மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.
கொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும். இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்! போககட்டும்!
தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்!
அது சரி! இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம்! இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது? இதன் கொடி என்ன? இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்? என்று நாம் கேட்டு விட்டால் உடனே இந்த கேள்வியில் உளவு பார்க்கும் தோரணைதான் தெரிகிறது என்று உளவு பட்டம் கட்டுவார்கள் இந்த ஏகாதிபத்திய சீர்குலைவு கைக்கூலிகள். உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் இந்த நிஜ அனானிகள்.
எஸ்.ஓ.சி. தன்னை இந்திய பொதுவுடைமை கட்சி என்று அழைத்துக் கொள்வதுதான் பரிதாபம்! இதைப் பார்த்து ஏதோ இவர்களுக்கு இந்தியா முழுவதும் பெரிய வலைப் பின்னல் இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்... சிலந்தி வலைதான் அவர்களை சுற்றியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குள் மட்டும் தவளை கத்தல் கத்தும் ஒரு அமைப்பே தவிர அகில இந்திய அமைப்பு அல்ல. ஒரு முக விலாசத்திற்காக அப்படி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது ஏதாவது அகில இந்திய அளவில் செயல்படும் நக்சலிச அமைப்பின் துணை கிரகமாக செயலாற்றுகிறார்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.
போகட்டும்! இவர்களது திட்டம்தான் என்ன? பாவம் இவர்களிடம் இதை மட்டும் கேட்டு விடக் கூடாது! பரம ரகசியமாக பதுங்கி விடுவார்கள்! 1976இல் துவக்கப்பட்ட இந்த துணை கிரகத்திற்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி திட்டமே இல்லை என்பதுதான் வேடிக்கையானது! இந்த கருப்பிண்டங்கள்தான் உலப் புரட்சியை நடத்தப்போவதாக ஊளையிடுகின்றன. வெறும் நகல் திட்டமாகத்தான் உலா வருகின்றன. அதாவது இறுதி பெறாத திட்டம்; அதாவது அடிக்கடி தேவைக்கேற்ப கையை - காலை வெட்டிக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்! அப்பத்தான் அரசியலில் அடிக்கடி புரட்சிகர ஜோக்கர் வேஷம் போடலாம்!
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காதவர்கள்; வெறும் வார்த்தையில் - எழுத்தில் பம்மாத்து காட்டுபவர்கள் அவர்களது திட்டத்தின் முதல் பாராவை கிழே கொடுத்துள்ளேன். எங்கேயும் இந்தியா நாடு என்று வராது. அதுதான் அவர்களது மறைமுக பாரதீய அஜண்டா... இந்திய மக்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.
"நமது அன்பிற்குரிய இந்நாடு உலகின் மிகப் பெரியதும், பழைமையானதுமான நாடுகளில் ஒன்று. 95 கோடி மக்களைக் கொண்ட நாடு. உழவர் பெருங்டிக மக்களை மிகப் பெருமான்மையாகக் கொண்ட விவசாய நாடு....."
காரல் மார்க்ஸ் இந்திய பொருளுற்பத்தி முறையை ஆசிய பாணி பொருளுபத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறார். இந்த வரியை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு தனது திட்டத்திலும் சேர்த்துக் கொண்டு குழப்புவதில்தான் இவர்களது அலாதியான திறமையே வெளிப்படுகிறது.
"இந்திய சமுதாயத்தில் ஆசிய சொத்துடமை வடிவமும் அதன் அடிப்படையிலான கிழக்கத்தியக் கொடுங்கோன்மையும் நீண்ட காலம் நிலவியது. இதன் கீழ் சட்டபூர்வமாகத் தனிச் சொத்துடைமை இல்லை...."
அன்பு அனானிகளே! இணையத்தில் உலாவும் பொருளாதார ஞானிகளே இவர்களது கூற்று சரியா? என்பதை கொஞ்சம் எனக்கும் விளக்குங்கள்! அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லையாம்? அப்படியென்றால் சோசலிச சமூகமாக இருந்தது என்று கேள்வி எழுப்பாதீர்கள்? அவர்கள் பார்வையில் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வைத்திருந்த குறுநில மன்னர்கள், நிலப்பிரபுக்கள், நிலத் திமிங்கலங்கள் எல்லாம் பாடமல் போனதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது! இப்போது தெரிகிறதா? இவர்கள் யாருடைய நலனை காப்பதற்காக செயல்படுகிறார்கள் என்று! இவர்களின் உண்மையான வர்க்க முகம் ஏகாதிபத்திய சீர்குலைவு முகமே! உடனே நவீன வழக்கறிஞர்கள் போல் வாதாடலாம் மடயனே சட்டப்பூர்வமாகத்தானே இல்லையென்று சொல்லியுள்ளோம் என்று. அதை கண்டு நீங்கள் நகைக்க வேண்டாம்!
ம.க.இ.க. பார்ப்பனீம் என்று சொல்லும் போது நமக்கு கூட ஒன்றும் புரியவில்லை! அவர்கள் மனு அதர்மர்த்திற்கே ஐ.எஸ்.ஓ. 2000 சான்றிதழ் வழங்குவதை கீழே கவனியுங்கள்.
"பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வர்ணங்களும் மற்றும் வர்ணத்தில் சேராத பஞ்சமர் - சண்டாளர் அடங்கிய சமூக எஸ்டேட்டுகள், அவற்றிற்கு அடிப்பைடயாக அமைந்த சாதிய அமைப்புகளின் அடிப்படையிலான வேலைப் பிரிவினைகள் இருந்தன...."
தமிழச்சிகள், பெரியாரியவாதிகள் கோபப்படக் கூடாது. அதாவது மனு நமக்கு விதித்தது வேலைப் பிரிவினையைத்தான் தீண்டாமையை அல்ல! இதைத்தான் அவர்கள் ம.க.இ.க. தலைமை மிக அழுத்தமாக குறிப்பிடுகிறது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வு பெரும் பகுதி உழைப்பாளி மக்களை சுரண்டி - கொழுத்து தீண்டத் தகாதவர்களாக வெறும் நடைப்பிணங்களாக ஆக்கி வைத்துள்ளதற்கான அடிப்படையே நால்வருணத் தத்துவம்தான்! ஆனால் இதனை வேலைப் பிரிவினை நம்மை ஏய்கிறது எஸ்.ஓ.சி. இவர்கள்தான் நவீன மனுதர்மவாதிகள்.
அதைவிட கொடுமை என்னத் தெரியுமா? ஆசியபாணி சமூகம் என்று சொல்லி நிலம் தனிவுடைமையாக இல்லை என்று கூறிய பிறகு இவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.
"எல்லா கிராமச் சமூகங்களுக்கும் மேலே அதி உயர்ந்த அதிகாரமாகவும் இணைக்கும் ஒருமையாகவும் விளங்கிய மத்திய அரசிடமிருந்து தனி நபர்கள் அனுபோக உரிமைகளைப் பெற்றனர்..."
அதாவது, கிராம மக்கள் நிலத்தை தாங்கள் தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்களாம்! எந்த மத்திய அரசு என்பதை மட்டும் விளக்க மறந்து விட்டார்கள்? பிரிட்டிஷ் அரசா? அல்லது தற்போதைய மத்திய அரசா? (ஐயையோ.... இப்ப உள்ள அரசு காலனி அரசு... அதாவது அடிமை அரசு...) பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையில் வைத்திருந்த மூப்பனார்கள் - வாண்டையார்கள் - சாம்பசிவ ஐயர்களிடம் எல்லாம் அப்போது அதிகாரமில்லையா? மத்திய அரசை ஆட்டியதே இந்த நிலப்பிரபுக்கள்தானே! அப்புறம் எப்படி மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்கள்?
கடைசியா இந்த ஆசியபாணி சமூக பித்தலாட்டத்தை இவர்களே அம்பலப்படுத்துவதை கொஞ்சம் கவனியுங்கள்.
"ஆங்கிலேயே காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை காலனியாக்கிய பின் அதுவரை நீடித்திருந்த ஆசியச் சொத்துடமை வடிவிலான சிறு கிராம சமூகங்களின் நிலப்பிரபுத்துவப் பொருளாதார அடிப்படையைத் தகர்த்தனர். பொதுச் சொத்துடைமையின் இடத்தில் தனியுடைமையப் புகுத்தினர்..."
ஆஹா... அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேள்விப் பட்டிருக்கோம்... எஸ்.ஓ.சி. புளுகு இப்பத்தான் வெளிப்பட்டது. முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லை என்று கூறி விட்டு, அப்படியே 3வது பிரிவில் அந்தர் பல்டி அடித்து பிரிட்டிஷ் அரசு ஆசிய பாணி சொத்துடைமையை ஒழித்து விட்டது என்று கூறுவது யாரை திருப்திப்படுத்த! அதை விடக் கொடுமை நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படையைக் கூட தகர்த்து விட்டனராம்! அதாவது இந்தியாவில் தற்போது எங்கும் நிலப்பிரபுக்கள் இல்லை! அனைத்து நிலங்களையும் பிரிட்டிஷ் அரசு பிரித்துக் கொடுத்து புரட்சி செய்து விட்டது! நம்புங்கள் ம.க.இ.க. தலைமை ஊளையிடுகிறது அது நரி என்று நம்புங்கள்!...
15 comments:
ம.க.இ.க இனது வேலைத்திட்டம் என்று நீங்கள் எடுத்தாளும் மேற்கோள்களின் மூலத்தினை, அந்த வேலைத்திட்டத்தின் முழுமையான உரைவடிவத்தினை இணையத்தில் எங்கேயாவது பெறலாமா? அச்சு வடிவம் உங்களிடம் இருக்கிறதா?
அப்பிரதியினை இங்கே தந்தீர்களானால் அல்லது அதற்கான தொடுப்பைத் தந்துதவினீர்களானால் உங்கள் கருத்துக்களை வாசிப்பவர்கள் சிலவிசயங்களை உசாவி உறுதிப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
நன்றி.
சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்கான உரிமையைக் கூட ம.க.,.கதான் வாங்கியிருக்கிறதாமே!
நன்றி மயூரன்.
தங்களது எதிர்பார்ப்பு நியாயமானது. திட்டத்தை அறியாமல் ஒருவரது வாய்ச் சவடால்களை வைத்து மதிப்பிட முடியாது!
அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும் - ஏங்கெல்சும் 1848இல் வெளியிடும் போது கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கத்தை வெளிப்படையாகவும், உலகு அறியவும் வெளிப்படுத்த வேண்டும் என்று தங்களது அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
அதாவது கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கம் பாட்டாளிகளை விடுவிப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
அவ்வாறு இருக்கையில் நமது ம.க.இ.க. - எஸ்.ஓ.சி.குழுவினர் தங்களது திட்டத்தை மிகவும் ரகசியமாக தூசி படியாமல் காத்து வருகின்றனர். இந்த திட்டம் எந்த இணைய தளத்திலும் வெளியிடப்படவில்லை. அவர்களது அதிகாரப்பூர்வமான புத்தக நிறுவனமான கீழைக்காற்றில் கூட கிடைக்காது. நண்பர் ஒருவர் மூலமாகவே இந்த திட்டத்தை பெற முடிந்தது. இவர்களது நோக்கத்தை மக்கள் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் இந்த புரட்டர்கள்!
அனானி நன்பரே! சரியாகச் சொன்னீர்கள். யாராவது பெருந்திரளான மக்களைத் திரட்டிப் போராடினால்... நாங்கள் தான் தொடர்ந்து போராடுகிறோம். நீங்கள் இப்பதான் வந்தீங்க... அதனால சிதம்பரத்தில் தமிழை அரியனை ஏற்றியதில் எங்களுக்குதான் பிரதான பங்கு என்று உரிமை கொண்டாடுவார்கள். உண்மை என்ன? பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இந்த விசயத்தில் தொடர்ந்து போராடி வருகின்றன. தமிழக அரசும் இதனை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிய நிலையில் இருந்தது மொத்தத்தில் இது ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றே மதிப்பிட முடியும்.
ம.க.இ.க.வை யாரும் கேள்வி கேட்கக் கூடாது! அப்படி கேள்வி கேட்க முடியாத சுத்த சுயம்புவாக இருக்கிறது. மார்க்சிய ஆசான் காரல் மார்க்ஸ் நடப்பில் உள்ளவை அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிக்க வேண்டும் என்கிறார். ஆனால் இவர்களைத் தவிர என்று நாம் திருத்தம் கொடுக்க வேண்டும் என்று ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. தலைமை எதிர்பார்க்கலாம். அவ்வாறு யாராவது கேள்வி எழுப்பினால் - விமர்சித்தால் அந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்க மாட்டார்கள். சந்துக்குள் ஓடி ஒளிந்துக் கொள்வார்கள். முகத்தையே காட்ட மாட்டார்கள். ஆனால் கேள்வி எழுப்புபவரின் பிறப்பு குறித்து அர்ச்சணை செய்வார்கள். இதே கீழே உள்ள பதிவை பாருங்கள். இவர்களின் அதிகாரப்பூர்வமான தமிழரங்கம் (http://tamilarangam.blogspot.com) தளத்திலிருந்து.
ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?
மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.
1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.
2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவர்கள்.
3. சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிப்பவர்கள்.
4. நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.
5. விபச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்து விபச்சாரம் செய்ய தூண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செய்பவர்கள்.
இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பால் அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.
இப்படி மக்களைப் பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். ஒரு விவாதத்தில் அப்படியும் இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள். இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகாந்திரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் எனன்வென்றால், அவர்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சும், மக்களை ஓடுக்குகின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.
இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.
பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை.
1. ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2. சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
3. நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4. இனப் பாகுபாடு பார்ப்பதில்லை.
5. மதப் பாகுபாடு பார்ப்பதில்லை.
இப்படி எந்தப் பாகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பார்ப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அணுகுகின்றது. அது பிறப்பில் பார்ப்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனிதத் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத்தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையையும் அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.
இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அணுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ளது. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெடுத்த பார்ப்பனியம் தான். அதை காவடியாக தூக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்குகின்றது.
இப்படி பிறப்பில் இருந்து ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகளின் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் ஊடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை தூக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனிதவிரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிசப் படுகொலையாக நடக்கின்றது. மனிதத் தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.
பி.இரயாகரன்13.07.2007
Friday, 13 July 2007 22:08
/////ம.க.இ.க.வை யாரும் கேள்வி கேட்கக் கூடாது! அப்படி கேள்வி கேட்க முடியாத சுத்த சுயம்புவாக இருக்கிறது. மார்க்சிய ஆசான் காரல் மார்க்ஸ் நடப்பில் உள்ளவை அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிக்க வேண்டும் என்கிறார்////
கோமாளி சந்திப்பு,
இதுவரை நீர் ம.க.இ.க.மீது வைத்த விமர்சணப்பதிவுகளை இங்கே பட்டியலிடமுடியுமா?
அதில் நிரம்பியிருந்த உமது அவதூறுகளையும் அல்பத்தனங்களையும் எமது தோழர்கள் எதிகொண்டு அளித்த பதில்கள் அனைத்தையும் (நீ பதிப்பிக்காமல் திருட்டுத்தனம் செய்தது போக) வாசகர்களின் பார்வைக்கு வைக்கமுடியுமா?
ஏன் கேட்கிறேன் என்றால், விமர்சனத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் எமது தன்மைக்கும், அதை அடியோடு மறுத்து, கேவலம் பின்னூட்டமாகக்கூட பதிவிட முடியால் பதுங்கும் உமக்கும் இடையில் ஒப்பிடும்படி ஏதாவது இருக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ்.காரன் கூட விவாதத்தை சரியாகவே தொடர்கிறான். அவன் எதிர்கொள்ளும் அனைத்து கேள்விகளையும் பதிவிட்டு பதிலலிக்க கடைசிவரை முயல்கிறான்.(வேண்டுமானால் அரவிந்தன் நீலகண்டன் போன்றோரின் பழைய பதிவுகளைச் சென்று பார்க்கவும்.)
பல நேரங்களில் எம்முடைய வார்த்தைகள் மிகவும் கடுமையாக உமக்கு எதிராக வந்து விழுவது ஏனென்றால், விமர்சனங்களை அடியோடு புறக்கணிக்கும் உமது கயமை புத்தியின் மீதான வெறுப்புதான்.
////சந்துக்குள் ஓடி ஒளிந்துக் கொள்வார்கள். முகத்தையே காட்ட மாட்டார்கள். ////
இது முற்றிலும் உமக்குத்தான் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இன்றுவரை உன்னால் பதிலலிக்காமல் கிடக்கும் என்னற்ற கேள்விகளை என்னால் இங்கு பட்டியலிடமுடியும். ஆனால் அதை நீ பதிப்பிக்காமல் வழக்கம்போல் மறைத்துவிட வாய்ப்பிருப்பதால்தான் தவிர்க்கிறேன்.
உம்முடைய இந்தப் பதிவு குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு நான் மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீர் இங்கே சுட்டிக்காட்டியிருப்பதை ஏதோ விமர்சனம் என்று என்னால் கருதமுடியவில்லை. ஏனென்றால், மிகக் கடுமையான குழப்பநிலையிலிருந்துதான் நீர் இதனை எழுதியிருப்பதாக எனக்குத் தெரிகிறது. விவாதத்தைத் தொடர்வது நேர்மையாக பின்னுட்டங்களைப் பதிப்பிக்கின்ற முறையிலிருந்துதான் துவங்கும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏகலைவன்.
அன்புள்ள சந்திப்பு,
கம்யூனிஸ தத்துவம் மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும், சிபிஎம் சிபிஐ கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாக தங்கள் கொள்கைகளை கூறி பொதுக்கூட்டம் நடத்தி தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்கின்றனர் என்பதால் அவர்கள் மீது என்னைப்பொன்ற சாதாரண தமிழர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் போன்ற சாதாரண தமிழருக்கு பிடிக்காத கொள்கை உடையவர்கள் என்றால் தமிழ்நாட்டில் எல்லா கட்சியினருமே இருக்கிறார்கள். யாருக்கு ஓட்டு போடுவது என்று நாங்கள் ஒவ்வொரு தேர்தலும் கட்சி மாறுவோம். ஆனால், ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து (அதனால்தான் சந்திப்பா?) அவர்களிடம் ஆதரவு கோரும் அனைவரையும், கருத்துகள் தாண்டி, என்னைப்போன்ற சாதாரண தமிழர்கள் மதிக்கின்றனர்.
நன்றி
தமிழ்மணி
தோழர்,
அங்கே ஏகலைவன் என்கிற எஸ்.ஓ.சி தோழர் உங்களை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார். அவர் பதிவின் சுட்டி - http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_16.html
பள்ளி கல்லூரி சமயத்தில் டைஃபியில் இனைந்திருந்த எனக்கு தத்துவம் குறித்த சரியான பயிற்சி கிடைக்கவில்லை. எனக்கு இந்த விவாதங்கள் எல்லாம் புதிதாக இருக்கிறது.. நீங்கள் அங்கே போய் விவாதிக்க வேண்டும் அல்லது அவர்களை இங்கே வந்து விவாதிக்க பகிரங்கமாய் அழைக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் தெளிவு பெற இந்த விவாதங்கள்.
////பள்ளி கல்லூரி சமயத்தில் டைஃபியில் இனைந்திருந்த எனக்கு தத்துவம் குறித்த சரியான பயிற்சி கிடைக்கவில்லை. எனக்கு இந்த விவாதங்கள் எல்லாம் புதிதாக இருக்கிறது.. நீங்கள் அங்கே போய் விவாதிக்க வேண்டும் அல்லது அவர்களை இங்கே வந்து விவாதிக்க பகிரங்கமாய் அழைக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் தெளிவு பெற இந்த விவாதங்கள்////
அனானி தோழர் அவர்களுக்கு, நானும் உங்களைப் போன்று இ.ஜ.வா.சங்கத்திலிருந்தவந்தான். அங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, நானும் சித்தாந்தப்பயிற்சிக்காக ஏங்கிக் காத்திருந்தவந்தான். அதே ஆர்வத்தில்தான் கடந்த 2003ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநிலந்தழுவிய dyfiன் பயிற்சிப்பட்டரையில், என்னுடைய வறுமையைக்கூட பொருட்படுத்தாமல் ரூ.500/- தட்சனையாகச் செலுத்தி, ஒருவாரம் அங்கே நடைபெற்ற அரட்டைக் கச்சேரிகளை தண்டனையாக அனுபவித்துச் சென்றவந்தான். என்ன செய்வது, முறையாகப் பயிற்றுவிப்பது என்பது அவர்களைப் பொருத்தவரை சி.பி.எம். கட்சிக்கு ஏவல்நாயாய் தோழர்களை உருமாற்றுவதுதான் போலும்.
விவாதப்புலி சந்திப்பு இதுவரை விவாதித்த அழகை எடுத்துச் சொல்லும் விதமாக தனியாகவே ஒருபதிவு எழுதத் திட்டமிட்டுள்ளேன். அங்கே வந்து பாருங்கள் அவருடைய மொன்னைத்தனமான விவாதங்களையும், பிறகு அட்ரசில்லாமல் தோற்று ஓடியதையும்.
நேரமிருந்தால் இந்த லிங்கைப் பயன்படுத்திச் சென்று பார்க்கவும், நம்ம விவாதப்புலியின் பம்மாத்து நாடங்களை.
http://thoughtsintamil.blogspot.com/2007/03/cpi-m.html
தோழமையுடன்,
ஏகலைவன்.
பள்ளி கல்லூரி சமயத்தில் டைஃபியில் இனைந்திருந்த எனக்கு தத்துவம் குறித்த சரியான பயிற்சி கிடைக்கவில்லை. எனக்கு இந்த விவாதங்கள் எல்லாம் புதிதாக இருக்கிறது..
அனானி நன்பரே! தங்களுக்கு இருந்த தத்துவார்த்த ஆவலை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் ஒரு சில வரிகள் உங்களுக்காக.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு வெகுஜன அமைப்பு. இதில் பலதரப்பட்ட இளை"ர்கள் - பலவர்க்க சிந்தனைக் கொண்ட இளை"ர்கள் ஈர்க்கப்படுவார்கள். இத்தகைய இளை"ர்களை முதலில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் மூலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பின்னர் படிப்படியாக சமுகத்தைப் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். எடுத்தவுடன் அங்கே காரல் மார்க்சை பற்றியோ அல்லது ஏங்கெல்சை பற்றியோ அல்லது பொருள் முதல்வாதம் பற்றியோ எல்லாம் பயிற்சி கொடுப்பதில்லை. இங்கே வகுப்புவாதத்திற்கு எதிரான நடவடிக்கை - அதில் நமது பார்வை, சுதந்திரப் போராட்ட வரலாறு, இளi"ர்களின் தியாகம்... இந்திய வரலாறு இப்படி படிப்படியாக உயர்த்தி பின்னர் அவர்கள் கட்சி உறுப்பினராக தங்களை பதிவு செய்துக் கொள்ளும் போது அங்கே நீங்கள் எதிர்பார்க்கும் பயிற்சி கிடைக்கும். இதில் சில நேரம் குறைகள் இருக்கலாம். அதற்காக யார் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு செல்வது மிக ஆபத்தானது. அவர்கள் பேச மட்டும்தான் செய்வார்கள். அவர்களுக்கு அதை மட்டுமே அங்கே போதிக்கிறார்கள். அவர்கள் மக்களுடன் இயக்கத்தை கட்டுவதற்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் நாங்களே உயர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு சி.பி.எம். - டி.ஒய்.எப்.ஐ. தோழர்களை மட்டும் அணுகி தங்கள் இயக்கத்திற்கு ஈர்க்கும் அற்பவாதிகள்.
எனவே தற்போது இணையத்தில் நடைபெறும் விவாதம் எந்த அளவிற்கு பயனளுக்கும் என்று எனக்குத் தெரியிவில்லை. இருப்பினும் அவர்களது உண்மை முகத்தைவெளிக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தோடே இங்கு பதிவு செய்யப்படுகிறது.
நீங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட தோழர்களை அணுகலாம். அல்லது என்னுடைய இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம் ksperumal@gmail.coஅ நன்றி.
நானும் உங்களைப் போன்று இ.ஜ.வா.சங்கத்திலிருந்தவந்தான். அங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, நானும் சித்தாந்தப்பயிற்சிக்காக ஏங்கிக் காத்திருந்தவந்தான். அதே ஆர்வத்தில்தான் கடந்த 2003ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநிலந்தழுவிய dyfiன் பயிற்சிப்பட்டரையில், என்னுடைய வறுமையைக்கூட பொருட்படுத்தாமல் ரூ.500/- தட்சனையாகச் செலுத்தி, ஒருவாரம் அங்கே நடைபெற்ற அரட்டைக் கச்சேரிகளை தண்டனையாக அனுபவித்துச் சென்றவந்தான். என்ன செய்வது, முறையாகப் பயிற்றுவிப்பது என்பது அவர்களைப் பொருத்தவரை சி.பி.எம். கட்சிக்கு ஏவல்நாயாய் தோழர்களை உருமாற்றுவதுதான் போலும்.
அன்பு நன்பரே! ஏகலைவா? நீங்கள் வாலிபர் சங்கத்தில் இருந்ததற்காக பெருமிதப்படுகிறேன். அந்த படிக்கல்தான் உங்களை தற்போது தன்மானத்தோடு எதிர் விவாதத்திற்காகவாவது தூண்டியிருக்கிறது. உண்மையான ம.க.இ.க. - அனானி கு;"சுகள் இதுவரை தலையையே காட்டவில்லை. ஒருவேலை குழுவிவாதம் நடத்தி பின்னர் தாக்கலாம் என்று காத்திருப்பார்கள் என்றே கருதுகிறேன். சரி விடுவோம்.
வாலிபர் சங்கத்தில் உங்களது எதிர்பார்ப்பு பூர்த்தியாகாமல் இருந்திருக்கலாம். அதற்காக நிச்சயமாக நானும் வருந்துகிறேன். ஆனால் ஒரு விசயம் அங்கே நடப்பது அரட்டை கச்சேரிகள் அல்ல. கடந்த அனுபவத்தின் படிப்பினைகளைக் கொண்டுதான் பலவிதங்களில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. உங்களுக்கு எது அரட்டையாக பட்டது என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் அதனை விமர்சித்து இருக்கலாம். அதற்காக கற்பனாவாத புரட்சிக் குட்டையில்தான் மூழ்குவேன் என்பது தற்கொலைக்கு ஒப்பாகும்! சி.பி.எம்.க்குள் ஏவல் நாய்கள் எதுவும் இல்லை. அவ்வாறு யாரேனும் இருந்து உங்களை ஏவி விட்டிருந்தால் அவர்களை எதிர்த்து போராடுவதற்கே முடியாமல் ஓடும் நீங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து எப்படி புரட்சி நடத்தப் போகிறீர்கள்? இன்னும் கொ;"சம் நாள் இருங்கள் ம.க.இ.க. வெறும் சன்னியாசி மடம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
/////அன்பு நன்பரே! ஏகலைவா? நீங்கள் வாலிபர் சங்கத்தில் இருந்ததற்காக பெருமிதப்படுகிறேன். அந்த படிக்கல்தான் உங்களை தற்போது தன்மானத்தோடு எதிர் விவாதத்திற்காகவாவது தூண்டியிருக்கிறது./////
என்னுடைய தன்மானத்தை நீர் மெச்சுவது கிடக்கட்டும், உமக்கும் தன்மானத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நான்கு நாட்கள் கடந்துவிட்டன. எமது அமைப்பின் மீதும் அதன் திட்டத்தின் மீதும் நீர் வைத்திருப்பது விமர்சனமே அல்ல. அது வெறும் அவதூறு நோக்கில் எழுதப்பட்டது மட்டுமே. என்பது தெரிந்திருந்தும் இங்கே நான் விவாதித்துக் கொண்டும், மேலும் விவாதத்தை அர்த்தமுள்ளதாகத் தொடரவும் கோரிவருகிறேன். அதற்கு இதுவரை நேரிடையாக பதில் சொல்ல வக்கற்ற உமது தன்மானம்; சி.பி.எம்.மின் தன்மானத்திற்கு(!) சற்றும் சளைத்ததல்ல.
/////உண்மையான ம.க.இ.க. - அனானி கு;"சுகள் இதுவரை தலையையே காட்டவில்லை. ஒருவேலை குழுவிவாதம் நடத்தி பின்னர் தாக்கலாம் என்று காத்திருப்பார்கள் என்றே கருதுகிறேன். /////
எமது தோழ்ர்களைப் பொறுத்தவரை சந்திப்பு என்கிற 'தருமி'க்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை என்றே கருதுகிறேன். அது தேவையுமில்லை என்றே தோன்றுகிறது. உம்முடைய விவாத யோக்கியதையை நன்குணர்ந்ததினால்தான், உன்னையும் ஒரு மனிதனாக மதித்து விவாதிப்பதைத் தவிர்க்கிறார்கள். நீ மொதல்ல பதிவிடாத பழைய பின்னூட்டங்களுக்கும், எமது கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு வா, பிறகு எமது தோழர்களுடன் விவாதிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.
'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் டாடாயிஸ்ட்'ன் சென்னை கார்ப்பரேட் ஆபீசில் ஒரு கம்ப்யூட்டரையும், ஏசியும் ஓசியில் கிடைத்துவிட்டால், எதைவேண்டுமானாலும் நீட்டி முழக்கி எழுதுவதும். மேலும் யாராவது வந்து கேள்வி எதுவும் கேட்டுவிட்டால் பாயையும் படுக்கையையும் சுற்றி எடுத்துக் கொண்டு சில மாதங்களுக்கு இந்தப்பக்கமே தலைகாட்டாமல் ஒளிந்து கொள்வதும் உமக்கு வாய்த்திருக்கும் படிப்பினை.
அன்றாடம் பத்தும் இருபதுமாக செலவழித்து, பதிலைக் கண்டு தொடைநடுங்கும் ஒரு கோழைக்காக நேரத்தையும் சேர்த்து வீனாக்குவது என்னைப் பொருத்தவரை பயனற்றதாகும்.
/////அவ்வாறு யாரேனும் இருந்து உங்களை ஏவி விட்டிருந்தால் அவர்களை எதிர்த்து போராடுவதற்கே முடியாமல் ஓடும் நீங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து எப்படி புரட்சி நடத்தப் போகிறீர்கள்? /////
கட்சிக்குள்ளேயே இருந்து போராடுவது போன்ற கயவாளித்தனத்தையெல்லாம் உண்மையென்று நம்பிக்கொண்டுதான் இன்னும் சொற்பமான நல்ல ஊழியர்கள் உம்மோடு தாக்குப்பிடித்து நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு கட்சிக்கு எதிராக ஏதாவது ஒரு சிறிய விமர்சனத்தை முன்வைத்துவிட்டால் போதும், அவன் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அவனுக்கு உம்மால் வழங்கப்படும் முதல் நாமகரனம் 'நக்சலைட்' என்பதுதான். இதுல நீ ம.க.இ.க.தோழர்களை நக்சலைட்ன்னு சொல்றதப்பத்தி கேக்கவாவேனும்?.
இந்த லட்சனத்துல கட்சிக்குள்ளேயே, கட்சியை எதிர்த்துப் போராடாதவன் எப்படி புரட்சியை நடத்தமுடியுமுன்னு வியாக்கியானம்வேறு. ஒரு மாவட்டத்துக்கு பதினைந்து கோஷ்டிகள், மாநாடுகளெல்லாம் பதவிச்சண்டைகளால் மானமிழந்து சந்திசிரிக்கிறது.
உருட்டுக்கட்டைகளும், குவாட்டர் பாட்டிலுமில்லாமல் எந்த மாநாடும் நடத்தப்படுவது கிடையாது (பார்க்க தெகல்கா இதழ்). இதையெல்லாம் மீறி நானும் கட்சிக்குள்ளேயே ஒக்காந்து கும்மியடிக்கனுமா? அதுதான் புரட்சிக்கான வழியாம். த்தூதூ இந்தப் பொழப்ப நீயே பொழச்சிக்க.
எமது அமைப்பின் மீதும் அதன் திட்டத்தின் மீதும் நீர் வைத்திருப்பது விமர்சனமே அல்ல. அது வெறும் அவதூறு நோக்கில் எழுதப்பட்டது
நீங்கள் எழுதினால் அட்சரம் பிசகாத விமர்சனம். மற்றவர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தால் - உண்மையை புட்டு வைத்தால் அவதூறு.... தூ... இதுவும் ஒரு பொழப்பா!
இதுவரை நீர் தொடுத்துள்ள அனைத்து செல்லரித்துப் போன கருத்துக்களையும் வெளியிட்டுள்ளேன். அப்புறம் என்ன தனியே விவாதம்! இதுவரை உங்களது கற்பனாவாத திட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு வெறும் சால்ஜாப்புதான் பதிலாகப் பெற முடிந்தது.
எமது தோழ்ர்களைப் பொறுத்தவரை சந்திப்பு என்கிற 'தருமி'க்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை என்றே கருதுகிறேன். அது தேவையுமில்லை என்றே தோன்றுகிறது.
அப்புறம் எதற்கு விவாதம் அது இதுன்னு பில்டப்பல்லாம்.... ஏகாதிபத்திற்கு எடுபிடியாக சேவை செய்வதுதானே உங்களது தனிப் பிழைப்பு!
'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் டாடாயிஸ்ட்'ன் சென்னை கார்ப்பரேட் ஆபீசில் ஒரு கம்ப்யூட்டரையும், ஏசியும் ஓசியில் கிடைத்துவிட்டால், எதைவேண்டுமானாலும் நீட்டி முழக்கி எழுதுவதும்.
ஏகலைவா... உங்கள் அனானி குசும்புகள் எல்லாம் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இணைய புரட்சி செய்வதை உலகமே அறிந்து வைத்துள்ளது.
this is not good place for a idelogal & program fight,this for mentaly.
வணக்கம் தோழரே அருமையான கட்டுரை. CPI-ML(SOC)யின் பல அந்தர் பல்டிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல நாடுகளில் அரசின் உளவு பிரிவுகள் அரசுக்கு எதிர் பிரிவுகளை தாங்களாகவே உருவாக்கி செயல்படுவார்கள் அரசின் கைப்பாவையாக................
plz visit my blog : http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post.html
Post a Comment