May 05, 2007

சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்!


சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்! இந்த தலைப்பை பார்த்ததும் பலருக்கு கடும் கோபம் பொத்துக் கொண்டு வரும். வேண்டுமென்றே திட்டமிட்டு பெரியாரையும், பெரியாரிய இயக்கத்தை தாக்கும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது என்ற ஆத்திரம் வெளிப்படும். மேற்கண்ட தலைப்பும் - கீழே உள்ள கருத்தும் என்னுடையதல்ல; 1932-இல் சாட்சாத் தந்தை பெரியாரால் ‘சுயமரியாதை-சமதர்ம’ கூட்டத்தில் வெளிப்படுத்திய கருதே இங்கே முன்வைக்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பெரியாரிய கருத்துக்களை தங்களுக்கு ஏற்ப பொருத்திக் கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது. அதன் உள்ளார்ந்த சாரத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் நிலை இதில் தெரியவில்லை. மேலும் பார்ப்பனர்களுக்கு எதிரான - வறட்டு கடவுள் மறுப்பு - இனவாத அடிப்படையில் மட்டுமே அணுகப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் கருத்துக்களை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.




‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகி விட்டது. அதை அடக்காவிட்டால் நாட்டிற்கு இன்னல்கள் நேரும் என்று காங்கிரசுகாரர்களும் ஈ.வெ.ரா. அவர்களைத் தாக்கத் தொடங்கினர்’


பெரியார் கூறினார் : பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல், சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் - அரசியலும் அவசியமானதா? அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.”




- பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா., பக்கம் 12 - இந்த நூலில் உள்ள வேறு சில கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார் தி.க. தலைவர் கி. வீரமணி, கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு - சிங்காரவேலர் சிந்தனைகள் புத்தக வெளியீட்டின் போது.


No comments: