April 22, 2009

இலங்கை : அப்பாவும், அன்பு மகனும்!


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், இலங்கை பிரச்சனை தொடர்பாக பேசும் போது,

'இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதல்வர் 30 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக வெற்றி இடங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். மனித நேய மக்கள் கட்சி இரண்டு லோக்சபா தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டனர். ஒரு லோக்சபா தொகுதி மட்டும் தருவதாக முதல்வர் கூறினார். அதை அவர்கள் ஏற்கவில்லை. பா.ம.க.,- கம்யூ., கட்சிகள் விலகி சென்றதால் தி.மு.க., கூட்டணி பலவீனமாகி விடவில்லை. அவர்கள் சென்றதால் செலவு குறைவு. வரவு அதிகம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது."


மகன் மேற்கண்டவாற கூற, அதிர்ந்துப்போன அப்பா (மு. கருணாநிதி)

"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இப்படிக் கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இன்றைய முதல்வரும், வருங்கால முதல்வரும் இலங்கை பிரச்சனை தொடர்பாக என்னதான் நினைக்கிறார்கள். அல்லது தமிழக மக்கள் இலங்கைத் தொடர்பாக தீரத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையை உதாசீனப்படுத்தும் விதமாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல், ஏற்கனவே இருந்த தோழமைக் கட்சிகள் தற்போது இல்லாமல் போனதால் செலவு மிச்சமாம்! அது அவருக்கே வெளிச்சம். தேர்தல் செலவுகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் ஒருபோதும் திமுகவிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ கையேந்தி கிடந்த வரலாறு கிடையவே கிடையாது? மொத்தத்தில் திமுகவின் தேர்தல் ஜனநாயகமே பணநாயகமாகத்தான் உள்ளது என்பதை ஸ்டாலினே அம்பலப்படுத்தியுள்ளார்.


ஆரம்பத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்ற கருணாநிதி, பின்னர் எனது நெருங்கிய நன்பர் என்று கூறினார். காங்கிரசிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே மாற்றிக் கொண்டு பத்திரிகை மீடியா திரித்து விட்டதாக கூறியதோடு, நான் அவ்வாறு கூறவில்லை என்று நாளொரு பல்டி அடித்துக் கொண்டுள்ளார். காங்கிரசசோ தற்போது ஒரு அடி முன்னே பாய்ந்து திமுகவின் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்களே வெட்கம் கெட்ட முறையில் பந்த்தை ஆதரிக்கிறோம் என்று வேஷம் போடுவது ஏனோ? அதனால்தான் "மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னை பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டிற்காக வருடக் கணக்கில் காதல் கொண்டீரே அதில் ஒரு பகுதி நேரத்தையாவது இலங்கை பிரச்சனை தீர்வதற்கு செலவிட்டீரா? என்று கேள்வி எழுப்பினார்." மொத்தத்தில் தமிழக மக்கள் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ் - திமுகவை பல்டி அடிக்க செய்வார்கள்.

திமுகவின் தேர்தல் சாகசம் கண்டு நாடே சிரித்துக் கொண்டிருக்கிறது!

12 comments:

அஹோரி said...

திருச்சி வெள்ளத்தில் மிதந்த போது, ஸ்டாலின் டிவி பேட்டியில், இது அதிமுக வின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்றார். கொஞ்சம் நேரத்திற்கு பின் பேசிய அவரது அப்பா , இது அரசியல் பேசும் நேரம் அல்ல என்று கூறி , ஏதேதோ பேசினார்.
ஐம்பத்து வயதிலும் விடலை பிள்ளையாக இருப்பதால் தான், கிழவர் இன்னமும் சக்கர நாற்காலியில் உழலுகிறார் .

Anonymous said...

M.karunanithi and stalin think that we are >>>Tamil people are fools.Because the "CENTRAL GOVT "is collisional govt.DMK is one of the main partner (or black mail partner).with his few MPs to support the Manmohan he got so many CABINET MINISTERS and so many state ministerial posts.The communist parties are useless because they did not use the Congress government even though THEY had 64 MPS.WHO IS CLEVER AND CUNNING ??
THE DMK IS part and parcel of the government.Bur they are working hard for the welfare of the Srilankan Tamils.So that they declare a HARTAL/STRIKE against their own government >>is it so ??
is not so ?? What a strategy and Plan to foolish the Tamil Nadu people.The congress party done a more and most clever thing than the DMK by supporting DMK HARTAL/BANDH/STRIKE ???/
Their politics chilling the body .They have no moral rights to criticize the left parties. Because they have no any basic morals==R.Selvapriyan-Chalakudy

Anonymous said...

பன்னிக்குட்டி பன்னி மாதிரிதானே இருக்கும். அப்பனுக்கு உள்ள அதே புத்தி மகனுக்கும். நக்கிப் பிழைக்கிற நாய்க்கூட்டம்.

subbu said...

To karunanithi and his son Stalin issue of Srilankan Tamils bothers them now only because it has a bearing on the outcome of Parliamentary Elections.They do not bother and have never bothered about the people dying there because of the misadventure of LTTE and military offensive of Srilankan army.That is the reason why Karunanithi has called LTTE supremo Prabakaran as his friend though he is the person who kept innocent Tamils as captives and used them as human shield. Having kept himself mum for all these years without taking any steps to arrive at diplomatic solutions to the issue now Karunanithi has opened his mouth.Karunanithi and his ministers in the central cabinet were there only to amass wealth.

illakkia.blogspot.com said...

கே.வி. தங்கபாலு பந்த்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளும் என்கிறார் ஆனால் அவர்களுடைய அகில இந்தியத் தலைமை சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த்சர்மாவிடம் செய்தியாளர்கள் தமிழ்நாடு பந்த் குறித்து கேட்டபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பந்த்திற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என்றும் திமுகவுடன் தொகுதி உடன்பாடுதான் கொண்டிருக்கிறோம் என்றும் இலங்கைப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களும் கொள்கையும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
என்னே அகில இந்தியக் கட்சி? டில்லியில் ஒரு குரல். தமிழகத்தில் நேரெதிர்குரல்.

சந்திப்பு said...

பிரளயமே வந்தாலும் திமுக அசராது அந்தப் பழியை அப்படியே யார் மீதாவது போட்டு தப்பித்தக் கொள்ளும். நன்றி தமிழ்.

சந்திப்பு said...

நன்றி செல்வப்பிரியன். கருணாநிதி ஒருபோதும் மக்களை மதித்தவர் இல்லை. பலமுறை பல வேடங்களை ஏற்றவர்தான் கருணாநிதி. எப்படியாவது தொண்டர்களின் மனநிலையை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி வெற்றிபெற வேண்டும் என்ற வெறி கொண்டனர். அதனால்தான் ஒரு முறை தோற்றல் பெரியார் வழி வெற்றிபெற்றால் அண்ணா வழி என்றார். பலமுறை தோற்றபிறகும் கருணாநிதியின் வழியையே பின்பற்றி வருகிறார். அவரது வேடம் கலையும் நேரம் வந்து விட்டது. தற்போது அவரது கட்சியை காப்பாற்ற தைரியமானவர்களை தேடி வருகிறார்!

சந்திப்பு said...

சரியாக சொன்னீர்கள் அனானி. அப்பாவின் வளர்ப்பை தட்டாமல் செய்கிறார் ஸ்டாலின்.

சந்திப்பு said...

நன்றி சுப்பு சரியாக சொல்லியுள்ளீர்கள். கருணாநிதி ஒருபோதும் இலங்கை தமிழர்கள் பற்றி கவலைப்பட்டது கிடையாது. அப்படி கவலைப்பட்டிருந்தால் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் மத்திய அரசிடம் பேசி ஒரு டிப்ளமெட்டி அணுகுமுறையில் தலையிட்டு இந்நேரத்தில் தீர்த்து வைத்திருப்பார்கள். எல்லாம் வெறும் பேச்சுதான்... வெட்டிப்பேச்சு வேலைக்கு உதவாது என்பார்கள். கருணாநிதி பேச்சு காரியத்திற்கு உதாவது என்று மாற்றிக் கொள்ளலாம்.

சந்திப்பு said...

தேர்தல் நேரத்தில் ஸ்டண்ட் அடிப்பதில் காங்கிரசும் குறைந்ததா என்ன? அதனால்தான் இந்த நடிப்பு.

Anonymous said...

அண்ணா... ஏன்ணா அவாள இப்படி கரிச்சு கொட்றேள்.. நாளக்கே நீங்க அவாளோட கூட்டு போக வேண்டிருக்கும்.. ஏன்னா.. அவா மத சார்பில்லாதவா... பாத்து பேசுங்கோ... இது ஒரு புறம் கிடக்கட்டும்.. ஸ்டாலின் பிள்ளையாண்டான் ரொம்ப ப்ராக்டிக்கல்.. தோப்பனார் ரொம்ப பொலிடிக்கல்.. இந்த கண்றாவிக்குத்தான் நீங்க இலங்கை பிரச்சனையப் பத்தி வாயத் தெறக்கறதேயில்ல.. எல்லாத்தையும் விட நீங்கதான் ரொம்ப பொலிடிககல்லோ பொலிடிக்கல்ஸ்... நல்ல கூத்து போங்க...

Anonymous said...

see
like the dmk , the communists also using the eelam issue just for election.no single north indian communist leaders have assured their support for formation of eelam in their speech