"சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: மார்க்சிSட்டுகளின் இரட்டை நிலைபாடு" என்ற தலைப்பில் அரைவேக்காடு இரா. தங்கதுரை, காலச்சுவடில் வாந்தியெடுத்துள்ளார். மமதையான மம்தாவின் ஆட்டத்திற்கே வங்க மக்கள் இறையாகவில்லை. இங்கே, மணலை கயிராக திரித்து சரடு விடுகிறது காலச்சுவடும், அரைவேக்காடு தங்கதுரையும். தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.
டாடா நிறுவனம் சிங்கூரில் துவங்கவுள்ள கார் தொழிற்சாலைக்கு மேற்குவங்க இடது முன்னணி அரசு 997.11 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. தங்கதுரை இந்த புள்ளி விவரத்தை கூட அறியாத பாலகராக இருப்பதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. (அவர் இதனை 920 ஏக்கர் என குறிப்பிட்டுள்ளார் - பார்க்க அவர் கட்டுரையை)
கம்யூனி°ட்டுகளுக்கு எதிராக அவதூரை பரப்பும் இந்த வாய்ச்சவடால் பேர்வழிகள், தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சியே இல்லையென்று. அத்தகைய பேர்வழிகள்தான், தற்போது விவசாயிகளின் புது நண்பனாக உருவாகியுள்ளனர். உண்மை நிலைமை என்ன என்று மேற்குவங்க மக்களுக்குத் தெரியும். அதற்காக நாம் அலட்டிக் கொற்வதற்கு ஒன்றுமில்லை.
இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தின் மூலம் 13.87 லட்சம் ஹெக்டேர் நிலத்தை கைப்பற்றி, அதனை 28 லட்சம் மக்களுக்கு விநியோகித்தது மேற்குவங்க அரசு. மோடியை புகழ்ந்து தள்ளியிருக்கும் தங்கதுரை, குஜராத்தில் 3000 சிறுபான்மையினரை கொலை செய்து, இலட்சக்கணக்கான இசுலாமியர்களை ஊரைவிட்டே விரட்டிய நவீன பாசிச மோடியை புகழ்ந்திருப்பதன் மூலம் அவரது சுயரூபம் வெளிப்பட்டிருப்பதை நாம் உணரலாம். குஜராத்தில் பா.ஜ.க. - சங்பரிவார அரசு நிலச்சீர்திருத்தம் ஏதாவது செய்ததா? அதனை தங்கதுரை நிரூபிக்க முடியுமா? பூணை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாது தங்கதுரை. உன்னுடைய விஷம் கக்கும் பிரச்சாரம் கோயபல்சை மிஞ்சி விட்டது. இவ்வாறு மேற்குவங்கத்தில் விநியோகிகப்பட்ட நிலத்தில் 40 சதவீதம் பயனடைந்தது தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்குவங்கம் விவசாய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில்தான், மேற்குவங்க அரசு தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டு டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சிங்கூரில் இடம் ஒதுக்கீடு செய்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 997 ஏக்கரில் 945 ஏக்கர் நிலம் ஒருபோக விளைச்சல் மட்டுமே கொண்டது. ஒரு சிறு பகுதி மட்டும் இரு போக விளைச்சல் நிலம். இத்தகைய நிலங்களுக்கு தற்போதைய மார்க்கெட் விலையை விட 150 மடங்கு தொகையை உத்திரவாதப்படுத்தி, விவசாயிகளுக்கு எந்தவிதமான அலை கழிப்பும் இல்லாமல் முழுமையாக செட்டில் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இழப்பீட்டைப் பொறுத்தவரை ஒருபோக நிலமாக இருந்தால் 8.40 லட்சமும், இருபோக நிலமாக இருந்தால் 12 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிலத்தினை அரசு கொண்டு வரும் திட்டத்திற்காக 12 ஆயிரம் விவசாயிகள் தங்களது முழு ஒப்புதலோடு கையெழுத்துப் போட்டு, முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். மேலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு திட்டம் அமையவுள்ள இடத்தில் உரிய வேலைவாய்ப்பும் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, தகுதியுள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பிட்டர், டர்னர், வெல்டர் என பலதொழில்களை 2000க்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இது தவிர பெண்களுக்கு தையல் தொழில் உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு மேற்குவங்க அரசு வழிகாட்டி உதவி வருகிறது. இதுபோன்ற திட்டம் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாதது. அதேபோல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழில் வளர்ச்சிக்காக எப்போதெல்லாம் நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் இன்னும்கூட முழுமையாக நிவாரணமோ அல்லது வேலைவாய்ப்போ வழங்காமல் மக்கள் அலை மோதுவதையெல்லாம் தங்கதுரையின் பூனை கண்களுக்கு தெரியாமல் போனதற்கு என்ன காரணமோ? அவருக்கே வெளிச்சம்.
அதைவிட பெரிய சரடு என்னவென்றால், இந்த தலைப்பில் "சிறப்பு பொருளாதார மண்டலம் மார்க்சிSட்டுகளின் நிலைபாடு என்பதே" இவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தங்கதுரை நீங்கள் எழுதிய கட்டுரைகள் எல்லாம் எப்படியிருக்கும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தமிழகத்திற்கு விளக்கி விட்டீர்கள். ஐயா, தங்கதுரை சிங்கூரில் அமையவுள்ள டாடா கார் தொழிற்சாலை திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வராது. சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்து மேற்குவங்க அரசு மாற்றுக் கொள்கை வைத்துள்ளது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் மார்க்சிSட் கட்சி மீது புழுதிவாரித் தூற்றும் நோக்கத்தோடு எழுதுவதால் உங்களுக்கு பெரும் திருப்தி கிடைக்கலாம். ஆனால், உங்களது எழுத்தே உங்களைப் பார்த்து நகைப்பதை என்னவென்று சொல்லுவது. காலச்சுவடு இப்படிப்பட்ட அரைவேக்கடுகளின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமைபடுவது அதற்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையினைப் பெற்ற அரசு மேற்குவங்க இடது முன்னணி அரசு. காங்கிரசு முதல் மமதா, பா.ஜ.க. வரையில் பலரும் இடது முன்னணி அரசுக்கு எதிராக போடாத ஆட்டங்கள் இல்லை. அவற்றையெல்லாம் மேற்குவங்க மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை மேற்குவங்க மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு இடது முன்னணி அரசே. குறிப்பாக மார்க்சிSட்டுகளின் பங்கு மகத்தானது. உலகின் அதிசயம் மேற்குவங்கம். தேர்தல் தில்லு முல்லுகள் மூலம் ஆட்சிக்கு வருவதாக தங்கதுரை போன்றவர்கள் தான் கடந்த காலத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தனர். அவற்றிற்கெல்லாம் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அடியை மேற்குவங்க மக்கள் கொடுத்துள்ளனர். தங்கதுரை உங்கள் எழுத்திற்கு சன்மானம் கிடைக்கலாம். தமிழக மக்கள் அவற்றை முற்றிலும் நிராகரிப்பார்கள்.
4 comments:
ராஜதுரையின் ?
ஏண்ணே கம்மூனிஸ்ட் அண்ணே, சிங்கூருல ஏழைபாழைங்க வயித்துல உங்காளுங்க அடிக்கிறாங்களே, அது உங்க கண்ணுல படமாட்டேங்குதாண்ணே? மோடி ஒரு பொறுக்கின்னா உங்க பொத்ததேவு தாசு குப்புத்தாவும் பொறுக்கிதானண்ணே? பொத்ததேவு கொஞ்சம் சின்ன பொறுக்கி அவ்வளவுதாண்ணே. நல்லா சுத்துறீங்கண்ணே காதுல!
நியாயத்தை பேசுற அனானியன்னா! இதுக்குக்கூடவான்னே தலைய பூமிக்குள்ள விட்டுக்கிட்டு அனானியா பேசனும். நீங்க சொல்லுறது சரிதான்னே. ஏழை - பாழைகள் வயிற்றில் அடிப்பவர்கள் கம்யூனிசவாதியல்ல! சரியாத்தான் சொல்லியிருக்கீங்கள். ஆனால், நீங்க சொல்லுற மேற்குவங்க அரசும், புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அப்படி செய்யவில்லை. எந்த விவசாயியையும் வலுக்கட்டாயமாக நிலத்தை விட்டு அகற்றவில்லை. தடியைக் கொண்டு தாக்கவும் இல்லை. அதுக்குத்தான் இந்த கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறோம் 12,000 விவசாயிகள் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்று. சரி, அதை விடுங்க! இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மேற்குவங்க அரசு தாராளமாக அனுமதி வழங்குகிறது. யாரையும் போராடக் கூடாதுன்னோ, அல்லது போராடுபவர்களை மிரட்டவோ, சிறைக்குள் தள்ளவோ இடது முன்னணி அரசு செய்யவில்லை. மாறாக சிங்கூர் விவசாயிகளுக்காக யார் போராடுகிறார்கள். மமதாவின் கட்சிக்காரர்களும், சமூக விரோதிகளும் வெளியிலிருந்து ஆட்களை கூட்டி வந்துதான் போராட்டமே நடத்துகிறார்கள். இது உண்மையான மக்கள் போராட்டமாக - விவசாயிகள் போராட்டமாக இருந்திருந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் அல்லவா தெருவில் இறங்கியிருப்பார்கள். அப்படி ஒன்றும் மேற்குவங்கத்தில் நடைபெறவில்லை நன்பரே! மேலும் மமதாவின் ஆட்சிகள் போராடுகிறோம் என்ற பெயரால், சிங்கூரில் சி.பி.ஐ.(எம்) ஊழியர்களை தாக்குவதும், அலுவலகத்தை நொறுக்குவதும், வீடுகளுக்கு தீயிட்டு கொளுத்துவதும் என்ற அடங்காபிடரிச் செயலில்தான் - வன்முறையில்தான் ஈடுபடுகிறார்கள். இவர்களை நிச்சயம் ஒடுக்கிய ஆகவேண்டும். அதேபோல், தங்கதுரையில் கட்டுரையில் ஏதோ ஒரு பெண்ணை சி.பி.ஐ.(எம்) ஆட்கள் கொலை செய்து விட்டதாகவெல்லாம் உளறியிருக்கிறார். மேற்குவங்க அரசு உடனடியாக இந்த கொலை குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிபாரிசு செய்து அனுப்பியுள்ளது. பெண்களை மதிப்பவர்கள் மார்க்சி°ட்டுகள். எனவே தவறான கருத்தை மூளையில் வைத்துக் கொண்டு எழுதாதீர் பெரியண்ணே!
Unfortunately for 'marxists' like you articles criticising the WB government and CPIM have appeared in publications like EPW,www.countercurrents.org
Your typical style of branding critics wont work here as criticism has come from fellow travellers and supporters of the
left.In any case you can check with your high command and repeat what they want to say, so that you
can prove your loyalty.
Post a Comment