June 06, 2007

ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (6.6.2007) அகில இந்திய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக ஆந்திர மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஜெயலலிதா. முலாயம்சிங். வைகோ. ஓம் பிரகாஷ் செளதாளாவின் கட்சி. கர்நாடக பாபுலால் மராண்டி. கேரள காங்கிரசு. ஜார்கண்ட் விகாஸ் கட்சி என மொத்தத்தில் 8 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஜெயலலிதா கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சியை எடுத்து வந்தார். அவரது முயற்சியின் பேரிலேயே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இக்கட்சித் தலைவர்கள் தனித்த முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


கடந்த காலத்தில் சந்திரபாபு நாயுடு காரு. ஜெயலலிதா அம்மையார். முலாயம்சிங் யாதவ் ஜி ஆகிய மூவரும் தாங்கள் ஆட்சி செய்த மாநிலத்தில் மக்கள் விரோத. சர்வாதிகார. வன்முறை ஆட்சியை நடத்தியதும். தொழிலாளிகளை வஞ்சித்து உலகமயாக்கலின் ஏவலாளிகளாக செயல்பட்டதால் ஆட்சியை இழந்து நிற்கும் இவர்களும். இவர்களுடன் ஒட்டிக் கொண்டுள்ள பிழைப்புவாதிகளும் அகில இந்திய அளவில் மூன்றாவது மாற்றை உருவாக்கப் போவதாக கூறுவது வேடிக்கையானது.

இதில் முலாயம் சிங்கைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதவாத பா.ஜ.க.வோடு கொஞ்சிக் குலாவியவர்கள். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் இன்றைக்கு கரையொதுங்கிப்போனதால் எந்தக் கப்பலில் ஏறி அதிகார - ஆட்சிப் பயணத்தை மேற்கொள்வது என்ற அதிகார வெறியைத் தவிர மக்கள் நலனை கிஞ்சிற்றும் ஏறடெத்துப் பார்க்காத கூட்டணியே இது.

இந்த மூன்றாண்டு காலத்தில் மதவெறி பா.ஜ..கவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகவோ அல்லது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவிதமான மக்கள் இயக்கமும் நடத்தாதவர்கள் மத்திய ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறார்கள். இவர்களது சந்தர்ப்பவாத கூட்டணி அந்திமக் கூட்டணியே தவிர ஆளும் கூட்டணியாக ஒருபோதும் மலராது.

5 comments:

Anonymous said...

சந்திப்பு,
ரொம்ப துள்ளாத.கேவலமான சி பி எம் இந்த கும்பலில் சேர்ந்தாலும் சேரும்.

Anonymous said...

ஏங்க... மின்னாடியெல்லாம் மூனாவது அணி சொன்னாலே வலது/இடது பல்லாக்குத் தூக்கிகள் தானே முன்னாடி வந்து நிப்பீங்க? இப்ப மட்டும் என்னாச்சு உங்களுக்கு? ஜெயிக்கற குதிரையில பணம் கட்டிடலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா?

சந்திப்பு said...

புனிதமான அனானி எந்த மூன்றாவது அணியிலேயும் சி.பி.எம். இதுவரை இருந்ததில்லை. ஆனால் சங்பரிவார பாசிசத்திற்கு எதிராக அவ்வப்போது நிலவும் அரசியல் டிகிரிக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்துவதுண்டு. சுத்த சுயம்புவாக பிதற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற அனானிகள் அரசியல் அனாதைகளாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. இவ்வாறு பிதற்றிக் கொண்டிருப்பதால் பாசிசம் உட்பட மக்களை பாதிக்கும் எந்த விசயத்துக்கு எதிராகவும் எதையும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்கக் முடியும். அதை உங்களைப் போன்ற புனித அனானிகள் மிகத் திறம்பட செய்துக் கொண்டிருக்கிறீர்கள்...

சந்திப்பு said...

அனானி பதவி சுகத்துக்காக பல்லக்கு தூக்குவதுதான் தப்பே தவிர. இந்த தேசத்தை இந்துத்துவா என்ற பெயரில் சுடுகாடாக்கும் பாசிசத்தை வீழ்த்திட யாருக்கு வேண்டும் என்றாலும் காவடியே தூக்கலாம்!

பிரதமர் பதவி உட்பட பல்வேறு கதவிகள் சி.பி.ஐ.எம்.யை நாடி வந்தபோதுகூட இன்று வரை சீண்டாதவர்கள்... அது கூடாது என்பதற்காக அல்ல. குறைந்தபம்சம் அடிப்படை விசயங்களை நிறைவேற்றுவதற்கான ஆதாரமில்லாமல் இருப்பதால்.

சந்திரசேகர் மாதிரி குறைந்த ஆயுசு பதவி வகிப்பதற்காக இடதுசாரிகள் இதுவரை யாருக்கும் பல்லக்கு தூக்கியதில்லை. அது இந்த தேசத்தை காத்திடவே காவடி தூக்குகிறோம். (மத நம்பிக்கையாளர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.)

Anonymous said...

//பிரதமர் பதவி உட்பட பல்வேறு கதவிகள் சி.பி.ஐ.எம்.யை நாடி வந்தபோதுகூட இன்று வரை சீண்டாதவர்கள்... அது கூடாது என்பதற்காக அல்ல. குறைந்தபம்சம் அடிப்படை விசயங்களை நிறைவேற்றுவதற்கான ஆதாரமில்லாமல் இருப்பதால்//

எந்த நேரத்தில மேல உள்ள பின்னூட்டம் போட்டிங்க ?, பாத்திங்கல்ல சபாநாயகரை ஜனாதிபதி ஆக்க உங்காளுக பட்ட பாட்டை?