என்ன நடைப்பெற்றது என்று வரலாற்று சான்றுகளும் கிடைக்கவில்லை இது வரலாற்று உண்மை.எனவே அந்த காலகட்டத்தில் ஆரிய ஊடுவல் முழுமை பெற்று நிலைத்து இருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

நீங்கள் சொல்வது எனக்கு தெளிவாக விளங்கவில்லை,எனினும் தொல்காப்பியம் எவ்வாறு வடமொழி கலப்பு ஆனது என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.

தொல்காப்பியத்திற்கு முன்பு தமிழ் இலக்கியங்களை கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்ட கட்டுரையாகாவே வருகிறது. சங்க இலக்கியங்களே பிற மொழி கலப்பில்லாமல் உள்ளவை. தொல்காப்பியம் சங்க இலக்கியத்தை விட பிற்காலத்திய நூல்.சங்க இலக்கிய நூல்களில் தொல்காப்பியம் போல் வட மொழி கலப்பு இல்லை. தொல்காப்பியர் காலத்தில் தென் இந்தியாவில் வட மொழி மெதுவாக ஊடுருவ துவங்கிய காலம்.


அகத்தியர் என்பவர் ஆரிய ஊடுருவலின் உருவகம் ,அகத்தியர் பற்றி சங்க நூல்களில் இல்லை,ஆனால் அவர் தொல்காப்பியர்க்கு ஆசான் என பின்னர் 8 ஆம் நூற்றாண்டு முதல் குறிப்பிட படுவதாக கூறுகிறார்கள்.தென் இந்திய வரலாறு,ஆசிரியர்.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பக்கம் 69 இல் இதனை காணலாம்.ஆனால் தொல்காப்பியர் முதல் நூற்றாண்டை சேர்ந்தவர்.தொல்காப்பியம் முதலான எந்த நூல்களுக்கும் நம்மிடையே மூல ஒலைசுவடி கிடையாது, அதனைபடித்தோர் எடுத்து வைத்த படி ஓலைகள் தான். எனவே காலப்போக்கில் வட மொழி ஆதிக்கம் அதில் அதிகம் தலைத் தூக்க ஆரம்பித்து இருக்கலாம்.வட மொழியின் முழு வீச்சும் தமிழில் நிலைப்பட்டதின் எடுத்துக்காட்டு தான் அகத்தியர் தமிழ் முனிவர் ,பாண்டியர்களின் அரச குரு ,தொல்காப்பியரின் ஆசான் என எல்லாம் தமிழ் இலக்கியத்தில் இணைக்கப்பட்டுள்ளது

முருகனை வழிப்பட்டதாக ஆதிச்ச நல்லூர் அகழ்வராய்ச்சி தெரிவிக்கிறது அவை கி.மு காலத்தை சேர்ந்தவை.முருக வழிபாடு உருவ வழிபாடாக இல்லாமல் வெறும் குறியீடாக கூட இருக்கலாம் ,சுட்ட பானை ஓடுகளில் முருகன் குறியீடு உள்ளது,ஆனால் சிலைகள் ஏதும் அங்கே கிடைகவில்லை. ஆனால் வழி படும் முறை வேறு.யாகங்கள் கிடையாது.எனவே ஆரிய வருகையினாலே அவை வந்து இருக்க கூடும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான கட்டுரைக்கு நன்றி சமுத்ரா