தமிழில் ஒரு பழமொழி உண்டு, "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று. ஐந்தறிவு கொண்ட ஆமைக்கு அது பொருந்தாது. அதற்கு பதில், "சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று புதுமொழி உருவாக்கலாம்!
உலகிலேயே சதி திட்டம் மூலம், சீர்குலைவுகள் செய்து பல நாடுகளையும், ஆட்சிகளையும் தூக்கி எறிய காரணமாக இருந்தது சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை) சி.ஐ.ஏ.வின் சதிகளை சின்னக் குழந்தைகள் கூட அறியும்!
அப்படிப்பட்ட சி.ஐ.ஏ.வுடன் தற்போது இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கைகுலுக்கி உள்ளார். அதாவது தேன் நிலவு நடத்தியுள்ளார். அவர் மட்டுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் முதல் இந்திய உளவுத்துறையின் தலைவர் (ரா) கே.சி. வர்மா, இன்டிலிஜன்ஸ் துறையின் இயக்குநர் (ஐ.பி.-உளவுத்துறை) ராஜீவ் மாத்தூர் உட்பட இந்தியாவின் முக்கிய உயர் அதிகாரிகள் அமெரிக்க உளவுத்துறை தலைவரான லியான் பனிட்டா (chief Leon Paneவவய)-வுடன் பயபக்தியுடனும், தன்னடக்கத்துடனும் உரையாடியுள்ளனர்.
15வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் வருகை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதோடு, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில், குவைத்தில், ஆப்கானிஸ்தானில், இந்தோனேசியாவில், சோவியத் யூனியனில், கியூபாவில், சிலியில், வியத்நாமில், பனாமாவில்... என்று உலகில் சரிபாதி நாடுகளில் தனது மறைமுக கைங்கர்யம் மூலம் சி.ஐ.ஏ. சதித் திட்டங்களைத் தீட்டி பல ஆட்சிகளை கவிழ்த்துள்ளது பல முறை அம்பலமாகியுள்ளது. அத்தகைய கேடுகெட்ட சி.ஐ.ஏ.-வின் தலைவருக்கு மகுடம் சூட்டி, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் தங்களிடம் இருந்த முதுகெலும்பை இழந்து, அமீபா போல முதுகெலும்பில்லாத ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டார்களோ? என்ற கேள்விதான் எழுகிறது!
எதற்காக சி.ஐ.ஏ. இந்தியாவிற்கு வரவேண்டும். அவர்கள் தற்போது வந்த நோக்கம் என்ன? வெளியில் சொல்வது "மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வந்தாராம்". இதை முடித்து விட்டு அப்படியே பாகிஸ்தானுக்கும் ஒரு டூர் போய்விட்டு அங்குள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து விவாதிக்கப் போவதாக கூறுகிறார்.
நம்ம ஊர் (அதாங்க தமிழ்நாட்டு போலீசையே) ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக எல்லாம் பேசிவிட்டு, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ. மூலம் பரிகாரம் தேட முற்படுவது நம்முடைய உளவுத்துறையும், ஹேமந்த் கார்க்கரே போன்று இந்த தாக்குதலில் இரையான நேர்மையான அதிகாரிகளையும் கேவலப்படுத்துவதாக உள்ளது. நம்முடைய இராணுவ வீரர்களாலும், இந்திய மக்களாலும் காப்பாற்ற முடியாத அளவிலா நம்முடைய இந்திய நாடு உள்ளது? கேவலம் நாட்டை கெடுக்கும், நாட்டாண்மை பேர்வழியான அமெரிக்க அடியாள் வேலை செய்யும் சி.ஐ.வி.ன் காலடியில் விழுவது மத்திய ஆட்சியாளர்களின் தவறான திசை வழியை சுட்டுவதாக உள்ளது.
அதுவும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் உலகிலேயே அமைதியான முறையில் ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் மூலம் மாற்றங்களை கொண்டு வரும் மகத்தான தேர்தல் நடைபெறும் பின்னணியில் சி.ஐ.ஏ. வந்ததன் நோக்கம் என்னவோ என்ற சந்தேகம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு! இதை அனுமதிக்க முடியாது! அது மட்டுமல்ல இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய மக்களும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்த பின்னணியில் புறவழியாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய மத்திய அரசு இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவோடு நெருங்கியத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளது. இதற்கும் ஒரு ஒப்பந்தத்தை, அதாவது இதற்குப் பெயர் பாதுகாப்பு ஒப்பந்தமாம்! (யாரைப் பாதுகாப்பதற்கோ?) இப்படியெல்லாம் போட்டுள்ள சூழ்நிலையில், இதை எதிர்தத இடதுசாரிகள் - மத்தியில் மூன்றாவது மாற்று அரசு ஒன்றை அமைப்போம் என்ற நிலையில், அவ்வாறு அரசு அமையும் சூழலில் இராணுவ ஒப்பந்தம் கைவிடப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சமநீதியோடு போடப்படாத அணு சக்தி ஒப்பந்தமும் மாற்றப்படும் என்று சொல்லியுள்ள பின்னணியில் - மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் இந்திய மக்கள் முன் வைத்துள்ள சூழலில் சி.ஐ.ஏ.வின் வருகை எதற்காக? என்ற கேள்வி எழுவது இயல்பானதே! இந்திய மக்களே உஷார். கியூபாவின் புரட்சியாளன் எர்னஸ்டோ சேவினை கொன்றவர்கள் இந்த சி.ஐ.ஏ. அதிகாரிகள்தான். சேவின் புரட்சிகர காற்று தற்போது லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி வடிவமாக உருவெடுத்துள்ளது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், இந்திய அரசு இடதுசாரிகள் பக்கம் செல்வதை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது! எனவே அவர்கள் எந்த சதியையும் தீட்டுவதற்கு தயாராவார்கள்! எனவே எச்சரிக்கையோடு சி.ஐ.ஏ. சதிகளை முறியடிப்போம்! நமது தேசத்தையும், தேச மக்களையும் பாதுகாப்போம்! சி.ஐ.ஏ.வுடன் ஒத்துழைக்கும் மத்திய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களையும், மதவெறி பா.ஜ.க.வினையும் வீட்டுக்கு அனுப்புவோம் இதுவே சி.ஐ.ஏ.வுக்கு நாம் கொடுக்கும் செருப்படியாகும்!
See This one
http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/E311E1A24B27F6286525757F00389B9A?OpenDocument
March 20, 2009
Press Statement
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
Home Minister's Meeting with CIA Chief
The meeting of the CIA Chief with the Union Home Minister P. Chidambaram marks a new stage in Indo-US collaboration. This is the first time that an American CIA Chief has been accorded a meeting with the Union Home Minister in India. Apart from meeting his intelligence counterparts in India, the CIA Chief has been received at the political level, signalling the new status of the CIA in India.
The CIA is notorious for its interventions in the political affairs of various countries including destabilising governments considered inimical to US interests.
This is a pointer of how things have changed under the Manmohan Singh government. India is fast becoming like Pakistan where the CIA and FBI Chiefs meet with the interior minister and Prime Minister.
The role being played by US security and military agencies in the country and the manner in which the Congress-led government is promoting such ties should be a matter of serious concern for all those who wish to protect national sovereignty and the integrity of our democratic system.
சி.ஐ.ஏ. சதிகள் இங்கே தோலுரிக்கப்பட்டுள்ளது இதையும் படிக்கலாம்:
வெளிச்சத்துக்கு வந்த சி.ஐ.ஏ ஆவணங்கள் தமிழில்: சிவராமன்
லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்
சி.ஐ.ஏ. சிறைக்கூடங்களில் மிகக் கொடூரமான சித்திரவதைகள்
வெளிச்சத்துக்கு வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள்
11 comments:
சந்திப்பு, இது போன்ற பதிவு எழுதுவதற்கு முன்னர் உங்கள் புதிய நண்பர் CIA சுப்பரமணியன் சுவாமியை ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள். உங்களை கவுக்க ஒரு டீ பாட்ட்டி வைத்துவிடப்போகிறார்:-(
சிஐஏ வின் “FAMILY JEWEL" ஐ உள்துறை அமைச்சரும் நம் நாட்டு உளவுத்துறை அதிகாரிகளும் படிக்கவேண்டும், சிஐஏ வின் சதிச்செயல்களை இந்தியா அங்கீகரிக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். ஒரு வேளை CIA வுடன் RAW ஒப்பந்தம் போட்டாலும் ஆச்சரியப்படுவதில்லை. இது நாள் வரை இந்தியா கொண்டிருந்த “ஏகாதிபத்திய எதிர்ப்பு” என்பதை ஆட்சியாளர்கள் சிதைத்துவிட்டார்கள்.
பிகிள் நல்லா சத்தம ஊதுங்க. உடம்புக்கும் அதுதான் நல்லது! அதுசரி அம்மாவாசைக்கும்-அப்துல்காதருக்கும் முடிச்சுப் போடுவதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா?
சிஐஏ வின் சதிச்செயல்களை இந்தியா அங்கீகரிக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
ஹரிஹரன் மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். இவர்களுக்கு அந்த சி.ஐ.ஏ. அறிக்கையை எல்லாம் படிப்பதற்கு நேரம் இருக்குமா?ன்னுத்தான் தெரியவில்லை. இன்னும் இரண்டு மாதத்திற்குள் இருக்குற சீட்டும் போயிடுமேன்ற கவலையில்ல இத எப்படி அவர்களால படிக்க முடியும். "பேமிலி ஜீவல்" குறித்து நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி ஹரிஹரன். இது குறித்து இணையத்தில் தேடியதில் சில நல்ல பதிவுகள் கண்ணில் தென்பட்டன. அவற்றையும் இணைப்பாக கொடுத்துள்ளேன். நன்றி நன்பரே
//ல் மூலம் மாற்றங்களை கொண்டு வரும் மகத்தான தேர்தல் நடைபெறும் பின்னணியில் சி.ஐ.ஏ. வந்ததன் நோக்கம் என்னவோ என்ற சந்தேகம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு! இதை அனுமதிக்க முடியாது!//
This is a timely article.The dangers of CIA must be exposed repeatedly by the right thinking people--Selvapriyan--Chalakudy
அமெரிக்க ஏகாதிப்பத்திய வெறிநாய் புஷ்சை ரொம்பவும் டீப்பா லவ் பன்ற மண்மோகனும் பா.சி அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் முழுவதுமாய் இந்தியாவை அமெரிக்காவிடம் எழுதி கொடுத்துவிடுவார்கள். சிஐஏ சதி செயல்களுக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்க சரியான நேரம் வரும் அது மூன்றாவது மாற்று அணி ஆட்சிக்கு வந்து முடிவு கட்டும்
நன்றி திரு. செல்வப்பிரியன், விடுதலை
dear ksp
your write up is a timely wake up call to all patriotic citizens on the diabolic scheme of things going on in the country. Kindly read my letter on the same subject published in Deccan Chronicle today (22 03 2009). Anybody required any clarifications on the role and character of the CIA, I recommend a reading of "Confessions of an Economic Hitman" by John Perkins.
s v venugopalan
நன்றி திரு. வேணுகோபால். தாங்கள் குறிப்பிட்டுள்ள "பொருளாதார அடியாளின்" வாக்குமூலம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றுதான். அதில் எவ்வாறு இந்தோனேசியாவை சீரழித்தார்கள் என்கிற விவரம் சிறப்புடன் வந்துள்ளது. சி.ஐ.ஏ. எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்குள் வேலை செய்த ஜான் பெர்கின்ஸ் வாயிலாக அறிந்து கொள்வது சிறப்பானதே. நன்றி.
சி.ஐ.ஏ. விற்கு அரசியல் ரீதியான அங்கீகாரமும், அரசு ரீதியான அங்கீகாரமும் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு.காங்கிரஸ் கட்சியிலே இருக்கும் தீவிர அமெரிக்க பக்தர்களான மன்மோகன், ப. சிதம்பரம் இந்த வாய்ப்பிற்காக காத்திருந்தார்கள், மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து உதவத் தயார் என அமேரிக்கா கூறியதை தேவையில்லை என்று மறுத்தார் பிராணாப் முகர்ஜி. அமேரிக்கா தாசர் ப. சிதம்பரம் பட்டுக்கம்பளம் விரித்துள்ளார். .
நன்றி சுப்புராம். சரியாக சொல்லியுள்ளீர்கள். காங்கிரசுக்கு உள்ளேயே கூட அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சின்னச் சின்ன நாடுகள் கூட அமெரிக்காவின் உதவிகளை பல்வேறு கட்டங்களில் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த முதுகெலும்பில்லாத காங்கிரசு ஆட்சியாளர்களின் அமெரிக்க பற்று வெட்கம் கெட்டதாக உள்ளது.
Post a Comment