April 08, 2009

அழகிரி நர்த்தனம் ஆடும் கருணாநிதி!


மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அழகிரியை நிற்க வைத்து, முடிசூட்டு விழா நடத்திட கனா கண்டு கொண்டிருக்கும் கருணாநிதி, எளிமையின் இலக்கணமாக திகழும் பி. மோகன் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பிணி பிடித்தவர்போல், பித்துபிடித்து அஞ்சாநெஞ்சருக்கு ஆபத்பாந்தவனாக தொடைதட்டி உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டுள்ளார். இதற்கு அண்ணாவையும் துணைக்கழைத்து தேர்தல் களம் காண அல்ல மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக போர்க்களம் புகுவதற்கு கூர் தீட்டியுள்ளார் கருணாநிதி.

இன்று முரசொலியில் "பூச்சாண்டி பொம்மை" என்ற தலைபில் அவரது எழுதுகோல் சிந்திய மைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்த வேண்டியிருக்குமோ? அல்லது எத்தனை உயிர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமோ? என்றே எண்ணத் தோன்றும் யாருக்கும்! எப்போதெல்லாம் இவர்கள் அரசியலுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அண்ணாவை துணைக்கு அழைப்பது வாடிக்கை! தோற்றால் பெரியார் வழி! வெற்றி பெற்றால் அண்ணா வழி என்று முழங்கிய கருணாநிதி எத்தனைமுறை தோல்வி கண்டாலும் உடன்பிறப்புகளின் கட்டளைக்கு இணங்க பணியாற்றுவதாக பிதற்றும் நவீன தசரதனாய் உலாவருபவர்தானே! ஆனால் இப்போது அண்ணாவை துணைக்கு அழைத்திருப்பது அஞ்சாநெஞ்சருக்கு ஆலவட்டம் சூட்டுவதற்காக. இதற்காக தங்களது உடன்பிறப்புகளை தியாகத்திற்கு அறைகூவி அழைக்கிறார்! எதற்காக அழகான தோட்டத்தில் மாங்கனிகளை பறிப்பதற்காக, பூக்களை கொய்வதற்காக அல்ல! தேர்தலில் போட்டியிடும் மகன் வெற்றியை ஈட்ட திருமங்கலத்தில் செய்திட்ட திருகுதாளங்களுக்கு தடையேதும் வந்தால் அவற்றை எப்படியேனும் முறியடித்திடுங்கள் என்ற அழைப்புதான் கருணாநிதியின் உணர்வில் கலந்து உடன்பிறப்புகளுக்கு கட்டளையாய் பிறப்பித்திருக்கிறது "பூச்சாண்டி பொம்மை".

கருணாநிதியின் அறிக்கையைப் பாருங்கள்! மிகுந்திருக்கும் கவலை நாட்டைக் காப்பதற்காக அல்ல. அழகிரியை காப்பதற்காக என்று தெரியும்!

"அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் என்று அவதூறுகளை அள்ளி வீசியிருக்கும் இந்த பட்டா கத்தி பைரவர்களின் சுயமுகம் உள்ளாட்சித் தேர்தலில் நாறிப்போனதை நாடறியும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலல்ல - உள்ளாட்சித் தேர்தலில் பட்டாக் கத்திகள்தானே வாக்காளர்களாய் மாறியது.


ஜனநாயகத்தின் காவலராய் வேடம் பூண்டிருக்கும் கருணாநிதியின் கபட வேடம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமாரின் வடிவில் தமிழக மக்களின் கண்முன் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். "டாக்டர்" கலைஞர் என்பதற்கு பின்னாள் மறைந்திருக்கும் உதயகுமாரின் "தியாகத்தை" நாடறியும். பெற்றவர்களையே விற்றவர்களாக்கிய கருணாநிதி வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிப்பதற்காக சிந்துபாத் கதை கூறுவதை பாலகரும் நகைப்பர்.


மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கூட்டாளியாய் இருந்த ஆட்சியாளர் கருணாநிதி மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது வாக்குபதிவு அதிகாரிகள் உட்பட வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடத்தப்பட்டதும், நான்கு நாள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு பகுதி பகுதியாய் நடத்தப்பட்டபோதும் துப்பாக்கியேந்திய வாக்கு சேகரிக்கும் தொண்டர்களையோ அல்லது வாக்குப் பெட்டிகளை கடத்திச் செல்லும் அஞ்சாநெஞ்சர்களையோ காண முடியவில்லை தேர்தல் கமிஷனால். அவர்கள் காணாததை கருணாநிதி கண்டு விட்டார் என்றால் அவரது கண் நல்லகண்தான்!


சென்னை மாநகர தேர்தல் உட்பட உள்ளாட்சி தேர்தல் களம் அஞ்சாநெஞ்சர்களின் அடியாட்களால் அமர்க்களமாய் நடத்தியதை தமிழகம் அறியும். அதற்கு விலை கொடுக்க தற்போது தமிழக மக்கள் தங்களது புத்தியை கூர் தீட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். சென்னையிலேயே ஓட்டை ஏற்பட்டு 14-ல் 7 தொகுதி காணாமல் போன கருணாநிதிக்கு மதுரையில் அழகிரியின் டெபாசிட் காணாமல் போகுமோ என்ற அச்சத்தால் வந்த எச்சம்தான் அந்த அறிக்கை.

அடுத்து கூறுகிறார் கருணாநிதி, "மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?"

தேர்தலுக்கு தேர்தல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஸ்பெக்ட்டிரம் ஊழல் பணத்தையும், ஏன் வீராணம் பணத்தையும் கூட விட்டு வைக்காமல் தண்ணீராய் செலவழிக்கும் கட்சியெது என்று தமிழக தாய்மார்கள் அறிவார்கள்! குல்லாய்களை மட்டுமல்ல, சிலுவைகளையும் சுமந்து காவடி தூக்கி பா.ஜ.கவுக்கு வெஞ்சாமரம் வீசி, குஜராத் பாசிச படுகொலைகளை கண்டிக்காமல் மவுனம் காத்து இந்துக்களின் ஓட்டுக்களை பத்திரமாய் காத்திட அத்வானியையும் - வாஜ்பாயையும் - மோடியையும் காவடியாய் சுமந்த கதையை நாடு அறியும். பதவிக்காய் குல்லா போடுபவர்கள் யாரென்று! நாய் கவிதை பாடி நட்பு பாராட்டிய உலகத் தமிழனின் ஒப்பற்ற பிரதிநிதியாரென்று உலகத் தமிழர்களுக்கு நன்றய் தெரியும்! கூடா நட்பின் பிரதிநிதி கருணாநிதியே என்று!

பாவமாம் அஞ்சாநெஞ்சர். மதுரையில் அவரது கைங்கரியம் மதுரை மக்கள் நன்றாக அறிந்தது தானே! அட்டாக் பாண்டியனும் - அஞ்சாநெஞ்னும் ஒரே உரையில் உள்ள இரு கத்திகளென்று. தினகரன் பத்திரிகையில் கொலையுண்ட 3 பத்திரிகையாளர்களுக்கும், தினகரன் ஊழியர்களுக்கும் அட்டாக்பாண்டியனை ஏவிய கை எதுவென்று தெரியாதா? முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனின் கொலைக்கு பின்னணியில் இருந்தவர் யாரென்று போலீசாருக்குத்தான் தெரியாதா! 59வது வட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியின் கொலைக்கு பின்னிருந்த - ஊக்கம் கொடுத்த அஞ்சாநெஞ்சன் யார் என்று தெரியாதா?


மதுரை மக்களே வாக்களியுங்கள் உங்களிடம் வாக்கு எனும் கூர்மையான ஜனநாயக வாள் இருக்கிறது. அதனை தைரியமாக பயன்படுத்துங்கள் ஜனநாயகம் தழைத்திட, மதுரையை காப்பாற்றிட! பணத்தை வைத்து அரசியல் நடத்துபவர் மோகன் அல்ல! பணத்தை மட்டுமே வைத்து அரசியல் நடத்துபவர் அஞ்சாநெஞ்சரே! என்று உறக்கச் சொல்லும் மதுரை மக்களே உங்களது வாக்கு எதிர்கால சமூகத்தை நல்ல வழியில் செலுத்தப்போகும் துடுப்புச் சீட்டு.


19 comments:

Anonymous said...

what we can say if you tell all the facts of DMK SUPREME STAR M.KARUNANIDHI??
HIS PETTY POLITICS AND KNOWLEDGE IN TAMIL LANGUAGE will not help the DMK +karunanidhi in any way.The best opportunist in the world is karunanidhi.
we people know his political line after emergency in 1980-81 election>.He didn't hesitate to join with congress.Where the emergency gone ??Gone ith the wind !
He did not hesitate to embrace BJP only for defeat his life political enemy ms.Jayalalitha.>>where his ANNA AND PERIYAR gone >>>>
DMK BORN in the opposition of congress monopoly.Now congress became his political ""BED"".
m.karunanithi has no moral qualities to criticize left parties.He used the left parties throughout his life.His political life survived with the help of left parties only.
But the unfortunate LEFT PARTIES ALWAYS TALKED PRINCIPLES AND OPPOSED THE CONGRESS MONOPOLY.for THAT REASONS THEY WERE TO SUPPORT THE DMK some time>>in some elections.
Karunanithi's statement is his own witness/statement of the things going to be happened in the coming elections.So the left parties leaders must careful to protect their journey.
---R.SELVAPRIYAN---CHALAKUDY

சிவசுப்பிரமணியன் said...

மதுரையில் யார் தேர்தலில் நின்றாலும் அழகிரியின் ஆதரவு இல்லாமல் ஜெயிக்க முடியாது. இது தான் உண்மை நிலவரம். தொழர் மோகன் நின்ற போதும் அழகிரியின் உதவி தேவைப்பட்டது. இப்போதுஅழகிரியே நிற்கும் போது, அது கிட்ட தட்ட முடிவு செய்யப் பட்ட வெற்றி. (எந்த முறையில் வெற்றி என்பது வேறு விஷயம்). ஏதாவது ஒரு அதிசயம் (மக்களுக்கு திடீர் விழிப்புணர்வு பொன்றவை) நடந்தாலொழிய அழகிரியின் வெற்றியை மாற்ற முடியாது. இதை அழுத்தமாக சொல்வதால் என்னை தி.மு.க அனுதாபி என்று எண்ணிவிடாதீர்கள். நான் இரண்டு வருடங்களுக்கு மேல் மதுரையில் இருந்தவன். அங்குள்ள நிலவரத்தை நன்றாக அறிந்தவன். அழகிரிக்கு என்று ஒரு செல்வாக்கும், அன்பும் மற்ற கட்சிகளிடமும், மக்களிடம் உண்டு. அதற்கு காரணம் எந்தவித பாகுபாடும் இல்லாமல், உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவுவது, மக்களிடம் உள்ளா செல்வாக்கு பொன்றவை. நல்லதோ கெட்டதோ மதுரை எப்போதும் அழகிரியின் கையில் தான்.

Anonymous said...

//வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!///

இங்கே இவா
அங்க அவா...
பாவம் மக்கள்...

கம்யுனிஸ்டுகளை காயடிப்போர் சங்கம் said...

Alas.. Atleast you people now wash your dirty Linen in public.

சந்திப்பு said...

செல்வப்பிரியன் நன்றி. தாங்கள் கூறியிருப்பத போல திமுக பா.ஜ.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி வைப்பதற்கு எந்த கொள்கையும் அடிப்படையில்லை. அது அவர்களின் பதவி சுகம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது சரியானது.

சந்திப்பு said...

நன்பர் சிவசுப்பிரமணியன் தங்கள் கருத்தை வரவேற்கிறேன். இருப்பினும் அழகிரியால் மதுரை மக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம். ஒரு திரைப்படம் கூட அவரைக் கேட்டுதான் ரிசீலிஸ் செய்ய வேண்டும் என்ற நிலையே நீடிக்கிறது. அவருக்கு எதிராக எது வந்தாலும் அவற்றை தூள் ஆக்கும் மகா சக்தி கொண்டவராக அழகிரி தன்னை உருவகப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அழகிரியை விட மக்கள் சக்தி மேலானது. உயர்வானது. சாதிக்கக்கூடியது. என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சந்திப்பு said...

..இங்கே இவா
அங்க அவா...
பாவம் மக்கள்...


அனானி பாவம் மக்கள் அல்ல. உண்மைகளை மக்களிடம் இருந்து மறைப்பவர்கள்தான் பாவமானவர்கள். மேற்குவங்கத்தில் இதுபோல் துப்பாக்கி முனையில் வாக்குகளைப் பெற்றதாக அங்குள்ள எதிரிகள் கூட குற்றம் சாட்டியது கிடையாது. எனவே உண்மையை மறைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் எனவே நீங்கள் மறைமுகாக கருணாநிதியின் ஆசைக்கு இடம் கொடுக்கிறீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்.

சந்திப்பு said...

உழைப்பாளிகளின் கைகள், அதுவும் கடினமான உழைப்பாளிகளின் கைகள் எப்போதும் அழுக்காகத்தான் இருக்கும். உங்களைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு அது அசூயையாக இருக்கலாம். எனவே நீங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். உழைப்பாளர் வர்க்கம் வெற்றிக் கொள்ளும்.

கம்யுனிஸ்டுகளை காயடிப்போர் சங்கம் said...

\\திமுக பா.ஜ.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி வைப்பதற்கு எந்த கொள்கையும் அடிப்படையில்லை. அது அவர்களின் பதவி சுகம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது சரியானது.//

தி.மு.க.மாதி மாதி கூட்டு வச்சா அது பதவி சுகத்துக்காக..

ஆனால் கொள்கை சிங்ககளான நீங்கள் வெட்கமே இல்லாமல் காங்கிரசின் வாழை அவ்வப்போது பிடித்து கொண்டு அதன் காலை நக்கினால் அது மட்டும் என்னாவாம்.

சந்திப்பு said...

//ஆனால் கொள்கை சிங்ககளான நீங்கள் வெட்கமே இல்லாமல் காங்கிரசின் வாழை அவ்வப்போது பிடித்து கொண்டு அதன் காலை நக்கினால் அது மட்டும் என்னாவாம்.//

முதலில் உன்னடைய மூளைக்கு காயடிக்க வேண்டும். அப்பத்தான் இதெல்லாம் ஏறும்.

நாங்க என்ன அமைச்சர் பதவி வாங்குறதுக்காகவும், மிச்சம் மீதி காண்ட்டிராக்ட்ல பங்குபோடறதுக்குமா காங்கிசை ஆதரிச்சோம். பா.ஜ.க. என்ற மதவெறயை நாட்டை ஆள அனுமதிக்கக் கூடாது என்ற ஒ‍ரே காரணம் மட்டும்தான். முதல்ல போய் மொடை அடி.

விடுதலை said...

அழகிரி ரவுடிக்கு மதுரை மக்கள் சரியான தீர்ப்பு சொல்ல காத்து இருக்கின்றனர். கருணாநிதியின் கபட,அரசியல் நாகரீகமற்ற பேச்சுகளுக்கு அவரின் மனசாட்சிக்கு எதிரானது என்பதை அறிவார், கடந்த முறை ஆட்சிக்கு வந்த உடன் மேற்கு வங்கத்திற்கு அமைச்சர் குழுவை அனுப்பி மேற்கு வங்க அரசின் சாதனைகளையும் செயல்பாடுகளையும் கண்டுவர அனுப்பி வைத்தவர்தான் இந்த கருணாநிதி.

விடுதலை said...

அழகிரிக்கு ஒரு வேண்டுகோள்….

நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா? உங்கள் பொறுப்பு எல்லாவற்றையும் இவர்களிடம் விட்டு விட்டு மதுரையை சுற்றி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருக்கும் பண்ணை வீடுகளில நீச்சலடிக்க போய் விடுவீர்கள்.பிறகு மதுரையை யார் காப்பாற்றுவது? உங்களுக்கு தெரியாவிட்டால் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் பதவி கொடுத்துள்ள சிலரின் லடசணத்தை பாருங்கள். இப்படி முடிவெடுக்கும் நீங்கள் மதுரை எம்பி ஆகத்தான் வேண்டுமா….?


தேன்மொழி்


எழுத படிக்க தெரியாத இவர் உங்களின் ஆசியால் மதுரை மேயராக ஆக்கப்பட்டவர். இவரது கணவர் கோபிநாதன். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு துணிகள் என்ற பெயரில் தரையில் கடை விரித்து படிப்படியாக முன்னேறியவர்??எந்த வித பெரிய வருமானமும் இல்லாமல் இருந்த கோபிநாதன் இன்று மதுரையின் பிரபல கோடீஸ்வரர். உங்களின் அடிப்பொடியாக இருந்த கோபிநாதனுக்கு மதுரை மாநகராட்சியின் தெற்குமண்டல தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தீர்கள். இந்த கோபிநாதனின் லட்சணம் என்ன தெரியுமா? இவரது மண்டலத்திற்குட்பட்ட எந்த இடததில் வீடு கட்டினாலும், எலவு விழுந்தாலும் மாநகராட்சி இடத்தை பயன்படுத்துவது தெரிந்தால் அங்கே கோபிநாதனின் கார் போய் நிற்கும். 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுத்தால் தான் கார் கிளம்பும். இல்லாவிட்டால் வீடு கட்ட முடியாது.
கோபிநாதனின் மனைவியான தேன்மொழி, மேயர் ஆன பிறகு தான் வீட்டில் காகித பேப்பர்களில் கையெழுத்து போடவே கற்றுக் கொண்டது தனிக்கதை.இப்படி எந்த படிப்பறிவும் இல்லாத ஒரு பெண்ணை மேயராக்கினால் மதுரை எப்படி வளரும்? அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை? தேன்மொழியை மேயராக்கியது எதற்காக?


துணைமேயர் பி.எம்.மன்னன்


திமுக வின் முன்னாள் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான தா.கிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் தற்போது மதுரையின் துணைமேயராக இருக்கும் மன்னன் 2 வது குற்றவாளி உங்கள் நண்பர் என்பதற்காக இவருக்கு துணைமேயர் பதவி.ஒரு காலத்தில் நண்பர்களிடம் ஓசி சட்டை வாங்கி அணிந்து கொண்டிருந்த பி.எம்.மன்னனின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்கிறது மாநகராட்சி வட்டாரம். இது தவிர பினாமிகளை வைத்துஒரு விளம்பர ஏஜன்சியை நடத்தி வருவது தனிக்கதை. மாநகராட்சி வீதிகளில் போர்டுகளை குழி தோண்டி (வழிகாட்டி பலகைகள்) அதில் பெயரளவுக்கு திருக்குறளை எழுதி வைத்துவிட்டு விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்பது மன்னனுக்கே வெளிச்சம்.

எஸ்ஸார் கோபி


மதுரை விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் குறுநில மன்னர் இவர். சூதாட்ட விடுதி, திருட்டு விசிடி தொழிற்சாலை, விபச்சாரம் என்று செயது வருவது உங்களுக்கு தெரியாதா? தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் நடத்தும் சூதாட்ட கிளப்பில் விளையாட . சென்னையில் இருந்து கூட விமானத்தில் வந்து லடசக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடி விட்டு செல்கிறார்கள். இது தெரியாதா உங்களுக்கு?


அட்டாக் பாண்டி


உங்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தினகரன் பத்திரிகை அலுவலகம் மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பத்திரிகையாளர்களும் கொளுத்தப்பட்டனர். இந்த தீவைப்பு தாக்குதலை தொடங்கி வைத்தவர் தான் அட்டாக் பாண்டி. குழந்தைகள் பார்த்தால் நிச்சயமாக மயக்கம் போட்டு விழுந்து விடும் தோற்றம் இவருக்குநீங்கள் கொடுத்த பரிசு என்ன? மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி. அய்யோ…ஒரு முன்னோடி விவசாயிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்…மதுரையின் வேளாண்மை சிறந்திருக்குமே?…படிக்கவே இலலாத, பயிருக்கும், பல்லிக்கும் வித்தியாசம் தெரியாத பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட ஒரு ரவுடிக்கு நீங்கள் வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி அளித்தீர்களே…இதன் அர்த்தம் என்ன?


மிசாபாண்டியன்


இவரை போல் ஒரு பச்சோந்தியை பார்க்கவே முடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அம்மாவே சரணம் என்றார். பிறகு திமுக வுக்கு வந்து சேர்ந்தார். குறைந்த படசம் 100 ரவுடிகள் புடை சூழ இருக்கும் மிசா உங்கள் வீ்ட்டிற்கு அருகில் குடியிருப்பது தான் வேறு வழியே இல்லாமல் நீங்கள் மிசாவை வைத்திருக்க காரணம். ஏனெனறால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு மதுரையில் யார் சொந்தங்கள்? எச்சி சோற்றுக்கு 100 காக்கா..அதில் மிசாவும் ஒன்று .


வி.கே.குருசாமி


ஒரு காலத்தில் லோடுமேன் வேலை பார்த்த இவர் இப்போது மதுரை மண்டலத்தலைவர்..
இப்படி பட்டியல் நீளுகிறது. நக்கீரனும், சிவனும் விவாதம் நடத்திய மதுரையில் உங்களின் கைங்கர்யத்தால் யாரெல்லாம் மதுரையை ஆளும் நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா…அரசியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன் வந்து பார்ததால் ….மூர்ச்சையாகி விழுந்து விடுவான். நீங்கள் எம்.பி யாகி விட்டால் மதுரை என்னவாகும்?தயவு செய்து நீங்கள் தேர்தலில் நி்ற்கத்தான் வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்…மதுரை மக்கள் நன்றாக இருந்து விட்டு போகட்டுமே..பாவம் விட்டுவிடுங்கள்.

எழுதியவர்.சாமகோடங்கி

Anonymous said...

படிக்காதவர்கள் மற்றும் சாதாரண வர்க்கத்தினரை இழிவாக மற்றவர்கள் பார்க்கலாம். தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லுபவர்கள் கூட இப்படி பார்ப்பது எப்படி சரி

Anonymous said...

Even in this ripe old age Karunanithi refuses himself to be a democrate.That is why he has chosen to tell all lies about elections in W.Bengal.He knows very well that a big zero is awaiting him.Having tasted power in the centre and swollowed Rs.10000000000000000/= in spectrum scandal Karunanithi still wants to earn for his family.

Anonymous said...

When all the regional parties were threatening the national parties like Congress and BJP according to their alliance in 2004 and earlier to get main portfolios, to wipe off their cases....

Attn:கம்யுனிஸ்டுகளை காயடிப்போர்

Left is the only alliance India, which extended the support to congress on Common Minimum Programme. Did any party in India come up with such demands before supporting NPA or NDA Govt?

Being a educated person, don't think and write as a ordinary money minded political party member.

Don't be a fanatic.

ALAGUMUKILAN

முனிசாமி. மு said...

Munisamy Said...
அழகிரி பற்றி தைரியமாக எமுதியதற்கு வாழ்த்துக்கள்...
ஆனால் கடந்த தேர்தலில் மோகன் வெற்றி பெற அவரது ஆதரவைப் பெறும் போது இதெல்லாம் தெரியாதா?

சந்திப்பு said...

Thank you Munisamy. People are with us.

Anonymous said...

நேற்று 15.05.2009 (Results counting starts on 16.5.2009) அன்றே மதுரை எங்கும் அழகிரி 3 லட்சம் வோட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றார் என்று poster ஒட்டியிருக்கின்றனர். அவர்கள் போட்ட கள்ள வோட்டு கணக்கு தெரியுமா அல்லது இது தான் முடிவாக அறிவிக்கப்படவேண்டும் இல்லையேல் மதுரை அழகிரி (கண்ணகி) போன்று எரித்து விடுவார் என்று அர்த்தமா.

Anonymous said...

//நல்லதோ கெட்டதோ மதுரை எப்போதும் அழகிரியின் கையில் தான்.//

Wrong correct statement is

மதுரை கெட்டது எப்போதும் அழகிரியின் கையில் தான்.