December 08, 2008

ராஜஸ்தானில் சரிந்தது இந்துத்துவ சாம்ராஜ்யம்!


2009 பாராளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும், சோதனைக் களமாகவும் விவரிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் உள்ள மக்களின் மனநிலையை நன்றாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பா.ஜ.க. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கனவுக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் தீர்ப்பு எதிர்கால பிரதமர் வேட்பாளர் அத்வானிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

இந்துத்துவாவின் சோதனைக் களங்களில் ஒன்றான ராஜஸ்தானில் 2003-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.பி. (பிஜீலி - அதிகாரம், சடாக் - சாலை, பாணி - தண்ணீர்) என்று வருணிக்கப்பட்ட கவர்ச்சிகரமான கோஷத்தை முன்வைத்தது. தனது வழக்கமான இந்துத்துவா கோஷத்தோடு மக்கள் பிரச்சனைகளையும் தெரிவு செய்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அதிகார வெறிபிடித்த, ஊழல் மற்றும் ஊதாரித்தனமான, தண்ணீர் கேட்ட மக்களுக்கு தண்ணீ காட்டிய அரசாக செயல்பட்டது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்வைத்து செயலாற்றியது வசுந்தரா ராஜ சிந்தியே அரசு. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான தண்ணீர் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வையும் கொண்டு வருவதற்கு லாயக்கற்றதாக இருந்தது. மேலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் நாள்தோறும் தண்ணீருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அது மட்டுமா? மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகமான குஜ்ஜாருக்கு ஆட்சிக்கு வந்தால் பழங்குடி அந்தஸ்து தருவதாக கூறி ஏமாற்றியது. இதனால் பல மாதங்கள் ராஜஸ்தானம் அமைதியை இழந்தது. இவையெல்லாம் பா.ஜ.க.வின் தெளிவற்ற வாக்கு வங்கி அரசியலால் ஏற்பட்ட அரசியல் - சமூக குழப்பங்கள்.

அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 45க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சூட்டினை நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பறித்து ஓர் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை - எளிய விவசாயிகள்தான். அதுவும் குறிப்பாக தண்ணீருக்காக போராடிய விவசாயிகளை குறி வைத்து தாக்கியது. ராஜஸ்தானத்து மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக தொடர்ச்சியாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடர்ந்தது.

அது மட்டுமா? தனத இந்துத்துவா கொள்கைகளை கல்லூரிகளிலும், கல்விச் சாலைகளிலும் கொண்டுச் சென்றது. இதற்காக ஜந்தோலியில் 2500 ஏக்கரில் கேசவ் வித்தியாபீத் விஸ்வ வித்யாலாயா என்ற சுயஉதவி பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியது. இதில் முழுக்க முழுக்க இந்துத்துவா சித்தாந்தவாதிகளை உருவாக்குவதற்காகவே பாடத் திட்டங்களை வடிவமைத்தது. இதற்காக கல்வி மந்திரி முழுக்க முழுக்க தனது அதிகார எல்லைகளை எல்லாம் மீறி செயலாற்றியது கடும் விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக மேற்கண்ட பல்கலைக் கழகத்தில் சங்பரிவாரின் கோஷமான, "அறிவியலும் கலாச்சார தேசியமும்" என்ற பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல், ஆயூர்வேதா, வேதகால அறிவியல், யோகவூம் - மருத்துவமும் போன்ற தலைப்புகளில் புதிய இந்துத்துவ பாடத் திட்டங்களை ஏற்படுத்தியது. அதாவது ராஜஸ்தான் மக்களின் மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கு தத்துவார்த்த ரீதியாகவே வேட்டு வைத்தது.

மேலும், அந்த மாநிலத்தில் தலை தூக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறியது. குறிப்பாக சாமுண்டி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் மட்டும் 140 பேர் பலியாகினர். மொத்தத்தில் ராஜஸ்தான் மாநில அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன் எதிரொலிதான் இந்துத்துவா என்பது மக்களுக்கு உதாவாத பிரிவினைவாத தத்துவம் என்பதை உணர்ந்துக் கொண்ட ராஜஸ்தான் மக்கள் அதனை ஆட்சியிலிருந்து விரட்டியுள்ளனர். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு 121 இடங்களை வென்ற பா.ஜ.க. தற்போது வெறும் 74 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்று முதல் இடத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் ராஜஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களை தன்னந்தனியாக நின்று வென்றுள்ளது. அதாவது ராஸ்தானத்து காவிக் கோட்டை இன்றைக்கு செங்கோட்டையாக - மாறுவதற்காக முதல் துவக்கமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இதன் மூலம் எதிர் வரும் காலத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சி இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் வலுவாக கால் ஊன்றுவதற்கான எதிர்பார்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக தண்டா ராம்கார்க் தொகுதியிலிருந்து தோழர் அமரா ராம் நான்காவது முறையாக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரேமா ராம் - தூத் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும், பவன் குமார் துகால் - அனுப்கார்க் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் - தொழிலாளிகள் பிரச்சனைகள் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்த தேசத்தில் மக்களை பிளவுபடுத்தி - கொலைவெறித் தாண்டவமாடும் அஜண்டாவை மட்டும் முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீழ்த்திட வேண்டும் என்றால் மதச்சார்பற்ற கட்சிகள் கொள்கை ரீதியில் ஓரணியில் திரள வேண்டும். மதச்சார்பற்ற அரசியலை - ஜனநாயக அரசியலை முன்னெடுக்க முன்வரவேண்டும். அதுதான் இந்த தேசத்தை கரை சேர்க்கும் பாதுகாப்பான படகாகும்.

10 comments:

முத்து தமிழினி said...

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா சந்திப்பு..ரெண்டு மாநிலங்களில் பி.ஜே.பி வென்றுள்ளது.இங்க சரிஞ்சதுன்னு சொன்னீங்கன்னா அங்க என்ன நிமிருதும்பீங்களா?மாநில தேர்தல் தானங்க...மத்தியில் இன்னும் அவங்க ஜெயிக்க வாய்ப்பு இருக்கு..கூட்டணியை பொறுத்து..


காங் வென்றதில் இரண்டு மாநிலம் சின்ன மாநிலங்கள்.

சந்திப்பு said...


இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா சந்திப்பு..ரெண்டு மாநிலங்களில் பி.ஜே.பி வென்றுள்ளது.இங்க சரிஞ்சதுன்னு சொன்னீங்கன்னா அங்க என்ன நிமிருதும்பீங்களா?மாநில தேர்தல் தானங்க...மத்தியில் இன்னும் அவங்க ஜெயிக்க வாய்ப்பு இருக்கு..கூட்டணியை பொறுத்து..


அன்புத் தோழர் முத்துவுக்கு வணக்கங்கள்.

என்னுடைய மேற்குறித்த கட்டுரை ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ராஜஸ்தானை முன்வைத்து மட்டுமே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எனவே, ஒட்டுமொத்த தேர்தல் குறித்த கருத்தை நான் இங்கே வெளிப்படுத்தவில்லை. மேலும், பா.ஜ.க. இரண்டு இடங்களில் வென்றது அதில் ஒன்று சட்டீஸ்கர் அதுவும் சின்ன மாநிலம்தான்.

மேலும் கூட்டணியைப் பொறுத்து பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற தங்களது நம்பிக்கை சரியானதாக எனக்குப் படவில்லை. இந்தியாவில் மதவெறியைத் தூண்டி விட்டு - மக்களை வதைக்கும் பா.ஜ.க. ஆட்சியில் வராமல் தடுப்பதற்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து தடுப்பதுதான் இன்றை கடமையாகிறது. எனவே தங்களிடம் இருந்து இத்தகைய கருத்து வந்திருப்பது வியப்பாக இருக்கிறது.

எனவேதான் இடதுசாரிகள் இந்தியாவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசை வரவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றன. இதுதான் இந்தியாவின் இன்றைய தேவை. தற்போதைய சூழலில் பா.ஜ.க. தென் மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இதர மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு ஐக்கிய முன்னணியை ஏற்படுத்தி பா.ஜ.க.வின் அகில இந்திய அரசியல் ஆதிக்கத்திற்கும் - மதவெறிக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சமூகத்தில் உள்ள சிவில் சமூகமும் இதற்கான கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது என்பதை மட்டும் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

Anonymous said...

மோதிக்கு விருந்தளித்த ஜெயுடன் கூட்டு சேருபவர்கள் இதை எழுதுவது
வேடிக்கையாக இல்லையா?. நாளைக்கே தேர்தலுக்குப் பின்
ஜெ காங்கிரசுக்கோ,பாஜகவிற்கோ
ஆதரவு தந்தால் எந்த முகத்துடன்
பிரகாஷ் கரத் தமிழ்நாட்டிற்கு வருவார்?.
'தற்போதைய சூழலில் பா.ஜ.க. தென் மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. '
கர்நாடகாவில் ஆளுவது பாஜக.
அங்கு அதற்கு பல இடங்கள் கிடைக்கும். ஆந்திராவில் பாஜக நிச்சயம் கூட்டு வைத்து ஒரிரு இடங்களை பிடிக்கும்.தேர்தலுக்குப்
பின் தெலுங்கெ தேசம் பாஜக
கூட்டணியில் சேரலாம்.
உங்கள் கட்சியால் கேரளா, மே.வங்கம், திரிபுரா தவிர
பிற மாநிலங்களில் எத்தனை
இடங்களை தனித்து நின்று பாரளுமன்றத் தேர்தலில்
பெற முடியும். பூஜ்யம்
என்பதுதானே விடை.
சிபிஎம் சுண்டைக்காய்,
பாஜக பரங்கிக் காய்- அரசியல் பலத்தில்.ஆகவே ஒவராக துள்ள
வேண்டாம்.

Anonymous said...

ஜனநாயக முற்போக்கு சக்திகள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் தோழர் சந்திப்பு. ராஜஸ்தானில் ஜெயித்திருக்கும் காங்கிரஸ் இந்துத்துவ அரசியலின் இன்னுமொரு மலிவுவிலைப் பதிப்பு. இதற்காக ஏன் சந்தோஷப்பட்டுக் கொள்கிறீர்கள்?

முதலில் உங்கள் கட்சி ஏன் கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிப் போன நிலைக்கு வந்துள்ளது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்யுங்கள்.. இப்போது தமிழ்நாட்டில் ஜெயாவின் முந்தானைக்குள் பதுங்குவதற்கு பதில் தனித்து நின்று உங்கள் பலத்தை பரிசோதித்துப் பார்க்கலாம் தானே? அட.. போனா நாலஞ்சு எம்.பி சீட் போகப்போகுது அவ்வளவு தானே? போய்ட்டு போகட்டும்னு விடுங்களேன். அப்படியே ஐந்து எம்.பி சீட் ஜெயித்தால் புரட்சியை புடிச்சாந்துடவா போறீங்க? உங்கள் பலம் என்னவென்பதையும் அது எந்தெந்த ஏரியாக்களில் எந்த வர்க்கப்பின்புலம் உள்ள மக்களிடம் இருந்து வருகிறது என்பதையும் அவதானிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள்.. மேலும் நீங்களும் நக்சலிச அமைப்புகளும் அமர்ந்து பேசி உங்களுக்குள் இருக்கும் பிளவுகளை சரி செய்ய முயற்சி செய்யும் வழிவகைகளையும் யோசியுங்கள்.. தமிழ்நாட்டில் பு.ஜ குழு தன்னளவில் ஒரு சிறப்பான பணியை செய்து வருகிறார்கள். துப்பாக்கி தூக்காமல் மக்கள்ளோடு மக்களாக நிற்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கும் வீம்பு உங்களுக்கும் வீம்பு. இதென்ன இடது சக்திகளுக்கு ஏற்பட்ட சாபக்கேடோ. இப்படி நீங்கள் பிளவுபட்டு நிற்பது உழைக்கும் வர்க்கத்துக்கு உகந்ததல்ல.

-பார்வையாளன்

subbu said...

ராஜஸ்தான் தேர்தல் முடிவு குறித்து தங்கள் கருத்துக்கள் சரியானவை. மட்டுமல்லாமல் ஐந்து மாநிலங்களில் தோற்றது பாஜகவின் மதவெறியின் அடிப்படையில் மக்களைத் திரட்டும் - கூறுபோடும் - அரசியல் . அது தெளிவாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் காங்கிரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தாண்டியும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த பிஜேபி முயன்றதையும் நிராகரித்துள்ளார்கள்.

சந்திப்பு said...


மோதிக்கு விருந்தளித்த ஜெயுடன் கூட்டு சேருபவர்கள் இதை எழுதுவது
வேடிக்கையாக இல்லையா?.


அனானி நன்பரே வணக்கம்.

மோடி சென்னை வந்தபோது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து கைதானவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் - சி.பி.ஐ.(எம்) நான் உட்பட. எனவே மோடியை மட்டுமல்ல இந்துத்துவாவின் அனைத்து பாசிசத்தையும் எதிர்த்து தொடர்ச்சியாக போராடுபவர்கள் - தற்போதைய தேர்தல் உடன்பாடு கூட இன்னொரு மோடி தமிழகத்தில் தோன்றாமல் இருப்பதற்காகத்தான்.

தமிழகத்தில் அதிமுக மட்டுமா? தி.மு.க., பா.ம.க., மதிமுக என அனைத்து திராவிட இயக்கங்களும் பா.ஜ.க.வுடன் ஆலிங்கனம் செய்தவைதான். ஆனால் பிறகு அவர்கள் வெளியே வந்ததையொட்டி மேற்கண்ட இயக்கங்களுடன் தேர்தல் உறவை வைத்துக் கொண்டது சி.பி.எம். எதற்காக என்றால் அதேர பா.ஜ.க. எதிர்ப்புதான்.

எனவே, தற்போது அதிமுக அதே மோடியின் தத்துவத்தை எதிர்க்க முன்வந்துள்ளார். இந்துத்துவா ஆட்சிக்கு வருவதை - தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் ஆதாயம் அடைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இதற்காக அவர்களுடன் தேர்தல் உறவு வைத்துள்ளோம். இது சரியான நடவடிக்கையே. நான் மட்டும் சுத்தம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒன்றும் விளையப்போவதில்லை நன்பரே.

உங்களது தேர்தல் ஆரூடங்கள் வெறும் கற்பனையானவைதான். அது மட்டுமல்ல... நாங்கள் சுண்டக்காய்தான். ஆனால் ஒரு பரங்கிக் காய் ஆட்சிக்கு வருவதை தடுக்கக்கூடிய வல்லமைப் படைத்த சுண்டக்காய் என்பதை மறக்க வேண்டாம். அது சரி பா.ஜ.க. குறித்து - சங்பரிவார் குறித்து தங்கள் பார்வை என்ன?

சந்திப்பு said...


ஜனநாயக முற்போக்கு சக்திகள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் தோழர் சந்திப்பு.

மேற்குறித்த தங்களது ஆழமான கருத்திற்கு எதிராக உள்ளது தங்களது மற்ற கருத்துக்கள்.

இந்துத்துவ கொலைவெறி அஜண்டாவை ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களில் பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்லும் போது, தீவிரமாக செயலாற்றும் போது ஜனநயாக சக்திகள் வளரவில்லை. எனவே, காங்கிரசை விட பா.ஜ.க. இருந்தாலும் பரவாயில்லை என்ற தங்களது நிலைபாடு பாசிசத்தின் அபாயத்தை உணர்வதாக தெரியவில்லை.


முதலில் உங்கள் கட்சி ஏன் கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிப் போன நிலைக்கு வந்துள்ளது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்யுங்கள்..


அப்படியா? ................


தமிழ்நாட்டில் ஜெயாவின் முந்தானைக்குள் பதுங்குவதற்கு பதில் தனித்து நின்று உங்கள் பலத்தை பரிசோதித்துப் பார்க்கலாம் தானே?


இதைத்தான் குறுங்குழு வாதம் என்று அழைக்கின்றனர். மக்கள் நலனை விட தனது சக்தியை பெரியதாக கற்பனை செய்துக் கொள்வது. அதைத்தான் உங்களது பு.ஜ. குழு செய்து வருகிறது.


போய்ட்டு போகட்டும்னு விடுங்களேன். அப்படியே ஐந்து எம்.பி சீட் ஜெயித்தால் புரட்சியை புடிச்சாந்துடவா போறீங்க?


புரட்சியை எல்லாம் புடிச்சிக்கிட்டு வரமுடியாது. அது கற்பனையில் மட்டுமே நிகழும்.


உங்கள் பலம் என்னவென்பதையும் அது எந்தெந்த ஏரியாக்களில் எந்த வர்க்கப்பின்புலம் உள்ள மக்களிடம் இருந்து வருகிறது என்பதையும் அவதானிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள்..


எங்கள் பலத்தை பற்றி கவலைப்படும் அனானி நன்பரே. உங்களது பலம் என்ன என்பதை சற்று மதிப்பிடுங்களேன்.


மேலும் நீங்களும் நக்சலிச அமைப்புகளும் அமர்ந்து பேசி உங்களுக்குள் இருக்கும் பிளவுகளை சரி செய்ய முயற்சி செய்யும் வழிவகைகளையும் யோசியுங்கள்..


அது சரி! இந்த யோசனையை அந்த நன்பர்களிடமும் பரிந்துரைக்கலாமா? அவர்களது நேச நண்பர்கள் பா.ஜ.க. மற்றும் மமதா கும்பல்தானே! அவர்களது பிரதான வர்க்க எதிரியோ சி.பி.எம். தானே?


தமிழ்நாட்டில் பு.ஜ குழு தன்னளவில் ஒரு சிறப்பான பணியை செய்து வருகிறார்கள். துப்பாக்கி தூக்காமல் மக்கள்ளோடு மக்களாக நிற்கிறார்கள்..


அது ஒரு குழுவின் நடவடிக்கை அப்படித்தான் இருக்க முடியும். துப்பாக்கியைப் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள். ஆனால் அதை துடைப்பதற்கு கூட அவர்களதுக்கு தெரியாது? ஆனால் தங்களை நக்சலிசவாதிகளாக அழைத்துக் கொள்வார்கள்.... இது குறித்து நிறைய எழுதியாகி விட்டது...

தங்களது கருத்துக்கு நன்றிகள்

Anonymous said...

BJP cannot come up in Tamilnadu because all the hindutva votes are grabed by Jaya. So jaya is a REAL BJP in disguise in tamilnadu.. You like jaya type hinduvta well.. PURATCHI is nearing ha ha ha

மஸ்கிட்டோ மணி said...

//BJP cannot come up in Tamilnadu because all the hindutva votes are grabed by Jaya. So jaya is a REAL BJP in disguise in tamilnadu.. You like jaya type hinduvta well.. PURATCHI is nearing ha ha ha//

அனானி, தோழர் சந்திப்பு புரட்சியைப் பத்தி அப்பால பாத்துப்பார்.

இப்போதைக்கு புரட்சித்தலைவி புரட்சியை விட முக்கியமானவர்.

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said...

200 க்கு 101 வாங்கினால் தான் மெஜாரிட்டி.

99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி. 74 இடங்களில் பா.ஜ.க வெற்றி.

சதவிகித வாக்குகள் எத்தனை என்பதைப் பார்த்தாலும் இரண்டு கட்சிகளும் சமமாகத்தான் உள்ளன.

BJP is the opposition party. The defeat is attributed mainly due to bad candidate selection and rebel candidates.

So, there is strong hindutva in Rajasthan which will only sit in opposition for the next 5 years. But, there is no Communists in Rajasthan. Then, Why the fu#k are you rejoicing ?