April 13, 2006

பிராமணர் ஆதிக்கமா நிலவுகிறது ஐ.ஐ.டி.யில்?

திறமைக்கு மதிப்பு இருக்காது: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். சர்ச்சை! என்ற பதிவைத் தொடர்ந்து - எழுந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் முகமாகவும், உண்மையில் ஐ.ஐ.டி.யில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம்தான் மத்திய அரசு அமலாக்கவுள்ள ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீடு நியாயமானதா? இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும். மேலும், இந்த பதிவு ஐ.ஐ.டி.யில் நடக்கும் உண்மையை நிலையை வெளிக்கொணரும் முகமாக பதியப்படுகிறதே தவிர, ஒரு குறிப்பிட்ட (பிராமண) சமூகத்திற்கு எதிரான பதிவு அல்ல என்பதையும் முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

உயர் கல்வி நிறுனங்களான நாடு முழுவதும் உள்ள ஆறு ஐ.ஐ.டி.களுக்கு நம்முடைய மத்திய அரசு ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதில் சென்னை ஐ.ஐ.டி. மட்டும் 88.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, 2000ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மொத்தத்தில் ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். - ஐ.ஐ.எ°. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மானியமாக பெறுவது 90 சதவீதத்திற்கும் மேலான தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் செலுத்திய வரியின் ஒரு பகுதிதான் என்பதை முதலில் தெளிவுபடுத்திடுவோம். இருப்பினும், இந்நிறுவனங்களில் இம்மக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்பட்டதா? என்பதுதான் நம் கேள்வி!

இன்றைக்கு நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி.க்கள் செயல்படுகின்றன. 1950களுக்கு பிறகு இந்தியாவில் உயர் தொழில்நட்ப கல்வி தேவையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டவைகள்தான் இந்த ஐ.ஐ.டி.க்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் - இந்திய ஆட்சியதிகாரத்தின் பெரும் பகுதியாக தங்களை கட்டியமைத்துக் கொண்ட பிராமணர்கள். இத்தகைய உயர் கல்வியிலும் தங்களை ஆரம்பம் முதலே நிலை நிறுத்திக் கொண்டனர். தற்போது இந்த கல்வி நிறுவனங்களில் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இது தவிர பல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்களும் உள்ளனர்.

இந்த கல்வி நிறுவனங்களில் முழுக்க - முழுக்க மேல்ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல்கள் வந்ததைத் தொடர்ந்துதான் முதன் முதலில் கல்வியில் 1973இல் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 53 ஆண்டுகாலம் இந்த மக்களை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காமல் பெரும் இரும்புத்திரையைப் போட்டு இறுக்கி வைத்திருந்தது மேல்ஜாதியாதிக்கம். அரசு இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தாலும், அந்த இடஒதுக்கீடும் முழுமையாக அமலாகவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை நிலவுகிறது. அடுத்து, ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களில் 100 சதவீதம் பிராமணர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. ஆசிரியர்கள் விஷயத்தில் இன்னும் இடஒதுக்கீடு என்ற விஷயத்தையே முழுமையாக பின்பற்றுவதில்லை.

உதாரணமாக, சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் பணிபுரியும் 427 ஆசிரியர்களில் இரண்டுபேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். 20 பேர் ஓ.பி.சி., மீதி 400 பேர் பிராமணர்கள். இதில் எங்காவது சமூக நீதி இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைத்தான் உள்வட்டம் என்று என்னுடைய முதல் பதிவில் தெரிவித்து இருந்தேன். இன்றைக்கு 90 சதவீத பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆசிரியர்கள் பல்வேறு அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும் உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசு, இவர்களுக்கான ஆசிரியர்களை ஒதுக்குவதிலும் கட்டாயம் ஒதுக்கீட்டை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. இதை வைத்துதான் ஐ.ஐ.டீ.யை செல்லமாக இவ்வாறு அழைக்கின்றனர் ஐயர் - ஐயங்கார் டெக்னாலஜி என்று. இந்த ஆசிரியர்களில் ஒருவர் கூட இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது இன்னொரு கொடுமை! இவர்களில் பெண் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் என்பதும் கேள்விக்குறியே!

இது தவிர சென்னை ஐ.ஐ.டி.யில் 1983 ஆண்டு கணக்குப்படி 800 தலித் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 796 பேர் துப்புறவு பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? உயர் கல்வி, நிறுவனங்களின் உயர் பதவிகள், அரசின் உயர் மட்டம் என பல இடங்களிலும் இன்றைக்கும் உயர் ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. சுதந்திர இந்தியாவில் எத்தகைய மாற்றம் இன்னும் நிகழ வேண்டியிருக்கிறது என்பதை இதன் மூலம் உணரலாம்.

அதே போல் வினாய் கிர்பால் - மீனாட்சி குப்தா ஆகியோர் இணைந்த மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 1989 - 1992 காலகட்டத்தில் 5868 மாணவர்களில் 616 பேர்தான் தலித் - பழங்குடி மாணவர்கள். அதாவது வெறும் 10.49 சதவீதம்தான். தலித் - பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அளவு 22.5 சதவீதம். ஆனால் அமலாக்கப்பட்டதோ வெறும் 10 சதவீதம்தான். மத்திய அரசு இடஒதுக்கீடு என்று அறிவித்த பின்பே நிலவும் உண்மை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த விபரம். இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லையென்றால் என்ன நிகழும். 100 சதவீதமும் மேல்ஜாதி ஆதிக்கமே நிலவுவதற்கு வழி வகை செய்யும். எனவே மத்திய அரசு தற்போது கொண்டு வரும் ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டை எந்தவிதமான காலதாமதமும் இன்றி இந்த கல்வியாண்டிலேயே அதை அமலாக்கிட வேண்டும். இதுவே இந்திய மக்களில் 90 சதவீதம் பேரின் எதிர்பார்ப்பு.

இது தவிர தலித் - பழங்குடி மக்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதாவது வழங்கப்படும் விண்ணப்பங்கிலேயே இரண்டு விதமான கலர் உபயோகப்படுத்தப்படுகிறது. அதே போல் கேள்வித்தாள்களிலும் இந்த முறை அமலாக்கப்படுகிறது. இதுவே தலித் - பழங்குடி மக்களை அடையாளம் காட்டும் கருவியாக மாற்றப்படுகிறது. எனவே மத்திய அரசு உயர் கல்வி மட்டுமல்ல எந்தவிதமான விண்ணப்பமாக இருந்தாலும் அதில் சமத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஆசிரியர் விகிதத்தில் தலித் - பழங்குடி - ஓ.பி.சி. காம்பினேஷன் சரி செய்யப்படாமல், என்னதான் இடஒதுக்கீட்டை வைத்தாலும், அதுவே தடையரன்களாகி விடுவதற்கான வாய்ப்பாக உள்ளது. எனவே இந்த தடையரனையும் மத்திய அரசு தூக்கியெறிய வேண்டும்.

இறுதியாக பெண்கள். தற்போது மத்திய அரசு அறிவிக்கும் இடஒதுக்கீட்டின் அளவு மொத்தமாக 49.5 சதவீதம்! இந்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டத்தையும் உடனடியாக திருத்திட வேண்டும். அல்லது மாநில அரசுகள், அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப திருத்திக் இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு சட்டத்தில் வாய்ப்பளிக்க வேண்டும். இப்போதுகூட மத்திய அரசு அமலாகவுள்ள இடஒதுக்கீட்டின் மூலம் அநிதியே நிலவுகிறது. அதாவது முழுக்க முழுக்க உயர் ஜாதியினருக்கு 50 சதவீதம் செல்வதற்குத்தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே மத்திய அரசு 49.5 சதவீத இடஒதுக்கீடு போக, மேலும் பெண்களுக்கு என்று 50 சதவீத இடஒதுக்கீடும், உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு என்று 5 சதவீத இடஒதுக்கீடும் அளித்தால்தான் சமூகத்தில் உயர் கல்வியில் ஒரு சமத்தன்மையை எட்டிட முடியும்.

இது தவிர இந்தியாவில் தற்போது பல கல்விமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதாவது, State Board, Matriculation, CBSC.... எதற்காக இப்படி பல்வேறு கல்விமுறைகள் ஒரு நாட்டில் பின்பற்றப்படுகிறது. இதுதான் உயர் ஜாதி ஆதிக்கத்தை மத்திய அரசே நிலைநாட்டிட மத்திய அரசே ஏற்படுத்தி தரும் வாய்ப்பாகி விடுகிறது. எனவே, முதலில் இந்த முறையை மாற்றி நாடு முழுவதும் ஒரே கல்விமுறையை கொண்டு வரவேண்டும். இதில் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.

இவையெல்லாம் இருந்தாலும் கூட, இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை! இந்த ஏற்றத்தாழ்வை - சரிப்படுத்திட அனைத்து மட்டத்திலும் உரிய மாற்றங்களை ஏற்படுத்த மத்திய - மாநில அரசுகள் உரிய திட்டங்களை செய்திட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்ச்சி அதிகப்படும்போதுதான் இவைகள் காலம் கடந்தாவது அமலுக்கு வரும்!
Thanks:
Dalit Media Network, Chennai

80 comments:

நன்மனம் said...

\\இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை!\\

மற்ற எல்லாவற்றிற்கும் புள்ளி விவரம் கொடுத்த அந்த "Dalit Media Network, Chennai" இதற்கு மட்டும் புள்ளி விவரம் கொடுக்காமல் விட்டது ஏன்? ஏன் என்றால், பொருளாதார ரீதியில் உயர்ந்த இடத்தில் உள்ள BC,OBC எல்லோரையும் சொல்ல வேண்டி வரும். எதற்கு பொல்லாப்பு. நல்ல நடுநிலை.

அருண்மொழி said...

Good posting.

//தற்போது மத்திய அரசு அறிவிக்கும் இடஒதுக்கீட்டின் அளவு மொத்தமாக 49.5 சதவீதம்! இந்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டத்தையும் உடனடியாக திருத்திட வேண்டும். அல்லது மாநில அரசுகள், அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப திருத்திக் இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு சட்டத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்.//

The tamilnadu government tried to increase the reservation to 69%. But every year some group of people go to the Avaal court (supreme court) and get a stay order.

Anonymous said...

எல்லாம் சரிதான்.

தகுதி என்று வாய்கிழிய பேசும் ஆட்கள்
50 மதிப்பெண் பெற்றால் பாஸ் என்ற அடிப்படையில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை சேர்த்துக்கொள்ளலாமே ?

மார்க் மார்க் என்று வாய்கிழிய கதறும் ஆட்கள் யாராவது வேண்டுமென்றே மார்க் குறைவாக வாங்க ஆசைப்படுவார்களா என்பதையும் யோசிக்கவேண்டும்..

பல தலைமுறைகளாக கல்வி என்பதை காணாதவர்கள் உடனடியாக ஐ.ஐ.டியில் முதல் மார்க் வாங்கிவிடமுடியாது.(என் கணக்குப்படி குறைந்தது இரண்டு தலைமுறை அதிகபட்சம் மூன்று தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு ஒரு குடும்பத்திற்கு தரப்படவேண்டும்.
( நூறு ஆண்டுகள்.தலைமுறை 33 வருடங்கள்)

ஏற்கனவே அம்பிகளைவிட மற்ற பிற்படுத்தப்பட்டோரில் அறிவாளிகள் வந்துவிட்டனர் என்று சில அம்பிகள் அலுத்துக்கொள்வதில் நியாயம் உள்ளது.ஆனால் கல்வி தொடாத பிற்படுத்தப்பட்டோரும் உள்ளனர் என்பதைத்தான் அம்பிகளின் சுயநலம் பார்க்க மறுக்கிறது.

Anonymous said...

3000 ஆண்டுகள் செய்த கொடுமையை 100 ஆண்டுகள் ஒரு குடும்பத்திற்கு கொடுப்பதன் மூலம் அம்பிகள் பிராயச்சித்தம் பெற்றுக்கொள்ளலாம்.

உடனே 100 * மொத்த குடும்பங்கள் என்று ஐ.ஐ.டி கணக்கு போடவேண்டாம்.

Anonymous said...

உள்வட்டம் வெளிவட்டம் என்று நீங்கள் எழுதியதில் அந்த பயிற்சி பள்ளிகளை மட்டும் அடிப்படையாக எடுத்துக்கொண்டு சில அம்பிகள் தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.இதுதான் அவர்களின் விவாதத்திறமை.

Anonymous said...

சிலர் பால்வாடியில் வேண்டுமானால் இடஒதுக்கீடு வைத்துக்கொள்ளலாம் என்று கூறுவது இன்னும் பயங்கர காமெடி

தயா said...

//மார்க் மார்க் என்று வாய்கிழிய கதறும் ஆட்கள் யாராவது வேண்டுமென்றே மார்க் குறைவாக வாங்க ஆசைப்படுவார்களா என்பதையும் யோசிக்கவேண்டும்..//

ஆமாம் இட ஒதுக்கீட்டினால் 50 வாங்கினாலே சீட் கிடைத்து விடும் என்றால் ஏன் படிக்க வேண்டும்? 100 க்கு முயற்சி செய்ய வேண்டும்?

தயா said...

எனக்கு இட ஒதுக்கீட்டின் அரசியல் தேவையில்லை. ஆனால் இட ஓதுக்கீட்டு முறையை கல்லூரியளவில் செயல்படுத்த யோசிப்பதை விட அவர்களின் திறனை தரத்தை அறிவை மேம்படுத்த அரசு என்ன செய்திருக்கிறது என்பதைத் தான் கேள்வி கேட்கிறேன். இங்கே இணையத்தில் விவாவதிப்பவர்களும் ஆதிக்கத்தை பேசுகிறீர்களே ஒழிய உருப்படியான யோசனைகளை முன்வைப்பதில்லை.

ஓரு குழந்தையின் திறனை கண்டு பிடிக்க முடிவது பள்ளியில் தான். ஆனால் அங்கே போதுமான தரமான ஆசிரியர்கள் இல்லை. ஊக்குவிக்க ஆளில்லை. நல்ல நூலகங்கள் இல்லை. கல்வி நிறுவனங்கள் இல்லை.

இந்தியாவிற்கு இன்றைய தேவை திறனுள்ளவர்களே. அவர்கள் எந்த ஜாதியென்று கவலை கொள்ள தேவையில்லை.

1)நீங்கள் சொல்வது போல IIT, IIMல் லாபி சேர்ந்துகொண்டு SC/ST/OBC சேரக்கூடாது என நிர்பந்திக்கிறார்களா? (சத்தியமாய் எனக்கு தெரியாது!)
நுழைவுத் தேர்வுகள் கூட இன்று
2)Objective ஆக மாறி அவைகள் திருத்தப்படுவதும் கணிணியின் உதவியுடன் தான். (இங்கே இடையில் புகுந்து மதிப்பெண்களை நீங்கள் குறிப்பிடும் பிராமணர்கள் திருத்துகிறார்களா?)
3)இல்லை கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்த பின் பிராமணர் பிராமணரல்லாதவர் என பாரபட்சம் காட்டுகிறார்களா?
4)நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால் மதிப்பெண் குறைக்கப்படுகிறதா?

இவையெல்லாம் நடநந்தால் இந்த ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டியவையே.

பிகு: அனானிமஸ் குறிப்பிடும் அம்பி அடியேன் நான் தான் என நினைக்கிறேன். ஏனென்றால் சந்திப்பின் அந்த கருத்தை மற்றவர்கள் பதிப்பிலும் குறிப்பிடுவது நான் தான். அம்பி என்பது ஜாதியென்றால் நான் அம்பி இல்லை என சொல்லிக்கொள்ள விருப்பப்படுகிறேன். இது விவாவத்திறமை இல்லை தான். ஆனால் அந்த கருத்து உங்கள் வாதத்திற்காக ஓப்புக்காக புனையப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

அப்படியும் நடக்கிறது நாங்கள் கண்டிருக்கிறோம் என சொல்வீர்களேயானால் நான் தெளிவடைவேன். என் கருத்தையும் மாற்றிக்கொள்வேன்.

Anonymous said...

தம்பி அறிவுசீவி,

எல்லா பிற்படுத்தப்பட்டோருக்கும் அம்பது மார்க் எடுத்தா சீட் தர்றாங்களா? எங்க?

ravi srinivas said...

There is no reservation for OBCs in IITs.I justify this as they are institutes of higher education and
research.Here caste should not be a
factor in admission or appointment.
OBCs in India have been pampered by the state.In Tamil Nadu OBCS are dominant in trade,industry,
agriculture, media and politics.
The so called forward castes are
discriminated against.

Anonymous said...

I think there is a confusion in the number of IITs. At present there are 8 IITs including Roorkee.

Anyway, why should we look at these 8 IITs alone? The world is bigger than this. Why cann't we raise the other universities to the same standard of IITs?? I think in most of the universities, at least TN, the reservations are followed. If the unviversity standards are brought up, there would be equal chances to everyone.

It is clever to solve the problems than fighting on the deominance!!

Anonymous said...

தம்பி தயாளா,

நீ அம்பி இல்லை என்றாலும் சந்தோஷம்தான். அறிவுத்திறனை அதிகரிக்க நீ ஏதாவது யோசனை சொன்னால் சரிதான்..ஆனால் அது பால்வாடியில் இடஒதுக்கீடு என்பது போல் இருக்கக்கூடாது.சோறு இல்லாமல் இருப்பவனிடம் போய் ஃபைவ் ஸ்டார் சமையல் பற்றி பேசக்கூடாது.சரியா?

மூன்று தலைமுறை இடஒதுக்கீடுப்பற்றி நான் சொன்னதுப்பற்றி நீ ஏதாவது சொல்லலாமே?

பொதுவாக ரெபரன்ஸ் மூலம் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கிக்கொண்டு நாமெல்லாம் (நானும்தான்) கால் மேல் கால் போட்டுக்கொண்டு இடஓதுக்கீடா..சீச்சி என்று எழுதுவது ஈஸி..இன்னும் கல்வியே எட்டிப்பார்க்காத எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன என்று யோசி.


நீ அடிப்படையை புரிந்துகொள்ளாமல் அல்லது புரியாதது போல் நடிக்கவேண்டாம்.திறமை என்று நீ சொல்லுவது ஏன் சிலருக்கு மட்டும் இருக்கிறது ஏன் இல்லை என்பதைத்தான் நான் எழுதி உள்ளேன்.

ravi srinivas said...

இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை!

A BIG LIE

Anonymous said...

ஏற்கனவே அம்பிகளைவிட மற்ற பிற்படுத்தப்பட்டோரில் அறிவாளிகள் வந்துவிட்டனர் என்று சில அம்பிகள் அலுத்துக்கொள்வதில் நியாயம் உள்ளது.ஆனால் கல்வி தொடாத பிற்படுத்தப்பட்டோரும் உள்ளனர் என்பதைத்தான் அம்பிகளின் சுயநலம் பார்க்க மறுக்கிறது

Dharumi said...

இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை!

A BIG LIE//

????

:-)))

சந்திப்பு said...

மற்ற எல்லாவற்றிற்கும் புள்ளி விவரம் கொடுத்த அந்த "Dalit Media Network, Chennai" இதற்கு மட்டும் புள்ளி விவரம் கொடுக்காமல் விட்டது ஏன்?


நன்மனம் இங்கு விவாதிக்கப்படும் முக்கிய விஷயத்தில் தங்கள் கருத்தை தெரிவிக்காமல், இதற்கு எங்கே புள்ளி விவரம் என்று கேட்கும் உங்கள் அப்பாவித்தனம்தான் இங்கு வெளிப்படுகிறது. ஐயா, கொஞ்சம் தமிழக, இந்திய கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறத்தில் உள்ள சந்து - பொந்துகளுக்கும் சென்று பாருங்கள் இந்த புள்ளி விவரம் சரியா? இல்லையா என்று!


-----------------------------------

நன்றி அருள்மொலி... இங்கு நடக்கும் விவாதத்தில்கூட பாருங்கள் யாருடைய ஆதிக்கம் ஓங்கி நிற்கிறது என்று! நாமெல்லாம் இன்னும் ஓடவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவர்கள் அலறுவது எதற்காக என்று புரியவில்லை!

----------------------------------


அதிகபட்சம் மூன்று தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு ஒரு குடும்பத்திற்கு தரப்படவேண்டும்.

அனானி இந்த கருத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. 3000 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டவர்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்று பேச்சை துவக்கம் போதே, அதன் கழுத்தில் கத்தியை வைப்பவர்களை என்னவென்று சொல்லலாம். இப்படித்தான் பௌத்தர்களையும், சமணர்களையும் ஒழித்தார்கள்! இன்றைக்கு...
-----------------------------------

நன்மனம் said...

//ஆனால் கல்வி தொடாத பிற்படுத்தப்பட்டோரும் உள்ளனர் என்பதைத்தான் அம்பிகளின் சுயநலம் பார்க்க மறுக்கிறது \\

அம்பி இல்லாதவரின் சுயநலம் தான் அதிக காரணம், இதில் அம்பிகளை கூறி குளிர் காயும் கூட்டம் தான் இந்த அனானி கூட்டம்.

ஸ்ரீதர்

Anonymous said...

அம்பி என்ற வார்த்தை உங்களை காயப்படுத்தினால் தகுதி இல்லை தகுதி இல்லை என்ற வார்த்தை அவர்களை எப்படி காயப்படுத்தும்? (வாய்ப்பு இல்லாததாலே தகுதி இல்லை என்பதுதானே உண்மை)

போன தலைமுறை பிற்படுத்தப்பட்டோரையும இந்த தலைமுறை பிற்படுத்தப்பட்டோரையும் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள் ஐயா

சந்திப்பு said...


எனக்கு இட ஒதுக்கீட்டின் அரசியல் தேவையில்லை. ஆனால் இட ஓதுக்கீட்டு முறையை கல்லூரியளவில் செயல்படுத்த யோசிப்பதை விட அவர்களின் திறனை தரத்தை அறிவை மேம்படுத்த அரசு என்ன செய்திருக்கிறது என்பதைத் தான் கேள்வி கேட்கிறேன்.


தயா அண்ணா, சூப்பரா பேசுறீங்கன்னா, இங்க பிரச்சினையே இடஒதுக்கீடுதான். அதுவும் உயர் கல்வியில் இடஒதுக்கீடு! இப்ப அதை விட்டுட்டு வேற எத பேசலாம்னு நீங்க சொல்றீங்க!

அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி இதெல்லாம் வேறு ஒரு தளத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள். இப்போதைக்கு நீங்கள் ஐ.ஐ.டி. விஷயத்தை இத சொல்லி திசை திருப்பிட வேண்டாம்னா!

நன்மனம் said...

அய்யா சந்திப்பு, இங்கு கூறி இருக்கும் வளர்ந்த பிராமண சமுகம் எவ்வளவு, வளர்ந்த BC,ஓBC எவ்வளவு என்பதை நிங்களும் தமிழக கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறத்தில் உள்ள சந்து - பொந்துகளுக்கும் சென்று பாருங்கள், புள்ளி விவரம் புரியும். இந்த பதிவில் முக்கிய விசயத்தின் ஊடே இது போன்ற திரிப்பு விசயத்தை நுழைத்து விட்டு அதை பார்க்க கூடாது என்றால் எப்படி?

சந்திப்பு said...


In Tamil Nadu OBCS are dominant in trade,industry,
agriculture, media and politics.
The so called forward castes are
discriminated against.

ரவி சீனிவாசன், தஞ்சாவூர்ல மொத்த விவசாயத்தையும் கண்ரோல் பண்ணதே ஐயரும், ஐயங்கார்களும்தான். அடுத்து நீங்க சொல்லியிருக்கிற மீடியாவுல 80 சதவீதம் பேர் உயர்ஜாதியினர்தான். இதுகுறித்து உங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களை கேட்டு அறிந்து கொள்ளவும். தொழில்துறையிலும் அவர்கள் ஆதிக்கமே அதிகம் ஐயா (டி.வி.எ°., சிம்சன்...) அதவிட இதுல முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இந்தியாவில் உள்ள பல பெரிய முக்கிய நிறுவனங்களின் ஷேர்களை எல்லாம் வைத்திருப்பது யார் தெரியுமா? உயர்ஜாதியினர்தான். சரிங்க உங்களுடைய விவாதமும் ஒரு வகையான திசை திருப்பல்களே! அதாவது, இங்கெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் இருந்தால், உயர் கல்விக்கு வரக்கூடாது, இடஒதுக்கீடு கேட்பது நியாயமில்லை என்று சொல்ல வர்றீங்களா!

Anonymous said...

Nadars,Gounders and Thevars are the dominant castes in Tamil Nadu.
Maran family will come under OBC.Are they backward in any sense.
Ramadoss , his son and grandchildren are OBCs.Are they backward in terms of economic or social status.Ask yourself honestly whether OBCs in Tamilnadu
deserve reservation.

சந்திப்பு said...


Nadars,Gounders and Thevars are the dominant castes in Tamil Nadu.
Maran family will come under OBC.Are they backward in any sense.
Ramadoss , his son and grandchildren are OBCs.Are they backward in terms of economic or social status.Ask yourself honestly whether OBCs in Tamilnadu
deserve reservation.


அனானி கறுப்பு கலர்ல எதுவுமே தெரியாத ஒரு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தமிழகத்தையும், இந்தியாவையும் பார்த்தா இப்படித்தான் தெரியும், இதுக்குத்தான் தமிழகத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று அதுபோலத்தான் இருக்கு உங்க ஆர்க்யூமெண்ட்.

ராமதாசோ, மாறன் குடும்பமோ பிற்படுத்தப்பட்டவர்கள் விஷயத்தில் சேர்க்க முடியாது. (இதுபோன்றவர்களைத்தான் கிரீமி லேயர் என்று சூப்ரீம் கோர் கூறியுள்ளது. இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்.) ஆனால் ராமதாசு வகையறாக்களான வன்னியர்களும், நாயக்கர்களும், மாறன் வகைறாக்களும் இன்றைக்கும் கோடிக்கணக்கானோர் மிக பின்தங்கிய - நிலையில்தான் இருக்கிறார்கள். எனவே தங்களது விவாதத்தில் உள்ள தவறை நீங்கள் உணராமல் இதற்கெல்லாம் விடை கிடைக்காது.

Voice on Wings said...

ஏற்கனவே கேள்விப்பட்டதுதான், இருந்தும் புள்ளி விவரங்களை அளித்து சரியான நிலவரத்தைத் தெளிவுப் படுத்தியதற்கு நன்றி, சந்திப்பு.

தலித்களுக்கு இருக்கும் 22.5% ஒதுக்கீடும் சரியாக வழங்கப் படவில்லை என்ற தகவல் திடுக்கிட வைக்கிறது. மேற்கொண்டு ஒதுக்கீடுகள் வந்தாலும் அவை சரியாக வழங்கப் படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையே இது வலியுறுத்துகிறது. இல்லாவிட்டால் "நாங்கள் இந்திய சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்" என்று கூறிக்கொண்டு, தங்களுக்கு்த் தோன்றியவற்றையே செய்து கொண்டிருப்பார்கள்.

முத்து(தமிழினி) said...

வங்கி எழுத்து தேர்வுகளில் பாஸ் செய்யும் தலித் மக்களை இண்டர்வ்யூவில் வடிகட்டுவதை நான் பார்த்திருக்கிறேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சந்திப்பு said...

"நாங்கள் இந்திய சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்"

அவர்களுக்கு மனு நீதிதான் ஒரே சட்டம். அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் சூத்திரர்களுக்கு கல்வி உரிமையை இன்றைக்கும் மறுத்து வருகிறார்கள். நன்றி வாய்சு ஆப் விங்.

வங்கித்துறையில் நடப்பவற்றை வெளியில் சொல்ல முத்தான முத்து இருப்பதால், இந்த விவரம் நமக்கு தெரிய வருகிறது. ஆனால் ஐ.ஐ.டி.யில்?

Anonymous said...

Mr.Muthu
Dont try to bluff.In all interview panels , including interviews for promotion there will be a SC person if the candidate is a SC.So if there is any injustice in the interview the SC person will protest and protect the SC candidtate.In many banks there
are SC and ST unions also.

In all Banks SC and ST
quota is filled without any
exception.Banks also arrange for
pre recuritment training for SCs and STs free of cost.As an ex-officer in a bank i know all this.
In banking and insurance companies
owned by govt. and in SBI the
SCs and STs are fully protected.
In fact they have quotas for
promotions too.I can give figures to prove that the reservation norms for SCs and STs are fully
complied with.Tell me in which
bank SC/ST quota is not followed.

முத்து(தமிழினி) said...
This comment has been removed by a blog administrator.
ravi srinivas said...

ஒரு காலத்தில் பிராமணர்கள் வசம் ஏராளமான நிலம் இருந்தது.அதெல்லாம் போன நூற்றாண்டின் துவக்கத்திலும், அதற்கு முன்பும்.இப்போது பிராமணர்களில் நிலச்சுவன் தார்கள் என்பவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் வசமே இன்று மிக அதிக நிலங்கள் உள்ளன. சன் டிவி குழுமம், தினத்தந்திகுழுமம் யாரிடம் இருக்கிறது - பிராமணரிடமா. மிகப் பெரும்பான்மையான தொழில்,வணிக நிறுவனங்கள் பிராமணர்ல்லாதோர் வசம் இருக்கின்றன.
நாடார்கள் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் பாங்க. கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் எத்தனை பிராமணர்களிடம் இருக்கின்றன, எத்தனை கவுண்டர்கள், நாயுடுகள்,
செட்டியார்களிடம் இருக்கின்றன. சிவகாசியிலும், விருதுநகரிலும் கொடிக்கட்டி பறப்பது
பிராமணர்களாக. மொத்த வியாபாரம் முதல் சில்லறை வியாபாரம் வரை வியாபாரத்தில் எந்த
சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று யோசியுங்கள். பிராமணர்களை
திட்டுவதன் மூலம் உண்மைகளை மறைத்து விட முடியாது. .

ravi srinivas said...

ஏன் ஐ.ஐடிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதை என் பதிவில் எழுதியிருக்கிறேன்
ravisrinivas.blogspot.com

சந்திப்பு said...

Thankyou Ravi Srinivas

I will put comment on your article tomorrow.

Sivabalan said...

This really good a blog.

I am from Anna University.I know, IIT chennai is trying their level best to crush Anna University. My professor himself felt about it and discussed in depth about it with me. (He is a very good professor, pl. do not comment on professor)

This has to be changed immediately.

I pledge all Tamil Leaders who have good power in Center, should stop this menace.

Will it happen? I know this will not happen atleast in the near future.

May be our next generation might have.

Bala said...

//உதாரணமாக, சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் பணிபுரியும் 427 ஆசிரியர்களில் இரண்டுபேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். 20 பேர் ஓ.பி.சி., மீதி 400 பேர் பிராமணர்கள். //

இது எவ்வளவு அபத்தம் படித்த மாத்திரத்திலேயே புரியும். அது ஏனோ தெரியவில்லை, இந்த இட ஒதுக்கீ(கே)டு விவாதம் வந்தாலே, பிராமணர் சமுதாயத்தை திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் முன்னேறிய சமுதாயங்களில் பிராமண சமுதாயங்கள் மட்டுமே இருப்பது போலவும் வேற எந்த சமுதாயங்களும் இதில் இல்லை போலவும் பேசுகிறார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் கூறும் போது அவர்கள் 3% மட்டுமே இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஒதுக்கீட்டினால், முற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பல வேலை வாய்ப்புகளை இழந்து விட்டனர். அரசாங்க வேலை என்பதே இல்லை என்று ஆகி விட்டது. அரசாங்க மற்றும் இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட துறையில் வேலை செய்பவர்கள், பதவி உயர்வு போன்றவைகளை தியாகம் செய்ய வேண்டியதாயிற்று. எனவேதான் அவர்கள் இட ஒதுக்கீடு அமல் செய்யாத துறைகளில் சேர்ந்து பணி புரிய ஆரம்பித்தனர். கல்விக்கூடங்களும் அதில் அடங்கும்

Anonymous said...

//இந்த பதிவு ஐ.ஐ.டி.யில் நடக்கும் உண்மையை நிலையை வெளிக்கொணரும் முகமாக பதியப்படுகிறதே தவிர, ஒரு குறிப்பிட்ட (பிராமண) சமூகத்திற்கு எதிரான பதிவு அல்ல என்பதையும் முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்//.

Ithu enna CALGERI SIVA styla????

pootu thakkurathaiyum thakiputu... intha trend naala thaan irruku

saamiyo... sandeepu dalith samuthayam sarbaha ummaku naandri )-

-Swamy red bull

Anonymous said...

//இடஒதுக்கீட்டின் அளவு 22.5 சதவீதம். ஆனால் அமலாக்கப்பட்டதோ வெறும் 10 சதவீதம்தான்.//
I am an IITan and I can acknowledge the fact that the reservation for SC/ST is not even followed to this extent (10%).

//இதை வைத்துதான் ஐ.ஐ.டீ.யை செல்லமாக இவ்வாறு அழைக்கின்றனர் ஐயர் - ஐயங்கார் டெக்னாலஜி என்று.//
I heard about the discrimination at the staff level, apart from others, in IIT Chennai and the above lines are not overstated.

//I justify this as they are institutes of higher education and
research.Here caste should not be a
factor in admission or appointment.
//
Fine, they are institutes of higher education and research. But how come they cater to only a section of people all along their existence? How come merit goes with only that section? Why there was no level playing field among all sections? If the other sections cannot get in there by merit - then the state need to come up with policies like this to defend their case.

This policy is working out in TN. Just have a look at the selection list for the professional colleges last few years. What is the difference in cut-off between OC, BC, MBC and others? Compare the same with earlier years. Things has improved, and you can see the so called "talent and merit" has now slowly reaching many section now and its no longer a property of only a particular section especially in the TN professional education. It is going to improve further and further, and a day will come when we can stop talking about the whole issue and the reservation.
The same case will apply to IIT and IIMs too if they are left wide open for those underprivileged sections.
//Maran family will come under OBC.Are they backward in any sense.
Ramadoss , his son and grandchildren are OBCs.Are they backward in terms of economic or social status//
Agreed, they are not economically backward. But, How many Ramadoss and Maran families are out there?
Let us take this case. Coming from a socially and economically backward community, though I could manage to get to IIT on MERIT and merit alone, I need to work harder and harder to grow - inch by inch- in my profession. But I can see a number of dumb people from the so called "meritorius" section find it easier to get through this. How does this possible? Simply because of their links in their inner circle and outer circles that "Santhippu" has already mentioned in his another article in this regard. If that is justified by whatver means, this can also be justified- right?

அப்பாவித்தமியன் said...

சந்திப்பு

நீங்க என்னதான் சொன்னாலும் இவர்கள் இதேபோல் தான் ஏதாவது ஜல்லியடிப்பார்கள்

இட ஒதுக்கீடு இன்றியமையாத தேவை. நீங்கள் இன்னும் எழுதுங்கள்.

அப்பாவித்தமிழன் என்ற பெயரில் விஷமமாக எழுதுபவருக்கு நான் கோட்டாவில் படித்து சீட்டோ வேலையோ வாங்கியவனில்லை. நல்ல வேலையில் இருக்கிறேன். எனினும் இடஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவன்.

arunagiri said...

"இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை..."

ஒன்று செய்யலாம். பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்று கொண்டு வரலாம். இதன் மூலம் சாதி அடிப்படையில் reverse discrimination என்று இல்லாமல், சாதி தாண்டிய உண்மையான ஒரு சமூக நீதிக்கு வழி கிடைக்கும். இப்படிச்செய்தால் சாதியினால் கிடைக்கும் குறுக்கு வழி அடைபட்டுப் போகும், சலுகைக்காக சாதியைப்பிடித்துக்கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லையென்றால், சாதி 'உலர்ந்து உதிர'வும் வாய்ப்பு உள்ளது. செய்வார்களா என்றா மாட்டார்கள். சாதி அழிவதில் யாருக்கும் - குறிப்பாக அதன் மூலம் பயனடையும் எவருக்கும் விருப்பம் இல்லை- என்பதே உண்மை.

பொருளாதாரத்தில் பலபடி உயர்ந்த நிலையில் இருந்தும் சலுகைக்காகக் கை நீட்டுகையில் உள்மனதில் எழும் உறுத்தலை, வெளியில் பார்ப்பனரை உரக்கத் திட்டியோ, மூவாயிரம் வருடங்கள் என்று எதையோ ஒன்றைக் கற்பனைக்கோபத்தில் கத்தியோதான் அடக்க முடிகிறது.

அப்பாவித்தமிழன் said...

//இட ஒதுக்கீடு இன்றியமையாத தேவை. நீங்கள் இன்னும் எழுதுங்கள்.

அப்பாவித்தமிழன் என்ற பெயரில் விஷமமாக எழுதுபவருக்கு நான் கோட்டாவில் படித்து சீட்டோ வேலையோ வாங்கியவனில்லை. நல்ல வேலையில் இருக்கிறேன். எனினும் இடஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவன்.//

அடேங்கப்பா.கோட்டாவில் படிக்காமல் நல்ல வேலையில் இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அது என்னங்க அது? ஒருத்தர் என்னடான்னா பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உலகமெங்கும் பூந்து விளையாடுகிறார்கள் அப்படீங்கறார். நீங்க ஒதுக்கீடு இல்லாம வேலை வாங்கினேன் அப்படீங்கறீங்க. அப்பறம் எதுக்குங்க ஜாதிய இட ஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையில் கொடுங்கன்னா, பதறிப்போய், நாளைக்கு நம்ம பையன் மார்க் எடுப்பானோ,மாட்டானோன்னு பயந்து போய், 'விஷமமா பேசறார்', 'அவாள், இவாள்', '3000 வருஷம்னு' கதை ஆரம்பிக்கிறீங்க.

சமூக கொடுமை, 3000 வருஷம் எல்லாம் உடுங்க. இன்றைய நிலையை பொருத்தவரை, படிச்சி மார்க் எடுத்து சீட் கெடைக்காதவனுக்கும், படிக்காமையே சீட் வாங்கி பழக்கப்பட்டதை நிறுத்த முடியாதவர்களுக்கும் நடப்பதும், இடையில் அரசியல்வாதிகளால் ஊதிவிடப்படுவதுமான சண்டைதான் 'ஜாதிய இட ஒதுக்கீடு' வேணுமா, வேணாமங்கிரது.

இதை விட பெரிய காமெடி, ஒருத்தர் ' எங்களுக்கு பணம் காசெல்லாம் இருக்கு. ஆனா தயிர் சாத சூழ்நிலை அமையலை. அதுக்கு காரணம் நம்ம 3000 வருஷந்தான். அதனால எங்களுக்கு இட ஒதுக்கீடு வேணுங்கிறார். நல்ல வேளை வீட்டுக்கு ஒரு 'புத்திசாலி' இட ஒதுக்கீடு பண்ணுங்கன்னு கேட்கலை.

//பொருளாதாரத்தில் பலபடி உயர்ந்த நிலையில் இருந்தும் சலுகைக்காகக் கை நீட்டுகையில் உள்மனதில் எழும் உறுத்தலை, வெளியில் பார்ப்பனரை உரக்கத் திட்டியோ, மூவாயிரம் வருடங்கள் என்று எதையோ ஒன்றைக் கற்பனைக்கோபத்தில் கத்தியோதான் அடக்க முடிகிறது.//

உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.

அப்பாவித்தமிழன் said...

http://dharumi.weblogs.us/2006/04/14/217

இவாள் கருத்துக்கு உங்கள் பதில்?

திரு said...

//ஓரு குழந்தையின் திறனை கண்டு பிடிக்க முடிவது பள்ளியில் தான். ஆனால் அங்கே போதுமான தரமான ஆசிரியர்கள் இல்லை. ஊக்குவிக்க ஆளில்லை. நல்ல நூலகங்கள் இல்லை. கல்வி நிறுவனங்கள் இல்லை.

இந்தியாவிற்கு இன்றைய தேவை திறனுள்ளவர்களே. அவர்கள் எந்த ஜாதியென்று கவலை கொள்ள தேவையில்லை.

1)நீங்கள் சொல்வது போல IIT, IIMல் லாபி சேர்ந்துகொண்டு SC/ST/OBC சேரக்கூடாது என நிர்பந்திக்கிறார்களா? (சத்தியமாய் எனக்கு தெரியாது!)
நுழைவுத் தேர்வுகள் கூட இன்று
2)Objective ஆக மாறி அவைகள் திருத்தப்படுவதும் கணிணியின் உதவியுடன் தான். (இங்கே இடையில் புகுந்து மதிப்பெண்களை நீங்கள் குறிப்பிடும் பிராமணர்கள் திருத்துகிறார்களா?)
3)இல்லை கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்த பின் பிராமணர் பிராமணரல்லாதவர் என பாரபட்சம் காட்டுகிறார்களா?
4)நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால் மதிப்பெண் குறைக்கப்படுகிறதா//

தயாளன் சென்னையில் இருக்கிற IIT ல் போய் கேளுங்க, அங்கே குறிப்பிட்ட ஒரு உயர் சாதியினர் தவிர மற்ற பேராசிரியர்களது நிலை என்ன என்பதை. இந்த நிலையில மாணவர்களது நிலை? ம்ம்ம்

மற்றபடி பொதுவான கல்வி சீர்திருத்தம் பற்றி (ஆசிரியர்கள் தரம், கரும்பலகை, பள்லியில் அடிக்கிற மணி என) :):D விவாதிப்பதானால் இந்த தலைப்புக்கு சற்று விலகி செல்கிறீர்கள் என்பது எனது எண்ணம்.

IIT-IIM ல் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு பரவல் வேண்டும். இல்லையென்றால் கால் ஊனமுற்றவரையும், வலுவிழந்தவரையும், காலங்காலமாக தின்று கொழுத்தவருடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்று வா! உன் திறமையை கட்டு என்னும் மனிதாபிமானமற்ற நிலை தான் தொடரும். தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்டவர்களை சில ஆண்டு கல்வியில் மற்ற உயர் வகுப்பினர் அடைந்துள்ள பலனுடன் ஒப்பீடு செய்வது மடமை! கடைந்தெடுத்த அரசியல்.

IIT-IIMல் படித்த பின்னர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக கடந்த 20 ஆண்டுகளில் சென்றவர்களது புள்ளி விபரத்தை மக்கள் முன் அரசு வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறதா இல்லை சில "நிக்கர் இந்தியர்களை" (NRI-களுக்கு ஒரு நண்பர் இட்ட காரணப்பெயர்) :D உருவாக்கியுள்ளதா என்பது புலப்படும். IIT-IIMல் படித்துவிட்டு இனியும் அப்படி தப்பிச் செல்லாதவாறு நடைமுறை சட்டங்கள் அவசியமாகிறது. மக்கள் வரிப்பணத்தில் உயர்கல்வி படித்துவிட்டு "நாசாவில் நாங்கள் இல்லையென்றால் இட்டிலிக்கு சட்டினி இருக்காது" என்ற கதையளத்தல் அவசியமும் இல்லை.


தொடர்ந்து எழுதுங்கள் சந்திப்பு! இடஒதுக்கீடு என்றாலே சங்க்பரிவாரங்களுக்கு கைகால் நடுக்கம் வரத்தான் செய்யும். காலச்சக்கரமும், உலகநியதியும் மாறியிருக்கிறது என்பதை அவர்கள் புரிய காலமெடுக்கும்.

திரு said...

http://aalamaram.blogspot.com/2006/04/blog-post_14.html

இது சம்பந்தமான ஒரு பதிவு

Anonymous said...

\\ஒருத்தர் என்னடான்னா பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உலகமெங்கும் பூந்து விளையாடுகிறார்கள் அப்படீங்கறார்.\\

அட நீங்களே உலகம் பூரா போய் முதலில் கொடி நாட்டுங்களேன். அந்த அப்பாவி இனங்கள் இங்கேயாவது நடைபழக விடுவோமே.

\\நீங்க ஒதுக்கீடு இல்லாம வேலை வாங்கினேன் அப்படீங்கறீங்க. அப்பறம் எதுக்குங்க ஜாதிய இட ஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையில் கொடுங்கன்னா, பதறிப்போய், நாளைக்கு நம்ம பையன் மார்க் எடுப்பானோ,மாட்டானோன்னு பயந்து போய்..\\

இவர்கள் பதறுவது இறுக்கட்டும், தங்கள் பையனுக்காக பிச்சை எடுக்கிறார்கள். நீங்கள் ஏன் அலறுகிறீர்கள்? உங்கள் பையனுக்காகவா அல்லது இனத்திற்காகவா? நீங்கள்தான் உலகமெல்லாம் போற்றும் "அறிவுஜீவிகள்" ஆயிற்றே? உங்கள் பையன் எப்படியும் மார்க் எடுத்துடுவான். கவலைபடாதீங்க; இட ஒதுக்கீடு போக மீதியுள்ள 50% சீட்டுல கண்டிப்பா ஒண்ணு கிடைக்கும்.

Anonymous said...

http://in.rediff.com/getahead/quota06.html

விடாதுகருப்பு said...

சந்திப்பு,

இதனை மிக நல்ல கட்டுரை என்றுதான் சொல்ல வேண்டும். முத்து சொன்னதுபோல நேர்முகத் தேர்வில் கழிக்கிறார்கள்.

அருண்மொழி said...

Santhippu,

I can understand your anguish.

Thats why Periyar said - "kanyakumari pappanukku thel kottinal, kashmirathu pappanukku neri kattum".

These guys will talk about thaguthi, thiramai etc etc ... Can they allow a non-brahmin who knows about sasthiram, slogam to perform pooja in temples???

From savundi-pappan to irulneeki subbu will oppose it and will run to aval court and get a stay.

They will claim that they have changed, I am eating fish, non-veg .... These guys will never change.

I heard that Mr. Karuppan IAS has met with the Chennai IIT director about reservations. Those guys have confirmed about 150 ayyars as professors in April 2006. That means no BC & SC/ST professors can join IIT chennai in the next 15 to 20 years. Please find out about it and post it.

சந்திப்பு said...

"நிக்கர் இந்தியர்களை" (NRI-களுக்கு ஒரு நண்பர் இட்ட காரணப்பெயர்) :D உருவாக்கியுள்ளதா என்பது புலப்படும்.
திரு
நிக்கர் இந்தியன் இதுவும் நல்லாயிருக்கே... நன்றி திரு.

------------------------------------------------------------------------------------------
These guys will talk about thaguthi, thiramai etc etc ... Can they allow a non-brahmin who knows about sasthiram, slogam to perform pooja in temples???
அருண்மொழி தாங்கள் கூற்றுடன் உடன்படுகிறேன். பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்களது இடத்தை யாருக்கும் விட்டுத்தரமாட்டார்கள். கோவில் முதல் குளக்கரை வரை இதுதான் நிலை! இதற்கு எதிராக ஒரு கலாச்சார ரீதியான மாற்றம் ஏற்படாமல், இந்திய சமூகத்தை இவர்களிடம் இருந்து மீட்பது கடினம்தான்.
------------------------------------------------------------------------------------------
நன்றி விடாதுகறுப்பு
------------------------------------------------------------------------------------------
இது எவ்வளவு அபத்தம் படித்த மாத்திரத்திலேயே புரியும். அது ஏனோ தெரியவில்லை, இந்த இட ஒதுக்கீ(கே)டு விவாதம் வந்தாலே, பிராமணர் சமுதாயத்தை திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
1. பாலா எது அபத்தம் என்று விளக்கவும். இது சென்னை ஐ.ஐ.டி.யில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான புள்ளி விபரம். இதை எப்படி நீங்கள் அபத்தம் என்று கூறுகிறார்கள்.
2. இந்த பதிவு பிராமணர்களைத் தாக்குவதற்கோ, இழிவுபடுத்துவதற்கோ இல்லை என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தியுள்ளேன். அப்படியிருக்கையில் யார் இங்கே பிராமணர்களை திட்டினார்கள் விளக்கவும். ஐயா, நீங்கள் ஈபிள் கோபுரத்தின் உயரத்தில் இருக்கிறீர்கள். அதே சமயம் கோடிக்கணக்கான மக்கள் அந்த ஈபிள் டவரின் கோபுர நிழலுக்கு கூட இன்னும் வரவில்லை. அதனால்தான் இந்த இடஒதுக்கீடு தேவை என்கிறோம். நீங்கள் இதில் உள்ள சமூக நீதியைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரான்சில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் இந்தியாவிலும் உருவாவதை தடுக்க முடியாது!

குமார் said...

எல்லாம் சரி... இதற்கு இறுதி தீர்வு தான் என்ன..?

சந்திப்பு said...

இறுதி தீர்வு : மத்திய அரசு உடனடியாக, எந்தவிதமான காலதாமதமும் செய்யாமல் ஓ.பி.சி.க்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அமலாக்கிட வேண்டும்.
இது தவிர பெண்களுக்கு 20 சதவீதமும், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இந்த கருத்து வலுப்பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் மத்திய அரசு இதனையும் பரிசீலிக்கலாம்.
Thanks Kumar

Anonymous said...

//ஈஈT-ஈஈM ல் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு பரவல் வேண்டும். இல்லையென்றால் கால் ஊனமுற்றவரையும், வலுவிழந்தவரையும், காலங்காலமாக தின்று கொழுத்தவருடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்று வா! உன் திறமையை கட்டு என்னும் மனிதாபிமானமற்ற நிலை தான் //

சார் ப்ளிஸ், போய் சின்ன சின்ன ஊர்ல இருக்க கோவில்ல பூஜை பண்ணறவங்க வீட்டு நெலமய பார்த்துட்டு வந்து அப்பறம் பேசுங்க

சார் நம்ம நாட்டுல இருக்கறது மேல் ஜாதி கீழ் ஜாதி பிரச்சினை அல்ல
பணக்காரன் ஏழை பிரச்சனை
ரூரல் இடஒதுக்கீடு பற்றி பேசுங்கள் ஒத்துக்கொள்ளலாம் அதைவிட்டு ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் பரிபூர்ண சுயந்ல திட்டமான ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு பற்றி, அதை அடிப்படையாக வைத்து எதை விவதித்தாலும் அது தவறாகத்தான் முடியும்

ravi srinivas said...

There is no bar on non-brahmins who have undergone training in becoming archakas in Hindu temples under the control of the government.This is the verdict of the Supreme Court.So brahmins are not stopping anyone from becoming an archaka.But with brahmin haters like Santhippu flogging a dead horse (other castes becoming archakas) is a favorite hobby.
Try to understand issues and get the facts before trying to blame brahmins.

27+20+5+22.5 = 74.5
If someone wants 74.5% as reservations it is a mockery of
the principle of equality.

ravi srinivas said...

IITs and IIMs have faculty from all over India.Candidates from India and abroad apply. To claim that one caste has monopolised IITs and IIMs is a figment of imgination.Has IIT-Madras ever published data on the caste of the
faculty.If so please let me know.
You cannot simply assert that brahmins have a monopoly there.

Anonymous said...

I will go with Daya, currently there is no descrimination in conducting examination in IIT, anybody can score marks and get into it. If SC/SC/OBC is unable to score then Govt should take enough measures to uplift their knowlege at school level itself and prepapre them competitive.

ravi srinivas said...

The Indian Institute of Technology, Madras, is one among the foremost of institutes of national importance in higher technological education and in basic and applied research. In 1956, the German Government offered technical assistance for establishing an institute of higher education in engineering in India. The first Indo-German agreement in Bonn, West Germany for the establishment of the Indian Institute of Technology at Madras was signed in 1959.

The Institute was formally inaugurated in 1959 by Prof. Humayun Kabir, Union Minister for Scientific Research and Cultural Affairs. The IIT system has seven Institutes of Technology located at Kharagpur (estb. 1951), Mumbai (estb. 1958), Chennai (estb. 1959), Kanpur (estb. 1959), Delhi (estb. 1961), Guwahati (estb. 1994) and Roorkee (estb. 1847, joined IITs in 2001).

The IIT Madras is a residential institute with nearly 460 faculty, 4500 students and 1250 administrative & supporting staff, is a self-contained campus located in a beautiful wooded land of about 250 hectares. It has established itself as a premier centre for teaching, research and industrial consultancy in the country.

The Institute has fifteen academic departments and a few advanced research centres in various disciplines of engineering and pure sciences, with nearly 100 laboratories organised in a unique pattern of functioning. A faculty of international repute, a brilliant student community, excellent technical & supporting staff and an effective administration have all contributed to the pre-eminent status of IIT Madras. The campus is located in the city of Chennai, previously known as Madras. Chennai is the state capital of Tamilnadu, a southern state in India.

From IIT M website.There are factual errors in your post.IITs have been around for about 50 years only yet you claim
முதன் முதலில் கல்வியில் 1973இல் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 53 ஆண்டுகாலம் இந்த மக்களை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காமல் பெரும் இரும்புத்திரையைப் போட்டு இறுக்கி வைத்திருந்தது மேல்ஜாதியாதிக்கம்.

Of course as you hate brahmins facts do not matter to you.

சந்திப்பு said...


சார் ப்ளிஸ், போய் சின்ன சின்ன ஊர்ல இருக்க கோவில்ல பூஜை பண்ணறவங்க வீட்டு நெலமய பார்த்துட்டு வந்து அப்பறம் பேசுங்க

சார் நம்ம நாட்டுல இருக்கறது மேல் ஜாதி கீழ் ஜாதி பிரச்சினை அல்ல
பணக்காரன் ஏழை பிரச்சனை

அனானி, எந்த ஜாதி ஏழையானாலும் ஐ.ஐ.டி.யில் படிக்க முடியாது என்பது எதார்த்தமான நிலை! வறுமையில் உழல்பவருக்கு வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் போது, அவர்களுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு ஐ.ஐ.டி. என்ற பெயர் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்க விவாதிக்கிற விஷயமே இப்ப இருக்கிற ஐ.ஐ.டி.யில இருக்கிற உயர் கல்வி வசதியயை யார் முழுக்க முழுக்க அனுபவிக்கிறார்கள் என்பதுதான். இதுல மாற்றம் வேண்டும் என்பதுதான் இன்றைய சூழல்.
ஏதோ, நீங்கள் இப்படி எழுதியிருப்பதால் உங்களுக்கு ஏழைகள் மீதும், பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்கள் மீதும் இரக்கம் வந்து, அவர்களுக்காக பாடுபடப்போகிறீர்கள் என்றெல்லாம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன்!
உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.

Anonymous said...

\\If someone wants 74.5% as reservations it is a mockery of
the principle of equality\\

Then, why the same "principle of equality" does not practically show up in the Indian democracy? The talking of equality would make sense only between equal players/partners.

சாணக்கியன் said...

இட ஒதுக்கீட்டை அதன் நோக்கமான பின்தங்கிய மக்களின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் ஆதரிக்கிறேன். ஆனால் அதன் பயனை திறமையும் வசதியும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களே அனுபவித்து வருகின்றனர். உயர் வகுப்பினர் என அழைக்கப்படுபவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக பின் தங்கி இருந்தாலும், முன்தங்கி இருந்தாலும் இடம் கிடையாது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தரமான அடிப்படைக்கல்வி வசதிகளை வழங்காததால் அவர்களுக்கும் சீட்டு இல்லை. ஏனெனில் அவர்கள் போட்டியிலேயே இல்லை. தரமான கல்வி எல்லார்க்கும் கிடைத்திட அரசுக்கு எண்ணம் இல்லை. இன்றைய நிலையில் விடைத்தாள்களை பெறக்கூட சட்டம் வகை செய்கிறது. அப்படி இருக்க சேர்க்கையில் சாதிவாரியான மோசடி என்பது கற்பனையே. தேர்வு முறைகள் வெளிப்படையாகவே இருக்கின்றன. வேண்டுமானால் நேர்முகத்தேர்விற்கு வெளிநாட்டினரை அழைத்துவரலாம்,கேள்வி கேட்க. அப்போதாவது ஒப்புக்கொள்ளப்படுமா? இல்லையேல் ஒன்று செய்யலாம். பிறந்த உடனேயே சாதி அடிப்படையில் அந்தக்குழந்தைக்கு எந்தக்கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் இடம் என்று சொல்லிவிடலாம். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான் ஆசிரியர்களின்/மாணவர்களின்/பெற்றோர்களின் காலமும் பணமும் காக்கப்படும்.

-/சுடலை மாடன்/- said...

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வது அந்நிறுவனங்களின் சுதந்திரமான இயங்கலுக்குத் தடையாக இருக்குமா இல்லையா என்று விவாதிப்பது வேறு. ஆனால் இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களில் எல்லாமே உயர்வாக இருக்கின்றன, அவை புனிதமானவை, விமர்சிக்கக் கூட யாருக்கும் உரிமையில்லை, விமர்சிப்பவர்கள் எல்லோரும் பிராமணர் வெறுப்பாளர் என்று திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசி வருவது வேறு. முன்னது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்தை விவாதித்து ஒரு முடிவுக்கு வர இயலும். பின்னது வெறும் சாதிய அரசியலின் வெளிப்பாடு, எந்தப் பயனுமில்லை. வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும், மூளையைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கூச்சல் இடும் சில வெண்ணைகளையும் விட விஞ்சி நிற்கும் இரவி ஸ்ரீநிவாஸ் உண்மையிலேயே ஒரு இடதுசாரிதானா என்று கேள்வி எழுகிறது.

நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன். இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான். மேலும் மற்ற கல்வி நிலையங்களைப் போன்று அரசியல்வாதிகள், காவல் துறை, பத்திரிகைகள் நேரடியாக தலையீடு செய்ய முடியாது, அதில் பெரும் நன்மை உண்டு என்றாலும், ஐஐடி-யின் புனிதப் பெயர் கெட்டு விடக் கூடாது என்று மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மேலும் பாதிக்கப் பட்டவர்கள் இந்தப் புனிதப் பெயரை மீறி எதுவும் செய்ய நினைத்தால் அவர்களின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு தங்களை இன்னும் தர்மசங்கடங்களுக்குள் ஆளாக விரும்புவதில்லை.

சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையும், பாகுபாடும் மற்ற கல்வி நிலையங்களைப் போலவே ஐ.ஐ.டி.யிலும் உண்டு. மற்ற பல்கலைக்கழகங்களில் பிராமணரல்லாத மேல்/நடுச் சாதியினர் ஆதிக்கம் போலவே, ஐ.ஐ.டியில் பிராமணர்களின் ஆதிக்கம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தெலுங்குப் பிராமணர், தமிழ்ப் பிராமணர் மற்றூம் கன்னடப் பிராமணர் என்று அவர்களுக்குள்ளும் தங்கள் குழு மனப் பான்மையையும், ஆதிக்கத்தையும் காண்பிப்பதுண்டு. சென்னை ஐ.ஐ.டி.யின் எதிரே இருக்கும் CLRI-யில் தமிழ் அய்யர் - தமிழ் அய்யங்கார் என்றும் கூடப் பதவிப் போட்டிகளில் வெளிப்படையாக நடந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன்.

பிராமணர் இல்லாத சாதியினர் திறமையிருந்தும் புறக்கணிக்கப் பட்டதற்கு, இழிவாக நடத்தப் பட்டதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி வெளிப்படையாக எதிர்த்துப் போராடி வருகிறார். அவர்கள் அல்லாமல், வேதியியல் பேராசிரியர்கள் பி.டி. மனோகரன், இயந்திரவியல் பேராசிரியர் வேலுசாமி போன்றவர்கள் எப்படியெல்லாம் நடத்தப் பட்டார்கள் என்று அவர்களது துறையில் உள்ள மாணவர்களையும், ஊழியர்களையும் கேட்டால் தெரியும். மேலும் பெரும்பாலான துறைகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதிலெல்லாம் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களுக்குச் சால்ராப் போடுபவர்களையும் போட்டு நிரப்பி வந்துள்ளனர். இதில் பிராமணர்களில் தகுதியான பலர் கூட நிராகரிக்கப் பட்டுள்ளனர். இதையெல்லாம் நான் சொல்லுவதன் காரணம், பிராமணர்கள் மேல் மட்டுமேயான காழ்ப்புணர்ச்சியால் அல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெரும்பாலோர் திறமைக்கு முக்கியம் தராமல், சட்டத்துக்குப் புறம்பாகக் கூட தகுதியில்லாதவர்களை பதவிகளில் நிரப்புகின்றனர். அதற்கு சாதிய மேலாதிக்கக் குணமும் ஒரு காரணம்.

எனவே இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டினால் ஐ.ஐ.டிக்களின் தரம் குறைந்து விடும் என மீண்டும், மீண்டும் ஒப்பாரி வைப்பது அவருடைய குறுகிய சாதியடிப்படையிலான வெளிப்பாடுதான்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

திரு said...

//எனவே இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டினால் ஐ.ஐ.டிக்களின் தரம் குறைந்து விடும் என மீண்டும், மீண்டும் ஒப்பாரி வைப்பது அவருடைய குறுகிய சாதியடிப்படையிலான வெளிப்பாடுதான்.//

சொக்கரபாண்டியண்ணே! நல்லா சொன்னீங்க!

திரு said...

//சார் ப்ளிஸ், போய் சின்ன சின்ன ஊர்ல இருக்க கோவில்ல பூஜை பண்ணறவங்க வீட்டு நெலமய பார்த்துட்டு வந்து அப்பறம் பேசுங்க//

சின்ன ஊர்ல இருக்கிற கோவில் பூசாரிகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க ஒரு வரைமுறை கொண்டுவரலாம். சங்கரமடங்களின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் 50% இந்த இடஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்தலாம். படிப்படியாக மற்ற கோவில்களுக்கும் கொண்டுசெல்லலாம். ஐ.ஐ.டி பற்றி பேசுற நேரம் கோவில் பூசாரி எங்கே வந்தார்? :P

arunagiri said...

முத்து : "...கோவில் பூசாரி எங்கே வந்தார்? :P"

"These guys will talk about thaguthi, thiramai etc etc ... Can they allow a non-brahmin who knows about sasthiram, slogam to perform pooja in temples???" என்று அருண்மொலி சொல்லும்போதே வந்துவிட்டார் திரு.முத்து அவர்களே :P

arunagiri said...

Correction: "...வந்து விட்டார் திரு அவர்களே" என்று இருக்க வேண்டும்.

arunagiri said...

"...தங்களுக்குச் சால்ராப் போடுபவர்களையும் போட்டு நிரப்பி வந்துள்ளனர். இதில் பிராமணர்களில் தகுதியான பலர் கூட நிராகரிக்கப் பட்டுள்ளனர்"

இதில் உண்மை இருக்கலாம். கல்வி நிறுவனங்கள் பலவற்றில் - அமெரிக்க உயர்கல்விக்கூடங்களில் கூட- இதைப்பார்க்கலாம். அதற்காக இதை நியாயப்படுத்துகிறேன் என அர்த்தம் இல்லை. இந்த regime building கண்டிக்கப்பட, களையப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சாதி அணுகுமுறை நீங்க வேண்டும் என்று சொல்லாமல், பார்ப்பன ஆதிக்கம் நீங்க வேண்டும் என்று சொல்கையில், அப்படியென்றால் வேறொரு சாதி வந்து ஆதிக்கம் செய்தால் சரியா என்ற கேள்வி எழுகிறது.

பிறப்பின் அடிப்படையில் வரும் அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும் என்று சொல்லி விட்டு Reverse discrimination செய்வது எப்படி சமூக நீதிக்கு ஒரு சரியான அணுகுமுறையாகும்? ஒரு சாதி அடிப்படையை விடுத்து வேறொரு சாதி அடிப்படையில் உரிமை மறுக்கப்படுவதும் சலுகை வழங்கப்படுவதும்தான் சமூக நீதியா?

சாதியற்ற சமூகம் வரவேண்டுமென்று அக்கறை இருந்தால் சாதி தாண்டிய வேறொன்றைத்தான் சலுகைக்கு அடிப்படையாய்க் கொள்ள வேண்டும்.
பொருளாதார அடிப்படையிலும் மற்றும் குடும்பத்தில் எத்தனை பேர் பட்டப்படிப்போ மேற்படிப்போ படித்துள்ளார்கள் எனப்பார்த்தும் weightage system கொண்டு வந்து அதனடிப்படையில் பின் தங்கியவருக்கு இட ஒதுக்கீடு செய்யலாம். இதன் மூலம் சாதி அடிப்படையில் reverse discrimination என்று இல்லாமல், சாதி தாண்டிய உண்மையான ஒரு சமூக நீதிக்கு வழி கிடைக்கும். சாதி 'உலர்ந்து உதிர'வும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நான் முன்பே எழுதியது போல இதைச்செய்வார்களா என்றால் மாட்டார்கள்.

சாதி அழிவதில் யாருக்கும் - குறிப்பாக அதன் மூலம் பயனடையும் எவருக்கும், இங்கு எழுதிக்கொண்டிருப்பவர்கள் உட்பட, விருப்பம் இல்லை- என்பதே உண்மை.

குழலி / Kuzhali said...

//நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன். இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான்.
//
சில நாட்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் சுற்றித்திரிந்தபோது நான் கண்டதை வைத்து எழுதியது ஐ.ஐ.டி.யின் உள்வட்ட விளையாட்டுகள்

சந்திப்பு said...

சாணக்கியன், உங்களது பதில் சாணக்கியத்தனமாக இருக்கிறது. நன்றி! இதற்காகத்தான் பிற்படுத்தப்பட்டவர்களில் உயர் பிரிவினர்கள்தான் அனுபவிப்பார்கள் என்ற கருத்தினை உணர்ந்து சூப்ரிம் கோர்ட் கிரிமி லேயர் அடிப்படையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. எனவே இந்த விஷயத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு முதலில் 27 சதவீதம் ஓ.பி.சி. இடஒதுக்கீடு அமலாகட்டும். தேர்தல் கமிஷன் சில மாநிலங்களில் வெளி மாநிலங்களில் இருந்துகூட தேர்தல் பணிகளைச் செய்கிறது. அதேபோல் வெளிநாட்டில் இருந்து வந்து கூட ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொடுக்கலாம். தங்களது ஆலோசனைக்கு நன்றி.

சந்திப்பு said...

சுடலைமாடன் உங்களைப் போன்றவர்களின் பதிவுகளுக்குத்தான் மிகுந்த நம்பகத் தன்மையிருக்கும். ஏனென்றால் நீங்கள் நேரடியாக அதில் அனுபவப்பட்டிருப்பதால், எனவே இந்தப்பதிவு தனியாகப் பதியப்பட வேண்டிய ஒன்று என்பதால், இது பின்னூட்டமாக இருப்பதை விட முன்னூட்டமாக பதிகிறேன். இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி சுடலைமாடன்.

நன்றி திரு., அருண்கிரி.

நன்மனம் said...

arunagiri

//ஆனால் சாதி அணுகுமுறை நீங்க வேண்டும் என்று சொல்லாமல், பார்ப்பன ஆதிக்கம் நீங்க வேண்டும் என்று சொல்கையில், அப்படியென்றால் வேறொரு சாதி வந்து ஆதிக்கம் செய்தால் சரியா என்ற கேள்வி எழுகிறது.\\

இந்த கேள்விக்கு மனம் திறந்த பதில் நடுநிலையாளர்களிடம் இருந்து மட்டும் தான் எதிர் பார்க்கலாம்.

//சாதி அழிவதில் யாருக்கும் - குறிப்பாக அதன் மூலம் பயனடையும் எவருக்கும், இங்கு எழுதிக்கொண்டிருப்பவர்கள் உட்பட, விருப்பம் இல்லை- என்பதே உண்மை.//

உண்மையான காரணத்தை அறியாத வறை, இந்த கொடுமை நீடிக்க இவர்களும் காரணம் ஆவார்கள்.

ஸ்ரீதர்

ravi srinivas said...
This comment has been removed by a blog administrator.
ravi srinivas said...

A quick response
Nowhere I have defended what has happened or what is happening in any IIT.I have already responded to this issue (in Thangamani's blog, i think).If there is any nepotism or mismanagement
that should be investigated and the
solution should be found.Nobody should be treated unfairly.
And in which way the solution is related to reservation.Are you going to argue that reservation will reduce nepotism and mismanagement.


I have argued against reservation and you can read that in my blog.I have nothing against any caste or community.I have not defended any caste.I have challenged some remarks.If you cannot argue on the
basis of facts what can I do.When you say that there are this many
brahmins in IIT-M as faculty I am asking a simple question what is
the evidence or how did you arrive
at this.So far this question has not been answered.Nor the possibility that there can be a factual error in the article is
acknowledged.I have never argued that IITs or IIMs are beyond scrutiny or should be treated as
holy cows.Reservation is treated as
a holy cow by some. If you are willing to argue on the basis of facts, law, and other relevant
factors I am for debate .But if the purpose is to abuse or blame a
caste for all problems or to make
unsubstantiated allegations dont expect me to support it.
If you cannot engage in an informed debate dont try to cast aspersions or distort what the other person has said.
I dont care as to whether you label me as right or left.I am least bothered about such labels.
BJP is for reservations, does that
nake it a progressive and left party.

sivagnanamji said...

archagar velaikku 100% reservatin venum;
aana padirdhukku resrvation koodatha?

sivagnanamji(#16342789) said...

//padiradhukku//

pls read as "padikradhukku"

sivapras said...

ok

குமார் said...

இது எல்லாம் பார்த்து படித்த பிறகு, எனக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது. பறங்கி புரட்சி, சீன புரட்சி, உருசிய புரட்சி மற்றும் ஹிட்லரின் நாசி கொள்கைகள் கூறும் யோசனை...

அதாவது, மனிதர்களை கூறுபோடும் கொள்கைகொண்ட பார்பான பிராமண வர்கத்தை மொத்தமாக கூறுபோட்டு அழித்துவிடுவோம்.

இது நிச்சயமாக பயனளிக்கும். இன்னும் தங்கள் பெயரில் 'ஐயர்', 'ஐயங்கார்' என ஜாதி ஆதிக்க பெயர்களை சேர்த்துக்கொண்டு, மற்ற மனிதர்களிடமிருந்து தங்களை பிரித்து காண்பிக்கும் அடையாளங்களான பூணூல், நெற்றிகுறிகள் அணிந்துகொண்டு, இந்த நவீன யுகத்தில் உலவும் இவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களே.

நீங்கள் கூறும் 'இடஒதிக்கீடு' எல்லாம் நடக்காத காரியங்கள். ஏனென்றால், முக்கிய அரசியல் தலைவர்கள், அரசியல் தலைவர்களின் ஆலோசகர்கள், உயர் அதிகாரிகள் எல்லாருமே அம்பிகளும் மாமாக்களும் மாமிகளும் தான்.

ஒரே வழி... ஒரு குருதி தெறிக்கும் புரட்சிதான்.. இந்த ஆரியர்களோ ஆரியகலபினர்களோ இம்மண்ணில் வேண்டாம்....

dondu(#4800161) said...

"இது நிச்சயமாக பயனளிக்கும். இன்னும் தங்கள் பெயரில் 'ஐயர்', 'ஐயங்கார்' என ஜாதி ஆதிக்க பெயர்களை சேர்த்துக்கொண்டு, மற்ற மனிதர்களிடமிருந்து தங்களை பிரித்து காண்பிக்கும் அடையாளங்களான பூணூல், நெற்றிகுறிகள் அணிந்துகொண்டு, இந்த நவீன யுகத்தில் உலவும் இவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களே.
அதாவது, மனிதர்களை கூறுபோடும் கொள்கைகொண்ட பார்பான பிராமண வர்க்கத்தை மொத்தமாக கூறுபோட்டு அழித்துவிடுவோம்."

ஆகா! படிக்கவே புல்லரிக்கிறது. ஒரு ஜாதியையே ஒழித்துவிட வேண்டும் என்ற ஒரு பின்னூட்டம், அதை அனுமதிக்கும் வக்கிர எண்ணம் கொண்ட சந்திப்பு என்னும் வலைப்பதிவாளர்.

இப்போது நான், டோண்டு ராகவையங்கார், கூறுவதைக் கேளுங்கள். என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை, "கற்கல் நன்றே, கற்கல் நன்றே, பிச்சைப் புகினும் கற்கல் நன்றே" என்றக் கோட்பாட்டில் அவர்கள் நிற்கும்வரை, எந்த ஒரு ஜாட்டானாலும் தடுக்க முடியாது. அவர்கள் பாட்டுக்கு படித்து விட்டுப் போய் கொண்டே இருப்பார்கள்.

ஐ.ஐ.டி.யில் படிக்கும் பார்ப்பனர்கள் அதற்கானத் தேர்வில் முதன்மை நிலையில் தேறிவிட்டு வந்தார்கள். அவர்களுக்கென்று சுதந்திர இந்தியாவில் யாரும் கோட்டா ஒன்றும் ஒதுக்கவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தேர்வும் வெளிப்படையாக நடப்பதே.

தமிழக அரசு வேலைகள் இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு போய்க்கொள்வார்கள். இட ஒதுக்கீடு வேண்டுமென்று மரமெல்லாம் வெட்ட மாட்டார்கள், அதுவும் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்து கொண்டே.

கேட்டால் கூறுகிறார்கள், ஜாதியை நிறுவியது பார்ப்பனர்களாம், அவர்கள் முன்னோர்கள் ஏமாந்து விட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிறதென்பானாம் ஒருவன், அதை கேட்பவர்களெல்லாம் புத்தியில்லாதவர்களா?

சகபார்ப்பனர்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். இம்மாதிரி ஓரினத்தையே அழிக்க வேண்டும் பின்னூட்டமிடுவர்களையும், அத்தகையப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவாளர்களையும் கண்டு பயப்படாதீர்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். நாம் பூணூல் போடக்கூடாது, திருநீறு/நாமம் இடக்கூடாது என்று கூற இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது. உங்களை உத்தேசித்தே நான் இட்ட "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் இப்பின்னூட்டத்தின் நகலைப் பின்னூட்டமாக இடுகிறேன். இவ்வாறு செய்வது இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டுவே என்று கூறுவதற்கே. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

திரு said...

குமார்,

உங்களது அழித்தொழிப்பு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா பார்ப்பனர்களும் எதிரியா? பார்ப்பனீய கருத்துக்கள் எதிராக இருக்கிறதா? இந்த கருத்துக்களை யார் கொண்டிருந்தாலும் அவர்களது கருத்துக்கு மாற்றுகருத்தியலை உருவாக்குவோம். அது தான் சமூகப்புரட்சி!அண்ணல், அய்யா, அண்ணா எல்லோரும் இவற்றிற்காக தான் உழைத்தார்கள். ஹிட்லரின் கருத்தியல் ஒட்டுமொத்த அழிவின் கருத்தியல், அதற்கும் புரட்சிக்கும் சம்பந்தமில்லை. இப்படிப்பட்ட பதிவை தவிருங்கள்!

டோண்டு அய்யா,

எதற்காக மீண்டும் மீண்டும் சாதி அடையாளத்தை கூவி அழைக்கிறீர்கள்? உங்களது வயதில் இருக்கும் பெரியவர்கள் இப்படி விடாப்பிடியாக இருந்தால் என்று இந்த சமுதாயம் திருந்தும்? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாதி அடையாளத்தை சொல்லி நான் இந்த சாதி தான் என அகங்காரமாக பேசுவதால் என்ன வெளிப்படுகிறது? சற்று சிந்தியுங்கள்!

பதிவின் நோக்கம் சிதறாமல் ஐ.ஐ.டி பற்றிய வாதங்களை முன் வைப்போம்! கருத்துப் பரிமாற்றத்தில் உண்மை வரட்டும், நீதி நிலை நிறுத்தப்படட்டும்.

Anonymous said...

http://www.iitm.ac.in/Departments/Mathematics.html

Please make a count and see how many non brahmins are there.
There are atleast 6 non-brahmins
in this dept alone.So how can there be only 20 OBCs as faculty in the whole of IIT Madras.

திரு said...

அனானி,

சென்னை ஐ.ஐ.டியில் எல்லா துறைகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை அலுவலர்கள், பேர்ச்சிரியர்கள், துணை அல்லது இணை பேராசிருயர்கள், அலுவலக பணியாளர்கள் என்பதை பதியுங்கள்! அதில் எத்தனை பேர் உயர்சாதியினர்? எத்தனை பேர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்? எத்தனை சதவிகிதம் அது?

இதுவரை சென்னை ஐ.ஐ.டியில் இயக்குனராக இருந்தவர்கள் வரிசைப்படி கீழே காண்க. இதில் எத்தனை பேர் உயர்சாதியை சாராதவர்கள்?

1 B.Senugupto 1959
2 A.Ramachandran 1967
3 K.A.V Pandalai 1973
4 R.G. Narayanamurthi 1977
5 P.V. Indiresan 1979
6 L.S. Srinath 1984
7 N.V.C Swamy 1989
8 R. Natarajan 1995
9 M.S. Ananth 2001


மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுகிற உயர் கல்வி நிலையங்களில் படிக்க, வேலையில் அமர்த்த வெளிப்படையான தன்மை அவசியம். அந்த விடயத்தில் ஐ.ஐ.டி ஒரு கேள்விக்குறியான இடத்தில் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

தகவல் பெறும் உரிமை ஒரு சட்டமாக்கபட்ட நாடு இந்தியா. இங்கு வெளிப்படையான தன்மைக்காக அரசாங்கமும், மனிதவள அமைச்சகமும், ஐ.ஐ.டியும் வெளிப்படையாக இந்த தகவல்களை வெளியிடுவது காலத்தின் அவசியம்.

தரமும், திறமையும் ஒரு வகுப்பினருக்கு மட்டும் குத்தகையானதல்ல.

குமார் said...

//ஆகா! படிக்கவே புல்லரிக்கிறது. ஒரு ஜாதியையே ஒழித்துவிட வேண்டும் என்ற ஒரு பின்னூட்டம், அதை அனுமதிக்கும் வக்கிர எண்ணம் கொண்ட சந்திப்பு என்னும் வலைப்பதிவாளர்.//

ஆக பார்ப்பனர்கள் எழுதிய மறுமொழிகளை மட்டும் வெளியிட்டு மற்ற எல்லாவற்றையும் அழித்தால் அவர்தான் நல்ல வலைப்பதிவரா? நன்றாக இருக்கிறது உங்கள் வாதம்!

//இப்போது நான், டோண்டு ராகவையங்கார், கூறுவதைக் கேளுங்கள். //

இதுக்குதான் போலிடோண்டு போட்டு பின்னி பெடல் எடுக்கிறார்!

//என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை, "கற்கல் நன்றே, கற்கல் நன்றே, பிச்சைப் புகினும் கற்கல் நன்றே" என்றக் கோட்பாட்டில் அவர்கள் நிற்கும்வரை, எந்த ஒரு ஜாட்டானாலும் தடுக்க முடியாது. அவர்கள் பாட்டுக்கு படித்து விட்டுப் போய் கொண்டே இருப்பார்கள்.//

பாப்பான் மட்டுமே படித்துப் பாஸ் பன்னி வேலைக்குப் போகிறான்? ஏன் மற்ற ஜாதிகளில் இருந்து யாரும் போவதில்லையா? எல்லோருமே படித்துப் பாஸ் பன்னி வேலைக்குத்தான் செல்கின்றனர். பாப்பான் மட்டுமே போகிறான் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. என்ன ஐஐடி போன்ற இடங்களில் நடக்கும் தில்லுமுல்லு திருகுதாளங்களினால் பாப்பான்களின் எண்ணிக்கை அதிகமாகிறது! அவ்வளவுதான்!

//ஐ.ஐ.டி.யில் படிக்கும் பார்ப்பனர்கள் அதற்கானத் தேர்வில் முதன்மை நிலையில் தேறிவிட்டு வந்தார்கள். அவர்களுக்கென்று சுதந்திர இந்தியாவில் யாரும் கோட்டா ஒன்றும் ஒதுக்கவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தேர்வும் வெளிப்படையாக நடப்பதே.//

தேவு எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கும். ஆனால் நேர்முகத் தேர்வில் சட்டையைக் கூர்ந்து உள்ளே பூணூல் தெரிகிறதா என்று பார்க்கிறார்கள்! இது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. மிதவாத பார்ப்பனரான பத்ரியிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்!

//தமிழக அரசு வேலைகள் இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு போய்க்கொள்வார்கள். இட ஒதுக்கீடு வேண்டுமென்று மரமெல்லாம் வெட்ட மாட்டார்கள், அதுவும் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்து கொண்டே.//

போடா ஜாட்டான் என்ற இந்த ஆணவப் பேச்சு உங்களை உங்கள் வயதில் இருந்து கீழே இறக்கி மிருக நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை? சொந்த புத்தியும் திறமையும் இருக்கும் பார்ப்பனர்கள் முன்னேறுவதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தலித்துக்கு கிடைக்க வேண்டிய இடத்தை தட்டிப் பறிப்பது அவன் சோற்றினை தட்டிப் பறிப்பதற்குச் சமம்.


//கேட்டால் கூறுகிறார்கள், ஜாதியை நிறுவியது பார்ப்பனர்களாம், அவர்கள் முன்னோர்கள் ஏமாந்து விட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிறதென்பானாம் ஒருவன், அதை கேட்பவர்களெல்லாம் புத்தியில்லாதவர்களா?//

விடாது கறுப்பு அவர்களின் பல பதிவுகளை சென்று படித்துப் பாருங்கள். அங்கே நிறைய எழுதி இருக்கிறார். அரசர் காலத்தில் இருந்து இலக்கிய காலம் வரைக்கும் பல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். ஜாதி என்ற ஒன்றைக் கண்டுபிடித்ததே கேவலமான இந்த பார்ப்பனர்கள்தானாம்! அரசர்களுக்கு சேவகம் புரிந்து மேல்மட்டம் வந்து தமக்கு வேண்டியவைகளைச் சாதிக்க ஜாதியினைக் கண்டு பிடித்தனராம்!

//சகபார்ப்பனர்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன்.//

ஒன்று என்ன ஒன்பதே கூறினாலும் பாப்பான்கள் இனி திருந்தப் போவதில்லை!

// இம்மாதிரி ஓரினத்தையே அழிக்க வேண்டும் பின்னூட்டமிடுவர்களையும், அத்தகையப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவாளர்களையும் கண்டு பயப்படாதீர்கள்.//

உங்களைப் போன்ற வெறி பிடித்த தீவிரவாதப் பார்ப்பனர்களைக் கண்டு இங்கே நாங்களும் ஒருநாளும் பயப்பட்டதில்லை. வாலும் வேளும் வில்லும் கொண்டு போரிட்ட வீரமரபினர் நாங்கள் இந்த மண்ணுக்கே உரித்தான பூர்வகுடியான திராவிடர் நாங்கள். ஒண்டவந்த பிடாறி ஊர் பிடாறியை துரத்த நினைப்பது விந்தைக் கூத்து! உங்கள் மறுமொழியோ பின்னூட்டமோ வரவில்லை என்றால் போடா ஜாட்டான் என நாங்களும் இருப்போம்! உங்களுக்கு பயந்துபோக நாங்கள் என்ன கோழைகளா என்ன?

//தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். நாம் பூணூல் போடக்கூடாது, திருநீறு/நாமம் இடக்கூடாது என்று கூற இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது.//

இப்போதுதான் தெரிகிறது. பெரியார் பூணூலை அறுக்கச் சொன்னதில் தவறே இல்லை! பூணூலை மட்டும் அறுக்கச் சொன்னது கண்டு எனக்கு ரொம்ப கோபம் பெரியார் மேல்!

//உங்களை உத்தேசித்தே நான் இட்ட "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் இப்பின்னூட்டத்தின் நகலைப் பின்னூட்டமாக இடுகிறேன். இவ்வாறு செய்வது இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டுவே என்று கூறுவதற்கே.//

உங்களைப் போன்ற தீவிரவாத வெறிபிடித்த பாப்பான்கள் உயிருடன் இருப்பதற்குப் பதில் செத்து தொலைக்கலாம்!

//அன்புடன்,
டோண்டு ராகவையங்கார் //

திரு அவர்களே, மேற்கண்ட கையெழுத்துக்கு என்ன சொல்கிறீர்கள்? இந்த கேவலமான வெறிபிடித்த மிருகம் இன்னும் 2000 வருஷமானாலும் திருந்தவே திருந்தாது என்பதற்கு இந்தக் கையெழுத்தே சாட்சி. போலிடோண்டு சொல்வதில் செய்வதில் தவறில்லை என்று இப்போதுதான் தெரிகிறது!

குமார் said...

அன்புள்ள அனைவருக்கும்,

தலைப்பு கருத்திலிருந்து விலகி சில என் கருத்துக்களை கூறியதற்கு என்னை மன்னிக்கவும். மேலும் சிறிது எழுத என்னை அனுமதிக்க தலைப்பு-உரிமையாளரை வேண்டிக்கொள்கிறேன். என்றாலும் என் கருத்துக்கள் தலைப்புக்கு உரம்சேர்க்கும் என்று எண்ணுகிறேன்.

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம். "திரு டோண்டு ராகவன்" அவர்களை தான் குறிப்பிடுகிறேன்.

அமைதிக்காக போராடிய பலபெரியோர் அவதரித்த இந்தியத் திருநாட்டில் பிறந்த 90%த்தினர் அமைதி பாதையையே விரும்புவர். அதில் நானும் ஒருவன்.

மேலே சொன்ன வன்முறைத்தனமான என் கருத்துக்கள் ஒரு "பொறி" முயற்சியே. "திரு டோண்டு ராகவன்" அதில் எலி. இது போல எக்கச்சக்கமான எலிகள் இந்நாட்டில் உலவுகின்றன சார். சிலர் சொன்னதுபோல விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

மற்றபடி என் வன்முறைத்தனமான வக்கிரத்தனமான சொற்களுக்கு வெட்கிறேன்.

மும்பை; நவநாகரீகத்தின் உச்சம் (இந்தியாவில்). அங்கு வாழ்கிறான் என் பள்ளி நண்பன் (அவன் தந்தை வேலை இடமாற்றலாகி, 18 வருடம் முன்பாகவே மும்பைக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டார்கள்). அவன் ஒருமுறை சென்னை அவன் ஆச்சி வீட்டுக்கு வந்தபொழுது, எங்கள் உரையாடல்களில் இதுவும் ஒன்று.. "எங்கள் வீட்டில் எங்க அப்பாவோட வேலைபார்க்கும் கீழ்சாதிகாரர்கள் (அவன் கூறிய வாக்கியம் 'சூத்திரர்') வந்துவிட்டு போனால், எங்க வீட்டை சாணி போட்டு மொழுகுவோம், அப்புறம் எல்லாரும் குளிப்போம்"... அனக்கு அப்போது 17 வயது இருக்கும்.. இதுகேட்டு தூக்கிவாரிபோட்டது.. வெலவெலத்துப்போனேன்... என்னங்கடா இது.. 55 வருடத்திற்கு பிறகும் (சுதந்திரத்தை சொல்கிறேன்) திருந்தவே இல்லையா.. பின்நாளின் ஒரு திரைப்படத்தில் வந்த வசனத்தை "1000 காந்தி 1000 பெரியார் வந்தாலும் திருந்தமாட்டீங்கடா.." அப்போதே அவனிடம் கூறிவிட்டு எழுந்தேன்..

"அவர்களும்" மனிதர்களாகி போய்விட்டார்கள், மனதில் அழியாத ஜாதி உணர்சியோடு.

"அவர்களும்" என நான் குறிப்பிட்டது இங்கே விவாதத்துக்குள்ளாகியிருக்கும் ஜாதியினர் மட்டும் அல்ல. எல்லா ஜாதியினரும் அவர்களின் ஜாதியினருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.. இணைத்தில் ஒவ்வொரு ஜாதியின் பெயரையும் தேடிப்பாருங்கள்.. ஒவ்வொரு ஜாதிக்கும் இணையத்தளம் இருக்கும்.. அதில் ஒவ்வொன்றையும் சென்று பாருங்கள்.. மிக சுவாரசியமாக இருக்கும்.. அசந்து போவீர்கள்..

ஒவ்வொரு ஜாதியினரும் அவர் ஜாதியினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாது, தங்கள் கீழ்ஜாதி என கருதப்படும் ஜாதியினரை தாழ்வாகவே நடத்துகிறார்கள்.. மேலே சொன்ன "சாணி" டெக்னிக் போல பல முறைகள் பல ஜாதியினரால் கடைபிடிக்கபட்டுவருகிறது. இவர்கள் எல்லாரும் சுயசிந்தனை, விடுதலை-மதிப்பு, மனிதாபிமானம், நேயம் பற்றி படித்து தெரிந்தவர்களே..

உலகில் பல நாடுகள், குறிப்பாக ஆரியர்கள் கை பட்ட நாடுகளில் (இந்தியா, இலங்கை...) இந்த சாபம் நிவர்தி செய்யாமல் காக்கப்படுகிறது.. தமிழீழத்திலும் ஜாதி பிரச்சனை வேருன்றியுள்ளது என படித்தறிந்தேன்..

முடிவுரை:
என்னத்த சொல்ல..

தயா said...

கொஞ்ச நாள் "சந்திக்க" முடியாததால் எனக்கு இடப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போயிற்று.

நான் ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கு விடை ஆம் எனில் அதை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும். (ஐஐடியின் உள் விவரங்கள் மற்றும் வெளிவிவரங்கள் நீங்களும் மற்றவர்களும் சொல்லித் தான் அறிகிறேன். அதன் எதிர் ஆதரவு விவாதங்களும் தான்)

பிராமணர் ஆதிக்கம் நிலவுகிறது என உண்மையானால் அதை களைவது தான் தீர்வு. அந்த பாகுபாட்டை நீக்குவது நல்லது. ஆனால் இடஓதுக்கீட்டினால் மட்டுமே இந்த பாகுபாடு மாறிவிடுமா? செரட்டையில் குடித்தவர்கள் டம்ளர்களுக்கு மாறினாலும் தனிடம்ளர்கள் தானே இன்றும் இருக்கிறது.

சந்திப்பு:
//நன்றி அருள்மொலி... இங்கு நடக்கும் விவாதத்தில்கூட பாருங்கள் யாருடைய ஆதிக்கம் ஓங்கி நிற்கிறது என்று! நாமெல்லாம் இன்னும் ஓடவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவர்கள் அலறுவது எதற்காக என்று புரியவில்லை!//
இன்னும் ஓடவேயில்லையா? உங்கள் தலைப்பும் முடிவுரையும் என்ன சொல்கிறது? நீங்கள் கொடுக்கும் புள்ளி விவரம் என்ன சொல்கிறது. (இட்லி வடையை கோபித்துக்கொண்டார்கள் கனிமொழி எழுதியது என்ன? இட்லி வடை சேர்த்தது என்ன என்று? நீங்களும் இட்லி வடையை பின்பற்றி நீங்கள் கொடுத்த ஆதாரம் எது? உங்கள் கருத்து எது என தனியாக அடையாளப்படுத்தியிருக்கலாம்)

அடுத்து,
மாறனும் ராமதாஸ் போன்றவர்கள் கீரீம் லேயர்கள் என்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் இந்த கீரிம் லேயர்கள் தான் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். இவர்களும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். வசதி வாய்ப்பு இருந்தும் படிக்காமல் முயற்சி செய்யாமல் (100க்கு 90 பெற வேண்டிய இடத்தில் 50 போதும் எனும் போது) வந்து விடுகிறார்கள். ஒரு வீம்புக்கு பெருமைக்கு மருத்துவம் படிப்பவரிடத்தில் நீங்கள் மருத்துவம் செய்து கொள்வீர்களா? (இங்கே உண்மையிலேயே நல்ல ஆர்வம் இருந்து பொருளாதார வசதியின்மையால் படிப்பை விட்டுவிடுபவர்கள் பயன் பெற்றால் நன்றாக இருக்கும்.)

சாணக்கியனுக்கு பதில் சொல்லும் முகமாக ஏற்கனவே இதை கடைப்பிடிக்க உத்தரவிருப்பதாக சொல்கிறீர்கள். சரி இதையும் பிறகு பேசிக் கொள்ளலாம்.

//இப்போதைக்கு நீங்கள் ஐ.ஐ.டி. விஷயத்தை இத சொல்லி திசை திருப்பிட வேண்டாம்னா!//
நான் திசை திருப்ப முனையவில்லை.

தகவல் ஆதாரத்தோடு ஒரு கருத்தையும் முன் வைத்துவிட்டு கேள்வியையும் எழுப்பியிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கே இது உண்மையா? எந்த அளவில் என்ற சந்தேகம் இருக்கிறது. தலைப்பில் உள்ள கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டுமென்றால் ஆம் இல்லை என புள்ளி விவரங்களோடு வாதிக்க மட்டும் தான் முடியும். ஆனால் அதற்கான தீர்வையும் விவாதிக்கிறீர்கள்.

அதில் உள்ள ஓரு தீர்வு இட ஓதுக்கீடு. அது உங்கள் (மற்றும் பலரது) பார்வை.

நான் சொல்வது மற்றொரு தீர்வு. அஸ்திவாரத்தை பலப்படுத்துங்கள் ஒரு மாடி என்ன ஓன்பது மாடி கூட கட்டலாம் என்கிறேன். ஆனால் அஸ்திவாரம் பத்தி பேசாதீங்க இரண்டு மாடி கட்டினால் வளையுது. முட்டு கொடுக்கலாம் என யோசனை சொல்கிறீர்கள்.

அனானிக்கு:
தகுதியும் திறனும் ஒரே நாளில் வந்து விடுமா? (பிறப்பால் வரும் என நான் சொல்லவில்லை. நம்பவுமில்லை.) அவை ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. உயர்தர கல்வி (English Medium??!) பணம் உள்ள வீடுகளில் வாய்க்கிறது. மற்ற குழந்தைகள் அதற்கே வாய்ப்பில்லாமல் கூலி வேலைக்கு செல்கிறன்றன. பால்வாடியில் நான் இட ஒதுக்கீட்டை கோரவில்லை. பால்வாடியை பலப்படுத்தினால் இட ஒதுக்கீடே தேவைப்படாது எனச் சொல்கிறேன். வறுமையின் காரணமாக தீக்குச்சி தொழிற்சாலைகளில் வாடும் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என சொல்கிறேன்.

ரெபரென்ஸ் மூலம் வந்தீர்களா? (நாமெல்லாம் என ஏன் எல்லாரையும் சேர்த்துக் கொள்கிறீர்கள்!) இங்கே இட ஓதுக்கீடு வேண்டாமா?

//இன்னும் கல்வியே எட்டிப்பார்க்காத எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன என்று யோசி.//
யோசித்தேன். நீங்களும் யோசியுங்கள். அதற்கு பால்வாடியை பலப்படுத்துனமா? இல்லை ஐஐடியில் பிராமணரை ஒழிக்கனுமா?
அறிமுகப்படுத்திய போது சாதித்த இட ஒதுக்கீடு இன்றைக்கு மேலும் அரசியலாக்கப்படுவதும் அதன் பயன் சேரவேண்டியவர்களையும் போய் சேரவில்லை எனும் போது தான் ஆத்திரம் வருகிறது.

படித்த ஓரு தலைமுறையின் தந்தை அடுத்த தலைமுறைக்கு கல்வியை போதிக்க முடியாதா? இல்லை பயலாஜி்க்கலாக படித்த தந்தையின் ஒவ்வொரு தலைமுறை குழந்தையும் கூடுதல் அறிவு பெறுகிறதா? ஓரு குடும்பம் நிலைபெறுவதற்கான அவகாசம் தருவதால் உங்கள் யோசனையை ஏற்கலாம்

//நீ அடிப்படையை புரிந்துகொள்ளாமல் அல்லது புரியாதது போல் நடிக்கவேண்டாம்//.
அதனால் தான் அடிப்படையை சரி செய்வோம் என்கிறேன்.

திரு:
நீங்கள் சொல்வது உண்மையானால் கண்டிக்கிறேன். அதை நேரடியாக உறுதி செய்வதற்கு எனக்கு வாய்ப்பில்லை.

ஐஐடி ஐஐஎம் படித்து வெளிநாடு சென்றவர்கள் நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும் சில காலம் நாட்டுக்கு பணி செய்ய வேண்டும் என்று கூட சட்டம் கொண்டு வரலாம். ஏனென்றால் பலரும் அரசு தரும் பெரும் மானியத்தில் தான் படிக்கிறார்கள். அந்த பணத்தை கூட பின் தங்கிய மாணவர்களின் நலனுக்காக கல்விக்காக செலவழிக்கலாம்.

மற்றபடி காலச்சக்கரம் சுழலுவதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கோஷங்களில் உணர்ச்சி வசப்பட்டு ஜல்லியடிக்க கூடாது. அதனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் நன்மை.
(ஜெ திமுகவை பரம்பரை எதிரி என்றால் கருணாநிதி நான் பிற்படுத்தப்பட்ட ஜாதி அதனால் தான் அப்படி சொல்கிறார் என்கிறார். இதுவும் அரசியல் வியாதிகளின் லட்சணத்தை சொல்லத்தானே ஒழிய கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்ப அல்ல)

இன்னும்:
சுடலை மாடன் போன்றவர்கள் அனுபவங்களையும் எழுதுவதால் உண்மை என்று எடுத்துக்கொண்டு அதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அதற்கு தீர்வு பிராமணர்களை ஒழிப்பதல்ல. இடஓதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதோ அதிகப்படுத்துவதோ அல்ல. இருப்பது நூறு சதவிகிதம். அதை எப்படி எத்தனை கூறுகளாக பங்குபோடுவது. ஐஐடிக்களில் தமிழகத்தில் உள்ள ஜாதிகளை மட்டும் கொண்டு இட ஓதுக்கீடு செய்ய முடியமா? எல்லோருக்கும் எல்லாமும் என்றால் இந்தியா முழுமைக்கும் எத்தனை ஜாதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் எவ்வளவு என சதவிகிதம் எப்படி பிரிப்பது? சாத்தியமா?
(இன்றைக்கு இருக்கிற 51 ஏக்கரை 100 பேருக்கு சமமாக பிரித்துக்கொடுத்துவிடுவோம். இன்னும் ஐந்து வருடத்தில் இன்னும் புதிதாக 50 ஏழைகள் வருவார்களே? அப்போது நிலமும் இருக்காது. சதவிகிதமும் குறைந்து விடும். அப்போது அது சம(மூக) நீதியாகாதே? இதுவும் உதாரணத்திற்கு தான்.)

என்ன அடைப்புக்குள் குறிப்பிட்டிருப்பது "சோத்தனம்" போல இருக்கிறதா?. "சோத்தனம்" விளக்கவுரை படித்த பின் நானும் சில முயற்சிகள் செய்து பார்த்தேன். :)

Anonymous said...

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

"விடாது கருப்பு" ஒரு இந்தி அடியாள்!!! இந்தி பேசும் OBC 'தமிழர்'..

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!