April 01, 2008

பாசிசத்தின் இரு முகங்களே மதவெறியும், இனவெறியும்

தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமே 'ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்' மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மாசுபட்டு - ப்ளோரைடு எனும் ஆபத்தான இரசாயணம் கலந்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் நல்ல - தூய்மையான குடிநீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்னர்.
கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடிநீருக்காக ஏங்கி இருக்கின்றனர்.இந்த நேரத்தில் ப்ளோரைடின் ஆபத்தையும் அறிந்து கொள்வது நல்லது. ப்ளோரைடு கலந்த நீரை அருந்துவதால் கருச்சிதைவு. முட்டிகள் முடங்குதல். பற்கள் கரைபடிந்து வெளிறிப்போகுதல் உட்பட பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தமிழக அரசின் சீரிய முயற்சியால் ஜப்பான் வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை 1334 கோடி ரூபாயில் நிறைவேற்ற முன்வந்துள்ளது நெஞ்சில் பால்வார்த்தால் போல் இருந்தது இம்மக்களுக்கு!
தேசிய முகமூடி அணிந்து திரியும் பா.ஜ.க. தமிழகத்தில் ஏற்கனவே சேது சமுத்திர திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டதைப் போல் இந்த திட்டத்தையும் முடக்க சதித் திட்டம் தீட்டி செயலாற்றி வருகிறது. கருநாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில் பா.ஜ.க.வின் புறவழி முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக எல்லையில் உள்ள ஓகேனக்கல்லில் நுழைந்து "நமதே நமதே ஒகேனக்கல் நமதே" என கோஷமிட்டு, இந்த திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
சங்பரிவாரம் தன்னுடைய சுயநல அரசியலுக்காக மதவெறியை மட்டுமல்ல - இனவெறியையும் கூட பயன்படுத்தும் என்பதை இதன் மூலம் வெட்கம் இல்லாமல் அறிவித்துள்ளது. வருங்கால பிரதமர் அத்வானி முதல் செயல்படாத பிரதமர் வாஜ்பாய் வரை எந்த தேசிய தலைவரும் பா.ஜ.க.வின் இந்த பித்தலாட்ட செயல்பாட்டை கண்டிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் தமிழர்களுக்கு எதிராகவும் - தென்னிந்தியர்களுக்கு எதிராகவும் கொம்பு சீவி விட்டு வளர்ந்த சிவசேனா இன்றைக்கு இந்தி பேசும் மக்களுக்கு எதிராக முட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கேடு கெட்ட இனவெறியர்களோடு - எப்போதும் நகையும் சதையும் போல் உறவாடும் பா.ஜ.க.விற்கு என்ன கொள்கை உண்டு? மகாராஷ்டிராவாக இருந்தாலும் - கருநாடகமாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக எல்லா இழிவான செயல்களையும் செய்யத் தயங்காத பாசிச மதவெறிக் கூட்டத்தின் கையில் இன்றைக்கு பூமாலையாக கிடைத்திருப்பது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.
தமிழகத்திற்கு சொந்தமான - தமிழக எல்லைக்குள் இருக்கிற இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கருநாடகத்தில் உள்ள இனவெறியையே தொழிலாக கொண்டுள்ள அமைப்புகளைக் கூட முந்திக் கொண்டு சங்பரிவாரம் களத்தில் இறங்கியுள்ளது. ஓகேனக்கல்லை மீட்கப் போகிறதாம்!ஒரே மக்கள் - ஒரே தேசம் - ஒரே நாடு என்று கொள்கை பேசும் மதவெறி கும்பலின் இழிவான கொள்கைக்கு இதைவிட வேறு சாட்சியே வேண்டாம்.
இந்த விசயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இரண்டு மாநில மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கும் முகமாகவும் - மாநிலங்களின் உரிமைப் பிரச்சினைகளில் அத்துமீறித் தலையிடும் அடாவடிப் பேர்வழிகளுக்கு எதிரகாவும் கடுமையாக நடவடிக்கை எடுத்து இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிட துரிதமாக செயலாற்றிட வேண்டும். மதவெறி கும்பலின் பசப்பு வேலைகளுக்கு இரண்டு மாநில மக்களும் இடம் கொடாமல் செயலாற்றிட வேண்டும். மதவெறியும் - இனவெறியும் மக்களை சுடுகாட்டிற்கே அழைத்துச் செல்லும்.பா.ஜ.க. துவக்கி வைத்த ஓகேனக்கல் ஆடு - புலி ஆட்டத்தில் வீழப் போவது மதவெறியாக அமையட்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் ஜனநாயக சக்திகள் - மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அதுவே அவர்களுக்கு வைக்கும் மீள முடியாத செக்காக அமையும்.

18 comments:

Anonymous said...

இந்தப் பிரச்சினையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் இல. கணேசன் அவர்கள் எடியூரப்பாவைக் கண்டித்துப் பேசியிருக்கிறாரே அது பற்றி தங்கள் கருத்து என்ன நண்பரே?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீங்கள் இல.கணேசனின் அளவுக்குக்கூட நேர்மையற்று இன்று வரை அந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏனோ?
மதவெறியும் இனவெறியும் இல்லாத உங்களுக்கு இவ்விடயத்தில் தடையாக இருப்ப‌து பதவிவெறி என்று வைத்துக்கொள்ளலாமா?

Anonymous said...

இந்தப் பிரச்சினையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் இல. கணேசன் அவர்கள் எடியூரப்பாவைக் கண்டித்துப் பேசியிருக்கிறாரே அது பற்றி தங்கள் கருத்து என்ன நண்பரே?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீங்கள் இல.கணேசனின் அளவுக்குக்கூட நேர்மையற்று இன்று வரை அந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏனோ?
மதவெறியும் இனவெறியும் இல்லாத உங்களுக்கு இவ்விடயத்தில் தடையாக இருப்ப‌து பதவிவெறி என்று வைத்துக்கொள்ளலாமா?

சந்திப்பு said...

மதவெறிக்கு எப்போதும் இரண்டு முகங்கள் உண்டு. அதன் ஒரு முகம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நாடகம் ஆடுவது. அதைத்தான் இல. கணேசன் செய்திருக்கிறார்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை பெரும் சாதனையாக பறைசாற்றியவர்கள். இப்போது இராமர் பாலம் என்று மணலை கயிறாக திரிக்கிறார்கள்.

இப்போது இல. கணேசன் ஜியும் ஆமாம் ஆமாம் இராமர் மண்சுமந்து கட்டிய பாலம்தான் அது என்று ஒத்தூகிறார். வேறு சில சமயம் பாதையை மாற்ற வேண்டும் என்றும் கோருகிறார். இது யாரை ஏமாற்றுவதற்கு?

முல்லை பெரியாறு விசயம் அப்படியல்ல. ஒகேனக்கல் விசயமும் முல்லைப் பெரியாறு விசயமும் வேறு வேறானது. கேரள அரசைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு தண்ணிர் தரமாட்டேன் என்ற நிலையை ஒருபோதும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து முல்லைப் பெரியாறு வழியாகவும் - அழியாறு வழியாகவும் தண்ணிரை தமிழகத்திற்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அணையின் உயரத்தை உயர்த்த வேண்டும் என்ற விசயத்தில் - அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது. எனவே மக்களிடையே இருக்கக்கூடிய இந்த அச்சத்தை மீறிய எந்த அரசாவது செயல்பட முன்வருமா? எங்களைப் பொறுத்தவரை இந்த விசயத்தில் இரண்டு மாநில அரசுகளும் இதனை பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமாக பேசித் திருத்துக் கெள்ள வேண்டும் என்பதே. இங்கே தமிழக உரிமையை விட்டுக் கொடுப்பதோ? அல்லது கேரள உரிமையை பறிப்பதோ? இரட்டை வேடம் போடுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஓகேனக்கல் விசயம் அப்படியா? தமிழகத்தின் மூக்கில் மேல் விரலை நீட்டுகின்ற விசயம். அது சரி இந்த அனானி இந்த இரண்டு விசயத்திலும் எதைத் தீர்வாக முன்வைக்கிறார் என்று தெரிந்துக் கொள்ளலாமா? குழப்பல்வாதத்தையா? அல்லது சந்தில் சிந்து பாடுவதையா?

Anonymous said...

சந்திப்பு

உங்கள் பதில் கொஞ்சம் காமடியாக இல்லையா? உச்ச நீதி மன்றம் வல்லுனர்கள் கருத்தாய்விற்க்குப் பின் உயர்த்தலாம் என்று சொன்ன பிறகும் மக்களைத் தூண்டி விட்டு அதனடிப்படையில் தண்ணீர் தர மறுக்கும் கேரளத்தை , புதிதாக அணை என்று போகாத ஊருக்கு வழி சொல்லிக் கிளம்பியிருக்கும் கேரளத்தை சப்போர்ட் பண்ணுவதும் ( அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால்) அதே கர்நாடகாவில் பாஜக செய்தால் இனவெறி மத வெறி என்பதும் இரட்டை நிலை பாடு இல்லை என்று சொன்னால் நம்பி விட்டோம் :)

periyar said...

முல்லைப்-பெரியார் அணையை இன்னொரு இடத்தில் கட்ட வேண்டும் என்று கோருவது யார்.உச்சநீதி மன்றம் அணையின் உயரத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்பு தந்த
பின்னும் அதை செய்ய மறுப்பது
யார்.கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் இத்திட்டத்தை
எதிர்க்கின்றன.அங்குள்ள பாஜக
எதிர்க்கும் போது இங்குள்ள
பாஜக அதை ஆதரிக்கவில்லையே.
மதவெறியர்களுக்கு ஆதரவாக
தஸ்லிமாவை துரத்திய கட்சி சிபிஎம்.
இப்போதும் அதைப் பற்றி வருந்தாமல்
முஸ்லீம்கள் ஒட்டுகளுக்காக சச்சார்
கமிட்டி பரிந்துரை என்று மதரீதியாக
பட்ஜெட் போடச் சொல்லும் மதவாதக
கட்சி சிபிஎம்.
உங்களுக்கு பாஜகவை விமர்சிக்க
ஒரு அருகதையும் இல்லை.

சந்திப்பு said...

அனானி நன்பரே!

இங்கே எந்தக் காமெடிக்கும் இடமில்லை. சிந்தனைக்கு மட்டுமே இடமுண்டு. கருநாடக பா.ஜ.க. மற்றும் இனவாத அமைப்பினர் தமிழக எல்லைக்குள் புகுந்த அநாகரீகமாக நமதே நமதே ஒகேனக்கல் நமதே என்பது போன்ற எந்த கோசத்தையும் கேரள கம்யூனிஸ்ட்டுகளோ அல்லது கேரளத்திலுள்ள அமைப்புகளோ முன்வைக்கவில்லை என்பதை முதலில் உணருங்கள். மேலும் பா.ஜ.க. உட்பட கருநாடக அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை உரிமை கோரப்போவதாக கூறிக் கொண்டு கருநாடகத்தில் தமிழக அமைப்புகள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளன. மேலும் இது தமிழக எல்லைக்குட்பட்ட ஒகேனக்கல் பிரச்சினை சம்பந்தப்பட்டது. இதில் கருநாடகம் எந்தவிதமான உரிமையும் கொண்டாடுவதற்கு இடமேயில்லை.

ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஆய்வுக்குழு அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் கேரள மக்கள் மத்தியில் உள்ள அச்சமான நிலையை யார் அகற்றுவது? எனவே கேரள அரசைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தருவதற்கு தயார் என்றே அளித்துள்ளது. அவர்களின் கோஷமே தமிழகத்திற்கு தண்ணீர் - அணைக்கு பாதுகாப்பு. இதுதான். எனவே இந்த விசயத்தில் இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் ஒரே நிலை.

தமிழக - கருநாடக பா.ஜ.கவின் இரட்டை வேடமெல்லாம் எங்கும் கிடையாது அன்பரே.

சந்திப்பு said...

மதவெறியன் கோட்சே கூட ராம பக்தர் மகாத்மாவை கொலை செய்யும் போது இசுமாயில் என்று கையில் பச்சைக் குத்திக் கொண்டே கொலை செய்தான். அவனது நோக்கம் அந்த கொலையை செய்தது இசுலாமியர்கள் என்ற பழிவரவேண்டும் என்ற மதவெறி நோக்கமே. பாசிச நோக்கமே. அதே பாணியை இங்கே பின்பற்றும் பெரியாருக்குள் ஒளிந்திருக்கும் பாசிச அனானியே!

தஸ்லீமா நஸ்ரின் எங்கே இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது மேற்குவங்க அரசு அல்ல. இந்திய அரசுதான். தலாய் லாமா இங்கே இருக்கக்கூடாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கூறினால் இந்திய அரசு அனுப்பி விடுமா? மேலும் மேற்குவங்கத்தில் நந்திகிராம் பிரச்சினையில் குளிர்காய நினைத்த நக்சலைட்டுகள் - சங்பரிவாரம் - மமதா - இசுலாமிய அடிப்படை வாதிகள் அனைவரும் புனிதக் கூட்டுச் சேர்ந்தனர். எதற்கு இடதுசாரி அரசை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் அரசை ஒழிப்பதற்காக. இந்த நிலையில்தான் தஸ்லீமா பிரச்சினையையும் நந்திகிராம தோல்விவாதிகள் எழுப்பி வங்கத்தில் கலவரத்தை தூண்ட முனைந்தனர். அவர்களை அடக்க முதல் முறையாக மத்திய அரசு படை வரவழைக்கப்பட்டது மேற்குவங்கத்தில். எனவே காட்டுமிராண்டிகள் எப்போதும் மதச்சார்பின்மை பற்றி வாய்திறக்கக்கூடாது.

periyar said...

தஸ்லீமாவை வலுக்கட்டாயமாக கொல்கத்தாவிலிருந்து அனுப்பி வைத்தது எந்த அரசு.அவர் கொல்கத்தாவில் திரும்பி வருவதை
எந்த அரசு ஆட்சேபித்தது.ருஷ்டி இந்தியாவிற்குள் வரக்கூடாது என்று
ஆர்ப்பாட்டம் செய்யும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி போடத் துடிப்பது சிபிஎம்.மதசார்பின்மை என்றால்
அது முஸ்லீம் ஆதரவு என்று நிலைப்பாடு எடுத்து, அவர்கள் ஒட்டிற்காக என்ன வேண்டுமானாலும்
செய்யும் போலி கம்யுனிஸ்ட்களின் கட்சி சிபிஎம்.

சந்திப்பு said...

ஒகேனக்கல் : தேர்தலுக்காகவே பாஜக கலவரத்தை தூண்டுகிறது கர்நாடக மாநிலச் செயலாளர் வி.ஜே.கே.நாயர் குற்றச்சாட்டு

அனில் பிஸ்வாஸ் நகர், கோவை ஏப். 2-

கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தலை குறி வைத்து, இன வெறியையும், மொழி வெறியையும் பாஜக திட்டமிட்டு தூண்டி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கர்நாடக மாநிலச் செயலாளர் வி.ஜே.கே. நாயர் குற்றம் சாட்டி னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்அகில இந்திய மாநாட்டில் பங் கேற்றுள்ள அவர், தீக்கதிருக்கு அளித்த பேட்டியின் போது, ஒகேனக் கல் பிரச்சனையில் பாஜகவின் வெறிப் பிரச் சாரத்திற்கு இடம் கொடுக்காமல் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, எப்படியேனும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, காவிரி,ஒகேனக்கல் போன்ற ஒவ்வொரு பிரச்ச னையிலும் திட்டமிட்டு பிரதேச வெறியை பாஜக தூண்டி விடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மகள் வீட்டின் மீது தாக் குதல் நடத்தியது பாஜகவால் தூண்டிவிடப்பட்ட வெறியர்கள்தான். இவர்கள் தமிழ் விரோத உணர்வுடன் செயல்படுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை கடுமையாக எதிர்க்கிறது.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என்பது, கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்க ளுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம். குடிநீர் வழங்கும் திட் டத்தை எதிர்ப்பதை ஏற்க முடியாது. தற்போது கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் பிரச் சனையை வைத்து வரும் 10ம் தேதி பந்த் நடத்தப் போவதாக கர்நாட கத்தில் உள்ள இனவெறி சக்திகள் அறிவித்துள்ளன. இவர்களை ஆத ரிக்கும் பாஜக, பிரச்சனையை பெரிதாக்கி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எனவே உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.ஜே.கே. நாயர், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது சந்தர்ப்பவாதத்தால் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது. பாஜக தேர்தலில் அதிக இடங்களைப் பெற முடியாது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, கர்நாடகத்தில் பாஜகவை அம்பலப் படுத்தும் பிரச்சாரத்தை தீவிரமாக கொண்டு செல்வோம் என்றார்.

Thanks:http://theekkathir.in/index.asp

Anonymous said...

கர்நாடகாவில் சிபிஎம் வலுவாக இல்லை. 10 ஆண்டுகளில் அங்கு பாஜக பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது,
சிபிஎம் தேய்ந்துள்ளது.இருந்தாலும்
இந்த மூடர்கள் பாஜக ஒழிக என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்,
தாங்கள் வளர செய்ய வேண்டியதை
செய்ய மாட்டார்கள்.

ஜயராமன் said...

இது மாநிலங்கள் இடையிலான பிரச்சனை.

இம்மாதிரி மாநிலங்கள் இடையிலான பிரச்சனைகளில் எப்போதும் எல்லா தேசீய கட்சிகளும் தத்தம் மாநில அமைப்புகளிடையே வெவ்வேறு கருத்துக்களையே கொண்டு செயல்பட்டுவருகின்றன. இப்போதும் அப்படித்தான். இது காங்கிரஸூக்கும் பொருந்தும், பாஜபா விற்கும் பொருந்தும். நீங்கள் வழக்கம்போல இனவெறி அதுஇது என்று சொல்லி பாஜபாவை குற்றம் சொல்லுகிறீர்கள். இதே போல், கிருஷ்ணாவும் சண்டித்தனம் செய்கிறார். அது குறித்து ஒன்றும் இல்லை.

ஆனால் ஒன்று, இந்த இன வாத அரசியலை முதலில் ஆரம்பித்து பதவிக்கு வந்ததே இந்த தீராவிட இழி இயக்கங்கள்தாம். எம்ஜிஆரை மலையாளி என்று சொல்லி இகழ்ந்ததும், தமிழகத்தில் மலையாளிகளின் வியாபார தளங்கள் மீது வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டதும், நீங்கள் அறியவில்லையா, இல்லை மறைக்கிறீர்களா? இப்படி இந்தியாவிற்கே இந்த இழி அரசியலில் முன்னோடியாக இருந்த ஒரு இனவெறி கழகம் என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். இன்று இந்த விடம் இந்தியாவில் முழுக்க பரவி வருவதற்கும் மத்திய அரசின் கையாலாகாத்தனமே காரணம். அந்த மத்திய அரசை ஆட்டி வைத்துக்கொண்டிருப்பதும் அந்தசி பிஎம் மும் திமுகவும்தான். அவர்களுக்கும் இந்த பழி சேறும்.

நன்றி

ஜயராமன்

bala said...

ஜயராமன் அய்யா,
சரியாக சொன்னீர்கள்.சி பி எம் மற்ரும் தி மு க இந்த நாட்டை பீடித்துள்ள பிணிகள்;சி பி எம் கேவலமான சீனாவுக்கு அடிவருடும் அல்பங்கள்;தி மு க, கேலமான பிரிவினை பேசும் பொறிக்கி கட்சி.இந்த இரண்டு கும்பலும் கேவலமான காங்கிரசுடன் சேர்ந்து மத்திய அரசை ஒன்றுக்கும் லாயக்கில்லாத அரசாக ஆக்கிவிட்டது கேவலம்.இந்த இரண்டு பொறிக்கி கும்பலையும் இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.

பாலா

ஏகலைவன் said...

கலவரத்துக்கே பொறந்து, இந்து, முசுலீம், கிறித்தவம் என்ற அனைத்து மத சாதாரண உழைக்கும் மக்களின் இரத்தம் குடித்து வளர்ந்து இன்று கொழுத்துக்கிடக்கிற பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பலைச்சார்ந்த செயராமன், பாலா என்ற இரு அம்பிகளேடு, பெரியார் (என்ற பெயரிலேயே ஒளிந்து கொண்டிருக்கும் 'தமிழ்மணி' என்ற பெயரில் எழுதிவந்த) பார்ப்பனமணியும் இங்கே தங்களது 'சோ'மாறித்தனமான கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம்ம சந்திப்பும், தான் சார்ந்திருக்கிற கட்சியைப் புண்படுத்திவிடாமல் இவர்களை எதிர்க்கத் துடிக்கிறார். பாம்பை அடிக்க வேண்டுமென்றால் அதன் தலையைத்தான் முதலில் நசுக்கவேண்டும், அதைவிடுத்து நம்ம 'காம்ரேட்' (தன் கட்சியின் பாணியிலேயே....)அதன் வாலுக்கு குறிவைக்கிறார். அது வளைத்துக்கொண்டு கடிக்கச் சீறுகிறது.

எல்லாத்துக்கும் காங்கிரசு அரசு சரியில்லைன்னு (காங்கிரசும் சி.பி.எம்.மும் கூட்டுக்களவானிகள்தான் என்பது வேறு விசயம்)கூச்சல் போடுவான், "சரி காங்கிரசும் மத்த எவனும் தான் சரியில்லை, 'ரொம்ப சரி'யாயிருக்குற நீயும் ஒங்கட்சிக்காரனும் எதப்புடுங்கிக்கிட்டு இருக்கீங்க?"ன்னு அவன நாக்கப்புடுங்குறமாதிரி கேக்கவேணாமா?

இனவாத அரசியலை திராவிடக்கட்சிகள் தான் ஆட்சியைப்புடிக்க நடத்துவதாக நம்ம 'மாமா' செயராமன் பதறுகிறார். பிரிவினை பேசியதன் மூலமாகவே வளர்ந்து இன்றைக்கு தேசியக்கட்சிக்கான அந்தஸ்த்தைப் பெற்ற இந்த இந்து பாசிச மதவெறிக்கும்ப‌ல், குஜாராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம் மக்களைக் கொன்று இந்துவெறிக்கேடி 'மோடி'யை ஆட்சியில் அமர்த்திய இந்தபேடிகள், தமிழகத்தில் நடந்த மொழிப்போரைத் தூற்றுகின்றன.

நாம தமிழங்க, இதப்பத்திக் கேக்கவேண்டிய கடமையும் உணர்வும் நமக்கு இருப்பது இயற்கை. இந்த 'தமிழ்விரோத' மணியாட்டிக் கூட்டம் இதப்பத்தி பேசறதுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

டேய் குடுமிமாமா, தழிழையும் தமிழனையும் ஒங்களவிடக் கேவலமாக இழிவுபடுத்தியவன் வேறெவனும் இல்லை. உங்களுக்கான கணக்கும் இந்த மண்ணில் விரைவில் தீர்க்கப்படும், அதன் தொடக்கம் தில்லையிலிருந்து தமிழகம் முழுவதும் பரவவிருக்கிறது.


ஏகலைவன்.

Anonymous said...

இந்த திட்டம் சப்பான்
அரசு நிதி உதவி பெற்று நிறைவேறுமாம்.ஏன் இங்கு இதற்கு நிதிவசதி இல்லையா.இலவ்ச
டி.வி என குடும்பத் தொழில்
வளர்க்க ஊர்ப்பணத்தை கொடுக்கும்
கருணாநிதியை, மெளனம் காக்கும் காங்கிரஸை கண்டித்துவிட்டு
பாஜகவை கண்டித்தால் நியாயம்.
உங்கள் பாஜக எதிர்ப்பு அரசியல்
அர்த்தமற்றது.ஒரு 100 பேர்
முற்றுகையிட்டால் பாஜகவிற்கு
ஒன்றும் ஆகிவிடாது. தைரியமிருந்தால் தேர்தலில்
நின்று அவர்களை தோற்கடியுங்கள்.

சிபிஎம், ம.க.இ.க தொடர்ந்து
எதிர்த்தாலும் பாஜக ஒழிந்து
போய்விடவில்லை. 20 ஆண்டுகளில்
அவர்கள் பெரும் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள்.நீங்கள்
அரசியலில் கடுகு,சுண்டைக்காய்
அளவில் இருக்கிறீர்கள்.

Anonymous said...

ஏகலைவன் என்ற பெயரில் எழுதுபவருக்கு

அருமையாகச் சொன்னீர்கள்.யாருடைய கருத்துக்காவது பதில் சொல்ல முடியாதெனில் புழு,பூச்சி,மாமா சோமா என்றெல்லாம் தனி மனித தாக்குதலில் இறங்க வேண்டியது..அதில் பார்ப்பனீய இன்ன பிற வார்த்தைகளும் சேர்த்து விட்டால் அதுவே கருத்தின் எதிவாதமாகி விடும்.

நல்ல சிந்தனை. இப்படியே தொடருங்கள் :)

Anonymous said...

சந்திப்பு

////"ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஆய்வுக்குழு அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் கேரள மக்கள் மத்தியில் உள்ள அச்சமான நிலையை யார் அகற்றுவது? /////


இதைத்தான் காமெடி என்று குறிப்பிட்டேன். அச்சத்தை உண்டாக்கியதே அங்குள்ள அரசுகள் தான் (சிபிஎம் மற்றும் காங்கிரஸ்)
அணைக்கு ஆபத்தில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் வல்லுனர்கள் கருத்துக்குப் பின்னும் அணை உடைந்து விடுவது போல் அனிமேசன் வீடியோ எடுத்து மக்களை திகிலூட்டியது சிபிஎம் அரசாங்கம்தான். மற்றும் அணைக்கு பாதுகாப்பில்லை ,வேறு அணைதான் கட்ட வேண்டும் என்று தின மலர் பத்திரிக்கை முதற்கொண்டு அச்சுதானந்தன் படம் போட்டு கேரள அரசு செய்த விளம்பரம் உங்கள் நினைவில் இல்லையென்றால் சொல்லுங்கள்.நகல் எடுத்து அனுப்புகிறான்.

////எனவே கேரள அரசைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தருவதற்கு தயார் என்றே அளித்துள்ளது. அவர்களின் கோஷமே தமிழகத்திற்கு தண்ணீர் - அணைக்கு பாதுகாப்பு."////

எவ்வளவு தண்ணீர் என்பதுதான் பிரச்சினையே.136 அடியிலிருந்து 1 அடி கூட உயர்த்த கேரளா தயாரில்லை என்பது பட்டவர்த்தனம். அதனால் தமிழகத்துக்கு தண்ணீர் என அவர்கள் வடிக்கும் நீலிக் கண்ணீரை யாரும் இங்கே நம்பத் தயாரில்லை. அனேகமாக புதிய அணை கட்டும் சாக்கில் வருகிற தண்ணீரையும் நிருத்தினால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இதுவும் அவர்கள் கேரளாவில் "ஓட்டு பொறுக்க" செய்ய வேண்டியிருக்கிறது என்பது நிதர்சனம்.பேச்ச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்கிறீர்களே.. இது வரை பேசவில்லை போல...நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் அச்சுதானந்தன் புது அணை தவிர வேறு எதர்க்குமே பேசக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படியானால் அணை உடைந்து விடும் என்பது உண்மைதானா? அல்லது மக்கள் மனதில் இருக்கும் பீதியை போக்க புது அணை கட்டப் போகிறார்களா? கொஞ்சம் சொல்லுங்களேன். அதனால் ஏதோ கேரள "தோழர்கள்" தமிழன் மீது அக்கரை கொண்டவர்கள் என்பது போல் சாயம் பூசும் நாடகமெல்லாம் வேண்டாம்.கட்சி சார்புகளை விட்டு வெளியே வந்து எது சரி எது தவறென்றும் கொஞ்சம் யோசித்தால் புரியும்.

ஏகலைவன் said...

///////இந்த திட்டம் சப்பான்
அரசு நிதி உதவி பெற்று நிறைவேறுமாம்.ஏன் இங்கு இதற்கு நிதிவசதி இல்லையா.இலவ்ச
டி.வி என குடும்பத் தொழில்
வளர்க்க ஊர்ப்பணத்தை கொடுக்கும்
கருணாநிதியை, மெளனம் காக்கும் காங்கிரஸை கண்டித்துவிட்டு
பாஜகவை கண்டித்தால் நியாயம்.
உங்கள் பாஜக எதிர்ப்பு அரசியல்
அர்த்தமற்றது.ஒரு 100 பேர்
முற்றுகையிட்டால் பாஜகவிற்கு
ஒன்றும் ஆகிவிடாது. தைரியமிருந்தால் தேர்தலில்
நின்று அவர்களை தோற்கடியுங்கள்.//////

ஏன்டா அனானி கூமுட்ட,

தமிழன் இந்துவாயிருந்தாலும், அவன் தொட்டைவறண்டு சாகும் நிலையிலிருக்கையிலே, ஓட்டுப்பொறுக்க குடிநீரை வைத்துக்கூட கேவலமான அரசியல் பன்னிக்கிட்டு இருக்கிற ஒன்னோட அப்பன் எடியூரப்பாவையும் அவன் சார்ந்த பா.ஜ.க. பஜனை கோஷ்டியையும் கேக்காம, காங்கிரசப் போயி ஏன்டா கேக்கனும். என்னதான் தண்ணீர் விசயத்துல மத்த தேசிய ஓட்டுப்பொறுக்கிக் கட்சிக்காரனுங்க தமிழகத்துக்கு துரோகம் பன்னினாலும், இந்தப்பிரச்சினையும் அதுவும் ஒன்னாடா அம்பி?

ரெண்டு மூனு மாவட்டத்துக்காரன் ஒரு சொட்டுக் குடிநீரில்லாமத் தவிச்சிக்கெடக்குறான், தாகத்தைக் கட்டுப்படுத்தமுடியாம‌ ஃப்ளூரைடு கலந்த தண்ணிய குடிச்சு தீராத நோய்களுக்கு அகப்பட்டுக்கிடக்குறான், இதவிட ஓங்களுக்கு ஓட்டுதான் முக்கியாமுன்னா, தமிழகத்துல உங்களுக்கு என்னவேலை?

ஓட்டுப்பொறுக்க வடநாடு முழுக்க இந்துவெறியப்பரப்புவ, கர்நாடகத்துல ஒன்னோட வழக்கமான மதவெறி நாடகம் போனியாகாததினால, அங்க ஏற்கெனவே ஆறிப்போயிருந்த கன்னட இனவெறியத் தூண்டிவிடுவியா?

காங்கிரசையோ கருணாநிதியையோ கண்டிக்க எங்களுக்குத் தெரியும், நீ யோக்கியமானவனாயிருந்தா எடியூரப்பாவப்போயி சட்டையப்புடுச்சிக் கேளு. அதவுட்டுட்டு ஒம்பார்ப்பன பேடித்தனத்த இங்க வந்து இணையத்துல காட்டிக்கிட்டு இருக்காத.

Vajra said...

சந்திப்பு,

உங்கள் பதிவுக்கு நிந்திப்பு என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும். சதா சர்வகாலமும், பா.ஜ.க மற்றும் அதன் தோளமை கட்சிகளை நிந்திப்பதே உங்கள் வாடிக்கையாக இருக்கிறது.எதைக் கேட்கவேண்டுமோ அதை விடுத்து, அர்பத்தனமான வாதங்களால் பா.ஜ.க வை பாசிசக்கட்சி என்று சொல்கிறீர்கள். பாசிசம் என்றால் என்ன என்பதை நாம் கம்யூனிஸ்டுகள், சோசியலிஸ்டுகளிடமிருந்து தான் நாம் கற்றுக் கொள்கிறோம். இது தான் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. ஹிட்லர் ஒரு சோசியலிஸ்ட் (நாஜி என்றால் நேஷனல் சோசியலிஸ்ட் கட்சி என்று பொருள்) முசோலினி, ஸ்டாலின் எல்லாம் கம்யூனிஸ்டு சோசியலிஸ்டுகளே. இவர்கள் தான் உலகறிந்த பாசிஸ்டுகள். இவர்கள் படங்களைப் போட்டு மரியாதை செய்யும் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றே. அதற்கு வால் பிடிக்கும் உங்களைப் போன்றவர்கள் வாழ்வதற்கு பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்.