December 15, 2008

செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!

இன்று காலை 07.20 மணி இருக்கும் நான் என்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்தில் ஏறிவிட்டேன். அப்போது என்னுடைய நண்பர் அதிர்ச்சியாக டி.வி.யைப் பார்த்தாயா? என்று கேட்டார்? நான் என்னமோ? ஏதோ என்று பயந்து விட்டேன். ஏதாவது பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு குண்டு வைத்து விட்டார்களோ என்ற அச்சம்தான் முதலில் எனக்குத் தோன்றியது. நான் பார்க்கவில்லை என்ன விசயம் என்று கேட்டேன். புஷ்சை செருப்பால் அடித்து விட்டார்கள் என்று கூறினார். ஆச்சரியமாக இருந்தது! உடனே என்னுடைய குழந்தைகளை பேருந்தில் இருந்த மற்றொரு நன்பரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி விட்டு. தொலைபேசியில் அழைத்த நன்பர் வீட்டுக்குச் சென்றால், அந்த வீடே ஒரே குதுகலமாக இருந்தது. அப்போதுதான் மீண்டும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஜார்ஜ் புஷ் செருப்படி பட்ட காட்சியை மீண்டும், மீண்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சி குறித்து எனக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதற்கும் சில மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். - செல்பேசி என்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதைத்தான் காண முடிந்தது! ஏகாதிபத்திய எதிர்ப்பின் - யுத்த வெறியன் மீதிருந்த எதிர்ப்புணர்வு எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதை இந்த காட்சி நன்கு புலப்படுத்தியது.!

உலகிலேயே செருப்படி வாங்கிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என்கிற சிறப்புக்குரிய தகுதியை பெற்றிருக்கிறார் ஜார்ஜ் புஷ். வெள்ளை மாளிகையில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் வெளியேறப் போகும் இந்த பிணம் திண்ணி கழுகிற்கு இந்த செருப்படி வழியனுப்பு நிகழ்ச்சியை ஈராக் இளம் பத்திரிகையாளர் வழங்கி கெளரவித்திருக்கிறார்.

நேற்யை தினம் திடீரென்று - முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்கிற்கு இறுதி யாத்திரை செய்திருக்கிறார் புஷ். ஈராக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத்தான் தான் அந்த நாட்டின் மீது போர் தொடுத்ததாக கூறிய புஷ், ஈராக்கில் அமெரிக்க சேவகம் புரியும் அமெரிக்க போர் வீரர்களிடம் (வெறியர்களிடம்) அவர்களது வீரப்பிரதாபங்களை - தியாகங்களை! புகழ்ந்த புஷ் பின்னர். அந்நாட்டு பொம்மை பிரதமர் நூரி அல் மலிக்கியுடன் (Nuri al-Maடமைi) ஒரு சிறிய அறையில் மிகுந்த பாதுகாப்புக்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போதுதான் இந்த வரலாற்று புகழ் மிக்க செருப்படியை ஈராக்கின் பாக்தாத்திய தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் முன்டாசிர் அல்-சைடி (Muntazir al-Zaidi) புஷ் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து தனது காலனிகளை (shoes) கழற்றி ஜார்ஜ் புஷ்யை நோக்கி வீசினார். அந்த தாக்குதலில் தமிழ் வில்லன் நடிகர் நம்பியார் போல டபாய்ந்து (சுதாரித்து) விட்டார் புஷ். அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் இன்னொரு காலனியையும் தூக்கி வீசி அந்த இளம் (புரட்சிகர) பத்திரிகையாளர், "இதுதான் உனக்கு வழியனுப்பு முத்தம், நாய்! நாய்!" என்று கம்பீரமாக முழக்கமிட்டார். அந்த இரண்டு செருப்படிகலும் ஜார்ஜ் புஷ் மீது படாவிட்டாலும் அது அமெரிக்க மற்றும் ஈராக் கொடிகளை முத்தமிட்டுச் சென்றது.

உடனடியாக அந்த வாலிபரை நாயின் காவற்படைகள் அப்படியே அமுக்கி அலாக்காக தூக்கிச் சென்றன.

இருப்பினும் இந்த செருப்படிபட்ட மானங்கெட்ட புஷ், தொடர்ந்து உரையாற்றுகையில் அது மக்களை திசை திருப்பும் செயல் என்று கூறிவிட்டு, இதற்கெல்லாம் தான் அசரப்போவதில்லை என்று உரையாற்றினார்.

இந்த காட்சியைப் பார்த்த உலக மக்கள் ஆனந்த பெரு வெள்ளத்தில் மிதந்த காட்சியைப் பார்க்க முடிந்தது. இருக்காதா? இந்த குட்டி நாய் (ஜார்ஜ் புஷ்) தன் வீட்டில் உள்ள நாய்க்கு இந்தியா என்று செல்லமாக பெயர் வைத்ததாம்!

அது மட்டுமா? இந்த ரத்தம் குடிக்கும் ஓநாய் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும், பாலஸ்தீனத்தையும் எப்படியெல்லாம் வேட்டையாடியது? ஈராக்கில் மட்டும் 30 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அண்டை நாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். ஐந்த லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களை பலிகொண்டதோடு 15 லட்சம் ஈராக் மக்களின் உயிர்களை பறித்ததோடு ஒரு நாட்டின் தாய் மக்களை சியா, ஷன்னி, குர்து என்று பிரிவினையை தூண்டி அம்மகளுக்குள்ளேயே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிமினல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செருப்படி கொடுத்து வழியனுப்பாமல் வேறு எதைக் கொடுத்து வழியனுப்புவார்கள்?

உலக நாடுகளை தனது அரசியல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போர் என்ற பெயரில் தற்போது ஈராக்கிற்கு அடுத்து ஈரானையும், அடுத்து சிறியாவையும், பாகிஸ்தான் மீதும் இலக்கு வைத்து செயல்படும் அமெரிக்கா, கியூபா, வடகொரியா, சிறியா போன்ற நாடுகளை முரட்டு நாடுகள் என்று பெயரிட்டு உலக மக்களின் எதிரிகயாக சித்தரிப்பதோடு, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று பொய்யை - அவதூறை பரப்பி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறது.

இவர்களது ஏகாதிபத்திய நாடு பிடிக்கும் கொள்கைககளால் ஒரு புறம் மன நிறைவு கொள்ளும் இந்த போர் வெறியர்களின் நாடு தற்போது பொருளாதார திவால் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் தற்போது வீடிழந்து கடுங்குளிரில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகளை நாகரீக நாடகளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால் செருப்படிதான் அதற்கு பரிசாக கிடைக்கும்!

22 comments:

மஸ்கிட்டோ மணி said...

ரொம்ப மகிழ்ச்சி தோழர்,
காலணியை வீசியவருக்கு ஒரு சலாம்!!


செருப்பை எறிவது, கருப்புக்கொடி காட்டுவதைப்போல ஒரு போராட்ட முறைதான்.

ஏந்த ஐரோப்பிய நாட்டுக்குப்போனாலும் ,திபேத்திய மக்கள் , ஆக்கிரமிப்பு அதிகார வெறியர்களான சீன அதிபர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவர். சுவரொட்டிகள் கூட ஒட்டுவர். சீன அதிகார வெறியர்களுக்குத்தான் எதுவும் உறைக்காது.

Anonymous said...

சோவியத் யுனியன் வீழ்ந்த பின்,
ரஷ்யாவிலும்,கிழக்கு ஐரோப்பிய
நாடுகளிலும், ஸ்டாலின்,லெனின் சிலைகளை மக்கள் தகர்த்து தம் ஆத்திரத்தை வெளிப்படுத்தவில்லையா அது போல்தான் இதுவும்.சோசலிச
நாடுகளில் இது போன்ற கருத்து
சுதந்திரம் சாத்தியாமா?. நாளைகே
இதே போல் 'மரியாதை'யை யாராவது உங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு செய்தால் அதுவும் ஊடகங்கள் மூலம் உலகெங்கும் பரவும்.அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரா.சுகுமாரன் said...

ஆகா என்ன அருமை, நல்ல செருப்படி...

Anonymous said...

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக சித்தரித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியாவிலும் குள்ளநரி வேலை பார்க்கப் போகிறது அமெரிக்கா!

Anonymous said...

Bravo. A deserving farewell!

சந்திப்பு said...


சீன அதிகார வெறியர்களுக்குத்தான் எதுவும் உறைக்காது.

நன்பர் கொசுமணி ஜார்ஜ் புஷ்ஷூக்கு உரைத்திருக்குமா?

சந்திப்பு said...


சோசலிச நாடுகளில் இது போன்ற கருத்து சுதந்திரம் சாத்தியாமா?.


அனானி நன்பரே! அமெரிக்காவில் இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? செருப்படி கொடுக்கும் சுதந்திரம்

சந்திப்பு said...

நன்றி தோழர் சுகுமாறன்.

சந்திப்பு said...


பாகிஸ்தானை தீவிரவாத நாடாக சித்தரித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியாவிலும் குள்ளநரி வேலை பார்க்கப் போகிறது அமெரிக்கா!

ஆம் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ஏற்கனவே பா.ஜ.க. கார்கிலின் போது செய்ததை காங்கிரஸ் செய்யாமல் இருந்தால் சரி!

Anonymous said...

அமெரிக்காவில் தேசக் கொடியை எரித்ததே குற்றமில்லை,
கருத்து சுதந்திரம் என்று சொல்லிவிட்டார்கள்.செருப்பு
வீசுவது சிறு குற்றமாக கருதப்படும்,
அவ்வளவுதான்.அதற்காக சோசலிச
நாடுகள் போல் மரண தண்டனை அல்லது சைபீரியாவிற்கு தண்டனையாக அனுப்பமாட்டார்கள்.
புஷ் ஊடகங்களில் நையாண்டி செய்யப்படுவது அங்கு சாதாரணம்.
ஸ்டாலின்,லெனின் போல் சிலை
வைத்தல்,வழிபாடெல்லாம் அங்கு
கிடையாது.

சீனாவில்,மனித உரிமை மீறல் நடக்கிறது என்பது தவறு.அங்கு மனித உரிமையே கிடையாது, இருந்தால்தானே மீறல் என்ற
கேள்விக்கு இடம் வரும்.

மூளைசலவை செய்யப்பட்ட
'இடதுசாரி'க்கு ஒரு உதாரணமாக
உங்களைக் காட்டலாம். பாகிஸ்தான்
தீவிரவாத நாடு என்று உலகமே
சொன்னாலும் நீங்களெல்லாம்
நம்ப மாட்டீர்கள்.

சிங்கார வேலன் said...

/உலக நாடுகளை நாகரீக நாடகளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால் செருப்படிதான் அதற்கு பரிசாக கிடைக்கும்!
/

அதானே?

அநாகரிகமாக இருக்கும் நாடுகளை நாகரிகமாக்குவது எத்தனை பெரிய குற்றம்?அதுக்கு அனுமதிக்கலாமா? சரியா தான் சொல்லிருக்கீங்கப்பூ.

அமெரிக்காவை எதிர்ப்போம்.
அநாகரிகத்தை வளர்ப்போம்.
வாழ்க கம்யூனிசம்
வளர்க அநாகரிகம்.

இது எப்படி இருக்கு பிரதர்?

சந்திப்பு said...


அமெரிக்காவில் தேசக் கொடியை எரித்ததே குற்றமில்லை,
கருத்து சுதந்திரம் என்று சொல்லிவிட்டார்கள்.செருப்பு
வீசுவது சிறு குற்றமாக கருதப்படும்,
அவ்வளவுதான்.


அமெரிக்காவில் அவர்களது தேசியக் கொடியைக் கூட அவர்கள் தயாரிப்பதில்லை! அந்த அளவிற்கு அவர்கள் சுதந்திர வர்த்தக மோகம் கொண்டவர்கள். அதனால்தானோ என்னவோ அவர்கள் கொடியை எரித்தால் கூட குற்றமாக பார்ப்பதில்லை. (இதற்கு சட்டப்படியான தண்டனை உண்டு) எனவே இங்கே தாங்கள் கருத்தை திரிக்க வேண்டாம்.

ஆமாம் நீங்கள் சொல்லக்கூடிய மனித உரிமைகள் சீனாவில் இல்லை என்பதை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். அங்கே கல்வி, வேலை, வீடு ஒரு மனிதனுக்கு உத்திரவாதப்படுத்தப்படுகிறது. அவர்களது மொழி, கலாச்சார உரிமைகள் வளர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள மனிதர்களுக்கு இதுவெல்லாம் தேவைப்படாது? சோறு இல்லையென்றால் கூட அவர்களுக்கு அமெரிக்க கொடியை எரிக்கும் சுதந்திரம் தேவை?............ சூப்பரப்பு.......

எந்த சோப்பு என்று சொன்னால் மற்றவர்களும் அதைக் கொண்டு சலவை செய்துக் கொள்வார்கள்!

அஷ்ரப்கஜ்ஜாலி said...

தன் நாய்க்கு நம்ம இந்தியாவின் பெயரை வைத்து அன்று மகிழ்ந்தவர்

அந்த நாயின் பெயராலேயே அசிங்கப்பட்டு போனது சரியே.

கரிகாலன் said...

தன் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவனும் புஷ்-க்கு செருப்படி கொடுத்த வீரனை பாராட்டுவான்...

Anonymous said...

//சோறு இல்லையென்றால் கூட அவர்களுக்கு அமெரிக்க கொடியை எரிக்கும் சுதந்திரம் தேவை?............ சூப்பரப்பு....//

எலிப்பொறிக்குள் மாட்டிய எலி வெளியே வரப்போராடுமா இல்லை, பொறியில் வைத்த மசால்வடையை முதலில் தின்னுமா?


//அங்கே கல்வி, வேலை, வீடு ஒரு மனிதனுக்கு உத்திரவாதப்படுத்தப்படுகிறது. //
எல்லா நாட்டிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு , உடைவிறைவிடம், கல்லுடைக்கும் வேலைக்கு உத்தரவாதம் உண்டு.

ஒட்டுமொத்த சீனாவே ஒரு சிறைச்சாலை. நாட்டு மக்கள் அனைவரும் கைதிகள்.

அது சரி,
அப்புறம் ஏன் லட்சக்கணக்காண சீனர்கள் பிழைக்க அமெரிக்கா செல்கின்றனர்?

ஏன் ஒரு CPM தோழரின் மகன் கூட சீனாவில் குடியேறவில்லை, சில ஆயிரம் Green Card தாரிகள் உண்டு.

//அவர்களது மொழி, கலாச்சார உரிமைகள் வளர்க்கப்படுகிறது//


கலாசாரப்புரட்சி என்கிற பெயரில் மாவோ ஆடிய வெறியாட்டாத்தைப்பற்றி தெரியுமா? சிங்களர்கள், நூலகத்தை எரிப்பது போன்ற பல இன வெறி டெக்னிக்குகளை , 'கலாசாரப்புரட்சியிலிருந்து' தான் பெற்றார்கள்.

குமரன் (Kumaran) said...

//அப்போது என்னுடைய நண்பர் மிகுந்த உற்சாகமாக டி.வி.யைப் பார்த்தாயா? என்று பெருத்த மகிழ்ச்சியோடும் - ஆர்வத்தோடும் கேட்டார்? நான் என்னமோ? ஏதோ என்று பயந்து விட்டேன். ஏதாவது பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு குண்டு வைத்து விட்டார்களோ என்ற சிந்தனைதான் முதலில் எனக்குத் தோன்றியது. //

பயங்கரவாதிகள் குண்டு வைப்பது உங்கள் நண்பருக்கு (உங்களுக்கும்?) பெருத்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தரும் ஒன்றா? என்ன சொல்ல வருகிறீர்கள் இங்கே? ஒன்றும் புரியவில்லை.

சந்திப்பு said...


பயங்கரவாதிகள் குண்டு வைப்பது உங்கள் நண்பருக்கு (உங்களுக்கும்?) பெருத்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தரும் ஒன்றா? என்ன சொல்ல வருகிறீர்கள் இங்கே? ஒன்றும் புரியவில்லை.


குமரன் தவறுக்கு வருந்துகிறேன். ஒரே ஸ்டோக்கில் எழுதுவதால் வரும் விணை இது. தவறினை சரியான முறையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வேறு ஒரு நன்பரும் இதனைக் கூறினார். எனவே, அந்த தவறை தற்போது திருத்தி விட்டேன். நாட்டிக்கு கேடு விளைவிப்பவர்களுக்கு எதிராக எப்போதும் கோபம் இருக்குமே தவிர உற்சாகம் இருக்காது! இருக்கக்கூடாது! அது சரியான பார்வையும் அல்ல. பயங்கரவாதிகள் மனிதகுல விரோதிகள் (ஜார்ஜ் புஷ் உட்பட).
நன்றி குமரன்

சந்திப்பு said...


அது சரி,
அப்புறம் ஏன் லட்சக்கணக்காண சீனர்கள் பிழைக்க அமெரிக்கா செல்கின்றனர்?

ஏன் ஒரு CPM தோழரின் மகன் கூட சீனாவில் குடியேறவில்லை, சில ஆயிரம் Green Card தாரிகள் உண்டு.


அனானி நன்பரே உங்களுக்கு சீனக் காய்ச்சல் வந்திருப்பதாகத்தான் தெரிகிறது! எனவே ஒரு சீன மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வது என்பது அவர்களது உரிமை! அதை தடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? அது மனித உரிமையிலிருந்து விலக்கு பெற்றதா?

சி.பி.எம். தோழர்களின் மகன்கள் குடியேற வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை என்று அர்த்தம்! தேவைப்பட்டால் இந்த மனித குலம் எங்கும் செல்லும்!


கலாசாரப்புரட்சி என்கிற பெயரில் மாவோ ஆடிய வெறியாட்டாத்தைப்பற்றி தெரியுமா? சிங்களர்கள், நூலகத்தை எரிப்பது போன்ற பல இன வெறி டெக்னிக்குகளை , 'கலாசாரப்புரட்சியிலிருந்து' தான் பெற்றார்கள்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் தெரியாது? எனவே நீங்களே விரிவாக ஒரு பதிவைப் போடுங்களேன் தெரிந்து கொள்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அந்த நாடும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கலாச்சாரப் புரட்சி தவறு என்று மதிப்பீடு செய்துள்ளது என்பது மட்டும்.

Anonymous said...

. சபாஷ் முன்டாசிர். ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கர்களே ஏற்கவில்லை. புஷ்ஷின் குடியரசுக்கட்சி படுதோல்வி அடைந்து உள்ளது. குடியாட்சியின் இந்த முடிவிற்குப் பின்பும் மக்களின் தீர்ப்பிற்கு மாறாக ஈராக்கிற்கு செல்வது புஷ் போன்ற அராஜகனால்தான் முடியும் .சொந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் சென்றான் செருப்படி வாங்கினான்

செருப்படி ஜாக்கிரதை said...

புஷ் செருப்படி வாங்கினதெல்லாம் இருக்கட்டும், ஜெயலலிதாவைப் பற்றி நீங்க எழுதின பதிவுகளை சீக்கிரம் டெலிட் செய்து விடுங்கள், இல்லையென்றால் அதைப் படிப்பவர்கள் இப்போ நீங்க யாருடன் கூட்டணி எனக் கேட்டால் செருப்பால் அடித்தது போல இருக்கும்.

சந்திப்பு said...


செருப்படி வாங்கினதெல்லாம் இருக்கட்டும், ஜெயலலிதாவைப் பற்றி நீங்க எழுதின பதிவுகளை சீக்கிரம் டெலிட் செய்து விடுங்கள், இல்லையென்றால் அதைப் படிப்பவர்கள் இப்போ நீங்க யாருடன் கூட்டணி எனக் கேட்டால் செருப்பால் அடித்தது போல இருக்கும்.


அனானி, ஆமா ஜார்ஜ் புஷ்சை செருப்பால் அடித்தால் என்ன துடைப்பத்தால் அடித்தால் உங்களுக்கு என்ன? உங்களுக்கு ஜெயமே சரணம் என்று பாடாவிட்டால் துக்கம் பிடிக்காதோ இன்னமோ? அததான் ஜார்ஜ் புஷ்சை செருப்பால் அடித்த விவகாரர்ததை குறைத்துப் பார்க்கிறீர்கள். அந்த செருப்படி என்பது சாதாரணமானதல்ல; அது உலக ஏகாதிபத்தி எதிர்ப்பின் ஒட்டுமொத்த வடிவம்!

அது சரி தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு அது தெரியுமா? சற்று அசிங்கமாக தெரியும் பரவாயில்லை. "ஏரிக்கு பயந்தவன் சூத்தை கழுவாமல் போனானாம்" அந்த மாதிரி இருக்குது உங்க கருத்து!

செருப்படி ஜாக்கிரதை said...

அய்யா எனக்கு சத்தியமா ஒன்னும் புரியல. எதுக்கு இப்போ அந்தப் பழமொழியச் சொன்னீங்க. வேணும்னா இப்படி எடுத்துக்கவா 'கொள்கைக்கு பயந்தவன் ஜெயலலிதா கூட கூட்டணி வச்சுக்காம போனானாம்'