May 28, 2007

குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?

இந்து தெய்வங்கள் மட்டும் ஆபாச கலைக்கு இலக்காவது ஏன்? - என்ற தலைப்பில் சங்பரிவார் குருமூர்த்தி இன்றைய தினமணியில் நடுப்பக்க கட்டுரையொன்று எழுதியுள்ளார்.

முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கலையை பழுதறக் கற்றவர்கள் பாசிசவாதிகள் என்பதற்கு இந்த கட்டுரையொன்றே முழு சாட்சி. இதனை இப்படியும் கூறலாம். இட்லரின் மந்திரி சபையில் இருந்த கோயபல்சு - ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது மெய்யாகும் என்பான். இது பாசிசத்தின் அடிப்படைகளில் ஒன்று. இதனை தற்போது மீண்டும் நிரூபித்துள்ளார் குருமூர்த்தி.


எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாககமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள்



கட்டுரையின் துவக்கத்திலேயே இப்படி ஆரம்பிக்கிறார். அதாவது முழுநிறை கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் கருகை கிழித்து எடுத்து தாயையும். குழந்தையையும் கொல்லும் காட்டுமிராண்டிகள் தற்போது நாகரீக வேடம் போட துணிந்து விட்டனர். சங்பரிவாரம் தன்னைத்தானே நாகரீகவாதிகளாக முத்திரைக் குத்திக் கொள்வதன் மூலம் - மதச்சார்பற்ற சனநாயக விரும்பிகளை காட்டுமிராண்டிகளாக சித்தரிக்க முயல்கின்றார் குருமூர்த்தி.

இவர்களைப் பொறுத்தவரை கருநாடக பா.ச.க. எம்.எல்.ஏ. நர்சுடன் சல்லாபம் புரிவதும். குஜராத் பா.ச.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோசியின் சல்லாபமெல்லாம் பெரும் நல்லொழுக்க சிந்தனையாகத்தான் சங்பரிவாரம் தங்களது தொண்டர்களுக்கு போதிக்கிறது. இத்தகைய தொண்டர்களின் நல்லொழுக்கத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. நல்லகாலம் தப்பாத்தார்கள் நம் இந்திய பெண்மணிகள். பெண்களை இவர்கள் ஒருபோதும் மதித்ததேயில்லையே ஏன் தாய்நாட்டைக்கூட 'பித்ரு பூமி' தந்தை பூமி என்றுத்தானே அழைக்கின்றனர். சாத்தான் வேதம் ஓதுகிறது. ஹி... ஹி... ஹி...


இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாககமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தன.


குருமூர்த்தியின் அடுத்த பொய் இங்கேதான் ஆரம்பமாகிறது. மிகவும் புத்திசாரித்தனமாக அவர் குறிப்பிட்டுள்ளபடி படம் வரைந்த ஓவியரின் பெயரைக்கூட விட்டார். அவரது பெயரை கூறினால் அது அவர்களது இந்துத்துவ அரசியலுக்கு எதிரானதாக அமைந்துவிடுமே என்பதற்காகத்தான்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஓவியம் மற்றும் நுண்கலையில் பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களின் இறுதி தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வின் ஒரு பகுதியாக அவர்கள் வரைந்த ஓவியம் அல்லது கலைப் படைப்புகள் தேர்வுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டு பின்னர் தேர்வுக்குழுவின் மதிப்பீடுக்கு செல்லும். இது காலாகாலமாக இருந்துவரும் நடைமுறை. இந்தத் தேர்வில்தான் சந்திரமோகன் (இவரும் இந்துதான்) என்ற மாணவன் தன்னுடைய படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார். குறிப்பாக சந்திரமோகன் கடந்த ஆண்டு சிறந்த ஓவியருக்கான லலித்கலா அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி என்பது பொதுமக்களுக்கானது அல்ல. அது ஒரு இன்டர்னல் தேர்வு. அப்படியிருக்கும் போது அங்கே எப்படி பொதுமக்கள் வந்தார்கள். எப்படி அதனை ஆட்சேபித்தார்கள்.

உண்மையில் நடந்தது என்ன? கல்லூரிக்கு உள்ளேயே இருக்கும் சங்பரிவார கலாச்சார காவலர்கள் தங்களது குருபீடத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர். அதன் பின் விசுவ இந்து பரிசத்தின் லோக்கல் தலைவரும் - பா.ஜ.க.வின் செயலாளருமான நிராஜ் செயின் தலைமயில் கல்லூரிக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஓவியக் கல்லூரிக்குள் புகுந்த காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்களை சூறையாடியதோடு கல்லூரியில் இருந்த அரிய கலைப் நுட்பமான படைப்புகளையெல்லாம் வன்முறைக்கு இறையாக்கியது. அத்துடன் சந்திரமோகன் என்ற மாணவனையும் தாக்கிய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் அடைத்தது. இந்த சம்பவத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் பனிக்கர் வன்மையாக கண்டித்ததோடு மாணவருக்கு ஆதரவாக குரலெழுப்பினார் என்ற காணரத்திற்காக அவரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து விட்டது கல்லூரி நிர்வாகம். கல்லூரிக்குள் புகுந்து அராஜக வெறியாட்டம் போட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த மாணவன் வரைந்த ஓவியம் உங்கள் பார்வையில் தவறானதாகவே இருந்தாலும் கூட அதற்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? சங்பரிவார சீரழிந்த சிந்தனைதான் இதற்கு அடிப்படை. இந்த விசயங்களையெல்லாம் அடியோடு மறைத்து விட்ட குருமூர்த்தி பசுத்தோல் போர்த்திய புலியாக வேடம் போடுகிறார். இவர்களது தோலை உரிக்க வேண்டிய கடமை மதச்சார்பற்ற சக்திகளின் தலையாய பணி.

அது சரி இரண்டு நாளைக்கு முன்னாள் பா.ஓ.க. எம்.எல்.ஏ. ராஜஸ்தானில் அத்வானி. வாஜ்பாய். ராஜ்நாத் சிங் ஆகியோரை கடவுளாக சித்தரித்தார்களே அப்போது இந்துத்துவ காவலர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை. அல்லது இந்துத்துவத்தை காக்கும் கடவுள்கேள இவர்கள்தான் என்பதாலா? அஜால் குஜால் பேர்வழிகள் புனிதத்தைப் பற்றியெல்லாம் இனியும் எழுவது நகைப்பாக இல்லையா?


இந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.


இந்து தெய்வங்களை ஆபாசமாக சித்தரிப்பதையே தங்கள் கொள்கையாக கொண்ட ஓவியர்கள் என்று இவர் யாரைக் கூறுகிறார்? சந்திரமோகன் உங்கள் பார்வையில் பார்த்தால்கூட ஏசுநாதனையும் சேர்த்துத்தானே வரைந்துள்ளார். எனவே சந்திரமோகனின் நோக்கம் இந்து தெய்வத்தை ஆபாசமாக வரைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட உள்நோக்கம் கொண்டதாக இருந்திருந்தால் அவர் ஏன் இயேசுநாதனை அவ்வாறு வரைந்திருக்க வேண்டும்? எனவே. உங்களைப் பொறுத்தவரை குட்டு வெளிப்பட்டவுடன் அதனை பூசி மெழுகி - ஓவியர் உசோனோ சேர்த்து ஒரு இசுலாமிய எதிர்ரப்பு உணர்வை தூண்டுவதுதானே குருமூர்த்தியின் நோக்கம்.

ஒரு கலைப் படைப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். அது விமர்சன உரிமை. அதற்காக கலையென்றால் நான் விரும்புகிற மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது பாசிச சிந்தனையின் வெளிப்பாடு. எந்த இந்துக் கோவிலில் ஆபாசம் இல்லாத சித்தரங்கள் வரையப்பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து கோவிலின் தேர்க்காலில் இருந்து கோபுரம் வரை ஆபாச கலையின் லீலைகள்தானே சித்தரமாக்கப்பட்டுள்ளது இந்துத்துவ சக்திகள் இதனையெல்லாம் அழித்துவிடப் போகிறதா என்று கலைஞர்கள் எழுப்பும் கேள்விக்கு கோயாபல்சுகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.


இந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்தித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா?


நீதிபதி கபூர் இப்படி கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. குருமூர்த்தி இவ்வாறு சுட்டுவதன் மூலம் இத்தகைய வன்முறை நடைபெற வேண்டும் என்ற தன்விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறார். சங்பரிவார கூட்டத்திற்கு வன்முறையைப் பற்றி சொல்லியா தரவேண்டும். குஜராத்தில் இப்படி நடந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று வாஜ்பாயின் முகமூடி கூறுமளவுக்குதானே குஜராத் வன்முறைகள் நடந்தேறியது. சொந்த நாட்டிலேயே இசுலாமியர்கள் 3000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட மனிதர்களை கொள்ளும் வன்முறை ஆபாசத்தைவிட சந்திரமோகனின் படைப்பு ஒன்றும் ஆபாசமானதில்லையே.

குருமூர்த்தி அவர்களே ஐயப்பன் எப்படி பிறந்தான் என்று உங்கள் வீட்டுக் குழந்தைக்கு பாடம் நடத்த உங்களால் முடியுமா? அல்லது அதனை நவீன விஞ்ஞானத்தை பயிலும் உங்கள் வீட்டுக் குழந்தைதான் ஏற்குமா? இதிலெல்லாம் ஆபாயம் இல்லையா?

இந்துக் கடவுள்களின் படைப்புகளை விட ஆபாசம் நிறைந்த காவியங்கள் உலகில் வேறு எந்த மூலையிலாவது உண்டா? ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன்தானே ஐயப்பன்....

அழுக்கில் பிறந்து பிள்ளைதானே பிள்ளையார்.... இன்னும் எத்தனை... எத்தனை... ஆபாசங்கள்...


இந்துத்துவ சித்தாந்தம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல அது இந்துக்களுக்கே எதிரானது. மனுதர்மத்தின் பெயரால் இந்தியாவின் கோடிக்கணக்கான இந்துக்கள் சொந்த மண்ணிலேயே தீண்டாதவர்களாக போயுள்ளதற்கு காரணம் இந்து சனாதனமே. அத்தகைய இந்து மதத்தின் காப்பாளர்களாக கூறிக்கொள்ளும் இந்துத்துவ - சங்பரிவார கூட்டம் இட்லரின் இந்திய வாரிசுகள் என்பதை நாம் இன்னும் வலுவாக கொண்டுச் செல்ல வேண்டியுள்ளது. இது மதச்சார்பற்ற உள்ளங்களின் மகத்தான கடமை. சமீப காலமாக தினமணியும் குருமூர்த்தி போன்றவர்களின் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் இந்துத்துவ கருத்தாக்கத்திற்கு இரையாகி வருகிறதோ என்ற சந்தேகம் ஜனநாயக உள்ளங்களுக்கு ஏற்படுகிறது.

இன்றைக்கும் கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் கவலையெல்லாம் விலைவாசி உயர்வு. வேலையின்மை. கல்வி கட்டண உயர்வு. வாழ்க்கை பிரச்சினைகள்தான். இதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாத குருமூர்த்திகள் தங்களின் பாசிச இந்துத்துவ சிந்தனையை இந்துக்களின் கவலையாக்க முயல்வது வேடிக்கையானது.

May 24, 2007

பாமரனும் பல்லக்கு தூக்கிகளும்!


கோவை வலைப்பதிவர் கூட்டத்தை கலக்கியவர் - கலகலப்பாக்கியவர் பாமரன் என்று நமது பதிவர்கள் குறிப்பிடும்போது, அவரது சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது!
அதே சமயம், விழிப்புணர்வு பத்திரிகையில் வெளி வந்திருக்கும் பாமரனின் கட்டுரை ‘சி.பி.எம்.-எப்.எம், பேசுங்க... பேசுங்க... பேசிக்கிட்டே இருங்க...’ படிக்க நேர்ந்தபோது, பதவி சுகம் காணும் பல்லக்கு தூக்கிகள் மீது வீச வேண்டிய சாட்டைகளை சி.பி.எம். மீது வீசியிருப்பதன் மூலம் பாமரத் தத்துவத்தின் முகமூடி கழன்று விடுவதை பார்க்க முடிகிறது.
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க.... என எங்களாலும் ஊதவும் முடியும், ஓதவும் முடியும்!
முல்லைப்பெரியாறு பிரச்சினை
காவிரி நீர் பிரச்சினை
கடல் சார் பல்கலைக்கழக பிரச்சினை
சி.பி.எம்-இன் மறைந்த தலைவர் பி. ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’ புத்தகம் குறித்த விமர்சனம், துவங்கி நந்திகிராமம் வரையில்... போகிற போக்கில் சி.பி.எம். மீது கொட்டித் தீர்த்துள்ளார் பாமரன்.
பாமரனுக்கென்று இருக்கும் மூடர் கூட்டம் மட்டுமே இதை கை கொட்டி ரசிக்கும்.... இ... ஹி... என்று இளிக்கும்.
சரி, விஷயத்துக்கு வருவோம்!
சி.பி.எம். தலைவர் பி. ராமமூர்த்தியின் புத்தகத்தில் ஏகப்பட்ட தவறுகள் இருப்பதாகவும், இதையெல்லாம் கண்டு பிடித்தற்காக இவருக்கு குரோர்பதி அவார்டு கிடைக்கப்போவதாகவும் குதுகலித்துள்ளார். 1990களில் தி.க. வீரமணி உட்பட பலபேர் எடுத்த வாந்தியைத்தான் இவரும் எடுத்துள்ளார் புதிதாக எதையாவது எடுத்திருந்தால் பாமரனுக்கு ஆ°கர் அவார்டு கொடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.
பி. ராமமூர்த்தி திராவிட இயக்கத்தின் தவறான அரசியல் நிலைபாடு குறித்து எழுப்பிய பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு தப்பிக்க பார்க்கிறார்!
திராவிட மாயை! ஆம், இன்றைக்கும் திராவிட மாயையில்தான் பலரும் பதவி என்ற பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்ற திராவிட இயக்கத்தின் அரசியல் கோஷத்தை குப்பைத் தொட்டியில் வீசியது யார்? ஏன் இந்த கோஷம் எடுபடவில்லை! உண்மையில் திராவிட மாயை கலைந்து விட்டதுதானே!
முல்லை பெரியாறு விஷயத்தில் மலையாளிகளுக்கு ஆதரவாக சி.பி.எம். செயல்படுகிறதாம்! ஏன், மலையாளிகள் இப்போது திராவிடர்கள் இல்லையா? கன்னடர்கள் என்ன ஆரியத்துக்காக மாறி விட்டார்கள்!
கடவுள் மறுப்பு இயக்கமாக தோன்றி தி.க.வின் கடவுள் மறுப்பு கொள்கை கிண்டல் செய்தது சி.பி.எம். ராமமூர்த்தியா? இல்லையே! உங்களது திராவிட கொழுந்து - அறிவு ஜீவி அண்ணாதுரைதானே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறி பெரியாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
திராவிட இயக்கத்தின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை!, கடவுள் மறுப்பு கொள்கையெல்லாம் இப்போது என்னவாயிற்று! அம்மாவின் காலடியிலும், ஐயாவின் காலடியிலும் சரணாகதி அடைந்து விட்டது பாமரனின் கண்ணுக்கும், புத்திக்கும் எப்படி தெரியாமல் போய் விட்டதோ! கடவுள் மறுப்பாளர்கள் இன்றைக்கு காவடியல்லவா தூக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கூட்டத்தோடு பாமரனும் சேர்ந்து விட்டாரா?
பிராமணர் எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு! திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் பிராமணாளைப் பார்த்து கல்லாணம் கட்டிக் கொண்டதெல்லாம் பாமரர்களுக்கு புரியாத விஷயம்தான்!வைக்கம் போராட்டத்தை யாராவது கொச்சைப் படுத்தினார்களா? ராஜ மரியாதையோடு உள்ளவர் நடத்திய எதிர்ப்பு போராட்டம் என்றாலும் அதனை வரவேற்கிறோம்! அதே சமயம் பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று ‘தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட! என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனி°ட்டுகள் பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் - இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை!ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?
அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன்? சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?
இடஒதுக்கீடு அரசியலை செய்யும் திராவிட அரசியல்வாதிகள், மண்டல் கமிஷன் முழங்கிய நில ஒதுக்கீடு குறித்து வாயே திறப்பதில்லையே ஏன் பாமரா எந்த மூடனுமா உனக்குத் இதைச் சொல்லவில்லை! சி.பி.எம். ஆட்சியில் உள்ள மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் நிலச்சீர்திருத்ததை வெற்றிகரமாக முடித்து ஏழை விவசாயிகளை பாதுகாத்த வரலாறெல்லாம் மறக்கடிக்கப்பட்டதா?
1857 முதல் சுதந்திரப்போhர் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ளும் பாரம்பரியம் திராவிட இயக்கத்திற்கு உண்டா? இந்தியாவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது, திராவிட இயக்கம் பிரிட்டிஷாரின் வாலாக பிராமணீம் பேசிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி, வசதி படைத்த உயர்ஜாதி வணிக வர்க்கத்திற்கு பல்லக்கு தூக்கியதெல்லாம் வரலாறக உள்ளது பாமரனுக்கு தெரியாதோ!
ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்காரவேலர் - ஜீவானந்தம் போன்றோடு இணைந்து சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை ஆரம்பித்த பெரியார், சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு செய்த கம்யூனிச பிரச்சாரம் இதையெல்லாம் பாதியிலேயே விட்டு, விட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியது ஏன்? இது எந்த வர்க்கத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு?பேரனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே அரசை மிரட்டிய திமுக காவிரி பிரச்சினைக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும் அரசை மிரட்டலாமா? கடந்த 40 ஆண்டுகளாக திராவிட இயக்கம்தானே தமிழகத்தில் இருக்கிறது? மத்தியிலும் அவர்கள்தானே ஆட்சி புரிந்தார்கள்! கொஞ்சினார்கள், குலவினார்கள்! ஏன் காவிரியையும், முல்லை பெரியாரையும் தீர்க்க முடியவில்லை. வாழப்பாடி ராமமூர்த்தி பதவி விலகினாரே! அதுபோல ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யலாமே! இது பாமரத்தனமாக கேள்வியாக இருக்கலாம்! ஆனால் உண்மை இல்லாமல் இல்லை!
கோம்புத்தூரில் சிறுவாணித் தண்ணீரை குடிக்கும் பாமரா, மலையாளிகளின் அந்த தண்ணியை குடித்து விட்டு பாமரத்தனமாக கேள்வி எழுப்புவது என்ன கலாச்சாரம்!...
இப்போதும், கேரள அரசு ஒன்றும் தமிழகத்துக்கு தண்ணிர் தரமாட்டேன் என்று எங்குமே கூறவில்லையே! தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்கு பாதுகாப்பு என்றுதானே அவர்கள் முழக்கம் வைக்கின்றனர். தமிழகத்துக்கு இது பிரச்சினை என்றால், அவர்களுக்கு அணை பாதுகாப்பு பிரச்சினை!
எந்த மாநிலமாக இருந்தாலும் இருதரப்பு மக்களின் உணர்வுக்கு மாறாக எந்த நிலையெடுத்தாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அரசியல் அரிச்சுவடி கூடவா பாரனுக்கு தெரியாது!மதவெறிக்கு எதிராக திராவிட இயக்கம் போராடுகிறதா? பார்த்து பாமர, பாமரர்கள் நகைக்கப்போகிறார்கள் பதவி எனும் சுகத்திற்காக ராமருக்கு காவடி தூக்கியதை - சங்பரிவாரத்துக்கு ஒத்து ஊதியதை, மோடிக்கு மாலையிடுவதை தமிழகம் கண்டு விட்டது! இனியும் பலிக்காது உங்கள் பசப்பு பாட்சா....
குஷ்புவுக்கு கூட்டம், ஈழத் தமிழனுக்கு கூட்டம் இல்லையா? நல்ல கவலைப்பா! தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூட்டயது நினைவுக்கு வரவில்லையா பாமரா?இறுதியாக உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் திராவிட இயக்கத்தின் பொன்விழா கண்ட கஞைர் எழுதிய தொல்காப்பியத்தில் உள்ள பிழைகள் (மூலத்தை கையாண்ட பிழை, பொருள் பிழை, எழுத்துப் பிழை, பொருத்தமான படம் பிழை, இலக்கணப் பிழை....) குறித்து நக்கீரனார் எழுதியுள்ள களைகளை முதலில் எடுக்க பாமரர்கள் முயற்சித்தால் அது அவர் சாந்திருக்கும் வர்க்கத்திற்கு செய்யும் புன்னியமாகும்!....
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கொண்டே இருங்க...

May 22, 2007

கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!

இந்துத்துவ சோதனைக் கூடத்தில் சமீபத்தில் நிகழ்த்தியுள்ள புதிய சோதனை நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை, கலை - இலக்கியவாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்துத்துவ மோடியிசத்தின் போலி என்கவுண்டர் குறித்த அச்சு ஊடகத்தின் மை உலர்வதற்குள், படைப்புச் சுதந்திரத்தின் மீது மற்றுமொரு தாக்குதலை தொடுத்துள்ளது.


குஜராத்தில், பரோடாவில் உள்ள சர்வதேச அளவில் புகழ் பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஓவியக் கல்லூரி மாணவர் சந்திரமோகனும், அவரது படைப்பும் இந்துத்துவ கலாச்சார காவலர்களின் கொடுங்கரங்களுக்கு பலியாகியுள்ளது.


ஓவியம் மற்றும் நுண்கலையில் முதுநிலை பட்டப் படிப்பு (Post Graduate)பயிலும் மாணவர்களின் இறுதியாண்டுத் தேர்வின் ஒரு பகுதியாக அவர்களால் படைக்கப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, மதிப்பீட்டுக்குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களின் தேர்ச்சி உறுதி செய்யப்படும். இத்தகைய நிகழ்வு அனைத்து கல்லூரிகளிலும் இருக்கும் ஒரு தேர்வு முறை.


இதுபோன்ற ஒரு தேர்வை புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் கல்லூரியில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் சந்திரமோகன் என்ற மாணவர் தன்னுடைய அரிய படைப்பான மூன்று ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தார். சந்திரமோகனின் தூரிகைக் காட்சிகள் இந்து கடவுளர்களை அவமதிப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறிக் கொண்டு, பா.ஜ.க. - வி.எச்.பி. அமைப்பின் உள்ளூர் தலைவரான நிராஜ் ஜெயின் தலைமையில் வன்முறை கும்பல் எந்தவிதமான முன்அனுமதியும் இன்றி கல்லூரிக்குள் புகுந்து தேர்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை சிதைத்ததோடு, கல்லூரிக்குள் இருந்த பழம் பெருமை வாய்ந்த ஓவியங்கள், சிற்பங்களையெல்லாம் அடித்து நொறுக்கி அராஜகம் புரிந்ததோடு, போலி என்கவுண்டர் புகழ் குஜராத் காவல்துறையை வைத்து மாணவன் சந்திரமோகனை கைது செய்து, அவர் மீது ஐ.பி.சி. 153, 114, 295ஏ மற்றும் 295 பி. பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து நான்கு நாட்கள் - ஐந்து இரவுகள் சிறையிலடைத்துள்ளது. மாணவர் சந்திரமோகன் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓவியருக்கான லலித்கலா அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமோகனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் - கலைஞர்கள் - அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடத்திய பின்னணியில், தற்போது ரூ. 5000 பிணைத் தொகை ஜாமினில் வெளிவந்துள்ளார்.


இந்த சம்பவத்தை ஓவியக்கல்லூரி ஆசிரியரும், கல்லூரி முதல்வருமான டாக்டர் சிவாஜி பணிக்கர் கடுமையாக கண்டித்ததோடு, சந்திரமோகனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் பல்கலைக் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். தற்போது அவர் இந்துத்துவ நச்சுக்கரங்களால் கொலை செய்யப்படுவரோ என்ற அச்சத்தோடு, தலைமறைவாக இருக்கிறார்.


கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவ பாசிஸ்ட் நிராஜ் ஜெயினுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் சாயாஜிகஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகமும் இத்தகைய வன்முறைகும்பலுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முன்முயற்சியும் எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


சந்திரமோகன் செய்த தவறுதான் என்ன? அவர் என்ன நரேந்திர மோடியின் பாசிச படை கர்ப்பினி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவையும், தாயையும் கொன்ற கொடூரத்தையா காட்சியாக்கினார்? அல்லது 3000 இசுலாமியர்களை சொந்த மாநிலத்திலேயே அகதியாக்கப்பட்ட கொடூரத்தையா சித்திரம் தீட்டினார்? அல்லது இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் நிகழ்த்திய கற்பழிப்பு வன்மத்தை வண்ணமாக்கினாரா? இல்லையே!

கடந்த ஐந்தாண்டுகளாக அவர் கற்ற ஓவியக் கலையில், தன்னுடைய கற்பனைத் திறனோடுகூடிய படைப்பை உருவாக்கினார். இத்தகைய படைப்பை படைக்கும் போது இது இந்து மதத்திற்கு எதிரானது என்றோ அல்லது இவ்வாறு செய்தால் அது சமூக குற்றம் என்றோ உணர்ந்து செய்யவில்லையே! ஏற்கனவே ஒரிசாவில் உள்ள சூரியக்கோவிலில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் போல் குஷன் முக லிங்கம் - முகமூடி அணிந்த லிங்கத்தையும், துர்கா-விஷ்ணுவை அரை நிர்வாண கோலத்திலும், இயேசுவின் சிலுவையை - அன்டைட்டில் என்ற தலைப்பலும் தனது படைப்பை வைத்திருந்தார்.

இந்த படைப்புகள் எப்படி இந்து மதத்தையும், இந்துக்களின் உணர்வையும் புண்படுத்துகிறது என்று தெரியவில்லை. நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து இந்துக்கோவில்களின் சுவர்களிலும், அதன் கோபுரங்களிலும் தீட்டப்பட்டுள்ள, சிற்பிகளால் படைக்கப்பட்டுள்ள சித்திரங்களை விட ஆபாசமாகவா (நாம் அதனை ஆபாசமாக கருதவில்லை; அது கலையின் உன்னதமான வெளிப்பாடு) இவர் வரைந்து விட்டார். மனித சிந்தனைக்கு அப்பாற்றபட்ட முறையில் புனைவது போன்ற சிலைகளைக்கூட இந்துக் கோவில்களில் காண முடிகிறதே! இதையெல்லாம் இந்துத்துவ சக்திகள் சிதைத்துவிட்டதா? அல்லது இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கோவில்களையெல்லாம் குப்புறப் புரட்டப்போகிறதா?

நிர்வாணம் ஒன்றும் பா.ஜ.க.விற்கு புதியதல்லவே! இதே குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷியின் கிலு, கிலு நிர்வாண லீலைகளை - ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சி.டி. மூலம் மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. வெள்ளி விழாவின் போது அம்பலப்படுத்தியதெல்லாம் பா.ஜ.க.வுக்கு நினைவில்லையா? அதுவும் சஞ்சய் ஜோஷி ஆர்.எஸ்.எஸ்.இன் கட்ட பிரம்மச்சாரியாச்சே!

எனவே, பா.ஜ.க. - சங்பரிவாரத்திற்கு நிர்வாணம் ஒன்றும் புதியதல்ல; அவர்களது இந்துத்துவ கலாச்சார சிந்தனை பாசிசத்தை அடிப்படையாக கொண்டு, சிறுபான்மை மக்களை, ஜனநாயக சக்திகளை, மதச்சார்பற்ற சக்திகளை, இடதுசாரி சிந்தனை கொண்டோரை வேட்டையாட எப்போதும் கடப்பாரையோடு அலைந்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம்தானே!

அது எப்போதுமே கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எதிரானதே என்பதை பயர், வாட்டர் படங்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், ஓவியர் எம்.எப். ஹூசைனின் ஓவியக் கூடாரத்தை அடித்து நொறுக்கியபோதும், காதலர் விழாக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்போதும் அவர்களது நிர்வாணமாகிப்போன பாசிச சிந்தனை வெளிப்பட்டது!


இந்துத்துவத்தின் வேர்கள் மனிதகுலத்திற்கே எதிரானது. அது இட்லரை மோடியின் வடிவில் இந்தியாவில் உலவ விட்டுள்ளது. உலகை உலுக்கும் இன்னொரு நூரன்பர்க்க விசாரணை இந்திய வரலாற்றிலும் நடைபெறும்! அந்தநாள் மிக விரைவில்!

இது தொடர்பான சில இணைப்புகள்:

May 18, 2007

தமிழ் செம்மொழியா? செத்த மொழியா!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அக்கோவிலில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர்கள் தமிழை நீச பாசையாக, தீண்டத்தகாத மொழியாக கருதுவதும், தங்களது பிராமணீய மேலாதிக்கத்தை - மொழியாதிக்கத்தை இக்காலத்திலும் கடைப்பிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தில் நிலவும் மொழித் தீண்டாமைக்கு எதிராக கை கட்டி வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதன்று.
நேற்றைய தினம் ஓதுவார் ஆறுமுகச்சாமி தலைமையில் தேவாரம், திருவாசகம் பாடச் சென்றவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்துள்ளது காவல்துறை, இதனை கண்டித்து மறியல் செய்தவர்களை கைது செய்துள்ளது. இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி. சமSகிருத மொழியின் அர்த்தத்தை அறியாமல், புரியாமல் வெறும் மனப்பாடம் செய்து பிழைப்பை ஓட்டுவதும், சமSகிருதம் மட்டுமே தேவ பாசை மற்ற பாசைகள் எல்லாம் கடவுளுக்கு தீண்டாத மொழி என தங்களது பிராமணீய மொழியாதிக்கத்தை நிலைநாட்டுதை ஜனநாயக சக்திகள் தொடர்ந்து கண்டித்து வருவதோடு, அதற்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். வழக்கம் போல் நம்முடைய ஆளும் வர்க்க நீதிமன்றம் தமிழில் இறைவனை பாடுவதற்கு கூட தடை விதித்துள்ளது.இதற்கு எதிராக தமிழக அரசு, 50 ஆண்டு பொன் விழா கண்ட கலைஞர் உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கையினை எடுப்பதுதான் தமிழுக்கு செய்யும் நீதியாக இருக்க முடியம்.
தமிழ் செம்மொழி என உலகம் முழுவதும் அதன் பெருமைகளை கூறிக் கொண்டிருக்கையில், தமிழகத்திலேயே அதனை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் செம்மொழியா? அல்லது செத்த மொழியா? என்ற கேள்வி எழுகிறது, தமிழக முதல்வர் இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
தமிழ் பேச்சு மொழியாக மட்டும் அல்லாமல், ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், உயர் கல்வி மொழியாகவும் மலர்ந்திட வேண்டும் அப்படிப்படட வளர்ச்சியின் மூலம்தான் சீரான சிந்தனை வளர்ச்சிக்கும் வழியேற்படும் தமிழை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த வழியில் தமிழை நடைபோடுவதற்கு எடுத்த முயற்சிகள் போதுமானதல்ல. இரயிலில் தமிழகத்தில் தமிழில் எழுதுவது குறித்து பெருமைப்படும் ஆட்சியாளர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழுக்கு கதவு சாத்தப்படுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

May 17, 2007

மனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மாட்சிமையும்!




உத்திரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் மதச்சார்பற்ற அரசு அரியனை ஏறியுள்ளதை சங்பரிவார கூட்டத்தால் ஜீரணிக்க முடியவில்லை; அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததை சங்பரிவார கூட்டத்தை கதிகலங்க வைத்துள்ளது.


இன்றைய (17.5.2007) தினமணியில் ‘மனுவாதி - மாயாவதியுடன் உடன்பாடு’ என்ற தலைப்பில் எஸ். குருமூர்த்தி தீட்டியுள்ள கட்டுரை சங்பரிவாரத்திற்குள் இருக்கும் வெக்கையை உணர முடிகிறது.


பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டு, விட்டு மாயாவதி எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி.


கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது தமிழ் பழமொழி! அதுபோல மாயாவதி கடந்த இரண்டு வருட காலமாக எப்படி பிராமணர்கள் உட்பட உயர்ஜாதியினரோடு உடன்பாடு கண்டு, அவர்களை தன் பக்கம் வளைப்பதில் வெற்றி கண்டு வந்தார் என்பது உலகறிந்த விஷயம். அரசியல் சாணக்கியத்தனம் என்பது சங்பரிவார மனுவாதிகளுக்கு மட்டுமே உரியதாக கருதிக் கொண்டிருக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் மாயாவதி. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத குருமூர்த்தி மனுவாதியோடு கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்!


மாயாவதி மனுவாதியோடு கூட்டு வைத்தாரா? அல்லது ஏழ்மையில் உழலும் உயர்ஜாதியினரோடு கூட்டு வைத்தாரா? மனுவாதம் என்றால் என்ன? மனுவாதத்தை இன்றைக்கும் தோளில் போட்டு சுமக்கும் கட்சிதான் பா.ஜ.க.வும் சங்பரிவாரமும்! ஆம்! ஆர்.எஸ்.எஸ்.இல் இன்றைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதில்லை! மேலும், மக்களின் பிரச்சனைகளை முழுக்க முழுக்க திசை திருப்பி ராமருக்கு கோவில் என்றும், ராமர் பாலம் இடிப்பு என்றும், இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகளை திரிப்பதும், பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டுவதும், கிறித்துவ கோயில்களை தாக்குவதும், கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பதும், இந்திய மக்களை இந்தியாவிலேயே அகதிகளாக்குவதும்தான் உண்மையான மனுவாத சிந்தனை.


மனுவாதத்தின் நவீன அடையாளமே சங்பரிவாரம்தான். ஹரியானாவில் செத்த மாட்டை உரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை கல்லால் அடித்தே கொன்ற காட்டுமிராண்டி கூட்டம்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவாரமும். தலித் மக்களை இன்றைக்கும் தீண்டத்தக்காதவர்களாக பார்க்கும் கூட்டம்தானே சங்பரிவாரம். இத்தகைய கேடு கெட்ட கூட்டம் மாயாவதியை மனுவாதத்தோடு கூட்டு என்று அவரை மனுவாதத்தோடு இணைக்கப் பார்ப்பதே உண்மையான மனுவாத சிந்தனையின் வெளிப்பாடு!


இந்த சீரழிந்த சிந்தனையில் செயல்படும் பா.ஜ.க.வை உ.பி.யில் ராமேரே கைவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை!


உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவையே ஒரு குஜராத் போல் மாற்றியிருப்பார்கள். அதற்கான வழியை அடைத்து விட்டார்கள் உத்திரபிரசேத மக்கள்! இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்தார்கள் அது உ.பி.யில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பது மட்டும்தான்! இந்தியாவை சூழ்ந்துள்ள பெரும்பான்மை பாசிச மனுவாத சிந்தனைக் கொண்ட இந்துத்துவா ஆபத்தை உணராத காங்கிரசையும் உ.பி. மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளதோடு, பா.ஜ.க. போலி தேச பக்திக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பெற்ற 43 இடங்களில் பா.ஜ.க. தற்போது துடைத்தெறியப்பட்டுள்ளது.


இதற்கான ஆத்ம பரிசோதனையை குருமூர்த்தி நடத்துவதை விட்டு, விட்டு - புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாயாவதியின் புதிய சித்தாந்தத்தின் மீது தாக்குதல் தொடுக்கவும், கறையேற்றவும் துடிக்கிறார் குருமூர்த்தி! இவர்களது திசை திருப்பல்களுக்கு தமிழக மக்களும், இந்திய மக்களும் இறையாக மாட்டார்கள்!


இன்றைய தினம் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல், சேது - சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள்தான் என்பது மிக நிதர்சனமான கூற்று. இந்திய மக்களையே கடத்தி வேற்று நாட்டுக்கு விற்கும் தரம் குறைந்த வியாபாரிகள்தான் இந்த சங்பரிவாரத்தினர் என்பதை நாடு உணர்ந்துக் கொண்டது இனியும் எடுபடாது உங்கள் ராமர் அரசியல்!


இந்தியாவின் எதிர்காலம் மதச்சார்பற்ற - கூட்டாட்சி அரசியலே! பா.ஜ.க. - சங்பரிவார - இந்துத்துவ அரசியலால் இந்தியா ஒருபோதும் ஒளிராது.

May 14, 2007

கிரிமினல்மயமாகும் அரசியல்!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்புமுனைகள் நடந்தேறி வருகிறது. குறிப்பாக, கலைஞரின் சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திமுகவிற்குள் நடந்து வரும் மாற்றங்கள் தயாநிதி மாறன் நீக்கம் போன்ற தொடர் சம்பவங்கள் திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டும், மக்களிடையே விவாதிக்கப்பட்டும் வருகிறது. திமுக தொண்டர்களிடம் கலைஞரின் நடவடிக்கைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தாலும், மக்கள் மத்தியில் திமுகவின் நடவடிக்கை குறித்து பல விதமான சந்தேகங்கள் நிலவுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

‘தினகரன் கருத்து கனிப்பு’ அதைத் தொடர்ந்து மதுரையில் மு.க. அழகிரியின் அடியாட்களால் நடத்தப்பட்ட தாக்குதல், மூன்று உயிர்கள் பலி - சன் டி.வி., தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் மதுரையை மட்டுமல்ல; ஜனநாயகத்தை விரும்பும் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது மு.க. அழகிரியின் அடியாட்களான அட்டாக் பாண்டியன் போன்ற கிரிமினல்கள் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்கள், மதுரை மேயர் தேன்மொழி, அவரது கனவர் போன்றவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து இந்த தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தியுள்ளது அதைவிட கொடுமையானது; ஏற்க முடியாதது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணாதுரையால் வகுக்கப்பட்ட கொள்கை முழக்கத்தை ஏந்தி செயல்படும் திமுக தொண்டர்கள் தற்போது யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

மதுரை லீலாவதி படுகொலை, முன்னாள் அமைச்சர் த. கிருஷ்ணன் படுகொலை, தற்போது தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் படுகொலை ஆகியவற்றில் மு.க. அழகிரிக்கும் அவரது அடியாட்களுக்கும் தொடர்பு இருப்பதாக சன் டி.வி. குற்றம் சாட்டியது. மொத்தத்தில் மதுரையில் அழகிரியின் ராஜ்யமே நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவங்களின் தொடர் நிகழ்ச்சியும், கலைஞரின் பொன் விழாவில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு வி.ஐ.பி. அந்த°து கொடுத்து, சட்டமன்ற லாபியில் உட்கார வைத்ததும் மக்கள் மத்தியில் மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு இப்படிப்பட்ட அந்த°தை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வன்முறை - கொலைவெறியாட்டத்தை அரசியல் அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் நிலவினால், அரசியலில் கிரிமினல்களைத் தவிர வேறு யாருக்கு இடமிருக்க முடியும்!

அரசியல் கிரிமினல்மயமாவது குறித்து தொடர்ந்த பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை மற்றும் புறநகரில் உள்ளாட்சி தேர்தலில் நடத்திய பெரும் வன்முறை, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கையை அரங்கேற்றியதன் மூலம் சென்னையில் உள்ள ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் இது நம்ம ஆட்சி! என்ற எண்ணத்தையும், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தை தோற்று வித்துள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் கிரிமினல் நடவடிக்கைகளுக்கான ஒரு வேராக அமைந்து விட்டது.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகள், சென்னை சென்டிரல் ரயில்வே °டேஷனில் பட்டப் பகலில் நடந்த படுகொலை போன்ற சம்பவங்கள் இன்னும் மக்கள் மத்தியில் நெஞ்சில் இருந்து அகலவில்லை!

அதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது கே.வி.கே. குப்பத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதும், சமீபத்தில்கூட அமைச்சரின் தம்பி ஒருவர் டிராபிக் போலீசாரை தாக்கியது தொடர்பான செய்தியையும் பத்திரிகையில் பார்க்க முடிந்தது. அரசியல் அதிகாரத்தின் மூலம் எதைச் செய்தாலும் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சிந்தனையே இந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

50 ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை முடித்துள்ள கலைஞர், நீண்ட நெடிய அரசியல் பாரம்பர்யம் உள்ளவர், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இந்த சூழலில், மக்கள் மத்தியில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடையளிப்பதைப் பொறுத்துதான் வரலாற்றில் அவரது இடம் தீர்மானிக்கப்படும்.

குறிப்பாக தயாநிதி மாறன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவரது குடும்ப சண்டையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தினகரன் அலுவலகத்தை தாக்கிய - மூன்று உயிர்களை பலிவாங்கியவர்கள் மீது, குறிப்பாக மதுரை மேயர் தேன்மொழி மற்றும் திமுக கவுன்சிலர்கள் இதற்கு மூலகாரணமான மு.க. அழகிரி இவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதோடு, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவர் மீதும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த சம்பவத்திற்கு உண்மையான நீதி வழங்கியதாக அமையும்! முதல்வர் இதனை நிறைவேற்றுவார் என்று நம்புவோம்!

கலைஞரின் ஓராண்டு ஆட்சியில் இரண்டு ஏக்கர் நில விநியோகம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரேஷன் கடையில் எண்ணெய், பருப்பு விற்பனை, கூட்டுறவு கடன் ரத்து போன்ற நல்ல திட்டங்களின் மூலம் மக்களின் நல்லாதரவை பெற்றுள்ள அரசிற்கு இந்த சம்பவங்கள் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாது என்பது ஜனநாயக விரும்பிகளின் நல்லெண்ணமாக இருக்கிறது.

May 11, 2007

மண்ணை கவ்விய ராமர் அரசியல்!


உத்திரபிரதேச தேர்தல் முடிவு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தன்னுடைய மக்கள் விரோத - மற்றும் வன்முறை அரசியலால் தனிமைப்பட்டு ஆட்சியை இழந்திருக்கிறது. இருப்பினும் சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடித்து தன்னுடைய செல்வாக்கை நிரூபித்திருக்கிறது.


அதே சமயம் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான கொள்கை நோக்கும் இன்றி முலாயமை எதிர்க்கும் அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டதும், உறுதியான இந்துத்துவ எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்காததும், அரசியல் முதிர்ச்சியற்ற - கவர்ச்சிதன்மையிலான ராகுல் - பிரியங்காவை மட்டுமே நம்பி ஆட்சி கட்டிலை பிடிப்பதற்கு நம்பாசையோடு காத்திருந்தது. உத்திரபிரதேசம் என்றாலே அது காங்கிரசுக்கு வாக்கப்பட்டது என்ற சூழ்நிலை எல்லாம் மாறிவிட்டதை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாத காங்கிரஸ் ஏற்கனவே இருந்த இடங்களில் சிலவற்றை இழந்து கரையொதுங்கிப் போயுள்ளது. மேலும், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விலைவாசி உயர்வு, உலகமய ஆதரவு கொள்கை, விவசாயம் சீரழிப்பு, வேலையின்மை மற்றும் அடிப்படை சுகாதாரம் போன்ற மக்களின் அத்தியாவசிய விஷயங்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துவதும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமலாக்குவதிலிருந்து அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை பா.ஜ.க.வோடு இணைந்து எடுப்பது போன்றவற்றால் நாடு முழுவதும் காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தி நிலவுவதைதான் பஞ்சாப், அசாம், உத்ராஞ்சல் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. உத்திரபிரதேச தேர்தல் முடிவும் மத்திய காங்கிரஸ் அரசின் தோல்வியை பறைசாற்றுவதாகவே உள்ளது. இனியாவது திருந்துமா அல்லது நான் புதைகுழிக்கு சென்றே தீருவேன் என்ற சபதமேற்று செயல்படுமா என்பதை பார்ப்போம்!


ராமர் அரசியலை வைத்தே கடந்த காலத்தில் மத்திய ஆட்சியைப் பிடித்ததைப்போல் தற்போதும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என சங்பரிவாரம் கனா கண்டு கொண்டிருந்தது. இதற்காக ராமர் பாலம் அரசியலை கையில் எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் பெரும் முக்கியத்துவத்தோடு தனது இழிவான அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டது பா.ஜ.க., அத்தோடு புதிய தலைவர் ராஜ்நாத் சிங் உத்திரபிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அதைத் தவிர மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் - விஷத்தனமான மதவாத அடிப்படையில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு சி.டி. தயாரித்து விட்டு அரசியல் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டது. ஆரம்பத்தில் நாங்கள் தனித்தே ஆட்சியைப் பிடிப்போம் என்று கடை விரித்தவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தனது குரலை மாற்றிக் கொண்டு, இறுதியில் கூட்டாட்சிக்கும் தயார் என்றெல்லாம் வாக்குறுதியளித்துப் பார்த்தார்கள்! இருப்பினும் என்ன! மக்களுக்கு ரொட்டியும், சாப்படும்தான் முக்கியமே தவிர ராமர் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். மதவாத பா.ஜ.க.வின் மதவெறியைத் தூண்டும், உணர்ச்சிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வருவதன் எதிரிரொலிதான் பா.ஜ.க.வின் இந்த படுதோல்விக்கு அடிப்படை காரணம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்தி வந்தது. உ.பி.யில் மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகள் பிரியக்கூடாது என்று! இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். சங்பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வின் மதவெறி விஷத்தனத்திற்கு முற்றிலுமாக சவக்குழி தோண்டப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்திலிருந்தும் அதனை முழுமையாக வீழ்த்த வேண்டிய கடமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உண்டு.


தேர்தல் வெற்றியை ஈட்டியுள்ள மாயாவதி தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும், கடந்த கால அனுபவங்களில் இருந்து சிறந்த பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. இங்கே ஓயாது கூப்பாடு போடு “மனு” அரசியலை மாயாவதி நிராகரித்து விட்டு, உத்திரபிரசேதத்தில் உள்ள பிராமணர்களுடனும், உயர்ஜாதி இந்துக்களுடனும், பிற்படுத்தப்பட்ட மக்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு, மொத்ததில் உத்திரபிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தல் உத்தியை கையாண்டது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

மனுவாத அரசியலை கைகொண்டுள்ள பா.ஜ.க.கூட பெரும்பான்மையான உயர்ஜாதி இந்துக்களிடம் இருந்து தனிமைப்பட்டுள்ளதைத்தான் 40 இடங்களுக்கு மேல் அது இழந்துள்ள சீட்டுக்கள் காட்டுகிறது. மனுவாத சிந்தனைகள் எதிர்க்கப்பட வேண்டியதே! அதற்காக இதையே வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பிராமணர்களை எதிர்க்கும் போக்குதான் நிலவுகிறது. மொத்ததில் இந்திய மக்களின் வாழ்வு சிறக்க எதிர்கால அரசியல் மதச்சார்பின்மை + மக்கள் நலன் சார்பு + குறுகிய பிராந்திய நலன் - ஜாதி - இனவாத நலன்கள் இவற்றுக்கு எதிரான அரசியல் கொள்கைகளே வெற்றிபெறும் இனியாவது திருந்துவார்களா நமது பங்காளிகள்! உழைக்கும் மக்களை மதவெறி மூலமோ, ஜாதிவெறி மூலமோ, இனவெறி மூலமே பிரிக்க முடியாது. அவர்களது வர்க்க ஒற்றுமையே அவர்களுக்கு பலம்! வாழ்த்துக்கள் மாயாவதி!

May 08, 2007

என் குழந்தைக்கு எப்படி பாலூட்டுவேன்!

நன்றி : தினமலர், மே 8 - 2007


நந்திகிராம் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மார்க்சிSட் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக சி.பி.எம்.க்கு எதிராக பெரும் அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டார்கள். மார்க்சிSட்டுகளா - பாசிSட்டுகளா? மாசியத்திலிருந்து பாசிசத்திற்கு - ஹிட்லரை மிஞ்சிய புத்ததேவ் என்றெல்லாம் அம்மா ஜெயலலிதாவிலிருந்து, முதலாளித்துவ மீடியாக்கள் அவதூறை அள்ளி வீசினர். அங்கே நடைபெற்ற உண்மை சம்பவங்களை முற்றிலும் மறைத்து விட்டனர். தற்போது நந்திகிராமில் நடைபெற்று வரும் சோகங்கள் உலகிற்கு ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினமலரில் சகோதரி சசிகலாவிற்கு ஏற்பட்ட சோகத்தை இங்கே பதிய விரும்புகிறேன். தற்போது பூமி உச்சத் பிரதிரோத் கமிட்டி என்ற பெயரில் துப்பாக்கி, கத்தி போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு மார்க்சிSட்டு தொண்டர்களை வேட்டியாடி வரும் நியோ பாசிSட்டுகளைப் பற்றி யாரும் வாய்திறப்பதில்லை. இந்த பூமி உச்சத் பிரதிரோத் கமிட்டிக்குள் மம்தாவும், சொந்த வர்க்கத்தில் உள்ள பழங்குடி மக்களையும் தலித் மக்களையும் வர்க்க எதிரிகள் என்று பட்டம் சூட்டி படுகொலை செய்வதையே தொழிலாக கொண்ட எதிர்புரட்சி கும்பலான நக்சலிவாதிகளும், இசுலாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்றும், மாவோயிSட்டுகளும் கூட்டாக கைகோர்த்துக் கொண்டு மார்க்சிSட்டுகளை களையெடுத்து வருகின்றனர். அரசியலில் கரையொதுங்கிப்போன கழிசடைகள் மிக கேவலமான முறையில் கழிசடை அரசியலை செய்து வருகின்றனர். உண்மைகள் உரைக்கும் போது, இத்தகைய நியோ பாசிSட்டுகள் இல்லாமல் போயிருப்பர்!
மேற்குவங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சி.பி.ஐ.(எம்) தலைமையிலான இடதுசாரி அரசு இதுவரை ஒரே ஒரு முறைகூட தொழிலாளிகள் மீதோ, விவசாயிகள் மீது துப்பாக்கியையோ, தடியையோ நீட்டியதில்லை. அவ்வாறன அடக்குமுறை அரசியலுக்கு சொந்தக்காரர்கள் அல்ல இடதுசாரியினர். நந்திகிராமத்தில்கூட அந்தப் பகுதி மக்கள் தொழிற்சாலை அமைப்பதற்கு விரும்பவில்லையென்றால், அந்த திட்டம் கைவிடப்படும் என்று திரும்பத் திரும்ப முதல்வர் புத்ததேவ் அறிவித்த பிறகும், சிங்கூரில் தோல்வியடைந்தவர்கள் - நந்திகிராமத்தை பகடையாக்கி அரசு நிர்வாகத்தையே நிலைகுலைய வைத்ததோடு, உள்ளுரில் இருந்த மார்க்சி°ட் கட்சியினரையும், இடதுசாரி தொண்டர்களின் குடும்பங்களை விரட்டியடித்து விட்டு, 15 அடிக்கும் மேற்பட்ட பெரும் பள்ளங்களை தோண்டி அந்த கிராமத்தையே மேற்குவங்கத்தில் இருந்து துண்டித்து விட்டனர். பாதிக்கப்பட்ட 3000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இத்தகைய கடமையை ஆற்றுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டங்களை கூட்டியபோதெல்லாம் மமதா கட்சியினர் புறக்கணித்ததோடு, நக்சலிசவாதிகளுடன் கூட்டு சேர்ந்தக் கொண்டு அமைதியை நிலைநாட்ட வந்த காவல்துறையினர் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதும், துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு பிரச்சினையை துவக்கி வைத்ததும் இந்த உழைக்கும் வர்க்க விரோதிகள்தான். குறிப்பாக துப்பாக்கி சூட்டில் பலியான 14 பேரில் வெறும் 8 பேர் மட்டுமே காவல்துறையால் சுடப்பட்ட குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. மற்றவர்களையெல்லாம் உழைக்கும் வர்க்க மக்களை படுகொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ள நக்சலிசவாதிகளும் - மமதா குண்டர்களுமே! மக்கள் விரோதிகள் மார்க்சிSட்டுகள் அல்ல நக்சலைட்டுகளும் - மாவோயி°ட்டுகளும் - மமதாவுமே!

May 05, 2007

உலகை உலுக்கும் மாமனிதன்!





மனிதகுலம் எத்தனையோ மாமனிதர்களை பெற்றிருக்கிறது. எத்தனையோ அர்ப்பணிப்புகளை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாமனிதர்களுக்கெல்லாம் மாமனிதராக மார்க்ஸ் ஒருவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் சராசரி வாழ்நாளிற்குள் சாதிக்க முடியாத வியத்தகு சாதனையை படைத்ததில் மார்க்ஸை தவிர விஞ்சி நிற்பவர் எவரும் இருக்க முடியாது. மாணவ பருவம் தொடங்கி இறுதி மூச்சின் 2 நிமிடம் முன்வரை தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னலமற்று போராடிக் கொண்டிருந்த மனிதரை சரித்திரம் இனி காண முடியுமா? என்பது சந்தேகமே. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளான மார்க்ஸ், இவற்றை சந்திக்கும் ஆற்றலும், மனதிடமும் எங்கிருந்து கிடைத்தது என்பதை புரிந்து கொள்ள அவர் சொல்லியதைத்தான் சொல்ல வேண்டும். “மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்.” இந்த மகத்தான பணியில் மார்க்சுடன் எங்கெல்ஸ் தம்மை இணைத்து கொண்டார்.






1844ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் எங்கெல்ஸ் பாரிசில் வசித்து வந்த காரல் மார்க்ஸை சந்தித்தார். அங்கு அவர்கள் ஒன்றாக கழித்த பத்து நாட்கள் மார்க்ஸையும், எங்கெல்ஸையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைத்த வரலாறு காணாத ஐக்கியத்திற்கும் புரட்சி தத்துவத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு ஆயுதமாக வழங்கிய இந்த மாபெரும் அறிவு கடல்கள் இரண் டின் இணைப்பிற்கும், நட்பிற்கும் தொடக்கமாக அமைந்தன. “இரண்டு போராட்ட வீரர்கள் அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளை யெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என சொல்லிக் கொள்ளலாம்” என்றார் வி.இ.லெனின்.






கம்யூனிஸ்ட் அறிக்கை1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை லண்டனில் வெளியாயிற்று.




விஞ்ஞான கம்யூ னிஸத்தின் முதல் வேலைத் திட்ட ஆவணமாக இது தான் தற்போது சோசலிச இலக்கியம் அனைத் திலும்... மிகவும் அதிகமாய் பரவி மிகப் பெரும் அள வுக்கு சர்வ தேசிய தன்மை கொண்ட படைப்பாகும்.”இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும் ஒளிச்சிறப்புடனும் ஒரு புதிய உலக கண்ணோட் டத்தை விவரிக்கிறது. சமுதாய வாழ்வு துறையை யும் கூட அணைத்து நிற்கும் முரணற்ற பொருள் முதல்வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமை யான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க் கப் போராட்டத்தை பற்றியும் புதிய கம்யூனிஸ சமு தாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட் டாளி வர்க்கத்தின் உலக - வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த புரட்சிகரமான பாத்திரத்தை பற்றி யும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலக கண்ணோட்டத்தில் அடங்கியவை” என்று லெனின் எழுதினார்.




உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பது வளர்ந்து வரும் உற்பத்திச் சக்திகளுக்கு கைவிலங்கு பூட்டுகிறது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு - உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்தியின் பயன்களை தனியு டமை முறையில் தன்னுடையதாக்கிக் கொள்வதற் கும் இடையிலான முரண்பாடு மேலும் மேலும் கூர்மையடைந்து வருகிறது. முதலாளி வர்க்கம் “தனக்குச் சவக் குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாக உற்பத்தி செய்கிறது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும் அதே போல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவொண்ணா தவை” என்று அறிக்கையில் கூறப்பட்டது.




பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தவும் வாகை சூடவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரம் ஒரு முன் நிபந்தனை ஆகும் என்பது அறிக்கையில் வகுக்கப்பட்டுள்ளது.




தத்துவத்திற்கு மார்க்சின் பெயர்மார்க்சின் பங்கு பாத்திரத்தை பற்றி குறிப்பிடு கையில் எங்கெல்ஸ் “ நான் ஆற்றிய பணியை, ஒருவேளை இரண்டு மூன்று தனித் துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக, நான் இல்லாம லேயே எளிதாக செய்திருப்பார். ஆனால், மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்கமாட்டேன். எங் கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார். வெகு தொலைவிற்கு பார்த்தார். மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதை, நாங்கள் எல்லோரும் - அதிக பட்சமாக சொன்னால் - திறமைசாலிகளே. அவரில்லாமல் இந்த தத்துவம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.




எனவே அவருடைய பெயரை தாங்கி நிற்பது சரியே.”தன்னலமற்ற போரில் சந்தித்த துயரங்கள்முதலாளித்துவ சமுதாயம் பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கு மிகச் சாதாரணமான தேவை கள் கூட கிட்டாமல் செய்து அவர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை தத்துவ மற்றும் அரசியல் பணியை மேற்கொள்வ தற்கான சகலவித வாய்ப்புகளையும் மார்க்சிற்கு மறுத்து அவரது மேதாவிலாசத்தை மழுங்கடிக்கப்ப தோடன்றி வறுமைச் சுமையின் கீழ் அவரையும் அவரது குடும்பத்தையும் சாகடித்திருக்கும்.அப்போது நிலவிய சூழ்நிலைகளில் தனது நண்பருக்கு உதவுவதற்காக எங்கெல்சுக்கு கிட்டிய ஒரே வழி “கேடுகெட்ட வர்த்தக தொழிலுக்கு திரும்பி போவதுதான்.




முறையீடின்றி முணுமுணுப் பில்லாமல் ஆராவாரம் செய்யாமல் எங்கெல்ஸ் இதனை மேற்கொண்டார். லெனின் எழுதியபடி “எங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டிருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல அவர் வறுமையில் மடிந்திருப்பார்”.ஏழ்மை ஒருவருக்குப் பின் ஒருவராக மார்க் ஸின் குடும்பத்தினரை பலி கொண்டது. கிவிதோ, பிரான்சிஸ்கா எனும் இரு குழந்தைகள் மாண்டு போனதையடுத்து குடும்பம் முழுவதும் அன்பு பாராட்டி வந்த வியக்கத்தக்க சிறுவனான மகன் முஷின் (குருவி) மறைவு மார்க்சுக்கு பேரிழப்பாய் இருந்தது. சிறுவனை அடக்கம் செய்துவிட்டு எங்கெல்சுக்கு மார்க்ஸ் எழுதினார்.




“துன்பங்கள் பலவற்றை நான் ஏற்கெனவே அனுபவித்திருக்கி றேன்; ஆனால் உண்மையான துக்கம் என்பது என்னவென்று நான் இப்போதுதான் உணர் கிறேன்.”“இந்த நாட்களில் நான் அனுபவித்த பயங்க ரமான சித்ரவதைகளின் இடையில் உன்னை பற்றிய சிந்தனையும் உன்னுடைய நட்பை பற்றிய சிந் தனையும் நாமிருவரும் இப்பூமியில் உருப்படியாக செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையும்தான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்தன.”மூலதனம்1867 ஆகஸ்டு 16ல் மூலதனத்தின் கடைசி அச்சு பிரதியை திருத்திவிட்டு முன்னுரையும் எழுதி எங்கெல்ஸ்க்கு அனுப்பினார் மார்க்ஸ். அப்போது எங்கெல்சை குறிப்பிட்டு “ஒருவாறாக இந்த தொகுதி முடிந்துவிட்டது. இந்த பணி முடிந் ததில் நான் உனக்குத் தான் கடமைப்பட்டிருக் கிறேன்.




உன்னுடைய சுய தியாகம் மட்டும் இல் லாமல் போயிருந்தால் என்னதான் முயன்றிருந் தாலும் மூன்று தொகுதிகளுக்கான இந்த பிரம் மாண்டமான பணியை நான் நிறைவேற்றியே இருக்க முடியாது. நிறைந்த நன்றியுணர்வுடன் உன்னை நான் அணைத்துக் கொள்கிறேன்.”மார்க்சினுடைய பொருளாதார போதனை முழு மையுற்று மூலச்சிறப்பு எய்துவதற்கு மார்க்ஸ் இருபத் தைந்து ஆண்டுகள் கடுமையான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மார்க்சினுடைய மகத்தான கண்டுபிடிப்பு உபரி மதிப்பு பற்றிய போதனையாகும். முதலாளித்துவ சுரண்டலின் இரகசியத்தை உபரி மதிப்பு பற்றிய மார்க்சின் போதனை அம்பலப்படுத்தி முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடை யில் நிலவும் பகைமையின் பொருளாதார அஸ்தி வாரத்தை கண்ணுக்கு முன் கொண்டு வந்து காட்டியது.




மார்க்சினுடைய மறைவுக்கு பின்பு மூல தனத்தின் இரண்டாம் தொகுதியின் கையெழுத்து பிரதியை பிரசுரிப்பதுதான் எங்கெல்சிற்கு முதலில் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது.மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் தொகுதி யின் வெளியீட்டுக்காக எங்கெல்ஸ் ஆற்றிய பிரம் மாண்டமான சிக்கல் நிறைந்த பணி குறித்து லெனின், “மூலதனத்தின் இவ்விரண்டு தொகுதி களும் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரின் உழைப்பு மாகும்.” என்று எழுதினார்.




மார்க்சை பற்றி எங்கெல்ஸ் பெக்கருக்கு எழுதிய கடிதத்தில் “இன்னும் வேகமாய் புயல் வீசும் காலங் கள் வரும் போதுதான் மார்க்சின் மறைவு நமக்கு எத்தகைய இழப்பு என்பதை உணருவோம்” என்று எழுதினார்.




ஒவ்வொருவரும் மார்க்சின் பொருள் பொதிந்த வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அவர் மனித குல விடுதலைக்கு காட்டிய பாதையின் வழியில் வரலாற்று காலச் சக்கரத்தை முன்னோக்கி சுழற்று வதே நமக்குமுன் உள்ள புரட்சிகர வர்க்க கடமை.




ஆதாரம் : எ.ஸ்தெபானவா எழுதிய பிரடெரிக் எங் கெல்ஸ் என்ற நூல் கட்டுரையாளர் : கே.பாலச்சந்தர் - தமுஎச தென்சென்னை மாவட்டத் தலைவர்
Thannks:www.theekkathir.in

சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்!


சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்! இந்த தலைப்பை பார்த்ததும் பலருக்கு கடும் கோபம் பொத்துக் கொண்டு வரும். வேண்டுமென்றே திட்டமிட்டு பெரியாரையும், பெரியாரிய இயக்கத்தை தாக்கும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது என்ற ஆத்திரம் வெளிப்படும். மேற்கண்ட தலைப்பும் - கீழே உள்ள கருத்தும் என்னுடையதல்ல; 1932-இல் சாட்சாத் தந்தை பெரியாரால் ‘சுயமரியாதை-சமதர்ம’ கூட்டத்தில் வெளிப்படுத்திய கருதே இங்கே முன்வைக்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பெரியாரிய கருத்துக்களை தங்களுக்கு ஏற்ப பொருத்திக் கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது. அதன் உள்ளார்ந்த சாரத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் நிலை இதில் தெரியவில்லை. மேலும் பார்ப்பனர்களுக்கு எதிரான - வறட்டு கடவுள் மறுப்பு - இனவாத அடிப்படையில் மட்டுமே அணுகப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் கருத்துக்களை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.




‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகி விட்டது. அதை அடக்காவிட்டால் நாட்டிற்கு இன்னல்கள் நேரும் என்று காங்கிரசுகாரர்களும் ஈ.வெ.ரா. அவர்களைத் தாக்கத் தொடங்கினர்’


பெரியார் கூறினார் : பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல், சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் - அரசியலும் அவசியமானதா? அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.”




- பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா., பக்கம் 12 - இந்த நூலில் உள்ள வேறு சில கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார் தி.க. தலைவர் கி. வீரமணி, கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு - சிங்காரவேலர் சிந்தனைகள் புத்தக வெளியீட்டின் போது.