அன்பான நன்பர்களே, நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அரசை அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனுடன் அணிச்சேர்ந்துள்ள இடதுசாரி - ஜனநாயக அணிக்கும் வாக்களிப்பீர்! தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் இடம் பெற்றுள்ள சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்! பாதைகள் அனைத்தும்... வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் வலுவான போராட்டத்தை நடத்தியதை நாடு அறியும். குறிப்பாக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகைய அமெரிக்காவின் காலடியில் அடகுவைத்ததோடு, அணு சக்தித்துறையில் நமது சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியுடன் போராடியது இடதுசாரி கட்சிகள். இவர்களது கொள்கைகளுக்கு ஒத்தூதியது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன் மதவாத பாஜக தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் தீவிரவமாக பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை எதிர்த்து உறுதியாக போராடியது இடதுசாரி கட்சிகள். எனவே அந்த கொள்கை உறுதியோடு எதிர்காலத்தில் வலுவான இந்தியாவை - உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை உருவாக்கும் பாதையை அமைத்திட மூன்றாவது மாற்றை தேர்வு செய்வீர்!
April 27, 2009
வாக்களிப்பீர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு!
அன்பான நன்பர்களே, நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அரசை அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனுடன் அணிச்சேர்ந்துள்ள இடதுசாரி - ஜனநாயக அணிக்கும் வாக்களிப்பீர்! தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் இடம் பெற்றுள்ள சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்! பாதைகள் அனைத்தும்... வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் வலுவான போராட்டத்தை நடத்தியதை நாடு அறியும். குறிப்பாக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகைய அமெரிக்காவின் காலடியில் அடகுவைத்ததோடு, அணு சக்தித்துறையில் நமது சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியுடன் போராடியது இடதுசாரி கட்சிகள். இவர்களது கொள்கைகளுக்கு ஒத்தூதியது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன் மதவாத பாஜக தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் தீவிரவமாக பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை எதிர்த்து உறுதியாக போராடியது இடதுசாரி கட்சிகள். எனவே அந்த கொள்கை உறுதியோடு எதிர்காலத்தில் வலுவான இந்தியாவை - உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை உருவாக்கும் பாதையை அமைத்திட மூன்றாவது மாற்றை தேர்வு செய்வீர்!
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இரண்டரை லட்சம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்த உலக சாதனை மீண்டும் ஒரு முறை மலர வாக்களிப்பீர் அ.இ.அ.திமுக கூட்டணிக்கு :-)
அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!
இரண்டரை லட்சம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்த கின்னஸ் சாதனை மீண்டும் நடைபெற அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கும்பலை ஆதரிப்போம் :-)
அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!
Nandigram,Singurla poradiya makkalukku edhiragavum, TATAukku aadaravavum urudiya poradiyadaiyum vittutingale!
இரண்டரை லட்சம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்த உலக சாதனை மீண்டும் ஒரு முறை மலர வாக்களிப்பீர் அ.இ.அ.திமுக கூட்டணிக்கு
லக்கி இதற்கு தமிழக மக்கள் ஏற்கனவே தண்டனை வழங்கி விட்டார்கள். அந்த போராட்டக் களத்தை நேரடியாக சந்தித்தது மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமே. திமுக லாலி பாடியது அவ்வளவுதான்.. அதுசரி தாமிரபரணியில் 18 தலித் மக்களை மூழ்கடித்தது எப்படி உங்களுக்கு மறந்து போச்சு. மதுரையில் தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டது அழகிரி கும்பலால் என்பது எப்படி மறந்து போச்சு! சென்னை மாநகரம் உட்பட உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தை கத்திகள்தானே ஆட்சி செய்தது அதனை எப்படி மறந்தீர்கள். கூட்டுறவுத்துறைக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லையே திமுக ஆட்சியால் ஏன்? அறிவிக்கப்பட்ட தேர்தலும் எப்படி உள்ளாட்சி தேர்தல் போலவே ஜனநாயகம் சீர்குலைந்து கெக்கெலி கொட்டியது! இது எப்படி மறந்தது தங்களுக்கு! தமிழகத்தில் ஏறக்குறைய சட்டம் - ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குள்ளாகி இருக்கிறதே இதற்கும் சேர்த்து பதில் எழுதுவீர்களா நண்பரே!
லக்கிக்கு மறந்து போனது இருக்கட்டும். கூட்டணில இருந்த வரைக்கும் உங்களுக்கு இதெல்லாம் ஞாபகத்துக்கே வரலியே, அது எப்படி? தாமிரவருணி, தினகரன் அலுவலகம், உள்ளாட்சித் தேர்தல்... கூட்டணில இருந்தவரைக்கும் இதற்கெல்லாம் எதிராக நீங்கள் 'களம்' கண்ட கதையைக் கொஞ்சம் செப்புங்கள் ஐயா!
அன்புத் தோழர் செல்வபெருமாள்
சிபிஎம் பிரச்சாரக் குறுந்தகட்டில் கண்டுள்ள பாடல்களைக் கேட்டீர்களா
அவற்றை ஏன் யுடுப்
அல்லது கூகுள் விடியோஸ்
வழியாக ஒளிபரப்ப நாம் முயற்சிக்கக் கூடாது
தோழமையுடன்
ச.வீரமணி.
அன்புத் தோழர் செல்வபெருமாள்
சிபிஎம் பிரச்சாரக் குறுந்தகட்டில் கண்டுள்ள பாடல்களைக் கேட்டீர்களா
அவற்றை ஏன் யுடுப்
அல்லது கூகுள் விடியோஸ்
வழியாக ஒளிபரப்ப நாம் முயற்சிக்கக் கூடாது
தோழமையுடன்
ச.வீரமணி.
Selvi.Jayalalitha in the past done mistakes For which the people gave suitable punishment.So the DMK came to power.And that time the CPI-M MP Mr.T.K.RENGARAJAN sir filed a case in the court and saved our co state govt employees.His case saved lakhs of dismissed employed.The supreme court judgment was ahistorical one.
But those days have passed.Now the world economic recession and worst economical policies of congress govt has spoiled the whole of our life.The DMK IS VEHEMENTLY supporting the congrees policies.
more than, the election is for parliament.We have to change the wrong policies of congress.so our vote this time is for the NON CONGRESS AND NON BJP..No doubt sir-R.Selvapriyan-Chalakuddy
லக்கிக்கு மறந்து போனது இருக்கட்டும். கூட்டணில இருந்த வரைக்கும் உங்களுக்கு இதெல்லாம் ஞாபகத்துக்கே வரலியே, அது எப்படி? தாமிரவருணி, தினகரன் அலுவலகம், உள்ளாட்சித் தேர்தல்... கூட்டணில இருந்தவரைக்கும் இதற்கெல்லாம் எதிராக நீங்கள் 'களம்' கண்ட கதையைக் கொஞ்சம் செப்புங்கள் ஐயா!பெயரில் மட்டும் போராட்டம் என்று வைத்திருந்தால் போராட்டமும் நடைபெறாது. புரட்சியும் வராது. அதுக்கு சற்று மெனக்கெடனும். தாமிரபரணி போராட்டத்துல நேரடியாக களத்தில் நின்றது சிபிஎம் - புதிய தமிழகம் - தமாக போன்ற அமைப்புகள் மட்டுமே. இதில் எங்கள் மாவட்டச் செயலாளர் கடுமையான தடியடித் தாக்குதலுக்கு உள்ளானார். தினகரன் அலுவலக பிரச்சனையாக இருந்தாலும், உள்ளாட்சி வன்முறையாக இருந்தாலும் இதனை கடுமையாக கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சிபிஎம். அதாவது சட்ட ரீதியான போராட்டத்தையும், மக்கள் திரள் போராட்டத்தையும் ஒன்று சேர நடத்தியது. அப்போது திமுகவுடன் தோழமைதான் கொண்டிருந்தோம் என்றாலும் எதற்கும் சமரசம் செய்தது கிடையாது. நீங்கள் எழுத்தில் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் சிபிஎம்க்கு எதிராக.
திரு. செல்வப்பிரியன் மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் அனைத்தையும் திமுக ஜால்ரா வாசித்துக் கொண்டுதான் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்டது கோடிக்கணக்கான அப்பாவி மக்கள். எனவே இன்றைய நிலையில் இந்த தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றும் காங்கிரஸ் - திமுகவை தூக்கி எறிய வேண்டியது நமது கடமையாகிறது. நன்றி.
சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தமிழகத்துக்காக போராடிய போது கேரளத்துக்கு ஆதரவு நிலையை எடுத்த மார்க்சிஸ்டுகளுக்கு யார் தண்டனை கொடுப்பர்? கடல் சார் பல்கலையை தமிழகத்துக்கு கொண்டு வர முயற்சி செய்த போது வங்கத்து ரவுடிகளுக்கு ஆதராவாக தமிழகத்தை உதைத்த தமிழ மார்க்ஸிஸ்டுகளுக்கு யார் தண்டனை கொடுப்பர்?
சதுக்கபூதம் தங்களது கருத்து சரியானதல்ல. சேலம் இரயில்வே கோட்ட விவகாரமாக இருந்தாலும் சரி, கடல்சார் பல்கலைக் கழக விவகாரமாக இருந்தாலும் சரி நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சியோடுதான் இருக்கிறோம். அதே சமயம் இவைகளில் கேரளா மற்றும் மேற்குவங்கத் தோழர்களும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் ஆரம்பத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் அவைகள் பேசி சரி செய்துக் கொள்ளப்பட வேண்டியவை. சரி செய்துள்ளோம். தங்கள் விமர்சனம் வரவேற்கத்தக்கதே.
ஜெயல்லிதா விற்கு என்ன தண்டனை தரப்பட்டது. மூன்று பேரைக் கொன்றால் மறுதேர்தலில் தோற்கடிப்பதா தண்டனை... ஆனால் சாதாரண பாட்டாளிகளுக்கு தண்டனை அப்படியா தரப்படுகிறது... ஓ பாட்டாளிகள் வேறு புரட்சித்தலைவி வேறா... கோர்ட்டில் பல வழக்குகளில் ஜெயல்லிதாவுக்கு ஊழல் பண்ணிய பணத்தை திருப்பித் தருவதுதான் தண்டனையாகத் தரப்பட்டது. ஆக நீதிமன்றமும் அவர்களுக்கானதுதான்... சாதாரண் மனிதன் அன்றாடங்காய்ச்சி வேலை கிடைக்காமல் பசியால் மதியிழந்து பிட்பாக்கட் அடித்தால் பணத்தை திருப்பித் தந்தால் நீதிமன்றம் விட்டு விடுமா... அல்லது தேர்தல் தோல்வி என்று ஒரு தண்டனையை பிட்பாக்கட் அடித்தவனுக்கும் தரலாமா...
தண்டனை கருணாநிதிக்கும் தரப்படவில்லை... ஜெயல்லிதா வுக்கும் இதுவரை தரப்படவில்லை... அதனை இந்த நீதிமன்றம் தராது... தேர்தலும் தண்டனை என்று ஏமாற்றாதீர்கள்...ஆளுக்கு மூணு கொலையை பண்ணுவார்கள்... ஆனால் ஆயுள் தண்டனை என்பது மக்களுக்கு மட்டும்தானா அவர்களுக்கு கிடையாதா... இதனை கம்யூனிஸ்டுகள் னு சொல்ற நீங்க சப்போர்ட் பண்ணி பேசலாமா...
மத்தியில் பாஜக மதவெறி... காங்கிரஸ் தவறான பொருளாதார கொள்கை... நீங்க ஜெயித்து ஆட்சி அமைத்தால் என்ன பொருளாதார கொள்கையை அமல் படுத்துவீர்கள்... சட்டம் ஜி ஒ எல்லாம் நீங்கள் போடலாம்... ஆனால் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் எல்லாம் சரியான பொருளாதார கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது...அப்ப நீங்க என்ன சொல்வீங்க•...
நாங்க எங்க கொள்கப் படிதான் நடந்தோம்... அதிகாரிகள்தான் கெடுத்துட்டாங்கன்னு அவிங்க மேல பழி போடுவீ
விங்க•. கடைசில காங் ஆட்சில கிடைத்த ரிசல்ட்தான் கிடைக்கும்.. அப்புறம் எதுக்கு உங்களுக்கு ஓட்டு போடணும்... குஜராத் போன்ற மாநிலங்களில் உங்க கட்சிக்கு செல்வாக்கு இல்ல•.. மதவாதம் தலைவிர்த்தாடும் அந்த பகுதிகளில் எப்படி நீங்க இந்துமத வெறியர்கள எதிர்த்து போராடுவீங்க
அன்பு அனானி நண்பரே!
வணக்கம். தாங்கள் மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். நிலவும் இந்த சமூகத்தில் சட்டங்கள் யாவும் பொருள் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்களுக்கே சாதகமாக உள்ளது. சாதாரண மனிதன் நீதிமன்றங்களை நாடுவது என்பது வெறும் கனவு மட்டுமே. அப்படியே நாடினாலும் குற்றம் செய்யும் சாதாரண மனிதர்கள் பெரிய அளவிற்கு படிக்காதவர்கள். இந்த படிக்காதவர்களை மெத்தப்படித்த வக்கீல்கள் தங்களது அபார! திறமையால் மடக்குவது கேலிக்கூத்தானது பின்னர் தண்டனையும் அந்த ஏழை - பாழைகளுக்கு கிடைத்து விடுகிறது. எனவே இந்த சமூகத்தை உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மாற்றியமைப்பது நமது கடமையாகிறது. அதே நேரத்தில் இது நமது உணர்வு தளத்தில் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. சமூகத்தில் பெரும்பான்மையான மக்களை அல்லது குறிப்பிட்ட சதவிகித மக்களை நமது அரசியலை ஏற்கச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அரசியல் சூழலும் வாய்ப்பும் கிடைக்கும் தருணத்தில் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்டுகள் ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படுவார்கள். அதுவரை ஒரு இடைக்காலத்திற்கு மத்தியிலும் - மாநிலத்திலும் மக்களுக்கு பாதகமில்லாத அரசியல் அணிச்சேர்க்கையை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். எனவே இடைக்காலத்தில் இதுபோன்ற அணிகள் மாறுவது என்பது உழைக்கும் மக்களின் நலன்களை காப்பதற்கே ஒழிய வேறு மார்க்கம் இல்லை. பெருவாரியான மக்களின் நம்பிக்கையோடும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில்தான் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளோம். ஒரு விசயம் இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் பெரிய எழுச்சியோடு வளர்ந்த இந்துத்துவ அரசியலுக்கு இன்று அகில இந்திய அளவில் ஒரு அடி கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு இடதுசாரிகளின் அரசியல் நிலைபாடு ஒரு அடிப்படை காரணம். மேலும் காங்கிரசின் ஏகபோக ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு இடதுசாரிகளின் அரசியல் நிலைபாடு ஒரு அடிப்படையான காரணம். அதேபோல் இன்றைய சூழலில் மத்தியில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் இடதுசாரிகளை விட்டு விட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற ஒரு நல்ல அரசியல் சூழல் மாறியுள்ளது. இது வருங்காலத்தில் அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி பயணிக்கும் அதுவரை லெனின் கூறியபடி புரட்சிக்கு முன் புரட்சிகர பொறுமை தேவை என்பதை நாம் அரசியலில் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. நன்றி நண்பரே.
மத்தியில் பாஜக மதவெறி... காங்கிரஸ் தவறான பொருளாதார கொள்கை... நீங்க ஜெயித்து ஆட்சி அமைத்தால் என்ன பொருளாதார கொள்கையை அமல் படுத்துவீர்கள்... சட்டம் ஜி ஒ எல்லாம் நீங்கள் போடலாம்... ஆனால் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் எல்லாம் சரியான பொருளாதார கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது...
அனானி நண்பரே!
கடந்த ஐந்தாண்டு ஐமு ஆட்சியிலேயே இடதுசாரிகளின் தலையீட்டால், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 வேலைத் திட்டம்), தகவல் பெறும் உரிமைச் சட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீடுகளை உயர்த்தாமல் பாதுகாத்தல், நவரத்னா நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்காமல் பாதுகாத்தல், பெட்ரோல் பொருட்களை உயர்த்தாமல் பாதுகாத்தல் என தொடர்ச்சியாக போராடியதை நாடு அறியும். நீங்களும் அறிவீர்கள். இது ஒரு அடி முன்னேற்றகரமானது. அதே சமயம் காங்கிரஸ் அரசு அமெரிக்க சார்பு வெளியுறவு கொள்கைகளையும் - பொருளாதார கொள்கைகளையும் முன்னெடுக்க முனையும் தருவாயில் அதனை எதிர்த்து உறுதியோடு போராடி வெளியேறியது இடதுசாரிகள்.
தற்போது ஒரு மாற்று அரசு அமைந்தால் அது குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் அமையும். இந்த கொள்கை என்பது காங்கிரஸ் - பாஜக கடைப்பிடித்த கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டே இருக்கும். அதற்காக ஒரு சோசலிச பொருளாதார கொள்கையாக அமைய முடியாது. அதற்கான தருணமும் தற்போது இல்லை. இருக்கக்கூடிய கலப்பு பொருளாதார கொள்கையை பயன்படுத்தி பொதுத்துறைகளை வலுப்படுத்தவும், வேலைவாப்பை பெருக்கக்கூடிய அந்நிய முதலீட்டை ஈர்க்கவும், விவசாயத்துறையில் உற்பத்தியை பெருக்கி நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான இருப்பை பூர்த்தி செய்திடவும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், பொது விநியோக திட்டத்தை பலப்படுத்திடவும், கல்வித்துறையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாறுதலை கொண்டு வரவும், மதவெறியர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடவும், சுயச்சார்பான வெளியுறவு கொள்கையை பின்பற்றிடவுமான கொள்கைகளை புதிய மத்திய அரசு அமலாக்கும் என்று உறுதியாக நம்பலாம். இதில் ஏற்படக்கூடிய தடங்கல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதோடு பாராளுமன்றத்திற்கு உள்ளும் - வெளியிலும் ஒரு வலுவான போராட்டத்தை மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகள் முன்னெடுப்பர். மேலும் அதிகார வர்க்க இயந்திரம் என்பது கரடு தட்டிப்போனதுதான். இருப்பினும் அதனை அப்படியே மாற்றிட முடியாது. இருந்தாலும் அதனை உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து பயன்படுத்திட முடியும். ஒரு ஒருவழிப்பாதையல்ல. மக்களின் விழிப்புணர்வு மற்றும் அரசியல் சார்ந்த இயக்கத்தோடு தொடர்புடையது என்று கருதுகிறேன். எனவே மத்தியில் ஒரு மூன்றாவது மாற்று என்பது இன்றயை காலத்தின் தேவை. இதனை நோக்கிய நமது பாதையை முன்னெடுப்போம். நன்றி தோழரே!
குஜராத் போன்ற இந்தி பேசும் பல மாநிலங்களில் மார்க்சிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும் பலம் மிகக் குறைவுதான். இருப்பினும் ஒரு அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டுவதே அதனை முறியடிக்கும் ஒரே வழி. இதற்கு ஒரு ஐக்கிய முன்னணி தந்திரம் தேவைப்படுகிறது. அதனை மார்க்சிஸ்ட்டுகள் நடைமுறையில் அமலாக்கி வருகின்றனர். எனவே எதிர்காலத்தில் மோடியிசம் வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
சட்டம் வசதியானவனுக்கு ஆதரவாக உள்ளது. கஷடப்படுறவங்க எல்லாரும் படிக்காதவங்க•.. படிச்ச வக்கீலுங்க அவங்கள ஏமாத்துறாங்க•..தண்டனை அவங்களுக்கு கிடைத்துவிடுகின்றது.. இதுக்கு சமூகத்த மாத்தணும்கிறீங்க•.. என்னங்க ஒரு சந்தேகம்... சமூகமெல்லாம் இதுக்கு பொறுப்பெடுக்கணும்... ஆனா நீதிமன்றம் இதுக்கு பொறுப்பில்லையா...
ஓகே ... சமூகத்த மாற்றியமைக்க உங்க அரசியல ஏற்க செய்யணும்னு சொல்றீங்க•.. ஒருமுறை ஜெயா மறுமுறை கருணாநிதி என் மாறி மாறி கூட்டு சேர்கின்றீர்கள்... இதனை மக்களும் பயின்று கொள்ள வேண்டுமா... என்ன அரசியல் அது... நம்பிக்கைதான் வாழ்க்கை என்று ஆன்மீக வாழ்வா அது...
மக்கள் ஜனநாயகப் புரட்சியை எப்படி எப்போது யார் யார் உடன் சேர்ந்து என்ன வழிமுறையில் செய்யப் போகின்றோம். அந்தப் புரட்சியில் ஜெயா ராமதாஸ் போன்றோர் மார்க்சிஸ்டுகளுடன் இருப்பார்களா...
அப்புரட்சிக்கான அரசியல் சூழல் எப்படி இருக்கும்... அதுவரை உள்ளது இடைக்கால தந்திர உத்தி என்றால் இடைக்காலத்திலுருந்து புரட்சிக்கு என்ன செய்து மாறுவீர்கள்...
மக்களுக்கு பாதகமில்லாத அணிசேர்க்கையில்தான் தற்போது உள்ளீர்களா... அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு விரோதமாக அமைய உள்ள அரசுகளில் பங்கேற்க மாட்டார்கள் என நீங்கள் உத்திரவாதம் தரமுடியுமா...
இந்துத்வா சக்திகளுக்கு பின்னடைவு என்று சொல்கின்றீர்களே... எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்.. எந்த தொகுதியிலாவது அவர்களை மார்க்சிஸ்டுகள் தமது நிலைப்பாட்டை மக்களிடம் விளக்கு பேசி தேர்தலில் வெற்றி பெற்ற நிகழ்வு ஏதும் தற்போது நடந்துள்ளதா என்ன•..
ஒருவேளை மூன்றாம் அணி வெற்றிபெற்றால், நீங்களும் ஆட்சியில் பங்கேற்றால் அல்லது ஆதரவு அளித்தால், காட் மற்றும் காட்ஸ் ஒப்பந்தங்களில் இந்தியா இட்ட கையெழுத்தை வாபஸ் பெறுவீர்களா... உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறுவீர்களா... அன்னிய மூலதனத்தை வரவேற்பீர்களா... அணுசக்தி ஒப்பந்த்த்தை ரத்து செய்வீர்களா... சுவிஸ் வங்கியிலிருந்து பணத்தை எப்படி கொண்டு வருவீர்கள்... சாத்தியமா என்ன அது... புதிய பொருளாதாரக் கொள்கையான் தனியாரமயம் தாராளமயம் உலகமயம் பற்றி உங்களது நிலை அப்போது என்னவாக இருக்கும்...
நூறு நாள் வேலைத்திட்டம் என்பது உலக வங்கியின் திட்டம்... இதில் கம்யூனிஸ்டுகள் பரிந்துரைப்பதுதான் அவமானம்...த•பெ.உ.சட்டம் 28 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த பத்தாண்டுகளுக்கு முன் விவாத்த்இற்கு வந்த சட்டம்... இதை நிறைவேற்றியது நீங்கள்தானா... எப்படி அப்படி சொல்கின்றீர்கள்...
பொதுதுறை வங்கிகளில் தனியார்மயமாக்கல் ஒன்றும் குறையவில்லையே... நவரத்னா எதுவும் தனியார்மயமாகவில்லையா... பெட்ரோல் பொருட்கள் உயரவில்லையா... என்ன நெட் ரிசல்ட்... நீங்க இருந்தாலும் ஆதரிச்சாலும் இல்லன்னாலும் மக்கள் விரோத அரசுதான் அமைகின்றது... குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நிறைவேற்றவில்லைன்னு 4.75 வருடம் கழித்துதான் புகார் கூறி வெளியே வருகின்றீர்கள்... அதற்கு முன்னர் வெளியே வரச் சொன்னால் மதவாதம் வந்துவிடும் என பயம் காட்டினீர்கள்..
வேலைவாய்ப்பை பெருக்க்க் கூடிய அன்னிய முதலீட்டை ஈர்க்கணும்னு சொல்றீங்க•.. இதுதான தனியார்மயம் மற்றும் உலகமயம்... இத்த்தான காங்கிரசும் செய்யுறான்...அப்புறம் என்ன வித்தியாசம்...அதாவது சென்னைக்கு மைக்ரோசாப்ட் கம்பெனி வர்றதுக்கு எப்படி மார்க்கெட்டிங் பண்ணி வரவைக்கலாம் அப்பிடினு சிந்திக்கிறது. இத்த்தான நோக்கியா கம்பெனி கொண்டு வந்துதுத நான் னு தயாநிதி சொல்றாரு.. உங்களுக்கும் அவருக்கும என்ன வித்தியாசம்...
சுயசார்பான வெளியுறவு கொள்கை னு ஒன்னு இருக்கா...அப்படின்னா மற்ற நாட்டு முதலாளி எப்படி இங்க வருவான்... அப்போ கம்யூனிஸ்டு நாட்டுல இருந்து மட்டும்தான் முதலீடு வரும்... அப்போ சீனாவ நம்பணும்... அவங்களே அமெரிக்க அவுட்சோர்சிங் ஐ ந்ம்பிட்டு இருக்காங்க ... அப்புறம் எப்படி உங்க அரசுக்க உதவுவாங்க•..
அதிகார வர்க்க இயந்திரத்த மாற்ற முடியாதா.... மாற்ற முடியாத ஒன்னு இருக்குறதா மார்க்சிஸ்டுகள் பேச முடியுமா...அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருவகையான நேர்மையற்ற செயல் போல உள்ளதே.. அதனை மாற்றத்தானே ஒரு கட்சி பேச முடியும்... என்ஜீஓ க்கள்தான் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றிப் பேச முடியும்..
மோடியிசம் என ஒன்று உள்ளதா... அல்லது அது இந்துமத வெறியா... இதுக்கு எதிராக உங்களது கட்சி தமிழகத்தில் என்ன செய்த்து... அல்லது பாசிசத்துக்கு எதிராக•..
நாட்டு நலன்காப்பதில் , ஏழை எளிய மக்களின் நலன்காப்பதில், போர்வாளாக இருந்து செயல் படும் சிபிஎம் கட்சியன் வெற்றி உறுதி
நன்றி விடுதலை! இந்திய நாட்டின் அரசியல் இடதுசாரிகளை நோக்கியதாக மாறிவிட்டது. தற்போதைய காற்று இடதுசாரிகள் பக்கம் மட்டுமே வீசுகிறது. எனவே நமது வெற்றி உறுதியானது.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள அனானி பொறுத்திருந்து பாருங்கள்! அப்போதுதான் புரியும்.
///பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படுவார்கள். அதுவரை ஒரு இடைக்காலத்திற்கு மத்தியிலும் - மாநிலத்திலும் மக்களுக்கு பாதகமில்லாத...// & // அனானி பொறுத்திருந்து பாருங்கள்! அப்போதுதான் புரியும்////
அலோ அனானி நம்பர் 1, நான் அனானி நம்பர் 2 பேசறேன்...சந்திப்புதான் சொல்லிட்டாருல்ல.. பொறுங்கப்பா.. ஒரு 100 இல்லை 1000 வருசத்தில மாத்தத்த கொண்டுந்தர மாட்டாரு... கொஞ்சம் கூட பொறும இல்லாம காள் காள்னு கத்தாத சாமி.. வெட்டியா கேள்வி கேட்டு இருக்கீகளே.. வேலயப் பாரும் சாமி...
Post a Comment