May 08, 2007

என் குழந்தைக்கு எப்படி பாலூட்டுவேன்!

நன்றி : தினமலர், மே 8 - 2007


நந்திகிராம் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மார்க்சிSட் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக சி.பி.எம்.க்கு எதிராக பெரும் அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டார்கள். மார்க்சிSட்டுகளா - பாசிSட்டுகளா? மாசியத்திலிருந்து பாசிசத்திற்கு - ஹிட்லரை மிஞ்சிய புத்ததேவ் என்றெல்லாம் அம்மா ஜெயலலிதாவிலிருந்து, முதலாளித்துவ மீடியாக்கள் அவதூறை அள்ளி வீசினர். அங்கே நடைபெற்ற உண்மை சம்பவங்களை முற்றிலும் மறைத்து விட்டனர். தற்போது நந்திகிராமில் நடைபெற்று வரும் சோகங்கள் உலகிற்கு ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினமலரில் சகோதரி சசிகலாவிற்கு ஏற்பட்ட சோகத்தை இங்கே பதிய விரும்புகிறேன். தற்போது பூமி உச்சத் பிரதிரோத் கமிட்டி என்ற பெயரில் துப்பாக்கி, கத்தி போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு மார்க்சிSட்டு தொண்டர்களை வேட்டியாடி வரும் நியோ பாசிSட்டுகளைப் பற்றி யாரும் வாய்திறப்பதில்லை. இந்த பூமி உச்சத் பிரதிரோத் கமிட்டிக்குள் மம்தாவும், சொந்த வர்க்கத்தில் உள்ள பழங்குடி மக்களையும் தலித் மக்களையும் வர்க்க எதிரிகள் என்று பட்டம் சூட்டி படுகொலை செய்வதையே தொழிலாக கொண்ட எதிர்புரட்சி கும்பலான நக்சலிவாதிகளும், இசுலாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்றும், மாவோயிSட்டுகளும் கூட்டாக கைகோர்த்துக் கொண்டு மார்க்சிSட்டுகளை களையெடுத்து வருகின்றனர். அரசியலில் கரையொதுங்கிப்போன கழிசடைகள் மிக கேவலமான முறையில் கழிசடை அரசியலை செய்து வருகின்றனர். உண்மைகள் உரைக்கும் போது, இத்தகைய நியோ பாசிSட்டுகள் இல்லாமல் போயிருப்பர்!
மேற்குவங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சி.பி.ஐ.(எம்) தலைமையிலான இடதுசாரி அரசு இதுவரை ஒரே ஒரு முறைகூட தொழிலாளிகள் மீதோ, விவசாயிகள் மீது துப்பாக்கியையோ, தடியையோ நீட்டியதில்லை. அவ்வாறன அடக்குமுறை அரசியலுக்கு சொந்தக்காரர்கள் அல்ல இடதுசாரியினர். நந்திகிராமத்தில்கூட அந்தப் பகுதி மக்கள் தொழிற்சாலை அமைப்பதற்கு விரும்பவில்லையென்றால், அந்த திட்டம் கைவிடப்படும் என்று திரும்பத் திரும்ப முதல்வர் புத்ததேவ் அறிவித்த பிறகும், சிங்கூரில் தோல்வியடைந்தவர்கள் - நந்திகிராமத்தை பகடையாக்கி அரசு நிர்வாகத்தையே நிலைகுலைய வைத்ததோடு, உள்ளுரில் இருந்த மார்க்சி°ட் கட்சியினரையும், இடதுசாரி தொண்டர்களின் குடும்பங்களை விரட்டியடித்து விட்டு, 15 அடிக்கும் மேற்பட்ட பெரும் பள்ளங்களை தோண்டி அந்த கிராமத்தையே மேற்குவங்கத்தில் இருந்து துண்டித்து விட்டனர். பாதிக்கப்பட்ட 3000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இத்தகைய கடமையை ஆற்றுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டங்களை கூட்டியபோதெல்லாம் மமதா கட்சியினர் புறக்கணித்ததோடு, நக்சலிசவாதிகளுடன் கூட்டு சேர்ந்தக் கொண்டு அமைதியை நிலைநாட்ட வந்த காவல்துறையினர் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதும், துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு பிரச்சினையை துவக்கி வைத்ததும் இந்த உழைக்கும் வர்க்க விரோதிகள்தான். குறிப்பாக துப்பாக்கி சூட்டில் பலியான 14 பேரில் வெறும் 8 பேர் மட்டுமே காவல்துறையால் சுடப்பட்ட குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. மற்றவர்களையெல்லாம் உழைக்கும் வர்க்க மக்களை படுகொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ள நக்சலிசவாதிகளும் - மமதா குண்டர்களுமே! மக்கள் விரோதிகள் மார்க்சிSட்டுகள் அல்ல நக்சலைட்டுகளும் - மாவோயி°ட்டுகளும் - மமதாவுமே!

12 comments:

Anonymous said...

you believe dinamalar?

Anonymous said...

This is a truthful and sober assessment. Thanks. I am happy to read something like this after the blare of venomous media propaganda against the Left Front Government.

One thing people must know. If the communists come to power through a revolution, the class enemies will say it is violence. Here is a case where the communists have come to power through a multiparty franchise and have remained in power with people's support for 30 years. The lesson is to the exploiters and anarchists, communists in power is anathema; Communists in power through the ballot is greater anathema. This is because, the humbug of political pluralism is exposed. Political pluralism is fine so long as one exploitive outfit succeeds another.

சந்திப்பு said...

Anony, I belive this News Item. I Never Belive Dinamalar's Policy and conception of News.

சந்திப்பு said...

Anony 2. Thanks for your comment. It is fully acceptable. Captalists cannot digest Left Front has succssfully Long March in West Bengal. In future WB is the model and Tourch of all states.

Anonymous said...

Mr Santippu,

The very bit of news which you quoted from Dinamalar clearly tells that the violence started by Police and 'Marxists'.. It is the police and Marxists who started hitting people first.. And whatever happend to 'Marxists' are mere retaliation..

Now this whole episode started when government initiated land grabbing activities in nandhigram. and it is the government, who is responsible to answer the question - என் குழந்தைக்கு எப்படி பாலூட்டுவேன்?

சந்திப்பு said...

அனானி நடந்த உண்மைகளை வசதியாக தங்களுக்கு ஏற்ப திரிப்பதனால் அவைகள் ஒருபோதும் உண்மையாகி விடாது. நந்திகிராம நிகழ்வுகளைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ மீடியாக்களும், அதிதீவிரவாதம் பேசும் போலி நக்சலிவசதிகளும், மமதாவும் ஆரம்பம் முதலே சி.பி.எம்.க்கு எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் கட்டமைப்பதில் கவனம் செலுத்தினர். உண்மையில் நந்திகிராமத்தில், மேற்குவங்க அரசு இரசாயன தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தை முன்வைத்தது. சிங்கூரில் டாடா குழுமத்திற்காக அந்த விவசாயிகளின் முழுமையான ஒப்புதலைப் பெற்றும், அவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டையும், மாற்று தொழிலுக்கான ஏற்பாடுகளையும் உத்திரவாதம் செய்து விட்டு அரசு நிலத்தை கையகப்படுத்தியது. தோல்வியின் விரக்தியில் உள்ள மமதாவும் - குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நக்சலிசவாதிகளின் எதிர்ப்பு இயக்கத்திற்கு எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் போனதால், அவர்கள் நந்திகிராமத்தை களமாக தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் மேற்குவங்க முதல்வர் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை கூறிக் கொண்டே வந்தார். நந்திகிராம மக்கள் விரும்பவில்லையென்றால் அங்கே அத்திட்டம் கைவிடப்படும் என்று, இந்த விஷயத்தை மீடியாக்களும் மறைத்து விட்டன. இந்தப் பின்னணியில் சி.பி.எம். - இடதுசாரி ஆதரவாளர்களை ஊரை விட்டே விரட்டியடித்ததோடு, கிராமத்தையே தங்கள் கைவசமாக்கிக் கொண்டு கோர வெறி நர்த்தனம் புரிந்தனர் மமதாவும் - நக்சலிசவாதிகளும்... இதன் தொடர்ச்சிதான் துப்பாக்கி சூடு மற்றவைகள் எனவே, 14 பேர் பலயானதற்கு முழு முதல் பொறுப்பும் ஏற்க வேண்டியது மமதாவும் - போலி நக்சலிசவாதிகளும்தான். தற்போது நடைபெறும் வன்முறைகளுக்கும் இவர்கள்தான் அடித்தளம். இவர்களது முகமூடி மேற்குவங்க மக்கள் மத்தியில் விரைவில் கிழியும்.

Anonymous said...

//நந்திகிராம நிகழ்வுகளைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ மீடியாக்களும், அதிதீவிரவாதம் பேசும் போலி நக்சலிவசதிகளும், மமதாவும் ஆரம்பம் முதலே சி.பி.எம்.க்கு எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் கட்டமைப்பதில் கவனம் செலுத்தினர்//

you can simply say "entire world is against CPM - entire galaxy is against CPM...

Dear Santhippu sir, you cleverly skipped my questions.. but anyway..

// சி.பி.எம். - இடதுசாரி ஆதரவாளர்களை ஊரை விட்டே விரட்டியடித்ததோடு, கிராமத்தையே தங்கள் கைவசமாக்கிக் கொண்டு கோர வெறி நர்த்தனம் புரிந்தனர் மமதாவும் - நக்சலிசவாதிகளும்...//

seceratary of Moaist State commity have clearly said in an interview to NDTV that if they would have entered the scene, they would have used modern weapon against the police.. but the weapons used against the state were hand made pipe-guns...

And he insisted that they do not have any organisational strength in Nandhigram.. It was traditionally CPM stronghold...

Now you tell me - do you brand any one who opposes CPM as Naxalites? as Moaists?

It is really pathetic to see a CPM cadre is defending his party after his own party heads have admitted their 'mistakes' in nandhigram..

CPI have spoken strong against CPM's stand on SEZ's.. so, do you brand them also as naxals??

சந்திப்பு said...

நண்பரே தாங்கள் குறிப்பட்டிருக்கும் என்.டி. டி.வி. செய்தியினை நான்கூட பார்தேன். உண்மையென்ன? மாவோயி°ட்டுகளும் - நக்சலிசவாதிகளும் இந்த விஷயத்தில் நவீன ஆயுதத்தை பயன்படுத்துவார்களா? அதுதான் அவர்களது தந்திரம். பைப் குண்டுகளையெல்லாம் எந்த கிராமத்துவாசிகள் தயாரித்தனர். குழந்தைகளையும், பெண்களையும் முன்னிறுத்திக் கொண்டு துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்தது அரசியல் கோழைத்தனத்தை மேற்கொள்ளும் நக்சலிவசதிகள்தான். வசதியாக மம்தாவின் பின்னால் மறைந்துக் கொண்டு தாக்குகின்றனர். அல்லது மமதாவுக்கு உதவுகின்றனர். இதுதான் அவர்களது வர்க்க கண்ணோட்டம்.

நந்திகிராமம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் சி.பி.எம்.இன் தளம் அல்ல. பல்வேறு ஊராட்சிகளில் மமதாவும், இசுலாமிய அமைப்பு ஒன்றும் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். மேலும் சி.பி.எம். தலைமை நடந்த துப்பாக்கி சூட்டிற்கு வருத்தம் தெரிவித்ததோடு, நிலைமையை இன்னும் நிதானமாக கையாண்டிருக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளதே தவிர, மேற்குவங்க அரசு எடுத்த நடவடிக்கைகளை தவறு என்று எங்குமே விமர்சிக்கவில்லை.

ஆம் சி.பி.ஐ. முதலில் அப்படித்தான் செய்தது. அவர்கள் எப்போதுமே முதலில் தவறை செய்து விட்டு பின்னர் வருந்துவது வழக்கம். தற்போது நந்திகிராமில் சி.பி.ஐ. எம்.எல்.ஏ. நக்சலிவாதிகளாலும், மமதா குழுவினராலும் தாக்கப்பட்ட பின்னர்தான் அங்குள்ள நிலைமையை அவர்கள் உணர்ந்து வருகின்றனர்.

சி.பி.எம். யை எதிர்ப்பவர்கள் அனைவரையும் நாங்கள் நக்சலிவாதிகள் என்று சுமத்துவதில்லை. அவர்களது கோழைத்தனமான கைங்கரியம் இருக்கும் இடத்தில் அதனை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

தங்ளது விவாதத்திற்கு மிகுந்த நன்றிகள்.

Anonymous said...

//தங்ளது விவாதத்திற்கு மிகுந்த நன்றிகள்//

hahaha.. so you are so eager to close the debate. huh?

:)

All that I can say is - Your party is no more a Communist pary..

Its now Corporate Party of India ( Manudharma)

ArasuBalraj has given a link "Ghost of Nandhigram" in Asuran's blog. Just have some fun in reading that.. ;-)

Good bye

சந்திப்பு said...

நண்பர் அனானி அவர்களே! எதையுமே பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள மாட்டீங்களா? இந்த விஷயத்தில் நடைபெறும் விவாதத்தை வரவேற்கிறேன். அதற்காகத்தான் தங்களுக்கு நன்றி கூறினேனே தவிர விவாதத்தை மூட்டைக் கட்டுவதற்காக அல்ல. தங்களது புரிதலுக்கு நான் பொறுப்பல்ல.

சி.பி.எம்.க்கு மக்கள்தான் சர்டிபிகேட் தரவேண்டுமேயொழிய தாங்களல்ல. இதுபோன்ற சர்டிபிகேட்டுகளை 1960களில் வழங்கிய சி.பி.ஐ. மற்றும் நக்சலிவாதிகள் அனைவரும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் சிதறு தேங்காய்களாக போய்விட்டனர் என்பதுதான் தற்கால வரலாறு. அதிலும் குறிப்பாக அதிதீவிர கம்யூனிசம் பேசும் நக்சலிவாதிகளுக்கும் மக்களுக்கும் எந்த் தொடர்பும் இருப்பதில்லை. தன்னுர்வின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் இயந்திரவாதிகள். அதனால்தான் இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட குழுக்களாக குழுவாதிகளாக போய்விட்டனர். மேலும் உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1000க்கும் குறையாமல் தலித் மற்றும் ஆதிவாதி உழைப்பாளி மக்களை கொன்று குவித்து வரும் நியோ பாசி°ட்டுகளாக செயல்பட்டுவரும் நக்சலிவாதிகளுக்கும் - புனிதப்போர் நடத்தும் பின்லேடன் கும்பலுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. மொத்தத்தில் நக்சலிசம் என்பது போல்பார்ட்டிசமே!

அதைவிட முக்கியமானது தங்களது கட்சி இதுதான் என்று வெளிப்படையாக கூறுவதற்கும், அந்த கட்சியின் அடிப்படையில் நின்று இயங்குவதற்கும் தயங்கக்கூடியவர்கள் எப்படி தொழிலாளி வர்க்கத் தலைமையில் கட்சியை நிறுவப்போகிறார்கள்! ம.க.இ.க., பு.தொ.மு., பு.வி.மு. என கூட்டுக் கலவையில் அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளாக போய்விட்டனர். ஏதாவது ஒரு இடத்தில் மக்களை சந்தித்து கட்சியை கட்டிய வரலாறு இந்த ம.க.இ.க.வினருக்கு உண்டா? சர்வதேச அனாதைகள்போல், சி.பி.எம். வாலைத் தீண்டுவது மட்டுமே இவர்களது வர்க்க பார்வையாக ஆகி கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து அனாதையாக்கும் இவர்களிடம் வெடிப்பேச்சைத் தவிர, உருப்படியான நடவடிக்கை எதுவும் இதுவரையில்லை.

உங்களது ஆரோக்கியமான விவாதத்திற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

//ம.க.இ.க., பு.தொ.மு., பு.வி.மு. என கூட்டுக் கலவையில் அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளாக போய்விட்டனர். ஏதாவது ஒரு இடத்தில் மக்களை சந்தித்து கட்சியை கட்டிய வரலாறு இந்த ம.க.இ.க.வினருக்கு உண்டா?///

I believe that the size does'nt matter.. you claim CPM is so big party; then why it is impossible for your party is not revolutionary in its nature? Your own party supporter ira.Jawahar has written a book called "communism neetru indru naalai" were he has mentioned lot of things lagging with your party which made your party a revisionist party.. I guess no debate happened in that context.

I am not sure about ma.ka.i.ka... But istead of grabbing lumpished group in large numbers like CPM, Having handfull of activists is better.

//சர்வதேச அனாதைகள்போல், சி.பி.எம். வாலைத் தீண்டுவது மட்டுமே இவர்களது வர்க்க பார்வையாக ஆகி கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து அனாதையாக்கும் இவர்களிடம் வெடிப்பேச்சைத் தவிர, உருப்படியான நடவடிக்கை எதுவும் இதுவரையில்லை.//


I think you have not read about the protests of these 'gangs' like, Coke, for Nilgiri Tea Planters, Against sanskritising Nattar temples and recently against Reliance...

let us keep this apart.. debate is not about Ma.ka.i.ka.. it is on Nandhigram.

Can you please answer these basic questions?

1) Recently your Budhda, while Addressing a rally organised by CPI(M) student wing and youth front, had admitted that he had committed mistakes - WHAT ARE THOSE "MISTAKES"?


_________________________________

25 April, 2007
Countercurrents.org

[Kavita Krishnan from Liberation takes a look at facts about the Nandigram massacre and Communist Party of India (Marxist) -CPI(M)-sponsored fiction. Quotations from CPI(M) leaders are from Brinda Karat's 'Behind the Events at Nandigram' ( The Hindu, March 30, 2007), 'Some Issues on Nandigram' also by Brinda Karat, People's Democracy, Vol. XXXI, No. 13, April 01, 2007, 'Defeat the politics of Terror' (PD editorial of March 18), CPI(M) Politburo statement of March 14, 'Singur: Just the Facts Please', Brinda Karat, ( The Hindu, December 13, 2006)].

'Behind the events at Nandigram', says Brinda Karat, is no peasant resistance against corporate land grab. It's not 'bhumi ucched' (eviction from land) but 'CPI(M) ucched' (evict CPI(M)) that's up, she says. In a series of articles and statements by the CPI(M) top brass in media as well as the CPI(M) party organ PD, there is a concerted attempt to serve up CPI(M)'s version of Nandigram episode. Despite mandatory noises of 'regret' at the loss of lives in police firing, and a promise to 'introspect about mistakes, 'if any', the arguments being put forth are old, familiar ones. The firing it is said is regrettable, but it's the gang-up of Trinamool-Naxalites-Jamaat that really has to take the blame for the killings, because they attacked the police who were forced to fire to disperse the crowd. As a result, "in the crossfire that ensued, as always, innocent people became victims". It's the CPI(M) supporters who're the victims of a cleansing operation – contrary to the reports of all independent fact-finding teams. And 'foreign-funded', US-backed enemies of communists are spreading canards about large-scale participation of CPI(M) cadre in the March 14 operation, and about sexual assaults on women.

Let us examine the main arguments of Brinda Karat and Co., one by one.

"Once the CM Had Assured No Land Acquisition Without Consent, Why Was the Movement Called Off?"

Brinda Karat argues that there was no raison d'etre for the continuance of the resistance in Nandigram since January 9, since the CM had assured that there would be no land acquisition if the people of Nandigram did not wish it. She adds, "Indeed he is the only chief minister in the country who has made such a categorical statement that a condition for land acquisition must be farmer consent."

After such a principled declaration by Buddha, why indeed need the movement have continued?

Well, in the first place, let's ask what price CPI(M)'s 'facts' and 'assurances'? May we draw Brinda Karat's attention to an article titled 'Singur: Just the Facts Please' published in her name in The Hindu after the first bout of police-cadre violence in Singur. In that article she had asserted as 'fact' that "Of the 997 acres required, the Government has received consent letters from landowners for 952 acres." Similar declarations had also been made in an article by no less than the CPI(M) General Secretary in a PD editorial titled 'Singur: Myth and Reality'.

But an affidavit filed in response to an order of the Kolkata HC by the WB Government on March 27 records a different reality. In this affidavit, the Bengal government admitted that land was acquired in Singur under a section of the Land Acquisition Act 1894 that does not entertain disputes.

It further says that owners of just 287.5 acres accepted the 10 per cent bonus offered by the government for agreeing to not move the court. This translates to a little over 30 per cent of the total 997 acres acquired for the Tata small car plant and ancillary units.

It says compensation cheques have been collected for just 650 acres till date. And this compensation does not in any way imply consent, since it is being accepted as a last resort after the fait-accompli of acquisition. And even this figure amounts to around 67 per cent, which is still lower than the 96 per cent claimed by the CPI(M).

All too clearly the lack of consent presented no hurdle for the CPI(M) to go ahead and deliver the land into Tata hands. And neither Brinda nor Prakash Karat felt any qualms about peddling a deliberate falsehood about 'consent' subsequently disproved by the WB Government's own affidavit! Were the people of Nandigram wrong then, to continue with their visible and determined dissent that could not under any circumstances be construed as 'consent'? Had they not done so, would they have succeeded in preventing the SEZ from coming up on their lands?

We have repeatedly pointed out how the much-touted 'compensation package' at Singur inverts the principles of Operation Barga (which allotted 75% of the agricultural produce to the sharecropper and only 25% to the absentee landlord), giving just 25% compensation for sharecroppers. Neither Brinda Karat nor PD have ever bothered to explain the logic for this reversal.

However, Brinda Karat and Co. may be right that the motive behind March 14 may not be land grab – it was instead a cold-blooded act of retribution on the very people who had been staunch members of the CPI(M) till the other day. It was an act of collective punishment, in keeping with the promise Benoy Konar made in January: "We'll surround them and make their life hell." Tanika Sarkar, in her moving and disturbing narration of her visit to Nandigram after the carnage, recounts how villager after villager repeats the threats they receive: "Cross over and join the CPI(M) camp, or else we'll cut you to pieces".

But the victims of March 14 were left in no doubt of the nature of the 'crime' which had brought such punishment onto their heads. According to Tanika Sarkar, women who show the marks of sexual assault and beatings all over their bodies said that their attackers in police uniform (referred to interchangeably by the villagers as prashasan, cadre and police) accompanied the violence with abuse – "Saali, jomi debi na? Jomi rakhbi? " (Bitch, won't hand over your land? You'll keep your land will you?"

"Nandigram Struggle: Not Peaceful, not Democratic"


The CPI(M) PB statement states clearly: "It is regrettable that lives have been lost in police firing. But the organised elements who utilised bombs and pipe guns on the police have to take the blame." So the CPI(M)'s 'introspection' about 'mistakes' leads it to the same 'blame the outsider' conclusion! Brinda Karat and other party leaders have referred to the Nandigram struggle as an a bid to 'cleanse' Nandigram of CPI(M) supporters. It is claimed that 2500-3000 such supporters have been driven out, turned into refugees and subjected to terror. What about their human rights, she asks? She adds that "shockingly and sickeningly", reports by Left intellectuals have not referred to this crime against hapless CPI(M) people, who are also poor peasants just like the victims of police firing. Surely the police had a responsibility to curb the "lawlessness and anarchy", restore order and ensure these refugees could return?

No fact-finding report, even the one by Medha Patkar, has referred to the Nandigram struggle as a 'peaceful' one. The Nandigram mass was an organised and experienced Left mass, which had witnessed the Singur developments and learnt from them. In Singur, they had seen police and CPI(M) cadres employ terror and succeed in grabbing land. So at the very first sign of land grab (the HDA notification) they lost no time in ensuring that Singur could not be repeated. They quite openly cut roads to prevent police entry, chased out CPI(M) cadres who were terrorising the movement locally, and organised night-watch and crude arms to keep at bay the regular assaults and bombings from the CPI(M) camp in Khejuri.

The question to be asked is: do such tactics amount to "lawlessness and anarchy", or do they fall under the rubric of a democratic movement?

Eminent Leftist historians have vouched for the fact that the tactics used by the Nandigram peasants are all classic strategies used during the Tebhaga movement and the freedom struggle of which Nandigram was a major centre. History records that Nandigram and Tamluk subdivisions had formed the Tamralipta Jatiya Sarkar, or Tamralipta National Government in 1942, with people evicting the British from the area digging trenches to keep police out, and 'liberating' the area for months. If the movement of the peasants of Nandigram against forcible land acquisition is 'anarchy and lawlessness', so too must CPI(M) term the Quit India Movement, Tebhaga movement and the Telengana movement to be 'anarchy and lawlessness'!

CPI(M) has been fond of throwing out the accusation that Nandigram was being turned into a 'Liberated Zone' by the anti-SEZ protestors. Well, comrades, can you tell us what is an SEZ - if not a Liberated Zone where corporates are free to loot, levy taxes, enjoy massive subsidies, take over the functions of a municipality, and enjoy impunity from many laws of the land?! If people conduct a 'Quit India' struggle against such a Liberated Zone where they lose all their freedoms, how can any Communist, or any democratic individual, blame them?

Further, according to the values and standards of the Left, can there be any equivalence between the might of the State's repressive arm and the cadres of a privileged and dominant ruling party working in close co-ordination with the State machinery, and the 'violence' incurred in the course of the resistance of poor and desperate peasantry?

What of the people in the CPI(M) refugee camps? By all accounts, these camps continue to function as base camps for the CPI(M)'s war against the anti-land-grab forces. Villagers told Tanika Sarkar that the terror is far from over; every night there is a rain of bombs from the CPI(M) base at Khejuri. But it is true that the CPI(M) base, whatever remains of it, are in fact poor peasants too. Brinda Karat asks, "Who gains from this division of the poor, from their feelings of insecurity, loss of livelihood?" Well, comrade, isn't the answer staring in our faces? The corporates stand to gain land, and the CPI(M), their lost dominance, by pitting one section of the poor against another.

"Nandigram's Poor: Innocent Villagers 'Instigated' by Anti-CPI(M) Gang-up through False Fears of Land Grab"

We would like to remind Brinda Karat that on March 14, and before too, she and other leaders had claimed that "outsiders" were responsible for the violence, while Nandigram's own people were all for the SEZ and for the CPI(M). Yechury even on March 14, had declared in a press conference that "Outsiders, frustrated by the lack of support from local peasantry in their bid to whip up false fear of land grab, had attacked the police, necessitating firing."

Subsequently, however, the CPI(M) has had to admit that CPI(M) supporters had in fact deserted the party and joined the struggle fearing land grab.

Brinda Karat will have to answer: is it really credible that this mass of people, who had voted CPI(M) or CPI to power in election after election, had more faith in discredited Mamata and the organisationally weak Naxalites who had no local base, rather than in the assurances of their own MP, MLA, and local CPI(M) leaders? How come they turned against their own party and chased them out, on the 'instigation' of those whom they had never before given the time of day? Does the CPI(M) version sound remotely plausible - that this CPI(M) stronghold was tamely led astray and agreed to view the CPI(M) as an enemy, on some false and baseless fears whipped up by a tremendously weak Opposition?

The answer is self-evident: they were forced to lose faith in the CPI(M) because its cadres and leaders, instead of asking their opinion and respecting it, had declared the decision to ride rough-shod over their refusal to give up land. Overnight, CPI(M) forces had turned into a menacing and organized army, agents of corporates who threatened them to give up land or face eviction by force. "Consent…or else" was the message – but the Left training of the mass kicked in, and they chose the tools of resistance that generations of struggle had taught them.

"False Claims of Sexual Violence; Police Fired Due to Provocation "

In other words, was March 14 a mistake or a massacre?

Brinda Karat has taken issue with several fact-finding reports including that of the CPI(ML) team; and has advised that concocting tales of sexual assault will harm the credibility of the women's movement demand that women's own statements be accepted as evidence in the absence of any other evidence.

Brinda Karat must be asked a question in return. She is a Rajya Sabha MP, and has been the leader of a highly respected women's organisation.

The CPI(ML) report relies very little on hearsay – and more on the clear evidence of those who lay injured in hospitals, whose injuries have been recorded medically, and who can definitely be taken to have been on the spot on March 14. In that report, it is mentioned that one woman in Tamluk Hospital who has indeed filed a complaint of rape, has one breast lacerated with a sharp weapon. In SSKM Hospital, too, there is yet another woman whose buttocks are hanging, having been nearly severed by a chopper.

Why does Brinda Karat remain silent on these injuries – clear evidence that the attack on March 14 was not merely somewhat excessive 'firing' by a provoked police? Why has she not bothered to go and see for herself if these reports of chopper injuries on private parts of women is indeed true or not, and whether these women could be helped to file complaints and pursue the case?

Again, the clear medical evidence recorded by a large team of doctors from Kolkata is that 70% to 80% of the patients in four camps they set up two weeks after the massacre, have had serious eye problems since March 14 – caused by some substance in the tear gas. Eye irritation caused by ordinary tear gas does not last so long – and certainly cannot cause loss of eyesight. Whereas several people in Nandigram have lost much of their vision due to exposure to the tear gas. Again, this is something Brinda Karat is silent on, and certainly has not bothered to go herself and verify.

If there is any iota of truth in the CPI(M) accusations that their supporter was raped – it is highly condemnable, abhorrent and indefensible, and must be punished. But it cannot be used as a reason to deny the clear evidence of a planned state-sponsored carnage on March 14, or of large-scale sexual violence on women of the anti-land grab movement.

Brinda Karat expresses pious outrage at the 'cynical' way in which women and children were placed in the front row. Did these women suffer chopper injuries on breast and buttocks because they happened to be in placed in the front row, comrade? How come Comrade Brinda never says a word of condemnation for the fact that the police were not deterred by the presence of women and children, and police and her party's cadre indulged in sexual assaults accompanied by abuse?

Were children torn apart and killed? Describing one woman who lies in hospital, crying inconsolably because she says a child was torn from her arms and killed before her eyes, Tanika Sarkar said "One can only hope that such heart-rending accounts of children being beaten to death, drowned or chopped up are some sort of collective hallucination, and the children are actually safe. But one fears these accounts are true."

The statement by pro-CPI(M) intellectuals had said the West Bengal Government would pay compensation to those affected by the Nandigram attacks. One wonders how come not a single one of Brinda's articles on Nandigram mentions a word about compensation for those who've lost their loved ones, their eyesight, their organs? These are agrarian labourers and marginal farmers, how can they afford blindness; how are their families surviving while earning men and women are forced to do long hospital stints?

On the evidence of the use of a huge number of bullets not usually used by police, of firing above waist level (to kill rather than to rather than to disperse), of the arrests of ten CPI(M) men in a brick kiln with police uniforms and a stockpile of ammunition – both Brinda Karat and PD offer no explanation except to promise that a proper probe, preferably by the judiciary rather than by CBI, will reveal the truth. Meanwhile, inexplicably, the CBI findings have been suppressed and the hearing on it delayed by the High Court.

"Those who oppose SEZs and support the struggles of Singur and Nandigram are 'anti-industry'"

A whole section of Left economists and intellectuals who have been very close to the CPI(M) have raised serious questions about the WB Government's commitment to industrialisation and employment generation.

Would Brinda and the PD care to answer or explain:

They speak of 'facts', why are they silent on the details of the Tata deal at Singur – details that the WB Government tried to suppress as a 'trade secret' until forced to reveal them in court?

Has Brinda Karat happened to read an article in ('Santa Claus Visit the Tatas', Telegraph, 30 March 2007 ) by Ashok Mitra, former Finance Minister of West Bengal in CPI(M)'s own LF Government? We quote from the article:

"…The Tatas are, of course, rolling in money. Only a couple of months ago, they invested a sum roughly the equivalent of Rs 50,000 crore to take command of a giant international steel complex. To persuade this fabulously rich group to start a modest-sized car factory here, the state government has already spent something around Rs 150 crore to acquire close to 1,000 acres of land. …the Tatas have been handed over this entire tract of land on a ninety-year lease without any down payment at all. ... the government is, really and truly, making a free gift to the Tatas of the land in Singur.

…The state government is, in addition, offering the Tata group a gift coupon in the way of a loan worth Rs 200 crore carrying a nominal interest of only 1 per cent (as against the rate currently charged by the banks of at least 10 per cent); …the entire proceeds for the first ten years of the value-added tax on the sale of this precious car in West Bengal are proposed to be handed back to the Tatas, again at a nominal interest of only 1 per cent. …

All told, therefore, the Tatas are being offered the allure of around Rs 850 crore by the state government…"

Finally, Mitra asks: "Does it not appear obscene that a state government, carrying a burden of debt of more than Rs 150,000 crore and with a countless number of problems, would offer a freebie of Rs 850 crore to an industrial group which has made an outlay of over Rs 50,000 crore only the other day to satisfy their expansionary ego overseas?"

Does Brinda Karat or the PD have an answer? Has Ashok Mitra also turned 'anti-industry' according to them?

We also quote from an article by Prof. Tanika Sarkar in Hardnews:

"…industries (in West Bengal ) were allowed to die away, leaving about 50, 000 dead factories and the virtual collapse of the jute industry. …While factories remained closed, half the annual funds under the NREGA (Rural Employment Guarantee scheme) were sent back untouched. We may say that the history (of the LF Government) shows no concern for promoting real industrialisation, or for public concerns, nor for employment generation. What flourished with tender government nurture had been upper middle class luxuries and corporate profits…"

Prof. Tanika's article goes on to say how in the mid-90s, huge tracts of highly cultivated land were taken over by the Jyoti Basu Government at New Rajarhat near Kolkata. No industry was set up on this land – instead what came up were 'Vedic Villages' for the super rich, set up by corporate groups. Various observers report that in these complexes, each house boasts of a swimming pool, and there are massive water sports complexes!

Why was this land from not used for productive industry? Why were the poor evicted from fertile land in vain? Wouldn't a fraction of the Tata freebie of 850 crores have been enough free locked industrial land for fresh industries?

"US Anti-Communist Conspiracy and Maoist Plot"

Finally, Brinda Karat tries to make for the lack of answers to glaring questions, by falling back on the good old standby of alleging sinister conspiracies and a 'foreign' hand. She claims that the "sea route through the Bay of Bengal is being used by the Maoists to come into Nandigram". Once they land, will they use the Imperius Curse to hex the CPI(M)'s supporters into turning into Naxalites, comrade? Better allow fantasy to remain in the pages of Harry Potter rather than insulting people's intelligence with tall tales!

Brinda Karat also alleges a US conspiracy angle, saying a US official met with "a leader of the minority community". This may sound like stuff and nonsense, but the attempt to demonise the minority community by suggesting it is 'anti-national' is dangerous.


And if meeting a US official makes one anti-communist and anti-CPI(M), what do we make of Buddhadeb Bhattacharya? On March 7 Buddha was praised by no less than the US Consul General in Kolkata, Henry V. Jardine, for embracing the doctrine that capital has no colour. And is it coincidence that on April 14, exactly a month after the Nandigram massacre, the Bush administration has invited Buddha to pay an official visit to the US? Issuing the public invitation, United States Trade Representative Susan Schwab said "We would like to hear about the political and development aspects of his success". Surely Bush is not interested in CPI(M)'s success in revolutionary struggles and expanding communism – it's Buddha's success in wooing capital and putting down protest that he wants to hear about!
______________________________

//உங்களது ஆரோக்கியமான விவாதத்திற்கு வாழ்த்துக்கள். //

Thanks :)

Sorry for my previous statement on your intention...

சந்திப்பு said...

115 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் ஒரு புரட்சிகர கம்யூனி°ட் கட்சிக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 10 கோடி மக்களையாவது அணிதிரட்டவில்லையென்றால், அது எப்படி புரட்சிகர கட்சியாக இருக்க முடியும்? இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள மொத்த இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் கூட 20 லட்சத்தை தாண்டாது. இந்தியாவில் இடதுசாரி கருத்துக்களும், கம்யூனிச கருத்துக்களும் பெரும்பகுதி மக்களை சென்றடையாத நிலையே இன்றைக்கும் இந்தியாவில் நிலவுகிறது. ஏன் ஜனநாயக ரீதியான சிந்தனை வளர்ச்சிகூட இன்னும் இந்திய மக்களுக்கு போய்ச் சேரவில்லை என்பதுதானே உண்மை.
சி.பி.எம்.- ஐ பொறுத்தவரை இந்தியாவில் புரட்சியின் இரண்டாவது கட்டமான மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதுதான் அதன் இலட்சியம். அதற்கான அரசியல் பணிகளைத்தான் நடைமுறையில் நிகழ்த்தி வருகின்றது. நிலப்பிரபுத்து எதிர்ப்பு - ஏகாதிபத்திய எதிர்ப்பு - பெரு முதலாளித்துவ எதிர்ப்பு, அனைத்துவிதமான ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், ஜனநாயக தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் என பல்முனைகளில் பாராளுமன்றத்திற்குள்ளும், மக்கள் மன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தி வருவதோடு, இந்தியாவை சூழ்ந்துள்ள பாசிச அபாயத்திற்கு எதிராக விரிந்த ஐக்கிய முன்னணி தந்திரத்தை கையாண்டு பா.ஜ.க.வை அரசியல் அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. ஒரு புரட்சிகர கம்யூனி°ட் கட்சி ஆற்றவேண்டிய கடமைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வேலையைத்தான் சி.பி.எம். செய்து வருகிறது. அதே சமயம் அதிதீவிரவாத குழுக்களில் உள்ளவர்கள் நாளும் ஆயுதப் புரட்சி என்ற பெயரால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளனர். இவர்கள் வகுப்புவாதத்திற்கு எதிராக எந்த பகுதி மக்களையும் திரட்டவில்லை. மேலும் தொழிற்சங்க பணிகளில் இந்த குழுவினருக்கு இடமேயில்லை. ஆனால், சி.பி.எம். ஐ பொறுத்தவரை மாணவர் முதல் தொழிலாளர் வரை அனைத்து பகுதி மக்களிடையேயும் வெகுஜனங்களிடையே பணியாற்றுகிறது. லெனின் கூறுகிறார், ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றால், அம்மக்களுக்கு புரட்சிகர சிந்தனையை வளர்ப்பதற்கு புரட்சிகர பொறுமை தேவையென்று, அதே சமயம் ஆயுதத்தை எடுக்க கூடாது, ஆயுதத்தை எடுத்து விட்டால் கீழே வைக்கக் கூடாது. இவர்களது செயல்கள் லெனின் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் கத்துக்குட்டித்தனமே!
அடுத்து, இரா. ஜவஹர் சி.பி.எம். ஆதரவாளர் இல்லை. அவர் சி.பி.ஐ. உறுப்பினர். பரவாயில்லை. அவருடைய கருத்துப்படி எந்த ஒரு கம்யூனி°ட் கட்சியிலும் ஏற்றத் தாழ்வுகளும், நடைமுறை தவறுகளும் ஏற்படும். அது அவ்வப்போது ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில் மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு திருத்திக் கொள்ளப்படுவதுதான் கம்யூனிச வழக்கம். இது லெனின் காலம் தொட்டு வரும் நடைமுறை. நக்சலிச குழுக்களில் மூன்று பேர் கூடினாலே கருத்து வேறுபாடல் இரண்டு பேர் பிரிந்துப்போய் இன்னொரு குழுவைத் துவக்கி விடுவார்கள். அவர்களுக்கு இதுவரை கட்சி திட்டம் என ஒன்று இல்லவே இல்லை. அவர்களது செயல்பாடு வெறும் தன்னுனர்வின் அடிப்படையிலான செயல்பாடே.
ஆம் நீங்கள் சொல்லியிருக்கிறபடி ம.க.இ.க.வின் நடத்திய போராட்டத்தை நான் மறுக்கவில்லை. நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இத்தகைய போராட்டத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை, அதே சமயம் மூன்று மாதத்திற்கு அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்துவதுதான் இவர்கள்பாணி. இதற்காக மாநிலம் முழுவதும் பெரும் பிரச்சாரத்தில் ஆறு மாதமாக ஈடுபடுவார்கள். மேலும் ம.க.இ.க. என்பது ஒரு கலை இலக்கிய அமைப்புதான். இவர்களது கட்சியின் முகம் எங்கே? எங்கே? என்ற கேள்விக்கு இதுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை. இவர்களது கட்சியின் செயல்பாடு மக்கள் மத்தியில் என்ன? மக்களுக்கும் இவர்களது கட்சிக்கும் என்ன தொடர்பு? இந்த குழுக்களின் போராட்டம் கூட இவர்களிடம் இருக்கும் சில நூறு பேரை தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் நடத்தப்படுகிறது. இல்லையென்றால் பத்திரிகையிலேயே புரட்சியை நடத்துவார்கள் இந்த வாய்வீச்சுக்காரர்கள்.
தொடரட்டும் விவாதம்...