March 19, 2007

அசுரனுக்கு ஐந்து கேள்விகள்! விவாத களம்!


1. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1964 இல் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனக்கென்று திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், அத்திட்டத்தை நிறைவேற்றிட கடந்த 40 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது. எங்கள் கட்சியின் திட்டத்தை அறிந்து கொள்ள இந்த லிங்கை உபயோகப்படுத்தவும். தாங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு, போலி கம்யூனிஸ்ட் என்று ஓயாது வசைபாடும் உங்கள் உண்மையான! கட்சிக்கு, கட்சி திட்டம் என்ற ஒன்று உண்டா?

2. 1969 இல் எம்.எல். கட்சியாக பிரிந்து சென்ற நக்சல்பாரிகள், இன்றைக்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளாக பிரிந்திருக்கிறார்களே இது அவர்கள் எடுத்த நடைமுறைத் தந்திரம் தோல்வியில் முடிந்ததைத்தானே பறைசாற்றுகிறது?
3. இந்தியாவில் சங்பரிவார பாசிச வளர்ச்சியை வீழ்த்துவதற்கும், நாடு முழுவதும் உள்ள வெகுஜன மக்களை அதற்கு எதிராக திரட்டுவதற்கும், அவர்களிடையே வேலை செய்வதற்கும், அல்லது உழைக்கும் மக்களில் 80 சதவீதத்திற்கும் மேல் இதர முதலாளித்துவ கட்சிகளில் நம்பிக்கை கொண்டுள்ள சூழலில், இக்கட்சிகளையும், இதன் பின்னால் திரண்டுள்ளமக்களையும் மதவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுத்திட சி.பி.ஐ.(எம்) நடைமுறையில் எடுத்து வருகிற ஐக்கிய முன்னணி தந்திரம் போல் நக்சலிசவாதிகள் செய்ததென்ன? நக்சலிசவாதிகள் வெற்றுப் பேச்சைத் தவிர - வேறு என்ன செய்தனர்?
4. ரஷ்யாவில் லெனின் காலத்தில் இருந்த பாராளுமன்றம் குறித்தும், லெனின் பாராளுமன்றத்தில் பங்கேற்றது குறித்தும், தற்கால இந்திய பாராளுமன்றம் குறித்தும், உங்களது பார்வை என்ன?
5. இந்தியாவில் தேசிய இனம் குறித்து தங்களது பார்வை என்ன? ஆரியம் - திராவிடம் என்ற கருத்தாக்கம் குறித்து தங்கள் கட்சியின் பார்வை என்ன?
குறிப்பு : இந்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கேடயம், புதிய காற்று, தமிழ் அரங்கம் போன்ற பெயர்களில் இயங்குபவர்கள் எல்லாம் அடையாளம் இல்லாமல் இயங்குகின்றனர். அதேபோல், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்றவற்றில் வந்ததையெல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்து படிக்க முடியாமல் செய்யாதீர்கள்! விவாதம் வெளிப்படையா இருக்கு வேண்டும் என்று கருதுகிறேன். இணையவாசிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

10 comments:

Arasu Balraj said...

பத்ரியின் தளத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கும், உங்கள் கூரையேறி கோழி பிடிக்க முடியாத கதையில் நான் கேட்ட கேள்விக்கும் இது வரை நீங்கள் பதிலளிக்கவில்லை.
நிச்சயமாக இவ்விவாதத்தை குலைப்பதற்காக இங்கே பின்னூட்டமிடவில்லை.மாறாக புதிய விவாதத்தளங்களை உருவாக்கும் உங்கள் அவசரப் பணிகளுக்கு நடுவே எங்களைப் போன்ற அடையாளமற்றவர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமையை நினைவுபடுத்தவே இங்கே பின்னூட்டமிட்டுள்ளேன்.

Anonymous said...

asuran and santhippu are different sides of the same old Coin! no use in this debate, both of them deserve no respect whatsoever in tamil blogsphere.

Anonymous said...

asuran and santhippu are different sides of the same old Coin! no use in this debate, both of them deserve no respect whatsoever in tamil blogsphere.

Anonymous said...

அன்பு தோழர்களே வண்க்கம்,
நான் கம்யூனிசத்தின் பால் பற்றுக்கொன்டவன்,
என்னுடைய அப்பாவும் கம்யூனிஸ்டில் இருந்தவர் தான்.
எனவே நான் சிறுவயதிலிருந்தே
மார்சை அளவற்று நேசிப்பவனாக வளர்ந்தேன்.

தமிழ் மனத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்பவரும்
இன்னும் பல மதவாத சக்திகளும் சேந்துகொன்டு
மார்க்சையும்,கம்யூனிசத்தையும் மிக மிக கேவலமாக
அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது கூட மர்க்சியம் அறிவியல் அல்ல என்ற ஒரு
பதிவை அ. நீ எழுதியுள்ளார். இ ந் நிலையில்
தோழமை சக்திகளான நீங்கள் ஒருவரை ஒருவர்
தாக்கிக்கொள்வது மிகவும் வேதனைளிக்கிறது.
என்ன இருந்தாலும் நீங்கள் அணைவரும் கம்யூனிஸ்டுகள்
மர்க்சும்,லெனினும் நம்முடைய தலைவர்கள்.
உங்களுடய நோக்கம் ஒன்றுதான் பாதைகள் தான்
வேறுபடுகிறது.

எனவே நீங்கள் தாக்கிக்கொள்வதை உடனே
நிறுத்துங்கள் ,அந்த பாசிச சக்திகளுக்கு
பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,
மார்க்சியமே தீர்வு என்று நம்பும் என்னைப்போன்றவர்களின்
நம்பிக்கையயும் காப்பற்றுங்கள்,
விரைந்து செல்லுங்கள் தோழர்களே.

என்னுடைய தொடர்பு எண்னை தனி மடலில்
இட்டுள்ளேன்.

லெனின்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

That groups and parties that swear by Marx,Lenin and Mao criticise each other and tend to dismiss other group(s) as not true revolutionaries. For many years CPI and CPI(M) were on different camps and now they are allies only.An united communist party is no where in sight.In terms of ideology and praxis ML groups are at a great distance from CPI and CPI(M) and the distance is growing.
Even when NDA was in power they did not come together.So to think
that they will come together and 'save' marxism is unreasonable
in the current context.

அசுரன் said...

சந்திப்பு,

முதலில் நந்திகிராம விசயத்தை முடித்துக் கொண்டு பிறகு இந்த ஐந்து கேள்விகளுக்கான விவாதத்தை தொடங்குவோம். நந்திகிரம விசயத்தில் நான் கேள்விகளையல்ல மாறாக கட் பேஸ்ட் செய்து கட்டுரைகளை குவித்துள்ளேன் என்றூ குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஆனால் நான் கேட்டிருந்த சில அடிப்படை கேள்விகளை பொருட்ப்படுத்தமாலேயே இப்படி சொல்கிறீர்கள்.

நந்திகிராம விசயத்தில் CPM-ன் தத்துவ நிலைப்பாடு என்ன? நந்திகிராம நடவடிக்கையை நியாயப்படுத்தும் CPM -ன் தத்துவ நிலைப்பாடு என்ன?

இந்த கேள்வியில் நந்திகிராமை விவாதித்து விட்டுத்தான் வேறு எந்த விசயத்தை பற்றியும் பேச முடியும்.

ஏனேனில் கேள்விகளை தொடுத்து விவாதத்தை நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட சூழலில் நீங்களாக ஒரு ஐந்து கேள்வியை கேட்டு இன்னொரு விவாதத்தை ஆரம்பிப்பதை ஊக்குவிக்க முடியாத துரதிருஷ்டவசமான நிலையில் உள்ளேன்.

அசுரன்

சந்திப்பு said...

இந்த விஷயத்தை விவாதிப்பதற்கான அடிப்படையே கட்சி திட்டம் மற்றும் கொள்கை நிலைபாடுகளே. சி.பி.ஐ.(எம்) மூன்றாண்டுக்கு ஒருமுறை அகில இந்திய அளவில் மாநாட்டை நடத்தி, அம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் அரசியல் மற்றும் அமைப்பு தீர்மானத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. நந்திகிராமத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த நிகழ்விலிருந்துதான் விவாதிக்க வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையாக இருப்பது சி.பி.எம்.இன் கொள்கை நிலைபாடுகளே! எனவே, நக்சலிசவாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக காட்டுக்குள்ளேயே அரசியல் நடத்துவதும், பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்கும் என்ன அடிப்படையோ அதே அடிப்படைதான் இதற்கும் இருக்கிறது. விவாதம் என்று வந்து விட்ட பிறகு, குறிப்பாக இரயாகரனின் கேள்விகளையும் கணக்கில் கொள்க! விவாதத்தை தத்துவார்த்த மற்றும் திட்டத்தின் அடிப்படையில் நின்று விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நந்திகிராமத்தை மட்டும் வைத்துக் கொண்டு விவாதிப்பது, போகாத ஊருக்கு வழிகாட்டுவதுபோல் ஆகிவிடும். எனவே, இன்றைக்கு அடிப்படையான கேள்வி நக்சலிசம் சீர்குலைவு மற்றும் பயங்கரவாத நடைமுறை தத்துவமாகி சீரழிந்துப்போனதற்கும், திக்குத் தெரியாத காட்டிற்குள் மாட்டிக் கொண்டதற்கும் அடிப்படை அவர்கள் மேற்கொண்ட திட்டமே. எனவே, இதிலிருந்து விவாதிக்க நீங்கள் தயார் என்றால், துவங்கலாம் என்பதே என்னுடைய கருத்து. இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், ம.க.இ.க.வின் பின்னாலுள்ள கட்சியை வெளிக்காட்டாமலே முகமூடி போட்டுக் கொண்டு இயங்குவதன் தத்துவார்த்த அடித்தளம் என்ன?

குறிப்பு : இந்த இடத்தில் நந்திகிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டையோ. அதில் 14 பேர் இறந்ததையோ நியாயப்படுத்தவில்லை. மாறாக, இத்தகைய நிலையை உருவாக்கியவர்கள் மமதா, நக்சலிச குழுக்களே... அடிப்படை காரண கர்த்தாக்கள். விவசாயிகள் என்ற போர்வையில் குழாய் குண்டுகளை வைத்துக் கொண்டும், குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னிறுத்தி மறைந்துக் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தியதும், மூன்று மாதங்களாக நந்திகிராம நிர்வாகத்தையும், சுற்று வட்டாரத்தையும் முடக்கியது போன்ற செயல்கள்தான் அடிப்படையானது. மேலும் நந்திகிராமத்தில் இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட மேற்குவங்க அரசு திட்டத்திற்காக எடுக்கவில்லை. ஒரு திட்டம் இந்த கிராமத்தில் நிறைவேற்றுவது குறித்து அறிவிக்கப்பட்டது அவ்வளவுதான். சிங்கூரில் தோல்வியுற்றவர்கள் நந்திகிராமத்தை தங்களது களமாக மாற்றிக் கொண்டனர். 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மேற்குவங்க அரசு எந்தக் காலத்திலும் தொழிலாளர் விவாசாயிகள் மீது துப்பாக்கி சூட்டை பிரயோகித்தது கிடையாது. ஊர்வலம், போராட்டத்திற்கும் தடை விதித்தது கிடையாது என்பது வரலாறு.

Arasu Balraj said...

மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை நாங்கள் சொன்னால் அது 'காட்டுக்குள்ளிருந்து' சொல்வதாகவே இருக்கட்டும்.பிரதமராகியிருக்க வேண்டிய அரிய வாய்ப்பை இழந்து அதற்காக அல்லும் பகலும் அயராது வருந்தும் ஜோதிபாசு பெருமகனாரே இதைத்தான் அய்யா சொல்கிறார்.

In his 25-minute speech, Basu also gave a piece of his mind on the police firing. "I have been told that the mob turned violent. How many police personnel were injured? On the contrary, I saw on television men with bullet injuries on their back. Why is it so? Did the police open fire when they were on their heels?"Link

மேலும் மேதா பட்கர் சொல்வதையும் கேளுங்கள்.

It is shocking and shaking news from the people of Nandigram, the state of west Bengal, India has waged a war against them with an intention of occupying their farm land, fish ponds, homes and hearths. In spite of the rhetorical statements by the Chief Minister of WB that he would consult and convince the people, the State government claiming to be leftist by ideology, has resorted to brutal and barbaric way of using police force and party cadres to attack the unarmed, non violent farmers, fish workers, labourers and artisans in the district of East Midnapore for grabbing their land.Link

இதற்கும், இதற்கு முன்பே இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கும் தொடர்ந்து பதில் சொல்ல மறுத்தால், உங்கள் மார்க்சிய சாயம் வெளுத்துப் போகும், பரவாயில்லையா?

p.s:சாரி, உங்கள் மனம் கோணும் விதத்தில் கட்-காப்பி-பேஸ்ட் செய்ய வேண்டியதாயிற்று.

அசுரன் said...

You Missed my this Comments

******
இது உங்களது இயலாமையையே காட்டுகிறது.

அன்னிய மூலதனத்தையும், தரகு மூலதனத்தையும் நாட்டிற்க்கு உள்ளே அனுமதிக்க என்ன தத்துவ அடிப்படை என்று கேட்டால் அதை சொல்லத் தெரியவில்லை என்று சொல்லுங்கள். அதை விடுத்து பொதுவான தத்துவ விசயங்களை பேச நீங்கள் நிர்பந்திப்பதன் மூலம் இப்பொழுது CPM மாட்டிக் கொண்டுள்ள இக்கட்டிலிருந்து தப்பிக்கும் முயற்சிப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இதே பொதுவான விசயங்களை விவாதிக்க நான் அழைத்த பொழுது வராத நீங்கள் இப்பொழுது நிர்ப்ந்திப்பதில் வேறு உள் நோக்கம் எதுவும் இருக்க இயலாது. உங்களது ஐந்து கேள்விகளுக்கும் பதில்கள் இதோ என் கையில் தயாரகாவெ உள்ளன. ஆனால் அவற்றை வெளீயிட்டு உங்க்ளது தப்பிக்கும் திட்டத்திற்க்கு உதவ நான் தயாராயில்லை.

உங்களது கட்சியில் குறிப்பான பிரச்சனை பற்றி விவாதிக்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் பொது அடிப்படைகளை விவாதித்து திசை திருப்புவீர்களோ? என்ன விவாத முறையோ?

காவிரி பிரச்சனை குறித்து கேட்டால் உன் கட்சியின் அடிப்படையை சொல்லு, என் கட்சியின் அடிப்படையை சொல்லு அப்புறமாத்தான் காவிரி குறித்து பேச முடியும் என்று சொல்வீர்களோ?

நந்திகிராமத்திற்க்கு விளக்கும் கொடுங்கள். ஏனேனில் அதுதான் இப்பொழுது பிரச்சனை அதைத்தான் பேச முடியும். அதுதான் CPMயை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியுள்ளது. அதன் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. விவாதம் அதில்தான் ஆரம்பிக்கீறது. அதை முடித்து விட்டுத்தான் மற்றவை. அதை விளக்கும் தத்துவ புரிதல் இருந்தால் சொல்லுங்கள் விவாதிக்கலாம். இல்லையெனில், அந்த அம்சத்தில் CPMயை முழுவதும் அம்பலப்படுத்தி ஓய்ந்த பிற்ப்பாடுதான் இந்த ஐந்து கேள்விகளை விவாதிக்க இயலும். விவாதத்தை இப்போதைய சூழலில் உங்கள் விருப்பபடி திசை திருப்பி தங்களுக்கு உதவ இயலமைக்கு என்னை மன்னிக்கவும்.

ராயகரனின் விவாதத்திற்க்கு அவரிடம் சென்று பேசுங்கள். இந்த கட்டுரையின் தலைப்பு அசுரனுக்கு ஐந்து கேள்வியா அல்லது ராயகரனுக்கு ஐந்து கேள்வியா?

அசுரன்
***************

Anonymous said...

டேய் சந்திப்பு அசுரன் அய்யாகிட்டயே கேள்வி கேக்குறீயா.... வரண்டா...