March 06, 2007

நவீன மூளிகளும்! நல்ல தங்காளும்


நல்லதங்காள் கதையை என் தாயார் பலமுறை சொல்லியுள்ளார். இருந்தாலும், அதனை சொந்தமாக வாசிக்கும் போது பெரும் தாக்கத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போதைய தமிழ்ச் சூழலில் இத்தகைய கதைகளை சொல்லும் கலை மறக்கடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியின் இரண்டு பெண்டாட்டி, நான்கு புருஷன் கதைகளில் நாளை என்ன நடக்குமோ? என்ற சிந்தனை தளத்திற்கு நம்மை இட்டுச் சென்று விட்டனர் நவீன மூளிகள்.


இதுபோன்ற கதைகள் மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். இத்தகைய கதைகளை மீண்டும் நம் தமிழ் குழந்தைகளிடம் கொண்டுச் செல்வதன் மூலம் வறுமையை, பசி, பட்டினி, வஞ்சகம், வைராக்கியம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற பலதரப்பட்ட உணர்வுகளை உணர வைக்க முடியும்.


இந்த கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிதுதான் எனினும், உலக இலக்கியத்தோடு இதனை ஒப்பிட முடியுமா? இது எத்தகைய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வங்க நாவல் ‘அனந்த மடம்’ பஞ்சத்தின் கோலத்தை பெரும் நாவலாக விரித்துச் சென்று, பஞ்சத்தின் கோர முகத்தை நமக்கு விரித்துச் சொல்லும். ஆனால், அதைவிட அதே சமயம் பஞ்சத்தின் கோரம் எந்தவிதத்திலும் சரியாத அளவிற்கு நம்முடைய நல்லதங்காள் கூறுகிறது. மேலும், விக்டர் ஹியூகோவின் ‘ஏழை படும் பாடு’ என்ற நாவலோடு ஒப்பிட்டப் பார்க்கும் போது முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வறுமை பாந்தோனை எப்படி விபச்சாரத்திற்கு தள்ளுகிறது என்பதையும், ஜீன் வால்ஜின் தன்னுடைய சகோதரிகளுக்காக வெறும் ரொட்டியை திருட முயற்சி செய்தபோது, காவலர்கள் அவனை உலக மகா திருடனாக சித்தரித்த விதம் இந்த முதலாளித்துவ சமூகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற தாக்கத்தை உருவாக்குகிறது. நம்முடைய நல்லதங்காளில் இயற்கையின் பஞ்சம், அதனால் ஏற்படும் தாக்கமாக மட்டுமே விரிகிறது.


வங்க பஞ்சத்தின் போது 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானது கூட நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தவறான - முதலாளித்துவ ஏற்றுமதி கொள்கையால்தான் ஏற்பட்டது. எனவே, பஞ்சத்திற்கு இயற்கை ஒரு காரணமாக இருந்தாலும் கூட, ஆட்சியாளர்களே பெரும் காரணமாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்தும் கூற்று.


நல்ல தங்காள் கதை, அனந்த மடம், ஏழை படும் பாடு... இவைகள் அனைத்தையும் நாம் ஒருசேர வாசிக்கும் போது பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். மொத்தத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களின் வாழ்க்கைக்கும் எதிரியாக இருப்பது முதலாளித்துவ, ஏகாதிபத்திய சமூக அமைப்பே! ஆப்கானி°தானில் இருந்து ஈராக் வரையும், சோமாலியாவில் முதல் உகாண்டா வரை நீடிக்கும் வறுமைக்கும் துன்பத்திற்கும் காரணம் முதலாளித்துவ பேரரசு அமைப்பே! குறிப்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் அதன் கார்ப்பரேட் தலைவர்களும் உலக மக்களையே சூறையாடி வருகிறார்கள்.
இத்தகைய துன்பத்தையும், அதற்கெதிரான போராட்டங்களையும் கிளர்ந்தெழச் செய்திட நவீன மூளிகளான பேரரசுவாதிகளை அம்பலப்படுத்திட, தேவை நவீன நல்ல தங்காள்!

2 comments:

Anonymous said...

அமெரிக்காவும், பிரிட்டனும் அதன் கார்ப்பரேட் தலைவர்களும் உலக மக்களையே சூறையாடி வருகிறார்கள். இத்தகைய துன்பத்தையும், அதற்கெதிரான போராட்டங்களையும் கிளர்ந்தெழச் செய்திட நவீன மூளிகளான பேரரசுவாதிகளை அம்பலப்படுத்திட, நவீன நல்ல தங்காள்!

Anonymous said...

see this
http://www.thp.org/reports/sen/sen890.htm

The issue relates also to the Chinese famines of 1958-61 in which, as was mentioned earlier, possibly up to 30 million people died. The Chinese government, despite being politically very committed to eliminating hunger in general, did not substantially revise its disastrous policies associated with the failed "great leap forward", during the three famine years. The lack of a free system of news distribution misled the government itself, fed by its own propaganda and by rosy reports of local party officials competing for credit in Beijing. Indeed, there is evidence that just as the famine was moving towards its peak, the Chinese authorities mistakenly believed that they had 100 million more metric tons of grain than they actually did.31

No less importantly, the lack of a free news media and the absence of opposition parties entailed that the government was not subjected to adversarial critique for its disastrous failure to save its population from starvation and famine. During that terrible calamity the government faced no pressure from newspapers, which were controlled, or from opposition parties, which were absent. Perhaps the most important reform that can contribute to the elimination of famines, in Africa as well as in Asia, is the enhancement of democratic practice, unfettered newspapers and - more generally - adversarial politics.

-----------------------------------
I am citing from Amartya Sen lest you start thinking that this is capitalist slander against China
and Mao.Blaming capitalism is easy but to acknowledge that socialist
governments have also failed in
eliminating famine is difficult.
As Sen points out lack of democracy in the real sense is a
major factor.So the problem is
with post-revolutionary politics
and suppression of dissent in
socialist countries.This is a harsh fact which cant be denied.
Will Theekathir or Puthu Visa will
ever publish the translation of this talk by Sen.
ravi srinivas