April 29, 2008

இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!

காத்மாண்டு: இந்தியாவின் உதவியில்லாமல், நேபாளத்தில் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை நேபாள மாவோயிஸ்டு கட்சி தெளிவாக புரிந்து கொண்டி ருப்பதாக அதன் தலைவர் பிரசந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு:
நேபாளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நேபாள அரசியல் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இணக்கத்தை ஏற்படுத்திய திலும், ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கான சூழ்நி லையை ஏற்படுத்தியதிலும் இந்தியா சிறப்பான பங்க ளிப்பை செலுத்தியுள்ளது. இருந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்களும், நேபாள மாவோயிஸ்டுகளும் இன் னும்கூட ஒருவரையருவர் சந்தேகத்துடனேயே பார்க்கின் றனர் என்ற கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?
நேபாளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற் றத்திற்கு இந்தியாவின் பங்க ளிப்பு ஏராளம். குறிப்பாக எங்களுக்கும், நேபாளத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் இடையே 12 அம்ச உடன் படிக்கை ஏற்பட 2005ம் ஆண் டில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளே காரணம். இந்தி யாவின் ஆதரவும், முயற்சியும் இல்லாவிட்டால் அத்தகைய உடன்பாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை எனலாம். அதிலிருந்து தற்போது வரை இந்தியா - நேபாளம் இடையேயான உறவு குறிப் பிடத்தக்க வளர்ச்சியை எட்டி யுள்ளது. குறிப்பாக மாவோயி ஸ்டுகளாகிய எங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே யான உறவில் பெரும் வளர் ச்சி ஏற்பட்டுள்ளது. நேபா ளத்தில் பொதுத்தேர்தலை நடத்தாமல் அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்த முடி யாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியு றுத்தி வந்தது. எனவே தேர் தல் மூலம் நேபாளத்தில் அமைதியை முன்னெடுத்துச் செல்ல இந்தியா மேற் கொண்ட முயற்சிகள் அனை வருக்கும் தெரிந்ததே. இதன் மூலம் இருதரப்பு உறவும் பெருமளவு அதிகரித்துள்ளது. ஆனாலும் தேர்தலுக்கு முன்புவரைகூட எங்கள் மீதான சந்தேகம் இந்திய அர சுக்கு தீரவில்லை. எங்கள் செயல்பாடுகளை மிகவும் ஐயத்துடனேயே இந்தியா பார்த்தது. நாங்கள் தேர்தலில் பங்கேற்போம் என்பதை இந் தியா நம்பவில்லை. தேர்த லுக்கு முன்பு இந்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், “நேபாள மாவோயிஸ்டுகளை எங்களால் நம்பமுடியவில்லை. நேபாள காங்கிரஸ் கட்சியை மடடுமே நம்புகிறோம்” என கூறியிருந்தது. இந்திய அரசின் இந்த அறிக்கை எங்களை மிகவும் கவலையடையச் செய்தது. எங்கள் மீதான இந்த நீண்ட கால சந்தேகம், தேர்தல் முடிவு களை பாதிக்குமோ என நாங் கள் பெரிதும் கவலைப் பட்டோம். எனவேதான் இந் திய அரசு அறிக்கை குறித்து நான் உடனடியாக பதில் அறிக்கை வெளியிட்டேன். தேர்தல் நேரத்தில் இவ்வாறு இந்திய அரசு அறிக்கை வெளியிடுவது சரியல்ல என அந்த அறிக்கையில் கூறியிருந் தேன். எனினும் தற்போதைய தேர்தல், அதன் மூலம் கிடை த்த முடிவுகள் ஆகியவற்றின் மூலம் இந்த சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தாகி விட்டது. மேலும் புதிய சூழ்நி லைக்கேற்ப, புதிய ஒற்றுமை மற்றும் புதிய ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு நாம் தயாராக வேண்டும். ஏனெனில் தற்போ தைய சூழல் தலைகீழாக மாறி யுள்ளது என நான் நம்புகி றேன். ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் எவ்வித நிபந்தையு மின்றி சேர்ந்து பணியாற்று வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை இந்திய அரசும் தெளிவுபடுத்தி யுள்ளது.
எனவே இந்திய - நேபாள இருதரப்பு உறவில் தற்போது புதிய திருப்புமுனை ஏற்பட் டுள்ளது எனக் கூறலாமா?
ஆம். அதுதான் எனது நம் பிக்கை. தொடக்கத்தில் ‘மன்ன ராட்சி துணையுடன் பல கட்சி ஜனநாயகம்’ என்பதே நேபாளம் பற்றிய இந்தியா வின் கொள்கையாக இருந்தது. ஆனால் மன்னராட்சி முறை தான் நேபாளத்தின் வளர்ச் சிக்கு மிகப்பெரும் தடை கல் என்பதை நாங்கள் நீண்ட காலமாகவே கூறி வருகிறோம். மேலும் மன்னராட்சிக்கு ஆதரவான கொள்கைகளை இந்தியா கைவிட்டு, நேபாளத் தில் மக்களாட்சி அமைய ஆத ரவளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தோம். எனி னும் இந்திய அரசு தலை மையில் நேபாள கட்சிகளுக் கிடையே நடைபெற்ற இழு பறியான விவாதத்துக்குப் பின் ஒரு முடிவு ஏற்பட்டது. நேபா ளத்தில் எத்தகைய ஆட்சி வேண்டும் என்பதை நேபாள நாட்டு மக்கள் முடிவு செய் யட்டும். குடியரசு ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்தா லும்கூட அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவு. இந்திய அரசின் கொள்கை யில் ஏற்பட்ட இந்த மாற்ற த்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றமாக நாங்கள் கருதுகி றோம். அதேபோல் அப்போது ஏற்பட்ட 12 அம்ச உடன் படிக்கையால் மாவோயிஸ்டு களான எங்களது அணுகு முறையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டது. அப்போது முதல் தேர்தல் வரை ஏற்பட்ட பற்பல முன் னேற்றங்களால் தற்போது நேபாளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட் டுள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். ஏனெனில் இந்திய, நேபாளத்துக்கு இடையேயான உறவு என்பது கலாச்சார ரீதி யாக, வரலாற்று ரீதியாக, பூகோள ரீதியாக மிகவும் நெருக்கமானது. மேலும் தற் போது இந்தியாவில் மிக வேக மான வளர்ச்சி ஏற்பட்டு வரு கிறது. இந்நேரத்தில் இந்தியா வின் ஆதரவு, உதவி, ஒத்து ழைப்பின்றி நேபாளத்தில் நிலைத்தன்மையையும், வளர்ச் சியையும் ஏற்படுத்திவிட முடி யாது என்பதே உண்மை. எதார்த்த நிலையோடு செயல் படும் எந்த தலைவரும், அமைப்பும் இந்தக் கருத்தை நிராகரிக்க முடியாது. நான் தற்போது மேலும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், நேபாளத்தில் அரசியல் நிலைத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்பட வேண் டும் என்பது மட்டுமே இந்திய தலைவர்கள் மற்றும் இந்திய மக்களின் பிரதான எண்ண மாக இருந்து வந்தது. ஆனால் அத்தகைய அமைதியான, நிலைத்தன்மை மிக்க, வளர்ச்சி யான நேபாளம் உருவாக வேண்டுமானால் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைப் போன்ற புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டியதன் அவசியத்தை இப்போது அவர்கள் உணர்ந் திருக்கிறார்கள். எனவே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து மாற்றத்தின் மூலம் நம் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் நம்புகிறேன். இந்தியா - நேபாளம் இடையேயான 1950ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறி வந்தீர்கள். அந்த உடன் படிக்கையில் எத்தகைய மாற் றம் வேண்டும் என விரும்பு கிறீர்கள்? 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் உள் ளோம். எனவே இன்றைய சூழலுக்கு ஏற்ப உடன்பாடு ஏற்படுவது அவசியம். எனவே இந்தியா-நேபாளம் இடையே புதிய உடன்பாடு ஏற்படுவது நல்லது என நாங்கள் கருதுகி றோம். அவ்வாறு விரும்பு வதன் அடிப்படை என்ன வென்றால், புதிய சூழலின் அடிப்படையில் நம் இரு நாடு களுக்கும் இடையே ஒத்து ழைப்பையும், ஒற்றுமையையும் அதிகரிக்கும் வகையில் உடன் பாடு உருவாக வேண்டும் என் பதே ஆகும். 12 அம்ச உடன் படிக்கை ஏற்பட்டது முதல், தேர்தல் முடிவுகள் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் உடன்பாடு அமைய வேண்டும். அது பற்றி இரு தரப்பினரும் அமர்ந்து பேசி தீவிரமாக விவாதித்து முடிவுக்கு வர வேண்டும்.
முன்னர் 1996ம் ஆண்டில் உங்கள் கட்சி 40 அம்ச திட்டத்தை முன்னிறுத்தி செயல்பட்டது. இந்தியா - நேபாளம் இடையே திறந்தவெளி எல்லையை கூட மூட வேண்டும் என கூறியிருந்தீர்கள். அவ்வாறு செய்தால் பிழைப்பு தேடி இந்தியா வரும் லட்சக்கணக் கான நேபாளியர்களை தடுத்து நிறுத்துவது போல் ஆகாதா?
எங்கள் தேர்தல் அறிக்கையில் இந் தியா - நேபாள எல்லையை மூடுவது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. எல்லை யை முழுவதும் மூட வேண் டும் என்பது எங்கள் நோக் கமல்ல. ஆனால் குற்றச்செயல் களை தடுக்கும் வகையில் எல்லையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.
இந்திய திரைப்படங்க ளுக்கு நேபாளத்தில் தடை விதிக்க வேண்டும் என்ற 1996ம் ஆண்டின் உங்கள் கோரிக்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
தற்போது சூழ்நிலை மாறி யுள்ளது. தற்போதைய புதிய மாற்றங்களுக்கு ஏற்ப செயல் படவே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளையும் சமதூரத்தில் வைத்து உறவினைப் பராமரிப் போம் என்ற உங்கள் அறிவிப்பு பற்றி இந்தியாவில் சிலர் எழுப்பியுள்ள ஐயம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளில் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாட்டு டன் கூட்டணி சேர்வதில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனை தெளிவுபடுத்தவே அவ்வாறு கூறினோம். மேலும் இந்தியாவுடன் எங்களுக் குள்ள கலாச்சார, வரலாற்று, பூகோள உறவுக்கும், சீனா வுடன் உள்ள உறவுக்கும் அடிப்படையில் பல வித்தியா சங்கள் உள்ளன. இந்தியாவுக் கும் நேபாளத்துக்கும் இடை யே திறந்தவெளி எல்லைகள் உள்ளதுபோல, சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே திறந்தவெளி எல்லைகள் இல்லை. எனவே இந்தியா, சீனா ஆகிய இரு நாடுக ளோடும் எங்களுக்குள்ள தொடர்புகளில் பல வேறு பாடுகள் உள்ளன. ஆனால் வெளியுறவு கொள்கைகளில் இருவரையும் சமமாக பாவிப் பது என்பதையே நாங்கள் அவ்வாறு கூறினோம்.
இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ராணுவத் துக்கு நேபாள கூர்காக்களை தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளீர்களே?
ஆமாம். நேபாளியர்கள் எந்த நாட்டு ராணுவத்துக் காகவும் பணியாற்றக் கூடாது. ஆனால் மிகவும் சிக்கலான இந்த பிரச்சனைக்கு நாங்கள் மட்டுமே தீர்வு காண முடி யாது இங்கு அமையப்போ வது கூட்டணி ஆட்சி. எனவே கூட்டணியின் பிற கட்சிக ளுடனும் கலந்தாலோ சித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
இந்திய உளவு அமைப்பு `ரா’ வின் முன்னாள் தலைவர் பி.கே. ஹோர்மிஸ் தாரகான் எழுதியுள்ள கட்டுரையன் றில், நேபாள மாவோயிஸ்டு களின் வெற்றி மூலம் இந்திய மாவோயிஸ்டுகளும் ஊக்கம் பெறுவார்கள். இதனால் அவர்களும் ஜனநாயக அரசிய லுக்கு திரும்புவார்கள் என கூறியுள்ளார். இந்நிலை யில் இந்திய மாவோயிஸ்டுக ளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
நேபாள மக்களின் உணர் வுகளை மதிக்கும் வகையிலும், அவர்களின் நம்பிக்கையை பெறும் விதத்திலும் நாங்கள் செயல்பட்டோம். அதனால் வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற நாட்டு மாவோயிஸ்டு கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான உரிமை எங்களுக்கு இல்லை. எனினும் இந்திய மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகளுக்கும் நாங்கள் சில செய்திகளை கூற விரும்புகிறோம்.நாங்கள் எவ்வாறு துப்பாக் கிக் குண்டுகளிலிருந்து வாக் குச் சீட்டுகளுக்கு மாறினோம் என்பதை, நேபாள மக்களின் இதயங்களை நாங்கள் எவ் வாறு வென்றெடுத்தோம் என்பதை, நேபாளத்தின் அரசாங்கத்துக்கே தலைமை வகிக்கும் இடத்துக்கு எவ் வாறு வந்தடைந்தோம் என் பதை, நாட்டின் புதிய அரசி யல் சட்டத்தையே எழுதக் கூடிய அதிகாரத்தை எவ்வாறு பெற்றோம் என்பதை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.எங்களது இந்த வெற்றி குறித்து பரவலான விவாதம் நடத்தப்பட வேண்டும். இத னால் மாவோயிஸ்ட் இயக் கங்களின் செயல்பாடுகளில் பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுத்த முடியும் என கருது கிறோம். உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நாங்களும் மாறிக்கொண்டோம்.ஆனால் எங்கள் கொள்கையின் அடிப் படையை நாங்கள் சிறிதும் இழக்கவில்லை. மக்கள் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலும் கூட நேபாளத் தில் பல கட்சி ஆட்சி முறை யே சிறந்தது என்பதை நாங் கள் உறுதியாக நம்பினோம். ஜனநாயகப் புரட்சி தளத்தில் மட்டுமல்ல, சோசலிச புரட்சி களத்தில் கூட பல கட்சி ஆட்சி முறையால்தான் சிறந்த நாட்டையும், மிகச்சிறந்த சமுதாயத்தையும் கட்டமைக்க முடியும் என நம்புகிறோம். 20ம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் இதுவே. எனவே இந்திய மாவோயிஸ்ட் தலைவர்களும், தொண்டர்களும் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். அந்த பாதையானது, மக்களுக்கான பாதையாக, மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பாதையாக இருப்பது மிகவும் அவசியம்.
Thanks: Janasakthi & Hindu

6 comments:

Kalaiyagam said...

மாவோயிஸ்டுகளின் "புதிய ஜனநாயக புரட்சி" சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ஆண்ட கட்சிகள் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்ட மக்கள், மாவோயிஸ்டுகள் மாற்றத்தை கொண்டு வருவர், என நம்புகின்றனர். மக்களின் வாக்குகளை உத்தரவாக கருதி, நேபாளத்தை முன்னேற்ற பாதையில் இட்டு சென்று, அதனை இமாலய சொர்க்கமாக்குவது, மாவோயிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நேபாளின் மன்னர், இராணுவம், ஆண்ட வர்க்கம், முதலாளிகள், மற்றும் அமெரிக்கா ஆகியன; இந்த முன்னேற்றத்தை தடுக்க நினைக்கலாம். எதிர்பாராத சதிப்புரட்சி ஏற்படலாம். அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதனை மாவோயிஸ்டுகள் செய்வார்கள். (Kalaiyarasan)

http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_17.html

மு.மயூரன் said...

எல்லாம் சரி,

ஆனல இந்திய அரசுக்கு விசுவாசமானவர்களும் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருக்கும் ஆய்ஞர்கள்
இப்படிச் சொல்கிறார்களே?

இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

வெளிச்சம் said...

சந்திப்பு,
உங்களுக்காக நான் பிளாக்கெல்லாம்
உருவாக்க வேண்டியிருக்கு,,
எல்லாம் உங்க நேரம்..
சரி சரி வந்து பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

Anonymous said...

What Maoist Say about Indian Parliament?

They say what is in Nepal and What is in India are different.

They clearly deny the comparison of their stand applicable to India(as CPM try to twist as usual).

See below the words of Nepal Maoist when they come to India.

Santhipu tried this same lie in Tamilarangam page and Rayagaran and Asuran has exposed his lies. He escaped from the question by run away from there and publishing the same lie here againt.

Shame on you and CPM.....

Ofcourse, the Maoist has to learn from Nepal maoist but not the one -the Opportunist, Dishonest way - CPM try to justify.

http://tamilarangam.blogspot.com/2008/04/blog-post_14.html

@@@@@@@
ஏன் தேர்தல் நடக்கிறது, அத்தேர்தல் என்ன பங்கு வகிக்கிறது. தேர்தலில் நாங்கள் ஏன் பங்கேற்கப் போகிறோம் என்பன பற்றி அந்த நண்பர்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் என்பதன் உண்மையான பொருள் விளங்கவில்லை. ஆகவேதான் அவர்கள், மற்றக் கட்சிகளோடு தேர்தல் பங்கேற்பு கட்சிகளோடு எங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.இந்த நண்பர்கள் ஏப்ரல் 10 அன்று நடைபெற இருக்கிற தேர்தலைச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிற அரசமைப்புப் பேரவை தேர்தல் என்பது, ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான தேர்தலாகும். இப்பேரவையின் பிரதிநிதிகள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவார்கள். அதற்கான தேர்தலாகும். இந்தத் தேர்தலை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் தேர்தலோடு இந்த நண்பர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அங்கே நடைபெறுகிற தேர்தல், நேபாள சமுதாயத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல். இங்கே ஐந்தாண்டுக்கு ஒருமுறையோ, நான்காண்டுக்கு ஒருமுறையோ நடத்தப்படுகிற தேர்தலால் எந்த மாற்றமும் வருவதில்லை. அந்த தேர்தலும் இந்த தேர்தலும் ஒன்றல்ல என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்
@@@@@@


@@@@@@@@@
வேறு சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்; அறிவுரை செய்கிறார்கள். கீதோபதேசம் செய்கிறார்கள். ""நீங்கள் மக்கள் போரை நடத்தியவர்கள், ஆனால், இப்போது நீங்கள் போராட்டம் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஆயுதப்போராட்டம் தேவையில்லை, வன்முறை தேவையில்லை; அதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இறுதியாக இப்போது நீங்கள் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள். எனவே ஆயுதப்போராட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கத் தேவையில்லை'' என்று அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள், எங்களைப் படிப்பினை பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படி இல்லை; நாங்கள் ஆயுதப்போராட்டம் தேவையில்லை என்று ஒரு போதும் கருதவில்லை என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உண்மை என்னவென்றால், பத்தாண்டுகால மக்கள் போர் நடைபெற்றிருக்கவில்லையென்றால், 19 நாள் பெருந்திரள் எழுச்சி ஏற்பட்டிருக்காது. அந்த 19 நாள் மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த மக்கள் எழுச்சியை உருவாக்கியதில், அரசியல் சூழலை மாற்றியதில் 10 ஆண்டுகாலம் நடத்தியிருக்கிற மக்கள் போருக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நேபாள வரலாற்றில் மக்கள் எழுச்சி என்பது புதிய செய்தியல்ல; கடந்த காலத்தில் மக்கள் பலமுறை பெருந்திரளாக எழுந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அந்த எழுச்சிகளெல்லாம் கொடிய முறையிலே அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை, 19 நாள் மக்கள் எழுச்சியை அவர்களால் ஒடுக்க முடியவில்லை; அதற்குக் காரணம், மக்கள் விடுதலை இராணுவம் அருகிலே இருந்தது என்பதுதான். காத்மாண்டு பள்ளத்தாக்கை மக்கள் விடுதலை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. எனவே, மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. நம்மை நேபாள இராணுவம் சுடுமானால், பக்கத்திலே இருக்கிற மக்கள் விடுதலை இராணுவம் தலையிட்டுச் செயல்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் இராணுவத்தினருக்கும் தெரியும், எனவே தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதால், அந்த மக்கள் எழுச்சியை அவர்களால் அடக்கவோ ஒடுக்கவோ முடியவில்லை. எனவேதான், 19 நாட்கள் நடந்த மக்கள் எழுச்சியானது, தனது உடனடி நோக்கத்தில் வெற்றி பெற முடிந்தது.
@@@@@@@@

சூரியன் said...

சந்திப்பு அவர்களே,
"என்னுடைய இந்த கேள்விக்கு பதிலளித்து தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
மவோயிஸ்டுகள் நேபாளில் தற்போது புரட்சியின் இந்த கட்டத்தில் இருக்கிறார்கள்? அங்கே சோசலிசத்தை எப்படி கொண்டு வருவார்கள்? நேபாள மவோயிஸ்டுகளின் வழியை இந்திய மவோயிஸ்டுகள் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிற நீங்கள் ஓட்டுபொறுக்குவதை தவிர வேறு எந்த வகையில் நேபாள் மவொயிஸ்டுகளை பின்பற்றுகிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்".

pasi said...

Dear Santhipu,

What u r coming to say?

1.The Maoists if India should do the Armed Rebellion first and win the minds of People and to Vote Banks?


OR

2.Put all weapons down and join the Indian Vote Bank Politics ?

What u mean "Katruk kolla Vendiya Paadam"?

Mr.Prachanda Said First Option ?
Is that what the Naxals have to learn? They are doing already?

If u mean Second option, that is not mentioned by him.