March 17, 2007

நந்திகிராமத்தில் நடந்தது என்ன? சில அலசல் கட்டுரைகள்!

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் அது சார்ந்த விஷயங்களில் உள்ள பின்னணி குறித்து சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி விளக்கியுள்ளார். இது தவிர மற்றும் சில கட்டுரைகளை இணையவாசிகளின் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.

சந்திப்பு
நந்திகிராமத்தில் துப்பாக்கிச்சூடு துரதிருஷ்டவசமானது:
மம்தா கட்சி - நக்சல் கும்பல் திட்டமிட்டு பெரும் கலவரம் - சீத்தாராம் யெச்சூரி பேட்டி

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமத்தில் மம்தா பானர்ஜி கட்சி மற்றும் நக்ச லைட் கும்பல்கள் புதனன்று பெரும் வன்செயலில் ஈடுபட்ட னர். நந்திகிராமத்தை சேர்ந்த வர்களை அடித்து விரட்டி விட்டு வன்முறையாளர்கள் அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட் டுக்குள் வைத்துள்ளனர். சாலைகள், பாலங்களை தகர்த் துள்ளனர்.புதனன்று அந்தப் பகுதிக் குள் போலீசார் நுழைய முயன்றபோது, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கல வரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாய மடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக் கிடமாக உள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறந்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் புதனன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச் சூரி கூறியதாவது:மேற்கு வங்கம், நந்தி கிராமத்தில் மாநிலத்தில் சில அரசியல் கட்சிகளும், சமூக விரோத சக்திகளும் சேர்ந்து நந்திகிராமம் மக்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் நடவடிக்கை களில் இறங்கி யிருந்தனர். காவல்துறையினர் விரைந்து அந்த ஊருக்கு வராத வகை யில் சாலைகளில் பள்ளங்க ளைத் தோண்டியும், பாலங்க ளைத் தகர்த்தும் வைத்திருந் தனர். அக்கிராம மக்கள் இது தொடர்பாக காவல்துறையின ருக்குத் தெரிவித்து பாதுகாப்பு கோரினர். காவல்துறையினர் நந்திகிராமத்திற்குச் சென்ற போது. சமூக விரோத சக்திகள் அவர்களை கிராமத்திற்குள் நுழையாதவாறு தங்கள் வசம் இருந்த துப்பாக்கிகளால் காவல்துறையினரைப் பார்த்து சுட்டனர். பின்னர் காவல் துறையினரும் அவர்களைப் பார்த்து சுட்டனர். இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் நந்தி கிராமத்தில் நிலங்கள் கைய கப்படுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்தது. எனவே மேற்கு வங்க அரசு நிலம் கைய கப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இருந்தும் கூட சமூக விரோத சக்திகளும், சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திர மூட்டும் செயல்களில் இறங்கி யுள்ளன. இவர்கள் யாரும் அந் தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக் கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள். வன்முறை யாளர்களால் அவர்கள் தாக் கப்பட்டார்கள். இதில் ஒருவரின் கால் வெட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் காவல்துறையினரின் உத வியை நாடினர். காவல்துறை யினர் கிராமத்திற்கு வந்த போது, வன்முறையாளர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர். வன் முறையாளர்கள் காவல்துறை யினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனவே, காவல் துறையினரும் திருப்பிச் சுட்ட னர். இதன் விளைவாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றது. நந்தி கிராமத்தில் நிலங்க ளைக் கையகப்படுத்துவதில் பிரச்சனை வந்ததால், இப் போது அங்கே எந்தப் பணிக ளும் நடைபெறவில்லை. அனைத் தும் நிறுத்தி வைக்கப்பட் டிருக்கிறது. ஆயினும் வன் முறையாளர்கள் அக்கிராம மக்களுக்கு எதிராக ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் கட்சியின் அப்பகுதி மாவட்டக் குழுவும், விவசாயி கள் சங்கமும் புதனன்று மாலை 5 மணி முதல் வியாழனன்று மாலை 5 மணி வரை பந்த்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனை நாங்கள் அரசியலாகச் சந்திக்கத் தயாராக இருக்கி றோம். இவ்வாறு சீத்தாராம் யெச் சூரி கூறினார்.நந்தி கிராமத்தில் வெளி யாட்களால்தான் மோதல் ஏற்பட்டது என்கிறீர்களா, வெளியாட்கள் என் றால் யார் என்று ஒரு செய்தி யாளர் கேட்டபோது, வெளிப் படையாக இயங்கக்கூடிய கட் சிகள், தலைமறைவாக இயங் கும் நக்சலைட்டுகள் அனை வரும்தான் என்று சீத்தாராம் கூறினார். பந்த்திற்கு அறைகூவல் விடுத்ததற்கான காரணத்தை ஒரு செய்தியாளர் கேட்டபோது, இப்பிரச்சனையை மக்களிடம் கட்சி கொண்டு சென்றிருக்கிறது. இதை நாங்கள் ஒரு அரசியல் சவாலாக ஏற்றுக்கொண்டிருக் கிறோம். இதனை அரசியலாகச் சந்திக்க விரும்புகிறோம் என்று சீத்தாராம் கூறினார்.மேலும் நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணி கள் அதிகாரபூர்வமாக நிறுத் தப்பட்டு விட்டன. தாக்குதல் நடத்தியவர்கள், கிராம மக்களை விட அதிக மாக உள்ளார்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்த ஆயுதங்கள் கிராம மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று சீத் தாராம் கூறினார். நந்திகிராமம் ஊராட்சி யைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் வன்முறையாளர்களால் விரட் டப்பட்டு நிவாரண முகாம் களில் கடந்த ஜனவரி மாதம் முதல் அகதிகளைப் போல் தங்கியுள்ளனர். இடது முன்னணி ஆட்சி யில் மேற்குவங்கத்தின் தொழில் வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்று மம்தா கட்சி யினர் குற்றம் சாட்டினர். ஆனால் தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று எச்சரித் திருந்தார். நாடாளுமன்ற மக்களவை யில் இடதுசாரிக் கட்சி உறுப் பினர்கள் செவ்வாயன்று நடந்து கொண்ட விதம் குறித்து ஒரு செய்தியாளர் கேட்டபோது, இதற்கு நேற்றே செய்தி யாளர்கள் மத்தியில் பதில் கூறப்பட்டுவிட்டதென்றும், உணர்ச்சிவசப்பட்டு உறுப் பினர்கள் நடந்து கொண்ட செய்கைக்கு எங்கள் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலை வர் வருத்தம் தெரிவித்து விட்டார் என்றும் கூறினார்.


மேற்குவங்க மக்களுக்கு சிபிஎம் வேண்டுகோள்

நந்திகிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மம்தா கட்சி மற்றும் நக்சலைட் கும்பல் திட்டமிட்டு வன்செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-நந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த 5 ஊராட்சிகளில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறையாளர்கள் திட்டமிட்டு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு வன்முறையைத் தூண்டி வரும் அவர்கள் சாலைகளை துண்டித்து பாலங்களை தகர்த்தனர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்தப் பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்டுள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து வன்முறையாளர்களால் அகற்றப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நந்தி கிராமம் பகுதிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப் பதற்கு நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று மாநில அரசு பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், திரிணாமுல் மற்றும் நக்சலைட் கும்பல், அரசு அதிகாரிகளையோ போலீசாரையோ அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சுமிதா மண்டல் என்ற பெண், வன்முறையாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நந்திகிராமம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த நிர்வாகம் மேற் கொண்ட எந்த முயற்சிக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. சமா தானக் கூட்டங்களுக்கு வர மறுத்தனர். கடைசியாக அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறி வித்தது. நிர்வாக நடவடிக்கைகளை உறுதி செய்யவும், சாலைகள், பாலங்களை சீர் செய்யவும் நந்திகிராமத்திற்குள் போலீசார் நுழைந்தனர். அவர்கள் மீது செங்கல் மற்றும் வெடிகுண்டுகளை சீர்குலைவு சக்திகள் வீசினர். குழாய் துப்பாக்கிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் வருந் தத்தக்கது. போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தி திட்டமிட்ட கலவரத்தை ஏற்படுத்தியது சீர்குலைவு சக்தி கள்தான். மேற்குவங்க மக்கள் குறிப்பாக, நந்திகிராமம் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்ட மக்கள் சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

Thanks : http://www.theekkathir.in

1 comment:

Amar said...

//மம்தா கட்சி - நக்சல் கும்பல் திட்டமிட்டு பெரும் கலவரம்//

இதே மாதிரி எத்தனை ஊர்களில் தோழர்கள் அரசாங்கத்துக்கு இடைஞ்சல் செய்திருப்பார்கள் என்ற தெரியாதவன் நிறைய இருக்கிறான் என்பது யெச்சூரிகளின் எதிர்பார்ப்பு.

காலம் கடந்துவிட்டது.

அவன் அவனுக்கு வந்தால் தான் தெரியுமாம் வலி.