April 25, 2008

ம.க.இ.க. காலனிய சோசலிசமும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை (CPI-ML [SOC]) நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தனது கும்பலை திருப்திப்படுத்துவதற்காக பாசிச ஹிட்லரை மிஞ்சும் அளவிற்கு கோயபல்ஸ் பாணியில் சி.பி.எம்.க்கு எதிராக தனது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது. குறிப்பாக தாங்களே இந்தியாவில் சோசலிசத்தை கொண்டுவரப் போகிறோம் என்று குத்தாட்டம் போடுகிறது.
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தற்போதைய கட்டம் சோசலிசம் அல்ல என்று தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததை தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கப்போகிறவனுக்கு கிடைத்த சிறு மரக்கட்டையைப் போன்று கெட்டியாக பற்றிக் கொண்டது ம.க.இ.க. மறைமுகத் தலைமை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டதாக ஓலமிடுகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ மீடியாக்கள் இந்திய உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சி.பி.எம்.க்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதற்கும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டிக் கொள்வதில் விந்தையேதும் இல்லை!

இருப்பினும் ம.க.இ.க. மறைமுகத் தலைமையின் சோசலிசத் திட்டம்தான் என்ன? என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அதை கொஞ்சம் இங்கே பார்ப்போம். எஸ்.ஓ.சி. கட்சித் திட்டம் இந்தியாவில் அவர்கள் மேற்கொள்ளப் போவதாக கூறும் புரட்சிக்கான திட்டம் குறித்து 46வது பிரிவு கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.

"இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டம் அரை நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய சமுதாயத்தை ஒழித்து, சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கு இடைப்பட்ட, மாறிக் கொண்டிருக்கும் ஒரு கட்டமாகும். அதாவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் கட்டமாகும். புதிய ஜனநாயக புரட்சியானது சோசலிசப் புரட்சிக்கான இன்றியமையாத முன் தயாரிப்பாகும். சோசலிசப் புரட்சியானது புதிய ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க இயலாத பின்விளைவாகும். புதிய ஜனநாயகப் புரட்சியை முதலில் நிறைவேற்றுவதின் மூலம் மட்டுமே நமது நாடு ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டத்திற்கு முன்னேற முடியும். "

மேற்கண்ட நிர்ணயிப்பின் மூலம் எஸ்.ஓ.சி. கும்பல் செய்யக்கூடிய புரட்சி எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது, அரை அடிமை நாடாக இருக்கக்கூடிய இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது. மேலும் அரை நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுதலை கொடுப்பது! இதைதான் இவர்கள் புதிய ஜனநாயக புரட்சி என்று சொல்லுகின்றனர். இதன் மூலம் இவர்கள் வெப்படையாக சொல்லுவது என்ன? இவர்கள் செய்யப்போவது சோசலிசப் புரட்சியல்ல என்பதுதானே! அப்புறம் எப்படி இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டது என்று கோயபல்ஸ் போன்று கதைப்பார்கள்! இதனை ஏகாதிபத்திய ஆதரவு சேவை என்று அழைக்காமல் எப்படி அழைப்பது! அல்லது மார்க்சியத்தை திரித்த இந்த திரிபுவாதிகள் தற்போது அவர்களது திட்டத்தையும் கூட திரிக்கத் துணிந்து விட்டனர் என்றுதானே அர்த்தம்.

இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் கூற வருவது என்னத் தெரியுமா? தற்போதைய ஆளும் வர்க்கமான பெரு முதலாளித்துவத்தை மேலும் பெருக்க வைப்பதற்கான புரட்சியையே இவர்கள் நடத்தப் போகிறார்கள். அதாவது முழுமையான முதலாளித்துவ புரட்சி. ஏனெனில் இவர்களது நிர்ணயிப்பின்படி தற்போது அரை காலனியும் - அரை நிலப்பிரபுவுமே ஆளும் வர்க்கமாக இருப்பதாக சித்தரிக்கின்றனர். எனவே இந்த பிற்போக்கு வர்க்கத்தை வீழ்த்துவதன் மூலம் முழுமையான முதலாளித்துவத்தையே இவர்கள் கட்டத் துடித்துக் கொள்கிறார்கள். இதுதான் இவர்களது மறைமுக சோசலிச முகம்!

மொத்தத்தில் இந்த ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் திரிபுவாதத்தையே தனது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது என்ற முடிவுக்கு வரலாம். இது கிடக்கட்டும்! இவர்கள் சோசலிசத்தை எப்போது கொண்டு வருவார்கள் என்பதற்கான விளக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள் அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.

ம.க.இ.க. மறைமுக கட்சித் திட்டம் பிரிவு 45-இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதையும் ஆழமாக படியுங்கள்

"...புதிய ஜனநாயகப் புரட்சி என்ற முதற்கட்டம் முழுமைபெற்ற உடனேயே இந்தியப் புரட்சியானது எத்தகைய இடைவெளியுமின்றி சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு செல்கிறது. சோசலிசப் புரட்சி எவ்வளவு துரிதமாக முழுமை பெறும் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், நமது பலத்தின் அளவையும், உணர்வு பூர்வமாக, அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமைந்த இந்திய உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட அமைப்பின் பலத்தையும், உலக சோசலிச இயக்கத்தின் பலத்தையும் பொறுத்திருக்கும். கட்சி ஒரு தங்கு தடையற்ற புரட்சிக்காக நிற்கிறது. நமது கட்சியின் இறுதி நோக்கம் முதலாவதாக ஒரு சோசலிச சமுதாயத்தையும் பின்னர் ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தையும் அதாவது வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற, போர்களற்ற சமுதாயத்தையும் நிறுவுவதாகும். "

அதவாது இந்தியாவில் இவர்கள் கூறும் திட்டத்தின் அடிப்படையில் சோசலிசம் எப்போது வரும் என்றால், 1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.2. இந்திய உழைக்கும் மக்களிடையே ஐக்கியப்பட்ட பலம் அதிகரிக்க வேண்டும்.3. உலக சோசலிச இயக்கம் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.இந்த மூன்று அம்சங்களும் இணைந்திருந்தால்தான் சோசலிச புரட்சி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். இவை எப்போது சாத்தியம்! அதாவது, இன்றைக்கு உலகளவில் முன்னுக்கு வந்திருக்கும் முரண்பாடுகளில் பிரதானமாக இருப்பது சோசலிசத்திற்கும் - ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடே. எனவே ஏகாதிபத்தியத்தை பின்னுக்குத் தள்ளும் வரையில் இந்த முரண்பாடு நீடித்துக் கொண்டே இருக்கும். மேலும் இவர்களது வாதப்படி ரஷ்யா (தற்போது இல்லை) அது சமூக ஏகாதிபத்தியமாக மாறி விட்டது. சீனாவை இவர்கள் முழு சோசலிச நாடாக ஏற்கவில்லை. அப்புறம் மிச்சம் மீதி இருப்பத குட்டி குட்டி நாடுகளாக கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் போன்றவைகளே... இந்த நிலையில் உலக சோசலிச பலம் எவ்வாறு அதிகரிக்கும் என்று தெரியவில்லை? அல்லது இந்தியாவிற்கு முன்னால் உலகில் வேறு பல நாடுகளில் சோசலிசம் வரும் என்ற கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே இந்த ம.க.இ.க. வின் சோசலிசம் என்பது வெறும் கற்பனாவாத சோசலிசமே! என்ற முடிவுக்கு வரலாம்.

உண்மை இவ்வாறிருக்க, சி.பி.எம்.க்கு எதிரான இவர்களது கோபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் இவர்கள் பெரும் திருப்தி அடைவதாக மட்டுமே தெரிகிறது. நாம் இவர்களது கட்சித் திட்டம் தேய்ந்து போன - நொண்டிக் குதிரை என்று விமர்சித்தால்... நந்திகிராம் - சிங்கூர் என்று பாட்டு பாடுகிறார்கள்.

இது குறித்து ம.க.இ.க. சிந்தனைப் புலி நண்பர் அசுரன் எழுதியுள்ளதை கவனியுங்கள்.

நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

நந்திகிராம் - சிங்கூர் குறித்து ஏற்கனவே விரிவான பதிவுகள் சந்திப்பில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து எங்களது நிலைபாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், மூழ்கப் போகும் ஓட்டைப்படகில் பயணம் செய்யும் ம.க.இ.க. இன்னமும் அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் சுருக்கமாக இரண்டு - மூன்று கேள்விகளை மட்டும் எழுப்ப விழைகிறேன்.

ம.க.இ.க. மறைமுகத் திட்டப்படி இந்தியா ஒரு அரை காலனி நாடு, அதுவும் நான்கு நாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு. இந்த காலனியாதிக்கத்தை தூக்கியெறிவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமைப்புதான் ம.க.இ.க.! இவர்களது வாதப்படியே வைத்துக் கொண்டால், ஒரு காலனி நாட்டிற்குள் - அதுவும் மாநிலத்திற்குள் சோசலிசம் இருக்க முடியுமா? மேற்குவங்கம், கேரளா, திரிபுரா இந்த மூன்று மாநிலங்களில் ஏதோ சி.பி.எம். தலைமையில் சோசலிச ஆட்சி நடைபெறுவதாக அறிவித்தது போல் ஒப்பாரி வைப்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட திட்டத்திற்கு எதிர்வினையாக அமையவில்லையா?

மேற்குவங்கத்தில் 25 ஆண்டு காலம் முதல்வர் பொறுப்பில் இருந்த தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான். எந்தவிதமான நிதியதிகாரமோ அல்லது தொழில் வளர்ச்சியை சுயேச்சையாக ஏற்படுத்துவதற்கான அதிகாரமே இல்லாத இந்திய அரசின் முதலாளித்துவ அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகளே மாநிலங்கள். இந்த மாநில அரசில் பங்கேற்பது என்பது முதலாளித்துவ திட்டங்களுக்கு உட்பட்டு மிகச் சிறிய நன்மைகளை மட்டுமே இந்த மக்களுக்கு செய்ய முடியும்.

அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி மேற்குவங்கம், கேரளா, திரிபுராவில் நாட்டிற்கே முன்னுதாரணமாக 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்கள் பயனடையும் விதத்தில் நில விநியோகம் செய்து பெரும் பகுதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது.அதேபோல் பஞ்சாயத்தில் 50 சதவிகித நிதியை ஒதுக்கி - அதிக அதிகாரங்களை வழங்கியதோடு, தலித் மற்றும் பெண்களின் அரசியல் ரீதியான பங்கேற்பை ஊக்குவித்துள்ளது.கல்வி ரீதியாகவும், சிறு தொழில்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கவும் நாட்டிலேயே முன்னணியில் நிற்கிறது.இந்தப் வரிசையில் தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாகவே சிங்கூர் - நந்திகிராம் திட்டமிடல் முன்னுக்கு வந்தது. படித்து முன்னேறியுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகளை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மாநில அரசு என்ற முறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த மாக்கான்கள்... இல்லை... இல்லை இவர்கள் கடப்பாரையோடும், கலப்பையோடும்தான் இருக்க வேண்டும் என்று உறுமுகிறார்கள். இப்படித்தான் இவர்கள் உற்பத்தி சக்தியை வளர்த்தெடுப்பார்கள் போலும்...

எனவே, ம.க.இ.க. தலைமை இந்திய அரசைப் பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கோளாறு... முதலாளித்துவ சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்பதில் போய் முடிந்துள்ளது.

இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிறைவேற்ற உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சியில், ஏகாபத்தியத்துடன் உறவு கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்புரக்களை ஒழிப்பதுதான் முதற் கடமையாக கொண்டுள்ளது. இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது கட்டத்தில் இந்தியா நின்றுள்ளது. மூன்றாவது கட்டத்தில்தான் சோசலிசத்தை நோக்கிய பயணம் துவங்கும். இறுதிக் கட்டமே கம்யூனிசம்.

இந்த உண்மையின் அடிப்படையிலேயே தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவும் தங்களது மாநிலத்தில் தனியார் மூலதனத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தற்போதைய கட்டம் சோசலிசத்திற்கானது அல்ல என்று தெளிவாக உரைத்தார்கள். இதனை மாக்கான்கள் திரித்து தனது ஏகாதிபத்திய சேவையை நன்றாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கம் ஊளையிடுபவர்கள் பின்னால் ஒரு போதும் இருந்தது கிடையாது!
ம.க.இ.க. தொடர்பான முந்தைய விவாதங்களின் பட்டியல்

33 comments:

Anonymous said...

//சோசலிசப் புரட்சியானது புதிய ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க இயலாத பின்விளைவாகும். //

What is the meaning of this?

They say Socialist Revolution will be the effect of New Democratic revolution. This is based on their understanding that India is not a Capitalist country. Hence it needs a revolution to consumate the capitalist developement in India.

Nowhere they deny this era is socialist era, as Jyothi basu did.

Indeed they clearly say it is because it is socialist era the kind of Capitalist revolution become New democratic revolution. But you deny the truth that present is not socialist era. By this you deny Lenin altogather.

Unfortunately the Nationial(do you know the meaning of this Santhipu?) capitalist are not in strong position to do capitalist revolution in India like countries, Hence it is in the hands of Proletarians.

Their understanding shows no contradiction.

Whereas, You say India is a capitalist country(if u deny this you should rue for your pervious article supporting parliamentary participation. Because lenin supports participating only in Capitalist parliament).
If that is true then India needs Socialist revolution not something In between as you believe.

Thus Yours is utterly contradicting view. ;-)

If you happen to read Lenin carefully you may come to know even the Russian revolution having some of the characters of New democratic revolution. And Lenin himself gave base for this New democratic revolution thesis.

Anonymous said...

"""
சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு செல்கிறது. சோசலிசப் புரட்சி எவ்வளவு துரிதமாக முழுமை பெறும் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், நமது பலத்தின் அளவையும், உணர்வு பூர்வமாக, அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமைந்த இந்திய உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட அமைப்பின் பலத்தையும், உலக சோசலிச இயக்கத்தின் பலத்தையும் பொறுத்திருக்கும்
""

They say Socialist revolution can be considered as consummated only when the above said condition are presence. They didn't say Socialist revolution will Succeed only when the above said conditions are Presence as u try to portray.

Kinds of yours never understand that Single country cannot have communist soceity. That means single country cannot have a Consummated Socialist society.

Because if Socialism is Consummated(not success) that means it is the starting of Communism. Socialism developing towards Consummation is ongoing process. That is what they are explaining there.

But the topic your twisting under the subject "Success of Socialism" is different one.

The success or Failure of Socilst revolution depends on three basic things(if you read marxism properly then you may know this).

# Class Struggle
# Struggle for உற்பத்தி
# Struggle for Scientific developement

Russia failed in Class struggle thus failed Socialist revolution.

The above quoted SOCs observation talks about the physical condition from which we can securely conclude that socialist revolution is consummated.

You like to twist Lenin as well as revolutionaries in a hurry to safeguard your stand :-) But in vain.

Anonymous said...

அடப்பாவி உன்ன இப்படி தனியா புளம்ப விட்டுட்டாங்களே ம க இக காரங்க

அப்பாவி

அசுரன் said...

//But you deny the truth that present is not socialist era. By this you deny Lenin altogather.
//

Please read this as below:

//But you deny the truth that present is a socialist era. By this you deny Lenin altogather.
//

அசுரன் said...

Good arguments Annony

சந்திப்பு said...

Unfortunately the Nationial(do you know the meaning of this Santhipu?) capitalist are not in strong position to do capitalist revolution in India like countries, Hence it is in the hands of Proletarians.

ம.க.இ.க.வுக்காக இலவசமாக வாதட முன்வந்திருக்கும் அனானி நன்பரே! வாழ்த்துக்கள் வரவேற்கிறேன். விவாதங்கள் தொடர கேட்டுக் கொள்கிறேன்.

தாங்கள் மேற்குறிப்பிட்டிருப்பதுபோல் தற்போது இந்தியாவின் ஆளும் வர்க்கமாக உள்ள பெரு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொண்டுள்ளது. பெரு முதலாளி வர்க்கத்திற்கு நிலப்பிரபுத்துவம் தடையாக இருந்தால்தான் அந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை தூக்கியெறிய வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் இந்தியாவில் நடந்ததே வேறு. இந்திய பெரு முதலாளி வர்க்கத்திற்கு இரட்டைக் குணம் உண்டு. அது ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தோடு உடன்படவும் செய்யும் முரண்படவும் செய்யும் தன்னுடைய வளர்ச்சிக்கான சமரசமே! அதனால்தான் இங்கே இந்திய சுதந்திரப்பேரின் விளைவாக ஏற்பாட்ட மாற்றத்தின் ஊடாக தீர்க்கப்படாத அதாவது நிலப்பிரபுத்துவத்திற்கு முழுமையாக சமாதி கட்டப்படாத நிலைக்குத்தான் இந்திய தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி அந்த கடமையை நிறைவேற்றும். ஆனால் ம.க.இ.க. தலைமை தற்போதைய கட்டத்தை தலைகீழாக புரிந்துக் கொண்டுள்ளதால் அது இந்திய தேசத்தை இன்னமும் அடிமையாகவே கருதுகிறது. இந்திய மக்களுக்கு தெரியாத அடிமைத்தனம் ம.க.இ.க.வுக்கு மட்டும் தெரிந்ததுதான் விந்தை.

Anonymous said...

//இந்திய மக்களுக்கு தெரியாத அடிமைத்தனம் ம.க.இ.க.வுக்கு மட்டும் தெரிந்ததுதான் விந்தை.
//

This explanation doesn't need Marxist Analysis. ;-) So you chose this ;-)

And the argument I have given shows your contradictions in perception. You suppose to address that not this one.

Anonymous said...

And I put arguments showing you are twisting both SOCs perception and Lenin's.

You suppose to address those arguments not the one you have responded, though I will answer for that as well.

Anonymous said...

//

இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது.

//

1947 ஐத்தான் சந்திப்பு இப்படிக் கருதுகிறார் போலும். ஆட்சிமாற்றத்தையே ஏகாதிபத்தியம் ஒழித்துக் கட்டப்பட்டதாக இவர் கருதுகிறாரே.

அப்படி என்றால் இந்தியாவில் 2004இலேயே இந்து மதவெறி பாசிசம் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்றும் உளற வாய்ப்புள்ளது.

அதுதான் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டு விட்டதே.



47இல் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லாலிடம் ஒப்படைத்துப் போனது வெறும் ஆட்சி அதிகாரத்தைத் தான். ஆனால் மதுரை ஹார்வி மில், கிளாக்சோ, பின்னி, கிளைட்டன், ஜி.ஈ.,கிரீவ்ஸ் எனப் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் அப்படியேதான் 47க்குப் பிறகு தொடர்ந்தன. இதன் பேரில் சந்தேகம் இருந்தால் காம்ரேட் பி.ஆர். எழுதிய ‘திராவிட மாயை’ புஸ்தகத்தை சந்திப்பு மறுபடி வாசிக்கட்டும்.


இதற்க்கும் பதில் சொல்லட்டும்:
The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

http://www.rupe-india.org/43/ghosh.html


தொழில், சுரங்கம், வங்கி எனப் பல கண்ணிகளால் இந்தியப் பொருளாதாரமே சிக்குண்டு அந்நியனுக்கு அடிமையாகிக் கிடப்பதில் இருந்து விடுபடாமலேயே வந்த ஆட்சிமாற்றத்தை சுதந்திரம் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் கருதுவதும், தேர்தலில் தோற்றதாலேயே இந்துத்துவம் ஒழிக்கப்பட்டு விட்டது எனக்கருதுவதும் ஒன்றுதான். பி.ஜே.பிதான் ஆட்சியில் இல்லையே..ஆரெஸெஸ் காரன்கள் சிபிஎம் தொண்டர்களை எப்படி கேரளத்தில் கொல்லமுடிகிறது?

கட்டபொம்மன்

Anonymous said...

//

தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான்.

//



முனிசிபாலிடி எனத் தெரியவே 25 ஆண்டுகள் ஆனது பெரிய சோகம்தான் என்றாலும் முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா? தமிழ்நாட்டில் இதை அப்படியே பொருத்தினால் 10 அல்லது 12 கவுன்சிலர்களை வென்றெடுப்பதுதான். இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் வெல்வதற்கோ 12 முனிசிபல் சீட் இருக்கிறது என்பதைச் சொல்லவா ஏடறிந்த வரலாற்றில் இருந்தெல்லாம் சமூகவிசாரணை மேற்கொள்ளப்பட்டது?

கேவலமாக இல்லையா?



பன்றித் தொழுவத்தின் தலைமை மேய்ப்பனாகிப் போன பிறகுதான் சோம்நாத் காம்ரேடுக்கு பன்றிக்குட்டிகளின் நாத்தம் தெரிகிறதாம்.. வேசம்தான் போட்டாச்சே.. ஒழுங்குக்கு வராத பன்றிகளை அடித்துத் திருத்தவாவது செய்கிறாரா? பன்றிமேய்ப்பர் பன்றிக்குட்டிகளின் முன் மண்டியிட்டு “பன்றிகளே..நான் ஓடிப் போய் விடலாம் போலிக்கிறது” இதனை விட அபத்தமாக கிரேசிமோகம் கூட வசனம் எழுத முடியாது.


கட்டபொம்மன்

ஏகலைவன் said...

//ஆனால் ம.க.இ.க. தலைமை தற்போதைய கட்டத்தை தலைகீழாக புரிந்துக் கொண்டுள்ளதால் அது இந்திய தேசத்தை இன்னமும் அடிமையாகவே கருதுகிறது. இந்திய மக்களுக்கு தெரியாத அடிமைத்தனம் ம.க.இ.க.வுக்கு மட்டும் தெரிந்ததுதான் விந்தை.//

தூக்கில் இலட்சக் கணக்கில் தொங்கும் விவசாயிகளும், ஊரானுக்கெல்லாம் துணி நெய்து கொடுத்த நெசவாள மக்கள், தங்கள் மானத்தை மறைக்கக் கூட துணியில்லாமல் இந்திய சுதந்திரத்தைப் போலவே அம்மனமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தங்களது தொழிலையும் வாழ்வையும் இழந்தது யாரிடத்தில்? அவர்கள் வாழ்வது அடிமை வாழ்க்கையா? அல்லது ராஜபோகமான வாழ்க்கையா?

இருபது இலட்சத்துக்கும் மேலான உள்நாட்டு சிறுதொழில் நிறுவணங்கள் மூடப்பட்டதுவும், 16கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு தேவுடுகாத்துக் கிடப்பதுவும் நேர்ந்தது எதனால்? அன்னியனுக்கு நமது தொழில்களும் வளங்களும் அடியோடு தாரைவார்க்கப்பட்டதனால் தானே?

அவ்வளவு ஏன், தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் உணவு நெருக்கடியில் இந்தியாவும் அடக்கம்தானே?, அதன் விளைவுதானே விலைவாசி உயர்வும் பட்டினிக் கொடுமையும்? இந்தக் கொடுமையைத் தோற்றுவித்த ஊகவணிகத்தை இந்த நிமிடம் வரை தொட்டுப்பார்க்க முடியாத கையாளாகாத நிலையில்தானே உமது பேராதரவோடு நடைபெறும் ஆட்சி விளங்குகிறது?!

இன்று உலகையே வளைத்து ஏப்பம்விட்டுக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய இராட்சதனின் அக்குளில் வசமாக இந்தியா மாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு மசிரைக்கூட தொடமுடியாத நிலையில்தான் உமது பாராளுமன்றமும் ஆட்சியும் சொரனையற்றுக் கிடக்கிறது. இந்த நிலையில் இந்தியா ஒரு அடிமை நாடு என்று சொன்னதை உம்மால் பொறுக்கமுடியவில்லை.

விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டி அழகுபார்பது போல!!!!

சந்திப்பு said...

அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.

1. முதல் கட்டப் புரட்சி 1947 - வெள்ளை ஏகாதிபத்தியம் - பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விரட்டியடித்ததோடு முடிந்து விட்டது. அதாவது இந்தியாவை அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது. குறிப்பாக இங்கே உள்ள முதலாளித்துவம் இரட்டைத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஏகாபத்தியத்தோடும் - நிலப்பிரபுத்துவத்தோடும் சமரசம் செய்துக் கொண்டுள்ளது தன்னுடைய வளர்ச்சிக்காகத்தானே ஒழியே வேறு ஒன்றும் இல்லை. இந்தக் காரணத்தினாலேயே ஆரம்பத்தில் அது பிரிட்டிஷ் மூலதன பறிப்பு உட்பட்ட நடவடிக்கையில் இறங்கவில்லை. இருப்பினும் அதன் வளர்சசிக் கட்டத்தில் வங்கித் துறை, இன்சுரன்ஸ், பெட்ரோலிய நிறுவனங்கள், இரயில்வே என்றிருந்த பல்வேறு துறைகளை பொதுத்துறையாக மாற்றியது. மேலும் சோவியத் உதவியை பயன்படுத்திக் கொண்டு அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறியது. முன்னேறியுள்ளது. தற்போது இந்திய முதலாளித்துவம் உலகளவில் போட்டியிடக்கூடிய முதலாளித்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அது தானே உருவாக்கிய பொதுத்துறைகளைக் கூட ஏப்பம் விடக் காத்திருக்கிறது. அதை செய்தும் வருகிறது. எனவே உங்களது கற்பனையில் மட்டுமே இந்திய அடிமைத்தனம் நீடிக்கிறது.

எனவே தற்போதுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான அரசு இந்தியாவில் நிறைவேற்றப்படாத கடமைகளான

1. முழுமையான நிலப்பிரபுத்துவ ஒழிப்பு

2. அந்நிய மூலதன ஒழிப்பு போன்றவற்றையும் சேர்த்து

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பெரு முதலாளித்துவத்தையும் சேர்த்து ஒழிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதுதான் மக்கள் ஜனநாயக புரட்சியின் கட்டம்.

எனவே உங்களது திட்ட கற்பனையான அரை காலனியம் - அரை நிலப்பிரபுத்துவம் - நான்கு நாட்டு அடிமைத்தனம் என்பதெல்லாம் தவறான நடைமுறை தந்திரத்தை வகுப்பதற்கே இட்டுச் சென்றுள்ளது. அதனால்தான் உங்களால் நக்சலிசம் துவக்கப்பட்டு 40 ஆண்டுக்காலம் ஆகியும் முன்னேற முடியாமல் மலை முகடுகளுக்குள் தினரிக் கொண்டிருக்கிறீர்கள்.


இந்தியாவில் 2004இலேயே இந்து மதவெறி பாசிசம் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்றும் உளற வாய்ப்புள்ளது. அதுதான் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டு விட்டதே.


இதுபோன்ற அபத்தமான நிலைபாட்டை எஸ்.ஓ.சி.யால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் பாசிச பா.ஜ.க.வை ஆட்சியதிகாரத்திலிருந்து விரட்டியடித்தற்கு இந்திய இடதுசாரிகளும் - ஜனநாயக சக்திகளும் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். உங்களது போலித் தேர்தல் கோஷம் பா.ஜ.க.வுக்கு சாதகமானதே. மேலும் பா.ஜ.க. போன்ற பாசிச சக்திகளை விரட்டியடிக்க பெருந்திரளான மக்கள் பகுதியினரைத் திரட்டுவது குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாதவர்கள். உங்களை நம்பினால் இந்திய மக்களுக்கு பாசிசம் எனும் கொடும் தண்டனைத்தான் கிடைக்கும். உங்களது பாதை பாசிச வளர்சிப் பாதையே!


மதுரை ஹார்வி மில், கிளாக்சோ, பின்னி, கிளைட்டன், ஜி.ஈ.,கிரீவ்ஸ் எனப் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் அப்படியேதான் 47க்குப் பிறகு தொடர்ந்தன


இப்போதும் இந்த நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையில்தான் இருக்கிறது என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யாமல் இருந்தீரே அதற்காக நன்றி கூறித்தான் ஆக வேண்டும்.



ஆரெஸெஸ் காரன்கள் சிபிஎம் தொண்டர்களை எப்படி கேரளத்தில் கொல்லமுடிகிறது?



ஆர்.எஸ்.எஸ். பாசிசத்தை தனது நடைமுறையாக கைக்கொள்கிறது. அதன் முக்கிய எதிரி சி.பி.எம். மற்றும் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் ஒருபோதும் உங்களைக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நீங்கள் அவர்களுடைய நம்பகமான கூட்டாளி நந்திகிராமில் அத்வானியை சிவப்புக் கம்பளம் அளித்து வரவேற்ற இன்னொரு பாசிச குழுமம். உங்களது வர்க்க அணி சேர்க்கை மமதாவின் பின்னால் இருக்கிறது.

அரசியல் ரீதியாக பா.ஜ.க. பாசிசத்தை கேரளாவில் முறியடித்துள்ளோம். உங்களது தலைமைக்கு இதுவெல்லாம் தெரியாது. சி.பி.எம்.க்கு எதிரான பிரச்சாரத்தை கிளப்பி அதில் குளிர்காய மட்டுமே தெரியும்.

சந்திப்பு said...

முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா?


ஒரே ஒரு தெருவிலோ அல்லது ஒரே ஒரு கிராமத்திலோ கூட உங்களது எஸ்.ஓ.சி. செல்வாக்கோடு இல்லை என்பதையாவது சிறிது சுயவிமர்சனமாக பாருங்கள். கும்பமேளா நடத்தி குடமுழுக்கு செய்வதுதான் உங்களது அரசியல் கடமை! மூன்று மாதத்திற்கு ஒரு அஜன்டா... இதற்காக தமிழகம் முழுவதும் தேடிப் பிடித்து 100 பேரை கூட்டி புரட்சிகர வசனம் பேசும் இலட்சணத்தில் ஆயுதப் புரட்சிப் பண்ணப்போவதாக கூறுவது யாரை ஏமாற்ற? குறைந்த பட்சம் மாவோயிஸ்ட்டுகளாகவது அவர்கள் சொன்னதை செய்ய முயற்சிக்கிறார்கள். (இதனை சி.பி.எம். அறவே ஏற்கவில்லை.) உங்களது தலைமை பேசுவது ஒன்று செய்வது ஒன்று வெறும் திண்ணை வேதாந்தம்.

ஏகலைவன் said...

///எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்

7:05 PM////

இதுக்கான பதில எங்க ஒளிச்சி வச்சிருக்கீங்க செல்வப் பெருமாள்?

சந்திப்பு said...

ஏகலைவன் தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற அனைத்து சமூக அவலங்களையும் நான் ஏற்கிறேன். அதற்காக இது அரை அடிமை நாடு என்பதைத் தவிர. இந்திய ஏகபோக - நிலப்பிரபுத்துவ திவால் கொள்கைகளின் விளைவே இது. இதையெதிர்த்த போராட்டத்தை சி.பி.எம். தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது பரந்த மக்கள் பகுதியினரைத் திரட்டி. சில விசயங்களை ஆட்சியாளர்களை நிர்ப்பந்தித்து சிறிய நிவாரணங்களையும் இந்திய உழைப்பாளி மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. உங்கள் விசயம் இதில் கை கட்டி வேடிக்கை பார்த்து பேப்பரில் எழுதி வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளும் மனப்பான்மையே.

Anonymous said...

Very Good

You are great !

MA.Ka.E.Ka vukkey aappu vakkareenga Periya All thaan !!!!!

Ma.Ka.E.Ka vai thittuvatharkaka vavathu Marxism-Leninism Padichaa sari thaan!!!!



Pasi:
http://www.maanuda-pasi.blogspot.com/

ஏகலைவன் said...

///இதையெதிர்த்த போராட்டத்தை சி.பி.எம். தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது பரந்த மக்கள் பகுதியினரைத் திரட்டி. சில விசயங்களை ஆட்சியாளர்களை நிர்ப்பந்தித்து சிறிய நிவாரணங்களையும் இந்திய உழைப்பாளி மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. உங்கள் விசயம் இதில் கை கட்டி வேடிக்கை பார்த்து பேப்பரில் எழுதி வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளும் மனப்பான்மையே.////

ஆக கஞ்சிக்கிலாமல் சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருப்பவனுக்கு, கானல் நீர்போல சில நிவாரணங்களைச் செய்வதன் மூலமாக உமது கட்சி தனது இலக்கை அடைந்துவிட்டதாக சொல்கிறீர்கள் போலும்.

இத்தகைய நிவாரணங்களுக்கான கோரிக்கையையும் போராட்டங்களையும் வேறு எந்த ஓட்டுக்கட்சியுமே நடத்த வில்லையா? எல்லோருமே நிவாரணங்களை முன்வைத்தே அரசியல் நடத்துகிறார்கள். ஆளும் கட்சிகளே உங்கள் எல்லோரையும் முந்திக்கொண்டு பலவிதமான நிவாரணங்களையும் அறிவிக்கவில்லையா?

ஆக நீர் பெருமிதப்பட்டுக் கொள்ளும் சாதனையான நிவாரணங்கள் என்பது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம். இத்தகைய நிவாரணங்கள் வெறும் அறிவிக்கைதானேயொழிய, மக்களைச் சரியாகச் சென்றடைவதற்கானதல்ல என்பதை மக்களே நன்குணர்வார்கள்.

///ஆர்.எஸ்.எஸ். பாசிசத்தை தனது நடைமுறையாக கைக்கொள்கிறது. அதன் முக்கிய எதிரி சி.பி.எம். மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்.///

அது வெறும் வோட்டு அரசியல் குடுமிப்பிடிச் சண்டைதானேயொழிய வேறில்லை.

ஆமாம், அப்படி என்னதான் உமக்கும், RSS கும்மலுக்கும் இடையிலான வேறுபாடு? அது இந்துத்துவ மதவாத அடிப்படையிலாகட்டும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசியல் நடைமுறையிலாகட்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, குஜராத் படுகொலைச் சம்பவங்களை தெகல்கா இதழ் புலனாய்வு செய்து, சரியான ஆதாரங்களை கொலையாளிகளின் வாக்குமூலமாகச் சேகரித்து வெளியிட்ட போது, கமுக்கமாக நீங்கள் அமைதிகாத்தது எதனால்?

எதற்கெல்லாமோ பாராளுமன்றத்தில் குழாயடி சண்டை நடத்துகிற உமது உறுப்பினர்கள், இதற்கும் ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு என்ன கேடு வந்தது?

இதுதான் உமது கட்சி பாசிசத்தை எதிர்க்கின்ற இலட்சனமோ?

///நீங்கள் அவர்களுடைய நம்பகமான கூட்டாளி நந்திகிராமில் அத்வானியை சிவப்புக் கம்பளம் அளித்து வரவேற்ற இன்னொரு பாசிச குழுமம். உங்களது வர்க்க அணி சேர்க்கை மமதாவின் பின்னால் இருக்கிறது.///

இந்தக் கேள்விய எங்களிடம் நீ கேட்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட SUSI போன்ற அமைப்புகளிடம் கேட்க வேண்டிய கேள்வி.

தமிழகத்தைத் தாண்டி எமக்குக் கிளைகள் கிடையாது என்று அடிக்கடி சொலிக் கொள்ளும் சந்திப்பு, இந்த விசயத்தில் மட்டும் நம்மை மே.வங்கம் வரை நீட்டி முழக்கி, இணைத்துப் பேசி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

அதவானிக்கு, மம்தாவுடன் சேர்ந்த கும்பல் சிகப்புக் கம்பள வரவேற்பு நடத்தியதெல்லம் கிடக்கட்டும், புத்ததேவ் அவரை கொல்லைப் புறமாக விருந்துக்கு அழைத்தை என்னவென்று சொல்வார் நம்ம செல்வப் பெருமாள்?!

மேதா பட்கரும், மகாசுவேதா தேவியும், அருந்ததிராய் போன்றோரும் எத்தனாந்தேதியிலிருந்து நக்சலைட் ஆனார்கள் என்று சொல்லமுடியுமா?

ஒருவேளை உம்மை எதிர்த்து அறிக்கைகள் விட்டதிலிருந்து என்று வைத்துக் கொள்ளலாமா?

RSS,BJP கும்பலை ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்கிவிட்டதனாலெல்லாம் மதவெறி பாசிசத்தை அழித்துவிடமுடியும் என்று நீர் மார்தட்டிக் கொள்வது வடிவேல் காமெடியைப் போலவே தோன்றுகிறது.

பார்ப்பன பாசிசத்தை, பெரியார் எதிர்கொண்ட அளவிற்கு, அவருடைய வழித்தோன்றல்களான பிற திராவிட இயக்கத்தலைவர்களால் களத்தில் நிற்க முடியவில்லையே ஏன்?!

ஆட்சியதிகார பதவி மோகம்தான், அன்றைய அண்ணாதுரை முதலாக இன்றைய கருனாநிதி வரை அனைவரின் பார்ப்பன எதிர்ப்புத் தன்மையை விழுங்கி ஏப்பம்விட்டது. உமது மதவெறி பயங்கரவாத எதிர்ப்பு அரசியலும் அத்தகையதன்றி வேறென்ன?

Anonymous said...

//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.//


Santhipu,

I exposed that your Party perceptions are Expired and MaKaEKa's plans are well within the ambit of Marxian perception.

You have no selfrespect to address my observation but continuing your lies.

Shame on You and Your party....

Anonymous said...

சந்திப்பு அய்யா,

ஒரிஜினல் கம்யூனிஸ்ட் பொறிக்கி கும்பலை சேர்ந்த தாங்கள், போலி கம்யூனிஸ்ட் பொறிக்கி கும்பலை சேர்ந்த ம க இ க வினரை திட்டுவது புரிந்து கொல்ளக் கூடியது தான்;நல்லாவே திட்டுங்க.,ம க இ க செய்யும் பம்மாத்தையும்,மோசடியையும் அம்பலப்படுத்துங்க்க,வெளிச்சம் போட்டு எம் மக்களுக்கு புரியும் படி விளக்கமா சொல்லுங்க.
அப்படியே சி பி எம்/சி பி ஐ கும்பல் என் வஞ்சக சீனாவுக்ககு இப்படி அடி வருடறீங்கன்னும் சொல்லுங்க.


பாலா

Anonymous said...

Santhipu,

I Think you missed this

@@@
சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது.
@@@@

@@@
த்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த
@@@


Santhipu,

Do you know what is Imperialism?

May be you want to fool your party members by giving this examples. But the underlying fact is Who is financing these deals?

Even the recent deal of TATA is also financed by Imperialist Institutions. For example TATA's total worth is nowhere near to these deals and they buy this Financed from the Imperialist institutions. You believe it is Indian capital venturing. But the truth is the Imperilist finance tightening its grip ove Indian market.

Capitalism Post lenin's era(ie: Imperialism) is Financial ஏகபோகம். And you like to assess Indian broker TATA by his industry whereas we see the Finance leverage behind him that controls the Entire country.

This is called Chilishness and Juvenility.

Do you mean to say the Agri sector where Majority of people involved in is following Capitalist production method?

Do you mean to say the small Capitalist improvement happened in India is not serving Imperialist and only in true capitalists sense?

You better read Marxism again and better ask your party heavy heads to read marxism again.

Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.

I again remind you that if you belive you are so honest and have self respect please disprove my arguments and the proofs I have given(including the article by Suniti Kumar Ghosh).

சந்திப்பு said...

கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்துத்துவ அனானி பாலா இந்தியாவில் இந்துத்துவ மதவெறி பாசிஸ்ட்டுகளை எவ்வளவு விரைவில் வேறோடும் வேடிர மண்ணோடும் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழிப்பதற்காகத்தான். உங்களைப் பொறுத்தவரை நக்சலிசத்தை பெரிய அபாயம் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே அதனோடு மறைமுகமாக சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக கூட்டு சேர்ந்துக் கொள்வீர்கள். இதனை மேற்குவங்க மக்கள் நன்றாக பார்த்தார்கள். உங்களது கொலைவெறி - மோடித்துவ தத்துவத்தை வீழ்த்துவதற்காகத்தான். உங்களைப் பொறுத்தவரை உங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகளை முதல் இலக்காக கொண்டவர்கள் - எதிரிகள் வரிசையில் என்பதை நன்றாகவே அறிந்துள்ளோம். அதனால்தான் சி.பி.எம். மீது கேரளாவில் கொலைவெறியை கட்டவிழித்துள்ளீர்கள் இது உங்களது அரசியல் தோல்வியைத்தான் காட்டுகிறது. எனவே இங்கே நடக்கும் விவாதம் உங்களுக்கு சந்தோசமளிக்கலாம். தேசப் பற்றாளர்கள் உங்களைப் போன்ற மதவெறி பாசிசஸ்ட்டுகளை நிச்சயம் எதிர்கொள்வார்கள். இங்கே நடக்கும் விவாதத்தை திசை திருப்பும் பாசிச சிந்தனைதான் பாலா என்கின்ற அனானியிடம் காண முடிகிறது. இந்த விவாதமே துவங்கப்பட்டுள்ளது.

Anonymous said...

//நக்சலிசத்தை பெரிய அபாயம் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே அதனோடு மறைமுகமாக சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக கூட்டு சேர்ந்துக் கொள்வீர்கள்//

புத்ததேவ், அத்வானிய தன்னோட நண்பர்னு சொல்லி அவரு தன்ன சந்திக்காம போனதுக்காக துக்கம் அனுஸ்டிச்சாரே அது எந்த கணக்குன்னு சொல்லுங்க சந்திப்பு?

சும்மா பொய் சொல்றது நிறுத்திவிட்டு உங்க கட்சி ஆளுங்களோட மொள்ளமாறித்தனத்த கண் கொண்டு பாருங்க. இல்ல எங்களுக்காவது பதில் சொல்லுங்க.

CPM மீது தாக்குதல் நடத்தும் முன்னாள் CPM ஊழியர்கள்(இன்னாள் RSS ஊழியர்கள்) ஏன் CPM அரசியலை நிராகரித்தனர் என்பதற்க்கு விடை தேடுங்கள் அது உங்களது வோட்டு பொறுக்கி அரசியல் மொள்ளமாறித்தனத்தில் வந்து நிற்க்கும்.

உங்களிடையேயான சண்டை வோட்டு பொறுக்கி சண்டைதானேயொழிய வேறொன்றுமில்லை.

கட்டபொம்மன்

Anonymous said...

//இங்கே நடக்கும் விவாதத்தை திசை திருப்பும் பாசிச சிந்தனைதான் பாலா என்கின்ற அனானியிடம் காண முடிகிறது. //

சரியான கருத்து

கட்டபொம்மன்

Anonymous said...

//கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்துத்துவ அனானி பாலா இந்தியாவில் இந்துத்துவ மதவெறி பாசிஸ்ட்டுகளை//

//தேசப் பற்றாளர்கள் உங்களைப் போன்ற மதவெறி பாசிசஸ்ட்டுகளை//

சி பி எம் ஃபாசிஸ்ட் சந்திப்பு அய்யா,

நீங்க தேச பக்தர் தான்;ஒத்துக்கறேன்.சீன தேச பக்தர்.கேள்வியே அது தானே?நீங்க ஏன் வஞ்சக சீனாவுக்கு அடிவருடறீங்க?சரி ,அடியை வருடிவிட்டு போங்க அது உங்க இஷ்டம்னு கூட வச்சுக்கலாம்.அதுக்காக உங்க தாய் நாட்டுக்கு எதிராக சீனாவுக்கு ஆதரவா செயல் படணுமா?அந்த அளவுக்கு கேவலமா நீங்க போகணுமா?அதுக்கு பதில் சொல்லாம வழக்கம் போல இந்துத்வா,பார்ப்பனீயம்னு பம்மாத்து பண்ணறீங்க?சீனா போடும் ரொட்டி துண்டுகளுக்கு வாலாட்டும் நாய்களா ஏன் ம க இ க மற்றும் சி பி எம் கும்பல் கேவலமாக நடக்க்கிறது?விளக்கமா பதில் சொல்லுங்க அய்யா.உடனே அத்வானி,ஃஇந்துத்வான்னு உளறாம சரியான பதிலா, நேர்மையா சொல்லுங்கய்யா பாக்கலாம்.

பாலா

ஏகலைவன் said...

////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்/////

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

நாளைக்குள் இதற்கு பதிலலிக்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பின்னூட்டங்கள் அனைத்தையும் குறைந்தபட்சம் பதிப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் இதற்காகவே (பி. ராமமூர்த்தி அய்யருக்காகவே) தனிப்பதிவு ஒன்றை நான் எழுதவேண்டியிருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகலைவன் said...

////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்/////

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

நாளைக்குள் இதற்கு பதிலலிக்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பின்னூட்டங்கள் அனைத்தையும் குறைந்தபட்சம் பதிப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் இதற்காகவே (பி. ராமமூர்த்தி அய்யருக்காகவே) தனிப்பதிவு ஒன்றை நான் எழுதவேண்டியிருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகலைவன் said...

////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்/////

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

நாளைக்குள் இதற்கு பதிலலிக்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பின்னூட்டங்கள் அனைத்தையும் குறைந்தபட்சம் பதிப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் இதற்காகவே (பி. ராமமூர்த்தி அய்யருக்காகவே) தனிப்பதிவு ஒன்றை நான் எழுதவேண்டியிருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திப்பு said...

நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப்படை விவாதத்தை துவக்கியதிலிருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் மறைக்கவில்லை. சில பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே! குறிப்பாக ஆங்கில அனானியின் பின்னூட்டங்கள்தான் இந்த விவாதத்தின் மைய அம்சமாக இருக்கிறது. நானும் அதில் ஆர்வமாகவே உள்ளேன். அய்யய்யோ பி.ஆரை. பற்றி எழுதப் போறீங்களா? முதல்ல அதை இப்பவே செய்யுங்க.... உங்களது அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதில் கிடைக்கும்...

சந்திப்பு said...

நன்பர் பாலாவுக்கு...

பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களில் ஒன்று ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லுவது. ஹீட்லரின் தத்துவ அடிப்படையே அதுதான். எனவே உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தப் பதிவின் ஆரம்பத்திலிருந்தே ஒரு விசயத்தை கூறி வருகிறேன். விவாதத்தின் ஊடாகவும் அது வந்துள்ளது. சி.பி.எம்.யைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அது சீனப்பாதையையோ அல்லது ரஷ்யப் பாதையையோ பின்பற்றவில்லை. இந்திய நிலைமைக்கேற்ப மார்க்சியத்தை அமலாக்கிடவே தொடர்ந்து போராடுகிறது. நீங்கள் இந்தக் கேள்வியை ம.க.இ.க.வினரிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் சீனப்பாதையை பின்பற்ற துடித்துக் கொண்டிருப்பவர்கள். மேலும் சீனாவின் ஆசிர்வாதத்தோடு நக்சலிச கொள்கையை விதைக்க முயற்சித்து தோல்வியைத் தழுவியவர்கள். எனவே சீனா கம்யூனிஸ்ட் கட்சி எங்களைப் பார்த்து சர்வதேச அனாதை என்று கிண்டலடித்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

அதற்காக இந்திய தேசத்தின் மீது பற்று வைக்கும் அதே நேரத்தில் நம்முடைய அண்டை நாடுகளாக பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இலங்கை, பூடான், நேபாள்... என அனைத்து நாடுகளுடன் சமூகமான உறவுகளை மேற்கொள்ள வேண்டும். பரஸ்வரம் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். பக்கத்து நாடுகளிடம் நேச உறவுகளைக் கொள்ளாத எந்த நாடும் அமைதியாக இருக்க முடியாது. அமெரிக்கா அதைத்தான் விரும்புகிறது. இங்குள்ள இந்துத்துவ பாசிஸ்ட்டுகளும் அதைத்தான் விரும்புகிறார்கள். அது சரி! நீங்கள் ஏன் அமெரிக்காவை பிடித்து தொங்கு தொங்குன்று தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு இந்தியாவின் மீதான தேசப் பற்றை விட அமெரிக்கா மீதான பற்றுதான் அதிகமோ? இதுதான் போலி தேசியம் என்று கூறுவது. முதலில் உங்களிடம் உள்ள கரையை போக்கிக் கொள்ள முயலுங்கள் பாலா.

Anonymous said...

டேய் பாலா,

நீ ஒரு பித்தலாட்ட பார்ப்பன வெறியன் என்கிறத நிரூபிக்கிற் இல்லையா?

சீனாவுக்கு ம க இ க சட்டி தூக்கினதுன்னு ப்ரூப் பன்னிட்டு பேசுடாங்....

கெட்டபொம்மன்

அசுரன் said...

சந்திப்பு,

அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு சேர்க்கும் வகையில் பதிவை மீள் பதிவு செய்துள்ளேன்

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!
http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_28.html

அசுரன் said...

சந்திப்பு,

அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு சேர்க்கும் வகையில் பதிவை மீள் பதிவு செய்துள்ளேன்

//Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.//

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!
http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_28.html

ஏகலைவன் said...

///நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப்படை விவாதத்தை துவக்கியதிலிருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் மறைக்கவில்லை. சில பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே! குறிப்பாக ஆங்கில அனானியின் பின்னூட்டங்கள்தான் இந்த விவாதத்தின் மைய அம்சமாக இருக்கிறது. நானும் அதில் ஆர்வமாகவே உள்ளேன். அய்யய்யோ பி.ஆரை. பற்றி எழுதப் போறீங்களா? முதல்ல அதை இப்பவே செய்யுங்க.... உங்களது அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதில் கிடைக்கும்...///

இதுதான் தோழர் கட்டபொம்மனின் கேள்விக்குப் பதிலா? எமர்ஜென்சி நேரங்களில், கீழ்மட்ட ஊழியர்கள் அரசின் கொடுமையான அடக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளான போது, இந்திராவின் கைப்பாவையாக செயல்பட்ட அரசியல் தரகன் பி.ராமமூர்த்தி அய்யரைப்பற்றி தகவல் சொல்லுய்யான்னா, இப்படிப் பம்முகிறீர்களே ஏன்?

அப்புறம் "நாங்கெல்லாம் எமர்ஜென்சியில..... எப்படி தெரியுமில்ல...."ன்னு வடிவேல் வசனம் பேசமட்டும் உமது சொரனை இடம் கொடுப்பது எப்படி?

இது இந்த விவாதத்துக்கு தொடர்பில்லாததுன்னு நீங்க ஒதுக்கித் தப்பிக்க முயல்வதுதான் உமது விவாத இலட்சனமா?