June 27, 2007

அணு ஆயுத கப்பலை எதிர்க்க வாருங்கள்!



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார்பில் பேரபாயம் மிக்க அணு ஆயுதக் கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னை துறைமுகத்திற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜுலை 2 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை துறைமுகம் வாயிலருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
நீங்களும் வாருங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு எதிராகவும். அதற்கு துணை போகும் மன்மோகன் அரசுக்கு எதிராகவும் முழக்கமிடுவோம். உலக மக்களை காப்போம்!

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணு ஆயுதக் கப்பலை விரட்டியடிக்க அணித்திரள்வோம்.
------------------------------------------------------------------------------




Against Permitting US War ship "USs Nimitz" at Chennai Harbour.

Protest Demonstration in front to Chennai Harbour Gate
On
2nd July 2007 Evening 4.00 p.m.
All are Welcome. Your Voice and Hands up against American Imperialism.

19 comments:

Anonymous said...

சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில் அணு ஆயுதம் இல்லையா? அணுப்பரிசோதனை நடந்தபோது நீங்க கண்ணாம்பூச்சியா விளையாடிக்கிட்டிருந்தீங்க. இந்தியா அமெரிக்காட்ட அணு உடன்பாடு செய்தபோது .... முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.

புள்ளிராஜா

Anonymous said...

சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில் அணு ஆயுதம் இல்லையா? அணுப்பரிசோதனை நடந்தபோது நீங்க கண்ணாம்பூச்சியா விளையாடிக்கிட்டிருந்தீங்க. இந்தியா அமெரிக்காட்ட அணு உடன்பாடு செய்தபோது .... முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.

புள்ளிராஜா

சந்திப்பு said...

புள்ளி ராஜா இது வெற்றுக் கூச்சல் அல்ல. இந்திய - அமெரிக்க இராணுவ மற்றும் அணு சக்தி உடன்பாடு இந்திய நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும். இக்கப்பலின் வருகையும் கூட இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டின் ஒரு பகுதி நடவடிக்கையே. அதனால்தான் இதனை நாம் எதிர்க்கிறோம். மேலும் இந்த கப்பலின் நோக்கமே போர் வெறிதான். ஈராக் நாட்டையும். ஈராங்க மக்களையும் கொன்ற ரத்தவெறி கப்பலே யு.எஸ்.எஸ். நிமிட்ஸ். எனவேதான் இத்தகைய ரத்த வெறி - மனிதவிரோத கப்பலை தமிழகத்திற்குள்ளும் - இந்தியாவிற்குள்ளும் அனுமதிக்க கூடாது.

இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் அணுவை ஆக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கல்ல.

Unknown said...

//அமெரிக்க இராணுவ மற்றும் அணு சக்தி உடன்பாடு இந்திய நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் //

இடதுசாரின்னு யாரைச் சொல்றீங்க?

சமீபத்துல டெல்லில நடந்த கூட்டத்துல ஜனாதிபதி வேட்பாளரா யாரைத் தேர்ந்தெடுக்கனுமின்னு சோனியாவோட ஒக்காங்து பேசின தலைகளில் இவர்கள் இருந்தார்களா?

அதுக்கெல்லாம் உக்காந்து பேசி எது தங்களுக்கு வேணாமுன்னு சொல்லத் தெளிவாத் தெரியுது.ஆனா இதுக்கு சும்மா கூச்சல் போட்டா போதுமா?

உண்மையில்,மனப்பூர்வமாக இதை எதிர்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும் இடதுசாரி கட்சிகள் விரும்பினால் அன்னை சோனியாவிடம் சொன்னால் உடனே நின்றுவிடும். செய்வார்களா?

சென்னையில் கூச்சல் போடாமல் ஜானாதிபதிக்கு எப்படி அக்கறையோடு கலந்து பேசினார்களோ அதில் ஒரு சதவீதமாவது முயற்சி செய்யட்டும்.

Anonymous said...

vadivelu comedynu ungaalai patri puthiya jananaayakathil padithen ippo unmai thannu puriuthu.

சந்திப்பு said...

கல்வெட்டு - மாமா தங்கள் கருத்து சரியானது. அரசியலில் எப்போதும் ஒரே பார்மூலா இருந்தால். அப்புறம் அரசியலே இருக்காது. சில விசயங்களை கூட்டாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும்... அது தாங்கள் குறிப்பிட்ட ஜனாதிபதி தேர்தல் போல... ஆனால் மத்தியில் இருக்கும் அரசு சுயேச்சையான அரசு. அந்த அரசிற்கு ஒரு வர்க்க நலன் உண்டு. அது ஏகாதிபத்திய - பெரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் காவலனாகவே செயல்படும். எனவே அந்த அரசின் தவறான பொருளாதார - வெளியுறவு - இராணுவ மற்றும் அரசியல் கொள்கைகளை அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டுமேயொழிய. நீங்கள் சொல்லுகிறபடி அவர்களிடம் இறைஞ்சியோ அல்லது நிரப்பந்தித்தோ அல்ல. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை இந்த தவறான கொள்கைகளுக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். அதன் மூலமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இடதுசாரிகளால் பேசியே எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடிடியும் என்றால் இந்த அரசு எதற்கு? நேற்றைக்கு முன் தினமே பி.சி.எம். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாரம் யெச்சுரி அரசின் இந்த முடிவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளின் விழிப்புணர்வும் மிக அவசியமானது. ஏன் மாமாக்களின் ஆதரவும் கூடத்தான்.

சந்திப்பு said...

காமெடியனாக இருக்கலாம். காட்டிக் கொடுப்பவனாகத்தான் இருக்கக்கூடாது!

Anonymous said...

"இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் அணுவை ஆக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கல்ல"


சந்திப்பு!! நீங்கதான் உங்க ஊரு ஜோக்கரா?

இந்திய தயாரிப்பு அணுக்குண்டுகளை தீபாவளிக்கு வெடிக்க வைக்கவா இருக்கு? ஏன் சார் அமெரிக்க கப்பலில அணு கதிர் வீசும். நாம் தயாரித்த அணுக்குண்டிலிருந்து மலரா சொரியும்?

மாக்சிஸ்ட்டுக்கள் சோரம் போனவர்கள். அணுவுக்கு எதிரானவர்கள் என்றால் ஏன் இன்னும் மத்திய அரசில ஒட்டிகிட்டு இருக்கின்றார்கள்.


அணுவை யார் தயாரித்தாலும் எதிருங்கள். அதைவிட்டுவிட்டு சும்மா கூச்சல் போட்டு சுய விளம்பரம் தேட வேண்டாம்.?

புள்ளிராஜா

Anonymous said...

"இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் அணுவை ஆக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கல்ல"


சந்திப்பு!! நீங்கதான் உங்க ஊரு ஜோக்கரா?

இந்திய தயாரிப்பு அணுக்குண்டுகளை தீபாவளிக்கு வெடிக்க வைக்கவா இருக்கு? ஏன் சார் அமெரிக்க கப்பலில அணு கதிர் வீசும். நாம் தயாரித்த அணுக்குண்டிலிருந்து மலரா சொரியும்?

மாக்சிஸ்ட்டுக்கள் சோரம் போனவர்கள். அணுவுக்கு எதிரானவர்கள் என்றால் ஏன் இன்னும் மத்திய அரசில ஒட்டிகிட்டு இருக்கின்றார்கள்.


அணுவை யார் தயாரித்தாலும் எதிருங்கள். அதைவிட்டுவிட்டு சும்மா கூச்சல் போட்டு சுய விளம்பரம் தேட வேண்டாம்.?

புள்ளிராஜா

சந்திப்பு said...

புள்ளி ராஜான்னா வெறும் எய்ட்ஸ்ஸோடு மட்டும்தான் தொடர்புடைய பேருன்னு நெனச்சிட்டேன்....

-----
மாக்சிஸ்ட்டுக்கள் சோரம் போனவர்கள். அணுவுக்கு எதிரானவர்கள் என்றால் ஏன் இன்னும் மத்திய அரசில ஒட்டிகிட்டு இருக்கின்றார்கள்.
-----

மத்திய அரசில் நாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. எங்களால்தான் அது ஓடிக் கொண்டிருக்கிறது புள்ளி ராசா....

அணுவை ஆபத்தாக மாத்துறது பாசிசம். அதத்தான் நம்ம வாஜ்பாயி செய்தார். அந்த பாசிச சக்திகள் மீண்டும் இதுபோன்ற குழப்பத்தை நாட்டுக்குள்ள செய்யக்கூடாதுன்றதுக்காகத்தான் நாங்க ஒட்ட வைச்சிருக்கிறோம்.

உங்களை மாதிரி பேசிக் கொண்டிருந்தா நாட்டுக்குள்ள இன்னொரு இட்லரு வந்துருவாரு. அப்புறம் புரட்சிய வெறும் வாயிலத்தான் பேசிக்குனு இருக்க முடியும்....

அப்புறம் ஆயுதம் வேற... அணு வேற கண்ணா.... முதல்ல போயி அ.... ஆ....வன்னா படிங்க... ராசா...

Unknown said...

எட்டுப் போட உங்களுக்கு ஒரு அழைப்பு வாங்க

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.html

Boston Bala said...

Probably, if there are any demonstrations against the aggressions of China in Arunachal Pradesh, it will be worthy of the time of a common man.

These kind of token condemnations against US are pointless. US is neither gonna leak like the Chernobyl disaster in Chennai nor gonna take over North-east like China.

சந்திப்பு said...

Thanks : www.thatstamil.com

அமெரிக்க அணு சக்தி கப்பலை எதிர்த்து சென்னையில் போராட்டம்

சென்னைக்கு ஜூலை 3ம் தேதி வருகை தரவுள்ள யுஎஸ்எஸ் நிமிட்ஸ், அணு சக்தி கப்பலை எதிர்த்து 2ம் தேதி சென்னையில் இடது சாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.





அமெரிக்காவின் முக்கியப் போர்க் கப்பல்களில் ஒன்று நிமிட்ஸ். அணு சக்தியால் இயங்கும் இந்தக் கப்பலில் இரு அணு உலைகள் உள்ளன. ஈராக் போரில் இந்தக் கப்பல் மிகவும் முக்கிய பங்கு வகித்தது.

இந்தக் கப்பலை பயன்படுத்தித்தான் அமெரிக்க விமானப் படை விமானங்கள் இயங்கி வந்தன. உலகின் மிகப் பெரிய அணு சக்திக் கப்பல்களில் நிமிட்ஸும் ஒன்று.

இந்தக் கப்பலால் கதிரியக்க ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுவதால், இக்கப்பலை தங்களது நாட்டுக்குள் வர பல நாடுகளும் அனுமதிப்பதில்லை. ஆஸ்திரேலியாவோ, எங்களது கடல் பகுதி பக்கம் கூட வரக் கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளது.

இந்த நிலையில், நிமிட்ஸ் கப்பல் வருகிற ஜூலை 3ம் தேதி சென்னைக்கு வருகிறது. நான்கு நாட்கள் சென்னையிலேயே நிறுத்தப்படவுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக, இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தக் கப்பலால் சென்னை நகரத்திற்கு மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் முழுமைக்கும் கதிரியக்க ஆபத்து உள்ளதாக இந்தக் கட்சிகள் கூறியுள்ளன.

நிமிட்ஸ் கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இவை கோரியுள்ளன. ஆனால் இந்தக் கப்பல் வருவதால் ஒரு பிரச்சினையும் கிடையாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை வந்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிமிட்ஸ் வழக்கமான போர்க் கப்பல் அல்ல. ஈராக்கில், பல லட்சம் அப்பாவிகளைக் கொல்ல தளமாக பயன்படுத்தப்பட்ட கப்பல் இது.

இந்தக் கப்பல் இந்திய எல்லைக்குள் நுழையவேக் கூடாது. ஆனால் மத்திய அரசு எங்களது கோரிக்கையை கேட்பதாக இல்லை. எனவே ஜூலை 2ம் தேதி சென்னையில் இடது சாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

சந்திப்பு said...

தேவ் 8 போட அழைத்தமைக்கு நன்றி

சந்திப்பு said...

பூஸ்டன் பாலா....

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா ஒன்றும் போர்த் தொடுக்கவில்லை. அவர்களுக்கு உள்ள கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு நம்முடைய இந்திய அரசும் தக்க பதில் கொடுத்துள்ளது. இது குறித்து நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும் போது. இதனால் இந்தியா - சீனா வர்த்தக உறவுகளோ அல்லது இரு நாட்டு உறவுகளோ பாதிக்காது. மேலும் சீன கேட்டவுடன் இதோ தருகிறேன் என்று இந்திய அரசும் கொடுத்து விடப் போவதில்லை. இந்தியாவின் மீது எந்த நாடு தாக்குதல் தொடுக்க முயற்சித்தாலும் அதனை இடதுசாரிகள் உண்மையான தேசபக்தியோடு எதிர்ப்பார்கள். என்ன பன்றது உங்களைப் போன்றவர்கள் அமெரிக்க விசுவாசியாக இருப்பதில் இருந்து எப்படி மீட்பது என்பதுதான் தற்போதைய பிரச்சினையே.

Anonymous said...

//காட்டிக் கொடுப்பவனாகத்தான் இருக்கக்கூடாது!//

ennda ungaloda ore bejara pochu!
kaatti kodupavan, kooti kodupavan, mama, itha utta vera ehtuvum theriyatha. vera ethavathu puthusa use pannungba.

tamilnadu sinthippoor kazhakam said...

புல்லி ராஜா வுக்கு புத்தி வரும? யெப்பா புல்லி ராஜா உங்கலை ஒன்னு கேக்கட்டுமா...
உன் வீடுக்கு ஒரு ரவுடி குடி வரான், அவனை சேக்ககூடாதுன்னு நீன்க சொல்லுரீன்க, கேக்கலனா எதிர்த்து சத்தம் (போரட்டம்) போடுவீன்கலா இல்ல வீட்ட விட்டு வெலியே வந்துடுவீன்கலா?
அய்யா நீன்க வீட்டு விட்டு வெலியே வந்துட்டா, உன்க குடும்பத்த கூன்டோட துரத்திட்டு ஒரு கொல கார மத வெரி குடும்பம் குடி வந்துடும், அந்த கூட்டம் குடி வந்துட்டு ரவுடி ய மட்டும் இல்ல அவன் குடும்பத்த,கத்தி கடபார, சோடா புட்டி நு அவன் அயுதன்கலை கொன்டு வந்து வீட்டுல வச்சிக்கும்.. புரியுதா ராஜா ..
இப்ப சொல்லுமா கன்னு நீ என்னா பன்னுவே, வீடுல உல்லவன்க கூட இருந்து கன்டிப்பியா? இல்ல எக்கேடுனா கெட்டு பொங்கன்னு வீட்ட விட்டு பொயிடுவியா அதெ நெலம தாம்ம மார்க்சிச்ட்கலுக்கும் , புரியுதா ராஜா..
இனியாவது புல்லி ராஜாவுக்கு எயிட்ச் வரும புத்தி வருமனு கேக்குர மாதிரி வச்சிகதே
_தமிழ் நாடு சிந்திப்போர் கழகம்( TNSK)

சீனு said...

//முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.//

புள்ளிராஜா,

இந்த விஷயம் கூச்சல் இல்லை. இன்றைய எதிர்ப்பு நாளைய வரலாற்றில் பதியவேண்டும் என்பதற்காக.

கொள்கை என்னும் விஷயத்தை விட, அந்த கப்பல் அடிக்கடி விபத்துக்குள்ளாகவும் செய்கிறதே! என்ன செய்வது?

//என்ன பன்றது உங்களைப் போன்றவர்கள் அமெரிக்க விசுவாசியாக இருப்பதில் இருந்து எப்படி மீட்பது என்பதுதான் தற்போதைய பிரச்சினையே.//

என்ன சார் பன்னுறது. அவங்க அமெரிக்க விசுவாசி. நீங்க சீன விசுவாசி. யாரை குற்றம் சொல்லுவது?

Any how, இந்த கப்பல் வருவதை நானும் எதிர்க்கிறேன்.

Anonymous said...

சென்னைக்கு மிக அருகிலே இருக்கும் கல்பாக்கம் அனு மின் நிலையத்தை
எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறீர்களா? ஒரு தகவலுக்கு கேட்கிறேன்.

அதை விட வா இந்த கப்பல் கதிர்வீச்சு லீக் செய்யும் என்கிறீர்கள்??