March 02, 2009

மதவாதம்+ஏகாதிபத்தியம்=இலங்கை தமிழர்களுக்கான தீர்வு?

தமிழகத்தின் முதன்மை அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது இலங்கைத் தமிழர் பிரச்சனை. இதில் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, ஈழ ஆதரவு, ஈழ எதிர்ப்பு, பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாத எதிர்ப்பு என்று மாறுபட்ட கோணத்தில் இயங்கும் தமிழகத்து சிற்றரசர்கள் வைகோ (மதிமுக), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய கட்சி), தா.பாண்டியன் (சி.பி.ஐ.), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), ச.ராமதாஸ் (பா.ம.க.), இல.கணேசன் (பா.ஜ.க.) என கூட்டுக் கலவையாக மாறி இலங்கைத் தமிழகர்களை பாதுகாப்பதற்கான ஏக பிரதிநிதித்துவம் பெற்றவர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஹோதாவில் மகஇக போன்ற நக்சலிச அமைப்புகளும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள இனப் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட தீர்வு கிடைக்குமா என்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஏங்கித் தவிக்கையில். தமிழகத்தின் மேற்கண்ட சிற்றரசர்கள் எந்தவிதமான கொள்கை - கோட்பாடு - தனித்துவமின்றி அம்மணமாக இந்தியாவில் உள்ள மக்களை கூறுபோட்டு பிணம் திண்ணி கழுகுகளாக கொத்தித் தின்னும் பாசிச இந்துத்துவ மதவெறியர்களோடு கைகோர்த்து இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணப் புறப்பட்டது விந்தையிலும் விந்தை. இதற்கு இவர்கள் கூறும் ஒரே சமசரசம் தமிழர் என்ற அடையாளம் மட்டுமே!

மதிமுகவுக்கும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே இந்துத்துவாவோடு அரசியல் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான். இந்த இடத்தில் இவர்கள் வர்ணாசிரம தர்மம், பார்ப்பனீயம், தமிழின மீட்சி, பெரியாரின் மதவெறி எதிர்ப்பு கொள்கை என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு தங்களுக்கான நாற்காலியைப் பிடிப்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தில் பங்கு வகிப்பதற்காகவும் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான்.
இதில் பழ.நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோர் இந்துத்துவ எதிர்ப்பை தங்களது ரத்தத்தில் கலந்த ஒன்றாக பார்ப்பவர்கள். ஒருபோதும் இந்துத்துவத்தை அனுமதிக்க முடியாது என்று ஓயாது குரல் கொடுப்பவர்கள். ஆனால் கொள்கை அரசியலையெல்லாம் கைவிட்டு விட்டு தமிழன் என்ற ஒற்றை அடையாளத்திற்காக இல.கணேசனோடு கைகுலுக்கிக் கொண்டுள்ளது வேதனையானது - வேடிக்கையானது.

இதற்கும் மேல் இவர்கள் செய்த வேடிக்கையிலும் வேடிக்கை ஏகாதிபத்திய அமெரிக்க தூதரிடம் சென்று இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண மண்டியிட்டதுதான். உலக நாடுகளையும், உலக மக்களையும் கூறுபோடும் ஏகாதிபத்திய சக்திகள், நவநாகரீக உலகிலும் நாடுகளைப் பிடித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த பினந்திண்ணி கழுகிடம் சென்று இலங்கை பிரச்சனைக்கு தீர்வு வேண்டி அமெரிக்க தூதரகம் சென்று மனுக் கொடுத்துள்ளனர்.

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒரு பகுதியினர் கூட ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்த்து வீரச்சமர் புரிந்து வருகின்றனர். ஆனால், இந்த சிற்றரசர்களோ தமிழகத்து மக்களிடம் தங்கள் ஆதரவை விதைத்துக் கொள்வதற்காக இத்தகைய சமரசத்தில் ஈடுபடுவது கண்டு வேதனைபடுவதா? வெட்கித் தலை குனிவதா? இந்த மதவெறியர்களோடும் - ஏகாதிபத்தியவாதிகளோடும்தான் வினவு கும்பல் - மகஇக தங்களை இணைத்துக் கொண்டு கொள்கை குன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறது. இவர்கள் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தைக்கூட ஆதரித்தார்கள்.
இத்தகைய கொள்கையற்ற கூட்டுக்களால் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட உதவுமா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியாலும், இலங்கையில் உள்ள பேரினவாத மற்றும் சிற்றினவாத முதலாளித்துவ சக்திகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்த பகைமை இன்றைக்கு அப்பாவி இலங்கைத் தமிழர்களின் கழுத்துக்களில் கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது. இனவாதமும், மதவாதமும் மக்களுக்கான வாதங்கள் அல்ல; அது மக்களுக்கு விரோதம் என்பதை தமிழக மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

11 comments:

Tamilchelvan said...

எல்லாவற்றிலும் குறைக் கண்டுப்டிப்பது சுலபம். களத்தில் நின்று போராடுவதுதான் கடினம். தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அனைத்து கதவுகளையும் தட்டுவதில் தவறில்லை. இதில் சாதி, மதம், மொழி, கட்சி, நாடு என்று பேதம் பார்க்கக்கூடாது. அவர்கள் செய்வது சரிதான்.

Anonymous said...

ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்படுகிறாரா ? அவரும் அந்த மனுவில் கையொப்பம் செய்துள்ளாரா? வாழ்க C.P.I.?

Anonymous said...

என்னன்னா...நீங்க... அங்க போகக் கூடாது.. இங்கப் போகக் கூடாதுன்னு
ஆயிரம் கண்டிசன் போடறேள்... நீங்க சம்பாதிச்சுண்டு வந்து கொட்டினா..
நீங்க சொல்றத கேக்கலாம்.. யாரோ சம்பாதிக்கிறா... அவா செலவு பண்றா..
செத்த வயத்தெறிச்ச படாம இருங்கோ... அங்க எல்லாம் செத்துப் போயிண்டு
இருக்கா.. எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்கா...நீங்க சாஸ்த்ரிகள் மாதிரி
வந்து பெரிசா சட்டம் பேசறேள்...

சந்திப்பு said...

//தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அனைத்து கதவுகளையும் தட்டுவதில் தவறில்லை.
//

அன்பு நன்பர் தமிழ்ச்செல்வன் தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிவதைக் கண்டு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக எந்த வீட்டின் கதவையும் தட்டலாம் என்ற தங்களது உணர்வு மதிக்கத்தக்கது. ஆனால், இந்தியாவில் சொந்த நாட்டிலேயே சொந்த மக்கள் குஜராத்தில் கொத்துக்கொத்தாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்தால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழகத்திலிருந்து இத்தகைய கூட்டு மனப்பான்மை வெளிப்படவில்லையே. அப்போது அவர்களுக்கு கொள்கை பெரியதாக இருந்தது. இன உணர்வு என்பதற்கு மேலாக மனிதர்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அதற்காக நியாயமான குரல் எழுப்பிட வேண்டும் என்பதே எமது விருப்பம். மேலும் மனிதனை மனிதன் கொல்லும் கூட்டத்தோடு சேர்ந்து போராடுவதால் எப்படி நியாயம் கிடைக்கும் என்றுத் தெரியவில்லை.

சந்திப்பு said...

//ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்படுகிறாரா ? அவரும் அந்த மனுவில் கையொப்பம் செய்துள்ளாரா? வாழ்க C.P.I.?
//

ஏகாதிபத்திய எதிர்ப்பிலேயே ஊறித் திளைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்படி சாஸ்டாங்கமாக அமெரிக்கத் தூதரிடம் சென்று மனு அளிப்பதிலிருந்தே அது எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் இதனை எதிர்ப்பார்கள் என்று நம்பலாம்.

சந்திப்பு said...

//எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்கா...நீங்க சாஸ்த்ரிகள் மாதிரி
வந்து பெரிசா சட்டம் பேசறேள்...

//

மகஇக அனானி இப்படித்தான் உங்க நக்சலிச சொந்தக்காரங்க சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக மேற்குவங்கத்தில் அத்வானியோடயும், அம்மா மமதாவோடும் ஒட்டிக்கொண்டனர். அதாவது சொந்தமாக மக்களை அணித்திரட்ட முடியாதவர்கள் ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று மக்களை பிளவுபடுத்தி, ஒற்றுமையை சிதைத்து ஊரை இரண்டாக்கும் கலையில் வல்லர்கள் இந்த நக்சலிசவாதிகள். அந்த வேலையை இங்கே நன்றாக செய்துக் கொண்டிருக்கிறது உங்களது மகஇக. அதனால் உங்களுக்கு அத்வானியும், இல.கணேசனும் உற்ற நன்பனாக இருப்பது என்றும் விந்தையல்ல.

vimalavidya said...

The parties expecting more or something from US will certainly going to see the loss and failure in their attempt.The BJP!!! became natural "ally" of these parties is a ridiculing thing.--Selvapiriyan

Anonymous said...

அண்ணா.. நன்னா இருக்குன்னா ஒங்க ஞாயம்...
ஒங்க பேர அவதுறு அண்ணான்னு மாத்திங்கோ...
நா சிபிஅய் வோ, எம்டிஎம்கேவா இருக்கக் கூடாதா...
அதென்ன வினவு... அவாள ஏன் பாத்து நடுங்கறேள்..

Anonymous said...

how you flame BJP.

in 1989, v.p. govt. had supported by both of you. did you forget it

baappu said...

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இலங்கை இனப்பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்ததனால் தமிழகத்தில் இந்த கூத்துக்கள் அரங்கேறுகின்றன.

மடையர்கள் கலை இலக்கிய கழகத்தினர் (ம.க.இ.க) கூத்துக்கட்டுவது ஒன்றும் வியப்பில்லை.

Anonymous said...

பப்பு என்ன சொல்ல வர்றீங்க ... புரியலையே ... மக்களுக்கு கூட வேண்டாம் ... எங்களுக்காவது புரியும்படியா சொல்லுங்க... என்ன சொல்ல வர்றீங்க (write with LOGIC)