May 22, 2007

கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!

இந்துத்துவ சோதனைக் கூடத்தில் சமீபத்தில் நிகழ்த்தியுள்ள புதிய சோதனை நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை, கலை - இலக்கியவாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்துத்துவ மோடியிசத்தின் போலி என்கவுண்டர் குறித்த அச்சு ஊடகத்தின் மை உலர்வதற்குள், படைப்புச் சுதந்திரத்தின் மீது மற்றுமொரு தாக்குதலை தொடுத்துள்ளது.


குஜராத்தில், பரோடாவில் உள்ள சர்வதேச அளவில் புகழ் பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஓவியக் கல்லூரி மாணவர் சந்திரமோகனும், அவரது படைப்பும் இந்துத்துவ கலாச்சார காவலர்களின் கொடுங்கரங்களுக்கு பலியாகியுள்ளது.


ஓவியம் மற்றும் நுண்கலையில் முதுநிலை பட்டப் படிப்பு (Post Graduate)பயிலும் மாணவர்களின் இறுதியாண்டுத் தேர்வின் ஒரு பகுதியாக அவர்களால் படைக்கப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, மதிப்பீட்டுக்குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களின் தேர்ச்சி உறுதி செய்யப்படும். இத்தகைய நிகழ்வு அனைத்து கல்லூரிகளிலும் இருக்கும் ஒரு தேர்வு முறை.


இதுபோன்ற ஒரு தேர்வை புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் கல்லூரியில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் சந்திரமோகன் என்ற மாணவர் தன்னுடைய அரிய படைப்பான மூன்று ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தார். சந்திரமோகனின் தூரிகைக் காட்சிகள் இந்து கடவுளர்களை அவமதிப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறிக் கொண்டு, பா.ஜ.க. - வி.எச்.பி. அமைப்பின் உள்ளூர் தலைவரான நிராஜ் ஜெயின் தலைமையில் வன்முறை கும்பல் எந்தவிதமான முன்அனுமதியும் இன்றி கல்லூரிக்குள் புகுந்து தேர்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை சிதைத்ததோடு, கல்லூரிக்குள் இருந்த பழம் பெருமை வாய்ந்த ஓவியங்கள், சிற்பங்களையெல்லாம் அடித்து நொறுக்கி அராஜகம் புரிந்ததோடு, போலி என்கவுண்டர் புகழ் குஜராத் காவல்துறையை வைத்து மாணவன் சந்திரமோகனை கைது செய்து, அவர் மீது ஐ.பி.சி. 153, 114, 295ஏ மற்றும் 295 பி. பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து நான்கு நாட்கள் - ஐந்து இரவுகள் சிறையிலடைத்துள்ளது. மாணவர் சந்திரமோகன் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓவியருக்கான லலித்கலா அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமோகனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் - கலைஞர்கள் - அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடத்திய பின்னணியில், தற்போது ரூ. 5000 பிணைத் தொகை ஜாமினில் வெளிவந்துள்ளார்.


இந்த சம்பவத்தை ஓவியக்கல்லூரி ஆசிரியரும், கல்லூரி முதல்வருமான டாக்டர் சிவாஜி பணிக்கர் கடுமையாக கண்டித்ததோடு, சந்திரமோகனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் பல்கலைக் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். தற்போது அவர் இந்துத்துவ நச்சுக்கரங்களால் கொலை செய்யப்படுவரோ என்ற அச்சத்தோடு, தலைமறைவாக இருக்கிறார்.


கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவ பாசிஸ்ட் நிராஜ் ஜெயினுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் சாயாஜிகஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகமும் இத்தகைய வன்முறைகும்பலுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முன்முயற்சியும் எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


சந்திரமோகன் செய்த தவறுதான் என்ன? அவர் என்ன நரேந்திர மோடியின் பாசிச படை கர்ப்பினி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவையும், தாயையும் கொன்ற கொடூரத்தையா காட்சியாக்கினார்? அல்லது 3000 இசுலாமியர்களை சொந்த மாநிலத்திலேயே அகதியாக்கப்பட்ட கொடூரத்தையா சித்திரம் தீட்டினார்? அல்லது இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் நிகழ்த்திய கற்பழிப்பு வன்மத்தை வண்ணமாக்கினாரா? இல்லையே!

கடந்த ஐந்தாண்டுகளாக அவர் கற்ற ஓவியக் கலையில், தன்னுடைய கற்பனைத் திறனோடுகூடிய படைப்பை உருவாக்கினார். இத்தகைய படைப்பை படைக்கும் போது இது இந்து மதத்திற்கு எதிரானது என்றோ அல்லது இவ்வாறு செய்தால் அது சமூக குற்றம் என்றோ உணர்ந்து செய்யவில்லையே! ஏற்கனவே ஒரிசாவில் உள்ள சூரியக்கோவிலில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் போல் குஷன் முக லிங்கம் - முகமூடி அணிந்த லிங்கத்தையும், துர்கா-விஷ்ணுவை அரை நிர்வாண கோலத்திலும், இயேசுவின் சிலுவையை - அன்டைட்டில் என்ற தலைப்பலும் தனது படைப்பை வைத்திருந்தார்.

இந்த படைப்புகள் எப்படி இந்து மதத்தையும், இந்துக்களின் உணர்வையும் புண்படுத்துகிறது என்று தெரியவில்லை. நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து இந்துக்கோவில்களின் சுவர்களிலும், அதன் கோபுரங்களிலும் தீட்டப்பட்டுள்ள, சிற்பிகளால் படைக்கப்பட்டுள்ள சித்திரங்களை விட ஆபாசமாகவா (நாம் அதனை ஆபாசமாக கருதவில்லை; அது கலையின் உன்னதமான வெளிப்பாடு) இவர் வரைந்து விட்டார். மனித சிந்தனைக்கு அப்பாற்றபட்ட முறையில் புனைவது போன்ற சிலைகளைக்கூட இந்துக் கோவில்களில் காண முடிகிறதே! இதையெல்லாம் இந்துத்துவ சக்திகள் சிதைத்துவிட்டதா? அல்லது இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கோவில்களையெல்லாம் குப்புறப் புரட்டப்போகிறதா?

நிர்வாணம் ஒன்றும் பா.ஜ.க.விற்கு புதியதல்லவே! இதே குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷியின் கிலு, கிலு நிர்வாண லீலைகளை - ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சி.டி. மூலம் மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. வெள்ளி விழாவின் போது அம்பலப்படுத்தியதெல்லாம் பா.ஜ.க.வுக்கு நினைவில்லையா? அதுவும் சஞ்சய் ஜோஷி ஆர்.எஸ்.எஸ்.இன் கட்ட பிரம்மச்சாரியாச்சே!

எனவே, பா.ஜ.க. - சங்பரிவாரத்திற்கு நிர்வாணம் ஒன்றும் புதியதல்ல; அவர்களது இந்துத்துவ கலாச்சார சிந்தனை பாசிசத்தை அடிப்படையாக கொண்டு, சிறுபான்மை மக்களை, ஜனநாயக சக்திகளை, மதச்சார்பற்ற சக்திகளை, இடதுசாரி சிந்தனை கொண்டோரை வேட்டையாட எப்போதும் கடப்பாரையோடு அலைந்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம்தானே!

அது எப்போதுமே கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எதிரானதே என்பதை பயர், வாட்டர் படங்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், ஓவியர் எம்.எப். ஹூசைனின் ஓவியக் கூடாரத்தை அடித்து நொறுக்கியபோதும், காதலர் விழாக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்போதும் அவர்களது நிர்வாணமாகிப்போன பாசிச சிந்தனை வெளிப்பட்டது!


இந்துத்துவத்தின் வேர்கள் மனிதகுலத்திற்கே எதிரானது. அது இட்லரை மோடியின் வடிவில் இந்தியாவில் உலவ விட்டுள்ளது. உலகை உலுக்கும் இன்னொரு நூரன்பர்க்க விசாரணை இந்திய வரலாற்றிலும் நடைபெறும்! அந்தநாள் மிக விரைவில்!

இது தொடர்பான சில இணைப்புகள்:

11 comments:

மாசிலா said...

மிகவும் வருத்தமான செய்தி. திரைப்படங்களில் காண்பிப்பதை விடவா ஆபாசங்களும் அநியாயங்களும் இக்கலைஞர்கள் காண்பிக்கப் போகிறார்கள்?

பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Who banned Taslima Nasrin's novel
as demanded by muslim fundamentalists- Left Front govt
in w.bengal.
Who did not oppose when DMK and
Congress govts banned Davinci Code
(film) - the left
Who supported muslims in danish cartoon issue and condemned the
artists - the left in india.
These are just samples. So you folks are no better than the hindutva groups in censorship and in supporting govts banning books and films.
The record of erstwhile USSR and
current chinese govt in press freedom and censorship speaks
volumes about the tolerance of
the left.With so much blood
in your hands you cant take
a holier than thou attitude.
FYKI a pastor also objected
to that 'artwork' on Jesus and complained to police.

சந்திப்பு said...

நன்றி மாசிலா. மிகச் சரியாக சொன்னீர்கள் மாசிலா! இன்றைக்குகூட பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.ரேணுகா சவுத்தி ஒரு அபலைப் பெண்ணை ஏமாற்றி முத்தம் கொடுத்த செய்தியை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணே பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பா.ஜ.க.வின் தூய்மையான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். சங்பரிவாரக் கலாச்சாரக் கும்பல்களின் சீரழிந்த சிந்தனைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுகள் தேவையா?

சந்திப்பு said...

அனானி தசுலிமா நசிரீனின் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்குவங்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தானேயொழிய, மேற்குவங்க அரசு தானே முன்வந்து அந்த புத்தகத்தை தடை செய்யவில்லை. மேலும், மேற்குவங்கத்திற்கு பக்கத்தில் உள்ள நாடு பங்களாதேஷ் அந்த நாட்டில் இந்த புத்தகத்திற்கு எதிராக பெரும் பகுதி மக்களின் உணர்வு தூண்டப்பட்டு இருந்ததும், அதன் பாதிப்பு மேற்குவங்கத்திலும் இருந்ததை மறக்க இயலாது. மேற்குவங்கத்தில் இந்த விஷயத்தை பயன்படுத்தி மத அடிப்படைவாதிகள் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்துவதற்கும், மேற்குவங்க மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இது தசுலிமா நசிரீனின் கருத்துக்கு எதிரான சிந்தனையோடு செயல்பட்டதல்ல.

தமிழகத்தில் திமுக டாவின் சி கோடை தடை செய்தபோது, அதற்கு எதிராக குரல் எழுப்பியது சி.பி.எம். மட்டுமே. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதற்கு எதிராக கருத்தரங்குகளையும், ஆர்ப்பாட்டத்தையும் செய்ததெல்லாம் தங்களுக்கு எப்படி தெரியாமல் போச்சோ...

அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி சீனாவாக இருந்தாலும் சரி மக்களின் கருத்து சுதந்திரத்திற்கும், படைப்பு உரிமைக்கும் எதிராக இருப்பவர்கள் இடதுசாரிகள் அல்ல. அதே சமயம் ஏகாதிபத்திய சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகி அரசுக்கு எதிராக திட்டமிட்டு கலகம் செய்யும் எந்த நடவடிக்கையும் அரசு வேடிக்கை பார்க்காது.

இந்துத்துவ சக்திகள் அப்படியா? இல்லாத ராமரை வைத்து மசூதி இடித்ததுதம், இல்லாத பாலத்தை இருப்பதாக கதையளந்துக் கொண்டு அரசியல் நடத்துவதும், மொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கட்டுக்கதைகளை விட்டு தேசத்தை துண்டாடும், மக்களைக் கொல்லும் பாசிச செயலில் அல்லவா ஈடுபட்டுள்ளது.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Anonymous said...

West Bengal govt. banned her book
but later the High Court reversed it by declaring the ban as invalid.
Your govt. tried to justify the ban on the prextext of communal harmony. If one uses the same logic
the works by Chandramohan also
deserve to be banned.
You cannot have two scales when it comes to freedom of expression-one for those who support you/whom you support and one for those who oppose you/whom you oppose. The CPI(M) did not issue any statement
condemning the ban on Davinci Code
and you can check that in the party website or in party's weekly magazine.In Danish cartoon issue CPI(M) and CPI shamelessly sided with islamic fundamentalists.

சந்திப்பு said...

அனானி இந்த விஷயத்தில் மேற்குவங்க அரசு நசுரீனை கைது செய்யவோ, அல்லது அவரது புத்தகங்களை எரிக்கவோ, கிழித்து எறியும் செயலிலோ அல்லது அவரை தாக்கவோ அல்லது வேறு எந்தவிதமான வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால், குஜராத்தில் பாசிச வெறியர்கள், அதுவும் கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற சந்திரமோகனின் தேர்வு நடவடிக்கையோடு இணைக்கப்பட்ட படங்களை அடித்து நொறுக்கியதும், கல்லூரியை தங்களது வன்முறை களமாக பயன்படுத்தியதோடு, அம்மாணவரை கைது செய்ததும், கல்லூரி முதல்வர் பனிக்கரை பதவியில் இருந்து நீக்கியதும் காட்டுமிராண்டிச் செயலில்லையா? இதைப் பற்றி மவுனம் சாதித்துக் கொண்டு, பிரச்சினையை திசைத் திருப்புவதிலேயே கவனமாக இருக்கிறீர்கள்.

டாவின்சி கோடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சி.பி.எம். எதிர்த்ததை கீழ்கண்ட செய்தியில் காணலாம். அதேபோல்தான் இசுலாமியர்கள் சம்பந்தப்பட்ட கார்ட்டூன் விஷயத்திலும். எனவே, கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதில் பாசி°ட்டுகளே எப்போதும் முன்னிலையில் இருக்கின்றனர்.

http://tobaccoroadfogey.blog-city.com/the_da_vinci_code_marxists_oppose_ban_on_fanaa_code.htm

The Da Vinci Code: Marxists oppose ban on Fanaa, Code
« H » email link


Lending support to the campaign against disallowing of the screening of Fanaa in Gujarat and the ban on The Da Vinci Code in some states, West Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee on Saturday took credit for the trouble-free screening of the Tom Hanks starrer in his state.Complimenting the CPI(M) cultural Wing Praja Natya Mandali for initiating the signature campaign against 'culture policing' by Gujarat and some states buckling under pressure to ban the screening of The Da Vinci Code, the veteran Marxist leader, who was in Hyderabad in connection with the three-day Central Committee meeting, said "the screening of The Da Vinci Code in the Government theatre complex of Nandan was trouble-free. That is Bengal," he proudly remarked, praising the Bengali people's spirit of tolerance.The action of BJP workers in Gujarat in not allowing the screening of Fanaa was 'undemocratic and unconstitutional', party-led All India Democratic Women's Organisation National President and CPI(M) Central Committee member Subhashini Ali said, adding the Centre had set a bad precedence by viewing The Da Vinci Code along with some so-called religious leaders after the Censor Board had cleared it.Mr Arun Mehta, CPI(M) Central Committee member from Gujarat said people of his state were for the screening the film. But the ruling BJP "exerted pressure" on exhibitors and promised various tax concessions in return for not screening Fanaa, he claimed.Opposing the fundamentalist tendency, Kerala Culture Minister MA Baby said, "India, home of various ideologies, has a rich cultural tradition of tolerance." Not only secular and democratic forces, but all right thinking should join hands and oppose curbs on freedom of expression, he added.

What a shame a work of fiction is treated this way, very sad. Interesting that Marxists oppose the ban.

Anonymous said...

I am not defending BJP or hindutva
organizations in this regard.But the left is having double standards
on freedom of expression.Why should her book be banned in the
first place.The BJP also invoked the very same arguments against the
paintings. In Davinci Code issue you look at the CPI(M) website
and People's Democracy and notice the silence and the noise over
Fanaa not being screened in Gujrat.
In fact Davinci Code was banned in
more than one state.In Danish Cartoon issue there was so much violence in many countries.
The left did not defend freedom of
expression but sided with muslim
fundamentalists.Closer home, in your own state, the response of
CPI & CPI(M) members in the assembly on the attack on Dinakaran office is another example of this double standard.
Three persons were killed, public
property was damaged and Dinakarn
office was burnt yet after two days
the left leaders joined others in praising Karunanidhi. Some statements were issued by TN unit and the issue was simply ignored after that.Look at the website of CPI(M) and issues of Peoples Democracy.Is there any word on the attack on Dinakarn office. But there are words and words on what has happened in MS University.
If you use violence as yardstick why this hypocrisy. For you freedom
of expression becomes a serious issue only when you can use it against BJP/Hindutva.Otherwise it hardly matters.A party that has electoral alliance with fundamentalist outfits like TMMK can hardly be expected to defend freedom of expression.

சந்திப்பு said...

தினகரன் விஷயத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிலேயே சி.பி.எம். மட்டுமே நேரடியாக அழகிரி மீது குற்றம் சுமத்தியுள்ளதோடு. அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் சி.பி.எம். எம்.பி. மோகன் தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சி.பி.எம். எந்த விஷயத்திலும் இரட்டை நிலைபாடுகளை மேற்கொள்ளாது. நீங்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட நினைக்கிறீர்கள்... அது உள்ளாட்சி தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை சம்பவமாக இருந்தாலும் கூட சி.பி.எம். வன்மையாக கண்டித்ததோடு, இந்த வன்முறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கும் தொடுத்தது. தங்களது விவாதத்திற்கு நன்றிகள்...


Intolerance Condemned

The Polit Bureau of the Communist Party of India (Marxist) issued the following statement on May 25, 2006.


http://pd.cpim.org/2006/0528/05282006_pb%20statement-2.htm

THE virtual ban on the showing of the film Fanna in Gujarat is an indication of the extreme intolerance displayed by the ruling party and its organisations in Gujarat to any dissenting opinion. The reported assurance of police protection to any film theatre showing the film by the Chief Minister, Narendra Modi, is an eye-wash since it is under his leadership that the front organisations of the sangh combine are threatening film theatre owners against showing the film. The ire of the protesters is against the solidarity expressed by actor Aamir Khan for the demand for rehabilitation of the thousands of adivasi and peasant families displaced by the Narmada project.The state government is behaving as if it is above the Constitution of India which grants the freedom of expression to every individual. Such actions of the sangh combine in Gujarat under the patronage of the government has serious implications for democratic rights of the people of Gujarat and indeed for all Indian citizens. The CPI(M) demands that the Modi government and the party he leads uphold the law of the country.

Anonymous said...

That is what I wrote, some opposition and then big silence.
CPI(M) still responds to MS university incidents but now
does not talk of attack on Dinakaran. Why the Polit Bureau did not issue any statement when Davinci Code was banned.Gujarat govt. did not ban Fanna.But A.P,TN and Punjab banned the film Davini Code.Polit Bureau turned a blind eye on this issue but was keen on using the 'ban' on Fanna as another opportunity to condemn Modi's govt and BJP. This is an example of the double standard adopted by CPI(M). CPI(M) will project a local issue as a national/international issue if it can be used against BJP.Otherwise
CPI(M) wont make a big noise.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)