ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய ஐ.மு.கூ. அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை கொண்டு வந்தபோதே சங்பரிவாரம் உட்பட மேல் ஜாதி ஆதிக்கவாதிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, மருத்துவமனைகளை எல்லாம் முடக்கி தங்களது இழி முகத்தை காட்டிக் கொண்டனர். கடந்த 3000 ஆண்டுகளாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் பின் தங்கியே உள்ளனர். உயர் ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு மட்டுமே வாக்கப்பட்டதுபோல் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று அலறி வருபவர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ளவர்கள் சமூக நீதியை பற்றி கவலை கொள்ளாமல் எப்படி தீர்ப்பு அளிக்க முடியும்? மேலும், இடைக்கால தீர்ப்பில், பிற்படுததப்பட்டவர்களுக்கான சரியான பட்டியல் இல்லை என்ற சொத்தை காரணத்தைக் கூறியிருக்கிறார்கள் இதனை ஏற்க முடியாது. மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பையும் நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு என்பது பின்பற்றி வரும் சூழ்நிலையில் இத்தகைய தீர்ப்பு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். மேலும், இந்திய நாட்டில் நிலவும் ஜாதிய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டனர் என்ற சமூக அக்கறையற்ற தீர்ப்பாகவே இது தெரிகிறது. இதன்
மூலம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதன் மூலமே இதனை மீட்டெக்க முடியும்.
27% இட ஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் பிற்பபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த முறையான, முழுமையான தகவல் இல்லை என்று மனுதாரர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
Thanks:www.thatstamil.com
இடஒதுக்கீடு குறித்த முந்தைய பதிவுகள்
2 comments:
சுதந்திரம் அடைந்து இத்தனை காலம் வரை ஆதிக்க சாதிக்கார வகையராக்கள் மேல் பட்டப்படிப்புகள் படித்து மேதைகள் ஆகி இன்று வரை கிழித்தக்கொட்டுவதையும், நாட்டையும் சமுதாயத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்வதையும்தான் பார்க்கிறோமே! இன்னுமா இந்த கேடு கெட்ட சென்மங்களுக்கு போதவில்லை? படித்துவிட்டு அமெரிக்கனுக்கும் ஆங்கிலேயனுக்கும் குப்பைவாரி கொட்டப்போகும் மட சென்மங்கள் இன்னும் ஏந்தான் வெறி பிடித்து அலைகிறதோ? இதுநாள் வரை சமுதாயத்தை அழித்தது போதும். இனியும் பொறுப்பதற்கு ஏதும் இல்லை!
மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பையும் நடத்துகிறது.
No, census data does not include caste based information except for SC,ST.Census form collects data on religion and whether SC/ST and it does not collect information on
OBC,MBC etc.
Post a Comment