April 30, 2009

ஓட ஓட துரத்தும் வாக்குகளும்! கலர் மாறாத கருணாநிதியும்!


சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும், துணைநகரங்களிலும் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பல்வேறு நிறங்களில் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளை கலர் போர்டு, ம;"சள் கலர் போர்டு, பச்சை கலர் போர்டு, நீலக்கலர் போர்டு, எம்-சர்வீஸ், டீலக்ஸ், ஏ.சி. பேருந்து என்று விதவிதமான கலர்களில், விதவிதமான கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தி கொள்ளையோ கொள்ளை என்று நாள்தோறும் கொள்ளை அடித்து வந்தது திமுக அரசும்-போக்குவரத்து கழகங்களும். கடந்த ஒன்னறை ஆண்டுகளாக மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. குறிப்பாக முதியவர்கள், படிப்பறிவற்றவர்கள், கிராமப்புறத்தினர், வறிய நிலையில் உள்ளவர்கள் இந்தப் பேருந்தில் ஏறிவிட்டால் பேந்தப் பேந்த முழிப்பதும், கண்டக்டரிடம் தகராறும்தான் வழக்கமான ஒன்றாகிப் போனது. கையில் காசில்லாதவர்கள் கால் நடையாக நடக்கவே பழக்கப்படுத்திக் கொண்டனர்.
மாநகர மக்களுக்கோ இந்தப் பேருந்துகளை விட்டால் வேறு வழியே இல்லை. இருக்கிற ஷேர் ஆட்டோக்களும் குறைந்த தூரத்திற்கு 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி மக்களை ஆட்டோவுக்குள் திணித்துச் செல்லும் காட்சிகள் அடிமைகால சமூகத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது.

4000 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் பேருந்து கட்டணத்திற்கே மாதந்தோறும் 600 முதல் 900 ரூபாய் வரை செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மாநகரங்களில் தள்ளப்பட்டனர். இதனால் கடன் சுமையும், மனச்சுமையும் ஏறியதே தவிர மக்கள் வாழ்க்கை உயரவில்லை. ஒரு பக்கத்தில் ஒரு ரூபாய் அரிசி தனது ஆட்சியின் சாதனை என்று பறைசாற்றும் கருணாநிதி மறுபுறத்தில் பிக்பாக்கெட் கொள்ளையன் போல் மக்களிடம் 5 ரூபாய் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் என்று மக்கள் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. மே 13-ம் நாள் மக்கள் வாக்களிக்கத் தீர்மானித்து விட்டனர். தேர்தல் நாள் நெருங்க நெருங்க கருணாநிதிக்கு பிரஷர் கூடிக்கொண்டே செல்கிறது. முதலில் இலங்கைப் பிரச்சனையில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல 4 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி மக்களிடம் அம்பலப்பட்டுப்போனார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிரடியாக மேற்கண்ட கலர் கலர் பேருந்துகளின் கட்டணங்களை எல்லாம் வெள்ளை போர்டு பேருந்து கட்டணத்திற்கு குறைத்துவிட்டார் ஒரே ஒரு ரகசிய உத்தரவின் பேரில். இது தொடர்பாக மக்களுக்கு எந்த அறிவிப்பும் கூட செய்யவில்லை. திருட்டுத்தனமாக இப்படி விலை குறைப்பதால் வாக்குகள் தனது பெட்டிக்குள் நிரம்பிவிடும் என்ற நப்பாசைதான் காரணம். காலையில் வேறு வழியில்லாதவர்கள் டீலக்ஸ் பேருந்தில் ஏறி போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் கேட்கும்போது, அவர் வழக்கமாக கொடுக்கும் 10 ரூபாய் டிக்கெட் கொடுக்காமல் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்க மக்களுக்கு சந்தேகம் எழுந்து விட்டது. "ஏம்பா நான் தி நகர் போறேன் அதுக்குப்போய் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்குறீயே" என்று கேட்க. அப்புறம் நடத்துனரும் நகைப்புடன் இப்ப எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று சொல்ல. மக்கள் ஆகா கருணாநிதியின் நாடகமே நாடகம்தான்! என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆட்சியாளர்களை ஓட ஓட துரத்தும் வல்லமை படைத்தது ஓட்டு. இதனால் மனம் மாறினார் கருணாநிதி ஆனால் அவரது கலர்தான் மாறவில்லை!

நமது வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளாக அமையட்டும்! மத்தியில் மாற்றாட்சி அமைந்திட மூன்றாவது மாற்றை கொண்டுவர, வாக்குத் தவறிய ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணியையும், மதவாத பா.ஜ.க. கூட்டணியையும் புறமுதுகிட்டு ஓடவைப்போம்! தேசத்தை காக்கும் இடதுசாரிகளின் பங்கேற்போடு மத்தியில் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் தமிழகத்தில் அதிமுக அணிக்கு

27 comments:

பகுத்தறிவு முழக்கம் said...

என்ன தான் துரத்துனாலும் மழை அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் திருந்தாத பிறவி கருணா நிதி என்னும் புழு

மக்களை சுரண்டி கொழுத்த கூட்டத்தின் தலைவன்
நாடக நடிகன் - நடிகர் திலகம் இறக்கவில்ல இதோ இன்னும் வாழ்கிறார்
கலைஞர் வடிவில்

போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து

Anonymous said...

பஸ் கொள்ளை சரியான பகல் கொள்ளை. மக்கள் வயிறு எரிந்து கொண்டுஇருக்கிறார்கள். சரியான பாடம் புகட்டுவார்கள். மறைமுகமாக கட்டணம் ஏற்றுவது ஃபிராடுத்தனம் அல்லவா.

லக்கிலுக் said...

//இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிரடியாக மேற்கண்ட கலர் கலர் பேருந்துகளின் கட்டணங்களை எல்லாம் வெள்ளை போர்டு பேருந்து கட்டணத்திற்கு குறைத்துவிட்டார் ஒரே ஒரு ரகசிய உத்தரவின் பேரில். இது தொடர்பாக மக்களுக்கு எந்த அறிவிப்பும் கூட செய்யவில்லை//

விலை குறைப்புக்கு கூட வயிறு எரியும் கம்யூனிஸ்டை முதன்முதலாக பார்க்கிறேன் :-)

சந்திப்பு said...

பைக்ல போற லக்கிக்கு பஸ்சுல போறவனோட அவஸ்தை புரியாது! அது சரி உங்கத் தலைவருக்கு தேர்தல் வரும்போதுதான் ஞானோதையம் பிறக்குமோ? நல்ல தொண்டர்பா... :)-

லக்கிலுக் said...

ம்ம்ம்... திமுக காரனுக்கு வாய்த்தது பைக்கு தான். (அம்)மா. கம்யூனிஸ்டுகளுக்கு கிடைச்ச லக்சஸ் கார் சொகுசு வாழ்க்கையெல்லாம் கெடைக்க வாய்ப்பேயில்லை :-(

சந்திப்பு said...

அம்)மா. கம்யூனிஸ்டுகளுக்கு கிடைச்ச லக்சஸ் கார் சொகுசு வாழ்க்கையெல்லாம் கெடைக்க வாய்ப்பேயில்லை :-(
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் வாழ்க்கையை சொகுசாக மாற்றப் போராடுகிறது. எங்கள் எம்.பி. மோகன் இரண்டு முறை எம்.பி.ஆக இருக்கிறார் அவர் இப்போதும் டிவிஎஸ் பைக்கில்தான் வலம் வருகீறார். பெல்லார்மின் எம்.பி.யும் அப்படித்தான். எங்கள் எம்.எல்.ஏக்கள் யாருக்கும் சொந்தமாக கார் கிடையாது. ஆனால் உங்கள் கட்சி வட்டம் முதல் மாவட்டம் வரை... எல்லாம் சொகுசுகார்தான்... எல்லாம் லக்கிக்கே வெளிச்சம்.

லக்கிலுக் said...

சந்திப்பு. தோழர் சுர்ஜித் லக்சஸ் காரில் வலம்வந்து கம்யூனிஸ்டுகளின் நேர்மை சந்தி சிரித்ததை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை.

அப்போது கூட்டு வைத்தபோது லக்சஸ் கார். இப்போது கூட்டு வைத்தபோது யாருக்காவது பி.எம்.டபிள்யூவா என்று நான் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள்.

சந்திப்பு said...

சந்திப்பு. தோழர் சுர்ஜித் லக்சஸ் காரில் வலம்வந்து கம்யூனிஸ்டுகளின் நேர்மை சந்தி சிரித்ததை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை.
அவுட்லுக் இதழில் வெளிவந்த இந்தச் செய்தி போலியானது என்பதை அப்போதே மறுத்திருந்ததோடு, இதற்கு வருத்தத்தையும் அவுட்லுக் தெரிவித்ததை மக்கள் மறக்கவில்லை லக்கி மறந்துபோனது வருத்தமானது.

லக்கிலுக் said...

//அவுட்லுக் இதழில் வெளிவந்த இந்தச் செய்தி போலியானது என்பதை அப்போதே மறுத்திருந்ததோடு, இதற்கு வருத்தத்தையும் அவுட்லுக் தெரிவித்ததை மக்கள் மறக்கவில்லை லக்கி மறந்துபோனது வருத்தமானது.
//

காமெடி பண்ணாதீங்க தோழர். அந்த செய்தி அவுட்லுக்கில் மட்டுமே வந்ததாக. நம்மூர் நக்கீரன் லெவலுக்கு நாறிப்போன நியூஸ் அது :-)

லக்சஸ் காரில் இறங்குவது போன்ற தோழர் சுர்ஜித்தின் படங்கள் இணையத்தில் கூட இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சந்திப்பு said...

லக்கி இதற்காக நக்கீரனுக்கு வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டபோது, அதற்கு அது வட இந்திய செய்திப் பத்திரிகை வெளியிட்டது என்று பின்வாங்கியதை நீங்கள் ஏன் அறியவில்லை. நக்கீரன் மற்றும் இதர கோயபல்ஸ் கும்பலோடு இணைவதால் பொய் உண்மையாக மாறிவிடாது நண்பரே!

சந்திப்பு said...

அந்தக் காரை கருணாநிதி உளவுத்துறை மூலம் தற்போது லக்கி கண்டுப்பிடித்துக் கொடுத்தால் அதுபோல் இன்னொரு கார் பரிசாக வழங்கப்படும்.

லக்கிலுக் said...

// சந்திப்பு said...
லக்கி இதற்காக நக்கீரனுக்கு வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டபோது, அதற்கு அது வட இந்திய செய்திப் பத்திரிகை வெளியிட்டது என்று பின்வாங்கியதை நீங்கள் ஏன் அறியவில்லை. நக்கீரன் மற்றும் இதர கோயபல்ஸ் கும்பலோடு இணைவதால் பொய் உண்மையாக மாறிவிடாது நண்பரே!
//

தோழர் சந்திப்பு!

பொய்யை மறைக்க இன்னொரு பொய்யென்று சீட்டுக்கட்டு மாளிகை மாதிரி அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். உண்மை எனும் காற்றடித்தால் ஒட்டுமொத்தமாக விழுந்துவிடும் :-)

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போன்றவர்கள் இன்றைய திராவிட இயக்கங்களில் இல்லை என்பது எப்படி உண்மையோ அதுபோல நிருபன் சக்கரவர்த்திகள் இன்றைய கம்யூனிஸ்டு இயக்கங்களில் இல்லை என்பதே உண்மை. இக்கூற்றுக்கு தா.பாவே உதாரணமாக வாழுகிறார் :-)

லக்கிலுக் said...

// சந்திப்பு said...
அந்தக் காரை கருணாநிதி உளவுத்துறை மூலம் தற்போது லக்கி கண்டுப்பிடித்துக் கொடுத்தால் அதுபோல் இன்னொரு கார் பரிசாக வழங்கப்படும்.//

ஒரு கார் என்ன பத்து கார் கூட வழங்கக்கூடிய அளவுக்கு தோழர்கள் ‘வெயிட்’டாகத் தான் இருப்பீர்கள். பின்னே நீங்க இருக்கிற கூட்டணி பசையானது ஆச்சே? :-)

Unknown said...

எங்க‌ ஊர் ப‌க்க‌ம் ஒரு சொல‌வ‌டை உண்டு. கைய‌ள‌வு தின்னாலும், குண்டா நிறைய‌ தின்னாலும் பீ, பீதான். தின்ன‌வ‌ன் பீ தின்ன‌வ‌னாவான். இங்க‌ ரண்டு ந‌ல்ல‌வ‌ர்க‌ள் இப்ப‌டி பீ தின்ன‌வ‌ங்க‌ளை ப‌த்தி இப்ப‌டி அடிச்சிகிற‌து ந‌ல்லாவே இல்லை.

சந்திப்பு said...

தோழர் தா.பா. குறித்த விஷயமே எவ்வாறு போலியானது என்பதை உரிய ஆதாரத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அத்துடன் தா.பா.வை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம்தான் திமுகவிடம் வெளிப்பட்டுள்ளது. கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். அதுபோல திமுகவினரின் கொள்ளையடித்த சொத்து சேர்ப்பு குறித்து ஊருக்கு ஊர் கேட்டு மனுக்கொடுத்தால் ஒரு வேட்பாளர்கூட அரசியல்ல நிற்கவே முடியாது. அந்த அளவுக்கு நாறும். அது கருணாநிதி குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் உண்மைத் தொண்டனாக வலம் வரும் உங்களுக்கு ஒரு எம்.சி. சீட்டுக்கூட கிடைக்காது அந்தக் கட்சியில் அதற்கு பசை வேண்டும். அப்புறம் அண்ணா - பெரியார் என்றெல்லாம் பெயரி விஷயம் பேசியுள்ளீர்கள் நல்லது. இன்றைய திமுக பெரியாரின் சுயமரியாதை வழிவந்ததல்ல. அது நீதிகட்சி மரபைக் கொண்டது. எனவே அது பெரியவர்களின் ஆசிபெற்றதாகவே இருக்கும். உங்களைப் போல :)? நாங்கள் பச்சையோடு இருந்தாலும், பசை உள்ளவர்களோடு இருந்தாலும் அட்டைப் போல் ஒட்டிக் கொள்பவர்கள் அல்ல. டாடா கொடுத்த 19 லட்சம் பணத்தை வேண்டாம் என்று திருப்பி அனுப்பிய ஒரே கட்சி சிபிஎம் மட்டுமே. அடுத்து கிளை முதல் மாவட்டம் வரை கணக்கு வழக்குகளை ஒழுங்காக பராமரிக்கும் கட்சி. அத்தோடு வருடந்தோரும் கணக்கு வழக்குகளை ஒழுங்காக சமர்பிக்கும் கட்சியும் சிபிஎம்தான். அதுசரி பாராளுமன்றத்தில்கூட ஒழுங்காக அட்டெண்டன்ஸ் கொடுத்ததோடு, அதிகமான கேள்வியும் கேட்டுள்ள பொறுப்பான கட்சியாக நடந்துக் கொண்டது இவையெல்லாம் மக்களுக்கு தெரியும்.

supersubra said...

//விலை குறைப்புக்கு கூட வயிறு எரியும் கம்யூனிஸ்டை முதன்முதலாக பார்க்கிறேன்//

இந்த விலை குறைப்பு நாடகம் கப்பலோட்டிய தமிழனில் சிவாஜி கப்பல் கம்பெனி தொடங்கியவுடன் இங்கிலீஷ் கப்பல் கம்பெனி இலவசமாக சரக்குகளை ஏற்றி செல்கிறேன் என்று அறிவித்த காட்சி நாபகம் வருகிறது.

Anonymous said...

மதுரைல சிபிஎம் தோழர்கள் எம்ஜிஆர் முகமூடி போட்டு பிரச்சாரம் செய்வதாக போட்டோ உடன் இன்னிக்கு செய்தி வந்திருக்கே... அது போலியா... உண்மைன்னா சரியா...

சந்திப்பு said...

வாசு, பொதுவாக பழமொழிகள் எல்லாம் அந்தந்த ஊரின் வழக்கத்திலிருந்துதான் உருவாகிறது. உங்கள் ஊரின் வழக்கம் சகிக்கவில்லை. அதற்காக உங்களை அந்த லிஸ்டில் நான் சேர்க்க மாட்டேன்.

சந்திப்பு said...

நன்றி சூப்பர்சுப்ரா சரியாகச் சொல்லியுள்ளீர்கள். எல்லா இலவசமும் நாளைய கொள்கைக்கு இன்றைய அடிகோல்தான்.

சந்திப்பு said...

ஏன் அது அதிமுக தோழராக இருக்கக்கூடாதா? நான் பார்க்கவில்லை. இதற்காக சிபிஐ விசாரணையெல்லாம் வைக்க முடியாதுப்பா!

லக்கிலுக் said...

//சந்திப்பு said...
ஏன் அது அதிமுக தோழராக இருக்கக்கூடாதா? நான் பார்க்கவில்லை. இதற்காக சிபிஐ விசாரணையெல்லாம் வைக்க முடியாதுப்பா!
//

சப்பைக்கட்டெல்லாம் கட்ட வேண்டாம் தோழர். இப்போதெல்லாம் நிறைய தோழர்களை டாஸ்மாக்கு கடைகளில் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் பாட்டாளிகளும், இரத்தத்தின் இரத்தங்களும், உடன்பிறப்புகளுமாக இருந்த சூழல் மறைந்து இப்போது “தோழமைச்சூழல்” டாஸ்மாக்குகளில் மலர்ந்து வருகிறது :-)

supersubra said...

//எல்லா இலவசமும் நாளைய கொள்கைக்கு அடிகோல்தான்.//

எல்லா இலவசமும் நாளைய கொள்ளைக்கு இன்றைய அடிகோல்தான்

Anonymous said...

pls check today's "DHINA THANTHI". THey were weared red t-shirts and caption said that fellows were cpm. why you cant file a case against that newspaper...

அஹோரி said...

கருணா துரோகத்தின் மறுபெயர் , ஆழ இறங்கும் ஆப்பு இந்த முறை பாடம் கத்து குடுக்கட்டும்.

சந்திப்பு said...

கருணா துரோகத்தின் மறுபெயர் , ஆழ இறங்கும் ஆப்பு இந்த முறை பாடம் கத்து குடுக்கட்டும்.
அஹோரி தாங்கள் இந்தப் பொருளுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுவதுபோல் தெரிகிறது. எனக்கு புரியவில்லை. யார் யாரை துரோகி என்கிறார்கள்? எதற்காக அவ்வாறு சொல்கிறார்கள் என்றும் புரியவில்லை! மன்னிக்கவும். இதனால் யார் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

Anonymous said...

The article came to expose the "ELECTION GAME" OF DMK govt.Nobody can refuse your charge that the DMK has reduced the tariff only to get vote in the election.The election commission has also condemmed the actions of KARUNANIDHI AND going to give a brief report to HQ.
The weightless and baseless argument of using "CAR" is rediculus one.The writers should think that the national assets has been swallowed by the BJP +CONGRESS governments for the last 62 years.The communists are useless>>they failed to do anything like the congress+Bjp parties is the allegation of the writer.The USELESS communists not at all swallowing public money like the "BOFORES CONGRESS AND "ENRON"BJP..R.SELVAPRIYAN-CHALAKKUDY.

Subha said...

Do not waste your energy and time for replying to people like LUCKYLOOK.People like him are not living in this world.( அவர்கள் இம்மை மறந்தவர்கள்)They are not bothered about this people and whatever is happening in this world.That is the reason why he has written all these trace in this post.Kindly ignore these fellows.