மனிதகுலம் எத்தனையோ மாமனிதர்களை பெற்றிருக்கிறது. எத்தனையோ அர்ப்பணிப்புகளை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாமனிதர்களுக்கெல்லாம் மாமனிதராக மார்க்ஸ் ஒருவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் சராசரி வாழ்நாளிற்குள் சாதிக்க முடியாத வியத்தகு சாதனையை படைத்ததில் மார்க்ஸை தவிர விஞ்சி நிற்பவர் எவரும் இருக்க முடியாது. மாணவ பருவம் தொடங்கி இறுதி மூச்சின் 2 நிமிடம் முன்வரை தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னலமற்று போராடிக் கொண்டிருந்த மனிதரை சரித்திரம் இனி காண முடியுமா? என்பது சந்தேகமே. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளான மார்க்ஸ், இவற்றை சந்திக்கும் ஆற்றலும், மனதிடமும் எங்கிருந்து கிடைத்தது என்பதை புரிந்து கொள்ள அவர் சொல்லியதைத்தான் சொல்ல வேண்டும். “மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்.” இந்த மகத்தான பணியில் மார்க்சுடன் எங்கெல்ஸ் தம்மை இணைத்து கொண்டார்.
1844ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் எங்கெல்ஸ் பாரிசில் வசித்து வந்த காரல் மார்க்ஸை சந்தித்தார். அங்கு அவர்கள் ஒன்றாக கழித்த பத்து நாட்கள் மார்க்ஸையும், எங்கெல்ஸையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைத்த வரலாறு காணாத ஐக்கியத்திற்கும் புரட்சி தத்துவத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு ஆயுதமாக வழங்கிய இந்த மாபெரும் அறிவு கடல்கள் இரண் டின் இணைப்பிற்கும், நட்பிற்கும் தொடக்கமாக அமைந்தன. “இரண்டு போராட்ட வீரர்கள் அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளை யெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என சொல்லிக் கொள்ளலாம்” என்றார் வி.இ.லெனின்.
கம்யூனிஸ்ட் அறிக்கை1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை லண்டனில் வெளியாயிற்று.
விஞ்ஞான கம்யூ னிஸத்தின் முதல் வேலைத் திட்ட ஆவணமாக இது தான் தற்போது சோசலிச இலக்கியம் அனைத் திலும்... மிகவும் அதிகமாய் பரவி மிகப் பெரும் அள வுக்கு சர்வ தேசிய தன்மை கொண்ட படைப்பாகும்.”இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும் ஒளிச்சிறப்புடனும் ஒரு புதிய உலக கண்ணோட் டத்தை விவரிக்கிறது. சமுதாய வாழ்வு துறையை யும் கூட அணைத்து நிற்கும் முரணற்ற பொருள் முதல்வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமை யான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க் கப் போராட்டத்தை பற்றியும் புதிய கம்யூனிஸ சமு தாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட் டாளி வர்க்கத்தின் உலக - வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த புரட்சிகரமான பாத்திரத்தை பற்றி யும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலக கண்ணோட்டத்தில் அடங்கியவை” என்று லெனின் எழுதினார்.
உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பது வளர்ந்து வரும் உற்பத்திச் சக்திகளுக்கு கைவிலங்கு பூட்டுகிறது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு - உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்தியின் பயன்களை தனியு டமை முறையில் தன்னுடையதாக்கிக் கொள்வதற் கும் இடையிலான முரண்பாடு மேலும் மேலும் கூர்மையடைந்து வருகிறது. முதலாளி வர்க்கம் “தனக்குச் சவக் குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாக உற்பத்தி செய்கிறது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும் அதே போல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவொண்ணா தவை” என்று அறிக்கையில் கூறப்பட்டது.
பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தவும் வாகை சூடவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரம் ஒரு முன் நிபந்தனை ஆகும் என்பது அறிக்கையில் வகுக்கப்பட்டுள்ளது.
தத்துவத்திற்கு மார்க்சின் பெயர்மார்க்சின் பங்கு பாத்திரத்தை பற்றி குறிப்பிடு கையில் எங்கெல்ஸ் “ நான் ஆற்றிய பணியை, ஒருவேளை இரண்டு மூன்று தனித் துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக, நான் இல்லாம லேயே எளிதாக செய்திருப்பார். ஆனால், மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்கமாட்டேன். எங் கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார். வெகு தொலைவிற்கு பார்த்தார். மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதை, நாங்கள் எல்லோரும் - அதிக பட்சமாக சொன்னால் - திறமைசாலிகளே. அவரில்லாமல் இந்த தத்துவம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.
எனவே அவருடைய பெயரை தாங்கி நிற்பது சரியே.”தன்னலமற்ற போரில் சந்தித்த துயரங்கள்முதலாளித்துவ சமுதாயம் பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கு மிகச் சாதாரணமான தேவை கள் கூட கிட்டாமல் செய்து அவர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை தத்துவ மற்றும் அரசியல் பணியை மேற்கொள்வ தற்கான சகலவித வாய்ப்புகளையும் மார்க்சிற்கு மறுத்து அவரது மேதாவிலாசத்தை மழுங்கடிக்கப்ப தோடன்றி வறுமைச் சுமையின் கீழ் அவரையும் அவரது குடும்பத்தையும் சாகடித்திருக்கும்.அப்போது நிலவிய சூழ்நிலைகளில் தனது நண்பருக்கு உதவுவதற்காக எங்கெல்சுக்கு கிட்டிய ஒரே வழி “கேடுகெட்ட வர்த்தக தொழிலுக்கு திரும்பி போவதுதான்.
முறையீடின்றி முணுமுணுப் பில்லாமல் ஆராவாரம் செய்யாமல் எங்கெல்ஸ் இதனை மேற்கொண்டார். லெனின் எழுதியபடி “எங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டிருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல அவர் வறுமையில் மடிந்திருப்பார்”.ஏழ்மை ஒருவருக்குப் பின் ஒருவராக மார்க் ஸின் குடும்பத்தினரை பலி கொண்டது. கிவிதோ, பிரான்சிஸ்கா எனும் இரு குழந்தைகள் மாண்டு போனதையடுத்து குடும்பம் முழுவதும் அன்பு பாராட்டி வந்த வியக்கத்தக்க சிறுவனான மகன் முஷின் (குருவி) மறைவு மார்க்சுக்கு பேரிழப்பாய் இருந்தது. சிறுவனை அடக்கம் செய்துவிட்டு எங்கெல்சுக்கு மார்க்ஸ் எழுதினார்.
“துன்பங்கள் பலவற்றை நான் ஏற்கெனவே அனுபவித்திருக்கி றேன்; ஆனால் உண்மையான துக்கம் என்பது என்னவென்று நான் இப்போதுதான் உணர் கிறேன்.”“இந்த நாட்களில் நான் அனுபவித்த பயங்க ரமான சித்ரவதைகளின் இடையில் உன்னை பற்றிய சிந்தனையும் உன்னுடைய நட்பை பற்றிய சிந் தனையும் நாமிருவரும் இப்பூமியில் உருப்படியாக செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையும்தான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்தன.”மூலதனம்1867 ஆகஸ்டு 16ல் மூலதனத்தின் கடைசி அச்சு பிரதியை திருத்திவிட்டு முன்னுரையும் எழுதி எங்கெல்ஸ்க்கு அனுப்பினார் மார்க்ஸ். அப்போது எங்கெல்சை குறிப்பிட்டு “ஒருவாறாக இந்த தொகுதி முடிந்துவிட்டது. இந்த பணி முடிந் ததில் நான் உனக்குத் தான் கடமைப்பட்டிருக் கிறேன்.
உன்னுடைய சுய தியாகம் மட்டும் இல் லாமல் போயிருந்தால் என்னதான் முயன்றிருந் தாலும் மூன்று தொகுதிகளுக்கான இந்த பிரம் மாண்டமான பணியை நான் நிறைவேற்றியே இருக்க முடியாது. நிறைந்த நன்றியுணர்வுடன் உன்னை நான் அணைத்துக் கொள்கிறேன்.”மார்க்சினுடைய பொருளாதார போதனை முழு மையுற்று மூலச்சிறப்பு எய்துவதற்கு மார்க்ஸ் இருபத் தைந்து ஆண்டுகள் கடுமையான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மார்க்சினுடைய மகத்தான கண்டுபிடிப்பு உபரி மதிப்பு பற்றிய போதனையாகும். முதலாளித்துவ சுரண்டலின் இரகசியத்தை உபரி மதிப்பு பற்றிய மார்க்சின் போதனை அம்பலப்படுத்தி முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடை யில் நிலவும் பகைமையின் பொருளாதார அஸ்தி வாரத்தை கண்ணுக்கு முன் கொண்டு வந்து காட்டியது.
மார்க்சினுடைய மறைவுக்கு பின்பு மூல தனத்தின் இரண்டாம் தொகுதியின் கையெழுத்து பிரதியை பிரசுரிப்பதுதான் எங்கெல்சிற்கு முதலில் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது.மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் தொகுதி யின் வெளியீட்டுக்காக எங்கெல்ஸ் ஆற்றிய பிரம் மாண்டமான சிக்கல் நிறைந்த பணி குறித்து லெனின், “மூலதனத்தின் இவ்விரண்டு தொகுதி களும் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரின் உழைப்பு மாகும்.” என்று எழுதினார்.
மார்க்சை பற்றி எங்கெல்ஸ் பெக்கருக்கு எழுதிய கடிதத்தில் “இன்னும் வேகமாய் புயல் வீசும் காலங் கள் வரும் போதுதான் மார்க்சின் மறைவு நமக்கு எத்தகைய இழப்பு என்பதை உணருவோம்” என்று எழுதினார்.
ஒவ்வொருவரும் மார்க்சின் பொருள் பொதிந்த வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அவர் மனித குல விடுதலைக்கு காட்டிய பாதையின் வழியில் வரலாற்று காலச் சக்கரத்தை முன்னோக்கி சுழற்று வதே நமக்குமுன் உள்ள புரட்சிகர வர்க்க கடமை.
ஆதாரம் : எ.ஸ்தெபானவா எழுதிய பிரடெரிக் எங் கெல்ஸ் என்ற நூல் கட்டுரையாளர் : கே.பாலச்சந்தர் - தமுஎச தென்சென்னை மாவட்டத் தலைவர்
Thannks:www.theekkathir.in
No comments:
Post a Comment