May 04, 2006

கேந்திர வித்யாலயாவில் இடஒதுக்கீடு வருமா?

இது என் சொந்த அனுபவப் பதிவு

மத்திய அரசின் நேரடி பொறுப்பில் நடத்தப்படும் பள்ளிகள்தான்
கேந்திர வித்யாலயா. இந்த பள்ளிகளின் தரம் மிக சிறப்பானது. குறிப்பாக என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் மத்திய அரசின் நேரடி பள்ளி - கல்வி ஆராய்ச்சிகள் முதலில் அமலாக்கப்படும் பள்ளிகள். அந்த அளவில் இந்த கேந்திர வித்யாலயா பள்ளி சிறப்பு வாய்ந்தது. இதைவிட முக்கியமானது கல்வி கட்டணம் மிக குறைந்தது. இது போன்ற கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்திட வேண்டும். மாநில அரசுகளும் இந்த பள்ளிக்கு நிகராக தங்களது கல்வி நிறுவனங்களை மாற்றிட வேண்டும்.

இந்த பள்ளியில் எனது இரண்டு மகள்களை சேர்த்திட கடந்த ஆண்டே நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தேன். இந்த ஆண்டும் இடம் கிடைக்கவில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது. இருப்பினும் அப்படி ஏதாவது ஒன்று நடத்தியிருந்து என்னுடைய குழந்தைகள் அதில் தவறியிருந்தால், அந்த சீட்டு கிடைக்காததற்கு நான் வருந்திப்போவதில்லை.

ஆனால் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் அடிப்டையாக உள்ளது.இந்த பள்ளியில் சேர கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.
1. இந்த பள்ளியில் இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் முக்கியத்துவம் உண்டு. மத்திய பள்ளியாக இருப்பதால் நிச்சயம் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தேயாக வேண்டும்.
2. மத்திய அரசு ஊழியராக இருக்க வேண்டும். அல்லது மாநில அரசு ஊழியராக இருக்க வேண்டும்.
3. இவைகள் எதுவும் இல்லையென்றால் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியராக இருந்திட வேண்டும்.இதனை 7 கேட்டகிரிகளாக உருவாக்கியுள்ளனர்.
4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. (மத்திய - மாநில அரசு ஊழியர்களாக இருந்தால் நிச்சயம் இடம் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதாக இருந்தால் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம்)
மத்திய அரசு ஊழியர்களில் யாராவது இடம் மாற்றம் செய்யக்கூடிய பதவிகளில், வேலைகளில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை நிச்சயம் அளித்திட வேண்டும். மாநில அரசு ஊழியருக்கு இந்த விதிவிலக்கு தேவையில்லை என்பது என் கருத்து.

இவ்வாறு இல்லாமல் இருப்பவர்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான கேள்வி! ஏனென்றால் மத்திய - மாநில அரசு ஊழியர்களும், பொதுத்துறை ஊழியர்களும் நல்ல வருமானத்தோடு பணியாற்றக்கூடியவர்கள். இந்த சமூகத்தில் அவர்கள் தனியார் பள்ளிகளிலோ அல்லது அவர்கள் விரும்பு மெட்ரிக் பள்ளிகளிலே சேர்ப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்காது.

ஆனால், என்னைப் போன்றவர்கள் தனியார் நிறுவனங்களில் (அசோக் லேலண்ட், பாரி... போன்ற நிறுவனங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை) பணிபுரிபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இந்த பள்ளியில் தன்னுடைய மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. கிடைக்காது. இதுதான் பிரச்சினையே! ஏனென்றால் அவர்கள் வரையறுத்துள்ள 7 கேட்டகிரிகளில் இவர்கள் இடம் பெறுவதில்லை.

நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் (ஐயா, ஜாதி பேசுகிறேன் என்று கூறிவிடாதீர்கள்) என்னைப் போல் பலரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்திருந்தால், குறைந்தபட்சம் விண்ணப்பித்திருப்பவர்களில் ஒரு 10 பேருக்காவது கிடைக்கும் என நம்பலாம். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு முதல் +2 வரை இந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்திட வேண்டும் என்றால் திறமையோ? சமூக நிலையோ முக்கியமல்ல; மாறாக அவர்கள் வரையறுத்துள்ள 7 கேட்டகிரியில் இருந்திட வேண்டும் என்பது என்னை கடுமையாக பாதித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ஐ.ஐ.டி. உட்பட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதுபோல், கேந்திரிய வித்யாலயா உட்பட உள்ள மத்திய பள்ளிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முன்வரவேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, மத்திய அரசு வழங்கிடும் பள்ளியில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து படிக்கும் அளவிற்கு பரவலாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவதோடு, அதில் ஏழை - எளிய வீட்டுப் பிள்ளைகள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும்.

41 comments:

Radha N said...

இடஒதுக்கீடு கட்டாயம் கொடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

குறைந்தபட்சம் 25 சதவீதம் பொதுப்பிரிவாக வைத்து, (அதாவது அவர்களது அந்த அடிப்படை ஏழுப்பிரிவினுள் அடங்காதவர்கள்) முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கவேண்டும். ஐந்தாம் வகுப்பிற்கு கீழே நுழைவுத் தேர்வு தேவையி ல்லை. அதற்கு மேற்பட்ட வகுப்பிற்கு வேண்டுமா னால் நுழைவுத்தேர்வினை நடத்திக்கொள்ளலாம். ஆனால் பொதுப்படையாகப் பார்த்தால் நுழைவுத்தேர்வு தேவையற்றது. வேண்டுமானால், இந்த 25 சதவீதத்தில் வறுமைக்கோட்டிற்கு க ଡ଼'அ3ழே வசிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம்.

வறுமைக்கோடு என்பதை கீழ்க்காணும் அளவீடுகளை கொண்டு கணக்கிடலாம்.

1. அவர்கள் வசிப்பிடம் (மண்வீடா, மாளிகை வ ଡ଼'அ3டா, வாடகை வீடா போன்றவை. அதிலும் மா தம் பத்தாயிரம் வாடகைக்கு குடியிருப்போ ரை அனுமதிக்கக்கூடாது...அவ்வளவு வசதியாய் இருப்பவர்கள் வேண்டுமானால்...பணக்காரப்பள்ளிகளுக்கு செல்லலாமே?)

2. பெற்றோரின் வேலைச்சூழல் (தனியாரா? அதிலும் கூலியா? அல்லது ஐந்து இலக்கச் சம்பளமா? சுயவேலையா? போன்றவை)

இது போன்ற மேலும் அவசியமான காரணிகளை ஆராயந்து, சரியான மாணக்கருக்கு வாய்ப்பளி க்கவேண்டும்.

ஏழைகள் படிக்கடிக்கட்டுமே...பணக்காரர்கள்... அவர்களுக்கென்றே உள்ள பள்ளிகளை நாடட்டும்.

சந்திப்பு said...

நாகு தங்களது கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமானவை. அத்துடன் உடனடியாக அமலக்கிட வேண்டியவை. நான் என்னுடைய பதிவினை கேந்திர வித்யாலயாவின் - தென்னக பிரிவுக்கும், சென்னையில் உள்ள சில பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.
மத்திய அரசு என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. அப்படி இருக்கையில், அதுவும் வசதியுள்ளவர்களுக்கும், நிரந்தர வேலையில் உள்ள மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கும்தான் இந்த பள்ளியில் இடம் என்றால் இது அநீதியாகவே படுகிறது. அந்த வகையில் உங்களது கருத்துக்கள் 100 சதவீதம் ஏற்புடையதே!
நன்றி, வாழ்த்துக்கள் நாகு.

மணியன் said...

கேந்திரிய வித்யாலயாக்கள் அடிக்கடி மாற்றப்படும் அரசு பணியாளர்களுக்காக ஏற்படுத்தப் பட்டது. அவை பெரும்பாலும் மத்திய அரசு/இராணுவ இடங்களிலேயே அமைந்திருக்கும். அதனாலேயே இந்த முன்னுரிமைகள்.
மைய அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட முடிந்தால் ஏன் மாநில அரசு பள்ளிகள் இதனை சாதிக்க முடியவில்லை என ஆராய வேண்டும்.
அல்லது பொதுமக்களுக்காக மைய அரசும் கேந்திரிய வித்யாலயாக்களை அமைக்க வேண்டும்.
இராஜீவ்காந்தி நவோதயா பள்ளிகள் என்று ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார்; ஆனால் அது தமிழ்நாட்டில் மட்டும் அமைக்கப் படவில்லை.

சந்திப்பு said...

மணியன் தங்களது கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடிக்கடி இடம் மாறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை அளித்திட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அதே சமயம், இடம் பெயராத மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கும் (இவர்கள் நல்ல வருமானம் உள்ளவர்கள்) இந்த வசதி அளிக்கப்படுவதால், சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் இப்பள்ளியில் இடம் பிடிக்க முடியவில்லை. எனவேதான் இந்த பதிவு. தாங்கள் கூறியிருப்பது போல் மாநில அரசும் இந்த அளவிற்கு பள்ளிகளின் தரத்தை உயர்த்திட வேண்டும். அதற்காக இதனை காரணம் காட்டி மத்திய பள்ளியில் சாதாரண ஏழை மக்கள் இடம் பெறுவதை தடுக்கும் சூழல் உள்ளதை சமரசம் செய்திட முடியாது. இதில் மாற்றம் வேண்டும். அதாவது 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவை! நன்றி மணியன்.

Sivabalan said...

The reservation should be given. It may be based on economic status or any other based.

I want a Poor / ill treated should have chance to study in all premier institution.

Amidst of poverty & ill treatment, if any body scores 45% mark then I personally treat it is as 90% mark (wealthy & happy minded student's 90% = 45% that of poor or ill treated student)

P.S. Today Nalini Chidamparam has supported the reservation Bill. Mr.Chidaparam has already supported it.

மணியன் said...

//மத்திய அரசு என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. அப்படி இருக்கையில், அதுவும் வசதியுள்ளவர்களுக்கும், நிரந்தர வேலையில் உள்ள மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கும்தான் இந்த பள்ளியில் இடம் என்றால் இது அநீதியாகவே படுகிறது.//

நான் இதனுடன் உடன்படவில்லை. இப்பள்ளிகள் ஏற்படுத்தப் பட்ட நோக்கம் வேறு. அரசு ஊழியரின் தொழிலாளர் நலத் திட்டம். தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களுக்காக நடத்தும் பள்ளிகள் போன்றவை. நாகு சொல்வதுபோல் இம்முன்னுரிமை தவிர்த்த பொது இடங்களை இட ஒதுக்கீடு மூலம் வழங்கலாம்.

25 வருட அரசு ஊழியன் என்ற முறையில் கூறுகிறேன்,நாங்கள் எல்லோரும் poor Govt.servants. Poor in all respects.

சந்திப்பு said...

Dear Sivabalan,

I strongly appriciated your comment.

This type of healthy discussion only would lead to pressurize the Central Govt.

Thankyou

Muthu said...

நான் மணியன் சொல்வதை ஆதரித்தால் பலர் வந்து இவன் பொதுத்துறையில் இருப்பதால் கூறுகிறான் என்று கூறலாம். ஆனாலும் நான் நினைப்பது சீட்டை அதிகரிக்கலாம்.

மற்ற பள்ளிகள் தரத்தையும் அதிகரிக்க முயற்சிக்கலாம்.

சந்திப்பு said...

முத்து மத்திய பள்ளிகளின் எண்ணிக்கையும், சீட்டுக்களையும் நிச்சயம் அதிகரித்திட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். அதே சமயம், இடஒதுக்கீடும் அவசியமானது. இப்படி ஏதாவது ஒரு வரைமுறையை வரையறுத்தால்தான் பரவலாக சமூக சமத்தன்மை நிலவிடும். இந்த விஷயத்தில் நான் மணியன் பக்கம்.

Anonymous said...

Sandippu,

I agree with Maniyan's comment. The standard of KV schools is very high, i used to read their syllabus for my state board and entrance exams when i did my +2. The competition to enter those schools is really tough. They have also successfully adopted three language sysytem, my freind studied hindi, english and sanskrit as 3rd language.

in my opinion, there should be uniform syllabus throughout India. i don't understand why there are so many systems in one state itself, take for example in TN itself, for 10th exams, we have SSLC, ASLC, OSLC, Metriculation and CBSE. I would like all the schools to be converted to CBSE syllabus with languages English, along with complusory regional language (Tamil, kannada, wahtever it is) and a third language of students choice. it would go a long way in improving teh educational system of India

Raj

சந்திப்பு said...

அனானி, நீங்கள் கூறியுள்ள கருத்தினை வரவேற்கிறேன். நம் எல்லோரது விருப்பமும் மத்திய பள்ளிகளைப் போல மாநில பள்ளிகளின் தரத்தினை மாற்றிட வேண்டும் என்பதே! இதை செய்வதற்கு ஒரு புறம் வற்புறுத்தினாலும், அதே சமயம் இன்றைய நிலையில் மத்திய பள்ளியில் சாதாரண மக்களின் பிள்ளைகளை சேர்ப்பது என்பது - இமயமலையில் உள்ள எவரெ°ட் சிகரத்திற்கு செல்வது போல், முடியாத சூழல்தான் உள்ளது. எனவேதான் மத்திய அரசு இதுபோன்ற கேந்திர வித்தியாலாயா பள்ளிகளில் 27 சதவீதம் பிள்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை கொண்டு வருவதன் மூலம் மத்திய பள்ளிகளில் ஒரு சமத்தன்மையை ஏற்படுத்திட முடியும்.

Anonymous said...

Another example of reservationmania.KVs were established to enable central govt.
employees and employees in defense sector.There is a reservation for OBCs in central govt employment.So there is an indirect reservation of seats for OBCs in KV schools.
You cant deny this fact.
Why should there be another quota for OBCs .Tomorrow you will argue I
could not get berth in train.
As a person belonging to OBC
i am affected.so allot 27% to OBCs.
Are you not ashamed to use the caste factor to your advantage
and to keep on asking for reservations and quotas.There is
50% reservation for BCs in state
govt. and govt. aided schools.
What more you want.If the quality of education is bad try to put pressure on the state govt. where
majority of the employees (about 70%) and ministers are from
OBCs.If they cant provide quality and affordable education who should be blamed.Neither Manu
Nor brahmins are responsible for this.

Why you want reservation anywhere and everywhere.If you look around
there may be poorer parents in
forward castes who also would be
interested in getting admission to
their children in KV schools.But they too would have been denied admission as they would not fulfilled the eligibility norms.
Your state govt. will treat them as second class citizens by reserving 69% on basis of caste
everywhere from school admissions
to higher education to employment.
Are they not worse off than you
in every sense.You OBCs want to
monopolise everything in name of
reservations.Even a parasite is better.

Anonymous said...

Forget about three language formula.Let them improve the quality of education in state
govt schools.What prevents the
state from doing that.You have 69% reservation in these schools in admissions and in employment.So
those who want reservation in central govt schools should instead
put pressure on the state govt.But asking for reservation elsewhere is
easier.Perhaps they have no faith
in the govt which is all for reservation.Could it be that they know that the OBC dominated state is corrupt,inefficient and indifferent but are afraid to tell that.

Anonymous said...

Sandippu,

thnaks for your reply. but, i differ with you about quota in KVs. as pointed out by Maniyan. they were started only for central govt employees who get transfered all over the country. since the standard is high, many others also wanted to join the schools. Rajiv gandhi started navodaya schools with CBSE syallabus for the benefit of mainly rural people and it has been adopted by all states and union territories except TN. they also have adopted successfully the 3 language formula. any reason only TN didnot want these schools?

as another anony above has pointed out above that central govt too has job reservations for OBCs their children will get a chance to study there. better still would be increase the number of schools and slowly converting the state boards to central board to provide uniform education, if that education is good.

Raj

Radha N said...

அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிவிட்டு, அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்காக (குறிப்பாக ஏழைமாணக்கர்கள்) கொஞ்சம் இடங்கள் தரலாம்.

சந்திப்பு said...

அனானி இந்த இடத்தில் பிராமணர்கள் குறித்து எங்கும் விவாதிக்கப்படவில்லை. மாறாக யாரும் ஜாதியைச் சொல்லி இடத்தையும் கேட்கவில்லை. கே.வி.யில் நடப்பது என்ன? மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்குத்தான் மொத்த இடத்தில் 70 சதவீதத்திற்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டேன். இராணுவ வீரர்களுக்கும், மாற்றலுக்கு உள்ளாகும் ஊழியர்களுக்கும் நிச்சயம் இப்பள்ளிகளில் இடம் கொடுத்தேயாக வேண்டும்.

நீங்களே பிராமணர்கள் குறித்த விவாதத்தை பதிந்ததால் கூறுகிறேன். இன்னும்கூட மத்திய - மாநில அரசு ஊழியர்களில் கணிசமானவர்கள் பிராமணர்கள் இதை மறுக்க முடியுமா? எனவே இங்கு பிரச்சினையே என்ன? தலித் - பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இருக்கிறது. அரசு ஊழியரால்லாத சாதாரண மக்கள் கே.வி.யில் விண்ணப்பித்தால் ஓரளவு இவர்களுக்கு இடம் கிடைப்பதற்கான உத்திரவாதம் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் விஷயம் அப்படியில்லை. கிடைக்கவே, கிடைக்காது. எனவே மத்திய பள்ளிகளில் சாதாரண மக்கள் இடம் பெற வேண்டும் என்றால், இடஒதுக்கீடு அவசியமானது. உயர் கல்வியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

மாயவரத்தான் said...

ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு பதில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஹிந்தி எதிர்ப்பு குறித்து எழுதினாலே எல்லாரும் கேட்கும் கேள்வியையே நான் இங்கே கேட்கிறேன். "தனியார் பள்ளியில் காசு கொடுத்து படிப்பதை யார் தடுத்தது? நீங்கள் ஏன் ஓசியில் படிக்க விரும்புகிறீர்கள்?". ஹிந்தி படிப்பு குறித்த விவாதம் இது அல்ல என்றாலும், அடிப்படை கேள்விக்கான பதிலை சொல்லுங்களேன்.

சந்திப்பு said...

ஸ்ரீநிதி இங்கு நாம் மாநில அரசு பள்ளிகள் குறித்து விவாதிக்கவில்லை. மாநில அரசு பள்ளிகள், கே.வி. அளவிற்கு உயரவேண்டும், உயர்த்துவதற்கு புதியதாக அமையவுள்ள அரசு கவனம் செலுத்திட வேண்டும். இங்க விவாதிப்பது மத்திய கே.பி. பள்ளிகள் குறித்துதான். நீங்கள் கூறுவதுபோல் அங்கு சூழல் இல்லை. மத்திய - மாநில அரசு ஊழியர்களே அனைத்து இடங்களையும் பெற்று விடுகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களில் மிக ஏழையாக இருந்தால்கூட, அவர்களுக்கு அங்கு இடம் கிடைக்காது. கிடைப்பதில்லை. நான் இங்கே வாதிடுவது வசதியானர்களைப் பற்றியில்லை. வசதியானவர்கள் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுவார்கள். ஏழைகள் நிலைமைதான் பரிதாபமானது.

Anonymous said...

Santhippu, in central govt there is 49.5% reservation.OBCs and SCs can get employment in open quota also.So brahmins can never be a majority in central govt. jobs.
In state govt 69% reservation (50+19) and BCs and SCs can get employment in open quota also.
So brahmins cannot be even 10% in
state govt. jobs.Since you hate brahmins you presume that they are majority.It is a myth, a white lie
perpetuated by Veeramani and other
castesists. If at all anything OBCs are majority in tn govt.
jobs.

சந்திப்பு said...

அனானி, தங்களிடம் பரந்த மனப்பான்மை இருப்பதை அறிய முடிகிறது. நீங்கள் அனானிகளாக வருவதை விட, ஏதாவது புனைப் பெயரிலாவது எழுதுங்கள். ஒரே நேரத்தில் இரண்டு - மூனறு அனானிகள் வந்து விட்டால் பதிலளிப்பதும், புரிந்து கொள்வதற்கும் சிரமம் உள்ளது. ஆம் நீங்கள் கூறியிருப்பது போல் சி.பி.எ°.சி., மெட்ரிக், மாநிலம் என வகை, வகையான கல்விகள் தேவையற்றது. இதனையும் மாற்றி நாடு முழுவதும் ஒரே வகையான கல்வி திட்டத்தை ஏற்படுத்திடலாம்.

சந்திப்பு said...

மாயவரத்தான் நல்ல கேள்வி? நான் வாதிடுவது வசதியுள்ளவர்களுக்காக அல்ல; என்னுடைய பதிவினை மீண்டும் ஒருமுறை படியுங்கள். மத்திய - மாநில அரசு ஊழியர்கள் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ளனர். இதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். அப்படியிருக்கும் போது, மிகக் குறைந்த கட்டணத்தில் உள்ள இந்த மத்திய பள்ளியில் அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி? இதில் மாற்றலுக்கு உள்ளாகும் ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இடம் கொடுத்தேயாக வேண்டும் என்பதை நான் தெளிவாக பதிந்து வருகிறேன்.
மத்திய பள்ளி என ஒன்று இருக்கும் போது, அதில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அனைவரும் விரும்புவர். அவ்வாறு விரும்பும் போது, அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது கே.வி. பள்ளிகள். இதுதான் பிரச்சினை!
இங்கு ஓ.சி. என எதை குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. மத்திய பள்ளிகள் நம் வரி வருவாயில் இயங்குகிறது. கல்வியை பல நாடுகள் குறைந்தது +2 வரை அரசே வழங்குகிறது. அப்படி வழங்கினால்தான், அனைவருக்கும் ஒரே தரமான கல்வி கிடைத்திடும் வாய்ப்பு ஏற்படும். இன்றைய நிலையில் எத்தனை பிள்ளைகள் 8ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் போக முடியாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இங்கு பிரச்சினையே வசதியில்லாதவர்களைப் பற்றிதான். தங்கள் புரிதலை மாற்றிக் கொள்ளவும். இந்தி பற்றிய விவாதத்தை வேறிடத்தில் வைத்துக் கொள்ளலாம். நன்றி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Central Schools were established primarily to serve the interests of some sections like defense personnel, central govt employees, public sector employees etc.If there are seats after catering to these categories,admitting students on the basis of income and merit will be a good
solution.In other words poor students who study well will be
given preference.Caste should not be a factor in this.To ask for 27% quota for OBCs is irrational.
The state govt is also spending
money in school education.It provides for 50% reservation
for BCs.If a state
that provides 50% reservation fails
to provide good and accessible education to all go and knock at
its doors.It is the primary
responsibility of the state govt.
to provide quality education.Let them increase the allocation, appoint teachers (50% quota is there), build new schools.
The state has dept for BC welfare.
It runs hostels, provides scholarship and other assistance
to BCs.If you want more ask the
state govt. It is your govt, i.e. a govt where OBCs are more than 50%. So you should make demands on them and on them only.If those OBCs wont help oBCs like you, who else will.

Why should the central schools change their policy for the failure of the state govt.
Why do you want to usrup
seats in central schools that too
on the basis of caste.You and meet Veeramani. He will add this to his
list of irrational,castesist demands.Who knows you may say that 27% of the railway seats should be reserved for OBCs as I could not
get seat or berth when I travelled
recently.Veeramani will agree with you.

Geetha Sambasivam said...

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில அரசு ஊழியரின் குழந்தைகள் எனக்குத் தெரிந்து சேர்ப்பது இல்லை. மேலும் கேந்திரிய வித்யாலயாவில் முதல் வகுப்பில் சேருவதற்குக் கூட நுழைவுத் தேர்வு உண்டு. குழந்தையின் தகப்பன் அல்லது தாய் மத்திய அரசின் பணியில் அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்படும் இலாகாக்களில் இருந்தாலே முன்னுரிமை வழங்கப்படும். அதுவும் குழந்தை சேரும் வருடத்திலிருந்து முன்னால் உள்ள 7 வருடத்திற்கும் குறைந்தது 3 முறையாவது மாற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள். வயதும் அந்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி என்றால் கூட இடம் கிடைக்காது. அடுத்த வருடம்தான். மத்திய அரசு ஊழியர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களும் வருடத்தின் எந்த மாதம் வேண்டுமானாலும், எந்த தேதியில் வேண்டுமானாலும் மாற்றப் படுவதால் அவர்கள் புது ஊருக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே பள்ளியில் குழந்தைகளைச்சேர்க்க வசதியாக உள்ளது.. பாடத்திட்டம் மற்றும் விடுமுறை போன்றவை இந்தியா பூராவும் ஒரே முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதே பாடத் திட்டத்தைக் கொண்ட நவோதயா பள்ளிகளும் கிராமக்குழந்தைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டும் தமிழ்நாட்டு அரசியலால் தமிழ் நாட்டில் மட்டும் செயல் படவில்லை. கர்நாடகாவில் எல்லா கிராமங்களிலும் (குறைந்த பக்ஷம் நான் பார்த்த ஊர்கள்)நவோதயா பள்ளிகள் எல்லா வசதிகளோடும் செயல் படுகின்றன.குஜராத், ராஜஸ்தான் மஹாராஷ்டிரா போன்ற நான் பார்த்த எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் திறமையாக நடக்கிறது. இதற்கு நம் அரசியல்வாதிகளைக் குறை கூறுங்கள்.

சந்திப்பு said...

கீதா சாம்பசிவன் நான் எந்த இடத்திலும் கே.வி.யை குறை கூறவில்லை. அதேபோல் நீங்கள் கூறியிருப்பது போல் மாற்றலுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. உதாரணமாக பொதுத்துறை ஊழியர்கள் துறைமுகம், வங்கி, இன்சூரன்°, இரயில்வே போன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத்தான் இங்கு முதன்மையான இடம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் எல்லாம் எங்கும் மாறிச் செல்வதில்லை.

என்னுடைய கேள்வி : மத்திய பள்ளிகள் என்றாலே அது மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மக்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையா? கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில்தானே இது இயங்குகிறது. அப்படியிருக்கையில் தனியார் நிறுவனங்களில், கூலி வேலை செய்யும் சாதாரண ஏழை, எளிய மக்கள் இப்பள்ளிகளில் விண்ணப்பித்தால் அவர்களில் ஒருவருக்கு கூட இடம் கிடைப்பது இல்லை. இதனை நான் கற்பனையில் சொல்லவில்லை. இரண்டு ஆண்டு அனுபவத்தில்தான் இந்த பதிவினை ஏற்றியுள்ளேன்.

இந்த பின்னணியில்தான் கே.வி.யில் இடஒதுக்கீடு என ஒன்று இருந்தால் குறைந்தபட்சம் பிற்படுத்தப்பட்டவர்களில் யாருக்காவது சில சீட்டுக்களாவது கிடைத்திட உறுதிப்படும் என்பதுதான் என் வாதம்.

இங்கே ஒரு விஷயம் நடைபெறுகிறது. இந்த வாதத்தின் மைய அம்சத்தை விட்டு விட்டு, ஏன் மாநில அரசு இதுபோல் நடத்தலாமா? என்பதும், நவோதயாவை நம் மாநில அரசு விட்டு விட்டது சரியா? என்பது இன்னொரு வாதம். இந்த வாதங்களில் நான் மாறுபடவில்லை. நிரந்தர தீர்வு எது என்று தேடுகிற அதே சமயம் இருக்கிற பள்ளிகளில் சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுவது சரியா?

Geetha Sambasivam said...

தகுதி இருந்தால் இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. மேலும் மாநிலப் பள்ளிகளைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நவோதயா பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தரத்திற்குச் சற்றும் குறைந்ததும் இல்லை என்பதும் தான் நான் சொல்ல வந்தது. அந்தப்பள்ளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தால் எத்த்னையோ ஏழைக்குழந்தைகள் நல்ல தரமான கல்வி செலவில்லாமல் பெற்றிருக்க முடியும்.

Anonymous said...

தகுதி இருந்தால் இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. மேலும் மாநிலப் பள்ளிகளைப் பற்றி நான் எதுவும் சொல்�

சந்திப்பு said...


தகுதி இருந்தால் இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது.


பொதுவாக குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது. இருப்பினும் அப்படி ஏதாவது ஒன்று நடத்தியிருந்து என்னுடைய குழந்தைகள் அதில் தவறியிருந்தால், அந்த சீட்டு கிடைக்காததற்கு நான் வருந்திப்போவதில்லை.

என்னுடைய பதிவில் நான் இது குறித்து மேற்கண்டவாறு தெளிவாகவே பதிந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு (தகுதி தேர்வு) வைக்கக்கூடாது. இருப்பினும் அனைவருக்கும் பொதுவாக தகுதி தேர்வு வைத்து அதன் மூலம் தேர்வு நடைபெற்றால், நான் எழுப்பிய பிரச்சினைக்கு இடமேயில்லை. இவ்வாறு தேர்வு வைப்பதாக இருந்தால்கூட தலித் - பழங்குடியினர் குழந்தைகளுக்கு நிச்சயம் அந்த தேர்வுகளை நடத்தக்கூடாது. போட்டி என்பது எப்போதும் சம நிலையில் இருந்திட வேண்டும். சமூக அமைப்பு சம நிலையில் இல்லாத போது போட்டியும் சமநிலையில் அமையாது.
நன்றி கீதா...

Geetha Sambasivam said...

முக்கியமாக கேந்திரிய வித்யாலயாவில் முதல் வகுப்பில் படிக்க வேண்டுமென்றாலும் குறைந்த பக்ஷ ஹிந்தி அறிவு வேண்டும். அங்கு 8-ம் வகுப்பு வரை social science பாடம் தென் மாநிலங்களில் ஹிந்தியில் தான் படிக்க வேண்டும். 8-ம் வகுப்பிற்குப்பின் எந்த மொழி என்பது மாணவன் அல்லது மாணவியின் தேர்வு. மாநில மொழி என்று ஒரு வகுப்பு இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கிடையாது. ஏதாவது ஒரு மாநில மொழிதான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுவும் 8-ம் வகுப்பு வரை. அந்த வகுப்பும் கட்டாயம் கிடையாது. அதில் தேர்வோ அல்லது கிரேடோ கொடுப்பது இல்லை. நம் செந்தமிழ் நாட்டில் கூலி வேலை செய்யும் சதாரண ஏழை, எளிய மக்கள் எங்கிருந்து ஹிந்தி கற்றுக் கொடுப்பார்கள். அதற்குத் தான் நவோதயாவே வந்தது. அதில் அந்த அந்த மாநில மொழி கட்டாயம் கற்றுக் கொடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது என்ன? நாம் எப்போதுமே தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் வல்லவர்கள்.

Geetha Sambasivam said...

தற்சமயம் எப்படியோ தெரியாது. ஆனால் என் பெண்ணும் பையனும் படிக்கச்சேரும்போது நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுத் தான் சேர்ந்தார்கள். இத்தனைக்கும் நாங்கள் பல முறை மாற்றல் பெற்று வேறு பள்ளிகளே இல்லாத ஊரில் எல்லாம் இருந்திருக்கிறோம்.இதில் இட ஒதுக்கீடு என்பது ராணுவத்திற்கு மட்டும் முன்னுரிமை என்பது ஒன்றுதான். எனக்குத் தெரிந்து எத்தனையோ மத்திய அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைத்தது இல்லை. தமிழ் நாட்டில் கூட அப்படித் தான் என்று நினைக்கிறேன்.

சந்திப்பு said...


நம் செந்தமிழ் நாட்டில் கூலி வேலை செய்யும் சதாரண ஏழை, எளிய மக்கள் எங்கிருந்து ஹிந்தி கற்றுக் கொடுப்பார்கள்

கீதா, என்னுடைய நன்பர், அவர் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர். அவரது இரண்டு குழந்தைகள் கே.வி.யில் ஒருவர் முதல் வகுப்பும், மற்றொரு குழந்தை 3ஆம் வகுப்பும் படிக்கின்றனர். அவர்களது பொற்றோர்களுக்கு இந்தி தெரியாது. தற்போது அந்த இரண்டு குழந்தைகளும் மிக அற்புதமாக இந்தி பேசுகிறது. எனவே பள்ளியில் ஒரு மொழி கற்றுக் கொடுக்கும் போது, அந்த குழந்தை அதில் நிச்சயம் தேர்ச்சி பெறும். எனவே இந்தி பற்றிய கவலையை ஓரம் கட்டலாம்.

எனவே யாருக்கு சீட்டுக் கிடைத்தாலும், அந்த குழந்தைகளின் மொழி பற்றிய கவலை வேண்டாம் என நினைக்கிறேன். இங்கே அடிப்படை பிரச்சனையே சாதாரணமானவர்களுக்கு சீட்டே கிடைப்பதில்லையே? அதுதானே மையம்.

Geetha Sambasivam said...

உங்கள் நண்பர் பொருளாதார முன்னேற்றம் கண்டவராக இருப்பார். நான் சொல்வது உண்மையில் சேரிகளில் வாழும் குழந்தைகள். மேலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரின் குழந்தைகளைச் சேர்க்க முடிந்தது என்றால் கட்டாயம் அந்தக் குழந்தைகள் அதற்குத் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அடிப்படை ஹிந்தி அறிவு இல்லாமல் கேந்திரிய வித்யாலயாவின் முதல் வகுப்புப் பாடம் படிப்பது கஷ்டம் என்பது எனக்கு அனுபவபூர்வமாகத் தெரியும் என்பதால் சொன்னேன்.பழங்குடி சமூகக் குழந்தைகளுக்கு இடம் கிடைத்திருப்பது ஒன்றே போதுமே அங்கே பாரபக்ஷம் இல்லை என்பதை நிரூபிக்க.

சந்திப்பு said...


பழங்குடி சமூகக் குழந்தைகளுக்கு இடம் கிடைத்திருப்பது ஒன்றே போதுமே அங்கே பாரபக்ஷம் இல்லை என்பதை நிரூபிக்க.

ஆம் அவரும் மத்திய அரசு ஊழியர் அதனால்தான் கிடைத்தது. அடுத்து கே.வி.யில் தலித் - பழங்குடிகளுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு உள்ளது. இது நிச்சயம் நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு இருந்தால் சாதாரண வீட்டுப் பிள்ளைகளும் இதுபோன்ற பள்ளியில் இடம் பிடிப்பர். இதுதான் என்னுடைய அடிப்படை.

Anonymous said...

இதுபோல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு இருந்தால் சாதாரண வீட்டுப் பிள்ளைகளும் இதுபோன்ற பள்ளியில் இடம் பிடிப்பர்.

Are there no poor in other castes or among christians not covered by reservation.Why reservation for OBC.Why not for all poor irrespective of caste or religion.
You want only OBCs to benefit in every scheme.

Geetha Sambasivam said...

நான் விசாரித்து அறிந்த வரை சென்னை மற்றும் ஆவடியில் உள்ள சில கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களின் குழந்தைகளுக்கும் சிறிய அளவில் இட ஒதுக்கீடு இருப்பதாகவும் (அதற்கும் மாற்றல் பெற்ற மத்திய அரசு ஊழியரோ அல்லது ராணுவத்தினரோ இல்லாவிட்டால்) ஆனால் தனியாரின் குழந்தைகள் பள்ளிச் சம்பளம் மற்றக் குழந்தைகளை விடக்கூடக்கட்ட வேண்டும் எனவும் தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை என் கணவரின் பணி மாற்றங்கள் இல்லாவிட்டால் நான் மாநில அரசுப் பள்ளியில் தான் என் குழந்தைகளைப் படிக்க வைதிருப்பேன். ஏன் என்றால் மாநில அரசுப் பள்ளி மதிப்பெண்கள் தான் உயர்கல்விக்குக் கணக்கிடப்படுகிறது. இதனால் என் பெண் தான் விரும்பிய பாடத்திட்டம் கிடைக்காமலும் என் பையன் REC யில் இடம் கிடைத்தும் அவன் விரும்பிய கோர்ஸ் கிடக்காமலும் கிடைத்த கல்லூரியில் படிக்க நேர்ந்தது.

Sivabalan said...

//இங்கே அடிப்படை பிரச்சனையே சாதாரணமானவர்களுக்கு சீட்டே கிடைப்பதில்லையே? அதுதானே மையம்//



இதுதான் என் சிந்தனையும்....

சந்திப்பு said...

அப்பாடா இதை ஒத்துக்கிறது நீங்க ஒரு ஆளாவது இருக்கீங்களே... இடஒதுக்கீடு என்று ஆரம்பித்தாலே கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் அதிகமாக உலாவுகிறார்கள் இங்கே. அதற்குள் இருக்கும் நியாயம் என்ன என்று பார்க்க மறுப்பது வருத்தமான விஷயம். உயர் கல்வியில் இடஒதுக்கீடு விஷயத்தில் அர்ஜூன்சிங்கின் முடிவு வரவேற்கத்தக்கது. நன்றி சிவபாலன்.

Anonymous said...

You blindly support reservation for OBCS and want it everywhere.In which way that is justified.
Are there no limits to the reservation for OBCs.You enjoy 50% in state and 27% in central govt
jobs.Why are you so greedy and selfish.

சந்திப்பு said...

Are there no limits to the reservation for OBCs.

அனானனி... மத்திய அரசில் பிற்பட்டோர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடே அமலாக்க ஆரம்பிக்கவில்லை. இதில் எங்கே வந்தது லிமிட்... அதற்குள் நீங்கள் அலறுவது ஏன்? இவ்வளவு நாள் 75 சதவீத இடத்தை நீங்கள் அனுபவித்தது தொடர முடியாமல் போய்விடுமே என்ற ஏக்கமா? சமூக சமத்தன்மை அடிப்படையில் இதனை ஆராய்ந்து நோக்கவும்.

Sivabalan said...

Mr. Santhippu,

Please piblish this comment. Thanks.

" From rags to riches, thanks to quota "

Chennai: From roaming the lanes of a slum in Chennai as a boy to studying in the classrooms of prestigious business school Indian Institute of Management, Ahmedabad, life has changed drastically for Sarath Babu, who has just started his catering business in Ahmedabad.


And yes, he does credit the reservation policy to have played a role in this journey.


Helped by his friends, Sarath Babu is all set to launch his own food chain, Food King.


http://www.ibnlive.com/videos/fullbvideo.php?id=10757

Anonymous said...

அனானனி... மத்திய அரசில் பிற்பட்டோர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடே அமலாக்க ஆரம்பிக்கவில்லை. இதில் எங்கே வந்தது லிமிட்... அதற்குள் நீங்கள் அலறுவது ஏன்?

What a big lie. OBCs get 27% reservation in central govt.
jobs.It has been pointed out in
one of the responses to the
blog.

Anonymous said...

Sarath Babu is a Dalit, not OBC.This blog post is about reservations for OBC in KVs.