அமெரிக்க அணு சக்தி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் ஜுலை 1 அன்று சென்னை துறைமுகத்திற்கு வரவுள்ளது. ஜுலை 5 வரை சென்னையில் இக்கப்பல் முகாமிட்டிருக்கும்.
உலகின் மிகப் பெரிய போர் கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வரவிருக்கிறது.
இக்கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற ராட்சத கப்பல் உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று.
1975ம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.
மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன.
இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்தக் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நீர் போக்குவரத்துப் பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கூறுகையில்இ இந்தக் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பெருமளவில் கதிர் வீச்சு ஏற்படும். அதனால் சென்னை நகரம் முழுமையாக அழிந்து போய் விடும். அது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
இந்த ஆபத்தை விவரித்து அமெரிக்க அணு சக்தி கப்பலை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய அமைச்சரவைச் செயலாளர்இ கப்பல் துறை செயலாளர்இ சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆகியோருக்கு நரேந்திர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
பயங்கர ஆயுதங்கள் அணு உலைகளுடன் வரும் இந்த அமெரிக்கக் கப்பலால் சென்னை துறைமுகத்தில் பெரும் பீதி நிலவுகிறது.
ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் உள்ளது என்ற பெயரில் ஈராக் நாட்டை அழித்து துவம்சம் செய்த அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் சதாமையும் துக்கிலிட்டது. மொத்தத்தில் அந்நாட்டின் இறையாண்மையையே அழித்து நொறுக்கியது.
தற்போது ஈரான் மீது கண் வைத்திருக்கும் அமெரிக்கா. அந்நாட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தடை விதிக்க கோருவதோடு முற்றிலுமாக கைவிட வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறது. அடுத்த ஒரு போர்ச் அமெரிக்கா தயார் செய்து வருகிறது.
அதே போல் வடகொரியா. சிரியா. கியூபா என பல்வேறு நாடுகளை ரவுடிகள் நாடுகளாக பட்டியலிட்டுள்ளதோடு. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் இறையாண்மைக்குள் மூக்கை நுழைத்து வருகிறது.
இந்திய ஆட்சியாளர்களும் நாளுக்கு நாள் அமெரிக்க உலக ரவுடிக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்து வருகின்றனர். அமெரிக்காவை நம்பிய எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. உலகம் முழுவதும் அணு சக்தி உற்பத்திக்கு தடை கோரும் அமெரிக்க கப்பல் அதுவும் அணு உலைகளைக் கொண்டு இயங்கும் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் போர்க்கப்பல் என்பதோடு மட்டுமல்ல அது தனக்குள்ள பேரழிவு மிக்க அணு ஆபத்தையும் கொண்டுள்ளது. இத்தகைய கப்பலில் ஏதாவது சிறு ஆபத்து நேர்ந்தால் கூட அது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும் - ஆந்திரா உட்பட புல் - பூண்டு இல்லாமல் அழியும் ஆபத்து உள்ளது. இத்தகைய அபாயகரமான கப்பலை சென்னைக்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்-யை இந்தியாவிற்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் பாய். பேட் பாய் என்று ஹிரோஷிமா - நாகாசாகியை அழித்து மனித குலத்தையே நாசமாக்கிய அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னையை அழிக்க அனுமதிக்கலாமா? ஆர்த்தெழுவோம் அணு அரக்கனை விரட்டியடிக்க!
ஈராக்கை அழித்த அரக்கனை சென்னையை அழிக்க விடலாமா? அகிம்சையை விதைத்த மண்ணில் அரக்கர்களை அனுமதிக்கலாமா? மனித குலத்தை மண்ணுலகிற்கு அனுப்பும் அமெரிக்க போர் வெறியை - நாடுபிடிக்கும் நாட்டாண்மையை நிர்மூலமாக்குவோம்!
7 comments:
Left lunatic, will you ask for closure of atomic power plants in
Kalpakkam.Kalpakkam is hardly an
hour's drive from Chennai at a distance of about 50 kms.The ship is at the Port for a short period
where as the reactors at Kalpakkam
are meant to be forever. So which is more dangerous. Atomic
power plant is being built in
Koodankulam.Are you opposing that
also.You are opposing USA, not atomic power or atomic power plants. Cant you find convincing
reason to oppose the entry of that
warship. Is USA the only country to have warships powered by atomic energy.I am sure that if such a ship from China were to come,
you fellows will be the first one
to welcome it.USA is not opposing
atomic power per se in other
countries.Your opposition to USA
has reached ridiculous levels,
bordering on insanity.The whole
left movement in India has become
laughing stock of any sane person
because of such blind opposition.
Who operate this ship?
Is there any people inside or only robots operates the planes and the ship? I don't know if you know about "Class Action Lawsuits" in the USA. Recently, one lawsuit was filed against a dry cleaner for not keeping the promise of "Satisfaction Guranteed". The lawsuit is amount to about 50 millions us dollar. $50000000.00. I hope you can imagine the lawsuit that will be filed against the us government if the ship was to release radioactive particles.
ஜெயபாரதன் என்பவர் அணு உலைப்பற்றி எழுதிய பதிவை படிக்கவும்.
அனானி. கம்யூனிஸ்ட்டுகள் அணுசக்திக்கு எதிரானவர்கள். அதே சமயம் அதனை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறவர்கள். கல்பாக்கத்திலும் - கூடங்குளத்திலும் செயல்படும் அணு மின் நிலையங்கள் சமூகத்திற்கு தேவையானது. அதே சமயம் அணு உலைகள் மட்டுமே சரியானது என்ற நிலையும் சரியல்ல. அணு என்றைக்கும் ஆபத்துக்கள் நிறைந்தவை. எனவே இதற்கு உரிய சரியான மாற்று அவசியம். மேலும். தற்போதைய பிரச்சினை என்பது யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் - போர் புரிவதற்காகவே கட்டப்பட்டது. அதன் நோக்கம் மற்ற நாடுகளை - எதிரிகளை அழிப்பது. ஈராக்கில் இந்த கப்பலில் இருந்துதான் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்க நீண்ட காலமாக முட்டுக் கட்டை போட்டு வரும் நாடு. அணுவுக்கு அதனிடம் மற்ற நாடுகள் பிச்சை எடுக்க வேண்டும் என்பதுதான் அதன் நிலை. இந்த கப்பல் அமெரிக்காவின் போர் வெறித்தனத்தின் பலத்தை உலகிற்கு நிரூபிப்பதற்காக கட்டப்பட்டது. மொத்தத்தில் மனித குலத்தின் எதிரியே இந்தக் கப்பல். அதைவிட முக்கியமானது. ஒருவேளை இந்தக் கப்பலை ஏதோ ஒரு போர்ச் சுழலில் தாக்குதலுக்கு உள்ளானால் அது இருக்கம் கடல் பகுதி மட்டும் அல்ல ஒட்டுமொத்த கடல் வாழ் உயிரினமே அழிவிற்கு உள்ளாகும் ஆபத்து அதனுள் அடங்கியுள்ளது. இத்தகைய அபாயகரமான கப்பல் தற்போது சென்னைக்கு வர வேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் இந்தியா என்ன கற்றுக் கொள்ளப் போகிறது. அமெரிக்க கப்பற்படை பலத்தை தமிழக - இந்திய மக்களுக்கு காட்டத்தான் இது பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. மேலும் இதுபோன்ற ஒரு கப்பலை சீனா கொண்டு வந்தால் ஆதரிப்பார்கள் என்பதெல்லாம் அர்த்தமற்ற வாதங்கள். - அபத்தமான வாதங்கள். கண்ணில் தெரியும் எதிரியை விட்டு விட்டு - காற்றில் இரு:ககும் எதிரியை தேடுவதற்கு ஒப்பாகும்.
அனானி கப்பலின் அணு சக்தி இயக்கம் குறித்த விவரம் எனக்கும் தெரியாது. பொதுவாக அமெரிக்கா இதுபோன்ற விசயங்களை வெளிப்படையாக தெரிவிக்காது. மொத்தத்தில் அணு சக்தி கப்பல் என்பதும். அது போர் வெறிக்கு பயன்படும் கப்பல் என்பதனால்தான் இதனை மனித குல எதிரியாக கருதி நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க உருவாக்க துடிக்கும் ஓரு உலக கோட்பாட்டிற்கு இதுபோன்ற பிரம்மாண்டங்கள் உதவலாம். நம்மைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் இதனை கொண்டுச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதும். அதற்கு எதிராக போராடுவதுமே சரியானதாகும்.
நன்றி வடுவூர் குமார். ஜயபாரன் உண்மையிலேயே இதுபோன்ற விசயங்களை திண்ணையில் நன்றாக அலசுகிறார். தகவலுக்கு நன்றிகள்.
சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில் அணு ஆயுதம் இல்லையா? அணுப்பரிசோதனை நடந்தபோது நீங்க கண்ணாம்பூச்சியா விளையாடிக்கிட்டிருந்தீங்க. இந்தியா அமெரிக்காட்ட அணு உடன்பாடு செய்தபோது .... முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.
புள்ளிராஜா
Post a Comment