December 28, 2005

ஆர்எஸ்எஸ்-சின் அஜால் குஜால் புனிதம்

மும்பையில் பாஜக வெள்ளி விழா மாநாடு நடத்தி வரும் நிலையில், அக் கட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்சின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ஜோஷி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜோஷி. குஜராத்தைச் சேர்ந்த இவரை ஆர்எஸ்எஸ், பாஜகவின் பொதுச் செயலாளராக நியமித்தது. வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜக அரசு, ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை நிறைவேற்றுவதை சஞ்சய் ஜோஷி உறுதி செய்து வந்தார். வாஜ்பாய் அரசின் கடைசி ஓராண்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகள் ஜோஷியால் எடுக்கப்பட்டவையே.

சில மாதங்களுக்கு முன் சஞ்சய் ஜோஷியுடன் தனக்கு நெருக்கமான உறவு உள்ளது என்று கூறி ஒரு மராட்டியப் பெண், பத்திரிகை அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இந் நிலையில் இப்போது பாஜகவின் வெள்ளி விழா மாநாடு மும்பையில் நடந்து வரும் நிலையில் அந்தப் பெண்ணுடன் சஞ்சய் ஜோஷி கொஞ்சிக் குலாவும் ஒலி அடங்கிய ஆடியோ கேசட் வெளியானது.

ஆனால், அது போலியான கேசட் என்று பாஜக தலைவர்கள் கூறினர். இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே பெண்ணுடன் ஜோஷி உல்லாசமாக குஜால் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சிடி வெளியானது. இதையடுத்து பாஜக மாநாட்டில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கட்சியில் ஆர்எஸ்எஸ்சின் தலையீட்டை விரும்பாத சில பாஜகவினர் தான் இந்த சிடியை வெளியில் விட்டதாகக் கூறபபடுகிறது.

ஆர்எஸ்எஸ்சின் நெருக்குதலால் இந்த மாநாட்டின் இறுதியில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அத்வான் விலகப் போகிறார். மேலும் அவரை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுமாறு ஆர்எஸ்எஸ் நெருக்கி வருகிறது. அதை அத்வானி ஏற்க மறுத்து வருகிறார்.

இப்படியாக பெரும் கோஷ்டி கலாட்டாவுடன் நடந்து வரும் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் நெருக்கடி தரும் வகையில் ஜோஷியில் குஜால் சிடி வெளியாகியுள்ளது. இதை பாஜகவைச் சேர்ந்த சிலரே வெளியிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

இந்த சிடி வெளியான விவகாரத்தில் உமா பாரதியின் கைவரிசை இருக்கலாம் என பாஜக தலைவர்கள் நறநறக்கின்றனர். தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்காமல் போனதிலும், தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டதிலும் ஜேட்லிமகாஜன்நாயுடுவோடு சேர்ந்து சதி செய்த முக்கியஸ்தர் சஞ்சய் ஜோஷி தான் என உமா நினைக்கிறார்.

மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் ஜோஷி அநாவசியமாகத் தலையிடுவதாகவும் உமா ஒரு முறை குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டை ஒட்டி இந்த அஜால் குஜால் சிடியை உமா பாரதி தரப்பினர் தான் லீக் செய்திருக்க வேண்டும் என அக் கட்சியினர் கருதுகின்றனர்.

சஞ்சயி ஜோஷி மீது பெண் புகார் எழுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, இவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு நிரோத்துடன் (காண்டம்) ஒரு பெண் எழுத்தாளர் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். ஏழையான தனக்கு உதவுவதாகக் கூறி ஜோஷி கற்பழித்துவிட்டதாக அந்த எழுத்தாளர் புகார் கூறியிருந்தார்.

ஆனால், அனுப்பியவரின் பெயர், விவரம் இல்லாததால் அதை மகளிர் ஆணையம் புகாராக பதிவு செய்யவில்லை. இப்போது நிமிர்ந்து உட்கார்ந்துள்ள தேசிய மகளிர் ஆணையம் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக இருப்பது காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஜா வியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் தனது முழு விவரத்துடன் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பினால் போதும், நான் நடவடிக்கையில் இறங்குவேன் கிரிஜா கூறியுள்ளார். இதனால் இந்த பெண் விவகாரம் பாஜக, ஆர்எஸ்எஸ்சை அவ்வளவு லேசில் விடாது என்பது மட்டும் உறுதி.

முதலில் ஜோஷிக்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வெங்கையா நாயுடு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முழக்கம் கொடுத்த நிலையில், வெளியான வீடியோ காட்சி பாஜகஆர்எஸ்எஸ் தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஜோஷி ரொம்ப நல்லவரு என்று நாயுடு பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே, ஜோஷியை பதவியை விட்டு விலகுமாறு ஆர்எஸ்எஸ் கூறிவிட்டது.

இதையடுத்து அவர் தனது பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தனது தவறை அவர் ஒப்புக் கொண்டது போல் ஆகியுள்ளது. மேலும் ஜோஷியை பாஜகவில் இருந்தும் ஆர்எஸ்எஸ் திரும்ப அழைத்து கொண்டுவிட்டது. சிடி வினியோகிக்கப்பட்டதை அடுத்து மாநாட்டு பந்தலுக்கு வராத ஜோஷி அங்கிருந்து எஸ்கேப் ஆகி நாக்பூர் சென்றுவிட்டார்.
நன்றி தட்ஸ் தமிழ் :

12 comments:

முத்து(தமிழினி) said...

மேற்படி நபர் ஒரு பெண்ணுடன் அஜால் குஜால் பண்ணுவது ஏன் பெரிய குற்றமாக சொல்லப்படுகிறது?

அவர் முழுநேர பிரசாரகர்...பிரம்மச்சாரி...அதனால் அவர் அஜால் குஜால் பண்ணும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதா என்ன?

மணியன் said...

பாஜக கல்லறைக்கு இன்னொரு செங்கல் எழுப்பபட்டுள்ளது.
அவர்கள் கடமை ஊழல்களில் சந்தி சிரித்தது. கட்டுப்பாடு உமா, ஜோஷி விவகாரங்களில் சந்தி சிரித்தது. இப்போது கண்ணியம் சந்தி சிரிக்கிறது.

Doondu said...
This comment has been removed by a blog administrator.
சந்திப்பு said...

அஜால், குஜால் RSS தன்னை கலாச்சார அமைப்பு என்று அறிவித்துக் கொள்கிறது. அத்துடன் RSS-இல் பெண்களை உறுப்பினராக சேர்ப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் பெண்களுக்கு எத்தகைய மதிப்பை கொடுக்கிறார்கள் என்பது புரியும். மேலும், நாம், நம்முடைய தேசத்தை `தாய் நாடு` என்றுதான் அழைப்போம். ஆனால் RSS புனிதர்களோ `பித்ரூ பூமி` (தந்தை பூமி) என்றுதான் அழைப்பார்கள். இதிலிருந்தே இவர்களது ஆணாதிக்க - நரகல் சிந்தனையை அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை சஞ்சய் ஜோஷி போன்ற (RSS பிரம்மச்சாரிகள்) பெண்களை தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ளும் வேட்டை பொருளாக கருதுகிறார்களோ? அவர்கள்தான் பதில் கூற வேண்டும். நேர்மையாக!

நண்பர் டோண்டு சஞ்சய் ஜோசியின் செயலை நியாயப்படுத்துகிறாரா? அல்லது இதுதான் இந்துத்துவா? என்று பிரகடனப்படுத்துகிறரா? எதிர் கருத்தை கருத்தால் மோத முடியாதவர்கள்தான் பாசிஸ்ட்டுகள் என்று கூறப்படுகிறது. டோண்டுவின் செயல் எத்தகையது என்பதை அவர்தான் பின்னூட்டமிடவேண்டும்.

பின்னூட்டமிட்ட முத்து, மணியனுக்கு நன்றி! முத்து எழுப்பியுள்ள கேள்வி நியாயமானதே! ஒருவேளை பிரம்மச்சாரிகள் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், நீங்கள் பெண்களை சுகபோகிகளாக அனுபவிக்கலாம் என்று எழுதப்படாத தீர்மானம் போட்டிருக்கிறதோ?

RSS நண்பர் டோண்டுதான் பதில் கூற வேண்டும்.

மணியன் ஊழல், கட்டுப்பாடு, கண்ணியம் குறித்து மிகச் சரியாக கேள்வி எழுப்பியுள்ளார்? தங்கள் கருத்து பா.ஜ.க.வின் வேர்கள் அழுகிக் கொண்டு வருவதைத்தான் காட்டுகிறது. வெள்ளி விழாவெல்லாம் - பா.ஜ.க.விற்கு கொள்ளி விழாவாக போகாமல் அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முத்து(தமிழினி) said...

i think that is fake dondu...delete that.

முத்து(தமிழினி) said...

//அத்துடன் RSS-இல் பெண்களை உறுப்பினராக சேர்ப்பதில்லை.//

அப்படியா..

//ஆனால் RSS புனிதர்களோ `பித்ரூ பூமி` (தந்தை பூமி) என்றுதான் அழைப்பார்கள்//

அப்படியா (தாய் பூமி வேற எங்கியாவது இருக்கோ என்னமோ)

ஆனால் மற்றபடி ஒருவரின் அஜால் குஜால் அவரின் தனிப்பட்ட விருப்பம்.
அதையெல்லாம் தவறு என்று கூறுவது தான் தவறு.

சந்திப்பு said...

அஜால், குஜால் வேலைகள் ஒருவரது அந்தரங்கம் என்பதை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், பொதுவாழ்வில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற அஜால், குஜாலில் இறங்கினால், அவரை பின்பற்றுபவர்களும் இதேபோல் இறங்கினால் என்னவாகும்? அதுவும் இவர்கள் சன்னியாசிகள் (பிரம்மச்சாரிகள்!) பாரத கலாச்சாரத்தின் காவலர்கள் என்று டமாரமடிக்கும் இவர்களே அஜால், குஜாலில் இறங்கினால்! இதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முத்துகுமரன் said...

//வெள்ளி விழாவெல்லாம் - பா.ஜ.க.விற்கு கொள்ளி விழாவாக போகாமல் அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். //

மாற்று கருத்து இல்லை சந்திப்பு.

ரிசிகளானாலும் அவர்களின் காமத்தை அனுமதித்துதான் இருக்கிறது. நம் வரலாற்று நாயகர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை ஜோசி பயன்படுத்துவது என்ன தப்பு?

இன்னைக்கு ரிஷிகளாக இருக்க அதுதான் அடிப்படை Qualification ன்னு தெரியாதா உங்களுக்கு:-)

சந்திப்பு said...

மன்னிக்கவும் முத்துக்குமரன் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறந்து விட்டேன்.

குழலி / Kuzhali said...

//இன்னைக்கு ரிஷிகளாக இருக்க அதுதான் அடிப்படை Qualification ன்னு தெரியாதா உங்களுக்கு:-)
//
ஹி ஹி...

Aarokkiyam உள்ளவன் said...

***வரலாற்று நாயகர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை ****

உரிமை!!!

ஐயகோ!!

கொடுமையடா!

Anonymous said...

eneviarne [url=http://wiki.openqa.org/display/~buy-flomax-without-no-prescription-online]Buy Flomax without no prescription online[/url] [url=http://wiki.openqa.org/display/~buy-zithromax-without-no-prescription-online]Buy Zithromax without no prescription online[/url]