உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கடந்த 60 ஆண்டு காலமாக தேசத்திற்கே சவாலாக விளங்கும் பிரச்சனைகள் எழாமல் இருப்பதும் (காஷ்மீர் விதிவிலக்கு), பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருவதும், பொதுவாக அமைதியான முறையில் நமது மக்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளதும் நமது நாட்டின் பலத்திற்கு சான்றாகும்.
மேலும் இந்தியாவை உலக மக்கள் பார்ப்பது காந்தியின் கண்ணாடி வழியாகத்தான். அதாவது இந்திய தேசம் பெளத்த தத்துவத்தை மட்டும் உலகிற்கு வழங்கவில்லை. அது அகிம்சையை போதித்த காந்திய போராட்ட முறைகளையும் உலகிற்கு அளித்துள்ளது. (இது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்)பல இனங்கள், மொழிகள், மாநிலங்கள், சாதிகள் என பிரிந்திருந்தாலும் இந்திய தேசம் ஒரே மனிதனாக எழுந்து நிற்பது இன்றைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய நாடு சிறிது சிறிதாக பயங்கரவாதிகளின் பிடிக்குள் செல்கிறதோ என்ற அச்சம் மக்கள் மனதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாதிகள் மும்பை நகரத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் போன்ற பயங்கரவமான - மிருகத்தனமான - இரத்தவெறிப்பிடித்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதுவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் இயங்கக் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான தாஜ், ஒபராய்... போன்ற ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தங்களது கைக்குள் கொண்டு வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
அது மட்டுமின்றி மும்பை இரயில்வே நிலையத்திற்குள் சென்று அங்கும் அப்பாவி பயணிகளை சுட்டுத் தள்ளியுள்ளனர். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்திய மக்கள் மீது மாபெரும் மறைமுகப்போரை இந்த பயங்கரவாதிகள் தொடுத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. மேலும் இந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்த இடத்திற்கு போலீஸ் ஜீப்பிலேயே தப்பியுள்ளதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இதுபோல் 7 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளது. அதுவும் பயங்கரவாதிகள் உள்நாட்டிலிருந்தும் - வெளிநாட்டிலிருந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டு திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதை அவ்வப்போது நமது காவல்துறை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில்தான் வி.எச்.பி.ஐயச் சார்ந்த இந்து பயங்கரவாத அமைப்பு எப்படி மலேகானில் குண்டு வைத்தது என்பதை மகாராஷ்டிரா போலீஸ் வெளிப்படுத்தியது. அதுவும் இந்த பயங்கரவாதிகள் சாதுவின் வடிவமாக காட்சியளித்து நாட்டை ரணகளமாக்கியவர்கள் என்பதையும் அம்பலப்படுத்தியது. அத்துடன் இந்த இந்து பயங்கரவாதிகளுக்கு துணையாக இராணுவத்தில் உள்ளவர்கள் எப்படி ஒத்துழைத்தார்கள் என்பதையும், இந்து பயங்கரவாதிகளின் மிலிட்டரி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களின் செயல்களையும் சமீபத்தில்தான் நமது மீடியாக்களும் - அரசும் வெளிப்படுத்தி வந்தது. இதுவரை எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது உள்நாட்டிலேயே காவி உடையில் பயங்கரவாதிகள் திரிவதை பார்க்க முடிந்தது. இந்த விசாரணைகளை இந்திய மகக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் தற்போதைய மும்பை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாதம் இந்திய மண்ணில் வேறுன்றுவதற்கான அரசியல் காரணங்களையும் இந்திய அரசு ஆராய வேண்டும். சகிப்புத் தன்மையில்லாமல் - இந்திய மக்களிடையே மதக் காழ்ப்புணர்சிகளை தூண்டி விடும் மதவாத அமைப்புகள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிப் பட்டியலில் இருந்து தப்பியுள்ள அத்வானி உட்பட, குஜராத்தில் நடைபெற்ற மதப்பாசிச வன்முறைச் செயல்களுக்கு மோடி உட்பட தொடர்புள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய நாட்டில் சிறுபான்மை - பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்வதை உத்திரவாதப்படுத்துவது முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் ஏகாதிபத்திய சதியுடன் - வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடத்தும் இதுபோன்ற வெறியாட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். குறிப்பாக நமது உளவுத்துறை இன்னும் பலப்படுத்த வேண்டும். தற்போதைய மும்பை தாக்குதலில் உளவுத்துறை இப்படி அப்பாவித்தனமாக செயல்பட்டு நமது மக்கள் பலி கொள்வதற்கு காரணமாகி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய காங்கிரஸ் அரசு இதில் அரசியல் சித்து விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபடாமல் நமது தேசத்தில் பாதுகாப்பை - குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பை நாட வேண்டும். இது குறித்து தேசிய அளவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையில் முடிவெடுத்து நேர்மையாக செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். ஆனால் பயங்கரவாதம் என்பது உலக மக்களின் முதல் எதிரி! அது எந்த வடிவில் வந்தாலும் அதனை முறியடிக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை!
9 comments:
good one.
AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,
THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.
IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.
THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .
NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.
THESE BEASTS SHOULD BE EXECUTED EVEN THEY BEAR MUSLIM NAMES / MUSLIMS
WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.
I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்
'குறிப்பாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிப் பட்டியலில் இருந்து தப்பியுள்ள அத்வானி உட்பட, குஜராத்தில் நடைபெற்ற மதப்பாசிச வன்முறைச் செயல்களுக்கு மோடி உட்பட தொடர்புள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
For you anything and everything is
an excuse to criticise BJP.
Read the news.The militants are
demanding release of Indian Mujaideens and want muslims
in india not be to harmed.
So who are they?Whom they
are for?.Islamic terrorism
is a reality.You refuse to
accept it. Instead you
always find fault with
BJP.
Terrorism should be treated
with iron hand and steps to
eliminate its roots should
be taken.Dont go on blaming
imperialism for terrorism as
well.You the stupid left
have no sense.You want
to turn this terrorist
attack for your petty
politics.Are you not
ashamed to recite
your anti-BJP and
anti-modi views now
also.Shame on you.
marxistindia news from the cpi(m)
November 27, 2008
Press Statement
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
On Terrorist Strike in Mumbai
The Polit Bureau of the CPI(M) expresses its deep shock and outrage at the multiple attacks in Mumbai city which have led to the loss of more than a hundred lives and injuries to many. These attacks targeting a railway station, hotels and other places by groups of heavily armed men accompanied by explosions, bear the hallmark of a carefully planned terrorist strike.
The country expects the government and the security agencies to uncover the full scope of this nefarious attack and the forces behind it. Given the recurring and widespread pattern of terrorist attacks occurring in the country, the Central Government has to assure the people that concerted efforts are being made to tackle the problem.
The immediate need is for the people to face this grim situation with fortitude and foil any sectarian attempts to exploit the situation. The entire country expresses its solidarity with the people of Mumbai in this difficult situation.
The Polit Bureau conveys its heartfelt sympathy to all those who have lost their loved ones including the police personnel who have died. The loss of Hemant Karkare, the brave officer who was heading the Maharashtra Anti Terrorism Squad and other police officials is especially grievous.
eom
நன்றி சர்வேசன்
NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.
மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் வாஞ்ஜுர். பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஆனால் இந்த சிந்தனை அத்வானிக்கும் - சங்பரிவாரத்திற்கும் இல்லாதது வேடிக்கையானது. அவர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளை மட்டுமே கண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். ஆனால் இந்து பயங்கரவாதி பிரக்யாவை கைது செய்ததை கொடுமைப்படுத்துவதாக பாசாங்கு செய்கின்றனர். இதுதான் இவர்களது பயங்கரவாத எதிர்ப்பின் முகமும் - முதுகும்.
Whom they
are for?.Islamic terrorism
is a reality.You refuse to
accept it. Instead you
always find fault with
BJP.
அனானி நன்பரே நீங்கள் சொல்வது போல் அவர்கள் இசுலாமிய அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் முன்னால் அம்பலப்படுத்த வேண்டும். இதனை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் எப்போதும் பா.ஜ.க. மீது குற்றம் சுமத்துவதாக தாங்கள் வருத்தப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?
பா.ஜ.க. என்ன இந்தியாவில் புல்லை தின்னும் பசு போலவா செயல்படுகிறது. அது நரமாமிச வேட்டையாடும் புலி - சிங்கம் போன்ற மிருகத்தை ஒத்த செயல்பாட்டை அல்லவா செய்து கொண்டிருக்கிறது.
பாபார் மசூதி இடிப்பின் போது 2000 இசுலாமியர்கள் வேட்டையாடப்பட்டனர்.
நரேந்திர மோடியின் குஜராத்தில் 2000 இசுலாமியர்கள் வேட்டையாடப்பட்டனர்.
தற்போது காவியுடை பயங்கரவாதிகள் மலேகனின் குண்டு வைத்து விட்டு இசுலாமியர்கள் மீது போட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதேபோல்தான் தமிழகத்தில் தென்காசியில் இவர்களே ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு குண்டு வைத்து விட்டு - இசுலாமியர்கள் மீது சுமத்தினார்கள். ஆனால் உண்மை என்ன? எனவே, ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவாரம் என்பது இந்திய மக்களின் எதிரி. அது பாசிசத்தை இந்திய மண்ணில் விதைக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக தினமும் ஓயாது செயலாற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் ஒரிசாவில் கிறித்துவர்களுக்கு எதிரான தாக்குதல்.... உண்மை இப்படியிருக்கும் போது நீங்கள் அங்கிருந்து வெளியேறுங்கள் அதுதான் நீங்கள் இந்தியாவிற்கு செய்யும் முதல் தொண்டாக இருக்கும்.
சபாஷ் சந்திப்பு, மதச்சார்பின்மை பல்லிளிக்கிறது. ஒரு மாலேகனில் நடைந்த குண்டு வெடிப்புடன் ஒரு இந்துத்வா அமைப்பு தொடர்புடயது என்றவுடன் ""இந்து பயங்கரவாத அமைப்பு எப்படி மலேகானில் குண்டு வைத்தது என்பதை மகாராஷ்டிரா போலீஸ் வெளிப்படுத்தியது"" என்று நீட்டி முழக்கி எழுதத் துணியும் உங்களால் ., இந்த நாட்டில் பெறுவாரியான மக்கள் பின்பற்றும் மதத்தின் மீதே களங்கம் பூச வாய் கூசாமல் முன்வரும் உங்களால், பதிவில் ஒரு இடத்தில் கூட இஸ்லாமிய / முஸ்லிம் பயங்கரவாதம் என்று எந்த நிகழ்ச்சியும் குறிப்பிடப்படவில்லை.அப்போது மட்டும் எந்த மதமானாலும் கண்டிக்கப் பட வேண்டும் என்று பொத்தம் பொதுவில் "பொது ஜல்லி " அடிக்கக் கிளம்பிவிடுகிறீர்கள். உண்மையில் இந்த தீவிரவாதிகளை விட இப்படி ஓட்டு அரசியலுக்காக ஓர வஞ்சனையுடன் செயல்படும் உங்களைப் போன்றவர்கள்தான் மென்மேலும் இந்தச் செயல்கள் பெருகக் காரணம்.
அமைதியாக இருந்த நாட்டில் தீவிரவாதம் வளர்வதே உங்களைப் போன்ற ஓட்டுப் பொறுக்கிகளால்தான்.
எப்போதும் பெருவாரியானவர்களை மட்டும் குறை சொல்லி வாழும் உங்களைப் போன்றவர்களின் "anti establishment, anti majority" புத்தியில் கொள்ளி வைக்க வேண்டும்.
அனானி நன்பரே! இந்த பதிவு எழுதப்படும் நிமிடம் வரை இந்த சம்பவத்திற்கான பொறுப்பை யாரும் ஏற்கவில்லை. தற்போதுதான் "டெக்கான் முஜாகீதீன்" என்ற அமைப்பு தாங்கள் செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளதாக மீடியாக்களில் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகளுக்கு பிறகே குறிப்பு அமைப்பு எந்த பின்னணியுடையது என்பதை நாம் விமர்சிக்க முடியும். ஆனால் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும், எந்த அமைப்பு காரணமாக இருந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். மேலும், பயங்கரவாதத்தில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற வித்தியாசமே இல்லை. அது எந்த முனையில் இருந்து வந்தாலும் மக்களைக் கொல்லுவதற்குதான் பிறப்பெடுத்துள்ளது. அதுவும் அப்பாவி மக்களை கொல்லுவதற்குதான் பிறப்பெடுத்துள்ளது. மேலும், பா.ஜ.க. தொடர்புள்ள பயங்கரவாத சம்பங்கள் குறித்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அவையெல்லாம் சரியென்று வாதிடப் போகிறீர்களா அத்வானியைப் போல.... விளக்கம். நன்பரே.
Post a Comment