June 18, 2007

அம்மா வலையில் சிக்குவாரா அப்துல்கலாம்!

இந்திய அரசு குறித்து நம்முடைய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் இறையாண்மைவாய்ந்த சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று பொறித்துள்ளது. இத்தகைய மகத்தான கொள்கை உறுதி கொண்ட நாட்டின் அரசியல் கடமையாற்றும் உயர்ந்த பொறுப்புதான் ஜனாதிபதி என்ற மகுடம்.

இத்தகைய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரசியலில் தேர்ச்சி மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி தன்னலமற்ற பொதுச் சேவை அரசியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். நெருக்கடியான காலகட்டங்களில் பாரபட்சமின்றி நிதானமாக கடமையாற்றுபவராக இருக்க வேண்டும்.

இத்தகைய உயர்ந்த பொறுப்பு வகித்தவர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை தவிர வேறு யாரும் ஒரு முறைக்கு மேல் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். வெங்கட்ராமன் பதவி வகித்த காலங்களில் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்ற கடும் விமர்சனத்திற்கு ஆளானது. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக இந்தப் பதவியில் இருப்பவர் செயல்பட ஆரம்பித்தால் ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு செயல்டும் பொம்மலாட்ட பொம்மையாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே இந்தப் பதவியில் இருப்பவர் வில் பவுர் (ஆண்மையுள்ளவராக) செயல்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் ஐந்தாண்டு செயல்பாட்டை விமர்சன ரீதியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர் உபயோகப்படுத்தும் அரசியல் கமெண்ட்டுகளை நிச்சயமாக விமர்சிக்க வேண்டும். அதில் ஒன்று சமீபத்தில் அவர் இரு கட்சி ஆட்சிமுறை வேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஏற்கனவே நடப்பில் உள்ள ஆட்சி முறையை கடுமையாக விமர்சிப்பதாகும். இப்படி பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்ட முடியும். இன்றைக்கு மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜயலலிதா தலைமையிலான அணி ஜனாதிபதி தேர்தலில் யு.பி.ஏ.இடதுசாரி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திருமதி பிரதீபாவின் தேர்வு குறித்து அது ஒரு ஜோக் என்று ஜயலலிதா விமர்சித்தார். இந்தியாவின் ஜனாதிபதியாக விப்ரோ முதலாளி நாராயணமூர்த்யை தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னவர்தான் கலாம் உண்மையில் யார் ஜோக்கர் என்ற கேள்வி இங்கே எழுகிறது. சரி இந்த விசயத்திற்குள் நாம் தற்போது செல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.

பா.ஜ.க. தன்னுடைய எதிர்கால அரசியல் குள்ளநரித்தனத்தை பைரோன் சிங் செகாவாத் மூலம் நிறைவேற்றிக் கொள்ள கண்ட கனவில் மண் விழுந்ததால் தற்போது சுயேச்சை வேட்பாளராக பைரோன் சிங் செகாவாத்தை களம் இறக்கியுள்ளது. எப்படியாவது புறக்கடை வழியாக தங்களது ஏஜண்டை அப்பதவியில் அமர்த்த துடிக்கிறது பா.ஜ.க. அரசியலை அரசயில் ரீதியாக எதிர்கொள்ளும் திராணியற்ற வேலையில்தான் இறங்கியுள்ளது பா.ஜ.க.. பா.ஜ.க. வேட்பாளர் என்றால் என்.டி.ஏ.க்கு உள்ளோயே ஆதரவு இல்லாத நிலை வருமோ என்ற பயமே இதற்கு காரணம்.

திருமதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்தது குறித்து முன்கூட்டியே ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்று புலம்பும் வாஜ்பாய். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அப்துல் கலாமை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலா தேர்ந்தெடுத்தார்? இடதுசாரிகள் கே.ஆர். நாராயணனை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கலாம் என்று முன்மொழிந்த போது அதனை சங்பரிவார அரசியல் கண்கொண்டு நிராகரித்தவர்கள் தானே இவர்கள்.

மேலும் தற்போது புதிய யூ.என்.பி.ஏ. தனது வேட்பாளர் இவர்தான் என்று கூறுவதற்கு பதிலாக அப்பீல் விடுவது இவர்களிடையே அரசியல் ரீதியாக முடிவெடுக்க முடியாத அரசியல் தோல்வியைத்தானே வெளிப்படுத்துகிறது. ஜயலலிதா ஜனாதிபதி பதவியை அரசியலாக்க கூடாது என்று அரசியல் ஆக்க கூடாது என்று அரசியல் பேசுவது வேடிக்கையானது.

யூ.பி.ஏ. - இடது வேட்பாளரான திருமதி பிரதீபா பாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தன்னை பொது வாழ்வில் இணைத்துக் கொண்டு சிறந்த அரசியல் சேவை புரிந்திருக்கிறார். மூன்று முறை எம்.எல்.ஏ. மாநில அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் மக்களவை . மாநிலங்களவை எம்.பி. மாநிலங்களவை துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதுவரை தான் நின்ற எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர் இது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் முதுகெலும்போடு சங்பரிவாரம் ராஜஸ்தானில் கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பியவர். இந்தப் பின்னணியில் பா.ஜ.க. எப்படி இவருக்கு ஆதரவு தரும். இதற்குள் அரசியல் இல்லை என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா?

மென்மையான இந்துத்துவ கொள்கையை கடைப்பிடிக்கும் ஜயலலிதாதானே இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னோடி. இவர் கூறுகிறார் திருமதி பிரதீபா பாட்டீலின் தேர்வு குறித்த ஜோக் என்று! பல்வேறு ஊழல் மற்றும் ஆக்கிரமிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜயலலிதா மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குவதுதான் வேடிக்கையானது.

இறுதியாக சுதந்திர இந்தியாவில் சிறந்த அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்ற பெருமையோடு ஒரு பெண் என்ற அந்தஸ்தோடு ஜனாதிபதி என்ற மகுடத்தை அலங்கரிக்கும் பிரதீபா எதிர்கால இந்தியாவின் வழிகாட்டியாக அரசியல் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார் சரித்திரம் அவர் பக்கம் நிற்கும். மக்கள் அவர் பக்கம் நிற்பர் இது காலத்தின் கட்டாயம்!

ஜயலலிதாவின் அரசியல் வலையில் சிக்காமல் இருப்பாரா அப்துல் கலாம்!

7 comments:

Anonymous said...

என்ன சொல்லுறீங்க?....ஜெ. சொன்னதுக்காக கலாம் ஒத்துக்க கூடாது சரி.....பிரதிபாவை ஏற்றூக்கொண்டால் அடுத்த பிரதமராக சோனியா வந்துவிடுவார்....ஷகாவத் மதச்சார்பானவர், சொ என்ன பண்ணலாம்?...

சரி பேசாம நீங்க எலக்ஷன்ல நின்னுடுங்க...

சந்திப்பு said...

சோனியா பிரதமராக வரவேண்டும் என்பதற்காக பிரதிபாவை தேர்வு செய்யவில்லை. பிரனாப் முகர்ஜி முதல் சிவராஜ் பாட்டீல் வரை ஒரு டசன் பெயர்கள; பரிசீலிக்கப்பட்டது. இதில் இறுதியாக யு.பி.ஏ. - இடதுசாரிகள் இணைந்து தேர்வு செய்யப்பட்டவர்தான் பிரதிபா. எனவே சோனியா மட்டும் மனது வைத்தால் யாரையும் இந்தப் பதவிக்கு கொண்டு வர முடியாது என்பது நிரூபனமாகியுள்ளது. இந்தத் தேர்வைப் பொறுத்தவரை இடதுசாரிகள் மூன்று விசத்தில் உறுதியாக இருந்தார்கள். 1. அரசியல் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். 2. மதச்சார்பற்ற தன்மையில் உறுதியானவராக இருக்க வேண்டும். 3. அரசியல் சட்டம் - இந்திய இறையாண்மை குறித்த விசயங்களில் உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவராக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த அம்சங்கள் அனைத்தும் பிரதீபாவிடம் ஒருங்கே உள்ளது என்பது தற்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சுயேச்சை வேட்பாளரான பைரோன் சிங் செகாவத் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தவர். இந்திய நாட்டில் நடைபெற்ற பல்வேறு மதக்கலவரங்களுக்கு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானதற்கு இந்த அமைப்பின் பாசிச நடவடிக்கையே காரணமாக அமைந்தது. அத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் இந்த பதவிக்கான வேட்பாளர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய மக்களை சொந்த நாட்டிலேயே அகதியாக்கும் மோடித்துவவாதிகளை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் நன்பரே.

Anonymous said...

தல கலக்கறீங்க தல!!!

//இறையாண்மைவாய்ந்த சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று பொறித்துள்ளது. இத்தகைய மகத்தான கொள்கை உறுதி கொண்ட நாட்டின்//

அப்ப இந்தியாவுல சனநாயகம் இருக்குன்னு சொல்றீங்களா? நேத்துத் தான் நந்திகிராமுக்கு போன பத்திரிக்கை நிருபர்களை போட்டுத் தாக்கி இருக்காங்க சி.பி.எம் 'புரட்சியாளர்கள்'.. அப்ப, சனநாயகம்னா அதெல்லாம் மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் கிடையாதா தல?

//இந்தியாவின் ஜனாதிபதியாக விப்ரோ முதலாளி நாராயணமூர்த்யை //

கார்பொரேட் பார்ட்டி ஆப் இந்தியா மனுதர்மா பிரிவில் சேர்ந்த உடனேயே மண்டை காலியாகிடுமா தல? நாராயணமூர்த்தி விப்ரோ தலைவரா? அறிவு. அறிவு. சுடர் வுட்டு பிரகாசிக்குது!!


//சுதந்திர இந்தியாவில் சிறந்த அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்ற பெருமையோடு ஒரு பெண் என்ற அந்தஸ்தோடு ஜனாதிபதி என்ற மகுடத்தை அலங்கரிக்கும் பிரதீபா எதிர்கால இந்தியாவின் வழிகாட்டியாக அரசியல் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார் சரித்திரம் அவர் பக்கம் நிற்கும். மக்கள் அவர் பக்கம் நிற்பர் இது காலத்தின் கட்டாயம்!//


அவ்வளவு தான்... அத்தோட இந்தியாவுல சரித்திரமே மாறி சோசலிசமும் மலர்ந்துடும்..

சந்திப்பு said...

அனானி பிரகாஷ்காரத். ஜனநாயகத்தை பற்றி நீங்கள் பேசக்கூடாது. ஜனநாயக ரீதியாக வெளிப்படையாக மக்களிடம் செயல்படத் தெரியாத உங்களைப் போன்ற புரட்டர்களுக்கு சொறி சிரங்கெல்லாம் குஷ்டமாகத்தான் தெரியும்.

மேலும். நந்திகிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அங்குள்ள மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள். அதப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அதை அங்குள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மேலும் முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்கள் கிராமத்திற்கு நுழைவதை நக்சல் புரட்டர்கள் மற்றும் மமதா ரவுடிகள்தான் துப்பாக்கி போன்ற வன்முறை ஆயுதத்தை கொண்டு தாக்கி வருகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மீண்டும் மீண்டும் கோயபல்சு பிரச்சாரத்தை நீங்கள் எவ்வளவுதான் கட்டவிழித்து விட்டாலும் அதை யாரும் நம்பப் போவதில்லை.


சோசலிசத்தை கொண்டு வரப்போவதாக கூறிக் கொள்ளும் நக்சல்கள் காட்டுக்குள் கத்திக் கொண்டிருந்ததை விட்டு விட்டு இப்போது இணையத்துக்குள் கத்திக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவுத்தான் வித்தியாசம். உங்களுக்கும் பின்லேடனுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.

Anonymous said...

சரி சரி, ரஷ்யா, செக், மற்றும் பழைய USSR நாடுகள்-ல உங்க கம்யூனிசத்த ஆட்சில அமர்த்திட்டு இங்க வாங்க...ஆமாம், அதெப்படி கம்யூனிஸ்ட் பார்டில கரத் போன்ற சிலர் மட்டும் மிகுந்த பணக்காரர்களாக இருக்கிறார்கள்? அவங்களுக்கு பணம் எங்கிருந்து வருது?, அது ஏன் நம்ம நல்லகண்ணு போன்றோருக்கு பிரித்து தரப்படுவதில்லை?

சந்திப்பு said...

அனானி உங்களது நல்லெண்ணத்திற்கு வாழ்த்துக்கள் அங்கெல்லாம் மீண்டும் கம்யூனிசத்தை கொண்டு வரும் கடமையினை அங்குள்ள மக்களே நிறைவேற்றுவார்கள். எந்த நாட்டிலிருந்தும் ஏற்றுமதி இறக்குமதி செய்து புரட்சியை வரவழைக்க முடியாது.

அடுத்து கம்யூஸ்னிட்டு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ ஹவாலா பணமோ அல்லது பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவதன் மூலம் பெரும் முதலாளிகளிடம் இருந்து கையூட்டு பெறுவதன் மூலமோ அல்லது தெஹல்கா ஊழல் மூலமோ அல்லது போபர்ஸ் வழியாகவோ - அல்லது டி.வி. நடத்துவதன் மூலமோ - பங்கு மார்க்கெட்டில் சுதாடுவதன் மூலமோவெல்லாம் பணம் வருவதில்லை நண்பரே. உழைப்பாளிகள் - தொழிலாளிகள் வழங்கும் நன்கொடை மூலமும் - கட்சி உறுப்பினர்கள் செலுத்தும் லெவியின் மூலமும்தான் கட்சியை நடத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். மேலும் டாடா அம்பானி அசிம் பிரேம்ஜி போன்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் நிதி வழங்குவது வழக்கம். இதுபோன்ற நிதிகளைக் கூட சி.பி.எம். பெறுவதில்லை நன்பரே. மேலும் நீங்கள் குறிப்பிடும் பிரகாஷ் காரத் வசதியானவரும் இல்லை. வஅருக்கும் அவரது மனைவிக்கும் கட்சிதான் ஊதியம் வழங்குகிறது. அதுவும் மாதந்தோறும் ரூ. 5000 மட்டுமே. அவருக்கென்று சொந்தமாக ஒரு கார்கூட இல்லை. அது மட்டுமல்ல சி.பி.எம். இல் இருக்கும் எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் எல்ோரும் இதுபோன்றவர்களே. இதுகுறித்தெல்லாம் பல்வேறு விசயங்கள் பத்திரிக்கைகளில் பலமுறை வெளி வந்துள்ளது. எனவே நன்பரே ஊழில் பேர்வழிகள். ஊதாரித்தனமானவர்களுக்கு எதிராக உங்களது தாக்குதலை தொடுங்கள்.

Anonymous said...

தல.... கலக்கறீங்க தல!

காமடியா பேசும் போது கூட சீரியஸா பேசறா மாதிரியே பேசறீங்களே.... எங்கியோஓஓஓஓ... போயிட்டிங்க!

அப்பால அடிக்கடி இந்த நுயூஸ் பேப்பரு, டி.வில காட்றா செய்திலாம் பாருங்க! நந்திகிராம்ல நீங்க நடத்திட்டு இருக்கற 'பாட்டாளி வர்க்க புரட்சியப்' பத்தி புட்டுப் புட்டு வைக்கிறாங்க.. சீக்கிரம் உங்க பொலிட்டு பீரோவுல பேசி அவுங்களையும் நக்சலைட்டுன்னு சொல்லி அறிவிச்சுடுங்க.. சோலி நேர்!

- பிரகாஷ் காரத்