March 30, 2009

"போஸ்டர் பாய்" காட்சிகளும், காலியான மூளைகளும்!

என்.டி. டிவி, டைம்ஸ் நெவ், சிஎன்என்-ஐபின், ஹெட்லைன்ஸ் டுடே... இத்தியாதி, இத்தியாசி ஆங்கிலச் சேனல்களில் 24X7 அந்தப் பையனின் முகத்தை காட்டத் தவறுவதில்லை. கடந்த 15 நாட்களாக அந்தப் பையனின் முகம் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் பரிட்சயமாகி விட்டது. அடையாளமாய்த் தங்கியும் விட்டான்! யார் அந்தப் பையன் என்றா கேட்கிறீர்கள் - வேறு யார்?"இஸ்லாமியர்களின் தலையை வெட்டுவேன்" என்று கூறி மதவெறியை கிளப்பி வன்முறையை தூண்டினானே வருண்காந்தி அவன்தான்.
முதலில் அவனது பேச்சைக் காட்டிய மீடியாக்கள்..
பின்னர் அவன் குறித்த சச்சையை காட்டிக்கொண்டே இருந்தது...
அடுத்து, தேர்தல் கமிஷன் அந்தப் பையனை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தாதீர்கள் என்று பா.ஜ.க.வை கேட்டுக் கொண்டது.. அதையும் சர்ச்சையாக்கியது...
அடுத்து, அந்தப் பையனின் கைது நடவடிக்கைக்கான தடையாணை பெற்றது...
பின்னர் தடையாணை விலக்கிக் கொண்டது...
அப்புறம் ஊர்வலமாகச் சென்று கைதாகியது...
இப்போது அந்தப் பையன் மீது பாய்ந்துள்ள என்.எஸ்.ஏ. (தேசிய பாதுகாப்புச் சட்டம்) பாய்ந்துள்ளது... என்று அந்த குற்றவாளியை ஒரு ஹீரோவாக உயர்த்துவதற்கு இந்த ஆங்கில மீடியாக்கள் சேவகம் புரிந்து வருகின்றன.
அவர்களே அதற்கான டைட்டிலையும் கொடுத்து விட்டார்கள். "இந்துத்துவாவின் போஸ்டர் பாய்". தேர்தல் காலத்தில் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்தத் தேர்தலில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்று ஒரு பட்டியலிட்டு அதில் மக்களின் மனநிலைகளை அறிந்து ஒளிபரப்பி வாக்காளர்களுக்கு ஒரு சரியான திசைவழியை அடையாளம் காட்ட உதவ வேண்டிய இந்த மீடியாக்கள், தலையை வெட்டுவேன் என்று சொன்னவருக்கு கண்ணாடியாக செயல்பட்டு பாஜகவுக்கு மறைகமாக சேவகம் புரிந்து வருகிறது.
பா.ஜ.க. இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்று அனைவராலும் சொல்லப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் விளையாட்டில் கூட்டாளியாக சேர்ப்பதற்கே ஆளில்லாத நிலையில், முகமிழந்து நிற்கும் இந்த தாமரைக்கு, "போஸ்டர் பாயை" தூக்கிப் பிடித்து இந்துத்துவா சேவை புரிந்து வாக்குகறை சேரிக்கும் புனிதப் பணியை நிறைவேற்றி வருகின்றன நவீன கோயபல்சு மீடியாக்கள்!
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எப்படி செயல்பட்டது?
பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டதா? மக்கள் பிரச்சனைகளில் அவர்கள் எப்படியெல்லாம் ஆர்வம் செலுத்தினார்கள்? எந்தப் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள்? அப்புறம் எப்படி கேள்வி கேட்பதற்கே பாராளுமன்றத்தில் கையூட்டு பெற்றார்கள்? ஒரிசாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி பழங்குடி கிருத்துவர்களை எப்படி கொன்றார்கள், வீடுகளை தீயிட்டு கொளுத்தினார்கள்,
அதே போல் காங்கிரஸ் கட்சி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதில் காட்டிய ஆர்வம் சர்வதேச மார்க்கெட்டில் அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய் விற்கும்போதுகூட ஏன் பொதுமக்களுக்கு விலையை இறக்க மறுக்கிறது. மாறாக, விமான சர்வீசுக்கான பெட்ரோல் விலைகயை எத்தனை முறை குறைத்து தங்களது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்தது? அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் எப்படி மண்ணாக நடந்துக் கொண்டார் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டது எப்படி? மகாராஷ்டிரா விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு எந்தவிதமான நிவாரணத்தையும் கடந்த ஐந்தாண்டில் தேடாமல் இருந்தது எப்படி! இதற்கான பரிகாரம் என்ன? பட்ஜெட் கூட்டத் தொடர் உட்பட பாராளுமன்ற நடவடிக்கைகள் மிக குறைந்த நாட்களே இந்த காலகட்டத்தில் நடந்ததன் ரகசியம் என்ன?
திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பத்திலேயே பெரிய பொறுப்புகளை அடைவதற்காக எப்படி மத்திய அரசை மிரட்டினார். அதேபோல் மத்திய அமைச்சர் ராசாவின் 2ஜீ - மொபைல் சர்வீஸ் ஊழல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது - கிட்டத்தட்ட வரலாற்றிலேயே நடக்காத ஊழல் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? என்ன ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் என்கிறார்களே அது என்ன?
அதேபோல் மலேகானில் பா.ஜ.க.வும்-சங்பரிவாரமும் குண்டு வைத்துக்கொண்டு இந்து பயங்கரவாதமாக எப்படி மாறியது! பயங்கரவாத அச்சுறுத்தலில் பாஜகவின் பங்கு என்ன? இப்படி நூறாயிரம் கேள்விகள் இருக்க ஏதோ வருண் காந்தியின் படத்தை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களது காலியான மூளைகளைத்தான் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது பெருமுதலாளித்துவ ஆங்கில மீடியாக்கள் அதற்கு ஒத்து ஊதி வருகிறது தமிழ் (சன்-கருணாநிதி) கார்ப்பரேட் மீடியாக்கள்.
மீடியாக்களை விட சிறந்த வலுவான ஆயுதம் மக்களது வாய்தான்! எனவே நாம் வாயாடுவோம்! உண்மைகளை உரைப்போம் மக்களிடம்! காங்கிரசு-திமுக, பாஜக கூட்டாளிகளை அம்பலப்படுத்துவோம்.

9 comments:

விடுதலை said...

//தலையை வெட்டுவேன் என்று சொன்னவருக்கு கண்ணாடியாக செயல்பட்டு பாஜகவுக்கு மறைகமாக சேவகம் புரிந்து வருகிறது.//

வகுப்புகலவரங்கள் தூண்டிவிடும் பாசகவின் கொள்கை விளக்க மேடையாக இப்போது இந்திய ஊடங்கள் களத்தில் முன்நின்று சேவகம் செய்கின்றன. இதன் மூலம் வகுப்பு கலவரங்கள் நடத்தால்கூட அதையும் நேரடியாக ஒளிபரப்பி வருமாணம் பார்ப்பதற்கும் தயாராக உள்ளன

சந்திப்பு said...


வகுப்புகலவரங்கள் தூண்டிவிடும் பாசகவின் கொள்கை விளக்க மேடையாக இப்போது இந்திய ஊடங்கள் களத்தில் முன்நின்று சேவகம் செய்கின்றன. இதன் மூலம் வகுப்பு கலவரங்கள் நடத்தால்கூட அதையும் நேரடியாக ஒளிபரப்பி வருமாணம் பார்ப்பதற்கும் தயாராக உள்ளன


இந்திய மீடியாக்களின் ஒரு சார்புத்தன்மையை இதைவிட வேறு வகையில் அம்பலப்படுத்த முடியாது! நன்றி விடுதலை.

Anonymous said...

You have rightly said the way of functioning of out media and Papers.And you have clearly exposed the "Nudism in Modern Journalism" and media.They are serving for other than people's causes.
The TVs need only gimmick matters.No ethics and no purpose. As a senior Journalist with rich experiences you have no any hesitations and inhibitions to expose the fake services of our media and Journalism .For which we have to say"thanks" to you.The press and TV media not at all taking /showing our peoples problems and youths,students issues.-R.Selvapriyan-Chalakudy

சந்திப்பு said...


"Nudism in Modern Journalism" and media.They are serving for other than people's causes.


The press and TV media not at all taking /showing our peoples problems and youths,students issues.


அம்மணமாகி நிற்கும் நமது இதழியல்துறையின் மக்கள் மீதான அபிமாணம் எப்படி உள்ளது என்பதை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

இதற்கு மாற்றாக "மாற்று ஊடகத்துறை" அல்லது மாற்று ஊடக சிந்தனையாளர்களின் ஒருங்கிணைப்பு அவசியம். அவ்வாறான ஒருங்கிணைப்பின் மூலமே இந்த பிக் மீடியாவை வழிக்கு கொண்டு வரமுடியும். எனவே, மக்களுக்கான ஆல்டர்நெட் மீடியாவாக இன்றைக்கு வலைப்பதிவுகள் செயலாற்றிக் கொண்டுள்ளன. இதில் நமது காலை வலுவாக பதிக்க முடியும் என நம்புகிறேன். ஒவ்வொருத்துறையிலும் அரசமரத்தின் வேர்கள் எவ்வாறு முரட்டுச் சுவர்களை துளைத்துக் கொண்டுச் செல்கிறதோ அதேபோன்று மாற்று மீடியா சிந்தனையாளர்கள் வேர்விட வேண்டிய அவசியம் உள்ளது.

Anonymous said...

ரொம்ப நன்னா இருக்கு.. அம்மா நாயக் கொல்லக் கூடாதுன்னு சட்டம் போடறா.. பையன் ஆள கொல்லுன்னு சொல்றான்...இவாளுக்கு நாமமெல்லாம் பிராணிகளா இருந்ததாத்தான் அன்பு வரும் போலருக்கு..

AIESES said...

In India 45%of the population is youth most of them un-employed.Almost employement gate is closed. Here is no powerfull working class movement with a demond of EMPLOYMENT GENERATION.Cpitalist class powerfully using their medias to divert the youths and masses to their Agenda. When it will be happened? who will save the Nation?

AIESES said...

In India 45%of the population is youth most of them un-employed.Almost employement gate is closed. Here is no powerfull working class movement with a demond of EMPLOYMENT GENERATION.Cpitalist class powerfully using their medias to divert the youths and masses to their Agenda. When it will be happened? who will save the Nation?

subbu said...

You have rightly exposed the media,particularly English electronic media. BJP has been using this NEHRU-GANDHI clan boy in this election (in a planned manner) to divert people's attention from real issues facing them.The BJP used him to initiate and spread communal hatred campaign. It is now using the news of his arrest to suppress its failure to perform as an opposition. Ruling UPA dispensation is also happy with this developement. Casuality is election campaign on real issues.Let us find out,as you said,alternate campaign mode.

சந்திப்பு said...

Thanks anony: for your comment is very nice.

AIESES : your worries are meaningful. We will expect people will save the nation. that mean we have to campaign against capitalist class and mobalize people. your comment is valuable.

Subbu: thanks for your comment.