
தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், ஓபராய் போன்றவற்றில் பிணைய கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்களையும், வெளிநாட்டு பயணிகளையும் மீட்பதற்காக 60 மணி நேர ஓய்வு ஒலிச்சலில்லாத கடுமையான போராட்டத்திற்கு பின் நமது வீரர்களின் அளப்பரிய உயிர்களை தியாகம் செய்து அந்த பயங்கரவாத மிருகங்களை முறியடித்து மீட்டுள்ளனர்.
இந்த பணியில் ஈடுபட்ட நமது தேசிய பாதுகாப்பு படையினரின் சாதனையும், தியாகமும் போற்றப்பட வேண்டியது. மெச்சத் தகுந்தது. இந்த தேசம் காக்கும் பணியில் முதல் பலியானவர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே! இவரது இழப்பு மகாராஷ்டிரத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.
இந்த ஒப்பற்ற மாவீரரின் தியாகத்திற்கு தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பல வருடங்களாக துப்பு துலங்காத நிலையில் ஹேமந்த் கார்க்கரே பொறுப்பேற்ற பின்னர் அதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, அந்த சம்பவத்தில் காவியுடை பயங்கரவாதிகளின் இருண்ட முகங்கள் - காவியுடையால் மறைக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தினார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் கையிருப்பதாகவும், இதில் ஐ.எஸ்.ஐ. பங்கு இருப்பதாகவும் உடனடியாக கதை கட்டி விடுவார்கள். நாடும் இதை நம்பித்தான் வந்தது. இப்படியான பயங்கரவாத நடவடிக்கையின் வாயிலாக குறிப்பாக இசுலாமிய சமீபத்தின் மீதே ஒரு பயங்கரவாத முத்திரையை திணிப்பதற்கு இந்துத்துவவாதிகளும், இந்துத்துவ ஆதரவு மீடியாக்கவும் கடுமையான முயற்சிகளை - கோயபல்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் முதல் முறையாக சாத்வி பிரக்யா என்ற இந்து துறவி இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தியதோடு, சங்பரிவாரம் நடத்தும் இராணுவ பள்ளியின் மூலமாகத்தான் இதுபோனற் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது என்பதையும் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே! அது மட்டுமா? இன்றைக்கு தேசத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக தமது விலை மதிக்க முடியாத உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களை நாடே புகழ்ந்து கொண்டிருக்கையில் - அத்தகைய மதிப்புமிக்க இராணுவத்திற்குள்ளேயே இந்துத்துவ ஓநாய்கள் இராணுவத்தின் உயர்மட்டம் வரைச் சென்று நமது தேசத்திற்கு எதிராகவே, நமது இந்திய மக்களுக்கு எதிராகவே பயங்கரவாத வன்முறைச் செயல்களை நிகழ்த்தியதை நினைக்கும் போது, இந்த சங்வரிவார பயங்கரவாதிகளுக்கு நாட்டையும், நாட்டு மக்களையும் விட அவர்களது வெறி பிடித்த பாசிச தத்துவம் எந்த அளவிற்கு அவர்களது மூளையை ஆட்டு வித்துள்ளது - ஆக்கிரமித்துள்ளது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
பாசிச சிந்தனை எப்படி செயல்படும் என்பதற்கு அடையாம்தான் - முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, 'இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்' என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, 'ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா' என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.
இந்த வழக்கில் இன்னும் தோண்டத் தோண்ட பல புதைகள் கிடைக்கவுள்ளன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் கதாநாயகனாக செயல்பட்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தேசத்தின் முன் மேற்கண்ட பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே!
ஆனால், மேற்கண்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டனர் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும். அதாவது மேற்கண்ட நேர்மையான அதிகாரிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்களை வாரியிறைத்தனர். அவதூறுகளை அள்ளி வீசினர். சாத்வீ துன்புறுத்தப்படுவதாக கூக்குரல்களை எழுப்பினர். இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.
பயங்கரவாதம் என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதல்ல அது உள்ளிருந்தும் வரும் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திச் சென்றிருக்கும் ஹேமந்த் கார்க்கரே, தனது இறுதி சில மணி நேரங்களில் தனது நன்பரும் - துறைச் சார்ந்தவருமான கோவர்த்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மும்பையில் தேசத்தையே உலுக்கிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடச் செல்லும் நேரத்தில் கூட, தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக தனது இறுதி சில மணி நேரத்தில் கூட கடமையாற்றியிருக்கும் இந்த மகத்தான வீரரின் வீரம் போற்றப்பட வேண்டியது. இது தேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஹேமந்த் கார்க்கரே மறைந்து விட்டார் என்ற உடன் குஜராத் முதல்வர் மோடி அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி தருவதாக கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினர் மோடியின் நிவாரணத்தை வாங்க மறுத்து விட்டனர்.
மோடி யார்? என்பது உலகிற்கே தெரியும் போது? அந்த தாய்குத் தெரியாமலே போகும்! எனது கணவர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அதற்கு மோடியின் ஒரு கோடி ஈடேறுமா? இந்த தியாகம் ஈடு இணையற்ற தியாகம் என்றே அவர் நினைத்திருக்கலாம்!
அது மட்டுமா? தேசமே இந்த சோகத்தை எப்படி எதிர் கொள்ளுவது என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் இவர்களது அரசியல் சதிராட்டம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று பொறுப்புள்ள எதிர் கட்சி வெளியில்தான் பேசுவோம்! ஆனால் உள்ளரங்கில் ஜனநாயக ரீதியாக விவாதிக்கும் கூட்டத்தில் விவாதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்வதுதான் தேச பக்தியா? என்ற கேள்வி எழுகிறது.
அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் இவ்வாறு கலந்து கொள்ளாதது யாரை காப்பாற்றுவதற்காக? என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழுகிறது.
மொத்தத்தில் காவி பயங்கரவாதமும் இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை தனது நியாயமான புலன் விசாரணை மூலம் அம்பலப்படுத்தி - மும்பை பயங்கரவாதிகளையும் எதிர்த்து தனது உயிரை தியாகம் செய்துள்ள ஹேமந்த் கார்க்கரேவுக்கு எனது வீர வணக்கங்கள்.
16 comments:
வீர வணக்கம்,அஞ்சலி என்ற பெயரில்
இங்கும் உங்களது பாஜக எதிர்ப்பு பாடலை பாடுகிறீர்களே.
உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.எதிலும் பாஜக எதிர்ப்பு
அரசியல்தானா.24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும் மண்டைக்குள் வேறு
சிந்தனையே ஒடாதா.இப்படியே போனால் ஒரு நாள் சட்டயைக்
கிழித்துக் கொண்டு அத்வானி ஒழிக,
என் சட்டையை கிழித்த ஆர்.எஸ்.எஸ்
ஒழிக என்று கத்திக்கொண்டு என்று சாலையில் ஒடும் நிலைக்கு வந்து விடுவீர்கள்.
//இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.//
நல்ல ஆப்சர்வேஷன்.
இந்த இந்து பயங்கரவாதிகள் (இணையத்திலும்) ஒரு பக்கம்.
மூஸ்லிம் பயங்கரவாதிகள் (இணையத்திலும்) மறுபக்கம்.
இவா ரெண்டாளும் ஒழிஞ்சுட்டாள்னா நாம இந்தியர்லாம் நிம்மதியா இருக்கலாம்.
அது சரி சந்திப்பு,
பதவி வெறி பிடித்த அச்சுதநந்தனை வீரமரணமடைந்த தியாகி சந்தீப்பின் பெற்றோர் பெங்களூருவில் விரட்டினார்களாமே?
துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று பதறிஅடித்து ஓடினானாமே தமிழ் விரோத பதவி வெறியன் அச்சுதநந்தன்.
இப்படியே போனால் ஒரு நாள் சட்டயைக்
கிழித்துக் கொண்டு அத்வானி ஒழிக,
என் சட்டையை கிழித்த ஆர்.எஸ்.எஸ்
ஒழிக என்று கத்திக்கொண்டு என்று சாலையில் ஒடும் நிலைக்கு வந்து விடுவீர்கள்.
அன்பு நன்பரே! தங்களது கோபம் புரிந்து கொள்ளக் கூடியது. உங்கள் மீது எந்தக் கோபமும் எனக்கு இல்லை. மேலும், எப்போதும் பா.ஜ.க. எதிர்ப்பு என்ற சிந்தனையோடு செயல்படுவதாக கூறுகிறீர்கள். அப்படியில்லை. ஆனால், எப்போதெல்லாம் பயங்கரவாதம் - பாசிசம் குறித்த பேச்சு - விசயம் வருகிறதோ அப்போதெல்லாம் மறக்காமல் பா.ஜ.க.வும் - சங்பரிவாரமும் வந்து விடும். எப்படி அத்வானிக்கும் - வாஜ்பாய்க்கும் தூங்கும் போது கூட சிறுபான்மை எதிர்ப்பு என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான். அது சரி நன்பரே. நீங்கள் மலேகனில் நடைபெற்ற பயங்கரவாத வன்முறையை ஆதரிக்கிறீர்களா? அதில் சங்பரிவாரம் ஈடுபட்டுள்ளதை நியாயப்படுத்துகிறீர்களா? அதற்கு பதில் சொல்லி தங்களது கருத்தை நியாயப்படுத்த முயலுங்கள்.
இந்த இந்து பயங்கரவாதிகள் (இணையத்திலும்) ஒரு பக்கம்.
மூஸ்லிம் பயங்கரவாதிகள் (இணையத்திலும்) மறுபக்கம்.
இவா ரெண்டாளும் ஒழிஞ்சுட்டாள்னா நாம இந்தியர்லாம் நிம்மதியா இருக்கலாம்.
நன்பர் முனியாண்டி சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மேற்கண்ட இரண்டு தத்துவங்களும் அதாவது இந்துத்துவாவும் - ஜீகாத்தும் (பின்லேடனின் புனிதப் போரிய வாதிகள்... உட்பட) மக்களின் பிரதான எதிரிகளே. இந்த அமைப்புகள் ஒருபோதும் அந்தந்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல. மாறாக, மதத்தை தனது பயங்கரவாத்திற்கு புனித முலாம் பூசிக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுத்தான். எனவே மேற்கண்ட இரண்டையும் விடுவிப்பதற்கான போராட்டத்தில் இந்து மக்களும். இசுலாமிய மக்களும் ஒன்றுபட வேண்டும். மொத்தத்தில் பயங்கரவாதம் என்பது மனித குல விரோதியே!
ஒரே கொசுத் தொல்லைன்னு சொல்லுவாங்களே... அது இதுதானா?
பாவம் அடிக்குற காத்துலேயும், புகையிலேயும் நாட்டுக்குனு செத்துப் போகும் கொசுவால் எப்போதும் தொல்லைதான்.
அது சரி! சந்தீப்புக்கு பெங்களூரில் பெற்றோரா?.... புல்லரிக்குதய்ய... உன் கண்டு பிடிப்பு.... புல் புடுங்குவதற்கு கூட பயன்படாத கண்டு பிடிப்பு.
//
அது சரி! சந்தீப்புக்கு பெங்களூரில் பெற்றோரா?.... புல்லரிக்குதய்ய... உன் கண்டு பிடிப்பு.... புல் புடுங்குவதற்கு கூட பயன்படாத கண்டு பிடிப்பு//
ஒழுங்கா பேப்பரப் படிங்க.
தீக்கதிர் மட்டும் படிச்சா பத்தாது.
http://news.google.co.in/news?hl=en&tab=wn&ned=&q=kerala+cm
இந்த சுட்டில அச்சுதனந்தன் பெங்களூரில செருப்படி வாங்கிய செய்திகள் 189 இருக்கு. படிச்சிக்கோங்க.
நல்ல பதிவு!
இரண்டு பயங்கரவாதிகளும் ஆளை ஆள் மாறி மாறிக் கைகாட்டிக் கொண்டு நாட்டைக் கிழிக்கிறார்கள். இந்நிலையில் இந்து பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் இந்துத்துவ அரசியல்வாதிகள், அவர்களுக்குக் காவடி தூக்கும் 'மேலே பிஜேபி ஜால்ரா' கமெண்டிஸ்டுகள் ஆகியோரின் குரல்களையும் மீறி, கார்கரே போன்ற நியாயமான அதிகாரிகளால் உண்மை வெளிவரும்.
நன்றி சுந்தரவடிவேல்
நீங்கள் கூறியிருப்பது போல் ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதம் துணையாய் இருக்கிறது. அப்போதுதான் இருவரின் பயங்கரவாதத்திற்கும் ஒரு சொத்தை அரசியல் காரணம் தேவைப்படும். எனவேதான் இவர்கள் இதனை நீட்டிக்கச் செய்கிறார்கள். ஆனால் மக்களைக் கொல்லும் - நாட்டை சூறையாடும் இந்த பயங்கரவாதத்தை நம் மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. அதனைத்தான் நாம் உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தோம். நெ. 1 ஆக இருந்த பா.ஜ.க. இன்றைக்கு நெ. 4 ஆக மாறிவிட்டது.
//. நெ. 1 ஆக இருந்த பா.ஜ.க. இன்றைக்கு நெ. 4 ஆக மாறிவிட்டது.
//
தமிழ்நாட்டில CPM எத்தனாவது இடத்துல இருக்குது சந்திப்பு?
ஒரு 35 வது எடத்துல இருக்குமா?
கொசு மணி!
கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பந்தமாக நீங்கள் கொடுத்திருக்கிற தகவல் சரியானதுதான். அது இன்றைய சம்பவம் என்பதால் அந்த செய்தி எனக்கு கிடைக்கவில்லை. மேலும் தியாகி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தந்தை மீது அனுதாபப்பட வேண்டியுள்ளது. மற்ற படி கேரள முதல்வர் பெங்களூர் சென்று சந்திக்க முயன்றுள்ளது வரவேற்க வேண்டிய அம்சம்.
மேலும், தமிழகத்தில் சி.பி.எம். எப்போதும் நெ. 1 இருந்ததில்லை எனவே அது குறித்த வருத்தம் எதுவும் எங்களுக்கு இல்லை. கடந்த காலத்தை ஒப்பிடும் போது வளர்ந்திருக்கிறோம். தேயவில்லை. குறிப்பாக இன்றைக்கு மக்கள் பிரச்சனைகளை அஜண்டாவாக முன்னெடுப்பதில் சி.பி.எம்.தான் முன்னிலை நன்பரே. அது பட்டா விசயமாக இருக்கலாம், நிலப் பிரச்சனையாக இருக்கலாம், அருந்ததியர் மற்றும் தலித் மக்கள் பிரச்சனையாக இருக்கலாம்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் உங்களது பா.ஜ.க. தமிழகத்தில் இன்னும் மடத்தை விட்டு வெளியே வரவில்லை. அது மட்டுமல்ல... எப்படி தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கலாம் என்ற சிந்தையில்தான் ஆழ்ந்திருக்கிறது. அதைத்தான் சமீபத்தில் தமிழகத்தில் சில இடங்களில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை பார்த்தோம். எனவே, பா.ஜ.க. என்ற மதவாத அமைப்பு எப்போதும் மக்கள் மீது கரிசனம் கொண்ட அமைப்பு அல்ல என்பதைதான் உணர்த்துகிறது. கொசு இது மழைக்காலம்... காற்று வீசுவதற்குள்ளும், இரவு துவங்குவதற்குள் எங்காவது ஒரு பொந்துக்குள் ஒளிந்துக் கொள் இல்லையென்றால்... டார்டாய்ஸ் வந்து உன்னை அமுக்கி விடும்.
//கடந்த காலத்தை ஒப்பிடும் போது வளர்ந்திருக்கிறோம். தேயவில்லை.//
ஒரு தேர்தல்ல தனியா நின்னு பார்க்கவேண்டிதானே உங்க வளர்ச்சிய???
ஒன்னு கருணாநிதிக்கு காவடி தூக்கணும் இல்லன்னா ஜெயலலிதாவுக்கு காவடி...அட அட ...சும்மா சொல்லக்கூடாது...தோழர்களுக்கு உண்டியல் தூக்கத்தான் தெரியும்ன்னு நெனச்சேன் நல்லாவே காவடி தூக்குராங்கப்பா :)))))))))))))
ஒரு தேர்தல்ல தனியா நின்னு பார்க்கவேண்டிதானே உங்க வளர்ச்சிய???
ஒன்னு கருணாநிதிக்கு காவடி தூக்கணும் இல்லன்னா ஜெயலலிதாவுக்கு காவடி...அட அட ...சும்மா சொல்லக்கூடாது...தோழர்களுக்கு உண்டியல் தூக்கத்தான் தெரியும்ன்னு நெனச்சேன் நல்லாவே காவடி தூக்குராங்கப்பா :)))))))))))))
அன்புள்ள கமல் தங்களது கருத்துக்கு நன்றிகள்.
இன்று இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியும் தனித்து போட்டியிடாது. யார் தனித்துப் போட்டியிட்டாலும் அவர்கள் மண்ணைக் கவ்வுவது உறுதி. மேலும் அகில இந்திய அளில் ஒரு கட்சி ஆட்சி என்பது எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. எனவே, ஒரு கட்சி தனியாக போட்டியிட வேண்டும் என்ற உங்களது ஆசைக்கு ஏற்ப எதார்த்த நிலை அப்படியில்லை என்பதை முதலில் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துதான் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அது மக்கள் போராட்டங்கள் மூலமாகவும், தனது கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஏற்கச் செய்வதன் மூலமாகவும் அதனை நிறைவேற்றலாம். அதாவது கொள்கைக்கு வெற்றி! இதில் கட்சி என்பது இரண்டாம் பட்சம்தான்.
அந்த அடிப்படையில்தான் கம்யூனிஸ்ட்டுகளின் தற்போதைய தேர்தல் வியூகம் இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் - பயங்கரவாதத்தை தனது மறைமுக கொள்கையாகவும் - நேரடி வன்முறையாகவும் வைத்துக் கொண்டு இந்த நாட்டை இன்னொரு பயங்கரவாதிகளின் அரசியல் விளையாட்டரங்கமாக மாற்றுவதற்கு அடிப்படையாக இருந்த பா.ஜ.க.வை முறியடிப்பது முதன்மையானது.
அடுத்து, இந்தியா என்கிற பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டை, சுயேச்சையான அயலுறவுக் கொள்கையுடன் - அணிசேரா கொள்கையுடன் செயல்பட்ட இந்த நாட்டை 123 - அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலமும் - இராணுவ ஒப்பந்தத்தின் மூலமும் அமெரிக்காவிடம் சரணாகதியடையச் செய்து அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாடுபிடி அரசியலுக்கு துணை போன காங்கிரஸ் கட்சியையும் முறியடிக்க வேண்டும் என்பது இன்னொரு முக்கிய அம்சம்.
அந்த அடிப்படையில் மேற்கண்ட இரண்டையும் முறியடிப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு பலம் இல்லை. எனவே கொள்கை அடிப்படையில் இந்த விசயங்களில் ஒத்துவரக் கூடிய மாநில கட்சிகளை இணைத்துக் கொண்டு மூன்றாவது அணி அமைப்பது என்பது எங்கள் இலக்கு. அதன் அடிப்படையில் நிச்சயமாக கம்யூனிஸ்ட்டுகள் இந்த இலக்கை வெற்றி பெற வைப்பார்கள் நன்பரே.
நீங்கள் எந்தப் பக்கம் இருக்கப் போகிறீர்கள் என்று? நிதானமாக யோசித்து முடிவு எடுத்துக் கொள்ளவும்.
அன்பு நண்பரே!!!
மத்தியில் மூன்றாவது அணி என்பது ஏறக்குறைய முடிந்த சங்கதி....
சரி கொள்கை அடிப்படையில் கூட்டணி என்கிறீர்கள்...போன மாதம் வரை நீங்கள் திட்டி தீர்த்த ஜெயலலிதா இன்று உங்களுக்கு நண்பராகி விட்டார்..இது நாள் வரை நீங்கள் கொஞ்சி குலாவிய கலைஞர் இப்போது எதிரி ஆகிவிட்டார்...நல்ல கொள்கை
அடுத்த காமெடி..இந்த இலங்கை தமிழர்கள் விஷயம்...
நீங்கள் தான் நாகு வருடம் அவர்களுடன் கூட்டணியில் இருந்தீர்கள்....அப்போதெல்லாம் உங்களுக்கு தெரியாத விஷயம் இந்த மூன்று மாதங்களில் காங்கிரஸ் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குகிறது என்று மேடைக்கு மேடை கூவுகிறீர்கள்....
காங்கிரஸ் அமெரிக்காவிற்கு அடிவருடி என்றால் நீங்கள் சீனாவின் அடிவருடிகள்...
ஒரு முறையாவது காம்ரேட்கள் அருணாச்சல் இந்தியாவின் சொத்து அதை சீன அரசாங்கம் சொந்தம் கொண்டாட நினைப்பதை கண்டிக்கிறோம் என்று சொல்லியதுண்டா???
இப்போது அச்சுதானந்தன் வேறு ஒரு பொன்மொழியை உதிர்த்துருக்கிறார்....அதை கேட்டு அனைத்து தோழர்களும் புல்லரித்து பொய் உள்ளனர்...
வாழ காம்ரேட்!!!! வளர்க்க அவர்கள் உண்டியல்!!!!
With the death of Hemant Karkare the probe done by him should not be allowed to be halted.Now the ball is in the court of new home minister P.Chidambaram.Let us see whether he has the political will and courage to pursue the same.Let us wait and see what agency(if at all),Indian CBI or American FBI,he is going to press into service. Subburam
போன மாதம் வரை நீங்கள் திட்டி தீர்த்த ஜெயலலிதா இன்று உங்களுக்கு நண்பராகி விட்டார்..இது நாள் வரை நீங்கள் கொஞ்சி குலாவிய கலைஞர் இப்போது எதிரி ஆகிவிட்டார்...நல்ல கொள்கை
அன்பு நன்பரே ரொம்பவும் குழம்பி போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அரசியலை சற்று உற்று நோக்குங்கள். சி.பி.எம். தமிழக அரசிற்கு தொடர்ந்து வெளியிலிருந்து ஆதரவு அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் பிரச்சனையின் அடிப்படையில் எதிர்ப்பியக்கங்களையும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் தற்போது நாடு சந்திக்கவுள்ளது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மனதில் கொள்ளவும். எனவே, அகில இந்திய அளவில் தேசம் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நான் சுத்த சுயப்பிகாசமாக இருப்பதால் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. வேண்டும் என்றால் நான் வெள்ளை என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
இந்த மூன்று மாதங்களில் காங்கிரஸ் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குகிறது என்று மேடைக்கு மேடை கூவுகிறீர்கள்....
காங்கிரஸ் அமெரிக்காவிற்கு அடிவருடி என்றால் நீங்கள் சீனாவின் அடிவருடிகள்...
ஒரு முறையாவது காம்ரேட்கள் அருணாச்சல் இந்தியாவின் சொத்து அதை சீன அரசாங்கம் சொந்தம் கொண்டாட நினைப்பதை கண்டிக்கிறோம் என்று சொல்லியதுண்டா???
கமல், சி.பி.எம். எப்போதும் மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக பெரிய கேள்வியெல்லாம் எழுப்பியதில்லை. இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட உறவுகள். அது தனி. அதே சமயம் தற்போது நடந்து வரும் இனப் பிரச்சனைக்கு இரு தரப்பு ஆயுத மோதல்கள் தீர்வாகாது என்பதைத்தான் வலியுறுத்தி வருகிறது. இதற்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும். அதற்கு முதலில் புலிகள் வெளிப்படையாகவும் - உண்மையாகவும் நடந்துக் கொள்ள வேண்டும். தனது சுயலாப அரசியலுக்காக தமிழ் மக்களை பகடைகளாக உருட்டக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை. இலங்கை அரசும் இராணுவ தாக்குதல்களை நிறுத்தி ஓர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முதலில் புலிகள் தரப்பில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வளர வேண்டும்.
அடுத்து நாங்கள் சீனாவின் அடிவருடிகள் என்று அழைத்துள்ளீர்கள். அப்படியென்றால் நீங்கள் என்ன அமெரிக்காவின் அடி வருடியா? அருணாச்சல் பிரதேசம் உட்பட உள்ள எல்லைத் தாவாக்களில் நமது உரிமைகளை எப்போதும் - என்றும் விட்டுத் தரக்கூடாது. அதே சமயம் இதனை சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். கருநாடகம் பா.ச..கவின் அடிவடி போன்று தமிழக ஓகேனக்கலுக்கு உரிமைக் கொண்டாடக் கூடாது.
Post a Comment