கோவை வலைப்பதிவர் கூட்டத்தை கலக்கியவர் - கலகலப்பாக்கியவர் பாமரன் என்று நமது பதிவர்கள் குறிப்பிடும்போது, அவரது சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது!
அதே சமயம், விழிப்புணர்வு பத்திரிகையில் வெளி வந்திருக்கும் பாமரனின் கட்டுரை ‘சி.பி.எம்.-எப்.எம், பேசுங்க... பேசுங்க... பேசிக்கிட்டே இருங்க...’ படிக்க நேர்ந்தபோது, பதவி சுகம் காணும் பல்லக்கு தூக்கிகள் மீது வீச வேண்டிய சாட்டைகளை சி.பி.எம். மீது வீசியிருப்பதன் மூலம் பாமரத் தத்துவத்தின் முகமூடி கழன்று விடுவதை பார்க்க முடிகிறது.
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க.... என எங்களாலும் ஊதவும் முடியும், ஓதவும் முடியும்!
முல்லைப்பெரியாறு பிரச்சினை
காவிரி நீர் பிரச்சினை
கடல் சார் பல்கலைக்கழக பிரச்சினை
சி.பி.எம்-இன் மறைந்த தலைவர் பி. ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’ புத்தகம் குறித்த விமர்சனம், துவங்கி நந்திகிராமம் வரையில்... போகிற போக்கில் சி.பி.எம். மீது கொட்டித் தீர்த்துள்ளார் பாமரன்.
பாமரனுக்கென்று இருக்கும் மூடர் கூட்டம் மட்டுமே இதை கை கொட்டி ரசிக்கும்.... இ... ஹி... என்று இளிக்கும்.
சரி, விஷயத்துக்கு வருவோம்!
சி.பி.எம். தலைவர் பி. ராமமூர்த்தியின் புத்தகத்தில் ஏகப்பட்ட தவறுகள் இருப்பதாகவும், இதையெல்லாம் கண்டு பிடித்தற்காக இவருக்கு குரோர்பதி அவார்டு கிடைக்கப்போவதாகவும் குதுகலித்துள்ளார். 1990களில் தி.க. வீரமணி உட்பட பலபேர் எடுத்த வாந்தியைத்தான் இவரும் எடுத்துள்ளார் புதிதாக எதையாவது எடுத்திருந்தால் பாமரனுக்கு ஆ°கர் அவார்டு கொடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.
பி. ராமமூர்த்தி திராவிட இயக்கத்தின் தவறான அரசியல் நிலைபாடு குறித்து எழுப்பிய பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு தப்பிக்க பார்க்கிறார்!
திராவிட மாயை! ஆம், இன்றைக்கும் திராவிட மாயையில்தான் பலரும் பதவி என்ற பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்ற திராவிட இயக்கத்தின் அரசியல் கோஷத்தை குப்பைத் தொட்டியில் வீசியது யார்? ஏன் இந்த கோஷம் எடுபடவில்லை! உண்மையில் திராவிட மாயை கலைந்து விட்டதுதானே!
முல்லை பெரியாறு விஷயத்தில் மலையாளிகளுக்கு ஆதரவாக சி.பி.எம். செயல்படுகிறதாம்! ஏன், மலையாளிகள் இப்போது திராவிடர்கள் இல்லையா? கன்னடர்கள் என்ன ஆரியத்துக்காக மாறி விட்டார்கள்!
கடவுள் மறுப்பு இயக்கமாக தோன்றி தி.க.வின் கடவுள் மறுப்பு கொள்கை கிண்டல் செய்தது சி.பி.எம். ராமமூர்த்தியா? இல்லையே! உங்களது திராவிட கொழுந்து - அறிவு ஜீவி அண்ணாதுரைதானே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறி பெரியாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
திராவிட இயக்கத்தின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை!, கடவுள் மறுப்பு கொள்கையெல்லாம் இப்போது என்னவாயிற்று! அம்மாவின் காலடியிலும், ஐயாவின் காலடியிலும் சரணாகதி அடைந்து விட்டது பாமரனின் கண்ணுக்கும், புத்திக்கும் எப்படி தெரியாமல் போய் விட்டதோ! கடவுள் மறுப்பாளர்கள் இன்றைக்கு காவடியல்லவா தூக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கூட்டத்தோடு பாமரனும் சேர்ந்து விட்டாரா?
பிராமணர் எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு! திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் பிராமணாளைப் பார்த்து கல்லாணம் கட்டிக் கொண்டதெல்லாம் பாமரர்களுக்கு புரியாத விஷயம்தான்!வைக்கம் போராட்டத்தை யாராவது கொச்சைப் படுத்தினார்களா? ராஜ மரியாதையோடு உள்ளவர் நடத்திய எதிர்ப்பு போராட்டம் என்றாலும் அதனை வரவேற்கிறோம்! அதே சமயம் பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று ‘தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட! என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனி°ட்டுகள் பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் - இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை!ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?
அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன்? சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?
இடஒதுக்கீடு அரசியலை செய்யும் திராவிட அரசியல்வாதிகள், மண்டல் கமிஷன் முழங்கிய நில ஒதுக்கீடு குறித்து வாயே திறப்பதில்லையே ஏன் பாமரா எந்த மூடனுமா உனக்குத் இதைச் சொல்லவில்லை! சி.பி.எம். ஆட்சியில் உள்ள மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் நிலச்சீர்திருத்ததை வெற்றிகரமாக முடித்து ஏழை விவசாயிகளை பாதுகாத்த வரலாறெல்லாம் மறக்கடிக்கப்பட்டதா?
1857 முதல் சுதந்திரப்போhர் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ளும் பாரம்பரியம் திராவிட இயக்கத்திற்கு உண்டா? இந்தியாவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது, திராவிட இயக்கம் பிரிட்டிஷாரின் வாலாக பிராமணீம் பேசிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி, வசதி படைத்த உயர்ஜாதி வணிக வர்க்கத்திற்கு பல்லக்கு தூக்கியதெல்லாம் வரலாறக உள்ளது பாமரனுக்கு தெரியாதோ!
ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்காரவேலர் - ஜீவானந்தம் போன்றோடு இணைந்து சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை ஆரம்பித்த பெரியார், சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு செய்த கம்யூனிச பிரச்சாரம் இதையெல்லாம் பாதியிலேயே விட்டு, விட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியது ஏன்? இது எந்த வர்க்கத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு?பேரனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே அரசை மிரட்டிய திமுக காவிரி பிரச்சினைக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும் அரசை மிரட்டலாமா? கடந்த 40 ஆண்டுகளாக திராவிட இயக்கம்தானே தமிழகத்தில் இருக்கிறது? மத்தியிலும் அவர்கள்தானே ஆட்சி புரிந்தார்கள்! கொஞ்சினார்கள், குலவினார்கள்! ஏன் காவிரியையும், முல்லை பெரியாரையும் தீர்க்க முடியவில்லை. வாழப்பாடி ராமமூர்த்தி பதவி விலகினாரே! அதுபோல ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யலாமே! இது பாமரத்தனமாக கேள்வியாக இருக்கலாம்! ஆனால் உண்மை இல்லாமல் இல்லை!
கோம்புத்தூரில் சிறுவாணித் தண்ணீரை குடிக்கும் பாமரா, மலையாளிகளின் அந்த தண்ணியை குடித்து விட்டு பாமரத்தனமாக கேள்வி எழுப்புவது என்ன கலாச்சாரம்!...
இப்போதும், கேரள அரசு ஒன்றும் தமிழகத்துக்கு தண்ணிர் தரமாட்டேன் என்று எங்குமே கூறவில்லையே! தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்கு பாதுகாப்பு என்றுதானே அவர்கள் முழக்கம் வைக்கின்றனர். தமிழகத்துக்கு இது பிரச்சினை என்றால், அவர்களுக்கு அணை பாதுகாப்பு பிரச்சினை!
எந்த மாநிலமாக இருந்தாலும் இருதரப்பு மக்களின் உணர்வுக்கு மாறாக எந்த நிலையெடுத்தாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அரசியல் அரிச்சுவடி கூடவா பாரனுக்கு தெரியாது!மதவெறிக்கு எதிராக திராவிட இயக்கம் போராடுகிறதா? பார்த்து பாமர, பாமரர்கள் நகைக்கப்போகிறார்கள் பதவி எனும் சுகத்திற்காக ராமருக்கு காவடி தூக்கியதை - சங்பரிவாரத்துக்கு ஒத்து ஊதியதை, மோடிக்கு மாலையிடுவதை தமிழகம் கண்டு விட்டது! இனியும் பலிக்காது உங்கள் பசப்பு பாட்சா....
குஷ்புவுக்கு கூட்டம், ஈழத் தமிழனுக்கு கூட்டம் இல்லையா? நல்ல கவலைப்பா! தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூட்டயது நினைவுக்கு வரவில்லையா பாமரா?இறுதியாக உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் திராவிட இயக்கத்தின் பொன்விழா கண்ட கஞைர் எழுதிய தொல்காப்பியத்தில் உள்ள பிழைகள் (மூலத்தை கையாண்ட பிழை, பொருள் பிழை, எழுத்துப் பிழை, பொருத்தமான படம் பிழை, இலக்கணப் பிழை....) குறித்து நக்கீரனார் எழுதியுள்ள களைகளை முதலில் எடுக்க பாமரர்கள் முயற்சித்தால் அது அவர் சாந்திருக்கும் வர்க்கத்திற்கு செய்யும் புன்னியமாகும்!....
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கொண்டே இருங்க...
39 comments:
Where is Pamaranin Adivarudi "OSAI CHELLA" ?
this person and the other one gnani belong to the same category.
they dont do anything useful, just creae some controversial topic and get cheap publicity for themselves
Better to ignore these people
Thanks Anony.
Please do not compare Gnani with Osai Chella.Gnani has some stuff.Osai Chella has nothing other than arrogance and Osai.Osai is a man of very low IQ.
a reaction like this itself justifies Pamaran's article I guess.
//எந்த மாநிலமாக இருந்தாலும் இருதரப்பு மக்களின் உணர்வுக்கு மாறாக எந்த நிலையெடுத்தாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அரசியல் அரிச்சுவடி கூடவா பாரனுக்கு தெரியாது//
கம்யூனிசம் கொள்கை அடிப்படையிலானதில்லையா? கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் செய்வதுண்டா?
There is no doubt there is many factual mistakes in P.R's book regarding dates etc. (If I remember correctly) Even P.R acknowledged the mistakes in dates and said he wrote the book from his memory. Of course, he should have checked/verified the dates before publishing. However, that does not undermine or negate P.R's valid criticism about Dravida movements. Paamaran is known for his blind political faith and bias. Again, intellectuals(?) from that movement are always like that and are very shallow in their approach/treatment of issues.
- PK Sivakumar
Pamaran is yet another silly, pro-periyar,pro-DMK fellow who survives on undue publicity
given to him.Has he ever written anything that is sensible.He may
not even know anything about KeezhVenmani or the struggles led
by Srinivasa Rao and others in
Tanjore.He is another know-all
but in reality know-nothing
guy.They all think that the
sun rises in the east because
of Periyar.
எந்த மாநிலமாக இருந்தாலும் இருதரப்பு மக்களின் உணர்வுக்கு மாறாக எந்த நிலையெடுத்தாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அரசியல் அரிச்சுவடி கூடவா பாரனுக்கு தெரியாது!
=========
PuriyalayE raaasaa..enna soLLa vareenga??
ஈழத் தமிழனுக்கு கூட்டம் இல்லையா? நல்ல கவலைப்பா! தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூட்டயது நினைவுக்கு வரவில்லையா பாமரா?.....Newspaper..TV..radio..padikkum..paarkum..kEtkkum pazhakkam undaa nanbarE..romba comedy pannakoodaathu...
//இப்போதும், கேரள அரசு ஒன்றும் தமிழகத்துக்கு தண்ணிர் தரமாட்டேன் என்று எங்குமே கூறவில்லையே! //
சந்திப்பு!
நல்லா சால்ஜாப்பு சொல்கிறீர்கள்!
கொடுக்கும் தண்ணீருக்கு காசு கேட்கிறது கேரள அரசு. இதுவரை உலகிலேயே தன் அண்டைமாநிலத்தின் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தர காசு கேட்ட ஒரே மாநிலம் இடதுசாரிகள் ஆளும் கேரளமாநிலம் தான். வெட்கக்கேடு!!!! :-((((((
அனானி வணக்கம். ஓசை செல்லாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும் தாங்கள் கூறியிருப்பதுபோல், கோவை ஞானி ஒரு சிந்தனைவாதி என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அவரது படைப்புகள் முன்னுதாரம் மிக்கவையாக இருக்கும். நன்றி அனானி
சிரில் அலக்° தங்களது வருகைக்கு நன்றி.
இந்த கருத்தை நான் மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தியுள்ளேன். மேலும் கம்யூனி°ட்டுகள் இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறவர்களேயொழிய அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு - மற்றும் நடுவர்மன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகம் அமலாக்கிட வேண்டும் என்று சி.பி.எம். தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் தமிழக - கர்நாடக கமிட்டிகள் இரண்டுக்கும் ஒரே நிலைதான். இருவேறு நிலைபாடுகள் அல்ல. அதேசமயம் இதனை தீர்க்க வேண்டியவர்கள் இரண்டு மாநிலத்திலும் உள்ள ஆட்சியாளர்கள்தான். இதற்கு மத்திய அரசு முன்முயற்சியும் சரியான அளவில் உதவிடவும் வேண்டும். உதாரணமாக மேற்குவங்கத்திற்கும் - பங்களாதேஷிற்கும் உள்ள நதிநீர் தாவா எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் தீர்க்கப்பட்டுள்ளது. அதுபோன்று இரண்டு மாநில மக்களின் நலனையும் பாதிக்காத வண்ணம் - சாதக - பாதக அம்சங்களை மக்களிடம் துணிந்து கொண்டுச் செல்ல வேண்டும். இதுபோன்ற விஷயங்களை சர்வாதிகார முறையில் வறட்டுத்தனமாக அமலாக்குவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதிலேயே முடியும். எனவேதான் இப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்துகிறது. பேசுங்க.... பேசுங்க... என்று நக்கலடிக்கும் பாமரன் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று வழி ஏதாவது கூறியிருந்தால் அவருக்கு குரோர்பதி அவார்டு கொடுத்திருக்கலாம். இவைகள் வெறும் நக்கலடிச்சான் குஞ்சுகள் மட்டுமே!
அதேபோல்தான் கேரளத்தில் உள்ள முல்லை - பெறியாறு பிரச்சினையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி அளவிற்கு நீர் மட்டத்தை கேரள அரசு உயர்த்த வேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்துகிறது. ஆனால், துரதிர்ஷ்டம் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரசு உட்பட கேரள மக்களிடம் அணை உடைந்து விடும் ஆபத்து உள்ளது என்ற கரடியை கிளப்பி விட்டுள்ளனர். எனவே, பல லட்சக்கணக்கான மக்கள் வாழும் கேரள மக்களின் பயத்தை போக்குவது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இடது ஜனநாயக முன்னனி அரசின் கடமையல்லவா! எனவேதான் அந்த அரசும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே சமயம் அணை பாதுகாப்பிற்காக புதிய அணை என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர். இதில் எது சரி! எது தவறு என வாதம் வைத்தால் இரண்டு பேருமே வெற்றி பெற மாட்டோம். எனவே இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் தீர்வை நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம்தான் எட்ட முடியும். இதில் சி.பி.எம்.க்கு அரசியல் நடத்த வேண்டிய அவசியமே எழவில்லை.
தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ச்சியூட்டாமல், அதனை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற முயலாமல் பொறுத்தமான தீர்வை நோக்கி செல்லுவதற்கு ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.
ஈழப் பிரச்சினையில் 1980களில் விடுதலைப் புலிகள் மீது கரிசனம் காட்டாதவர்கள் யாராவது உண்டா? ஏன் பிரபாகரன் புலியோடு உள்ள படத்தை பெரும் பகுதி இடங்களில் தமிழகத்தில் காண முடிந்ததே! அப்போதே சி.பி.எம். கூறியது இலங்கைப் பிரச்சினைக்கு தனி ஈழம் தீர்வல்ல! அதிக பட்ச சுயாட்சியோடு கூடிய ஆட்சிமுறைதான் பொறுத்தமான தீர்வு என்று. அத்துடன் விடுதலைப் புலிகளை இன்றைக்கு சீண்டுவார் யாராவது தமிழகத்தில் உள்ளனரா? ஒரு சிறு குழு அதை வைத்து இன்றைக்கும் அரசியல் வியாபாம் செய்துக் கொண்டிருக்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அவர்கள் தற்போது தமிழக மக்களை கடிக்க ஆரம்பித்துள்ளனர். சக இயக்கத் தலைவர்களை கொலை செய்து, இந்திய நாட்டு பிரதமரை கொலை செய்து, தன் இயக்கத்திற்குள்ளேயே பிரபாகரனை மிஞ்சுபவர்களை கொலை செய்து, தற்போது தமிழக உள்நாட்டு மீனவர்களை கடத்தி கேவலமான அரசியல் நடத்தும் இந்த இனவெறியர்களின் ஏஜண்டுகளாக - அவர்களது வாயாக பாமரத்தனத்தோடு பேசும், செயல்படுபவர்கள், இத்தகைய ஆயுப் போராட்டத்தின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை பலியாக்கியதைத் தவிர இலங்கையில் அவர்கள் சாதித்ததென்ன! என்பதை சீர்தூக்கி பார்கக் வேண்டாமா? பேசுங்க... பேசுங்க... பேசிக்கிட்டே இருங்க....! மனித குலம் பேசுவதை நிறுத்தி விட்டால், அது மிருகமாவதை பாமரர்களால் தடுக்க முடியாது!
நன்றி சிவக்குமார்! பாமரர்கள் எப்போதும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது வழக்கம். எனவே, இவர்களது அரிப்பிற்கு சி.பி.எம்.தான் சொறிந்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள்...
நன்றி அனானி! அவர் பெரியாரை எவ்வளவு உயரத்திற்கு வேண்டும் என்றாலும் வைத்து உச்சி முகரட்டும் நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. அதற்கு பலிகடாவாக உழைக்கும் வர்க்கத் தத்துவத்தை இரையாக்க முயலுவது வீண் முயற்சி!
நன்றி வித்தியா, சிறில் அலக்சின் கேள்வியில் இதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
தோழர்,
பாமரனுக்கு ஒரு இழவும் தெரியாது. பத்து பக்கத்துக்கு சினிமா விமர்சனம் எழுதுவார். பைசா பிரயோஜனம் இருக்காது. அவரை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்.
லக்கி லுக் தங்களது வருகைக்கு நன்றி! நீண்ட நாளைக்கு பின் சந்திக்கிறோம். வாழ்த்துக்கள்.
முல்லைப் பெரியாறு ஒப்பந்தப்படி கேரளப் பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இந்த அணை கட்டமைப்பால் நீர் முழகும் 9777 ச.கி. மீட்டருக்கும், நீரில் முழுகும் 8000 ஏக்கருக்கும் தமிழக அரசு கேரள அரசிற்கு ஆண்டிற்கு ரூ. 40,000 ரூபாய் வாடகை தொகை செலுத்தி வந்தது. 1960க்குப் பின் இத்தொகை ரூ. 2,56,789 ஆக உயர்த்தப்பட்டு செலுத்தி வருகிறது. இது முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் இருந்து பின்பட்டு வரும் ஒரு நடைமுறை. புதியதாக ஒன்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் சி.பி.எம். அரசு எதையும் கோரவில்லையே! பாதிப்புக்கு நஷ்ட ஈடு கேட்பது கூடவா தவறு! ஏன் தமிழகத்தில் அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீருக்கு அரசு வரி போடவில்லையா? அரசு எப்படி குடிநீருக்கு வரிபோடலாம் என்று கேட்டால் அது சரியாக இருக்குமா? அதுபோலத்தான் இந்த வாதம் உள்ளது. எனவே, தற்போதைய பிரச்சினை இதுவல்ல நமக்கு அங்கிருந்து தண்ணீர் வேண்டும் அதற்குண்டான வழியை தமிழகமும் - கேரளமும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க வேண்டும். இதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.
// சி.பி.எம். ஆட்சியில் உள்ள மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் நிலச்சீர்திருத்ததை வெற்றிகரமாக முடித்து ஏழை விவசாயிகளை பாதுகாத்த வரலாறெல்லாம் மறக்கடிக்கப்பட்டதா?
//
tata, birla,ambani yin pangugalai eppo seerthirutha poreenga?
அனானி சி.பி.எம். மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் போது -உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும். அதுவரை லெனின் கூறியபடி கொஞ்சும் புரட்சிகர பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான்.
Thanks Lenin. Pamaran is anti communist propagandist.
//அனானி சி.பி.எம். மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் போது -உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும். அதுவரை லெனின் கூறியபடி கொஞ்சும் புரட்சிகர பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான்.///
சந்திப்பு, இது உங்களுக்கே ஓவரா தெரியலியா ?
/இதுபோன்ற விஷயங்களை சர்வாதிகார முறையில் வறட்டுத்தனமாக அமலாக்குவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதிலேயே முடியும்./
அட சொல்லறது யாருங்க?
ஐய்யா அனானி அடியேன் சந்திப்புதான்....
அன்புள்ள சந்திப்பு ஸார்..
ஒருவருக்கு பதில் எழுத வேண்டுமென்றால் நீங்கள் அவருக்கு நேரடியாக கடிதம் எழுதலாம். அல்லது இப்படி அவர் எழுதியிருக்கிறார் என்று அவருடைய பேச்சையோ, கருத்தையோ இங்கே முழுமையாகக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களைச் சொல்லலாம்.
ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? பாமரன் என்ன எழுதியிருக்கிறார் என்பதையே முழுமையாகச் சொல்லாமல் அவருக்கு மட்டுமே புரியும்வகையில் கடிதம் எழுதி அதை எங்களது பார்வைக்கும் வைத்திருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இது மிகத் தவறான விஷயம் என்று நான் கருதுகிறேன்.
முதலில் படிக்கும்போது என்ன விஷயம் என்பதே எனக்கு முதலில் புரியவில்லை. உங்களுடைய கடிதத்தைப் படித்துவிட்டு நூல் பிடித்து 'விழிப்புணர்வு' சென்று படித்து, பின்பு பாமரனின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து படித்து அதன்பின்தான் நான் இங்கே வந்துள்ளேன்.
அதிலே, "ஆரிய மாயையா.. திராவிட மாயையா" என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு.பி.ராமமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் நூலை விமர்சித்துள்ளார் திரு.பாமரன்.
//“1921 ல் வைக்கம் ஊரில் இருந்த கோவிலுக்குள் ஹரிஜனங்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடத்தினார் பெரியார்” என்கிறார் பி.ராமமூர்த்தி.
தந்தை பெரியார் வைக்கத்தில் நடத்தியது கோயில் நுழைவுப் போராட்டமல்ல. தெரு நுழைவுப் போராட்டம் என்பதுகூட காம்ரேட் ராமமூர்த்திக்குப் புலப்படவில்லை. அதுவும் அப்போராட்டம் நிகழ்ந்தது 1924-ல் தானேயன்றி 1921-ல் அல்ல.
“இன்னொரு மதத்தவனாக இருந்தால் தெருவிலே நடக்கலாம். மிருகங்கள்கூடத் தெருவிலே நடக்கலாம். ஆனால் உன்னுடைய இந்து மதத்திலே இருக்கிற ஒருவன் கீழ்ச் சாதியாக இருந்தால் அவன் தெருவிலே நடக்கக்கூட உரிமை அற்றவன் என்றால் இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?”
என்ற பெரியாரின் முழக்கங்கள் வைக்கத்தை மட்டுமல்ல மொத்த மாநிலத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
ஆனால் தெரு நுழைவுப் போராட்டம் “வரலாற்று அறிஞர்” ராமமூர்த்தியின் கண்களுக்கு கோயில் நுழைவுப் போராட்டமாகப் பட்டிருக்கிறது.//
இவ்வாறு பாமரன் எழுதியிருக்கிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாறும், அதையட்டி பலரும் எழுதிய பல வரலாறுகளும் பாமரன் சொல்வது போலத்தான் இருக்கிறது. தோழர் பி.ராமமூர்த்தி தவறாக எழுதியிருப்பதை பாமரன் தனக்கே உரித்தான பாணியில் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலென்ன தவறு கண்டீர்கள்..?
//அடுத்து அண்ணா காலத்தில் நடைமுறைக்கு வந்த சுயமரியாதைத் திருமண சட்டம் காங்கிரஸ் காலத்தில் வந்ததாக புதிய வரலாறு படைக்கிறார் ராமமூர்த்தி.//
இப்படி திரு.பி.ராமமூர்த்தி தவறாக எழுதியிருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் பாமரன்.
//“1934 ஆம் ஆண்டு அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்தது. பெரியார் பயந்து போய்ச் சமதர்மப் பிரச்சாரத்தைக் கைவிட்டு விட்டார்”//
இதை பி.ராமமூர்த்திதான் எழுதியிருக்கிறார். ஏன் ஸார் பெரியாரைப் பற்றி உங்களுக்கே நன்கு தெரியும். அவராவது பயப்படறதாவது? இந்த வாதத்தை தமிழ்நாட்டில் படிக்கத் தெரிந்த சின்னப் பையன்கள்கூட நம்ப மாட்டார்கள். இந்தியாவின் முதல் குடிமகன் வணங்கிய தெய்வத்திற்கே செருப்பு மாலை போட்டவர் அவர். அவரா பயந்து போய் பிரச்சாரத்தைக் கை விட்டார்? எங்கிட்டுப் போய் நம்பச் சொல்றீங்க?
//அரசனே கெளரவித்தாலும் வைக்கம் தலித்துகளின் வாழ்வுரிமை எனக்கு முக்கியம் என்று கடுங்காவல் தண்டனை பெற்ற பெரியார்..
ஒன்றல்லஸ இரண்டல்ல இருபத்தியோரு தடவை சிறைத் தண்டனை அனுபவித்த தந்தை பெரியாரைஸ
தன்னோடு நிற்காமல் துணைவி நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மாளையும் பொது வாழ்வுக்கு அழைத்து வந்து போராட்டங்கள் பல நடத்த வைத்த பெரியாரைஸ.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் .எஸ்.கே., ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உட்பட பலருக்கும் அடைக்கலம் தந்து பாதுகாத்து வைத்திருந்த பெரியாரைஸ..
காம்ரேட் ராமமூர்த்தி ‘பயந்து விட்டார்’ என்று உளறிக் கொட்டியிருந்தார்.//
இப்படி பி.ராமமூர்த்திக்குப் பதிலளித்துள்ளார் பாமரன். இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் எழுதிய புத்தகத்தில் உள்ள பிழைகளுக்கு உண்மையான செய்திகளை பாமரன் வெளியிட்டுள்ளார். இதில் எங்கே மார்க்சிஸ்டுகள் மீதான தாக்குதல் இருக்கிறது?
//ஈழத் தமிழர் சமாச்சாரம். உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் தொடங்கி உள்ளூர் அமைப்புகள் வரைக்கும் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் நிலைமையை நேரில் அறிந்து வர இதே ராமமூர்த்தியை இலங்கைக்கு அனுப்பி வைக்கஸ. போய்ப் பார்த்துவிட்டு வந்த ‘மகான்’ ராமமூர்த்தி உதிர்த்த முத்து எது தெரியுமா?
“தமிழ் நாட்டிலே தமிழர்களுக்கு உள்ள நிலையைக் காட்டிலும்
அங்குள்ள தமிழர்கள் மிக நல்ல முறையில் பண்டாரநாயகா அவர்களால் நடத்தப்படுகிறார்கள்.”
கம்யூனிஸ்ட் கட்சியும் சொன்னது:
சிங்களர்களும் - தமிழர்களும் உட்கார்ந்து பேச வேண்டும்.
பேசுங்கஸ.. பேசுங்கஸ.. பேசிக்கிட்டே இருங்க.//
இதுவும் திரு.பி.ராமமூர்த்தியின் கருத்துக்கள் மீதான பாமரனின் எதிர்வினைக் கருத்துக்கள். ஈழப் பிரச்சினை நீங்கள் அறியாததா? பண்டாரநாயகா ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் எந்த லட்சணத்தில் நடத்தப்பட்டார்கள். ஈழம் எந்தக் கதியில் இருந்தது என்பது உலகம் அறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ராமமூர்த்தி இப்படிச் சொல்லலாமா? இதைத்தான் பாமரன் விமர்சித்துள்ளார். இதிலென்ன தவறு?
//குஷ்பு பிரச்சனைக்கு வரிந்து கட்டிக் கொண்டு கூடிய தமிழ் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் கூட ஈழத் தமிழர்களுக்காகக் கூட்டப்பட்டதில்லை.//
இப்படி பாமரன் எழுதியிருக்கிறார். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை மறுபடியும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்.
//குஷ்புவுக்கு கூட்டம், ஈழத் தமிழனுக்கு கூட்டம் இல்லையா? நல்ல கவலைப்பா! தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூட்டயது நினைவுக்கு வரவில்லையா பாமரா?//
என்ன பதில் ஸார் இது? அவர் கேட்டது ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் தங்களது செயற்குழுக் கூட்டத்தை இதுவரையில் ஏன் கூட்டவில்லை என்று... ஆனால் மார்க்சிஸ்ட்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் சொல்லியிருக்கும் பதில், "தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூடியது.."
இது எப்ப ஸார் நடந்துச்சு? தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையா? ஆத்தாடி.. இன்னிக்குத்தான் இந்த மாதிரி ஒரு 'நெத்தியடியான' பதிலை படிக்கிறேன்.. ஈழம் எங்க ஸார் இருக்கு? இதுல தமிழ்நாட்டுத் தமிழன் எங்கன ஸார் புகுந்தான்?
//1979-ல் முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்ட லேசான நில அதிர்வைத் தொடர்ந்து 145 அடிக்கு மேல் நீர் மட்டம் உயரும் போது சில பகுதிகளில் அழுத்தம் ஏற்படுகிறது. அணையை பலப்படுத்தினால் போதும் என்றது மைய நீர் வள ஆணையம். அணையை பலப்படுத்தப் போன தமிழக அதிகாரிகளுக்கோ அடி உதை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அணையை பலப்படுத்திய பின்னர் வல்லுநர் குழு அறிவித்தது. “அணையின் நீர் மட்டத்தை இப்போது 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம்” என்று.
எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்த்தார்கள் காம்ரேடுகள். தமிழ் மாநிலத் தலைமையும் தேசியத் தலைமையும் திரு திரு வென விழித்தது.
(அவர்கள் தமிழ்நாடு என்று ஒருபோதும் உச்சரிக்கக்கூட மாட்டார்கள்ஸ.தமிழ் மாநிலம் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு கதைஸ.)
2006 பிப்ரவரியில் கேரளாவின் சகல இழுத்தடிப்புகளையும் தாண்டி உச்சநீதி மன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வந்து தொலைக்கஸ
போதாக்குறைக்கு காங்கிரஸ் ஆட்சி போய் காம்ரேடுகள் ஆட்சி வேறு ‘மலர’ சர்வதேசியக் கொள்கையிலிருந்து தேசியத்திற்கு கீழிறங்கிஸ.
பிறகு தேசியத்திலிருந்தும் பல்டியடித்து “மலையாளிகளின் நலனே முக்கியம்” எனக் கும்மியடிக்க வேண்டிய நிலை காம்ரேடுகளுக்கு.//
உண்மையைத்தானே எழுதியிருக்கிறார் பாமரன். மத்தியில் கூட்டாட்சி. தோழர்கள் ஆதரவு இல்லையென்றால் சோனியா ஆட்சி கவிழும். இதிலே தி.மு.க. கூட்டணி கட்சி. அவர்களும் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்கள். பக்கத்து மாநிலம். ஆட்சியில் இருப்பவர்கள் தோழர்கள். எதற்கெடுத்தாலும் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். நாங்கள் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வாரிசுகள். நீதிதான் எங்களது முதல் எதிர்பார்ப்பு என்றெல்லாம் சவுடால் விட்ட காம்ரேடுகள், இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அதை ஏற்க வேண்டியதுதானே.. ஏன் மறுக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்களும் அதைத்தானே செய்கிறார்கள். 'இன்னும் பேசுங்க.. பேசலாம்.. பேசித் தீர்த்துக்கலாம்' என்று.. ஏன் இவர்கள் தமிழக மக்களிடம்தானே ஓட்டு வாங்கி ஜெயித்திருக்கிறார்கள்.. இந்தப் பிரச்சினையில் கேரளா பணியாவிட்டால் நாங்கள் கம்யூனிஸ்ட்டாக இருக்க மாட்டோம். தனிக் கட்சி கண்டு போய்விடுவோம் என்று சொல்ல வேண்டியதுதானே..? இதற்கும் ஒரு வேளை மத்தியக் கமிட்டியைக் கூட்டி ஆலோசனை நடத்தித்தான் சொல்ல வேண்டுமா? அப்போது ஓட்டையும் கொல்கத்தாவுலேயே போய் கேட்டுத் தொலைய வேண்டியதுதானே..
//கோம்புத்தூரில் சிறுவாணித் தண்ணீரை குடிக்கும் பாமரா, மலையாளிகளின் அந்த தண்ணியை குடித்து விட்டு பாமரத்தனமாக கேள்வி எழுப்புவது என்ன கலாச்சாரம்!...//
இதென்ன முட்டாள்தனமா பதில்.. சிறுவாணித் தண்ணீர் என்ன மலையாளிகளே மந்திரம் சொல்லி உருவாக்கியதா? ஏன் அதைக் குடிக்கவே கூடாதா? என்னதான் சொல்ல வர்றீங்க? கோயம்புத்தூர்ல இருக்குற எல்லா சனமும் இதைத்தான் சாமி குடிக்குது.. அங்கன தண்ணி வருது.. குடிக்கிறாங்க.. இப்படியே போனா கர்நாடகாவின் காவிரியை தஞ்சாவூர்க்காரன் நீ ஏன் குடிக்கிற? தாமிரபரணி தண்ணியை மதுரைக்காரங்க ஏன் குடிக்கணும்.. பெரியாற்று தண்ணியை ஈரோட்டுக்காரங்க ஏன் குடிக்கணும்பீங்க போலிருக்கு.. அப்புறம் கம்யூனிஸ்ட்டுக்காரங்களே விரும்புற இறையாண்மை எங்கிட்டு இருக்கும்?
கடைசியாக ஒன்று.. பாமரன் எழுதியதை வரிக்கு வரி படித்துவிட்டு அதற்குப் பதில் போடுங்கள்.. அதைவிட்டுவிட்டு பொத்தாம் பொதுவாகப் பதில் சொல்லி உங்களையும் குழப்பிக் கொண்டு எங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தாதீர்கள். எங்களுக்கு ஏற்கெனவே இருக்குற குழப்பத்துக்கே, எந்த ஊர்த் தண்ணிய குடிக்கிறதுன்னு தெரியாம கிடக்கோம்.. நீங்க வேற மேற்கொண்டு எதையும் ஏத்தாதீங்க ஸார்.. எங்களை விட்ருங்க ஸார்..
அன்புள்ள தோழர் சந்திப்புக்கு
வணக்கம் ,
நானும் ராஜாவும் கூட வலைபதிவர் சந்திப்பில்
கலந்து கொண்டோம் பாமரனுடன் உரையாடினோம்
அவரோடு முரண்பட்டோம்.
அதுக்காக பாமரன் பிளாக்கில் என்னென்ன எழுதி
இருக்காரோ அதை எல்லாம் நாங்கள் ஏத்து கிட்டதா
அர்த்தம் அல்ல.
பாமரன் ஆக்டிவா இருந்தாருன்னு எழுதினா
நீங்க அவங்களை எல்லாம் பல்லக்கு தூக்கிகள்
என்பது சரியல்லவே!
தியாகு
நன்பர் தியாகுவுக்கு சந்திப்பின் பனிவான வணக்கங்கள்.
மன்னிக்கவும், பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு பாமரனோடு உரையாடியவர்களையோ, அல்லது அவரோடு நட்புணர்வோடு பழகியவர்களையோ, அது குறித்து பதிவிட்டவர்களையோ நான் பல்லக்கு தூக்கிகள் என்று எந்த இடத்திலும் கூறவேயில்லை. அவ்வாறு கூறினால், அது நான் சக பதிவர்களுக்கு செய்யும் மாபெரும் தூரோகமாகும்.
வாய்பிருந்தால் மீண்டும் ஒருமுறை என் பதிவை படித்துப் பாருங்கள். நான் கூறியது பதவி எனும் சுகம் காணும் பல்லக்கு தூக்கிகளுக்கு ஆதரவாக அவரது பேச்சு அமைந்துள்ளதை என்பதை குறிப்பிடத்தானே யொழிய வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்பதை உடனடியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இவ்வாறு தங்களை கருத வைத்த அடிப்படையில் தலைப்பு அமைந்து விட்டதற்காக வருந்துகிறேன்.
நன்றி தியாகு.
--------------------------------------
அதே சமயம், விழிப்புணர்வு பத்திரிகையில் வெளி வந்திருக்கும் பாமரனின் கட்டுரை ‘சி.பி.எம்.-எப்.எம், பேசுங்க... பேசுங்க... பேசிக்கிட்டே இருங்க...’ படிக்க நேர்ந்தபோது, பதவி சுகம் காணும் பல்லக்கு தூக்கிகள் மீது வீச வேண்டிய சாட்டைகளை சி.பி.எம். மீது வீசியிருப்பதன் மூலம் பாமரத் தத்துவத்தின் முகமூடி கழன்று விடுவதை பார்க்க முடிகிறது.
--------------------------------------
--------------------------------------
திராவிட மாயை! ஆம், இன்றைக்கும் திராவிட மாயையில்தான் பலரும் பதவி என்ற பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர்.
--------------------------------------
1857 முதல் சுதந்திரப்போhர் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ளும் பாரம்பரியம் திராவிட இயக்கத்திற்கு உண்டா? இந்தியாவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது, திராவிட இயக்கம் பிரிட்டிஷாரின் வாலாக பிராமணீம் பேசிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி, வசதி படைத்த உயர்ஜாதி வணிக வர்க்கத்திற்கு பல்லக்கு தூக்கியதெல்லாம் வரலாறக உள்ளது பாமரனுக்கு தெரியாதோ!
--------------------------------------
கோவை வலைப்பதிவர் கூட்டத்தை கலக்கியவர் - கலகலப்பாக்கியவர் பாமரன் என்று நமது பதிவர்கள் குறிப்பிடும்போது, அவரது சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது!
என்று மனமார முதல் பாராவிலேயே பாராட்டியுள்ளேனே. அப்படியிருக்கும் போது நான் எப்படி சக பதிவர்களை இவ்வாறு அழைக்க முடியும்.
உண்மைத் தமிழன் திங்கட் கிழமை சந்திப்போம்! அலுவலக நேரம் முடியும் சூழல் உள்ளதால் விரிவான பதில் எழுத முடியவில்லை. மற்றபடி தங்களது பதில் மிகவும் ரசிக்கதக்க முறையில் அமைந்திருந்தது வாழ்த்துக்கள்!
//மறுப்பு கொள்கை கிண்டல் செய்தது சி.பி.எம். ராமமூர்த்தியா? இல்லையே! உங்களது திராவிட கொழுந்து - அறிவு ஜீவி அண்ணாதுரைதானே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறி பெரியாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.//
முதலில் நான் ஒரு பார்ப்பான் பிறகு தான் ஒரு கம்யூனிஸ்டு என்று சொன்ன உங்க மேற்கு வங்க காமரேடு ( அமைச்சராமே?!) பற்றி என்ன சொல்கிறீர்கள் தோழர்?
பூனூல் கலியானம் நடத்திய உங்க சாட்டர்ஜி... இன்னும் டர்பனையும் தாடியையும் கட்டியழும் சுர்ஜித்.... அடப் போங்க சார்... இன்னிக்கு திராவிட அரசியல் சக்திகள் சீரழிந்து தான் போய் விட்டன ஆனால் அதையெல்லாம் சொல்லிக் காட்ட உங்களுக்கு உள்ள தகுதி தான் என்ன?
//அம்மாவின் காலடியிலும், ஐயாவின் காலடியிலும் சரணாகதி அடைந்து விட்டது பாமரனின் கண்ணுக்கும், புத்திக்கும் எப்படி தெரியாமல் போய் விட்டதோ! கடவுள் மறுப்பாளர்கள் இன்றைக்கு காவடியல்லவா தூக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கூட்டத்தோடு பாமரனும் சேர்ந்து விட்டாரா?//
போயஸ் தோட்டத்தில் காவடி தூக்கியது மறந்து விட்டதா? அம்மாவில் ஆசி பெற்ற சுத்தி அரிவால் நட்சத்திரம் என்று ஊரில் உள்ள சுவரெல்லாம் உங்க யோக்கியதை சந்தி சிரித்ததே தோழர், அதையெல்லாம் மறந்து விட வேண்டாம்.... ஜாக்கிரதை ஒரு வேளை நாளை "காப்டனின்" ஆசி பெற்ற சின்னமாகக் கூட உங்க சுத்தி அரிவாள் மாறும் அபாயம் உண்டு.. எதுக்கும் பார்த்து பேசுங்க.
//பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?//
அநியாயமான புளுகு! தயவு செய்து அந்த மாமனிதரின் பெயரை இனிமேலும் உச்சரிக்காதீர்கள்.. போய் வரலாற்றை படித்துப் பாருங்க.. 96 வயது வரை தமிழனின் சூத்திரப் போராட்டத்தை தூக்கியெறிய தெருத்தெருவாக பிரச்சாரம் செய்த தலைவர் அவர்.. தானே நோட்டீஸ் அடித்து தானே பெட்டர்மாக்ஸ் விளக்கைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக அலைந்து திரிந்தவர்... அம்மாவின் காலில் விழுந்த போதே உங்கள் மூளை சிதறி விட்டதா என்ன?
//அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன்? சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?//
நிமிர வில்லை தான்.. ஆனால் அதை சிங்கூர்/ நந்திகிராமின் கொலைகாரப் பாவிகள் சொல்லித் தான் இங்கே தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை...
//கோம்புத்தூரில் சிறுவாணித் தண்ணீரை குடிக்கும் பாமரா, மலையாளிகளின் அந்த தண்ணியை குடித்து விட்டு பாமரத்தனமாக கேள்வி எழுப்புவது என்ன கலாச்சாரம்!...//
எல்லோருக்கும் பொதுவான நீரையும் நிலத்தையும் மலையாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் அளவுக்கு வந்து விட்டதா?
அப்ப இது தான் பொதுவுடைமையா? சிறுவானி மலையாளிக்கு, காவிரி கன்னடனுக்கு, நந்திகிராமின் நிலம் கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்துக் கட்டிய சலீமுக்கு... இன்னும் இது போன்ற பொதுவுடைமை சித்தாந்தக் கருத்துக்களை உங்கள் திருவாயால் கேட்க ஆவலாய் இருக்கிறது தோழர்..
உண்மைத் தமிழன் வணக்கம். தங்களது சிரமத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் நூல் பிடித்து வால்பிடித்து சென்றதும். எனினும் அதன் மூலத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற ஆவல் பாராட்டத்தக்கது.
இருப்பினும் இந்த விசயத்தில் நான் பாமனின் மூலக் கட்டுரையை 'பாமரனும் பல்லக்கு தூக்கிகளும்!' என்ற தலைப்பிலேயே அதன் லிங்கை கொடுத்துள்ளேன். அதை கிளிக் செய்து பார்த்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. அதே சமயம் இது உடனடியாக கொடுக்கப்பட்ட ஒரு பதில்தான். மேலும் பாமரன் போகிற போக்கில் சில விசயங்களை போட்டுவிட்டுப் போகிறார். அதுவும் சம்பந்தமில்லாமல். எனவே இந்த நிலையில் ஒவ்வொன்றுக்கும் விரிவாக மட்டுமே பதில் எழுத வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சில விசயங்களை மட்டுமே விளக்கியுள்ளேன்.
தங்களது கருத்துப்படி பாமரனின் ஒவ்வொரு கருத்தையும் கொடுத்து விட்டு பதில் சொல்லியிருந்தால் படிப்பதற்கும் - விவாதிப்பதற்கும் சிறப்பாக இருந்திருக்கும்.
முதலில் வைக்கம் போராட்டம் குறித்து பார்ப்போம்:
பி. ராமமூர்த்தியின் ஆரிய மாயை - திராவிட மாயை என்ற புத்தகம்தான் திராவிட இயக்கத்தை விமர்சன ரீதியாக அணுகிய முதல் புத்தகம். இந்த புத்தகத்தை அவர் எழுதும் போது. முழுக்க முழுக்க அவரது நினைவில் இருந்தே எழுதினார். இதுஒரு பாட புத்தகம் அல்ல. அல்லது வரலாற்றுக் குறிப்பும் அல்ல. எனவே திராவிட இயக்க சித்தாந்தம் அடிப்படையில் தவறான கருத்தாக்கத்தை கொண்டது என்பதுதான் இதன் அடித்தளம். இதில் வருங்கள் பிழையாக இருக்கலாம். அல்லது காலங்கள் பிழையாக இருக்கலாம். இதனை பி.ஆர். உயிரோடு இருந்த காலத்திலேயே தி.க. வீரமணி அவரு:ககு மறுப்பு எழுதினார் அப்போதே இந்த விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போதுகூட திராவிட இயக்கத்தின் தோல்வி குறித்து பி.ஆர். எழுப்பிய கேள்விகளுக்கு வீரமணியும் பதில் அளிக்கலாம். திசை திருப்பல்கள் நடந்தது. பி.ஆர். மறைந்து 20 வருடங்கள் கழிந்த பின்பு. இப்போது பாமரன் சுட்டிக்காட்டுவது அவரது பாமரத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் பி.ஆர். முன்வைத்த விமர்சனங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே நான் கேள்வியாக எழுப்பியுள்ளேன்.
பிழை என்று வரும் போது முதல்வர் கருணாநிதி எழுதிய தொல்காப்பியத்தில் இல்லாத பிழைகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளேன். அதற்காக கருணாநிதி எழுதிய தொல்காப்பியமே முழுக்க முழுக்க தவறானது என்று கூறிவிட முடியுமா? (தொல்காப்பிய விளக்கவுரை - அப்புறம் கருணாநிதி தொல்காப்பியத்தை எழுதவில்லை என்று யாராவது மல்லுக்கு வரப்போகிறார்கள்)
ஏன் ஸார் பெரியாரைப் பற்றி உங்களுக்கே நன்கு தெரியும். அவராவது பயப்படறதாவது? இந்த வாதத்தை தமிழ்நாட்டில் படிக்கத் தெரிந்த சின்னப் பையன்கள்கூட நம்ப மாட்டார்கள். இந்தியாவின் முதல் குடிமகன் வணங்கிய தெய்வத்திற்கே செருப்பு மாலை போட்டவர் அவர். அவரா பயந்து போய் பிரச்சாரத்தைக் கை விட்டார்? எங்கிட்டுப் போய் நம்பச் சொல்றீங்க?
உண்மைத் தமிழன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள். மிகவும் முரண்பாடுகளை கொண்டவர்தான் பெரியார். குறைந்தபட்சம் அவரது வாழ்க்கையில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே கொள்கையை அவர் பின்பற்றியதே இல்லை என்பதுதான் அவரது வரலாறு. எப்டியாயினும் அவரது சேவையை முழுமையாக நிராகரிப்பது என்னுடைய நோக்கமல்ல. அவரது மூடநம்பிக்கை எதிர்ப்பு. பெண்ணுரிமை. தீண்டாமை எதிர்ப்பு... போன்ற விசயங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை என்பதில் வேறு கருத்துக்கே இடமில்லை. அதே சமயம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஓங்கி நிற்க வேண்டிய தமிழகம் இனவாத சிந்தனைக்குள் சிக்கிச் சுழந்றதுதான் மிச்சம். இவர்களது இனவாதம் என்பது திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள பயன்பட்டதேயொழிய தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் அது பயன்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
ஈழத் தமிழர்கள் விசயத்தில். அங்கு நிலவிய சிங்கள இனவெறியால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரையும். உடமைகளையும் இழந்ததையும் நடைபெற்ற கொடுரத் தாக்குதல்களையும் என்றைக்குமே சி.பி.எம். குறைத்து மிதிப்பிட்டது கிடையாது. இந்த பிரச்சினைக்கு எது தீர்வு? அதற்கான வழிமுறை என்ன என்று வரும்போது வித்தியாசம் ஏற்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக புலிகளின் ஆயுதப் போராட்டத்தால் தமிழகர்கள் மேலும் துன்பத்திற்கு உள்ளானதுதான் நடந்ததே ஒழிய பிரச்சினைக்கு தீர்பு ஏற்படவில்லை. அன்றைக்கு புலியை ஆதரித்த திராவிட அரசியல் கட்சிகள் இன்றைக்கு கை கழுவி விட்டனர்.
மேலும். இன்றைக்கு கூட இலங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கையில் உயர் கல்வி பொறியியல் உட்பட தமிழில் வழங்கப்படுகிறது. இது தமிழகத்தை விட உயர்ந்த நிலையில்லையா? இதுபோன்ற விசயங்களைக் கூட இங்கிருந்த திராவிட கொழுந்துகள் சாதிக்கவில்லை என்பது உண்மை.
ஈழத் தமிழர் விசயத்தில் ராமமூர்த்தி கூறிய மற்ற விசயங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஒரு வரியில் அவர் மீது புழுதி வாரித் தூற்றுவது சி.பி.எம்.க்கு எதிரான பாமரனின் அரசியல் நிலைபாட்டைதான் வெளிப்படுத்துகிறது.
பாமரனின் பார்வையில் ஈழத் தமிழருக்கான கூட்டம் என்றால் அது புலிகளுக்கு ஆதரவான கூட்டமாக. அல்லது இவர்கள் விரும்பும் நிலையெடுக்கும் கூட்டமாக இருந்தால் தான் அது கூட்டமாக ஏற்பார்கள். இல்லையென்றால் குசுபுக்கு கூட்டம் ஏன் ஈழத்திற்கு இல்லை என சொறிவார்கள். இது அனர்த்தமான கேள்வி.
பாமரன் மலையாளிகளுக்காக கும்மிடிக்கிறார்கள் என நக்கல் செய்யும் போது நாங்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமா? அதனால்தான் சிறுவானித் தண்ணீர் மட்டும் இனிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளேன்.
------------
எந்த ஊர்த் தண்ணிய குடிக்கிறதுன்னு தெரியாம கிடக்கோம்.. நீங்க வேற மேற்கொண்டு எதையும் ஏத்தாதீங்க ஸார்.. எங்களை விட்ருங்க ஸார்..
-------------
உண்மைத் தமிழா தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களைத்தான் நம்பி இருக்கிற வேண்டியிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடர்கள் நம்முடைய தண்ணீர் வளத்தை பெருக்குவது குறித்து எந்த உருப்படையான திட்டத்தை தீட்டவில்லை. அவர்களது கவனமெல்லாம் வாரிசுகளை வளர்ப்பது எப்படி என்பதுதான்.
உண்மைத் தமிழன் தங்களது விவாதத்திற்கு மிகவும் நன்றிகள்... தொடரட்டும் சமூக மாற்றத்திற்கான விவாதப் போராட்டங்கள்.
/மேலும். இன்றைக்கு கூட இலங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கையில் உயர் கல்வி பொறியியல் உட்பட தமிழில் வழங்கப்படுகிறது. இது தமிழகத்தை விட உயர்ந்த நிலையில்லையா? இதுபோன்ற விசயங்களைக் கூட இங்கிருந்த திராவிட கொழுந்துகள் சாதிக்கவில்லை என்பது உண்மை./
அப்படியென்கிறீர்கள்.
இதுவரை ஈழம் பற்றிய உங்களின் தெளிவினைக் கண்டு கண்டு புளகாங்கிதம் விம்மி வெடித்து..... சிரித்திருந்தோம். (முற்றான புலிக்காய்ச்சலிலே புலிக்கோஷங்களை இடுகைகளாக ஆவணப்படுத்தும் ஈழத்தமிழர்கள்கூட, உங்களைச் சீரியஸாக எடுக்கவில்லை என்பது உங்கள் காமெடித்தனத்தின் உச்சி என்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்). ஆனால், ஒரு முறையேனும், ஒரு தடியை ஓடுகிறவரின் காலினிடையே கொடுப்பது இன்னமும் மகிழ்ச்சியினைத் தருமெனத் தோன்றியதால், இப்பின்னூட்டம்.
நானும் இலங்கையிலே பொறியியல் கற்று, கற்பித்த ஈழத்தமிழன்தான். இலங்கைப்பல்கலைக்கழகங்களிலே எங்கே தமிழிலே நடைமுறையிலே பொறியியலோ பொரியலோ கற்றுக்கொடுக்கப்படுகின்றதெனக்காட்டுங்கள். இலங்கையின் பல்கலைக்கழகங்களிலே பொறியியல் தமிழிலோ சிங்களத்திலோ கற்பிக்கப்படுவதில்லை. உயர்வகுப்புகளிலேயே ஆங்கில வழிக்கல்வி மீளக்கொணரப்படுகின்றது. பல்கலைகழகங்களிலே சேர்கையிலே, தமிழிலா, சிங்களத்திலா, ஆங்கிலத்திலா என்று ஒப்புக்கு வேண்டுமானால், ஒரு கேள்வியிருக்கின்றதென் வைத்துக்கொள்ளலாம். இலங்கையின் தேசியப்பிரச்சனை பல்கலைக்கழகத்திலே தமிழிலே கற்பதுமல்ல. உயிர்போகிற நேரத்திலே மயிர்வெட்டச் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும் உங்கள் போராட்டப்புரட்டுசீ வாரல்ஆற்றை ஏன் நீங்கள் உங்களின் இந்திய எல்லைக்குள்ளேயே நிறுத்தக்கூடாது? தெரியாத விடயங்களிலே அலம்புவது தெரிந்த விடயங்களிலே சரியாகச் சொல்வதைக்கூட நம்பவைக்காமற்போகலாம். தோழர், உங்களுக்கும் சங்க்பரிவார் ஆட்டுக்குட்டியொன்றுக்கும் என்ன வேறுபாடிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள்? மார்க்ஸியத்துக்கே வெட்கக்கேடு உங்களைப் போன்ற இந்தியமார்க்சியர்கள். (சொல்கிறவன் எல்லோருக்கும் மார்க்ஸ், எங்கெல்ஸ், ராமமூர்த்தி, ராஜா, மந்திரி, மந்தி பெயர்களிலே புலிவால் கட்டிவிடுங்கள். தேசியப்பிரச்சனைகள் ஆற்றோடு கழிந்த மலம் கரைந்து அழிந்தததாகத் தீர்ந்துவிடும்).
நீங்கள், உங்கள் தலைவர் ராமமூர்த்தி, ராம் போன்றவர்களுக்கு புலிக்காய்ச்சலிலே என்ன இழவை வேண்டுமானாலும் உளறுவீர்கள். ஜேவிபியினையே சகோதர மார்க்ஸிய இயக்கம் என்று அரவணைத்துக்கொள்ளும் இந்தியாவின் மரபுமார்க்ஸியர்களுக்குத் தெரிந்ததும் செய்யக்கூடியதும் இன்னமும் மே தினத்துக்குப் புத்தகம் வெளியிட்டு ஊர்வலம்போனால், நாட்டின் அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிடுமென்றும் கூரையிலே ஏறி வைகுண்டம் போக வரிசையிலே நிற்பதுதான். மார்க்ஸியம் முடங்கிப்போவதற்கான முழுமுதற்காரணிகளே உங்களைபோல மார்க்சியவாதிகள்தான். இந்தியாவிலே மரபுசார் மார்க்ஸியவாதிகள் வாத்தைத் தங்கமுட்டைபோடவைத்தீர்கள், பூனையைப் புனுகுமணம் வீசவைத்தீர்கள் என்று என்னத்தினை வேண்டுமென்றாலுங்கூட அலட்டிக்கொள்ளுங்கள்; ஆனால், மற்றைய நாட்டிலே என்ன நிகழ்கின்றதென்று கட்சியின் மேல்மட்டம் சொல்லித்தந்ததை உருப்போட்டு உங்களின் அறிவுசூனியத்தினைக் காட்டாமலிருக்கலாம். அடுத்தது, ஈழத்திலேயிருக்கும் தமிழர்நல்வாழ்வுக்கான ஒரே ஒரு தமிழ் பொரட்சி வைக்கோற்போர் ஆட்டு இயக்கம் ஈபிடிபி என்று சொன்னாலும் சொல்வீர்கள். உங்கள் மூளையைக் கழற்றிச் சட்டைப்பைக்குள்ளே வைத்துக்கொண்டு பேசுவது பற்றி எனக்கேதும் ஆட்சேபணையில்லை; ஆனால், கேட்டுக்கொண்டிருக்கின்றவனும் தன் மூளையையும் வரலாற்றுப்புத்தக்கத்தையும் ஒன்று சேர தன் சட்டைப்பைக்குள்ளே பிதுங்கப்பிதுங்க அமுக்கவேண்டுமென அடம் பிடிப்பதுபோல எழுதுகின்றீர்களே, இஃது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாகத் தெரியவில்லை ?
தமிழ்நாட்டிலே இருக்கும் திராவிட இயக்கங்களின் ஈழம் தொடர்பான செயற்பாடுகளை விமர்சித்துக்கொண்டு, இலங்கையின் தேசியப்பிரச்சனை தொடர்பாக கதாகாலேட்சபம் செய்துகொண்டிருக்கின்றீர்களே? திராவிடக்கட்சிகள் அவற்றின் இன்றைய அரசியல்நிலையிலே நடைமுறையிலே எத்துணை சீரழித்துபோயிருந்தாலுஞ்சரி, ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாளும்விதங்களிலே அவற்றுக்கிருக்கும் அரசியல் எதுவானாலுஞ்சரி, ஒன்று மட்டும் உறுதியாக என்னாலே சொல்லமுடியும்; உங்களைப் போன்ற இந்திய மார்க்ஸிய மழுங்கல்மூளைவாதிகள் ஈழத்தமிழருக்குச் செய்தவற்றோடு பார்க்கும்போது, திராவிடக்கட்சிகள் செய்த நன்மைகள் மண்பருக்கைக்கும் மலைக்குமான வித்தியாசத்தினை எந்தவொரு ஈழக்குழந்தைக்கும் தெளிவாகவே காட்டும். உங்களைப் போன்றவர்கள் சொல்லிக்கொண்டிருப்பது ஸ்ரீலங்கா அரசுப்பாம்பைக் கையிலே வைத்துக்கொண்டு, "அழகான பாம்பு அணைச்சுக்கோ தம்பி" என்ற அரைவேக்காட்டுத்தன இலங்கை நிலை குறித்த அறிவுவெளிப்பாடும் பாம்பின்வாலாட்டத்திலே மார்க்ஸியத்தத்துவம் நடனமாடுவதான கதையுமேதான். குறைந்தது,
சரி அதைத்தான் விடுவோம். எந்த தமிழக மார்க்ஸிஸ்டாவது, மீண்டு வந்த தமிழகமீனவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை பொலீஸ் சாராத வெளிப்படையான கருத்துச்சொல்ல மீனவர்களை அனுமதிக்க வேண்டுமென்று கேட்டதுண்டா? இல்லை, ஆனால், புலிகள் மீனவர்களைக் கடத்தினார்கள் என்று இராகம் போட்டுக்கொண்டேயிருங்கள். சொந்த மாநிலத்திலேயே ஒரு வெளிப்படையான கருத்துக்கு வழிவகுக்க வசதிசெய்ய முயலாத உங்களைப் போன்றவர்களெல்லாம் மார்க்ஸிஸ்டுகள்.
போங்க செல்வப்பெருமாள். நீங்கள் தடவிக்கொண்டிருக்கும் உங்களின் மூன்றுகால் முயலும் ஓட்டப்போட்டிக்கு அதனை அனுப்பும் கனவுகளும். ஆக, மற்றவர்களுக்கு கிச்சுக்கிச்சுமூட்டமட்டும் முழுமையாக உதவுகின்றீர்கள். குட்டையோரத்திலே காலை நீட்டி கடலின் ஆழமும் விரிவும் பற்றி முழம் போட்டுக்கொண்டேயிருங்கள். மார்க்ஸியம் மண்ணோடு மண்ணாகிப் புற்றாகிப் போகட்டும்; நல்ல பாம்புகளுக்கு வளர வசதி. ஆடு ராம் நரசிம்மே! விளையாடு ராம் நரசிம்மே!! :-)
சொன்னாற்போல, பாமரன் மிகவும் சரியாக தோழர் ராம் நரசிம்மைப் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே ராம் இலங்கா இரத்தினம் ஆக முன்னாலேயே சென்னையிலே இலங்கையின் இரண்டாவது தூதரகம் என்று சரியாகச் சொல்லியிருக்கின்றார். அதற்காக அவருக்கு நன்றி. ராமமூர்த்திக்கு இல்லாத ஈழத்தமிழர் பற்றிய தெளிவு பாமரனுக்கு உண்டு என்பதிலே இதுவே எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
pl see the link
http://pamaran.wordpress.com/2007/04/30/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-fm-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/
வாழ்க ஜனநாயகம்
கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடத்தை அறிய கன்னியாகுமரிக்கு சென்று பாருங்கள். கோயம்புத்தூருக்கு போய் பாருங்கள். எல்லையிலே கேரளத்திலே ஒரு பேச்சு. மறுபுறம் தமிழகத்திலே இன்னொரு பேச்சு. இதில் பாமரனைப் பேச உமக்கு கம்யூனிஸ்டுகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமென்றால் வெட்கக் கேடு.
எல்லையிலே இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீரே கொடுக்க கூடாதென்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கேரள கம்யூனிஸ்டுகளிடம் ஏன் தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் பேசி தீர்வு காணக்கூடாதா? இரண்டுமே ஒரே கம்யூனிஸ்டு கட்சியில் மாநிலப் பிரிவுகள் தானே என் அரசியல் இருந்தாலும் இதையெல்லாம் கேட்கவோ பேணவோ நாதியில்லை. ஒண்ணுக்கும் உதவாத காரியங்களுக்கு பாட்டுப் பாட வருவதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சு
எனக்கு பாமரன் கருத்துக்கள் ஏற்புடையவை, அவர் விரும்பினால் ஒரு பல்லக்கில் உக்காரவைத்து தோளைக்கொடுத்து தூக்கத்தயார்...
Hi,
I am also ready to do the same as Ravi.....
---Kannan
'நீங்கள் உங்களின் இந்திய எல்லைக்குள்ளேயே நிறுத்தக்கூடாது? தெரியாத விடயங்களிலே அலம்புவது தெரிந்த விடயங்களிலே சரியாகச் சொல்வதைக்கூட நம்பவைக்காமற்போகலாம்.'
விளக்கெண்ண பெயரிழி…உனக்கு மட்டும் எல்லாம் தெரிஞ்சு கிழிச்சிட்டியாக்கும்? நீ கூட உன் பிரச்சனையை பாக் ஜலசந்திக்கு அப்பாலே வச்சுக்க வேண்டியதுதானே? இங்கவந்து ஏன் பொலம்புற?
நீ கூடத்தான் உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களான சங்பரிவார்,ஆட்டுகுட்டி,இந்திய மார்க்சியர்கள் என வாய்கிழிய பேசுற..
மூடிகிட்டு போக வேண்டியதுதானே?
மிகக் கேவலமான கருப்பு சட்டை கும்பலைச் சேர்ந்த பாமரன் மற்றும் கூஜா செல்லா போன்றவர்கள் ,கேவலமான சி பி எம்
பற்றி பேச லாயக்கில்லாதவர்கள்.
பாக் ஜலசந்தின்னா பாக்குநீரணையா?
சந்திப்பு அய்யா.. மேலே உண்மைத்தமிழன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பவர் உண்மையான உண்மைத்தமிழன் அல்ல. என் பெயரில் இதுபோல போலி பின்னூட்டங்கள் அதர் ஆப்ஷனை பயன்படுத்தி போடப்பட்டு வருகிறது. நானும் கம்யூனிஸ்ட். தோழர் ராமமூர்த்தியை கடவுளாக மதிப்பவன் நான் என்பதை இங்கே தெளிவுபடுத்தி கொள்கிறேன். தயவுசெய்து வரும் பின்னூட்டங்கள் போலியுடையதா அல்லது உண்மையான உண்மைத்தமிழனுடையதா என்பதை தெளிவுபடுத்தி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வாழ்க லெனின் புகழ்!!
தோழர் சந்திப்பு,
ஒரு இயக்கத்தை விமர்சன ரீதியாக அணுகும் போது அதன் தரவுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும். தன் நினைவில் இருந்தே எழுதினேன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அவர் விமர்சிக்கவில்லை. தன் காழ்ப்புணர்வுகளைத்தான் கொட்டி இருக்கிறார். ஆண்டுகளில் மட்டும் தவறல்ல. பதிவு செய்யப்பட்ட வரலாறூகளையே முன்னுக்குப் பின் முரணாக தன் வசதிக்கேற்ப வளைத்து திரித்து எழுதி இருக்கிறார். அதற்கான வீரமணி அவர்களின் விளக்கங்களை புறந்தள்ளினால் ராமமூர்த்தியின் பொய்களுக்கு உண்மையாகிவிடாது. சமூகத்தில் தனக்கென ஒரு மரியாதையை உருவாக்கிக்கொண்டு பின் அந்த பிம்ம்பத்தை முன்னிறுத்திக்கொண்டு தங்கள் ஆழ்மன எண்ணங்களை உருவேற்றிச் சொல்லும் பாணிதான் ராமமூர்த்தி அவர்களுடையது.
எடுத்துகாட்டாக,
காம்ரேட்டான அவரின் சோவியத் புரட்சி பற்றியான விசயத் தெளிவின்மை. லெனின் காலத்திய பிரச்சனையை 10 ஆண்டுகள் கழித்து நடந்தாக சொல்லி இருப்பது.
தான்(1907) பிறப்பதற்கு முன்பே(1905ல்) - தீண்டாமை இருந்ததாக தான் அறிந்து கொண்டதாக சொல்லியிருப்பது வரை
.
இன்னும் நிறைய இருக்கிறது.
இது குறித்து பேசவதற்கு - விவாதிப்பதற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
விடுங்கப்பா. ரஷ்யாவுல மழை பெய்தா சென்னையில குடை பிடிக்கிற ஆளுங்ககிட்ட தீவிரமா விவாதம் செஞ்சுகிட்டு.
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08
தருதலைங்க எதைப் பத்தியும் கவலைப்படுறது இல்லை! அதுகளுக்கு ரஷ்யாவுல மழை பொழிந்தால்தான் என்ன? சென்னையில் பொழீந்தால்தான் என்ன? எதப் பத்தி கவலைப்பட்டது இந்த தருதலை! சும்மா அலட்டிக்காதீங்கப்பா... இதெல்லாம் தண்ணி தெளித்த கேசுங்கக...
தமிழகத்துல கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு என்ன? சும்மா அலட்டாதீங்க
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
Post a Comment