March 24, 2007

கிரிக்கெட் வீரர்கள் அடுத்து என்ன செய்யலாம்!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், பேட்டிங்கில் உலகமகா கில்லாடி தெண்டுக்கர், இந்தியாவின் சுவர் திராவிட், பெங்கல் புலி கங்குலி, சுழல் பந்து வீச்சில் எட்டாத சிகரம் கும்ளே, ஹர்பஜன் சிங், சேவாக்... இவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் புகழின் உச்சிக்கே சென்றவர்கள், அதிலும் தெண்டுல்கர் இந்தியாவில் 20 பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இருப்பவர். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை மூட்டைக் கட்டி கிரிக்கெட் விளையாடுவதற்குகூட நாங்கள் இனிமேல் லாயக்கு இல்லை என்று நிரூபித்து விட்டு வந்துள்ளனர். ஜனாதிபதி அப்துல் கலாம் வேறு இந்தியா 2020 என்று ஓயாது கணா கண்டு வருகிறார்!.......... இந்தியா 2020 இல் பாதி சோமாலியாகவும், மறுபாதி சூடானின் டர்பராகவும் மாறாமல் இருந்தால் சரி!
இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இனிமேல் கிரிக்கெட்டில் பிழைப்பை ஒட்ட முடியாது என்பது நன்றாக தெரியும். எனவே, எதிர் வரும் உத்திரபிரதேச தேர்தல் எதிர்காலத்தில் இந்தியாவின் தலை எழுத்தையே மாற்ற உள்ளது. எனவே, இப்போதே இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாம் அல்லது எம்.எல்.ஏ.வுக்கு நிற்கலாம்.
ஒரு தொழிலில் ஓய்வு பெற்றவர்கள் சரணாகதியடையும் இறுதி தொழில் அரசியலாக அல்லவா மாறி விட்டது. அப்புறம் என்ன தியாகத்தைப் பற்றியெல்லாம் ஓயாது பேசிக் கொண்டே இருக்கலாம். அப்படியும் இல்லையென்றால் பாப் உல்மர் மாதிரி தெண்டுல்கர் ஏதாவது ஒரு குட்டி நாட்டிற்கு கோச்சராக போகலாம்! அவர்கள் உங்களை சேர்ப்பார்களா என்பது தெரியாது.
அதுவும் இல்லையென்றால் ரியல் எ°டேட் பிசின°, கிரிக்கெட் வர்ணனையாளர், சினிமாவில் நடிப்பது, ஹோட்டல் கட்டுவது போன்று ஏதாவது ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தேசத்திற்கு சேவை செய்யலாம். அதுவும் இல்லையென்றால் உங்களைப் பற்றி நீங்களே யாரையாவது வைத்து டாக்குமெண்டரி எடுக்கலாம். அதுவும் முடியாது என்றால், பாப் உல்மர் மாதிரி கிரிக்கெட் சூதாட்டம் குறித்து ஏதாவது உளரலாம்.......... அதைத் தவிர மற்றதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள்.
அடுத்த தலைமுறையும் உங்களது திறமைகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டே... உங்களைப் பின்தொடர்ந்து வளரும்.... சூப்பரப்பா. சூப்பர்.................. கலக்கிட்டீங்க................ விளையாட்டுத்துறைக்கு என்று ஒரு மந்திரி வேற இருக்கார். அவங்களுக்கும் கிரிக்கெட்டை விட்டா வேற விளையாட்டு தெரிய மாட்டேங்குது. அவங்க என்னப் பண்ணுவாங்க... இதைத்தானே இந்த பாழாப்போன டிரில்லினியர்கள் விரும்புராங்க...

1 comment:

eastwind said...

இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.

அப்பால
நான் தான் உண்மையான
கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
நீயே கத்திகினுருக்க,
அங்க இன்னாடானா
ஒரு rss அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
வேலைக்காகாதுன்ரான்,

ஒன்னான்ட இத்த
அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
இன்னா தலிவா மேட்டரு.
ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
யெல்லாரும் காத்திகினுருக்காங்க